பின்பற்றுபவர்கள்

22 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : ஆகமம் ஆலயம் ஆன்மா !

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'... சும்மாவா சொன்னார்கள் ? நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா ? அதன் சிறப்பைக் கூறி ...வெறும் வழிபாட்டுத்தலங்கள் இல்லை என்கிறது ஆலய சிவ ஆகமும், சைவ சித்தாந்தங்களும்... சரி ஆலய சிறப்பை அதன் அமைப்பை வைத்து பார்ப்போம்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' -


என்பது திருமூலர் அருட்பாடல்.

இதன் பொருளைப் பாருங்கள், மிகச் சிறப்பாக இருக்கும், அதாவது

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிறுத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.

கோயில் என்பதை கோ-இல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.

மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம் - கழுத்து, (3) மகா மண்டபம் - மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும் கூறுவர்.

அதே போல் (1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - −தயம், (7) சிவலிங்கம் -உயிர் என்றும் கூறுவர்.

உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக' உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் அல்லவா ? படிப்பதற்கே மெய் சிலிர்கிறது. இதன் 'சூட்சமம்' தெரியாமல் கோவில்கள் கூடாது என்கிறார்கள் நாத்திகர்கள். அறிவு கெட்டவர்கள் தானே ?

*************

இதெல்லாம் கோவிலையும், கோவிலுக்குள் இருக்கும் அமைப்பையும் பற்றிய தத்துவங்கள். கோவிலுக்குள் வெளியே இருப்பதை எவரும் பேசுவதே இல்லை. ஏன் பேச வேண்டும் ? பெரிய இராஜ வீதிகளைத் தவிர கோவிலைச் சுற்றி என்ன இருக்க முடியும் ? தஞ்சை பெரிய கோவில்கள் போல் இருந்தால் கோட்டையும், இருக்கும் தானே ?

கோவில்கள் இருக்கும் ஊர்களின் அமைப்பைப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும், அதாவது. இந்து மதத்தில் இருக்கும் நான்கு சாதி அடுக்கு முறைபற்றி அனைவரும் அறிந்ததே. பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதி அமைப்பின் படியே ஆகம விதிகளின் படி அமைக்கப்பட கோவில்களில் தெருக்கள் இருக்கும். அதாவது கோவிலைச் சுற்றி இருக்கும் முதல் தெருவில் இருப்பது மடவிளாகம் எனப்படும் அஹ்ர'ஹாரங்கள்', அடுத்த தெரு வட்டத்திற்குள் கோவில் நடவடிக்கையுடன் அன்றாடம் தொடர்பு கொண்டுள்ள இசை வேளாளர்கள், யானை பாகர்கள் மற்றும் பொற்கொல்லர்கள், தீவட்டி பிடிப்பவர்கள் அதற்கு அடுத்த தெருவில் தச்சர்கள், வணிகர்கள் மற்றும் வேளாளர் மறபினர் நெற்வயல்களை எளிதில் அடையும் தொலைவில் இது இருக்கும், இந்த மூன்று தெருக்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை அந்த சாதி பயன்படுத்தும் அளவுக்கு ஆகம கோவில்கள் உள்ள ஊர்களில் கோவிலைச் சுற்றியே பத்து முதல் இருபது தெருக்கள் வரை இருக்கும், அந்தந்த தெருக்களில் அந்தந்த வகுப்பினரே வசிப்பர், ஊருக்கு வெளியில் இருந்து ஆபத்து வந்தால் மற்ற இருவகுப்பினர் (ஷத்திரியர்களாக மாறி ?) கேடயமாக இருந்து மடவிளாகங்களையும் கோவில் சொத்துக்களையும் காப்பர். சூத்திரர் எங்கு வசித்தார் ? சூத்திரனுக்கு ஊருக்குள் இடமா ? இருந்ததே இல்லை, சுடுகாடுகளைத் தாண்டி சேரிகளுக்கு துறத்தப்பட்டு வேறுவழியின்றி வாழ்ந்து வந்தனர்.

ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர் வந்தே இல்லையா ? மேலே சொல்லிய அமைப்பில் இருந்த அந்த காலத்து வீடுகளில் வீட்டிற்கு இரு வழிகள் இருக்கும், ஒரு வழிவீட்டின் முகப்பு, அது பெரிய தெருவில் ஆரம்பிக்கும், பெரிய திண்ணைகள் இருக்கும், பிறசாதியினர் வீட்டிற்கு வந்தால் அங்குதான் உட்கார வைக்கப்படுவர், கொல்லை பக்கம் ஒரு பின் வாசல் (புழக்கடை) இருக்கும், அது பின்பக்கம் சிறிய தெருவில் முடியும். இரு பெரிய தெருக்களுக்கு நடுவில் பொது என்று சிறிய தெரு இருக்கும், சிறிய தெரு இருபெரிய தெருக்களின் பின்வாசல்கள் சிறிய தெரு( சந்தில்)வில் முடியும். அந்த சந்தின் வழியாக தாழ்த்தப்பட்டவர் சென்று பின் பக்க கதவு வழியாக வீட்டுக்கு பின்பக்கம் வந்து மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவது, பால் கறந்து கொடுப்பது மற்றும் துப்புரவு தொழில்களை செய்துவிட்டு கையை நீட்டி கைகளில் அதில் மேலிருந்து தீர்த்தம் போல் ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்துவிட்டு, அவர்களுகென்றே இருக்கும் பாத்திரத்தில் கைபடாத சுத்தத்தில் பெறப்பட்ட பழைய உணவை வாங்கிச் செல்வர்.

ஒரு சூத்திரன் கோவிலுக்குச் நேராகச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் மூன்று தெருக்களைத் தாண்டிதான் அவனால் செல்ல முடியும். முதல் தெருவிலேயே தடுக்கப்படுவான். அதாவது சூத்திரனின் கால்கள் அஹ்ரஹாரத்தில் தஞ்சை கோபுரத்தின் நிழலைப் போல தரையில் பட்டதே இல்லை. அதையும் மீறி சென்ற தாழ்த்தப்பட்ட சைவ நந்தனாரும், வைணவ திருப்பணந்தாழ் ஆழ்வாருக்கும் இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது என்பதை பலரும் சொல்லிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். (விரிவாக படிக்க ஐயா வைகுந்தர் வாழ்வும் வளமும் என்ற நூலை படியுங்கள்)

கோவில்கள் இல்லாத காலத்தில் தமிழகத்தில் வழிபாடு இல்லாமல் இல்லை.
அல்லது கோவில்கள் இல்லாத ஊரில் சாதிகள் இணைந்து வாழாமல் இல்லை. நாட்டார் வழக்கில் அவர்களுக்கென உள்ள கோவில்களின் முன்பு திருவிழாக் காலங்களிலும் அனைத்து சாதியினரும் கூடிக் ஆடல் பாடல் என களிப்பர். ஆகம கோவில்கள் வளர்த்தது பக்தியை மட்டுமல்ல, பக்தி இயக்கம் வளர்ந்தபோது கோவில்களின் கோபுரமும் வளர்ந்தது. இன்னார் இன்னார் தேர் வடம் பிடிக்க வேண்டும் என்ற விதிகளும் வரையறை களையும் செய்தது. பாணர், தேசிகர் என பழங்குடி குலத்தினர், (பாண பத்திரர் - டி.ஆர் மகாலிங்கம் கோவில்களில் பஜனைப் பாடல்கள் பாடுவபர்களாக திருவிளையாடல் படத்தில் கூட அவரை வைத்து ஒரு கிண்டல் வசனம் இருக்கும்) மருத்துவர் போன்ற ஆதித் தமிழர்களையும் அசைவம் சாப்பிடுபவர்கள், மாட்டை உறித்து செய்யும் தோல் கருவி வாசிப்பவர்கள் என்பதற்காக, பாணர்களை பறையர்களாக ஆக்கி (பின்னாளில் தோல்கருவியான மேளம், ம்ருதங்கம் என்ற பெயர் பெற்று வைதீக கருவியானது தனிக்கதை) ஊருக்குள் வெளியே தள்ளியதுதான் ஆகமவழி கோவில்களின் கோபுரங்கள் எழுந்து நின்ற போது நடந்தது.

கோவில்கள் வெறும் தத்துவம் மட்டும் தானா ? அது யாரை பாதுகாத்தது, யாரை இழிவுபடுத்தியது என்பது தெரியவருகிறது. கோவிலுக்கு வெளியே வெளிப்படையாக இருக்கும் இந்த வருண தத்துவம் மெய்சிலிர்ப்பை தருகிறதா ? இதையெல்லாம் எவரும் தட்டிக் கேட்கவே இல்லையா ? கேட்டிருக்கிறார்கள். அவர்களின் வாய் பக்தியின் பெயராலே அடைக்கப்பட்டு இருக்கிறது. தொலைவில் இருந்து தரிசித்தால் என்ன ? அருகில் இருந்து தரிசித்தால் என்ன ? 'கோபுர தரிசனம் கோடி நன்மை தரும்' என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ? :) சேரிகளில் இருந்து பார்த்தால் எந்த விண் முட்டும் கோவிலின் கோபுரமும் தெளிவாகத்தான் தெரியும்.

சூத்திரன் தொடமலா கோவில் எழுந்துவிட்டது. அடடே... சுயம்பாக எழுந்த கோவில்கள் பற்றி கேள்விபட்டதே இல்லையா ? அப்படியும் அவர்கள் தொட்டுத்தான் கட்டியிருப்பார்கள் என்றால், தீட்டுக் கழிக்கும் வைபவம் என சூத்திரன் தொட்டு கட்டிய செங்கற், கருங்கற் கோவில்களை சுத்தப்படுத்த எளிய வழிமுறைகளும் கையாளப்பட்டன.

உள்ளே சென்று வழிபட கற்பக் கிரகமும், வெளியே தொலைவிலேயே வழிபட கோவில் கோபுரமும் தமிழக கோவில்கள் வைதீக மயமாக்கப்பட்டதன் வழி வந்த மாபெரும் சிறப்பு என்றால் எவரும் மறுக்க முடியுமா ? அவரவர் 'நின்று' வழிபட கோவில் அமைப்பை அழகாகத்தான் தத்துவமாக அமைத்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல அதைச் சேர்ந்த ஊர்களையும் சேர்த்தே. மற்ற மாநிலங்களில் பெரிய பெரிய கோவில்களும் அதைச் சுற்றி அக்ரஹாரங்களும் இருப்பது போல தெரியவில்லை. தமிழக மன்னர்களுக்கு இருந்த தாரள மனசு மற்ற மாநிலத்து மன்னர்களுக்கு இருநத்தில்லை என கருத வேண்டி இருக்கிறது. கொள்ளிக்கட்டையை தன் தலையில் தானே சொறிந்து கொண்ட கதைதான்.

