பின்பற்றுபவர்கள்

20 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !

இந்திய மண் முழுவதும் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதிலிருந்து விடுபடுவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவதற்கு பொதுவான விடயம் ஒன்று தேவைப்பட்டதை, விடுதலைப் போராட்டத்தில் போராடிய மகாத்மா காந்தி உட்பட அனைத்துத் தலைவர்களும் உணர்ந்தனர். இந்தியர்களை குறிப்பாக பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் வைத்திருக்கும் இந்துக்களை ஒன்றுபடுத்துவதென்றால் பொதுவாக எதாவது ஒரு அம்சம் இருக்க வேண்டும். அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், மேலும் அதை முன்னிலைப்படுத்திப் போராடினால் அது ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். இந்த தேடலில் திடீர் ஞான உதயமாக காட்சி கொடுத்ததுதான் பகவத் கீதை.

19 ஆம் நூற்றாண்டுக்கு முன் பகவத் கீதை என்பது ஒரு உபநிடத நூல் என்ற அளவில் மிகச் சிலரால் பொத்தி பொத்தி உயர்வாக பேசப்பட்டு வந்திருந்தது. நாடுமுழுவதும் பேசப்படாத, மொழி பெயர்க்கப்படாத நூலாகவே அது இருந்தது. அதைத்தாண்டி பகவத் கீதையின் தேவை வாழ்வியலுக்காகவோ வேறு எதற்காகவோ பயனளிக்கக் கூடியது என்று ஆராய்ச்சி எல்லாம் எவரும் செய்யவில்லை. மேலும் பகவத் கீதை அன்றாடத் தேவைக்கு மிக அவசியம் என்ற காரணம் சமூக காரணங்கள் இருக்கவில்லை.

பகவத்கீதையின் ஒரு சிறப்பு அம்சம், வேதத்தை நம்பும் வைதீகத்தின் கருத்துக்களை அது உள்வாங்கி இருக்கிறது என்பதால் வைதீக பிராமணர்களாலும் அது சிறப்பிக்கப்பட்டது. அதே போன்று கிருஷ்ணர் அருளியது என்ற தோற்றம் இருப்பதால் வைணவர்களாலும் போற்றப்பட்ட பொதுவான நூலாக அது இருந்தது. இந்த இரு அம்சங்களை முதலில் கருத்தில் கொண்டுவந்த விடுதலைப் போராட்ட இந்து அமைப்பினர், அதை முன்னிலைப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர். இது மட்டும் போதுமா ? இது வெறும் வைதீக மரபினரை மட்டுமே திருப்தி படுத்தும் என்பதால், மேலும் அதற்கு புனித நூல் அங்கீகாரம் கொடுத்தால் தான் அவற்றை மற்ற இந்து சமயத்தை உள்ளடக்கிய பிற சமயத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதினர்.

ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட நீதிமன்றத்தில் சத்திய உறுதி ( பிரமாணம்) ஏற்பது என்பது வழக்கு நடக்கும் போது முதலில் செய்யப்படும் ஒரு முறை (சம்பிரதாயம்). இதன் மூலம் தாம் கடவுளின் பெயரால் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆரம்பித்து அதன் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையிலும் நீதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே புனித நூல் என்ற அந்தஸ்தை கிறித்துவ பைபிள் பெற்றிருப்பதால் கிறிஸ்துவர்களுக்கும், குரானை புனித நூலாக கொண்டுள்ள இஸ்லாமியர்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்துக்கள் என்று வரும் போது ஒரு புனித நூல் என்பது இருந்து அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அவை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்ற நிலை அன்றைய நீதீமன்றங்களில் இந்து வழக்குகளுக்கு அவசியமானதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் பகவத்கீதையை புனித நூல் என்று பொதுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்து தலைவர்கள் முடிவு செய்து பகவத்கீதையை முன்னிலைப்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உரை எழுத தலைப்பட்டனர். காந்திஜி, இராஜாகோபால் ஆச்சாரியார், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் நம் பாரதியாரும் வந்தே மாதிரத்தை மொழி பெயர்த்தவுடன் கீதையை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்து சமயத்தில் சைவம் - வைணவம் என்று பெரிய எதிர்ப்பு எதுவும் வராததால் பகவத் கீதை புனித நூலின் சிறப்புத் தகுதியை பெற்றது.

பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும், ஏனென்றால் 'நான்கு வர்ணங்கள் என்னிடமிருந்தே தோன்றி யதாகவும், யார் யார் ? எங்கிருந்து பிறந்தார்கள்' என்றும் கண்ணன் அதில் ஆணித்தரமாக சொல்கிறான். எனவே அவற்றைத் தவிர்த்து கர்மயோகத்தில் காட்டியுள்ள 'செயல்கள்' குறித்து மட்டுமே விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்ற வாக்கியம் முன்னிலைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது என்பது கடமை என்றும் போராடுபவர்களே சத்திரியர்கள், 'வெற்றித்தோல்வி பற்றி எண்ணம் எதுவுமின்றி போராட்டம் ஒன்றையே குறிக்கோளாக் கொள்ள வேண்டும்' என்று இந்து போராட்ட வீரர்களுக்கு அது உபதேசமாக்கப்பட்டது. ஏனென்றால் அப்போதும், எப்போதும் இருப்பது போலவே இஸ்லாமிய - இந்து சண்டைகள், கிறித்துவ - இந்து சண்டைகள் இருந்தன. அவர்கள் புனிதப்போர் என்று புனித நூல்களின் மேற்கோளைக் காட்டிப் போரிடும் போது அதே செயல் (உத்)வேகம் இந்து மதத்து இளைஞர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பகவத்கீதை புனித நூலாகவும் கர்மயோக கோட்பாடுகள் போரைப்பற்றிய தெளிவு கொடுப்பதற்கும் பயன்பட்டது.

**********************

இவையெல்லாம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கீதைப்பற்றி மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள். கீதைவழி - எதிர்பார்தது போலவே இந்து இளைஞர்களின் எழுச்சியாலும் விடுதலை போராட்டம் வெற்றி பெற அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதன் பிறகு அது இந்து வெறியாகவும் மாறியது, முடிவில் ? மகாத்மாவே கொலை செய்யப்பட்டார். இன்றைய தேவை என்று பகவத் கீதையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குறிப்பாக இந்துக்களின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விடயமும் இல்லை. தமிழக இந்துக்களுக்கு கீதையோ, வேறு வடமொழி நூல்களோ புதிதாக எதுவும் சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை எனலாம்.

சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றுரைக்கும் திருமூலச் சித்தரின் திருமந்திரத்தை விடவும், சைவர்கள் மூவர் அருளிய தேவரம், திருவாசகத்தைவிடவும் வைணவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை விடவும் பக்தியை வளர்க்க கீதை எந்த விதத்திலும் பயனளிப்பதாக நான் கருதவில்லை.

பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும், பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான். இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால் அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான். புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால் மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன். எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது. சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனா ? இழிபிறவியா ? மனுவில் உள்ள குறிப்புப் படி அப்படித்தான் பொருளாம் !!!

எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?
பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இன்று உன்னுடையதாக இருப்பது (அதாவது நீ மீட்டுக் கொண்டது ?) நாளை வேறு ஒருவருடையது ஆகும் ! :))
அதன்பிறகு பெறுவதற்கென்று எதாவது கிடைத்தால் தானே இழப்பைப் பற்றி பேச முடியும் ? :(
இன்று மாலை இந்திய நேரப்படி, அடுத்த இடுகை ஒரு கலக்கல் சிறுகதை !!!

44 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

இது சூடு.......

பெயரில்லா சொன்னது…

//'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றுரைக்கும் திருமூலச் சித்தரின் திருமந்திரத்தை விடவும், சைவர்கள் மூவர் அருளிய தேவரம், திருவாசகத்தைவிடவும் வைணவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை விடவும் பக்தியை வளர்க்க கீதை எந்த விதத்திலும் பயனளிப்பதாக நான் கருதவில்லை.//

ரொம்ப சரி. வடமொழி ஸ்லோகங்கள் சொல்லுவது போல் உடல் நலம், பல வகைச்செல்வம் எல்லாத்துக்கும் நம்ம தமிழ்த்திருமுறைகளும் வழிகாட்டுது.

சிவபாலன் சொன்னது…

Excellent Post!

