பின்பற்றுபவர்கள்

15 ஏப்ரல், 2008

நான் தான் இராமன் பேசுகிறேன்...

அன்புள்ள பக்த கோடிகளே, இலங்கையில் இருந்து நான் திரும்பியதும் மூழ்கடித்து, இன்று இல்லாத பாலத்தை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு என் செயலுக்கு களங்கம் கற்பிக்கிறீர்கள், இராமனால் மூழ்கடித்து அழிக்கப்பட்ட பாலம் இன்றும் இருப்பதாகச் சொல்வது என்னை கேவலப்படுத்துவது தானே ?

நான் கடவுளா ? நான் கடவுளே இல்லை, நான் மனிதன், மனித அவதாரம், மனிதனைப் போலவே குழந்தை பெற்றுக் கொண்டவன், மனிதர்களைப் போலவே மனைவியை சந்தேகப்பட்டவன், மனிதனைப் போலவே அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவன், அது என்ன என்று கேட்கிறீர்களா ? என் அப்பா தசரதர் கொடுத்த வரம் படி எனது தம்பி தானே பட்டத்து இளவரசனாக இருக்க முடியும் ? அதற்கு ஆசைப்பட்ட எனது தாய் கோசலையும், அதை ஆமோதித்து 14 ஆண்டுகள் கழித்தாவது அதனை பெற்றுக் கொள்கிறேன் என்று வனவாசம் போன நான் சாதாரண மனிதன் தானே ?

ஆசைப்பட்டேன் என்ற வெளிப்படையாக என்னிடம் சொல்லி மையல் கொண்ட சூர்பனகை என்ற பெண்ணை நான் மூக்கறுத்தேன், நான் செய்த அந்த தவறினாலேயே இராவணன் என் மனைவியை கவர்ந்து சென்றான். வெறும் மனிதனான என்னால் வாலியுடன் போர் செய்ய முடியுமா ? அதனால் தான் அவனை மறைந்திருந்து கொண்டேன், நான் கடவுள் என்றால் அவனை எளிதாக கொன்று இருக்க முடியும், அகலிகைக்கு காலடியால் சாபவிமோசனம் கிடைக்க காரணமாகச் சொல்லப்பட்ட நான் வாலியை வீழ்த்துவது எளிதாக இருந்திருக்காது.

தாடகை, சூர்பனகை என்ற பெண்ணைத்தான் வஞ்சித்து இருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள், என்னுடன் பிறந்த பாவத்திற்காகவே என் தம்பி இலக்குவன் தன் மனைவியை பிரிந்து காட்டில் காய்ந்து கொண்டிருந்தான், அதனை அனுமதித்த நான் மனிதர்களைப் போலவே சுயநலக்காரன் தானே ? என் பேராசையின் மீதான வெறுப்பில் என் செருப்பே பரவாயில்லை என்னும் நிலைக்கு என் தம்பி பரதன் சென்றுவிட்டான்

இராவணன் செய்த தவறுக்காக (மூக்கறுப்பால் தூண்டியது நான் தான்) இலங்கையையே அந்த காலத்து கண்ணகியாக அனுமாரை வைத்து தீக்கிரையாக்கினேன்.

நான் பிறந்ததால் எதாவது நன்மை இருக்கிறதா ? என்று பார்த்தேன், மதக்கலவரங்களை 20 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்ததையும், என் பெயரைச் சொல்லி சேது திட்டம் நிறுத்தப்பட்டதையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், தவிர்த்து ஒன்றுமே இல்லை. என் நிலை எவருக்கும் வரக் கூடாது, என் கதையும் எவருக்கும் சொல்லப்படக் கூடாது.

என் மனைவி சீதை "சந்தேகபுத்திகாரனான உன்னுடன் இருப்பதை விட என் தாய் பூமாதேவியிடமே செல்கிறேன்", துப்பாத குறையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் . முதன் முதலில் தாய்வீட்டுக்கு பெண்கள் கோவித்துக் கொண்டு போகும் பழக்கமே என்னால் தான் ஏற்பட்டதோ என்றும் கூட நினைக்கிறேன்.

நான் ஏகப்பத்தினி விரதன் என்று கம்பர் தமிழில் எழுதும் போது சொல்லிவிட்டார், அதே கதையை வால்மிகி எழுதும் போது என்னிடம் குறை காணவில்லை.

நான் பிறக்கமலே இருந்திருக்கலாம், சாதாரண மனிதனாக இருந்த என்னை கடவுள் நிலைக்கு உயர்த்தியதையும் என்னை வைத்து அரசியல் செய்யப்படுவதும் எனக்கு மேலும் பாவம் சேர்ப்பதாகவே உள்ளது.

