பின்பற்றுபவர்கள்

23 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : தமிழுணர்வால் ஏற்பட்ட அழிவுகள் !

மனிதர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மேன்மை உணர்வான பக்தி உணர்வை வைத்து ஆன்மிகம் வளர்ந்ததை விட சாதியம் வளர்ந்து வந்திருக்கிறது. வருணாசிரமம் என்னும் அசைக்க முடியாத கோட்டையில் அவ்வப்பொழுது விரிசல் விழுந்தபோது அவற்றிற்கு மேல் பூச்சு பூசி விரிச்லை மறைக்க மக்களின் பக்தி உணர்வு பெரிதும் பயன்பட்டிருக்கிறது. 'இந்து' என்ற சொல்லாடலில் இந்துக்களின் உணர்வுகளைத் தூண்ட முடிவது போல், அதே உத்தியில் 'தமிழ்' என்று சொன்னால் தமிழர்கள் உணர்வு வயப்படுக்கிறார்கள். இவை பலசமயங்களில் ஆக்க முழுமையாக (பூர்வமாக) இருந்தாலும் சில பாதகங்களையும் செய்துவிடும், அப்படி ஒரு நிகழ்வுக்கு தமிழர்களின் தமிழுணர்வு உரமாக இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

நான்காம் நூற்றாண்டுகளுக்கு முன்பே பெளத்தம் தமிழகத்திலும் வெளியிலும் தழைத்தோங்கியது. தமிழகத்தில் நன்கு வேறூன்றிய நிலையில் சமணமும், பெளத்தமும் நிருவாண தத்துவம் என்ற நிலையை மறந்து உருவழிபாடு, இந்திரவிழா என பக்திமார்கமாக பரிணாமத்துடன் வளர்ந்துவிட்ட நிலையில்... வருண வேதத்தார்...வருணாசிரம சநாதனத்தை வளர்க்க வழிதெரியாமல் திண்டாடினார்கள். அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தமிழர்களுக்கு என்றுமே இயற்கையாக இருந்த தமிழுணர்வு என்ற நீரோடை வற்றாமல் இருப்பதை சநாதனவாதிகள் உணர்ந்து கொண்டார்கள்.

பெளத்தமும், சமணமும் தமிழகத்தை சேர்ந்தது அல்ல...பாலி மொழியையும் வளர்க்கவும்,
சமஸ்கிரதத்தின் வளர்ச்சியையும் பயன்படுத்திக் கொண்டு மதம் பரப்புவதாகவும், தமிழுக்கு அவ்விருமதங்களும் எதிரிகள் என்று முன்மொழியப்பட்டது (பிரகடனம்). அதைத் தொடர்ந்து தமிழக அரசர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. வருணாசிரம வாதிகளின் (இதில் வேதங்களை ஏற்றுக் கொண்ட தமிழர்களும் அடக்கம்) சமஸ்கிரத போதனைகளை (தற்காலிகமாக ?) நிறுத்திக் கொண்டு பெளத்ததிற்கு எதிராக தமிழர்களிடையே 'தமிழர், தமிழுணர்வு' என்பதை சொல்லி சொல்லி தமிழர்களை வசப்படுத்தினர். தமிழுணர்வு எதிர்பார்த்ததைவிட நன்கு செயல் (படுத்தப்) பட்டதால். அவசரத் தேவையாக புதிய பக்தி இலக்கியங்கள் தமிழில் தோன்றியது. அப்பர்- சுந்தரர் - ஞானசம்பந்தர் ...மற்றும் நாயன்மார்கள் ஏற்படுத்திய தமிழ் பக்தி இலக்கிய நூல்களுக்கு தமிழர்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சைவசமயம் மற்றும் வைணவம் வளர்ந்தது, அதனை ஏற்க மறுத்த பெளத்தர்களும், சமணர்களும் தமிழுக்கு எதிரி என்பதை அரசர் மற்றும் மக்கள் மனதில் பதிய வைக்க முடிந்தது. பாண்டியர்கள் ஆட்சியில் என்பதாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.