Hats Off!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

கோவி,
அற்புதமான அலசல்... வாழ்த்துகள்,

//சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன//

சிறிய வருத்தம் அர்த்த சாஸ்திரம் ஓரு பிழைப்புவாதம் என்கிற கருத்தியலில் எழுதப்பட்ட நூல்... அதை மனிதன் சமூக வாழ்வியலில் இயங்குவதை பற்றி பேசுகிற திருக்குறளுடன் ஓப்பிடுவதே தவறு.

மனிதன் விலங்கு போல பிழைப்பதற்க்காக போராடுவதையும், சக உயிரியை அழித்து வாழ்வதையும் ஆதரிக்கிறீர்களா...?

ஜெகதீசன் சொன்னது…

gk,
நல்ல அலசல். பதிவுக்கு நன்றி..

வெற்றி சொன்னது…

/* விடுதலைப் போராட்டத்தில் போராடிய மகாத்மா காந்தி உட்பட அனைத்துத் தலைவர்களும் உணர்ந்தனர். இந்தியர்களை குறிப்பாக பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் வைத்திருக்கும் இந்துக்களை ஒன்றுபடுத்துவதென்றால் பொதுவாக எதாவது ஒரு அம்சம் இருக்க வேண்டும். அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், மேலும் அதை முன்னிலைப்படுத்திப் போராடினால் அது ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். இந்த தேடலில் திடீர் ஞான உதயமாக காட்சி கொடுத்ததுதான் பகவத் கீதை. */

கோ.க,
அறிய வேணும் என்ற ஆவலில் கேட்கிறேன். தப்பாக நினைக்காதீர்கள்.

நீங்கள் மேலே சொல்லியுள்ள கருத்துக்கள் உங்களின் யூகமா அல்லது வரலாற்று உண்மையா? வரலாற்று உண்மையென்றால் எந்த ஆதாரத்தில் இதைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா[நூல்களின் பெயர்கள்]?

ஏனெனில் நான் அறிந்த இந்திய வரலாற்றின் படி, பல முஸ்லிம்களும், குறிப்பாக ஜின்னா போன்றவர்களும் இந்திய காங்கிரசில் இருந்தனர். அதனால்தான் கேட்கிறேன்.

மிக்க நன்றி.

JTP சொன்னது…

நட்சத்திர வாழ்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கோ.க,
அறிய வேணும் என்ற ஆவலில் கேட்கிறேன். தப்பாக நினைக்காதீர்கள்.

நீங்கள் மேலே சொல்லியுள்ள கருத்துக்கள் உங்களின் யூகமா அல்லது வரலாற்று உண்மையா? //

என்னுடைய ஊகம் இல்லை வெற்றி,
நூலகத்தில் இருந்து படித்ததில் இருந்து தான் சுறுக்கி எழுதி இருகிறேன். நூல் ஆதரம் ? மறுபடியும் நூலகத்துக்குச் சென்று தேடி எடுத்து வந்து ஸ்கேன் செய்து போடுகிறேன்.

கிழே எனது கருத்துக்களை தனியாக கொடுத்து இருக்கிறேன்.

ILA (a) இளா சொன்னது…

:)

கருப்பு சொன்னது…

நெத்தியடி பதிவு... இதனைப் படித்த பிறகாவது ஒரு சாரார் தப்பு செய்தால் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லும் வறட்டு வாதம் ஒழிய வேண்டும்.

சாலிசம்பர் சொன்னது…

//எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?
பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!//

அருமையான வரிகள் கோவியாரே.மனிதனை மனிதன் கேவலப்படுத்த உதவும் ஒரு சாதனம்,எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தாலும்,அதனால் என்ன பயன்.

நீதிமன்றங்களில் ப.கீ யை பயன்படுத்தும் வழக்கம் இப்பொழுடும் இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

thiru சொன்னது…

நண்பர் கோவி.கண்ணன்,

நட்சத்திர வார பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்.

பகவத்கீதையின் கவைதை மொழிநடையால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் இருக்கும் பார்ப்பனிய அரசியல் எளிதாக விளங்கமுடியாமல் இருக்கிறது.

