பின்பற்றுபவர்கள்

6 ஆகஸ்ட், 2007

சேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா ?

சேலம்: தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்ததால், சேலம் மாவட்டம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டனர்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளதாகும்.

ஆனால் கோவிலுக்குள்
தலித் சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சமீப காலமாக அவர்களுக்கும் வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது.

*****************

சாதி அமைப்பு முறையால் விளையும் கேடுகளை இந்த சம்பவம் காட்டுகிறது. எந்த சாதிக்காரனாக இருந்தாலும் தான் தாழ்ந்து இருக்கிறோம் என்பதை மறைக்க தனது சாதிக்கு கீழாக ஒரு சாதியை வைத்திருப்பது 20 ஆம் நூற்றாண்டுகளிலும் நடக்கும் கொடுமை.

மாகபாரதத்தில் பேசப்படும் முக்கிய பிரிவு ஒன்று சத்திரியன், சத்திரிய தர்மம். இது பற்றி மிகவிரிவாகவே மகாபராத கதையிலும், பகவத் கீதை கர்மயோகத்திலும் அதிகமாகவே பேசப்படுகிறது. வருண கோட்பாடுகளில் சத்திரியன் என்பவன் வீரத்துக்கு இலக்கணமாக காட்டப்படுகிறான். அரசனாக இருப்பதற்கு அவனே தகுதி படைத்தவனாம். சத்திரியர்களில் எந்த சாதி வருகிறது என்று பார்த்தால். அது வன்னிய இனம் என்பதை வன்னிய குல ஷத்திரியர், படைநடத்தும் ஆட்சியர் அதாவது படையாட்சி என்ற சாதிப்பிரிவே சத்திரியர்களாம்.

இவர்கள் தான் மாகபாரதத்தில் குறிப்பிட்டுள்ள சத்திரியர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த சாதியினர் மிகுந்து இருக்கும் ஊர்களில் திரவுபதி அம்மன் கோவில்கள் இருக்கிறது. போருக்கு முன் அரவாணை பலி இடுதல், அவனுக்காக அரவாணிகள் தாலி அறுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் கூவாகம் வன்னிய சாதி பிரிவினர் நிறைந்துள்ள இடத்தில் அமைத்திருக்கிறது.

மகாபாரதம் என்பதே ஒரு கற்பனை கதை. அந்த கற்பனை கதையில் ஒரு சாதியினர் எப்படி உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று சரியாக வரலாற்று வழியாக தெரியவில்லை. ஆனாலும் அவற்றை மெய்பிக்கும் முயற்சியாக எதோ ஒரு காலத்தில் வன்னிய கிராமங்களில் திரவுபதி அம்மன் கோவில்கள் ஏற்பட்டு இருக்கும் என கருதுகிறேன்.

எது எப்படியோ...கோவில்களில் வணங்கும் உரிமையை கேட்டு வரும் தலித்துக்களை வன்னியர்கள் தடுப்பது வருணத்தை இவர்கள் தாங்கிப் பிடிப்பதாகவே நினைக்க முடிகிறது. தமிழர், தமிழ், தமிழ் தேசியம் என்று பேசும் பாமகவினர் தலித்துக்களை தமிழர்களாக பார்க்கவில்லை போலும்.

ஒரே மேடையிலும், ஒரே பந்தியிலும் சாப்பிடுகிறோம் என்று மருத்துவர் இராமதாஸ் ஐயா மேடையில் இடிமுழக்கம் செய்வதையும், மேற்கண்ட கோவில் கதவடைப்பு நிகழ்வையும் பார்த்தால், இராமதாஸ் அவர்களின் மேடை பேச்சு பொருளற்றதாகவே தெரிகிறது.

தலித்துக்களை அரவணைக்காத தமிழ் தேசியம் யாருக்கு வேண்டும் ?

இராமதாஸ் ஐயாவும், பாமகவும் இந்த பிரச்சனையில் தலையிட்டு தமிழர் ஒற்றுமைக்கு வழிவகுப்பார்களா ?

