பின்பற்றுபவர்கள்

6 ஆகஸ்ட், 2007

இறைவன் மொழிகளை கடந்தவன் ?

தமிழில் 'நுழைக்கப்பட்ட' வேற்று மொழிச் சொற்களில் வடமொழிக்கே (சமஸ்கிரத த்திற்கே) முதலிடம். மற்ற கலப்ப்புச் சொற்கள் இயல்பாக நுழைந்தவை. வணிக நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் சென்ற போது, பல்வேறு நாட்டினர் தமிழகத்துக்கு வந்த போதும் வேற்றுமொழிச் சொற்கள் தமிழில் கலந்து இருகிறது. எடுத்துக்காட்டு சன்னல் ( சாளரம்) மற்றும் பல. ஆனால் வேண்டுமென்றே அல்லது பொறுப்பின்மையால் இன்றைய தேதியில் ஆங்கிலம் கலப்பது போல, வடமொழி படித்த 'பண்டி'தர்கள் மொழிகளை தனித்தனியாக கையாளா திறனற்று கலந்து பேசினர். மொழிக்கலப்பில் இலங்கியங்களை அமைத்தனர். இது போல் தமிழை முற்றிலும் அழித்து தெய்வங்களை சமஸ்கிரதப்படுத்த வேண்டும் என்ற முயற்சியும் நடைபெற்றது. அதை பல பதிவர்கள் மற்றும் நானும் கூட பல இடங்களில் பேசி இருக்கிறேன்.

இயல் இசை நாடகம் என்ற பிரிவுகளில் இருக்கும் கலப்புகளை அகற்றுவது என்பது எளிது. தனித்தமிழ் இயக்கம் அதைத்தான் செய்தது. ஆனால் இறைத்தமிழ் என்ற பிரிவில் இருந்து அகற்றுவது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனென்றால் புனிதம் என்ற பெயரில் பூவை காதில் சுற்றி சமஸ்கிரதம் தேவபாசை என்று ( இன்றும் கூட) வெளி உலகம் தெரியாதவர்களிடம் நம்ம வைக்கப்பட்டு இருந்தது. அப்படி நம்புபவர்களில் எனது பெற்றோரும் கூட அடக்கம்.

தேவபாசை என்ற சொல்லாடாலை நூற்றாண்டிலேயே கால்டுவெல் தகர்த்து எறிந்துவிட்டார். போதாகுறைக்கு தேவபாசையின் சொற்களில் இருந்த தமிழ் சொற்களையும், தமிழ் திரித்தல்களையும் தேவநேய பாவாணர் அம்பலப்படுத்துவிட்டார் எனவே தேவ பாசை என்பது கலப்பில்லாதா (அக்மார்க்) மொழி இல்லை. ஆகவே இப்போதெல்லாம் தேவபாசை என்ற பசையை சிலைகளின் மீது ஒட்டமுடியாது. இருந்தாலும் முயற்சியாக செய்யபடுவது என்ன தெரியுமா ?

"கடவுள் மொழிக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் எனவே வடமொழியை விலக்கி கடவுளைப் பார்க்க வேண்டியதும், அப்படி செய்பவனும் பக்தி மானே இல்லை"

- இதை மேலோட்டமாக பார்த்தால் சரியாகச் சொல்கிறார்களோ என தோன்றும் ஆனால் அதையே திருப்பிக் கேளுங்கள் இறைவன் தான் மொழிக்கு அப்பாற்பட்டவர் ஆயிற்றே அப்பறம் ஏன் வடமொழியில் தான் வணங்கவேண்டும், அது அப்படியே இருக்க வேண்டும் என்று விருப்புகிறீர்கள் ? என. உடனேயே "இது விதண்டாவாதம்" என்று சொல்வதைத்தவிர நேரடியாகவே பதில் வரவே வராது.

காலம் காலமாக புனிதம் என்ற சந்தனப் பூச்சில் வடமொழியை குழைத்து இறைவனுக்கு சாற்றி வருவதும். அதுதான் "நல்லது" தெய்வத்துக்கு "உகந்தது" என்று சொல்லி வருவதும் தெரிந்ததுதான். வெள்ளைக்காரன் மட்டும் வந்து விடுதலை கொடுக்காவிட்டால். நாடும் நாட்டு மக்களும் நாசமாகவே போயிருப்பர்.