உண்மையில் சமணர்களோ, பெளத்தர்களோ தமிழுக்கு எதிரியாக இருந்தது இல்லை. அவர்கள் பாலி மொழியிலும் சமஸ்கிரதத்திலும் இலக்கியங்களை எழுதினார்கள் அதில் புலமை பெற்றவர்களாக இருந்தனர். உண்மையான காரணம் அம்மதத்தினர் சாதி பிரிவினைக்கு எதிரானவர்கள் என்பதே முதன்மை காரணம். தமிழில் இருக்கும் ஐம்பெரும் காப்பியங்களும் சமண பெளத்த சமயத்தை சேர்ந்த தமிழர்கள் இயற்றியதுதான். அப்படி இருக்கையில் சமணர்களும் பெளத்தர்களும் தமிழுக்கு எதிரி என்று நம்ப வைக்கப்பட்டது. தமிழகத்தில் பக்தி இலக்கியம் வளர்ந்த பொற்காலம் என்று சிலாகித்து சொல்லப்பட்டவை சமணர்களையும், பெளத்தர்களையும் அழித்த அந்த இருண்டகாலம் தான். சமண பெளத்த காலத்தை களப்பிரர்கள் காலம் என்று சொல்லி அதில் இருந்த வரலாற்று சுவடுகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது தமிழில்
எழுதப்பெற்ற எண்ணற்ற சாங்கிய நூல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஐம்பெரும் காப்பியங்களில் எரியாமல் கிடைத்திருப்பது சீவகசிந்தாமனி, சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் குண்டலகேசியின் ஒரு பகுதி. திருவள்ளுவர் சமண மத்ததை சேர்ந்தவர் என்பதும் தற்போதைய தமிழாராய்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்து ஆய்ந்துவருகிறார்கள்.

தமிழுணர்வால் பெளத்த சமயம், சமண சமயம் தமிழகத்தில் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு புத்தர் சிலை அமர்ந்த ஆற்றங்கரை அரசமரத்தடியில் (போதிமரம்) பிள்ளையார் சிலைகள் வந்து உட்கார்ந்து கொண்டதும். தமிழக தெய்வங்கள் சமஸ்கிரதம் கற்றுக் கொண்டதும், கடம்பன் இடும்பன் போன்ற கிராம தெய்வங்களுக்கு கூட சமஸ்கிரத சொற்கள் கலந்து கவசங்கள் இயற்றியதும், மணிப்ரளவ நடை தோன்றியதும் தனிக்கதை.


இங்கே சமணர்களும் , பெளத்தர்களும் அன்றைய அந்த நூற்றாண்டுகளில் சாதுக்களாக இருந்தார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. மதங்களை பின்பற்றுவதாலேயே தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் இருக்கும் என்பது ஏற்பதற்கு இல்லை. உலகெங்கிலும் நிகழ்வுகள் எப்போதும் மெய்பிப்பவை என்னவென்று பார்த்தால், ஒரு கொள்கை மக்கள் இடையில் (மத்தியில்) செல்வாக்கு பெற்றவுடன், அந்த செல்வாக்கை தக்கவைப்பதற்கு ஆதிக்க சக்திகளாக பரிணாமம் அடைந்து தீயவழியையும் அக்கொள்கையைப் பின்பற்றுபவர் தேர்ந்தெடுப்பர். இதை இன்றைய அரசியல்களிலும் சமுக அமைப்புகளில் இருந்தும் கூட நாம் நன்கு உணரமுடியும். பெளத்தர்களையும், பெளத்தையும் புரிந்து கொண்ட இலங்கை கடற்கோள் நிவாரணத்தில் கூட பாகுபாடாக நடந்து கொண்டதை பலரும் கண்டித்தனர். அவர்களின் அரசியல் பற்றியும், புத்த பிச்சுகளின் பிடிவாதங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இனக்குழுக்கள் செல்வாக்கை இழப்பதாக நினைத்துக் கொள்வதே இதற்கு காரணம் அப்படி நினைப்பதால் மதங்களின் பின்னால், மக்களின் உணர்வுகளின் பின்னால் வசதியாக நின்று கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இது எந்த குழுவுக்கும் அது மதமாக இருந்தாலும், இனமாக இருந்தாலும் பொருந்திப் போகும்.