வன்னியர் வாழும் பகுதிகளில் தலித்துக்களின் ஓட்டுக்களுக்காக ஓட்டுப் பெட்டி மட்டும் திறந்திருந்தால் போதாது. தலித் மக்களின் நுழைவுக்கு திரவுபதி அம்மன் கோவில் கதவுகளும் திறக்க வேண்டும்.


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

21 கருத்துகள்:

கருப்பு சொன்னது…

//இராமதாஸ் ஐயாவும், பாமகவும் இந்த பிரச்சனையில் தலையிட்டு தமிழர் ஒற்றுமைக்கு வழிவகுப்பார்களா ?
//

நல்ல பதிவு..

அவனுங்களுக்கு மரம் வெட்றதுக்கே நேரம் போதாது கோவி.

நந்தா சொன்னது…

இது கேவலத்திலும் கேவலம்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் இந்த வன்னியர்கள் என்றுச் சொல்லப்படுபவர்களே அவர்களை விட உயர் சாதியினரால் அடக்கி வைக்கப் பட்டிருந்தவர்கள்தான்.

அதனால்தான் ஒரு இனமே அடிமைப் பட்டுக் கிடக்கிறது என்று திரும்பத் திரும்ப முழங்கி அவர்க்ளது வாக்குகளை மட்டுமே பெரிதாய் எண்ணியே தமிழகத்தில் ஒரு சில கட்சிகள் முக்கியமாக பா.ம.க இருக்கிறது.

ஆனால் இன்று கொஞ்சமேனும் மேலே நிலை வந்தவுடன் தன்க்கு கீழுள்ளவர்களை ஆள வேண்டும் என்ற மனோபாவம். என்ன மட்டமான சிந்தனைங்க இது?

எளியோனை வலியோன் அடக்கி ஆளுதல்.... இதற்கு யாரும் விதி விலக்கல்ல என்று சொல்கிறார்களா???

தங்களை அவமதிக்கும் போது வலித்ததாக சொன்ன இவர்களிற்கு இன்னொரு சக மனிதரின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியாவிடின்....... நல்லா வருது வாயில.

அய்யா சாமி ஒட்டு மொத்த சமூகத்தையே சொல்லலைப்பா... அவர்களில் எவர் இந்த மானம் கெட்ட செயலைச் செய்கிறார்களோ அவர்களை மட்டுமே சொல்கிறேன். அதனால் நீ யார்ரா எங்க ஆளுங்களைச் சொல்லாம்னு யாரும் வராதீர்கள்.

இந்த சம்பவம் உண்மை என்று எனக்கும் தெரியும். நானும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். அதான் கொஞ்சம் கோபம் அதிகமாக வருகிறது.

http://blog.nandhaonline.com

Unknown சொன்னது…

ithukkum paapaanumkkum sampantham illaiyaa? appo nammada thiravida kunjukal ithai patti onnum kathaikka maadangal....

bala சொன்னது…

மரம்வெட்டி மருத்துவர் அய்யா,மஞ்சதுண்டுக்கு எதிராக சவுண்ட் உடறதால அவர் சாதிவெறி பிடித்து அலையும் வன்னியத் தலைவர் என்ற திடுக்கிடும் உண்மையை குஞ்சுகள் மக்களுக்குத் தெரியப்படுத்துவாங்க.திரும்ப, கூட்டணி ஸ்ட்ராங் ஆயித்துன்னாக்க நம்ம ஜிகே அய்யா போன்ற குஞ்சுகள் சைலன்ட் ஆயிடுவாங்க.குஞ்சுங்க அவ்வளவு நேர்மையானவங்க.திராவிட சாதி வெறியில மூழ்கியிருப்பவங்க.

பாலா

TBCD சொன்னது…

சாதியயைக் கொன்டு இழிவு படுத்துபவர் யாரக இருப்பினும் கண்டிக்கத் தக்கவரே....

தமிழ் போர்வை சுற்றி வரும் மருத்துவ மாலடிமை..என்ன சொல்லுகிறார் என்று நான் காத்து இருக்கின்றேன்...பெரியார் வழி செல்லுவதாக் அறிவிக்கும், தமிழக முதல்வர் இதற்கு ஒரு முடிவு கட்ட வேன்டும்..இல்லை என்றால்., நான் பெரியார் சீடன் என்று அறிவிப்பதை நிறுத்த வேன்டும்..