தற்போது யார் காதிலும் பூ வைக்க முடியாது. பேசாது என்ற துணிச்சலில் கோவில் சிலைகளுக்கு சுற்றட்டும். பக்தர்களுக்கு தேவையா ?
விதண்டாவாதம் பேசுபவர்கள் எவராவது இறை துதியில் "உயர்வு", "புனிதம்","தேவபாசை" என சொல்லும் போது அதே கேள்வியை திருப்பி கேளுங்க, இதுபோல

மடையர்களே ! எல்லாவற்றிற்கு அப்பாற்பட்ட இறைவனை தமிழில் ஆரதனை செய்வதால் அவனுக்கு என்ன இழுக்கு ? மொழிக்கு அப்பாற்பட்டவன் இறைவன் அன்றோ ?

இன்னும் ? இங்கே இருக்கிறது !
--
அன்புடன்,

கோவி.கண்ணன்

25 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//மடையர்களே ! எல்லாவற்றிற்கு அப்பாற்பட்ட இறைவனை தமிழில் ஆரதனை செய்வதால் அவனுக்கு என்ன இழுக்கு ? மொழிக்கு அப்பாற்பட்டவன் இறைவன் அன்றோ ?//

சரியான கேள்வி.. இவர்கள் தமிழில் ஆரதனை செய்வதை எதிர்ப்பது தான் இறைவனுக்கு(அப்படி ஒருவன் இருந்தால்) இழுக்கு.

TBCD சொன்னது…

ரொம்ப சிம்பிள்... அப்படி அதுல தான் கும்புடனுமின்னா..அந்த சாமி இருக்கிற இடத்துக்கே போங்க....(மேல..எல்லாத்துக்கும் மேல..)
எங்கள விட்டுங்க...போதும் உங்க சேவை...எங்களுக்கு வாய் இருக்கு...அதுல என்ன வருதோ...அத வச்சி கும்புடுறோம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

சரியான கேள்வி.. இவர்கள் தமிழில் ஆரதனை செய்வதை எதிர்ப்பது தான் இறைவனுக்கு(அப்படி ஒருவன் இருந்தால்) இழுக்கு.
//

அப்படி இருந்தால் 'இறைவா இதுதான் பாஷை!' என்று சொல்லு ஊட்டுவாங்களோ என்னவோ ?

:))

ILA (a) இளா சொன்னது…

//தேவபாசை//
ஆண்டவனுக்கு ஏதுய்யா பாஷை?

பூசாரிதிட்டுறாரா? இல்லே வாழ்த்துறாரான்னு தெரியாம முழிச்சிருக்கேன். ஒரு வேளை இதுக்குதான் Secrets; never give it upன்னு சொல்றதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//iLA(a)இளா said...
ஆண்டவனுக்கு ஏதுய்யா பாஷை?

பூசாரிதிட்டுறாரா? இல்லே வாழ்த்துறாரான்னு தெரியாம முழிச்சிருக்கேன். ஒரு வேளை இதுக்குதான் Secrets; never give it upன்னு சொல்றதா?
//

இளா,

உண்டியல் பெரிதாக கோவிலில் இருக்கு, விளக்கேற்ற வழி இல்லாத கோவில்களில் எல்லாம் இறைவன் / இறைவி தமிழில் கூட கேட்டுக்கிறாங்களாம்.

:))

TBCD சொன்னது…

அப்படி ஒரு கோவில் இருக்கு..அதுக்கு இங்க பாருங்க...
தேவ பாஷை கேக்காத கடவுள்?

வெட்டிப்பயல் சொன்னது…

//
மடையர்களே ! எல்லாவற்றிற்கு அப்பாற்பட்ட இறைவனை தமிழில் ஆரதனை செய்வதால் அவனுக்கு என்ன இழுக்கு ? மொழிக்கு அப்பாற்பட்டவன் இறைவன் அன்றோ ?//

சூப்பர் :-)

Unknown சொன்னது…

பாவம்,பாமரனுக்கும் தெரிந்த தமிழ் இறைவனுக்கு தெரியாது போலும்

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//மடையர்களே!எல்லாவற்றிற்கு அப்பாற்பட்ட இறைவனை தமிழில் ஆரதனை செய்வதால் அவனுக்கு என்ன இழுக்கு? மொழிக்கு அப்பாற்பட்டவன் இறைவன் அன்றோ?//

GK
தமிழால் இறைவனை ஆராதிப்பது இழுக்கு என்று யாராவது சொன்னால்,
நீங்கள் சொன்ன முதல் வார்த்தை - "மடையர்களே!" என்பதை உரக்க, பலமாகக், கூக்குரல் இட்டுச் சொல்லுங்கள்! சொல்லுவோம்!

