பின்பற்றுபவர்கள்

21 ஏப்ரல், 2008

திரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு ... (மட்டுமல்ல)

திரு ஜெயபாரதன் ஐயா அவர்கள் பற்றி அறியாதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கனடாவில் அறிவியல் துறையில் பணியாற்றி இருக்கிறார். அவரது 100க் கணக்கான கட்டுரைகளை திண்ணை இணைய இதழில் குவிந்து கிடக்கிறது. இலக்கியம், மொழியாக்கம், அறிவியல், கவிதைகள் என ஜெயபாரதன் ஐயாவின் இலக்கிய பயணம் அளவிட முடியாது. இவை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து கொண்டே தொடர்ந்து செய்தார் என்பதை உணரும் போது அவர் தமிழ்மீது கொண்டுள்ள அளப்பெரிய பற்றை எவராலும் விளங்கிக் கொள்ள முடியும், இவரது அறிவியல் கட்டுரைகளை முடிந்த அளவுக்கு சிறப்பாக தமிழில் கொடுத்து இருப்பார், மற்றும் அதனை எளிதாக விளக்க தேவையான படங்களை இணைத்து இருப்பார்.

அவரது எழுத்துக்களை நீண்ட நாட்களாக படித்து வரும் வாசகன் நான். அண்மையில் 'தமிழ் விடுதலை ஆகட்டும்' என்ற கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதி இருந்தார், அதனைத் தொடர்ந்து அதே கட்டுரையை தனது வலைப்பதிவில் ஏற்றி தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார், ஞாயிற்றுக் கிழமை என்பதால் எத்தனை பேர்கள் அதனை படித்தார்கள் என்று தெரியவில்லை. ஜெயபாரதன் ஐயா அவர்களின் கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது, ஒரே ஒரு பத்தியில் எனது மாற்றுக் கருத்தைச் சொல்கிறேன்.

அவரது முழுக்கட்டுரை தமிழ் விடுதலை ஆகட்டும்!

//நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். //

ஜெயபாரதன் ஐயா,

எந்த ஒரு மொழியிலும் எழுதியது போலவே படிக்க முடியாது, அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும், ஆங்கிலத்தில் பலுக்குதல் (ப்ரனவுன்சேசன்) என்று உண்டு என்பது தாங்களுக்கு தெரியும். tsunami என்பதை சுனாமி என்று தெளிவாக படிக்கும் போது பாசுகரன் என்று எழுதினால் அதை பாஸ்கரனாகவே படிக்க முடியாது என்பது நமது பயிற்சி இன்மையே காரணம் அது தமிழின் குறையன்று. ஆங்கிலத்தில் பலக்குதலுக்கும் (உச்சரிப்புக்கும்) சொல்லுக்கும் வேறுபாடு இருப்பதை கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ள நாம், தமிழ்மட்டுமே பேசுவது போலவே எழுதவேண்டும் என்று நினைப்பது தமிழுக்கு அழகு சேர்க்குமா என்று மனம் திறந்த்து சிந்திக்க வேண்டும்.

என்னதான் ரஜினி, எம்ஜிஆர் என்று எழுத்தில் எழுதினாலும் பாமரர் சொல்வது ரசினி, எம்சிஆர் தான். அவர்களை முட்டாள்கள் என்று சொல்லத் துணிவதாக இருந்தால் உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். சீனமொழியில் 90 விழுக்காடு சொற்கள் உண்மையான பெயர்சொல்லின் ஒலி அமைப்பை ஒத்து இருக்காது 'இந்த்உ' என்று இந்தியாவையாவையும், 'சிஞ்சப்பூ' என்று சிங்கப்பூரையும் குறிப்பிடுவார்கள், அவர்கள் அதை தங்கள் மொழியின் குறைபாடு என்று தாழ்வாக நினைப்பது இல்லை. அவர்களின் இலக்கியம் வளராமலும் இல்லை.

தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பேசுபவர்கள் எப்போதுமே ஆங்கிலத்தை ஒப்பிட்டே பேசுகிறார்கள், அதில் இருக்கிறது இதில் இல்லை என்றே சொல்லப்படுகிறது, ஆங்கிலம் வெள்ளைக்காரர்களின் தாய்மொழி என்பதைவிட ஒரு வணிக மொழியாக பரிணமித்து நிற்கிறது, உலக அளவில் இரண்டாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது, நமது தமிழ் தமிழர்களைத்தாண்டி பரவாது, நமது தமிழ் மட்டுமல்ல, உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் சீன மொழி கூட சீனர்களைத் தவிர்த்து எவரும் பேசுவதாக தெரியவில்லை. சிலர் மாற்று மொழி அறிந்து கொள்ளவும், ஆங்கிலம் தவிர்த்து, தாய்மொழி தவிர்த்து சிலர் வணிகம் தொடர்பாகவும் மேலும் சில மாற்று மொழிகளை அறிந்து கொள்வார்கள், ஆங்கிலம் தவிர்த்து அறிந்து கொள்ளப்படும் மொழிகளை அறிவோர் எண்ணிக்கை ஆசியாவைப் பொருத்து மிகமிகக் குறைவே (இந்தி போன்ற கட்டாயம் பாடம் தவிர்த்து)

ஜெயபாரதன் என்பதை செயபாரதன் என்று பிறர் எழுதுவது உங்களுக்கு பிடிக்காமல் உங்களை ஜெயபாரதன் என்றே அழைக்கச் சொல்வது / எழுதச் சொல்வது உங்கள் உரிமை, அது போன்றே அவர்கள் ஜெயகாந்தனை செயகாந்தன் எனவும், ஜெர்மனியை செர்மனி என எழுதும் போது 'அப்படி எழுதாதே !' என்று நீங்கள் கட்டளை இட முடியாது.

நீங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட சொற்களை சீனம் போன்ற மற்ற செம்மொழிகள் எப்படி எழுதுகிறது என்று கேட்டறிந்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியவரும். 'எனக்கு தமிழ்பற்றி தான் கவலை' என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஏற்கனவே இருக்கும் ஜ,ஷ,ஹ,க்ஷ, போன்ற திசை எழுத்து வகைகள் அப்படியே இருக்கலாம், அவற்றை பயன்படுத்த பழகிவிட்டோம், புதிதாக pha,ba,bha எல்லாம் தேவை இல்லை என்பது என்கருத்து. ஸ்ரீ என்பதை திரு என்று மொழிமாற்றி பயன்படுத்துவதாலும், சீனிவாசன் என்று எழுதுவதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. pha,ba,bha எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்தால் புதிய கலைச்சொல் ஆக்கம் குறைந்துவிடும்.

ஆங்கிலம் a e i o u - வெறும் ஐந்து குறில் மெய்களை வைத்து பலுக்குதல் முறையில் நெடில் சொற்களை அமைத்துக் கொள்ளும் போது தமிழில் மட்டும் வேற்றுமொழியில் உள்ள எழுத்துக்கள் இல்லை என்று நினைக்க வேண்டும் ? Kamaraj என்பதை ஆங்கிலத்தில் எழுதி தமிழர் தவிர்த்து வேற்று மொழியாளர்களை படிக்கச் சொன்னால் 'கமராஜ்' என்றுதான் படிப்பார்கள்.

சில எழுத்துக்கள் இல்லை என்றால் எந்த மொழியை ஆதாரமாக வைத்து அவற்றில் இருக்கும் எந்தந்த எழுத்தையெல்லாம் தமிழுக்கு கொண்டுவருவது ?

காதில் கேட்கும் ஒலி அலைவரிசை 4 - 4000 khz இதில் ஒரு எழுத்துக்கு 4 hz என்று வைத்துக் கொண்டாலும் எந்த ஒரு மொழியும் முழுமையான மொழி என்பதற்கு உயிர், மெய், உயிர்மெய் என 1000 எழுத்துக்கள் தேவைப்படும், அப்படி ஒரு மொழி உலக மொழிகளில் கிடையவே கிடையாது. அப்படி ஒன்று உருவாக்கினாலும் அத்தனை எழுத்துக்களையும் நாவால் பலுக்கும் திறன் மனிதருக்கு கிடையாது.