பத்திரிக்கையாளர்கள் பதிவுலகில் வருவதை போல், அரசியல் தலைவர்களும், பதிவில் உரையாட வந்தால்... நாம் இன்னும் வலுவாக நம் கருத்தை..சொல்ல இயலும்..

மாசிலா சொன்னது…

"எல்லாரையும் படைச்ச சாமியே, என்னை மட்டும் காப்பாத்து"ன்னு எம்.ஆர்.ராதா ஒரு வசனம் பேசுவாரே அதுபோல் அம்மன் இவர்கள் வன்னியர்களை மட்டும் காப்பாத்தவேண்டும் என கோயிலையும் சாமியையும் குத்தகை எடுத்துக்கொண்டனர் போலும்.

பாப்பான் வெறுமெனே கோடிட்டுதான் காட்டினான். ஏனைய கற்பனை உயர் சாதிக்கார கூட்டங்கள் அதில் ரோட்டையும் போட்டு பாலத்தையும் கட்டி கோட்டையே கட்டி சுற்றி தடுப்பு சுவர்களையும் கட்டிவிட்டார்கள். ஆயுத்த்தை வழங்கியவன் மட்டும்தான் பார்ப்பான், அதை வன்மையுடன் நலிந்த மக்களை ஒடுக்கி வதைத்து சாகடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இந்த கற்பனை சாதிக்கார கூட்டங்கள்.

இந்த வன்னியர்களே ஒரு வித வந்தேறிகள்தான் என்று ஏதோ ஒரு பதிவில் படித்த ஞாபகம். நேரம் கிடைக்கும்போது தேடிக் கண்டுபிடிக்கிறேன்.

கோயில் ஒரு பொதுச்சொத்து என்பது இந்த மக்களுக்கு தெரியவில்லையா?

பொது சொத்தை இப்படி தான்தோன்றித் தனமாக பூட்டை போட்டு பூட்டிவிட யார் இந்த வருவாய் துறை அதிகாரிகளுக்கு உரிமை கொடுத்தது?

வேண்டுமென்றால், இவர்கள் வீட்டு சொந்த தனிப்பட்ட மண்ணில் கோயில் கட்டி சுத்தி வேலியையும் கட்டி கும்பிட்டுக்கொள்ளட்டும். யார் தடுக்கப்போகிறார்கள்?

காலம் போகிற வேகத்தில், இந்த அவசர உலகத்தில், அனைத்தும் உலக மயமாக்கலில், ஆடம்பர, உல்லாச, பொருள் மய போதை உலகத்தில் விரைவில் இது வீண் வீராப்பு சாதி திமிர்காரர்களெல்லாம் மறையப்போவது தின்னமே.

ஏமாந்தவனை கண்டவனை ஏறி மிதிப்பதில் இவர்கள் போன்றவர்களுக்கு ஒரு தேசிய விளையாட்டு.

காலம் போகிற வேகத்தில் இன்னும் இதுபோன்ற பத்தாம்பசலி விடயங்களில் மூழ்கி கிடப்பது அவர்களது அறிவின்மையையே காட்டுகிறது.

சாதிக்கார கட்சி சாதி பேசாமல் வேறென்ன பேசுமாம்?

ஒருவனை தாழ்த்திதான் மற்றவன் உயரமுடியும் என்கிற அற்புத அறிவுள்ள த்ததுவத்தை கடைபிடிக்கிற ராமகிலாஸ் கூட்டங்களிமன் குணம் மாற இன்னும் நேரம் இருக்கிறது.

சாதி வெறி மற்றும் ஆதிக்க வெறி பிடித்த இந்த வன்னிய கூட்டத்தினருக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி கோவி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

// விடாதுகருப்பு said...
நல்ல பதிவு..

அவனுங்களுக்கு மரம் வெட்றதுக்கே நேரம் போதாது கோவி. //

நண்பர் கருப்பு அவர்களே, மரம் வெட்டிய போராட்டத்திற்கு காரணம் வேறு அது இடஒதுக்கீடு கேட்டு போராடியது. மரம் வெட்டியதை எவரும் ஞாயப்படுத்த முடியாது.
அதே சமயத்தில் பசுமை தாயகம் என்ற திட்டத்தில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இழப்பை சீர்செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அது வேறு தளத்து நிகழ்வுகள்.