ஆனாலும் GK...நீங்கள் ரொம்பவும் சாந்தமானவர் போல இருக்கே!
வெறும் "மடையர்களே" என்று லேசாகத் திட்டிவிட்டு ஒதுங்கி விடுகிறீர்கள். ஆனால் ஒரு பொண்ணுடைய பாட்டில் உங்களை விட பலமாகக் குரல் கொடுக்கிறார்கள். "சாவுங்கடா", என்று கிட்டத்தட்ட குரல் கொடுக்காத குறை தான்! :-)

உங்களை எல்லாம் இந்தப் பூமி தண்டத்துக்கு இன்னும் சுமந்து கொண்டு இருக்கே என்று காய்கிறார்கள்!
கோதைத் "தமிழ்" ஐ-ஐந்தும்-ஐந்தும்
அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு!


பாத்துக்குங்க, உங்களை விடச் சூடாகவே பதிவு போட்டிருக்காங்க! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஆனால் இறைத்தமிழ் என்ற பிரிவில் இருந்து அகற்றுவது என்பது அவ்வளவு எளிதாக இல்லை//

ஏன் இல்லை? எதற்கு மனம் வெதும்பி பேசுகிறீர்கள்?

திருவரங்கத்தில் எப்படி எளிதாக அகற்றினார்கள் என்று நான் ஒரு தொடர் எழுதலாம் என்று இருக்கிறேன் GK!
அறுநூறு ஆண்டுக்கு முன் செய்ய முடிந்தது, இப்போது ஏன் செய்ய முடியவில்லை என்பது தான் வியப்பாக உள்ளது!

தேவை என்னவென்றால் எவரும் மதிக்கும் ஒரு தன்னலமில்லாத தலைமை. காரியத்தில் கண்ணான ஒரு இயக்கம். அகற்றுகிறேன், வெட்டுகிறேன் என்ற குரல்களுக்கு இடையில், அமைதியாக ஒரு புரட்சி நடந்து விட்டது! அது போல் இப்போதும் இருந்தால், எண்ணிப் பார்க்கவே மனம் இனிக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதே கேள்வியை திருப்பி கேளுங்க//

இந்தாங்க உங்களுக்கு எடுத்துக் கொடுக்க இன்னும் கேள்விகள்/பதில்கள்!

விருப்புடையின் "தமிழ்" மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே

வாய்த் "தமிழ்" வல்லவர் குறை
வின்றி வைகுந்தம் சேர்வரே

செந்தமிழ் "பத்தும்" வல்லார்
திருமாலடி சேர்வர்களே

"தமிழ்", ஆகத்து வைத்து உரைப்பார்
அவர் அடியார் ஆகுவரே!

G.Ragavan சொன்னது…

கோவி, மிகவும் எளிதாகச் சொல்வதானால்...நான் வணங்கும் கடவுளுக்கு நான் பேசுவது புரியும். அப்புறம் மொழி எங்க இருந்து வந்துச்சு. இத ஒத்துக்க முடியாத எதையும் ஒத்துக்க முடியாது. சரிதானே?

ஜீவி சொன்னது…

ஆழ யோசித்தீர்களென்றால், தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை
ஊட்டிக்கொள்ளும் ஒரு முயற்சி தான்
'இறைவழிபாடு' என்பது புரியும்.
மற்றபடி,"வடமொழி தேவபாஷை; அதில்தான் அர்ச்சனை பண்ணுவோம்" என்று யாரும் அடம் பிடித்ததாகத் தெரியவில்லை.தமிழகஅரசின் "தமிழில்அர்ச்சனை செய்யப்படும்" அறிவிப்புகளை கோயில்களில் நீங்கள்
பார்த்ததில்லையா?..
இல்லாத பிரச்சனைகளை, இருக்கும்
பிரச்சனைகளாக ஆக்க வேண்டாம்
என்பதற்காக அரசு செய்திருக்கும்
ஏற்பாடுகளை மதித்துப் பின்பற்றினால்,
ஆக்க பூர்வமான பல விஷயங்களில்
அரசும் கவனம் செலுத்த முடியும்.
மக்களும், "எல்லோருக்கும் படிப்பு;
எல்லோருக்கும் வேலை; எல்லோருக்கும் வயிறுக்கு உணவு"
என்கிற "எரியும் பிரச்னைகளில்"
கவனம் செலுத்தலாம். 'நாற்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்திற்கு', தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் சென்றால், மன்னிக்க முடியாதத்
தவறை நாம் செய்தவர்களாகி விடுவோம். இப்பொழுது கலைஞர்
ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளெல்லாம் வரப்பிரசாதங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவறவிடின், காலம் நம்மை மன்னிக்காது.