வைதீக ஆகமங்கள் கோவில்களை மட்டுமா ஆக்கிவைத்தன ? ஊர் அமைப்பையே மாற்றிவைத்தன. மக்களையும் பிரித்து வைத்தன, தமிழையும் தள்ளிவைத்தன. தெரிந்து கொள்ளும் போது உடலும் சிலிர்கிறது கூடவே ஆன்மாவும்.

தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி !
தமிழ்ச்சொல் கேளா செவிடா போற்றி !

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

48 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

பட்டையக் கெளப்புறீங்க தலைவா!

வாழ்க! வளர்க!

குழலி / Kuzhali சொன்னது…

இன்னொரு சூடு, இது நட்சத்திரவாரமா? எரி நட்சத்திர வாரமா?

சிவபாலன் சொன்னது…

// நட்சத்திரவாரமா? எரி நட்சத்திர வாரமா? //

ரிப்பீட்டே..

இந்த கடைசி ஓவர் கிரிகெட் மாதிரி இருக்கிறது..

சூப்பர்..

பெருசு சொன்னது…

//பட்டையக் கெளப்புறீங்க தலைவா!//
ரிப்பீட்டே..

கருப்பு சொன்னது…

இப்படி எல்லாம் நீங்கள் அறுவு பூர்வமாக கேள்வி கேட்டால் நீங்கள் மோட்ஷத்துக்கு போக மாட்டேள். பகவான் உங்களை பாத்துப்பார். லோகம் ரொம்ப கெட்டுத்து ஓய்!

VSK சொன்னது…

ஆலயங்கள் அமைவதற்கு முன்னர் எல்லாரும் கூடி வாழ்ந்தது போலவும், கோயில்கள் வந்தபின்னர்தான், இந்தச் சீர்கேடுகள் வந்தது போலத் திரித்து இதற்கு முன்னர் பலர் எழுதியதின் இன்னொரு பதிப்பே இது.

வெகு புத்திசாலித்தனமாக புனைந்திருக்கிறீர்கள், கட்டுரையை.

இதையும், கீதை, முருகன் பதிவுகள் போல...
நம்புபவர்கள் நிச்சயம் நம்புவார்கள்.
..... விவரமறிந்தவர்களைத் தவிர.

சாதிக்கொடுமை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதற்காக நீங்க கட்டும் புனைவுகளை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

குழலியார் வெகுத் தெளிவாகக் கணித்துப் பாராட்டியிருக்கிறார்.

முழுமையாக அவர் கருத்துடன் ஒப்புகிறேன்.

நட்சத்திர வாரம் மேலும் சிறக்க வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
ஆலயங்கள் அமைவதற்கு முன்னர் எல்லாரும் கூடி வாழ்ந்தது போலவும், கோயில்கள் வந்தபின்னர்தான், இந்தச் சீர்கேடுகள் வந்தது போலத் திரித்து இதற்கு முன்னர் பலர் எழுதியதின் இன்னொரு பதிப்பே இது.//

ஆதாரம் இருக்கிறதே வெளிப்படையாக...திருவள்ளுவர்காலத்தில் சொல்லப்படாத சாதி எச்சரிக்கைஇ, ஒளவையார் காலத்தில் சொல்லப்பட்டதே ( திருவள்ளுவருக்கு ஒளவையார் தமக்கை என்ற கதை இங்குதேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஒளவை ஒருவர் அல்ல, பலர் வந்திருக்கின்றனர்)
அதாவது 'சாதி இரண்டொழியெ வேறில்லை', என்று ஒளவையார் சொல்வதற்கு அவசியம் ஏன் ஏற்பட்டது ? மன்னர் காலத்தவர் (வள்ளல்கள்) ஒளவையார்கள் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

//
வெகு புத்திசாலித்தனமாக புனைந்திருக்கிறீர்கள், கட்டுரையை.
//

ஒருவரைப் பார்த்து 'அடிமுட்டாளே, மடையனே' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லி செல்வது எளிது, அதை இங்கே 'புனைவு' என்று சொல்லி இருப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

புனிதம் என்ற பெயரில் புளுகு மூட்டை அவிழ்த்துவிடுபவர்களுக்கு எதிராக எனது புனைவு பயன்பட்டால் அப்பொழுது நான் புத்திசாலி என்று பாராட்டலாம். இதில் எழுதி இருப்பதில் என் ஊகம் என்று எதுவும் இல்லை என்று படிப்பவர்களுக்கு தெரியும்.

//இதையும், கீதை, முருகன் பதிவுகள் போல...
நம்புபவர்கள் நிச்சயம் நம்புவார்கள்.
..... விவரமறிந்தவர்களைத் தவிர.//

தாரளமாக, நான் யாரையும் கருத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லி எங்கேயும் சொல்லவில்லை ஐயா.

//சாதிக்கொடுமை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
//

இப்படி வெறும் வாயை மெல்லுவதை எல்லோருமே செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

//அதற்காக நீங்க கட்டும் புனைவுகளை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.//

நல்லது, உங்கள் கருத்தில் தெளிவாக இருக்கும் போது ஒப்புக் கொள்ள என்ன இருக்கிறது ?


//குழலியார் வெகுத் தெளிவாகக் கணித்துப் பாராட்டியிருக்கிறார்.

முழுமையாக அவர் கருத்துடன் ஒப்புகிறேன்.

நட்சத்திர வாரம் மேலும் சிறக்க வாழ்த்துகள்!
//

வாழ்த்துக்கு நன்றி !

பாரதி தம்பி சொன்னது…

வெகு சிறப்பான கட்டுரை. அங்கதத் தொணி இன்னும் கூட கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம்.

ஜெகதீசன் சொன்னது…

GK, நல்ல பதிவு. நன்றி.

Unknown சொன்னது…

//தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி !
தமிழ்ச்சொல் கேளா செவிடா போற்றி !//

:-))))


//ஆலயங்கள் அமைவதற்கு முன்னர் எல்லாரும் கூடி வாழ்ந்தது போலவும், கோயில்கள் வந்தபின்னர்தான், இந்தச் சீர்கேடுகள் வந்தது போலத் திரித்து //

VSK அப்ப ஆலயத்தால் ஒரு பிரயோசனும் இல்லேன்றீங்க இல்லையா?

சரி...அப்பவும் கூடி வாழவில்லை இப்பவும் கூடி வாழவில்லை...அப்ப எதுக்கு இந்த அலப்பரையெல்லாம்?

Vi சொன்னது…

தேவையற்ற பதிவு. ஏன் வீணாக நேரத்தை வீணாக்குகிறீர்கள் நண்பரே! உபயோகமாக ஏதாவது எழுதுங்கள். ஆராய்ந்து கூற ஆயிர விசயங்கள் இருக்கும் போது எதற்கு இன்னும் பழைய பானையில் குதிரை ஓட்டி கொண்டிருக்கிறீர்கள்?

இதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//நட்சத்திரவாரமா? எரி நட்சத்திர வாரமா?
ரிப்பீட்டே//

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டே!

//தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி !
தமிழ்ச்சொல் கேளா செவிடா போற்றி//

ஹா ஹா ஹா...
பித்தா பிறை சூடின்னு திட்டறீங்க போல! சிவனை மட்டும் வைது பெருமாளை விட்டு விட்டீர்களே.
கோவியில் கண்ணன் இருப்பதாலா? :-)

எனக்கும் இங்கு பல பேரைப் போலக் கை தட்டி, விசில் அடித்து, கோவியைப் பாராட்டி மகிழ ஆசை தான்! ஆனா.....:-))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதாவது சூத்திரனின் கால்கள் அஹ்ரஹாரத்தில் தஞ்சை கோபுரத்தின் நிழலைப் போல தரையில் பட்டதே இல்லை//

முதற்கண் ஒரு உண்மை என்னன்னா தஞ்சைக் கோபுரத்தின் நிழல் தரையில் படும்.
இப்படி உவமை சொல்லி, உங்கள் கருத்துக்கு நீங்களே வலு இழக்கச் செய்யலாமா GK? :-)

சரி...உங்களை இன்னொன்றும் கேட்கணும். இது எனக்கு நிசமாலுமே தெரியாது! அறிந்து தெளியவே கேட்கிறேன்.

கோவில் புறப்பாட்டின் போது, வீதியுலா மூர்த்திகளை வாகனத்தோடு தூக்க வேண்டி வரும்! சரி பளு!
இதை வேர்வை சிந்தித் தூக்க பார்ப்பனர்களும் மேல் சாதியினரும் முன் வருவார்களா என்பது எனக்குச் சந்தேகமே!
அதற்கு தாழ்ந்த சாதியினரையோ, பாட்டாளிகளையோ தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்!

அப்போ, சாமியைத் தூக்கிக்கிட்டு இந்த தாழ் சாதியினர் வரும் போது, அவர்கள் திருவடி, அக்ரகாரங்களிலோ இல்லை கோவில் மாட வீதிகளிலோ பட்டிருக்குமே! இதை எப்படி அன்றைய ஆதிக்கக் கூட்டம் அனுமதித்தது? - இது நிச்சயம் ஆராயப்பட வேண்டிய ஒன்று!
எனக்குக் கேட்டுச் சொல்லுங்கள் GK!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதையும் மீறி சென்ற தாழ்த்தப்பட்ட சைவ நந்தனாரும், வைணவ திருப்பணந்தாழ் ஆழ்வாருக்கும் இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது என்பதை பலரும் சொல்லிவிட்டார்கள்//

என்ன சொல்லி விட்டார்கள்?
நந்தனார் கொளுத்தப்பட்டார்.
வள்ளலார் கொளுத்தப்பட்டார்.
திருப்பாணாழ்வார் வெட்டப்பட்டாரா? - இது தான் எனக்குத் தெரியவில்லை!