நான் இங்கு சொல்வது தீண்டாமை கொடுகை குறித்த நிகழ்வு.

பின்னூட்டத்திற்கு நன்றி கருப்பு அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தா said... இந்த சம்பவம் உண்மை என்று எனக்கும் தெரியும். நானும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். அதான் கொஞ்சம் கோபம் அதிகமாக வருகிறது.

http://blog.nandhaonline.com //

நந்தா நேரம் கிடைக்கும் போது இதுபற்றி எழுதி வெளிச்சம் போடுங்கள் !

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
மரம்வெட்டி மருத்துவர் அய்யா,மஞ்சதுண்டுக்கு எதிராக சவுண்ட் உடறதால அவர் சாதிவெறி பிடித்து அலையும் வன்னியத் தலைவர் என்ற திடுக்கிடும் உண்மையை குஞ்சுகள் மக்களுக்குத் தெரியப்படுத்துவாங்க.திரும்ப, கூட்டணி ஸ்ட்ராங் ஆயித்துன்னாக்க நம்ம ஜிகே அய்யா போன்ற குஞ்சுகள் சைலன்ட் ஆயிடுவாங்க.குஞ்சுங்க அவ்வளவு நேர்மையானவங்க.திராவிட சாதி வெறியில மூழ்கியிருப்பவங்க.

பாலா
//

வா'ஐயா' காணும் என்று தேடுவதற்குள் வந்துவிட்டீர். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டதற்கு பாராட்டுக்கள்.

ஒரு இடுகைக்கு ஒரு பின்னூட்டம் தான் அனுமதி ! 'ரேசன்'

:)

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

இந்த பிரச்சினை ஏதோ சேலத்தில் மட்டும் இருப்பது போலவும்... வன்னியர்கள் மட்டுமே இவ்வாறு வன்மம் கொண்டு செயல்படுவது போலவும் சித்தரிப்பது நல்லதல்ல!. அப்படி பார்த்தால் கண்டதேவி கோயில் பிரச்சினையில் எந்த வன்னியர்கள் வந்து பிரச்சினை செய்தார்கள். தஞ்சை மாவட்டத்தில் பல ஊருகளில் தப்படிக்க 25 பைசா மட்டுமே தருவோம். அது கடவுள் காணிக்கை என்று பிரச்சினை செய்பவர்கள் எல்லாம் வன்னியரா?.

இந்த பிரச்சினையில் பா.ம.க கட்சியின் அமைப்பாளர்களோ அல்லது நிர்வாகிகளோ அல்லது உறுப்பினர்களோ ஈடுபட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இராமதாஸ் அவர்கள் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும். ஓட்டுமொத்தமாக வன்னிய சாதி வெறிக்கு இராமதாஸ் எப்படி பொறுப்பேற்க முடியும்.

இந்தபிரச்சினையில் ஈடுபடும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் தெரிந்தால் மட்டுமே விவாதிக்க முடியும்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் மண்டகபடி பிரச்சினையில் பார்த்தீர்களென்றால்... தலித்துகளுக்கு எதிராக பிரச்சினையை எடுத்த VNS என்பவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மிகுந்த நெருக்கமுடன் இருந்த அகமுடைய சமூகத்தை சேர்ந்தவர். அப்படி பார்க்கும்போது பிரச்சினையை தூண்டியது ஆர்.எஸ்.எஸ் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

சேலம் பிரச்சினையில் பின்னணியில் இருக்கிற அமைப்பும் ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து முன்னணி அல்லது இந்து மக்கள் கட்சியாக கூட இருக்கலாம். அதனால் அந்தபகுதியை சேர்ந்த யாராவது பிரச்சினையில் ஈடுபடுகிற தனிநபரின் பின்னணியை சொன்னால் மட்டுமே உண்மை தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said... இந்த பிரச்சினை ஏதோ சேலத்தில் மட்டும் இருப்பது போலவும்... வன்னியர்கள் மட்டுமே இவ்வாறு வன்மம் கொண்டு செயல்படுவது போலவும் சித்தரிப்பது நல்லதல்ல!. அப்படி பார்த்தால் கண்டதேவி கோயில் பிரச்சினையில் எந்த வன்னியர்கள் வந்து பிரச்சினை செய்தார்கள். தஞ்சை மாவட்டத்தில் பல ஊருகளில் தப்படிக்க 25 பைசா மட்டுமே தருவோம். அது கடவுள் காணிக்கை என்று பிரச்சினை செய்பவர்கள் எல்லாம் வன்னியரா?.
//

பாரி ஏன் அவசரம்.?