தமிழர்களின் பக்தியுணர்வும், தமிழுணர்வும் பெளத்த சமண சமயங்களை தமிழகத்திலிருந்து அழிக்க பகடைகாயாக பயன்படுத்திய காலமே பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என்று மிகவும் தாமதமாக தமிழறிஞர்கள் தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள்.


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

15 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

வழக்கம் போல கலக்கல் இடுகை.
//
தமிழக தெய்வங்கள் சமஸ்கிரதம் கற்றுக் கொண்டதும், கடம்பன் இடும்பன் போன்ற கிராம தெய்வங்களுக்கு கூட சமஸ்கிரத சொற்கள் கலந்து கவசங்கள் இயற்றியதும், மணிப்ரளவ நடை தோன்றியதும் தனிக்கதை.
//
நேரம் இருந்தால் இதைப் பற்றியும் விரிவாக ஒரு இடுகை எழுதுங்களேன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
வழக்கம் போல கலக்கல் இடுகை.
நேரம் இருந்தால் இதைப் பற்றியும் விரிவாக ஒரு இடுகை எழுதுங்களேன்? //

ஜெகதீசன்,

இதுபற்றி ஏற்கனவே கொஞ்சம் தொட்டு இருக்கிறேன்.
மேலும்...

பாராட்டுக்கு நன்றி !

சிவபாலன் சொன்னது…

மிக அருமையான இடுக்கை..

பல விசயங்களைத் சொல்லியிருக்கிறீர்கள்.

//பாண்டியர்கள் ஆட்சியில் என்பதாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். //

இது உண்மையில் எவ்வள்வு பெரிய கொடுமை..

ஹிட்லர் யூதர்களை கொன்றார் என குதிக்கும் பு.பி.கள் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது வெக்கக்கேடு..

ம்ம்ம்...

ILA (a) இளா சொன்னது…

நல்ல ஆராய்ச்சி கண்ணன். முழுதும் புரியவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு.

சதுக்க பூதம் சொன்னது…

இது ஒரு தவறான தகவல் போல் உள்ளது. உண்மயில் அன்று நடந்தது மத சண்டை. மொழிக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை. அன்று நடக்கும் வாக்கு வாதத்தில் யார் தோற்றாலும், அந்த குழுவினை மொத்தமாக கொல்ல படுவார்கள். அப்போது தோல்வியுற்று ஆயிரக்கணக்கான இந்துக்களும் கொல்ல பட்டுள்ளனர். நீங்கள் கூறியது போல் பெரும்பாலான சமண இலக்கியங்கல் தமிழில் தான் எழுத பட்டுல்லன. உண்மயில் சொல்ல போனால்,அந்த நிகழ்வு நடப்பதுக்கு முன், தமிழில் எந்த பெரிய இந்து மத பக்தி இலக்கியங்கலும் இயற்ற பட வில்லை. என்வே "Anti Tamil sentiment "சமணர்கள் மேல் உண்டாக வாய்ப்பில்லை.எனவே அன்று நடந்தது மத சண்டையே.ஐ இது போன்ற மத சண்டைகலால், மனிதன் தோன்றிய காலத்திலில் இருந்து இன்று வரை கோடி கணக்கான மக்கள் இறந்துள்ளனர்

பெயரில்லா சொன்னது…

//இங்கே சமணர்களும் , பெளத்தர்களும் அன்றைய அந்த நூற்றாண்டுகளில் சாதுக்களாக இருந்தார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. மதங்களை பின்பற்றுவதாலேயே தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் இருக்கும் என்பது ஏற்பதற்கு இல்லை.//