நான் பிறந்ததிலிருந்து மறையும் வரை என்னுடன் இருந்தவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்தார்கள், வரிசையாக சொல்லலாம், எனது தாய்மார்கள், தந்தை, தம்பிகள், என் மனைவி, இராவணன், அவன் தம்பிகள் எவரும் மகிழ்வாக இருந்ததே இல்லை. அனுமான் கூட என்னுடன் இருந்ததால் திருமண வாழ்கையே வேண்டாம் என்று தனியாளாக இன்றும் இருக்கிறான்.

என் கதை என்னவிதமான பாடம் என்று தெரியவில்லை, என்னைச் சேர்ந்தவர்கள், சார்ந்தவர்கள், போற்றியவர்கள் எல்லோரும் துன்பத்தையே அனுபவத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பொருத்திப் பார்க்கும் போதுதான், என்னை வைத்து செய்யப்படும் அரசியலும், அதனால் பலர் இறப்பதும் கூட என்னால் ஏற்படும் துன்பமாகவே மாறுகிறது என நினைக்கிறேன்

என்னை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திவிடுங்கள், எனக்கு மேலும் பாவத்தை சேர்த்து 'மீனிலும் தாழ்ந்தவனாக' (நன்றி: ஜயராமன் சார்) இன்னொருமுறை பிறக்க வைக்காதீர்கள். போதும் நான் பட்டதும், என்னால் நீங்கள் பட்டதும்.

இப்படிக்கு,
ஸ்ரீஇராமன்
தற்பொழுது எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை

பிகு : இந்த இடுகைக்கும் லக்கியின் இந்த இடுகைக்கும், டிபிசிடியின் இந்த இடுகைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

15 கருத்துகள்:

TBCD சொன்னது…

லக்குவனின் மனைவி கூடவே வந்திருந்தால், சீதைக்கு இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி என்று உயர்த்தி சொல்ல முடியாதே என்று சதி செய்து விட்டுவிட்டு வந்ததை சரி வர, ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத, இல்லாத இராமனை கண்டிக்கிக்கிறேன்.

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Thamizhan சொன்னது…

நான் என்னை நம்பியவளைச் சந்தேகப் பட்டேன்,இப்போது என்னை சந்தேகப் படாதவர்கள் என் பெயரை வைத்து ஏமாற்ற விரும்புவர்கள் தான்.
என்னை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டார்கள்.
சிகாகோ பலகலைக் கழகப் பேராசிரியர் 300க்கும் மேற்பட்டக் கதைகளையும் அவற்றின் பயித்தியக் கார ராம கதைகளையும் அப்போதே அலசி விட்டார்.அது இப்போது டில்லி பல்கலைக் கழகத்தில் பல் இலிக்கிறது.

பாவம்! அத்வானிகள்!

ஜெகதீசன் சொன்னது…

//
பின்குறிப்பு: கோவி.கண்ணன் பதிவில் பேசியிருப்பது போலி ராமன். அதை யாரும் நம்பவேண்டாம்....
//
இப்படி ரிபிசிடி பதிவில் உம்மாச்சி பதில் கடிதம் போட்டுருக்காங்க....
இது உண்மையா? இங்கு பேசியிருக்கும் ராமர் போலியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
லக்குவனின் மனைவி கூடவே வந்திருந்தால், சீதைக்கு இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி என்று உயர்த்தி சொல்ல முடியாதே என்று சதி செய்து விட்டுவிட்டு வந்ததை சரி வர, ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத, இல்லாத இராமனை கண்டிக்கிக்கிறேன்.
//

டிபிசிடி ஐயா,
லக்குவன் மனைவி அயோத்தியில் இருந்தாலும் அங்கு அவன் இல்லையே, அவளுக்கு அயோத்தியும் இல்லை அவள் கணவனும் இல்லை என ஆகிப்போச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
நான் என்னை நம்பியவளைச் சந்தேகப் பட்டேன்,இப்போது என்னை சந்தேகப் படாதவர்கள் என் ...
//

உங்களிடமும் இராமர் பேஷினாரா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
இப்படி ரிபிசிடி பதிவில் உம்மாச்சி பதில் கடிதம் போட்டுருக்காங்க....
இது உண்மையா? இங்கு பேசியிருக்கும் ராமர் போலியா?//

ஜகதீசன்,
இராமரை வச்சு போலி பிரச்சனையா ?

புரட்சி தமிழன் சொன்னது…

ராமனை ரன கலம் ஆக்கியமைக்கு வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா சொன்னது…