'தமிழ்' என்பதை மலையாளம் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து மொழிகளும் எப்படி பலுக்குகிறது, எழுதுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதற்கு அந்த மொழியாளர்கள் அப்படி ஒரு ஒலி (ழ்) உள்ள எழுத்து இல்லையே என்று கவலைப்பட்டு இருக்கிறார்களா ? என சிந்திந்து…தமிழ்மொழியில் சில எழுத்துக்கள் இல்லை, சிலவற்றை அப்படியே எழுதி தமிழின் 'குறையை' நீக்கவேண்டும் என்ற 'தாழ்வு' மனப்பாண்மை வராது.

5 கருத்துகள்:

nayanan சொன்னது…

திரு.செயபரதன், நீங்கள் மேற்கோள் காட்டிய அவரின் கட்டுரையை
ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கும் மேலாகத்
தூக்கிக் கொண்டு திரிகிறார்.
பதிவுகள், திண்ணை, அன்புடன் மடற்குழு, தற்போது அவரின் பதிவு என்று இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.

இது குறித்து அறிந்து அவருக்கு எழுதிய 4 மடல்கள் கீழே.

அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

ஆழ்ந்து பார்த்தால், அவரின் அன்புக்குப் பாத்திரமான புகாரியை
வானளாவப் புகழ வேண்டும் என்ற நோக்கில் ஒரு விழாவில், ஒட்டக்கூத்தர், பாரதிதாசன் போன்ற கவிஞர்களை விட உயர்ந்த கவிஞர் என்று பாராட்டி உதிர்த்த பல பிழைகளில் முளைத்த கட்டுரை அது என்பது புரியும்.

நமக்கு யாரையும் பாராட்டுவதில் தயக்கமே இல்லை. ஆனால், அதற்காக பாரதிதாசனை இழிவு படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. புகாரியைக் கொஞ்சுவதற்காக ஒரு பொதூமேடையில் ஒட்டக்கூத்தரை மட்டந்தட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இவர் இப்படி தளம் தளமாக இதைப் போட்டுக் கொண்டே போவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பின்னனி அறிய காணுங்கள் இந்தச் சுட்டிகளை.

http://nayanam.blogspot.com/2007/06/4.html

http://nayanam.blogspot.com/2007/06/3.html

http://nayanam.blogspot.com/2007/06/2.html

http://nayanam.blogspot.com/2007/06/1.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

கோவி.கண்ணன் சொன்னது…

திரு நாக.இளங்கோவன் அய்யா,

நீங்கள் கொடுத்த சுட்டிகளைப் படித்தேன். ஒப்பிட்டு அளவில் ஒருவரை புகழ்வதோ பழிப்பதோ தவறுதான்.

இந்த இடுகை அது குறித்தது அல்ல, அவர் எழுதிய ஒரு பகுதிக்கான மாற்று கருத்துதான் சொல்லி இருக்கிறேன்.

அவர் பெயரை செயபரதன் என்று தாங்கள் குறிப்பிடுவது அவருக்கு பிடிக்கவில்லை என்று அவர் வெளிப்படையாக சொல்லும் போது நீங்கள் அவ்வாறே செய்துவருவதும் கூட தவறாகவே படுகிறது. பெயர்களை தமிழ்படுத்தும் போது மூன்றாம் நபர்களின் பெயரை அர்ஜுனன் என்பதை அர்சுனன் என்று எழுதினால் எவரும் தவறாக கொள்ளமாட்டார்கள், ஒருவர் தனது தந்தையார் இட்டு அழைத்த பெயரை நமது விருப்பத்திற்காகவும், மொழிநடை என்பதற்காகவும், அவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தும் மாற்றுவது ஏற்புடையது அல்ல

நையாண்டி நைனா சொன்னது…

திரு. ஜெயபாரதனை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.
நானும் கண்டேன்,
பேருவகை கொண்டேன்.
அவரது இந்த கட்டுரையை கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் உற்றேன்.