சரியாகச்சொன்னீர்கள். பெளத்தமும் சமணமும் அழிந்ததற்கு அவர்கள் சாதுவாக இல்லாததும் ஒரு காரணம். சின்ன எறும்புக்குக்கூட தீங்கிழைக்கமாட்டோம் என்று சொல்லி மற்ற சமயத்தினரை வாதில் வென்றது கழுவில் ஏற்றும் இரட்டை வேடமும் காரணம். சூரியன் மறைந்ததும் சாப்பிடக்கூடாது. ஏதாவது பூச்சி விழுந்து இறந்து விடலாம் என்று சொல்லி விட்டு கல் கட்டி கடலில் தள்ளி விடும் குணமும் காரணம்.
எந்த மதத்திலும் மத்த மதத்தினருக்கு தீங்கிழைக்காதவர்களே இல்லை.

Deva Udeepta சொன்னது…

பாண்டியர்கள் ஆட்சியில் என்பதாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.


---------------------------
இந்தக்கட்டுக்கதை எப்போதோ நிராகரிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சொன்ன திருக்குறளில் அந்தணர் என்பதை வேறுவிதமாக நிராகரித்ததுபோலத்தான்.

Balaji Chitra Ganesan சொன்னது…

1. தாங்கள் 'நட்சத்திரம்' என்று பதிவுகளை குறிப்பது எதற்காக?

2. லினக்ஸ் பயர்பாக்ஸ் உலாவியில் உங்கள் பதிவையே படிக்க முடியாதபோது (பின்னூட்டங்கள் சரியாகத் தெரிகின்றன) 'நட்சத்திரம்' என்று பார்த்தது சிரிப்பை வரவழைத்தது!

உங்களை வெறுமனே குறை கூறுவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். இந்தக் குறைகளை நீக்கினால் உங்கள் பதிவுகள் மேலும் சிறப்பாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Balaji said...
1. தாங்கள் 'நட்சத்திரம்' என்று பதிவுகளை குறிப்பது எதற்காக?
//

முதல் பதிவை http://govikannan.blogspot.com/2007/08/blog-post_1068.html - இதை படித்திருந்தால் கேட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் தமிழ்மணம் திரட்டி பற்றி அறிந்திருக்கவில்லை. இது தற்புகழ்ச்சிக்காக போடவில்லை. நட்சத்திர வாரத்தில் எழுதிய இடுகை என்ற அடையாளத்திற்காக அவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறேன்

//
2. லினக்ஸ் பயர்பாக்ஸ் உலாவியில் உங்கள் பதிவையே படிக்க முடியாதபோது (பின்னூட்டங்கள் சரியாகத் தெரிகின்றன) 'நட்சத்திரம்' என்று பார்த்தது சிரிப்பை வரவழைத்தது!
//

post comment பகுதிக்கு சென்று Show Original Post ல் கிளிக் செய்தால் முழுபதிவையும் பார்க்க முடியும்.

//உங்களை வெறுமனே குறை கூறுவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். இந்தக் குறைகளை நீக்கினால் உங்கள் பதிவுகள் மேலும் சிறப்பாக இருக்கும்.
//

ஆலோசனைக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Deva Udeepta said...
பாண்டியர்கள் ஆட்சியில் என்பதாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.


---------------------------
இந்தக்கட்டுக்கதை எப்போதோ நிராகரிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சொன்ன திருக்குறளில் அந்தணர் என்பதை வேறுவிதமாக நிராகரித்ததுபோலத்தான்.
//