எப்போதெல்லாம் பார்ப்பனியத்திற்கு ஆபத்து வருமோ அப்போதெல்லாம் கிருஸ்ணன் பார்ப்பனிய பயங்கரவாதியாக அவதாரம் எடுப்பான். அவதாரங்களின் பெயர்கள் மாறுபடலாம், ஆனால் நோக்கம் ஒன்று தான். கோட்சேயை வழிநடத்தியதும் கீதை தான். நரேந்திரமோடி, தாராசிங், உமாபாரதி, ஜெயேந்திரசரஸ்வதி, அத்வானி என்னும் பார்ப்பனிய பாரம்பரியத்தின் ஆதாரமும் கீதை தான். பௌத்தநெறியை அழித்து, புதைக்க பயன்படுத்தப்பட்டதே கீதை. கீதை பற்றி எனது முந்தைய இடுகைகளின் சுட்டி http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_03.html

http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_06.html

http://aalamaram.blogspot.com/2006/11/blog-post_11.html

http://aalamaram.blogspot.com/2006/11/blog-post_06.html

thiru சொன்னது…

எனது முந்தைய பின்னூட்டத்தில் //கவைதை// என்றிருப்பது எழுத்துப்பிழை. கவிதை என படிக்கவும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு said...
எனது முந்தைய பின்னூட்டத்தில் //கவைதை// என்றிருப்பது எழுத்துப்பிழை. கவிதை என படிக்கவும். :)
//

திரு,

அதை 'கழுதை' என்று எழுதவில்லையே, தமிழ் எழுத்துப்பிழை இயல்புதான் தட்டச்சும் போது எனக்கும் இது போல் எழுத்துப் பிழை வந்துவிடுகிறது. பராவாயில்லை... திருத்தி படிப்பார்கள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குழலி / Kuzhali said...
இது சூடு.......
//

குழலி,
சூடெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்பறம் யாராவது, 'பகவத் கீதை ஒரு போர் நூலா ?' என்ற கேள்வியிடன் தத்துவங்களை எடுத்துக் கொண்டுவருவார்கள். :)

சொல்லுவதை சொல்லியாச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...

ரொம்ப சரி. வடமொழி ஸ்லோகங்கள் சொல்லுவது போல் உடல் நலம், பல வகைச்செல்வம் எல்லாத்துக்கும் நம்ம தமிழ்த்திருமுறைகளும் வழிகாட்டுது.//

வடமொழி சுலோகங்களா ?

வடமொழியில் எழுதியிருப்பதை எதையாவது பொருள் புரியாவிட்டாலும் படிச்சுட்டு சும்மா 'அதிருதுல்ல' ன்னு சொல்றவங்க நிறைய பெயர்.

என்ன சொல்லி என்ன பலன் ?
பொத்து வைப்பது எதுவுமே அழிவை நோக்கித்தான் செல்லும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
Excellent Post!

Hats Off!
//

நன்றி நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// பாரி.அரசு said...
கோவி,
அற்புதமான அலசல்... வாழ்த்துகள்,

சிறிய வருத்தம் அர்த்த சாஸ்திரம் ஓரு பிழைப்புவாதம் என்கிற கருத்தியலில் எழுதப்பட்ட நூல்... அதை மனிதன் சமூக வாழ்வியலில் இயங்குவதை பற்றி பேசுகிற திருக்குறளுடன் ஓப்பிடுவதே தவறு.

மனிதன் விலங்கு போல பிழைப்பதற்க்காக போராடுவதையும், சக உயிரியை அழித்து வாழ்வதையும் ஆதரிக்கிறீர்களா...? //

பாரி,
அர்த்த சாஸ்திரத்தை வைத்து பிழைத்தார்களா ? என்று தெரியவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்களேன்.

ஒப்புமைக்காக வடமொழி நூல்கள் மூன்றையும் திருகுறள் பற்றியும் தொடர்புபடுத்தி ஒரு நூலில் இருந்ததைத்தான் நான் இங்கு குறிப்பிட்டேன்.

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
gk,
நல்ல அலசல். பதிவுக்கு நன்றி..
//

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி ஜெகதீசன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி...நீங்கள் மேலே சொல்லியுள்ள கருத்துக்கள் உங்களின் யூகமா அல்லது வரலாற்று உண்மையா? வரலாற்று உண்மையென்றால் எந்த ஆதாரத்தில் இதைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா[நூல்களின் பெயர்கள்]?
//

வெற்றி,

என் ஊகம் அல்ல, வரலாற்று நிகழ்வு என்று ஒரு நூலில் எழுதியிருந்த தகவல் சுறுக்கம் தான் அது, மேல் பின்னூட்டத்தின் போது நினைவு வரவில்லை. வேறு ஒரு கட்டுரைக்காக நகல் எடுத்து வைத்தது நினைவுக்கு வந்தது, இதோ

அந்த நூலின் பெயர்

இந்தியகதை : ஏகம்-அநேகம்-சாதியம்.