அவர் கூறுகிறார் "அனைத்து மொழிகளும் மாறிவிட்டது, நாமும் மாற வேண்டும்" என்ன சிந்தனை இது. என்ன கருத்து இது? நாம் நம் சுயத்தை எதற்காக இழக்க வேண்டும். ஆங்கிலத்தில் சித்தப்பா, சித்தி, மாமி, மாமா போன்றவற்றிற்கு தனித்தனியே வார்த்தைகள் கிடையாது அதற்காக நாம் நம் உறவுகளை விட்டு விட முடியுமா?
அது நம் கலாசாரத்தில் வந்தது. மற்றும் உணவுகளும், உடை முறைகளும் நம் தட்ப-வெப்ப, கால நிலைகளால் நிர்ணயம் செய்யப்பட்டது அதை மாற்றுவது தவறு. சில பேர் வேஷம் போட்டு கொண்டுள்ளார்கள் அவர்களை திருத்த வேண்டும், சொல்லி புரிய வைக்க வேண்டும். (
"போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !"
)
.அதற்கான உங்கள் ஆதங்கம் சரியானதே, நம் தமிழகத்தில் உள்ள நடைமுறைகள், பாட முறைகள் மாற்றம் செய வேண்டியதே. அதற்கு உங்கள் கருத்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

ஒவ்வொரு மொழிச் சொல்லை உச்சரிக்க, ஒவ்வொரு மொழியில் இருந்து நாம் வார்த்தைகளை பெற்று கொண்டே இருந்தால் இறுதியில் தமிழ் சொற்கள் என்று எதுவும் இருக்காது.
இவ்வாறு செய்தால் பாரதியின் நோக்கமே நிறைவேறாது.
"மெல்ல தமிழ் இனி சாகும்" - என்பது "நாம் கொல்ல தமிழ் விரைந்து சாகும்" என்றாகும்.

அண்ணன் திரு.கோவியாரின் கருத்து:
எந்த ஒரு மொழியிலும் எழுதியது போலவே படிக்க முடியாது, அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும், ஆங்கிலத்தில் பலுக்குதல் (ப்ரனவுன்சேசன்) என்று உண்டு என்பது தாங்களுக்கு தெரியும். tsunami என்பதை சுனாமி என்று தெளிவாக படிக்கும் போது பாசுகரன் என்று எழுதினால் அதை பாஸ்கரனாகவே படிக்க முடியாது என்பது நமது பயிற்சி இன்மையே காரணம் அது தமிழின் குறையன்று. ஆங்கிலத்தில் பலக்குதலுக்கும் (உச்சரிப்புக்கும்) சொல்லுக்கும் வேறுபாடு இருப்பதை கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ள நாம், தமிழ்மட்டுமே பேசுவது போலவே எழுதவேண்டும் என்று நினைப்பது தமிழுக்கு அழகு சேர்க்குமா என்று மனம் திறந்த்து சிந்திக்க வேண்டும்.


நேரான சிந்தனையில், மிகச் சீராக வந்த கருத்து இது.

திரு.ஜெயா பாரதன் எழுதுகிறார்:
"வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ?"


நம் மொழியோ, நம் மொழியின் சிறப்போ தெரியாதவர் பிழை ஏற்படுத்தினால் யார்தான் கோபம் கொள்வார்? ஆனால், நீங்கள் தமிழின் பெருமையோ, சிறப்போ தெரியாதவரா? (அனைவரும் அறிவர், வேற்று மொழி எழுத்து எது? நம் மொழி எழுத்து எது? என்று)
உங்கள் பெயரில் கலந்திருப்பது வேற்று மொழி எழுத்து.
(அதை பயன் படுத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது, நீங்கள் உங்கள் பெயரை எழுதுங்கால்)
ஆனால் ஜெயபாரதன் என்னும் பெயர் தங்களுக்கு மட்டுமே உரிமை உடையது அல்ல. மேலும், அப்படியல்லாமல் மாற்றி எழுதினால் அது தங்களை குறிக்காது என்று ஒரு அறிக்கை விட்டு விடுங்கள் போதுமானது.