சரி அப்படியே வச்சுக்குவோம். இன்னொரு ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் சூத்திரனிலும் தாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட பஞ்சமர். இவரு ஜம்முன்னு பல கோயிலுக்கும் போயிப் பாடி, வம்பு இழுத்து உள்ளார்.
இவர் அப்படி எல்லாம் கொளுத்தப்பட்டதாகத் தெரியவில்லையே! ஒரு கால் எஸ்கேப் ஆயிட்டாரா?

சூத்திரராகச் சொல்லப்பட்ட நம்மாழ்வார் ஆழ்வாருக்கெல்லாம் முதல்வர் - இவர் பெயரைச் சொல்லி வாழ்த்தி விட்டுத் தான் மற்ற எல்லாப் பூசைகளையும் தொடங்குகிறார்கள் இன்னைக்கும்.

போதாக்குறைக்குப் பொன்னம்மா என்று, மதுரகவி ஆழ்வார் பார்ப்பனர். இவர் ஓடியாந்து சூத்திரர் ஆனான நம்மாழ்வார் காலில் விழுந்து பாடம் கேட்கிறார். சூத்திரன் சொன்ன தமிழ் வேதம் திருவாய் மொழியை ஓலை ஓலையாக எழுதி வைத்து பாதுகாக்கிறார்.

பேசாமல் சீடர் போல் பக்தி வேடம் இட்டு, திருவாய்மொழியை நைசாக வாங்கிக் கொண்டு, கொளுத்தி விட்டு, போய் இருக்கலாமே! பின்னர் பெருமாள் அந்த நூலை அவருக்குள் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று ஒரு பக்திக் கதையைக் கட்டி விட்டிருக்கலாமே! நானும் நம்பி ஏமாந்து போயிருக்க உதவியாய் இருக்கும்! :-)

சமுதாயக் கொடுமைகள் செய்த பாதையை அழித்துச் செப்பனிட முயல்கிறீர்கள். தலை வணங்குகிறேன்!

உங்களிடம் என் வேண்டுகோள் என்னவென்றால்,
ஈராக்கை அழிக்கும் போது செய்யப்பட்டது போல் செய்து விடாதீர்கள்!
மருத்துவமனை, பள்ளிகள், இதன் மீது எல்லாம் குண்டு வீசாதீர்கள்!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் தமிழ் தழைக்க, தமிழர் பிழைக்க வந்த மருத்துவமனைகள், பள்ளித்தலங்கள். பாதையச் செப்பனிடும் போது, இவற்றைத் தரை மட்டம் ஆக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாளை நமக்கே இந்த மருத்துவமனைகள் தேவைப்படலாம். அப்போது உள்ளதும் போச்சுதடா என்ற இழப்பு நிலை தமிழ்ச் சமுதாயத்துக்கு வரவே கூடாது!

Thamizhan சொன்னது…

பண்டைக் காலத்து ஊரின் காவல் தலைவர்கட்குக் கட்டப் பட்ட வழிபாட்டுத் தளங்களில் கூட,அந்தத் தலைவர்கள் வெளியே நிற்க வைக்கப் பட்டு அல்லது வெளியே தள்ளப் பட்டு அம்மன்கள்,ஈசுவரர்கள் உள்ளே வைக்கப் பட்டுக் கருவறைகள் ஆகிவிட்டன்.
பொருளாதீர ஏமாற்ற மட்டு மன்றி,நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கக் கண்டு பிடித்த ஏமாற்று வேலைகள் தான் இவை!
அருமையாக வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.
தமிழ் தெரியாத கடவுள்கள், தமிழன் கட்டிய கோவில்களிலே, தமிழரைக் காப்பாற்றவே தன்னுடைய ஸ்பெசல் ஏஜண்ட்டுகளால் ஆட்டிப் படைக்கப் படும் வேடிக்கையும் வேதனையும் உலகில் வேறு எங்குமே இல்லாத அவமானம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...


ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டே!

ஹா ஹா ஹா...
பித்தா பிறை சூடின்னு திட்டறீங்க போல! சிவனை மட்டும் வைது பெருமாளை விட்டு விட்டீர்களே.
கோவியில் கண்ணன் இருப்பதாலா? :-)

எனக்கும் இங்கு பல பேரைப் போலக் கை தட்டி, விசில் அடித்து, கோவியைப் பாராட்டி மகிழ ஆசை தான்! ஆனா.....:-))))
//

கே ஆர் எஸ்,

என்னது விசில் அடிக்கலையா ? பின்னே எனக்கு கேட்டதே பிரம்மையா ?
:)

ஆகமங்கள் குறித்து அதிகமாக பேசப்படுவது சிவாலயங்களில் என்பதாலேயே அதைக் குறிப்பிட்டேன்.
மற்றபடி கண்ணன் மீது தனிப்பட்ட வாஞ்சையெல்லாம் கிடையாது !
:)

ILA (a) இளா சொன்னது…

பட்டையக் கெளப்புறீங்க

ILA (a) இளா சொன்னது…

//அதற்காக நீங்க கட்டும் புனைவுகளை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை/
என்னாலும்தாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

முதற்கண் ஒரு உண்மை என்னன்னா தஞ்சைக் கோபுரத்தின் நிழல் தரையில் படும்.
இப்படி உவமை சொல்லி, உங்கள் கருத்துக்கு நீங்களே வலு இழக்கச் செய்யலாமா GK? :-)
//

KRS,
அதுதான் சொல்லி இருக்கேனே, பின்பக்க வாசல்வழியாக படும், முன்பக்கம் தான் படாது என்று !
:)

//சரி...உங்களை இன்னொன்றும் கேட்கணும். இது எனக்கு நிசமாலுமே தெரியாது! அறிந்து தெளியவே கேட்கிறேன்.

கோவில் புறப்பாட்டின் போது, வீதியுலா மூர்த்திகளை வாகனத்தோடு தூக்க வேண்டி வரும்! சரி பளு!
இதை வேர்வை சிந்தித் தூக்க பார்ப்பனர்களும் மேல் சாதியினரும் முன் வருவார்களா என்பது எனக்குச் சந்தேகமே!
அதற்கு தாழ்ந்த சாதியினரையோ, பாட்டாளிகளையோ தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்!
அப்போ, சாமியைத் தூக்கிக்கிட்டு இந்த தாழ் சாதியினர் வரும் போது, அவர்கள் திருவடி, அக்ரகாரங்களிலோ இல்லை கோவில் மாட வீதிகளிலோ பட்டிருக்குமே! இதை எப்படி அன்றைய ஆதிக்கக் கூட்டம் அனுமதித்தது? - இது நிச்சயம் ஆராயப்பட வேண்டிய ஒன்று!
எனக்குக் கேட்டுச் சொல்லுங்கள் GK! //

நண்பர் சிவபாலன் தினமலரில் இருந்து ஒரு படம் எடுத்துப் போட்டார் பாருங்கள். ஒருவர் சட்டையில்லாமல் குடையை பிடித்துவருவார். அது தற்காலத்தில் அவர் பெற்ற 'பாக்கியம்' அதற்குமுன் அந்த வேலையை செய்வதற்கு தீவட்டி ஏந்திகள், கொம்பூதிகள் இருந்தனர்.
அவர்கள் தொடையில் இருந்து பிறந்தவர்கள்.
:)

தாழ்த்தப்பட்டவர்கள் தேர்பக்கம் விடுவதில்லை என்பது இன்றும் நடக்கும் கேவலக்கூத்து என்பதை தாங்கள் அறியாதது இல்லை.

வைசியர், சத்திரியர் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் தானே. அவர்களுக்கு கருவறை நுழைவு தவிர்த்து, கோவில் சொத்துக்களில் பங்கு தவிர்த்து மற்றபடி தேரிழிக்கும் 'உரிமைகள்' இருந்தது.
:)

//
//

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்ன சொல்லி விட்டார்கள்?
நந்தனார் கொளுத்தப்பட்டார்.
வள்ளலார் கொளுத்தப்பட்டார்.
திருப்பாணாழ்வார் வெட்டப்பட்டாரா? - இது தான் எனக்குத் தெரியவில்லை!

சரி அப்படியே வச்சுக்குவோம். இன்னொரு ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் சூத்திரனிலும் தாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட பஞ்சமர். இவரு ஜம்முன்னு பல கோயிலுக்கும் போயிப் பாடி, வம்பு இழுத்து உள்ளார்.
இவர் அப்படி எல்லாம் கொளுத்தப்பட்டதாகத் தெரியவில்லையே! ஒரு கால் எஸ்கேப் ஆயிட்டாரா?

சூத்திரராகச் சொல்லப்பட்ட நம்மாழ்வார் ஆழ்வாருக்கெல்லாம் முதல்வர் - இவர் பெயரைச் சொல்லி வாழ்த்தி விட்டுத் தான் மற்ற எல்லாப் பூசைகளையும் தொடங்குகிறார்கள் இன்னைக்கும்.

போதாக்குறைக்குப் பொன்னம்மா என்று, மதுரகவி ஆழ்வார் பார்ப்பனர். இவர் ஓடியாந்து சூத்திரர் ஆனான நம்மாழ்வார் காலில் விழுந்து பாடம் கேட்கிறார். சூத்திரன் சொன்ன தமிழ் வேதம் திருவாய் மொழியை ஓலை ஓலையாக எழுதி வைத்து பாதுகாக்கிறார்.

பேசாமல் சீடர் போல் பக்தி வேடம் இட்டு, திருவாய்மொழியை நைசாக வாங்கிக் கொண்டு, கொளுத்தி விட்டு, போய் இருக்கலாமே! பின்னர் பெருமாள் அந்த நூலை அவருக்குள் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று ஒரு பக்திக் கதையைக் கட்டி விட்டிருக்கலாமே! நானும் நம்பி ஏமாந்து போயிருக்க உதவியாய் இருக்கும்! :-)

சமுதாயக் கொடுமைகள் செய்த பாதையை அழித்துச் செப்பனிட முயல்கிறீர்கள். தலை வணங்குகிறேன்!

