பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2008

பாகிஸ்தானுடன் போர் வரலாம் !

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உணர்ந்து, அமெரிக்கா பாகிஸ்தானை தீவிரவாதிகளை கைது செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறது.

இந்தியா கேட்டுள்ள இருபது தீவிரவாதிகளின் பட்டியலை கீழே எறிந்துவிட்டு குதர்கமாக, அத்வானியை ஒப்படைக்க இந்தியா தயாரா ? என்ற கேள்வியை பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கேட்டுவருகின்றன. இது நிராகரிக்கக் கூடிய ஒன்று, ஏனெனின் இந்தியாவைப் பொருத்த அளவு அத்வானியும் இந்துத்துவாக்களும் இந்திய முஸ்லிம்களுக்குத் தான் தலைவலியே அன்றி, பாகிஸ்தானுக்கும் அதற்கும் யாதொரு தொடர்ப்பும் இல்லை. மேலும் பாப்ரி மஸ்ஜித் மற்றும் ஏனைய சிறுபாண்மையினர் மீதான அச்சுறுத்தல்கள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அத்வானியோ, தொகடியாவோ பாகிஸ்தானுக்குள் எதையும் தூண்டிவிடவில்லை, அப்படியே தூண்டினாலும் அங்குள்ள சிறுபாண்மை இந்து அமைப்பினரால் அதையெல்லாம் செய்யும் அளவுக்கு மனபலம் கிடையாது, பாகிஸ்தானில் நடக்கும் அனைத்து குழப்பங்கள், தீவிரவாதம், மசூதிக்குள் குண்டுவெடிப்பது எல்லாம் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள், முழுபாகிஸ்தானும் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருப்பதாலும், தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக இருப்பதால் அவர்களின் நேரடி செயல் பயிற்சியாகவே அங்கே அவ்வப்போது குண்டுகள் வெடிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்படுகிறது. இதற்கும் அத்வானி குழுவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் இந்திய முஸ்லிம்களின் நலன் மீது முதலைக் கண்ணீர் வடிப்பது தங்களது தீவிரவாத ஆதரவிற்கு இந்தியாவிற்குள் கைநீட்டுவதற்கான வெறும் உத்திமட்டுமே. இதனை அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் தவிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம்களும் நிராகரிக்கின்றனர்.

மும்பைத் தாக்குதலை தடுக்காமல் விட்ட உளவுத் துறையின் தோல்வியையும், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளினால் சரிந்துவிட்ட காங்கிரசின் இமேஜை தூக்கி நிறுத்த காங்கிரசிற்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாகிஸ்தானுக்குள் இருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமே. பல்வேறு நாடுகளும் "இந்தியா பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீது விமானப்படை தாக்குதலை நடத்தலாம்" என்று சொல்லிவருவது கூட இதனையும் கவனத்தில் கொண்டுதான் என்று நினைக்கிறேன். தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் சும்மா இருக்குமா ? என்பதே கேள்விக்குறி. ஆனால் தீவிரவாதிகளின் மீதான எதிர்தாக்குதலைப் பொருத்த அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பதால், ஞாயம் என்று பார்த்தால் இந்தியாவின் மீது தனக்கு பாதுகாப்பிற்கான ஞாயம் இருப்பதாக அனைத்துலகும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் இந்தியாவின் மீது எதிர்த்தாக்குதல் நடத்தினால் ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் தவிர்த்து வேறு எவரும் வரமாட்டார்கள். கடுமையான போர் எனும் போது பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர் உட்பட்ட இந்தியர்களுக்கும் பாதிப்புகளும், பாதுகாப்பின்மையும் இருக்கும். இவையெல்லாம் நினைத்துப் பார்த்து இந்தியா செயல்படாமல் இருக்கும் என்கிற நப்பாசையும் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியா போர்தொடுத்தால் அதை பிரச்சாரமாக்கி பாகிஸ்தான் மக்களை தொடர்ந்து இந்திய வெறுப்பில் வைப்பதற்கு அதுவாய்ப்பாகவும், புதிய தீவிரவாதிகளை அதைச் சொல்லித் தூண்டி உருவாக்கவும் பாகிஸ்தானால் முடியும் என்பதால் எதற்கும் தயாராகவே பாகிஸ்தான் இருக்கிறது.

அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளபடி தீவிரவாதிகளை அழிப்பது பாகிஸ்தானால் இயலாதகாரியம்.

எவ்வளவு காலம் தான் பாகிஸ்தான் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளின் செயலிற்கு அவ்வப்போது மக்களை பறிகொடுக்க முடியும் ? என்ற கேள்வியில் துணிந்து இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 100, 200 என ஆண்டுக்கு 1000 பேர்வரை காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு இரையாகக் கொடுப்பதைவிட ஒரு சில பாதிப்புகள் தற்காலிகமாக ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று இந்தியா துனியும் என்றே நினைக்கிறேன். அடுத்தகாரணமாக மீண்டும் காங்கிரஸ் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கவும் போர் ஒரு முக்கிய காரணியாக காங்கிரசின் வரவேற்பு அறையில் காத்துக் கொண்டு இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள் :

தீவிரவாதிகள் எங்கள் நாட்டவரே-யுஎஸ்சிடம் பாக். ஒப்புதல்
தாவூதுக்கு அத்வானியை கேட்கும் லஷ்கர்!!

12 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

நல்ல பதிவு!

கார்க்கிபவா சொன்னது…

//ளவு அத்வானியும் இந்துத்துவாக்களும் இந்திய முஸ்லிம்களுக்குத் தான் தலைவலி//

அவங்க கொள்கையே வேறங்க.. உலகத்தில் எந்த நாட்டில முஸ்லீம்களுக்கு பிரச்சனை என்றாலும் வருவார்களாம். இவங்க அல்லாவோட ஆட்கள் ஆச்சே!!!! (இஸ்லாம் சகோதர்கள் தவறாக நினைக்க வேண்டாம். அவர்கள் அப்படி சொல்லிக் கொன்டு அடிக்கும் கொட்டங்களை உங்களுக்கும் பிடிக்காது என நம்புகிறேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//பழமைபேசி said...
நல்ல பதிவு!
//

இந்தவார நட்சத்திர பதிவரின் இந்த இடுகைக்கான முதல் பின்னூட்டம் பாராட்டாக, மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
//ளவு அத்வானியும் இந்துத்துவாக்களும் இந்திய முஸ்லிம்களுக்குத் தான் தலைவலி//

அவங்க கொள்கையே வேறங்க.. உலகத்தில் எந்த நாட்டில முஸ்லீம்களுக்கு பிரச்சனை என்றாலும் வருவார்களாம். இவங்க அல்லாவோட ஆட்கள் ஆச்சே!!!! (
//

அவிங்க மட்டும் அல்ல, மலேசியாவில் 'இந்துக்கள்' தாக்கப்படுகின்றனர் என்று கிளம்பும் திடீர் மக்கள் நலக் காவலர்களும் இப்படித்தான். இறைவியாபாரிகளின் இரைக்கு பலியாகுபவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான். எல்லா மதவிற்பனையாளர்களுக்கும் இறை விற்பனைக்கான மொத்த உரிமையையும் கடவுள் ஆசிர்வதித்துக் கொடுத்ததாகவே கூறிக் கொள்கிறார்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி!தற்போதைய சூழலில் நம்மிடம் இரண்டு ஆயுதங்கள் கைவசம் உள்ளன.

முதலாவது உலகளாவிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டி இந்தியாவின் செலவில் பாகிஸ்தானுக்கு எதிராக காய் நகர்த்த அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.முன்பெல்லாம் பாகிஸ்தானிற்கு பின்புலமாக ஆதரவு தந்த அமெரிக்காவும் கூட 9/11 க்குப் பிறகு அதன் கொள்கையிலிருந்து விலகி இந்தியா பக்கம் வந்துள்ளது நல்ல அறிகுறியே.போர் தொடுப்பதற்கான இந்தியாவிற்கான நல்ல தருணம் என்றே கொள்ளலாம்.ஆனால் இதன் பின்விளைவுகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கினால் நமது பொருளாதாரம்,போரின் விரிவு என இதன் விளைவுகள் தொடரும்.இதற்கான மன உறுதியும்,பொருளாதாரப் பின்னடைவுக்கும் நாம் தயாரென்றால் சந்தேகமேயில்லாமல் போர் ஒரு நல்ல தருணம்.