நீங்களே சொல்லுங்கள், Huang Suang -
எப்படி? நம் மொழியில் வேண்டாமையா, உங்களுக்கு தெரிந்த வேற்று மொழியில் அல்லது ஆங்கிலத்தில், அந்த பயனியின் தாய்(சீன)மொழி வடிவில், உச்சரிப்பில் எழுதுவது?
அந்த, அந்த வட்டாராத்திற்கு எது பொதுவானதோ, எது இயல்போ அது தான் அந்த மக்களுக்கு உரித்தாணது. மாற்ற நினைத்தால் வேடிக்கையாக தான் இருக்கும்.

மேற்கொண்டு தகவல் பல அறிய, கீழ்க்கண்ட சுட்டிகளை தொடர்பு கொள்ளவும்:

http://www.themillionsblog.com/2006/08/hard-to-pronounce-literary-names.html

http://www.bbc.co.uk/wales/whatsinaname/sites/features/pages/howdoisay.shtml

http://phoenix.about.com/cs/phoenixfactsfun/ht/indiantribes.htm


அண்ணன் திரு.கோவியாரின் கருத்து:
"'தமிழ்' என்பதை மலையாளம் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து மொழிகளும் எப்படி பலுக்குகிறது, எழுதுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதற்கு அந்த மொழியாளர்கள் அப்படி ஒரு ஒலி (ழ்) உள்ள எழுத்து இல்லையே என்று கவலைப்பட்டு இருக்கிறார்களா ? என சிந்திந்து…தமிழ்மொழியில் சில எழுத்துக்கள் இல்லை, சிலவற்றை அப்படியே எழுதி தமிழின் 'குறையை' நீக்கவேண்டும் என்ற 'தாழ்வு' மனப்பாண்மை வராது."


மிக தெளிவான சிந்தனையிலும், தமிழ் பற்றினாலும் வந்த கருத்துகள் இவை.

சூரிய நாராயண சாஸ்திரிகள் - பரிதிமாற் கலைஞர் என்று ஆக்கியது போல் உங்களையும் மாற்ற சொல்லவில்லை திரு. ஜெயபாரதன் அவர்களே.

PLEASE VISIT: NAIYANDI-NAINA

கோவி.கண்ணன் சொன்னது…

நைனா,

நீண்ட நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி.

நான் ஜெயபாரதன் ஐயாவின் ஒருபத்தியில் இருப்பதற்கு மட்டும் மாற்றுக் கருத்து எழுதி இருக்கிறேன். மற்றபடி அவர்சொல்லி இருக்கும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. அவர் கருத்தை மறுக்கும் எனது கருத்து அவர் மீது இருக்கும் மதிப்பை எடைபோடாது !


நீங்களும் அதே போன்று தான் சொல்லி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

Jayabarathan சொன்னது…

அன்புமிக்க நண்பர் கோவி. கண்ணன்,

நண்பர் நாக. இளங்கோ கூறியது தவறு. பதிவுகளில் வந்த என் கட்டுரையில் கவிஞர் புகாரி ஒட்டக் கூத்தரையும், பாரதிதாசனையும் விடச் சிறந்தவர் என்று எந்த இடத்திலும் நான் எழுதவில்லை. ஒட்டக் கூத்தரின் மமதை புகாரிக்கு இல்லை என்று சொல்லி யிருக்கிறேன். பாரதியார் பெயரை வைத்துக் கொண்டு பாரதிதாசன் பாரத நாடு சுதந்திரம் பெறாது என்று நம்பியதாக எழுதினேன்.

விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்