உங்களிடம் என் வேண்டுகோள் என்னவென்றால்,
ஈராக்கை அழிக்கும் போது செய்யப்பட்டது போல் செய்து விடாதீர்கள்!
மருத்துவமனை, பள்ளிகள், இதன் மீது எல்லாம் குண்டு வீசாதீர்கள்!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் தமிழ் தழைக்க, தமிழர் பிழைக்க வந்த மருத்துவமனைகள், பள்ளித்தலங்கள். பாதையச் செப்பனிடும் போது, இவற்றைத் தரை மட்டம் ஆக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாளை நமக்கே இந்த மருத்துவமனைகள் தேவைப்படலாம். அப்போது உள்ளதும் போச்சுதடா என்ற இழப்பு நிலை தமிழ்ச் சமுதாயத்துக்கு வரவே கூடாது!
//

கொளுத்தப்பட்ட வரலாறுகள் தற்பொழுதுதான் தெரியவருகிறது. ஐயா வைகுண்டர் வாழ்வும் வளமும் என்ற நூல் கிடைத்தால் படித்துப்பாருங்கள். அதில் முலை வரிகள் முதல் நந்தனார் சரித்திரம், ஞான சம்பந்தர் பால்குடித்தது கூட இருக்கும். இந்த கட்டுரையிலோ, முந்தைய கட்டுரைகளிலோ எனது அனுமானம் என்று எதுவுமே இல்லை.

நம்மாழ்வரைப் பற்றிதானே சொல்கிறீர்கள், தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது என்ற தொடரை படியுங்கள். இணையத்திலும் இருக்கிறது. தேவை எனில் லிங்க் தருகிறேன்.

ஒரு சூத்திரனை ( அதாவது நம்மாழ்வாரை) பெருமாள் பக்கத்தில் நிற்கவைத்தற்கு 'அபச்சாரம்' செய்வதாக சொல்லி எதிர்ப்பு கிளம்பிய செய்தி இருக்கிறது படித்துப் பாருங்கள்.

ஈராக் போரா ? என்ன சொல்கிறீர்கள்.

இராமலிங்க சுவாமிகள், விபுலானந்த அடிகள், காந்தி அடிகள், இராஜா ராம் மோகன் ராய் போன்றோர் சமய ஒழுங்கீனங்களை, ஏன் பாரதியாரும் கூட சாடாமல் இருந்திருந்தால் இன்றைய நாளில் கிடைத்திருக்கும் உரிமைகள் பல கிடைத்திருக்காது.

பக்தியாளர்களாக இருக்கும் தங்கள் போன்றோர் துணிந்து உரிமைகளுக்காக குரல் கொடுத்தாலே போதும் அந்த நம்பிக்கையிலாவது மாற்றுமதம் நாடி தாழ்த்தப்பட்டவர்கள் ஓடாமல் இருப்பர்.

தமிழ் வளர்ச்சியில் இறைத்தமிழுக்கென்றே சிறப்பிடம் உண்டு, அவற்றை சாடினால் தமிழுக்குத்தான் இழப்பு என்பதை நாத்திகரும் அறிவர். நாத்திகராயினும் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தை நீக்கிவிட்டு விளக்க உரை எழுத எவரும் நினைத்ததில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//விஜய் said...
தேவையற்ற பதிவு. ஏன் வீணாக நேரத்தை வீணாக்குகிறீர்கள் நண்பரே! உபயோகமாக ஏதாவது எழுதுங்கள். ஆராய்ந்து கூற ஆயிர விசயங்கள் இருக்கும் போது எதற்கு இன்னும் பழைய பானையில் குதிரை ஓட்டி கொண்டிருக்கிறீர்கள்?

இதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
//

விஜய்,

கருத்துக்கு முதற்கண் நன்றி,

தேவையற்றது எது ?
தினமும் உண்ணுவதும், வாழ்ந்து செத்துப் போவதும் கூட தேவையற்றதுதான். பழம் பானையில் கள்விற்கும் வரை அதன் தீமை குறித்த எச்சரிக்கை இருக்கத்தான் செய்யும்.

என்றோ எவனோ ஆக்கிவைத்த ஆகமம் என்ற பெயரில் இன்றும் நடக்கும் கூத்துக்களுக்கும் எம்மக்கள் சிதம்பரத்தில் தேவரம் பாடும் உரிமைக்கு போலிஸ் காரனிடம் அடிவாங்குகிறார்கள்.

எனது நேரம் வீனாவதைக் குறித்து ஐயப்படாமல் இங்கு வந்து படிப்பதை தவிர்த்தால் உங்கள் நேரவிரயத்தை நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.

பெயரில்லா சொன்னது…

மீனாட்சிபுரத்தில் மதம் மாறினார்கள்! யாரைக்


குறை சொல்லப் போகிறோம்!

கிருஸ்துவர்கள் சிலர் புத்த மதத்துக்கு மாறப்


போகிறார்கள். இது எதனாலே!

இரட்டைத் தம்ளர் முறை இன்னும் அமலில்


உள்ள கடைகளின் பட்டியல் பார்த்தேன்!

இதை எப்படி சரி செய்வது? எனக்கு விடை


தெரியவில்லை!ராமானுசர், கர்நாடகாவில், பறையர்களும்


கோவிலுக்கு உள்ளே வரலாம் என்ற பழக்கத்தை


எற்படுத்தி வைத்தார். எட்டெழுத்து மந்திரத்தை


எல்லோருக்குமே உபதேசித்தார். மிகுந்த


எதிர்ப்புகளுக்கிடையே இதையெல்லாம்


செய்தார். தீண்டாமையை எதிர்ப்பதில் ஆழ்வார்கள் பங்கு
என்ன என்று இன்று


அழகாக இணையத்தில் எழுதுகிறார்கள்.

சிக்கல் சைவத்தில்தான்- வைணவத்தில்


எதிர்ப்பை அடியார்கள் வாயிலாகவே
எழுதி


வைத்திருக்கிறார்கள்.

நீங்களே தலித்துகளின் துயரம் பற்றி எழுதுகிறீர்கள். இதை எப்படி மாற்றலாம்


சொல்லுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஒரு சூத்திரனை (அதாவது நம்மாழ்வாரை) பெருமாள் பக்கத்தில் நிற்கவைத்தற்கு 'அபச்சாரம்' செய்வதாக சொல்லி எதிர்ப்பு கிளம்பிய செய்தி இருக்கிறது படித்துப் பாருங்கள்//

தாத்தாச்சாரியாருக்கு என் வணக்கங்கள்.எதிர்ப்பு கிளம்பியதை ஆவணப்படுத்தி உள்ளார்.
ஆனால் அந்த எதிர்ப்பு எல்லா ஆலயங்களிலுமா? எல்லா நேரமும் நடந்ததா?

GK
நீங்கள் சொல்லும் எதிர்ப்பு ஒரே ஒரு ஊரில்,ஓரு நூறு முறை நடந்தது என்று வைத்துக் கொள்வோம்.
நான் எடுத்துக் காட்ட விழைவது எந்தவொரு பேதமும் இல்லாமல், நூற்றுக்கணக்கான திவ்யதேசங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை நடந்து கொண்டிருப்பது!

நான் வைகுந்தர்/தாத்தாச்சாரியார் என்ற இருவர் எழுதிய புத்தகத்தில் படித்ததைச் சொல்லவில்லை! கண்ணாரக் கண்டது சொல்கிறேன். அதற்காக நான் மட்டும் தான் என்று நினைத்து விடாதீர்கள். பல அன்பர்களும் நேரே பார்க்கலாம். அடுத்த முறை இந்தியா வரும் போது, நீங்க என்னுடன் வாங்க. உங்களை அழைத்துச் சென்று, உங்கள் மனம் இனிக்கும் காட்சிகளை உங்களுக்கு உள்ளபடியே காண்பிப்பதில் நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைவேன்!

தாத்தாச்சாரியார் குறிப்பிடும் அந்த ஊரில் நடக்கும் தீங்கைக் களைய வேண்டும். அதற்காகத் திருப்பாண் ஆழ்வாருக்கு "இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது" என்பது போன்ற தவறான குறிப்புகளைத் தர வேண்டாமே!

சரி அப்படியே திருப்பாணாழ்வாருக்கு அப்படித் தான் அடி கிடைத்தது என்றால், நான் குறிப்பிட்ட திருமழிசை, நம்மாழ்வாருக்கு எல்லாம் எப்படி அடி கிடைத்தது? - நேரடியான பதில் தாருங்கள்! நம்மாழ்வாரையும் எப்படிக் கொன்றார்கள் என்று தாத்தாச்சாரியார் விளக்கி உள்ளாரா?

உங்களிடம் நான் கேட்டுக் கொண்டது என்னவென்றால், தீங்கை ஒழிக்கப் போய், தீங்கை ஒழிக்கும் போது, அதோடு சேர்த்து, நம் கருவூலத்தையும் நாமே சூறையாடக் கூடாது என்பது தான்!

நீங்கள் ஆலயத்தில் "அவாள்" செய்த அட்டகாசம் என்று சொன்ன வரைக்கும் சரி! ஆனால் அதற்கும் மேலே போய் ஆழ்வாரின் ஆத்ம அனுபவத்தையே கேலிக்கு உரியதாக ஆக்கியது தான் தவறு! அதைத் தான் தவிர்க்க முயலுமாறு கேட்டுக் கொண்டேன்! மற்றபடி ஒன்றும் இல்லை!

வருத்தத்துடன்
கண்ணபிரான் ரவிசங்கர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தாத்தாச்சாரியாருக்கு என் வணக்கங்கள்.எதிர்ப்பு கிளம்பியதை ஆவணப்படுத்தி உள்ளார்.
ஆனால் அந்த எதிர்ப்பு எல்லா ஆலயங்களிலுமா? எல்லா நேரமும் நடந்ததா?

GK
நீங்கள் சொல்லும் எதிர்ப்பு ஒரே ஒரு ஊரில்,ஓரு நூறு முறை நடந்தது என்று வைத்துக் கொள்வோம்.
நான் எடுத்துக் காட்ட விழைவது எந்தவொரு பேதமும் இல்லாமல், நூற்றுக்கணக்கான திவ்யதேசங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை நடந்து கொண்டிருப்பது!

நான் வைகுந்தர்/தாத்தாச்சாரியார் என்ற இருவர் எழுதிய புத்தகத்தில் படித்ததைச் சொல்லவில்லை! கண்ணாரக் கண்டது சொல்கிறேன். அதற்காக நான் மட்டும் தான் என்று நினைத்து விடாதீர்கள். பல அன்பர்களும் நேரே பார்க்கலாம். அடுத்த முறை இந்தியா வரும் போது, நீங்க என்னுடன் வாங்க. உங்களை அழைத்துச் சென்று, உங்கள் மனம் இனிக்கும் காட்சிகளை உங்களுக்கு உள்ளபடியே காண்பிப்பதில் நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைவேன்!