கண்டதேவி பிரச்சனை நடந்து முடிந்துவிட்டது. அதை பலரும் பேசியாகிவிட்டது. வெட்டுபட்டு இரத்தம் வழியும் விரலுக்குதான் சுண்ணாம்பு தடவவேண்டும். வன்னியர்கள் அனைவரும் செயல்பாட்டுக்கு காரணம் என்று நான் எங்கே சொன்னேன். குறிப்பிட்ட கிரமத்தில் நடைபெற்ற நிகழ்வு அதில் அடிபடும் பெயர்கள் சாதி ரீதியானது. இதை எப்படி எழுத முடியும் ? வன்னியர்களின் ஒரு பிரிவினர் என்றா ? புரியவில்லையே. அப்படி எழுதினாலும் வன்னியர்களில் உட்பிரிவு (சாதி பிரிவு) என்று பொருள் வராதா ? :)

நிகழ்வு அல்லது நடக்கின்ற சம்பவங்களைப் குறித்து பேசுகையில் நடந்து முடிந்த ஒன்றை தொடர்பு படுத்துவது ஒரு வித ஞாயப்படுத்தால் அதை செய்வதால் பிரச்சனைகள் தீராது. எல்லோரும் வெட்டிக் கொண்டுதான் சாக முடியும்.

//இந்த பிரச்சினையில் பா.ம.க கட்சியின் அமைப்பாளர்களோ அல்லது நிர்வாகிகளோ அல்லது உறுப்பினர்களோ ஈடுபட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இராமதாஸ் அவர்கள் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும். ஓட்டுமொத்தமாக வன்னிய சாதி வெறிக்கு இராமதாஸ் எப்படி பொறுப்பேற்க முடியும்.//

பாமகவில் 95% விழுக்காட்டினர் வன்னியர் என்பது தங்களுக்கு தெரியாது போலும். அந்த கட்சியின் முதன்மையாளர்களாக(பிரதிநிதிகளா) இருப்பவர்கள் தலையிட்டு தீர்க்க முடியாத பிணக்குகளை (பிரச்சனைகளை) வேறு எவர் வந்து தீர்க்க முடியும் என்று கருதுகிறீர்கள். இந்த பிணக்கை தீர்க்க இராமதாஸ் தவிர தீர்பதற்கு தகுதியானவர் என்று யாரை கருதுகிறீர்கள். சாதி பிணக்குகளில் அரசு தலையிட்டு ஒரு முறை கண்ட தேவி சம்பவத்தில் காவலர்கள் விரட்டிய போது ஆற்றில் இறங்கி ஓடி எண்ணற்றோர் உயிரிழந்தது உங்களுக்கு தெரியுமா ?

//இந்தபிரச்சினையில் ஈடுபடும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் தெரிந்தால் மட்டுமே விவாதிக்க முடியும்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் மண்டகபடி பிரச்சினையில் பார்த்தீர்களென்றால்... தலித்துகளுக்கு எதிராக பிரச்சினையை எடுத்த VNS என்பவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மிகுந்த நெருக்கமுடன் இருந்த அகமுடைய சமூகத்தை சேர்ந்தவர். அப்படி பார்க்கும்போது பிரச்சினையை தூண்டியது ஆர்.எஸ்.எஸ் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. //

ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கொலை செய்தால் அது குற்றமில்லை, காவல் துறை விசாரணையே தேவையற்றதா உங்கள் வாதம் ? இங்கு ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் திரவுபதி அம்மன் கோவில் இருந்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த வன்னிய நண்பர்களும் சம்பவம் உண்மை தீண்டாமை இருக்கிறது என்கிறார்கள். இதற்கு மேல் தனிமனித செயலா என்று எங்கே சென்று ஆதாரம் தேடுவது ?