Deva Udeepta ,
என்பதாயிரம் சமணர்கள் இல்லைங்க, எட்டாயிரம் தானாம். எண்ணிக்கை தவறாக போட்டுவிட்டேன். இதை நிராகரிக்க மாட்டிங்க தானே ?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
சரியாகச்சொன்னீர்கள். பெளத்தமும் சமணமும் அழிந்ததற்கு அவர்கள் சாதுவாக இல்லாததும் ஒரு காரணம். சின்ன எறும்புக்குக்கூட தீங்கிழைக்கமாட்டோம் என்று சொல்லி மற்ற சமயத்தினரை வாதில் வென்றது கழுவில் ஏற்றும் இரட்டை வேடமும் காரணம். சூரியன் மறைந்ததும் சாப்பிடக்கூடாது. ஏதாவது பூச்சி விழுந்து இறந்து விடலாம் என்று சொல்லி விட்டு கல் கட்டி கடலில் தள்ளி விடும் குணமும் காரணம்.
எந்த மதத்திலும் மத்த மதத்தினருக்கு தீங்கிழைக்காதவர்களே இல்லை.
//

சின்ன அம்மிணி,

சரியான கருத்து,
மதங்கள் நிறுவணங்களாக மாறிவிட்டன. அவைகளை நம்பி ஏமாறும் மக்கள் தான் விழித்துக் கொள்ளவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
இது ஒரு தவறான தகவல் போல் உள்ளது. உண்மயில் அன்று நடந்தது மத சண்டை. மொழிக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை. அன்று நடக்கும் வாக்கு வாதத்தில் யார் தோற்றாலும், அந்த குழுவினை மொத்தமாக கொல்ல படுவார்கள். அப்போது தோல்வியுற்று ஆயிரக்கணக்கான இந்துக்களும் கொல்ல பட்டுள்ளனர். நீங்கள் கூறியது போல் பெரும்பாலான சமண இலக்கியங்கல் தமிழில் தான் எழுத பட்டுல்லன. உண்மயில் சொல்ல போனால்,அந்த நிகழ்வு நடப்பதுக்கு முன், தமிழில் எந்த பெரிய இந்து மத பக்தி இலக்கியங்கலும் இயற்ற பட வில்லை. என்வே "Anti Tamil sentiment "சமணர்கள் மேல் உண்டாக வாய்ப்பில்லை.எனவே அன்று நடந்தது மத சண்டையே.ஐ இது போன்ற மத சண்டைகலால், மனிதன் தோன்றிய காலத்திலில் இருந்து இன்று வரை கோடி கணக்கான மக்கள் இறந்துள்ளனர்
//

சதுக்க பூதம் - இந்த பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. சதுக்க பூதம் என்பது காவல் தெய்வம் மற்றும் ருத்தரினின் உருவம் என்ற குறிப்புகளை அண்மையில் தான் படித்தேன்.
:)

நான் படித்த நூலில் மிகத் தெளிவாகவே எழுதி இருந்தார்கள். அதனால் தான் இங்கு 'தமிழுணர்வு' என்றதை குறித்தேன். இவை என் ஆராய்ய்சியும் இல்லை.

தகவல்களுக்கு நன்று சதுக்க பூதம் அவர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
நல்ல ஆராய்ச்சி கண்ணன். முழுதும் புரியவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு.
//

கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சிபா.

கோவி.கண்ணன் சொன்னது…

சிவபாலன் said...
//மிக அருமையான இடுக்கை..

பல விசயங்களைத் சொல்லியிருக்கிறீர்கள்.

இது உண்மையில் எவ்வள்வு பெரிய கொடுமை..

ஹிட்லர் யூதர்களை கொன்றார் என குதிக்கும் பு.பி.கள் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது வெக்கக்கேடு..

ம்ம்ம்...
//

சிபா,
பிள்ளையார் சிலைகளை பெரியார் கொள்கையாளர்கள் உடைக்கிறார்கள் இந்துக்களை இழிவு படுத்துகிறார்கள் என்று இன்று சொல்லும் மதவாதிகளின் மூதாதையர்கள் தான் அன்று புத்தர் கோவில்களை தகர்த்து பிள்ளையாரை அங்கு வைத்தார்கள். வழிபாட்டுத் தலங்களை உடைப்பவர்களில் நாத்திகர்களின் பங்கு சொற்பமே.

priyamudanprabu சொன்னது…

இப்பத்தான் படிச்சேன்

அருமை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்