தாத்தாச்சாரியார் குறிப்பிடும் அந்த ஊரில் நடக்கும் தீங்கைக் களைய வேண்டும். அதற்காகத் திருப்பாண் ஆழ்வாருக்கு "இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது" என்பது போன்ற தவறான குறிப்புகளைத் தர வேண்டாமே!

சரி அப்படியே திருப்பாணாழ்வாருக்கு அப்படித் தான் அடி கிடைத்தது என்றால், நான் குறிப்பிட்ட திருமழிசை, நம்மாழ்வாருக்கு எல்லாம் எப்படி அடி கிடைத்தது? - நேரடியான பதில் தாருங்கள்! நம்மாழ்வாரையும் எப்படிக் கொன்றார்கள் என்று தாத்தாச்சாரியார் விளக்கி உள்ளாரா?

உங்களிடம் நான் கேட்டுக் கொண்டது என்னவென்றால், தீங்கை ஒழிக்கப் போய், தீங்கை ஒழிக்கும் போது, அதோடு சேர்த்து, நம் கருவூலத்தையும் நாமே சூறையாடக் கூடாது என்பது தான்!

நீங்கள் ஆலயத்தில் "அவாள்" செய்த அட்டகாசம் என்று சொன்ன வரைக்கும் சரி! ஆனால் அதற்கும் மேலே போய் ஆழ்வாரின் ஆத்ம அனுபவத்தையே கேலிக்கு உரியதாக ஆக்கியது தான் தவறு! அதைத் தான் தவிர்க்க முயலுமாறு கேட்டுக் கொண்டேன்! மற்றபடி ஒன்றும் இல்லை!

வருத்தத்துடன்
கண்ணபிரான் ரவிசங்கர்.
//

கே.ஆர்.எஸ்,

நான் எங்கே ஆன்ம அனுபவத்தை கேலி செய்திருக்கிறேன். தலைப்பை வைத்துச் சொல்கிறீர்களோ ?
ஆழ்வார்களின் ஆத்ம அனுபவத்தை கேலி செய்தேன் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் 'அவாள்' என்றும் சொல்லவில்லை. 'அபச்சாரம்' என்று தான் சொல்லி இருக்கிறேன்.

தீட்டு - இரட்டை தம்ளர் முறை கிராமங்களிலும் கூட இருக்கிறது. எனவே அவர்களை மட்டும் தான் குறை சொல்கிறேன் என்று நினைப்பது தவறான எண்ணம்.

தங்கமணி என்ற பதிவர் எழுதி இருந்தார் படித்துப் பாருங்கள்,
'சாதிகளை ஒழிக்க, இந்துமதத்தை ஒழிக்காமல் வேறு என்ன செய்வது ?' என்று இடுகை பலரும் கருத்து சொன்ன வரலாற்று பதிவு அது.

நான் கொஞ்சம் மாற்றி சொல்கிறேன். 'இந்து மதத்தைக் காக்க சாதிகளை ஒழிக்காமல் வேறு என்ன செய்வது என்று ?' இரண்டும் ஒன்று போல் பார்பதற்கு தெரிந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான்.

ஆழ்வார்கள் பற்றியும், ஆண்டாள் பற்றியும் கூட எழுதி இருந்தது அது தாத்தாச்சாரியார் சொன்ன நூலில் அல்ல. 'ஐயா வைகுண்டரின் வாழ்வும் வளமும் என்ற நூலில்' எனவே அவை என் சொந்த கருத்துக்கள் என்று கொள்ள வேண்டாம். தேவையெனில் பதிப்பக முகவரி தருகிறேன்.

அண்மையில் கூட திருவரங்க பெருமாளுக்கு வடகலை நாமம் போட்டதாக இரண்டு குழுக்களுக்குள் தகராறு நடந்ததாக செய்திகள் வருகின்றன. நாமெல்லாம் என்ன தான் பேசினாலும் செயல்படுத்த வேண்டியவர்கள் மதத்தை தன்வசம் வைத்திருப்பவர்கள் சீர் செய்ய வில்லை என்றால் தங்கமணியின் வாக்கு பலித்தாலும் பலிக்கலாம். எனக்கு அதில் விருப்பம் இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இராமலிங்க சுவாமிகள், விபுலானந்த அடிகள், காந்தி அடிகள், இராஜா ராம் மோகன் ராய் போன்றோர் சமய ஒழுங்கீனங்களை, ஏன் பாரதியாரும் கூட சாடாமல் இருந்திருந்தால் இன்றைய நாளில் கிடைத்திருக்கும் உரிமைகள் பல கிடைத்திருக்காது//

கண்டிப்பாக...அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எல்லாரும் ஒழுங்கீனங்களைச் சாடிக் களைந்தார்கள்! தன்னலமில்லாத் தந்தை பெரியார் இன்னும் ஒரு படி போய் ஒடித்துச் சாடிக் களைந்தார்.

ஆனால் அடியவர்களைச் சாடாமல், கொடியவர்களைத் தான் சாடிக் களைந்தார்கள். நீங்களும் சாடுங்கள், அது போலவே! அதுவே என் விண்ணப்பம்!

//பக்தியாளர்களாக இருக்கும் தங்கள் போன்றோர் துணிந்து உரிமைகளுக்காக குரல் கொடுத்தாலே போதும்//

அப்படித் துணிவுடன் உரிமைக்குக் குரல் கொடுத்துச், சண்டையிட்டு, விளங்க வைத்து, ஆழ்வார்களின் தரிசனப் பாதையை மேற்கோள் காட்டி, சான்றோரின் துணையுடன், திருத்திப் பணி கொண்டும் இருக்கிறேன்!

அதனால் தான் அவன் அருளாலே அவனுக்குப் பணி செய்யும் நற்பேறும், அரங்கத்து அம்மானை, சாதிகள் கடந்து, தொட்டுச் சீராட்டிய பாக்கியமும் கிடைத்தது.

என் கருத்தையும் சொல்ல வாய்ப்பு தந்ததற்கு நன்றி GK!

பயன அன்று ஆகிலும் "பாங்கல்லர் ஆகிலும்"
செயல் நன்றாகத் "திருத்திப் பணி கொள்வான்",
குயில் நின்று ஆர்ப்பொழில் சூழ் குரு கூர் நம்பி,
முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கு அன்பையே!
(so called "தாழ்ச்சாதி" குருகூர் நம்பி நம்மாழ்வார் மேல்
so called "உயர்ச்சாதி" மதுரகவி பணிந்து பாடியது)

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் ஆலயத்தில் "அவாள்" செய்த அட்டகாசம் என்று சொன்ன வரைக்கும் சரி! ஆனால் அதற்கும் மேலே போய் ஆழ்வாரின் ஆத்ம அனுபவத்தையே கேலிக்கு உரியதாக ஆக்கியது தான் தவறு! அதைத் தான் தவிர்க்க முயலுமாறு கேட்டுக் கொண்டேன்! மற்றபடி ஒன்றும் இல்லை!//

ஒரு தவறான புரிதல்,

ஆழ்வார்கள் சாதிப்பார்த்தார்கள் என்று சொல்லவில்லை, தற்காலத்தில் ஒரு பெருமாள் கோவிலி ஆழ்வாரின் சாதி பார்த்து தள்ளிவைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்ததைச் சுட்டினேன். இதில் ஆழ்வார்களின் ஆன்ம அனுபவத்தை கேலி செய்ததாக எங்கும் சொல்லவில்லையே.

ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் பற்றி 'ஐயா வைகுண்டர் வாழ்வும் வளமும்' ஆன்ம அனுபவததை கேலி செய்யவில்லை. அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மட்டும் தான் குறிப்பிட்டு இருந்தது. நேரம் கிடைக்கும் போது ஸ்கேன் செய்து தனிமடலுக்கு அனுப்புகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இதில் ஆழ்வார்களின் ஆன்ம அனுபவத்தை கேலி செய்ததாக எங்கும் சொல்லவில்லையே//

"வைணவ திருப்பணந்தாழ் ஆழ்வாருக்கும் இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது"

//நேரம் கிடைக்கும் போது ஸ்கேன் செய்து தனிமடலுக்கு அனுப்புகிறேன்.
//

மிகவும் நன்றி!

வெட்டிப்பயல் சொன்னது…

//தற்காலத்தில் ஒரு பெருமாள் கோவிலில் ஆழ்வாரின் சாதி பார்த்து தள்ளிவைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்ததைச் சுட்டினேன்//

அந்த ஒரு பெருமாள் கோவில்ல ஒருத்தர் பண்ண தப்புக்கு தான் ஆயிரமாயிரம் பேர் போற்றினத விட்டீங்களாக்கும்?

அதுவுமில்லாம இங்க KRS கேட்ட கேள்விக்கு எல்லாம உங்க பதில் மழுப்புற மாதிரி இருக்கு...

இதுக்கு பதில் சொல்லுங்க... நான்கு வருணத்தை விட மோசம்னு சொல்லப்படுகிற குலத்தில பிறந்த நம்மாழ்வாரை ஏன் முக்கியமான ஆழ்வாரா தலைல தூக்கி வெச்சிட்டு அவர் எழுதனத தமிழ் வேதமா ஒரு பிராமணர் தூக்கி வெச்சிட்டு ஆடுனார்?

இதுல நீங்க பேசற சாதி எங்க போச்சு?

தமிழ் வேதம்னு ஏன் ஒண்ண உருவாக்கனும்? அதை நம்மாழ்வார் சொல்ல சொல்ல ஏன் ஒரு பிராமணர் (மதுரகவி) எழுதி தரனும?.

இத பத்தி மட்டும் எனக்கு சொல்லுங்க. புத்தக விலாசம் எல்லாம் எனக்கு வேணாம். அதை கொடுத்து மழுப்ப வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
அந்த ஒரு பெருமாள் கோவில்ல ஒருத்தர் பண்ண தப்புக்கு தான் ஆயிரமாயிரம் பேர் போற்றினத விட்டீங்களாக்கும்?

அதுவுமில்லாம இங்க KRS கேட்ட கேள்விக்கு எல்லாம உங்க பதில் மழுப்புற மாதிரி இருக்கு...