Thamizhan சொன்னது…

என்ன் விவரம் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
ரிக் வேதம் 62-ஸ்லோகம்10
தேவாதீனம் ஜெகத் ஸ்ர்வம்
மந்த்ராதீனம் தூ தேவதா
தன்மந்த்ரம் பிராமணாதீனம்
பிராமணா மம தேவதா!

அதாகப் பட்டது

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப் பட்டவர்
மந்திரங்கள் பிராமணனுக்குக் கட்டுப் பட்டவை எனவே
பிராம்ணன் தான் கடவுள்,பிராமணனைத்தான் தொழவேண்டும்.

இதை உங்க முன்னோரெல்லாம் பய பக்தியோட ஒழுங்கா கடைப்பிடிச்சா!
சுபிட்சமா இருந்தா!நீங்க ஏன் தமிழ்,தமிழ்னு அலையறீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

வெட்டிப்பயல் said...

சூப்பர் :-) //

பாலா'ஜி',

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆனாலும் GK...நீங்கள் ரொம்பவும் சாந்தமானவர் போல இருக்கே!
வெறும் "மடையர்களே" என்று லேசாகத் திட்டிவிட்டு ஒதுங்கி விடுகிறீர்கள். ஆனால் ஒரு பொண்ணுடைய பாட்டில் உங்களை விட பலமாகக் குரல் கொடுக்கிறார்கள். "சாவுங்கடா", என்று கிட்டத்தட்ட குரல் கொடுக்காத குறை தான்! :-)

உங்களை எல்லாம் இந்தப் பூமி தண்டத்துக்கு இன்னும் சுமந்து கொண்டு இருக்கே என்று காய்கிறார்கள்!
கோதைத் "தமிழ்" ஐ-ஐந்தும்-ஐந்தும்
அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு!

பாத்துக்குங்க, உங்களை விடச் சூடாகவே பதிவு போட்டிருக்காங்க! :-))) //

கேஆரெஸ்,

உங்கள் பின்னூட்டம் அருமை உங்கள் இடுகைகளைப் போன்றே. வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அதே கேள்வியை திருப்பி கேளுங்க//

இந்தாங்க உங்களுக்கு எடுத்துக் கொடுக்க இன்னும் கேள்விகள்/பதில்கள்!

விருப்புடையின் "தமிழ்" மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே

வாய்த் "தமிழ்" வல்லவர் குறை
வின்றி வைகுந்தம் சேர்வரே

செந்தமிழ் "பத்தும்" வல்லார்
திருமாலடி சேர்வர்களே

"தமிழ்", ஆகத்து வைத்து உரைப்பார்
அவர் அடியார் ஆகுவரே!
//

அட்டகாசம் ! அட்டகாசம் !!அமர்களம் !!!

மீண்டும் நன்றி மாலைகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// இல்லை? எதற்கு மனம் வெதும்பி பேசுகிறீர்கள்?

திருவரங்கத்தில் எப்படி எளிதாக அகற்றினார்கள் என்று நான் ஒரு தொடர் எழுதலாம் என்று இருக்கிறேன் GK!
அறுநூறு ஆண்டுக்கு முன் செய்ய முடிந்தது, இப்போது ஏன் செய்ய முடியவில்லை என்பது தான் வியப்பாக உள்ளது!

தேவை என்னவென்றால் எவரும் மதிக்கும் ஒரு தன்னலமில்லாத தலைமை. காரியத்தில் கண்ணான ஒரு இயக்கம். அகற்றுகிறேன், வெட்டுகிறேன் என்ற குரல்களுக்கு இடையில், அமைதியாக ஒரு புரட்சி நடந்து விட்டது! அது போல் இப்போதும் இருந்தால், எண்ணிப் பார்க்கவே மனம் இனிக்கிறது! //

வாவ்...மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். செய்யுங்கள். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் !