எல்லாருக்கும் வணக்கம்,
திரு.இராமன் அவர்களுக்கு சிறப்பு வணக்கம்
இன்று இந்த நையாண்டி நைனா உங்கள் முன் வைக்கும் கேள்விகள்..
(கேள்விகள் நையாண்டி அல்ல)
இந்த ராம ராஜியம் ராம ராஜியம் என்று சொல்கிறீர்களே அந்த ராஜியம் எப்படி இருக்கும். (எனக்கு தெரிஞ்சது ராம ராஜன் மட்டும் தான்)
1. அந்த ராஜியத்தில் சராசரி மனிதர்களின் நிலை என்ன?
2. அந்த ராஜியத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன?
3.அந்த ராஜியத்தில் அரசாங்கத்தின் வருமானம் என்ன? எப்படி வந்தது?
4. அந்த ராஜியத்தில் மந்திரி மற்றும் அரசு அதிகாரிகளின் வருமானம் என்ன?
5. வரி வசூலிப்பு முறை என்ன?
6. என்ன? என்ன? தொழில்கள் சிறந்து விளங்கியது?
7. அரசு மக்களுக்கு செய்த, நாட்டு நலனுக்கு செய்த செலவினங்கள் என்ன?
8. சாதாரண மக்களின் குரலுக்கு அரசின் பதில் என்ன?
9.கிராம நிறுவாகமுறை என்ன?
10. என்ன? என்ன பலன்கள் மக்கள் அடைந்தார்கள்?

இதனை கொஞ்சம் விளக்கி சொல்லிவிட்டு ராம ராஜியம் அமைப்போம் ராம ராஜியம் அமைப்போம் என்று உங்கள் போலி பக்தர்கள் கூறினால் கொஞ்சம் நல்ல இருக்கும்.

திஸ்கி: நான் அந்த ராஜியத்தில் வாழ்ந்து பார்க்கவில்லை, மேலும் நான் அதை பற்றி படிக்கவில்லை. ஆகையினால் இந்த கேள்விகளை முன் வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
எல்லாருக்கும் வணக்கம்,
திரு.இராமன் அவர்களுக்கு சிறப்பு வணக்கம்
இன்று இந்த நையாண்டி நைனா உங்கள் முன் வைக்கும் கேள்விகள்..
(கேள்விகள் நையாண்டி அல்ல)
இந்த ராம ராஜியம் ராம ராஜியம் என்று சொல்கிறீர்களே அந்த ராஜியம் எப்படி இருக்கும். (எனக்கு தெரிஞ்சது ராம ராஜன் மட்டும் தான்)
1. அந்த ராஜியத்தில் சராசரி மனிதர்களின் நிலை என்ன?
2. அந்த ராஜியத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன?
3.அந்த ராஜியத்தில் அரசாங்கத்தின் வருமானம் என்ன? எப்படி வந்தது?
4. அந்த ராஜியத்தில் மந்திரி மற்றும் அரசு அதிகாரிகளின் வருமானம் என்ன?
5. வரி வசூலிப்பு முறை என்ன?
6. என்ன? என்ன? தொழில்கள் சிறந்து விளங்கியது?
7. அரசு மக்களுக்கு செய்த, நாட்டு நலனுக்கு செய்த செலவினங்கள் என்ன?
8. சாதாரண மக்களின் குரலுக்கு அரசின் பதில் என்ன?
9.கிராம நிறுவாகமுறை என்ன?
10. என்ன? என்ன பலன்கள் மக்கள் அடைந்தார்கள்?

இதனை கொஞ்சம் விளக்கி சொல்லிவிட்டு ராம ராஜியம் அமைப்போம் ராம ராஜியம் அமைப்போம் என்று உங்கள் போலி பக்தர்கள் கூறினால் கொஞ்சம் நல்ல இருக்கும்.

திஸ்கி: நான் அந்த ராஜியத்தில் வாழ்ந்து பார்க்கவில்லை, மேலும் நான் அதை பற்றி படிக்கவில்லை. ஆகையினால் இந்த கேள்விகளை முன் வைக்கிறேன்.
//

நையாண்டி நைனா,

கையில வெண்ணையை வச்சுண்டு யாராவது நெய்க்கு அலைவாளா ? அப்படி அலையறவாளை அசடு என்று ச்சொன்னா அது தப்பில்லையே ?
:)


ராம ராஜ்யம் பற்றி தெரியவேண்டுமென்றால் குஜராத்துக்கு டிக்கெட் எடுங்கோ, ஸ்ரீமான் மோடியின் நல்லாட்சி ஸ்ரீராம ராஜ்யம் தான், இந்துக்கள் அங்கே தான் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//புரட்சித் தமிழன் said...
ராமனை ரன கலம் ஆக்கியமைக்கு வாழ்த்துக்கள்
//

புரட்சித் தமிழன்,
இப்படியெல்லாம் சொன்னால் தெய்வ குத்தம் ஆகிடும், தூங்கும் போது கண்ணு தெரியாது !
:)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:))
//

இராமன் பேசுவது உங்களுக்கு சிரிப்பா ?
சீரியஸாகத்தானே பகவான் பேசி இருக்கார்.
:)

உண்மை உடையான் சொன்னது…

நல்ல பதிவு. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மை உடையான் said...
நல்ல பதிவு. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

4:02 PM, April 18, 2008
//

உண்மை உடையான்,

நம்புங்க,

நானா எழுதினேன் ? ஆட்டிவைப்பவன் அவனன்றோ ! எல்லா புகழும் இராமனுக்கே !

நான் வெறும் கருவி !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்