இதுக்கு பதில் சொல்லுங்க... நான்கு வருணத்தை விட மோசம்னு சொல்லப்படுகிற குலத்தில பிறந்த நம்மாழ்வாரை ஏன் முக்கியமான ஆழ்வாரா தலைல தூக்கி வெச்சிட்டு அவர் எழுதனத தமிழ் வேதமா ஒரு பிராமணர் தூக்கி வெச்சிட்டு ஆடுனார்?

இதுல நீங்க பேசற சாதி எங்க போச்சு?

தமிழ் வேதம்னு ஏன் ஒண்ண உருவாக்கனும்? அதை நம்மாழ்வார் சொல்ல சொல்ல ஏன் ஒரு பிராமணர் (மதுரகவி) எழுதி தரனும?.

இத பத்தி மட்டும் எனக்கு சொல்லுங்க. புத்தக விலாசம் எல்லாம் எனக்கு வேணாம். அதை கொடுத்து மழுப்ப வேண்டாம். //

பாலாஜி,

நான் ஆழ்வார்கள் காலத்தில் நடந்ததை படித்ததில் இருந்து சொன்னேன், எதுவும் என் ஊகம் கிடையாது. ஆழ்வார்கள் எல்லோருமே கொல்லப்பட்டார்கள் என்று சொல்லவில்லை அதில் சிலரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் மறைந்த பொழுது அவர்களை பிற்காலத்தில் கொண்டாடுவது என்பது தற்போது நடக்கும் நடைமுறை. இதில் நான் மழுப்ப என்ன இருக்கிறது ?

எனக்கும் 'யாருக்கும்' பிரச்சனைகள் என்று எதுவும் கிடையாது. எனவே காழ்புணர்வாக எவரும் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஐயா வைகுண்டர் நாத்திகரும் இல்லை. அவரைப்பற்றிய எழுதியிருந்த புத்தகத்தில் ஐயா வைகுண்டர் வாழ்ந்த காலத்தில் (18 ஆம் நூற்றாண்டு) அவர் பல அற்புதங்களை செய்தார் என்ற கதைகள் பிற்காலத்தில் ஏற்பட்டதாகவும், அதையும் ஆழ்வார்கள் இறைவனிடி சேர்ந்ததுவும் பற்றி சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டு பக்தியை வளர்க்க சொன்ன தகவல்கள் என்று எழுதி இருந்தது.

வெட்டிப்பயல் சொன்னது…

//ஒரு சூத்திரன் கோவிலுக்குச் நேராகச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் மூன்று தெருக்களைத் தாண்டிதான் அவனால் செல்ல முடியும். முதல் தெருவிலேயே தடுக்கப்படுவான். அதாவது சூத்திரனின் கால்கள் அஹ்ரஹாரத்தில் தஞ்சை கோபுரத்தின் நிழலைப் போல தரையில் பட்டதே இல்லை. அதையும் மீறி சென்ற தாழ்த்தப்பட்ட சைவ நந்தனாரும், வைணவ திருப்பணந்தாழ் ஆழ்வாருக்கும் இறைவன் 'அடி' எப்படி கிடைத்தது என்பதை பலரும் சொல்லிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். (விரிவாக படிக்க ஐயா வைகுந்தர் வாழ்வும் வளமும் என்ற நூலை படியுங்கள்)//

நம்மாழ்வார் சூத்திரர் தான்... அவர் கோவில்ல போகலையா????

12 ஆழ்வார்கள்ல 9 பேர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவங்க. அதை பத்தி உங்க ஐயா வைகுந்தர் என்ன சொல்றார்???

இந்த பதிவு ஐயா வைகுந்தர் பதிவா இல்லை உங்க பதிவா???

வெட்டிப்பயல் சொன்னது…

//தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி !
தமிழ்ச்சொல் கேளா செவிடா போற்றி !//

யாருக்கு அடகு வைச்சாருனு சொல்லுங்களேன்???

சொல்லுங்க நான் வேணா இங்க ஓவர் டைம் பண்ணி மூட்டுக்க முயற்சி செய்யறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//நம்மாழ்வார் சூத்திரர் தான்... அவர் கோவில்ல போகலையா????

12 ஆழ்வார்கள்ல 9 பேர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவங்க. அதை பத்தி உங்க ஐயா வைகுந்தர் என்ன சொல்றார்???

இந்த பதிவு ஐயா வைகுந்தர் பதிவா இல்லை உங்க பதிவா??? //

பாலாஜி,

ஐயா வைகுண்டர் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவரது வாழ்கையைப் பற்றி எழுதி இருந்த நூலில் அவை இருந்தன. ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன் இதில் என் சொந்த கருத்துக்கள் எதுவும் இல்லை என்றே. வைகுண்டர் என்ன சொன்னார்ர் என்று தெரிந்து கொள்ள கொஞ்சநாள் காத்திருக்கனும். இப்பொழுதுதான் திரைப்படம் தயாரிப்பில் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.
:)

இந்த பதிவுக்கும் ஐயா வைகுண்டருக்கும் தொடர்பு இல்லை. அவர் நாடார் குலத்தில் பிறந்து கிறித்துவ மிசனரிகளுக்கு எதிராக போராடி வைணவத்தை வளர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன்.

இதற்கு மேல் ஐயா வைகுண்டரைப் பற்றி தெரிந்து கொள்ள அரவிந்தன் நீலகண்டன் பதிவை நீங்கள் புரட்ட வேண்டும். ஏனென்றால் அவர் கிறித்துவ மிசினரிகளுக்கு எதிராக போராடியதால் ஐயா வைகுண்டரை இந்துத்துவாக காட்ட முயன்றாதாக சொல்லி கற்பக விநாயகம் என்பவர் எழுதிய இடுகையையுமே சேர்த்தே படியுங்கள்.

வெட்டிப்பயல் சொன்னது…

//வெட்டிப்பயல் said...

//தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி !
தமிழ்ச்சொல் கேளா செவிடா போற்றி !//

யாருக்கு அடகு வைச்சாருனு சொல்லுங்களேன்??? //

இதுல நீங்க சொல்ல வரது பார்ப்பணர்களுக்குனு நான் எடுத்துக்கறேன். நான் நினைக்கிறது தப்புனா பார்ப்பணர்களுக்கில்லைனு நீங்க சொல்லிடுங்க... வேற யார்கிட்ட நம்மல (ஏன்னா நானும் கோட்டாவுல பாடிச்சி வந்தவன் தான்) இறைவன் அடகு வெச்சிட்டாருனு சொல்லுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

// வெட்டிப்பயல் said...

யாருக்கு அடகு வைச்சாருனு சொல்லுங்களேன்???

சொல்லுங்க நான் வேணா இங்க ஓவர் டைம் பண்ணி மூட்டுக்க முயற்சி செய்யறேன்..

1:10 PM, August 23, 2007
//

பாலாஜி நல்லது.
ஓதுவார் ஆறுமுகசாமியை அழைத்துக் கொண்டு சிற்றம்பலம் மேடைக்குச் செல்லுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

இதை செய்தால் பெருமாளிடம் கொடுத்த கடன் கூட வேண்டாம் என்று குபேரனே சொல்லிவிடுவார்.

வெட்டிப்பயல் சொன்னது…

//ஐயா வைகுண்டர் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவரது வாழ்கையைப் பற்றி எழுதி இருந்த நூலில் அவை இருந்தன. ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன் இதில் என் சொந்த கருத்துக்கள் எதுவும் இல்லை என்றே.//

ஓ... இந்த பதிவு முழுதுமே ஐயா வைகுந்தர் சொன்னது தானா? நான் கூட நீங்க சொந்தமா யோசிச்சி எழுதனீங்களோனு நினைச்சிட்டேன். மன்னிக்கவும்...

அதான் சிவன இந்த காட்டு காட்டிருக்கீங்களா?

இந்த பதிவுல இருக்குற கருத்துக்களுக்கு உங்களுக்கு உடன்பாடு இருக்கா? இல்லையா?

சைவத்தை பத்தி எனக்கு அதிகமா தெரியாது. இப்ப தான் ஊர்ல இருந்து நாயன்மார்கள் புத்தகமும், சித்தர்கள் பத்திய புத்தகமும் வாங்கி வந்திருக்கிறேன். அதை படிச்சதுக்கப்பறம் இதை பத்தி பேசறேன்...

ஜி.ரா,
சைவத்துல இப்படி சாதி வெறி புடிச்சவங்க தான் அதிகமா??? நீங்க வந்து தான் சொல்லனும்...


//
வைகுண்டர் என்ன சொன்னார்ர் என்று தெரிந்து கொள்ள கொஞ்சநாள் காத்திருக்கனும். இப்பொழுதுதான் திரைப்படம் தயாரிப்பில் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.
:)//

உலகத்துல நீங்க மட்டும் தான் புத்தகம் படிப்பீங்க மத்தவங்க எல்லாம் படத்தை பார்த்து தான் தெரிஞ்சிக்குவாங்கனு தலை கணம் உங்களுக்கு எப்படி வந்துச்சி GK???

வெட்டிப்பயல் சொன்னது…

//பாலாஜி நல்லது.
ஓதுவார் ஆறுமுகசாமியை அழைத்துக் கொண்டு சிற்றம்பலம் மேடைக்குச் செல்லுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

இதை செய்தால் பெருமாளிடம் கொடுத்த கடன் கூட வேண்டாம் என்று குபேரனே சொல்லிவிடுவார்.//

முதல்ல ஒண்ண நீங்க புரிஞ்சிக்கனும். அதே ஓதுவார் அங்க சமஸ்கிரதத்துல பாடினாலும் தப்பு தான். பிரச்சனை மொழியிலல்ல. அங்க உங்க பிராமண நண்பர் SK பாடினாலும் பிடித்து உள்ளே வைத்து விடுவார்கள். அதனால் அது பிராணமர்களுக்கென்றும் சொல்ல முடியாது...

அங்க தமிழ்ல தான் எல்லாரும் பேசிக்கறாங்க. அந்த மேடைல. அதனால தமிழ்ல பாடறது பிரச்சனையில்லை. (இதை பத்தி நான் ஒரு பதிவு கூட எழுதியிருந்தேன்.)