இரண்டாவதாக,பம்பாயின் தாக்குதல் உணர்ச்சி அடிப்படையில் நோக்கினால் நமது இறையாண்மைக்கு எதிரான போர்தொடுப்பே எனலாம்.ஆனால் இந்த காயங்களுக்கு மருந்து போட்டு மீண்டும் ஓட்டக்களத்தில் அபார வேகத்தில் ஓடும் சாத்தியங்கள் இந்தியாவிற்கு நிறையவே உள்ளன.இந்த இரண்டாவது ஆயுதத்தை இந்தியா கையில் தூக்கும் நிலையில் இதில் போட்டியிடும் வேகம் பாகிஸ்தானுக்கு குறைவே.

காவிகளின் உள்நாட்டுக்கே ஊறுவிளைவிக்கும் செயல்களையும்,இஸ்லாம் என்ற பெயரில் மதத்திற்கு துரோகம் செய்யும் அடிப்படைவாதிகளையும் அடையாளம் கண்டு தனிமைப் படுத்துவது அவசியம்.தொலைக்காட்சி மூலம் மதம் பரப்பும் அவலங்களும்,மதம் சார்பான விழாக்கள் தவிர்த்து மத மேடைப் பிரச்சாரங்கள் அழியவேண்டும்.

ALIF AHAMED சொன்னது…

ஈரானுடன் ஆயில் ஓப்பந்ததை சிதைக்க
பாக்கிஸ்தான் இந்தியா நல்லுரவை சிதைக்க பாக்கிஸ்தான் திவிரவாதிக்களுக்கு அமெரிக்காவோ இஸ்ரேலோ தூண்டியிருக்க வாய்ப்பு இருக்கலாமா..?

enRenRum-anbudan.BALA சொன்னது…

போரும் வராது, மோரும் வராது, இன்னும் 2 வாரங்களில் எல்லாம் நார்மலாகி விடும், வழமையான செயல்களில் மூழ்கி விடுவோம் !!!

Voice on Wings சொன்னது…

தீவிரவாதிகள் 'நாங்க இங்கதான் இருக்கோம்ன்னு' கூகிள் மேப் போட்டு உட்கார்ந்திக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல. கூடுவது பின்பு கலைவது என்ற அடிப்படையில்தான் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள், மற்றும் அப்படி இயங்குவதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானதும் கூட. (தோரா போராவை அழித்தும் பின் லேடனை அழிக்க முடிந்ததா?) இந்தியா விரைப்புடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்து, தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் என்று அது நம்பும் இடங்களைத் தாக்கி அழித்தாலும் அதனால் தீவிரவாதிகள் அழிவார்களா என்பது சந்தேகம்தான். அந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் வேண்டுமானால் collateral damage என்ற வகையில் பாதிக்கப்படலாம், உயிரிழக்கலாம். (அதனால் நம் மீது வெறுப்படைவோர் எண்ணிக்கை வேண்டுமானால் உயரக்கூடும், அவர்களிலிருந்து வருங்காலத் தீவிரவாதிகள் உருவாகும் சாத்தியங்களையும் கூடவே உருவாக்கிக் கொண்டு.) அதோடு, ஒரு அணு ஆயுத நாட்டின் மீது போர் தொடுப்பதிலுள்ள அபாயம் குறித்து இங்கு விவரிக்கத் தேவையில்லை.

ஒரே பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இரு ஜனநாயக நாடுகள் என்ற அடிப்படையில், பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்போடுதான் அந்த நாட்டிற்குள் எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. இல்லை, நாங்க அமெரிக்காவினால் தந்திரத்தனமாகப் பயன்படுத்தப்பட்டு அதன் விருப்பங்களை நிறைவேற்றும் கூலிப்படையாகத்தான் செயல்படுவோம்ன்னு நம் தரப்பில் முடிவு செஞ்சாங்கன்னா, அதுக்கு முன்னோடியா நாம் எதிர்க்கும் பாகிஸ்தானையே எடுத்துக்கலாம். அவர்களும் அமரிக்காவால் பயன்படுத்தப்பட்டு, வேலை முடிந்ததும் ஒரு ஆணுறையைப் போல் தூக்கி எறியப்பட்டவர்கள்தான். அவர்களது தற்போதைய பாதுகாப்பற்ற நிலையும், அவர்கள் முன்பு அமெரிக்காவின் கூலிப்படையாகப் பணியாற்றியதன் பலன்தான்.