//சேலம் பிரச்சினையில் பின்னணியில் இருக்கிற அமைப்பும் ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து முன்னணி அல்லது இந்து மக்கள் கட்சியாக கூட இருக்கலாம். அதனால் அந்தபகுதியை சேர்ந்த யாராவது பிரச்சினையில் ஈடுபடுகிற தனிநபரின் பின்னணியை சொன்னால் மட்டுமே உண்மை தெரியும்.
//

ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் விவகாரம் ஏற்படுத்துவது பெரும்பாலும் இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் மட்டும் தான். விளக்கெரியாத கோவில்களையோ, குறிப்பாக திரவுபதி அம்மன் கோவில்களையோ, வருமானம் இல்லாதகோவில்களையோ அவர்கள் திரும்பி பார்பது இல்லை, மதமோதல்களில் தான் அவர்கள் தலையீடு கோவில் குறித்த பிரச்சனைகளில் தொடர்பாக இருக்கும். சாதிப்பிரச்சனை அதுவும் குறிப்பாக இந்த பிரச்சனையில் இல்லை என்றே கருதுகிறேன்.

bala சொன்னது…

ஜிகே அய்யா,
எனக்கொரு சந்தேகம்;நம்ம பாரி.அரசு சொல்றாப்போல நம்ம மரம்வெட்டி அய்யா மேல சேறு வாறிப் பூச மஞ்ச துண்டு கும்பலே இதை மூட்டிவிட்டு வேடிக்கைப் பாக்குதா?

பாலா

PS
அய்யோ, இந்த பின்னூட்டத்தோட கதி என்ன தெரியலயே?still born or உயிரோட பிறக்குமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,
எனக்கொரு சந்தேகம்;நம்ம பாரி.அரசு சொல்றாப்போல நம்ம மரம்வெட்டி அய்யா மேல சேறு வாறிப் பூச மஞ்ச துண்டு கும்பலே இதை மூட்டிவிட்டு வேடிக்கைப் பாக்குதா?

பாலா

PS
அய்யோ, இந்த பின்னூட்டத்தோட கதி என்ன தெரியலயே?still born or உயிரோட பிறக்குமா?
//

பாலா உங்க அக்கரையும் ஐய(ர்?)ப் பாட்டையும் பார்த்தால் எனக்கு பல மொழிகள் ஞாபகம் வருது ஒரே ஒரு பழமொழி சொல்கிறேன்

"ஆடுகள் அடித்துக் கொண்டால் குள்ள நரிகளுக்கு கொண்டாட்டமாம் !!!"

:)

குழலி / Kuzhali சொன்னது…

வன்னிய சாதி வெறியர்களின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.... நேரம் கிடைத்தால் விரிவாக மிச்சத்தையும் பேசலாம்....

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// மாசிலா said... காலம் போகிற வேகத்தில் இன்னும் இதுபோன்ற பத்தாம்பசலி விடயங்களில் மூழ்கி கிடப்பது அவர்களது அறிவின்மையையே காட்டுகிறது. //

மாசிலா,

10 ஆண்டுக்கும் மேலாக அரசியல் நெளிவு சுழிவுகளை அறிந்த மருத்துவர் இராமதாஸ் ஏன் இது போன்ற பிணக்குகளில் ஏன் தலையிட்டு அமைதி ஏற்படுத்தவில்லை ? அல்லது பிணக்குகள் இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா ? என்பதே என் கேள்வி.

கோவி.கண்ணன் சொன்னது…

// குழலி / Kuzhali said...
வன்னிய சாதி வெறியர்களின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.... நேரம் கிடைத்தால் விரிவாக மிச்சத்தையும் பேசலாம்....