இதை பார்க்கவே நான் தில்லை கோவிலுக்கு போனேன். ஈசனின் சிலைக்கு நேரெதிரே ஒரு 10 - 15 அடியிலிருக்கும் சுவற்றில் தமிழ் பாடல்கள் தான் இருக்கிறது... பெருமாள் பாட்டுனு நினைக்கிறேன். ஆனா என்ன பாட்டுனு தெரியல...

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுல நீங்க சொல்ல வரது பார்ப்பணர்களுக்குனு நான் எடுத்துக்கறேன். நான் நினைக்கிறது தப்புனா பார்ப்பணர்களுக்கில்லைனு நீங்க சொல்லிடுங்க... வேற யார்கிட்ட நம்மல (ஏன்னா நானும் கோட்டாவுல பாடிச்சி வந்தவன் தான்) இறைவன் அடகு வெச்சிட்டாருனு சொல்லுங்க //

பாலாஜி,

நான் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். ஆகமம் என்ற பெயரில் நடந்தவையே இந்த கட்டுரையில் இருக்கிறது. சிவன் கோவில் ஆகமம் என்ற பெயரில் அடகு வைக்கப்பட்டதும் கதவடைத்துக் கொண்டது என்று சொல்லி இருக்கிறேன். இதைப் பார்பனர்களுடன் தொடர்பு படுத்துவதாக கொள்வது உங்கள் புரிதலாக இருக்கும். நான் தமிழ்மன்னர்கள் குறித்து கீழே சொல்லி இருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டதா ?

மற்றவர்கள் சொல்வது போல் 'இந்துக்கள்' என்றால் 'பார்பனர்கள்' என்ற புரிதல் உங்களுக்கு ஒருவேளை இருந்தால் நீங்கள் நினைப்பதையே கொள்ளுங்கள். நான் அவ்வாறு கருதவில்லை.

சமஸ்கிரதம் தேவ பாசை என்று சென்ற நூற்றாண்டுவரை நம்ம வைக்கபட்டுதான் இருந்தது. தென்னக தமிழர் வழிபாட்டு முறைகளை தொலைத்துவிட்டு வடமொழிக்கு சிவன் அடக்கு வைத்துவிட்டான் என்று சொல்வதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். நடந்தேறுவதும் அதே.

வெட்டிப்பயல் சொன்னது…

சரி மணி 2 ஆச்சு... நான் நாளைக்கு வரேன் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

// வெட்டிப்பயல் said...

ஓ... இந்த பதிவு முழுதுமே ஐயா வைகுந்தர் சொன்னது தானா? நான் கூட நீங்க சொந்தமா யோசிச்சி எழுதனீங்களோனு நினைச்சிட்டேன். மன்னிக்கவும்...//

எப்படிங்க பார்திபன் மாதிரி பேசுறிங்க ?
:) நான் ஆழ்வார்கள் பற்றிய குறிப்பை மட்டும் தான் ஐயா வைகுந்தர் பற்றி எழுது இருந்த நூலில் இருந்தது என்று சொன்னேன். ஐயா வைகுண்டர் சொன்னார் என்று சொல்லவில்லை. எல்லோரும் கிடைத்த, படித்த தகவல்களை வைத்துதானே எழுத முடியும் இதில் சொந்தமாக எழுதினால் என்ன வாடகைக்கு எழுதினால் என்ன ? கண்டிப்பாக காபி பேஸ்ட் செய்யவில்லை. :)

//அதான் சிவன இந்த காட்டு காட்டிருக்கீங்களா?

இந்த பதிவுல இருக்குற கருத்துக்களுக்கு உங்களுக்கு உடன்பாடு இருக்கா? இல்லையா?

சைவத்தை பத்தி எனக்கு அதிகமா தெரியாது. இப்ப தான் ஊர்ல இருந்து நாயன்மார்கள் புத்தகமும், சித்தர்கள் பத்திய புத்தகமும் வாங்கி வந்திருக்கிறேன். அதை படிச்சதுக்கப்பறம் இதை பத்தி பேசறேன்...//

நல்லது நேற்றுக் கூட ஒரு வைணவ அன்பருடன் சாட்டிய போது முருகன் கிழவர் வேடம் பூண்ட வள்ளித் திருமணக் கதையை கேள்விப் பட்டதே இல்லை என்றார். எனவே வைணவர்களுக்கு சிவன் குடும்பம் பற்றி எதுவும் தெரியாது என்பது தாங்கள் சொல்வதை வைத்தும் உறுதி ஆகிறது.

//ஜி.ரா,
சைவத்துல இப்படி சாதி வெறி புடிச்சவங்க தான் அதிகமா??? நீங்க வந்து தான் சொல்லனும்...//

அதுக்காக மதம் மாறுவது போல் ஜிரா வெறுத்துப் போய் ஓடி வந்துவிட மாட்டார்
:))

//உலகத்துல நீங்க மட்டும் தான் புத்தகம் படிப்பீங்க மத்தவங்க எல்லாம் படத்தை பார்த்து தான் தெரிஞ்சிக்குவாங்கனு தலை கணம் உங்களுக்கு எப்படி வந்துச்சி GK???//

அது சேரி, ஒரு திரைபடம் தயாராகுகிறது என்று குறிப்பிட்டு காட்டினேன். அதற்காக புத்தகம் நான் மட்டும் தான் படிப்பேன் என்று கொள்ளச் சொல்லவில்லையே.

புத்தகம் படிப்பதைவிட திரையில் பார்க்கும் போது பாத்திரமே பேசுமே.
:))

உங்களுக்கு காட்டமாக பதில் சொல்லிவிட்டால் எங்கே போனதடவை ஓடியது போல் பை பை சொல்லிடுவிங்களோன்னு யோசனையாக இருக்கு. இக்கட்டில் விட்டுவிட்டிங்களே பாலாஜி.

நல்லா இருங்க.

இதையே எஸ்கே கேட்டு இருந்தால் அவரை தாளிச்சிருப்பேன்.

எப்படி அடிச்சாலும் மனுசன் தாங்குவார்
:))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//நேற்றுக் கூட ஒரு வைணவ அன்பருடன் சாட்டிய போது முருகன் கிழவர் வேடம் பூண்ட வள்ளித் திருமணக் கதையை கேள்விப் பட்டதே இல்லை என்றார். எனவே வைணவர்களுக்கு சிவன் குடும்பம் பற்றி எதுவும் தெரியாது என்பது தாங்கள் சொல்வதை வைத்தும் உறுதி ஆகிறது//

மிகவும் அருமையான கருத்து.
வைணவர்களுக்கு சிவன் குடும்பம் பற்றி எதுவும் தெரியாது தான்! ஒருவருடன் சாட்டியதில் இருந்தே இந்தப் பேருண்மை ஐயம் திரிபு அற மெய்ப்படுத்தப் பட்டுவிட்டதே!

நான் கூட முருகனையும் ஈசனையும் பற்றி ஒன்றும் தெரியாத ஞான சூன்யம் தான்!
முனியே நான்முகனே "முக்கண்" அப்பா என்று பாடிய நம்மாழ்வாரும், பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து என்று பாடியவர்களும், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் இன்றும் பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை விபூதி இட்டு வழிபடும் வைணவர்களும், ஏனைய பெரியார்களும் - எவர்க்குமே சைவம் அறியாச் சிறுவர்கள் தான்!
சைவம் அறிந்திருப்ப்பாரே ஆனால் அடகு வைத்ததையும் அறிந்திருப்பார்கள் அல்லவா? :-)))

//ஜி.ரா,
சைவத்துல இப்படி சாதி வெறி புடிச்சவங்க தான் அதிகமா??? நீங்க வந்து தான் சொல்லனும்...//

ஜிராவுக்கு நேரமில்லை ஆனால் நானே வந்து சொல்கிறேன் பாலாஜி.
சைவத்திலும் சாதியோ வெறியோ கிடையாது.
எப்படி சூத்திர நம்மாழ்வார் பாட்டைப் பார்ப்பன மதுரகவி ஊரெல்லாம் பரப்பி, தமிழ்ச்சங்கப் புலவர்களிடம், உயிரைக் கொடுத்து வாதாடி நிறுத்தினாரோ....அதே போல் தான்
சைவத்திலும் அடியார்கள் கதையை ஓரிரு சுயநல தீட்சிதக் கும்பல் ஒளித்து வைக்க, நம்பியாண்டார் நம்பி என்னும் அந்தணர் அரசு உதவியுடன் வெளிக் கொணர்ந்தார். பின்னர் ஊரெல்லாம் பரப்பியும் வைத்தார்!

கோவி சொன்னது போல்
இறைவன் தமிழை எவர்க்கும் எங்கும் எப்போதும் அடகு வைக்கவும் இல்லை! அதை நீங்கள் மூட்ட (மீட்க) வேண்டிய அவசியமும் இல்லை!

//வைதீக ஆகமங்கள் கோவில்களை மட்டுமா ஆக்கிவைத்தன ? ஊர் அமைப்பையே மாற்றிவைத்தன. மக்களையும் பிரித்து வைத்தன//

கோவிக்கு முன்பே சொன்னது போல் இது ஆகமத்தின் சதி அல்ல. கோவில் அலுவலன் செய்த சதி. எலியை விரட்ட இல்லத்தை எரிப்பதும் ஒரு நல்ல வழி தான்.

பாஞ்சராத்ர ஆகமம் என்ற வைணவ ஆகமம் பற்றி, கோவியின் நட்சத்திர வாரம் முடிந்த பின் விரிவாக எழுதுகிறேன். இன்று வாய் கிழியப் "பேசிக்" கொண்டிருக்கும் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் திட்டத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாஞ்சராத்ர ஆகமம் எப்படி வழி கோலியது என்றும் சொல்கிறேன்.
அதற்கு ஆகமம் பற்றி நன்கு அறிந்த கோவி அவர்களின் உதவியும் கேட்டுப் பெறுகிறேன்.


அது வரை எம்பெருமான் ஈசனை, கடல் நஞ்சுண்ட கண்டன் தனை, சிவன் எம் இறை செம்பவழத்தானை, பதிவுலகின் விதி வசத்தால் நானும் கோவியோடு சேர்ந்து போற்றுகிறேன்!

தென்னாடு அடகுவைத்த சிவனே போற்றி போற்றி!
தமிழ்ச்சொல் கேளாச் செவிடா போற்றி போற்றி!!