வருண் சொன்னது…

****அதோடு, ஒரு அணு ஆயுத நாட்டின் மீது போர் தொடுப்பதிலுள்ள அபாயம் குறித்து இங்கு விவரிக்கத் தேவையில்லை. ****

வாய்ஸ் ஆஃப் விங்!!!

இது என்னங்க இது???? அணு ஆயுதம் வைத்திருப்பதால் பாகிஸ்தானுக்கு பயப்படனுமா என்ன?

சப்போஸ்,பாகிஸ்தனே செய்து இருக்கிரார்கள்னு வச்சுக்குவோம், அவங்ககிட்ட அணு ஆயுதம் இருக்குனு
அவர்களை பார்த்து பயந்து ஒதுங்கிடனுமா?

என்னைக்கேட்டால் டெரரிஸ்ட் அட்டாக் கில் சாவதற்கு போரில் சாவது எவ்வளவோ மேல்!

-----------------

நம்ம நாட்டின் நிலைமையைஒப்பாருங்க!

நம்ம ஊரில் மேல் சாதிக்காரனுக சுயநல்த்தால், கடவுளை வைத்து பொழைப்பை ஓட்டி, சாதியை உருவாக்கி தன்னை மட்டும் எந்தவகையிலும் பாதிக்காமல் ஊரை ஏமாற்றி, ராமரையும் இதிகாசத்தையும் வைத்து ஒரு பக்கம் நம்ம நாட்டை இந்த் நிலைமைக்கு ஆளாக்கினார்கள்.
இன்றும், மைனாரிட்டியாக "ஹிந்து வெறியர்களாக" இருந்து கொண்டு "ஹிந்து" என்கிற போர்வையில்
மெஜாரிட்டியாகி ஊரை ஏமாற்றி எல்லோரையும் தூண்டிவிட்டு, பாபர் மசூதியை இடித்து இன்றும் "தேச்துரோகிகளாக" பொழைப்பு நடத்துகிறார்கள் இந்த் உயர்சாதி ஹிந்து வெறியர்கள்.

இன்னொரு பக்கம்

இந்த பாக்கிஸ்தான் தீவரவாதிகள் நம்நாட்டில்வந்துகுழப்பம்
விளைவிக்கிறார்கள். இதில் நம் இந்திய இஸ்லாமானவர்கள், மதத்தையும் நாட்டையும் பிரிக்கத்தெரியாமல் குழம்பி.மதத்திற்காவும், இந்த் மைனாரிட்டி ஹிந்து வெறிபிடித்த உயர்சாதி தேசதுரோகிகளை பழைவாங்கும் எண்ணத்தில், குழம்பி நிற்கிறார்கள்.

இதற்கிடையில் நம்ம பகுத்தறிவு வாதிகள்,தன் அரசியல் ஆதாயத்திற்காகவும், ஹிந்துத்தவாவையும், உயர்சாதி மனினாரிட்டி ஹிந்து வெறியர்களையும் பழி வாங்க எண்ணி, நாட்டை மரந்ஹ்டு தேச துரோகியாகிரார்கள்.

உங்களை மாதிரி "நடுநிலையில்" யோசிப்பவர்கள் போல ஒரு சிலர்.
இப்படி எதையுமே ஆகவிடுவதில்லை.

* இப்போ,என்னதான் இந்தியா செய்யனும்?

* 200 பேர் செத்து இருக்கார்கள். அதற்கு காரணமானவர்கள் பாக்கிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கிறார்கள்.

சரி, இந்த இழப்புக்கு என்ன செய்யனும்?

சும்மா விட்டுவிடுவோமா?

அணு ஆயுதம் உள்ள பாகிஸ்தானை கெஞு ஏதாவது செய்ய சொல்லுவோமா?

இல்லை விதினு போயிடுவோமா?

விபரம் சொல்லவும்!

ஆட்காட்டி சொன்னது…

இந்தியாவின் கையாலாகத் தனம் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகும்.

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

***ஆட்காட்டி 9:15 AM, December 08, 2008
இந்தியாவின் கையாலாகத் தனம் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகும்.***

Kovi: You neeed to delete this kind of SENSELESS sweeping statements from some instigators!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்