2:35 AM, August 07, 2007

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
கோவி, மிகவும் எளிதாகச் சொல்வதானால்...நான் வணங்கும் கடவுளுக்கு நான் பேசுவது புரியும். அப்புறம் மொழி எங்க இருந்து வந்துச்சு. இத ஒத்துக்க முடியாத எதையும் ஒத்துக்க முடியாது. சரிதானே?
//
ஜிரா,

இதை வழியுறுத்தி,
பக்தியாளர்களே சொல்வது மேலும் சிறப்பு. நன்றி !

ஜீவி சொன்னது…

அன்பு கோ.வி.
தங்களது இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமிட்டிருந்தது, "ஜீவா"
இல்லை, "ஜீவி"
இந்த ஒரு திருத்தம் தான் இப்போது.
மற்றபடி, நீங்கள் கொண்டுள்ள எந்த
எண்ணத்தையும் மறுப்பதற்காக நான்
பின்னூட்டமிடவில்லை. அது எனது
வேலையுமல்ல.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின்
அடிப்படையில் தான் உங்களின் சிந்தனை இருக்கும். அதை மறுக்க நான் யார்?
"மாறுதல்" ஒன்றுதான் மாறாதிருப்பது
என்கிற விஞ்ஞானக் கூற்றை நம்புவன் நான்.
காலம் பதில் சொல்ல வேண்டியதற்கெல்லாம் நான் ஏன்
வக்காலத்து வாங்க வேண்டும்?...
இன்னொரு முறை எனது பின்னூட்டத்தைப் படித்தீர்களென்றால், நான் உங்களிடம் வைத்த கோரிக்கை புரியும்.
அது தமிழக நலன் சம்பந்தப்பட்டது
என்பதால் தான் அதையும் எழுத
நேரிட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவி said...
அன்பு கோ.வி.
தங்களது இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமிட்டிருந்தது, "ஜீவா"
இல்லை, "ஜீவி"
இந்த ஒரு திருத்தம் தான் இப்போது.
மற்றபடி, நீங்கள் கொண்டுள்ள எந்த
எண்ணத்தையும் மறுப்பதற்காக நான்
பின்னூட்டமிடவில்லை. அது எனது
வேலையுமல்ல.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின்
அடிப்படையில் தான் உங்களின் சிந்தனை இருக்கும். அதை மறுக்க நான் யார்?
"மாறுதல்" ஒன்றுதான் மாறாதிருப்பது
என்கிற விஞ்ஞானக் கூற்றை நம்புவன் நான்.
காலம் பதில் சொல்ல வேண்டியதற்கெல்லாம் நான் ஏன்
வக்காலத்து வாங்க வேண்டும்?...
இன்னொரு முறை எனது பின்னூட்டத்தைப் படித்தீர்களென்றால், நான் உங்களிடம் வைத்த கோரிக்கை புரியும்.
அது தமிழக நலன் சம்பந்தப்பட்டது
என்பதால் தான் அதையும் எழுத
நேரிட்டது.

10:52 PM, August //

ஜீவி,

பெயரை தவறாக கவனக்குறைவால் எழுதியதற்கு வருந்துகிறேன். அந்த மறுமொழியையும் நீக்கிவிட்டேன்.

காலத்தில் (டைம்) ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மாற்றம் தெரியவருகிறது. ஆனால் காலமாக எதையும் மாற்றிக் கொள்வதில்லை. நாமதான் மாற்றுகிறோம்.

:)

சிவபாலன் சொன்னது…

I agree with you GK!

bala சொன்னது…

//I agree with you GK!//

When have you ever disagreed with GK,my dear Sivabalan,or for that matter GK with you?Everyone knows that you and GK are mutual jallies and you two are almost like Shakespearean "two minds with but one thought and two hearts that beat as one" kind of soul mates.

Bala

கோவி.கண்ணன் சொன்னது…

bala said...
//I agree with you GK!//

When have you ever disagreed with GK,my dear Sivabalan,or for that matter GK with you?Everyone knows that you and GK are mutual jallies and you two are almost like Shakespearean "two minds with but one thought and two hearts that beat as one" kind of soul mates.

Bala
//

பாலா, ஆராய்ச்சிக்கு
டாக்டர் பட்டம் கொடுக்க கூப்பிடுறாங்களாம்.

சிவ அறிவொளியன் சொன்னது…

http://koodal1.blogspot.com/2007/08/blog-post_4904.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்