தோடுடைய செவியா(செவிடா) போற்றி போற்றி!
காடுடைய சுடலை மாடா(மடையா) போற்றி போற்றி!
திருச்சிற்றம்பலம்!

கோவி.கண்ணன் சொன்னது…

KRS,

உங்கள் கடைசி பின்னூட்டத்திற்கு எனக்கு ஒரே ஒரு கருத்துதான் இருக்கு.

"இறையடியார் என உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு !"

பெயரில்லா சொன்னது…

" Rajaraja instigated a great search which finally located the precious leaf bundles, badly damaged by leaf-eating bugs, in the Nataraja temple of Chidambaram. Rajaraja Cholan had the leaves collected, cleaned and preserved, then engaged a scholarly devotee named Nambiandar Nambi to compile them for posterity.

Now these songs are again facing the threat of extinction. There are only two Thevaram schools in Tamil Nadu, both patronized by the Chettiar community. Only a few students are enrolled in these schools.

"There are about 50 oduvars at temples in Tamil Nadu, " Satgurunathan says, "but the well-trained ones are few. It makes me sad that so few youth are coming forward to follow this tradition of serving God. Finance is one reason for this decline. This profession just does not pay enough for singers to be able to meet today's living demands. I teach about 20 students who come from different occupations: a policeman, a student, a man who works in the film industry. They are all learning purely out of their interest. No one plans to take it up as a profession. Unless the government or temples intervene, the future looks bleak. I plan to continue teaching just to keep the songs alive. Unfortunately, I don't think that we are not going to have another Rajarajan. I hope to build my own school and offer this honey I have tasted to others until my end."

இது ஹவாயில் உள்ள கொவை? ஆதீனம்


வெளியிடும் இந்துமதம் இன்று என்ற பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி.

தமிழ் என்று வரும் போது சைவமும் வைணவமும்


வேறுபடுகிறது. ஆதீனங்களின் பங்கு என்ன?

ஒருவர் ஜூ.வீயில் வந்ததுதான் நினைவுக்கு


வருகிறது! தில்லைஅரசன் தமிழை விரும்பலாம்
.

அதைக் கொடுப்பதற்குத்தான் ஆள் இல்லாமல்


போகப் போகிறது!

//இறைவன் தமிழை எவர்க்கும் எங்கும் எப்போதும் அடகு வைக்கவும் இல்லை! அதை நீங்கள் மூட்ட (மீட்க) வேண்டிய அவசியமும் இல்லை!//தமிழைப் பற்றிக் கவலைப்படும்


சைவர்கள் களமிறங்க வேண்டிய காலம் இது!

வெட்டிப்பயல் சொன்னது…

ரெண்டு நாளா ஆணி அதிகமாயிடுச்சி.. அதான் இந்த பக்கம் வர முடியல.. இப்ப வந்தாச்சு...

வெட்டிப்பயல் சொன்னது…

//பாலாஜி,

நான் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். ஆகமம் என்ற பெயரில் நடந்தவையே இந்த கட்டுரையில் இருக்கிறது. சிவன் கோவில் ஆகமம் என்ற பெயரில் அடகு வைக்கப்பட்டதும் கதவடைத்துக் கொண்டது என்று சொல்லி இருக்கிறேன். இதைப் பார்பனர்களுடன் தொடர்பு படுத்துவதாக கொள்வது உங்கள் புரிதலாக இருக்கும். நான் தமிழ்மன்னர்கள் குறித்து கீழே சொல்லி இருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டதா ?

மற்றவர்கள் சொல்வது போல் 'இந்துக்கள்' என்றால் 'பார்பனர்கள்' என்ற புரிதல் உங்களுக்கு ஒருவேளை இருந்தால் நீங்கள் நினைப்பதையே கொள்ளுங்கள். நான் அவ்வாறு கருதவில்லை.

சமஸ்கிரதம் தேவ பாசை என்று சென்ற நூற்றாண்டுவரை நம்ம வைக்கபட்டுதான் இருந்தது. தென்னக தமிழர் வழிபாட்டு முறைகளை தொலைத்துவிட்டு வடமொழிக்கு சிவன் அடக்கு வைத்துவிட்டான் என்று சொல்வதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். நடந்தேறுவதும் அதே.//

Well Said...
சமஸ்கிரதம் பேசறது யாருங்க? தமிழகத்தில் வசிக்கும் சத்ரியர்களா? வைசியர்களா? சூத்திரர்களா?

அப்ப அந்த மொழி பேசனவங்க தான் இந்த ஆகம்த்துக்கும், சூத்திரர்களின் இந்த நிலைக்கும் காரணம்னு சொல்றீங்க?

அவுங்க யாருனு தெளிவா சொல்லுங்க GK...

வெட்டிப்பயல் சொன்னது…

//எப்படிங்க பார்திபன் மாதிரி பேசுறிங்க ?
:) நான் ஆழ்வார்கள் பற்றிய குறிப்பை மட்டும் தான் ஐயா வைகுந்தர் பற்றி எழுது இருந்த நூலில் இருந்தது என்று சொன்னேன். ஐயா வைகுண்டர் சொன்னார் என்று சொல்லவில்லை. எல்லோரும் கிடைத்த, படித்த தகவல்களை வைத்துதானே எழுத முடியும் இதில் சொந்தமாக எழுதினால் என்ன வாடகைக்கு எழுதினால் என்ன ? கண்டிப்பாக காபி பேஸ்ட் செய்யவில்லை. :)//

காபி பேஸ்ட் செய்வது தப்புனு நான் சொல்லலைங்க... வேறு ஒருவர் சொல்லியிருந்தால் அவருக்கு க்ரெடிட் போய் சேரணுமில்லையா? அதுவுமில்லாம சொல்லப்பட்ட காலமும் ஒரு முக்கியமான விஷயம்...

//நல்லது நேற்றுக் கூட ஒரு வைணவ அன்பருடன் சாட்டிய போது முருகன் கிழவர் வேடம் பூண்ட வள்ளித் திருமணக் கதையை கேள்விப் பட்டதே இல்லை என்றார். எனவே வைணவர்களுக்கு சிவன் குடும்பம் பற்றி எதுவும் தெரியாது என்பது தாங்கள் சொல்வதை வைத்தும் உறுதி ஆகிறது.//
இது என்னங்க ஓவரா இருக்கு... நான் ஜி.ரா வந்தா என்னை விட தெளிவா சொல்லுவாரேனு சொன்னேன்.

நான் இந்த முறை இந்தியா போனப்பக்கூட திருவிடைமருதூர் மகாலிங்கத்தையும், தில்லையில் கூத்தாடுபவனையும் தான் தரிசித்து வந்தேன். அங்க போய்தான் மேலே சொன்ன புத்தகங்கள் வாங்கி வந்தேன். வைணவனு எண்ணமிருந்தா நாயன்மார்கள் பத்தி புத்தகம் வாங்கி வர தேவையில்லை...

திருச்சி போயும் அரங்கனை பார்க்கல...

ஒவ்வொரு முறை திருப்பதி போயிட்டு வரும் போதும் திருத்தணி போயிட்டு தான் வருவேன்...

காலேஜ்ல படிக்கும் போது அடிக்கடி மருதமலை தான் போயிட்டு வருவேன்.

பள்ளிக்கூடத்துல படிக்கும் போது நிறைய தடவை சர்ச்சுக்கும் போவேன்..

வெட்டிப்பயல் சொன்னது…

////ஜி.ரா,
சைவத்துல இப்படி சாதி வெறி புடிச்சவங்க தான் அதிகமா??? நீங்க வந்து தான் சொல்லனும்...//

அதுக்காக மதம் மாறுவது போல் ஜிரா வெறுத்துப் போய் ஓடி வந்துவிட மாட்டார்
:))//

அவர் வேறுத்து போய் வரனும்னு நான் சொல்லல... அப்படியில்லைனு அவர் சொல்லுவார்னு சொன்னேன். அவர் இதை படிக்கல போல. இல்லைனா அவர் செந்தமிழால் சொல்லும் போது நீங்களும், நானும் கேட்டு தான் ஆகனும். தர்க்கம் பண்ண முடியாது :-)

வெட்டிப்பயல் சொன்னது…

//அது சேரி, ஒரு திரைபடம் தயாராகுகிறது என்று குறிப்பிட்டு காட்டினேன். அதற்காக புத்தகம் நான் மட்டும் தான் படிப்பேன் என்று கொள்ளச் சொல்லவில்லையே.

புத்தகம் படிப்பதைவிட திரையில் பார்க்கும் போது பாத்திரமே பேசுமே.
:))
//
ஏதோ நக்கல் தோணில சொன்ன மாதிரி இருந்துச்சு. அதான் கோபம் வந்துச்சி... மன்னிக்கவும்

//
உங்களுக்கு காட்டமாக பதில் சொல்லிவிட்டால் எங்கே போனதடவை ஓடியது போல் பை பை சொல்லிடுவிங்களோன்னு யோசனையாக இருக்கு. இக்கட்டில் விட்டுவிட்டிங்களே பாலாஜி.
//
காட்டம பதில் சொன்னா ஓட மாட்டேன். உன்னை மாதிரி வெட்டிப்பய நானில்லைனு சொன்னா அடுத்து வர பிடிக்காது.. அது தமிழ் பாட்டி சொல்லி கொடுத்தது. என்ன பண்ண?

//
நல்லா இருங்க.
//
மிக்க மகிழ்ச்சி ;)

//
இதையே எஸ்கே கேட்டு இருந்தால் அவரை தாளிச்சிருப்பேன்.

எப்படி அடிச்சாலும் மனுசன் தாங்குவார்
:))))//
என்ன செய்ய? நான் அவா இல்லையே ;)

இதுக்கே நீங்க இப்படி ஃபீல் பண்ணா. குமரன், ஜி.ரா, KRS எல்லாம் கேட்டு பாருங்க. அவுங்களோட ஆன்மீக பதிவுலயே சண்டை போடற ஆளு நானாதான் இருப்பேன்... இனிமே சண்டையே போட மாட்டேனு சொல்லிட்டேன். ஆனா விட்டக்குறை தொட்டக்குறை...

சரி எல்லாம் இருக்கட்டும், இந்த வாரத்துல பெரியார் பத்தி ஏன் எழுதல :-(

sundar சொன்னது…

±¾¿É¾

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்