நன்றி
//

குழலி,

கண்டனம் செய்ததற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது தாரளமாக பேசுங்கள். உங்கள் பேச்சில் ஞாயப்படுத்துதல் இருக்காது என்றே நம்புகிறேன்.

thiru சொன்னது…

திருமாவளவன் அவர்களின் போராட்ட அறிவிப்பின் பின்னர் கோவில்கள் பூட்ட ஒரு அரசமைப்பு. சகமனிதர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத 'தீட்டு' பார்க்கும் கூட்டத்திற்கு என்ன தண்டனை? வைக்கம் கோவில் நுளைவு போராட்டம் நடந்து சுமார் 75 ஆண்டுகளை தொடும் வேளையிலும் இந்த கொடுமையை நீடிப்பது தான் சுதந்திரம்? அரசு?

இந்த இலட்சணத்தில் 'தீண்டாமை' பற்றி பள்ளியில் மட்டும் பாடம். தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக என்ன செய்கிறது? எதெற்கெல்லாமோ போராட்டம் அறிவிக்கும் டாக்டர்.இராமதாஸ் அவர்கள் திருமாவளவனோடு சேர்ந்து கோவில் நுளைவு களம் காணலாம்.

சிவபாலன் சொன்னது…

அரசு உடனடியாக தலித் இனத்தவருக்கு சாதகமாக செயல்படவேண்டும்!

பிறைநதிபுரத்தான் சொன்னது…

அய்யா இராமதாஸ் - தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை - தி.மு.க கூட்டனியில் இடம் கிடைக்க பாடுபட்டதைப்போன்று - இந்தப்பிரச்சினையில் தலையிட்டு தான் வாய்சொல்லில் மட்டும் வீரரல்ல என்று நிரூபிக்கவேண்டும்.

நிரூபிப்பார் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது.

Unknown சொன்னது…

இத்தகைய தீர்க்க தரிசனங்களால் தான் பெரியார், கடவுள் மறுப்பை தன் முக்கிய கொள்கையாக முன்வைத்தார்.

கடவுள் குப்பைகளை கட்டிக்காப்பவர்களே தலித்மக்கள் தான்.திராவிட கட்சிகளின் புண்ணியத்தில் பகுத்தறிவு டாஸ்மாக்கில் தண்ணியடிக்க, பெரியாரின் சிலைகள் மீது காக்கைகளின் எச்சம்.சீரிய தலைமையின்றி வாழ்வாதாரங்களுக்கு போராடும் அம்மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி ஓட்டு எந்திரங்களாக மாற்றி வைத்திருப்பதில் தான் திருமாக்களின் திறமை புலப்படுகிறது.

மானமும் சுயமும் மரியாதையும் மறந்து அடிமைப்பட்டம் வேண்டி தலித்துகள் அடம்பிடிக்கும் வரை, வன்னியன் முதல் பன்னியன் வரை அனைவரும் தலித்துகளை அடிமைசாதியாகத்தான் பாவிப்பார்கள்.

மதம் ஒழியாமல் சாதீய அடக்குமுறைகளை மட்டும் அலசி ஒரு பயனுமில்லை. இது ஒரு வரலாற்றுச் சுமை, அதை மீறி வெளிக்கிளம்புவதற்கான சூழல் பெரியார் காலகட்டத்தில் இருந்தது.
சாமியும், கோயிலும், மதமும் சாதியென்ற *Conditions applied என்ற பட்டையுடன் தான் வரும்.

இதை தலித்துகள் புரிந்து, இந்த புரையோடிய சடங்குகளை புறக்கணிக்கும் போது சமுதாயச்சமநிலை மிகவும் சாத்தியமே. அல்லது போலச்செய்தல், பாவித்தலில் கட்டுண்டு கிடக்கும் சமுதாயத்தின் சீரழிவை முன்னெடுத்து செல்லும் பல்வேறு சாதீய வக்கிரங்களின் உதைப்பந்தாக அலைகழிய தலித்துகள் தயாரக வேண்டும், திருமாக்கள் உட்பட.

மாசிலா சொன்னது…

இசை : //மானமும் சுயமும் மரியாதையும் மறந்து அடிமைப்பட்டம் வேண்டி தலித்துகள் அடம்பிடிக்கும் வரை,//

இப்படி என்றால், தலித்துக்கள் விருப்பப்பட்டு வேண்டுமென்றே அடிமை வாழ்க்கை வாழ்வதாக பொருளா இசை ஐயா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்