ஆசிரியர் : நா.முத்துமோகன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Joseph said...
நட்சத்திர வாழ்துக்கள்
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
:)

10:20 AM, August 21, 2007
//

இளா,

இந்த புன்னகையின் பொருள் என்ன ?
பதிவுடன் உடன்படுகிறேன் என்பதா ?

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

// விடாதுகருப்பு said...
நெத்தியடி பதிவு... இதனைப் படித்த பிறகாவது ஒரு சாரார் தப்பு செய்தால் தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லும் வறட்டு வாதம் ஒழிய வேண்டும்.
//

கருப்பு,
நல்லவேலை ஒரு சாரர் தம் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லாமல் விட்டீர்களே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜாலிஜம்பர் said...

அருமையான வரிகள் கோவியாரே.மனிதனை மனிதன் கேவலப்படுத்த உதவும் ஒரு சாதனம்,எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தாலும்,அதனால் என்ன பயன்.

நீதிமன்றங்களில் ப.கீ யை பயன்படுத்தும் வழக்கம் இப்பொழுடும் இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
//

ஜாலி ஜம்பர்,

சரியாக சொன்னீங்க புனிதம் என்ற புனுகு தடவி போற்றுவதைவிட ஆபத்து என்று அறிந்தால் விலக்குவது சரிதான்.

தற்பொழுது நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறார்களா ? தெரியலை, கேள்விப்பட்ட வரை அப்படித்தான் என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// திரு said...
நண்பர் கோவி.கண்ணன்,

நட்சத்திர வார பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்.

பகவத்கீதையின் கவைதை மொழிநடையால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் இருக்கும் பார்ப்பனிய அரசியல் எளிதாக விளங்கமுடியாமல் இருக்கிறது.

//

நண்பர் திரு,

நீங்கள் சுட்டிய இடுகைகளை படித்திருக்கிறேன். பக்தி என்ற பெயரில் எந்த அநியாயம் நடந்தாலும் அதை நம்புபவர்களே எதிர்க்காவிட்டால் அப்படியேத்தான் இருக்கும், இருந்தாலும் சிலவற்றை சஉணர்ந்தவர்கள் சுட்டிக் காட்டுவது கடமை என்று கருதுகிறேன். என்றாவது ஒருநாள் பயன்படலாம்.

சும்மா அதிருதுல சொன்னது…

வடமொழியில் எழுதியிருப்பதை எதையாவது பொருள் புரியாவிட்டாலும் படிச்சுட்டு சும்மா 'அதிருதுல்ல' ன்னு சொல்றவங்க நிறைய பெயர்.
///

என்னைய வைச்சி காமெடி பண்ணலையே... :)

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
பாரி,
அர்த்த சாஸ்திரத்தை வைத்து பிழைத்தார்களா ? என்று தெரியவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்களேன்.
//

கோவி,
"பிழைப்புவாதம்" என்பது ஓரு கருத்தியல்...
அதன்படி நீ பிழைக்க வேண்டுமானால் அல்லது வெற்றி பெற வேண்டுமானால் அல்லது இந்த உலகத்தில் நீடித்திருக்க வேண்டுமானால் அதற்க்காக எதையும் செய்யலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

இந்த கருத்தியல் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் "அர்த்தசாஸ்திரம்"

தப்பி பிழைத்தல் - இதுவும் ஒரு உயிர் பரிணாமத்தின் கருத்தியல்.

மனித சமூகம் எவ்வாறு இந்த விலங்குகளின் உலகத்திற்க்கான கருத்தியலில் இருந்து வேறுபடுகிறது என்றால் அதுவே தத்துவஞானியின் சாக்ரடீஸின் ஓற்றைவரி
"மனிதன் ஓரு சமூக விலங்கு"

இப்படி எந்தவொரு செயலையும் இரண்டு நிலைக்கொண்டு பார்க்கலாம் ஓன்று நீங்கள் தப்பி பிழைப்பதற்க்காக செய்கிறீர்களா அல்லது சமூகத்தின் ஊடாக வாழ்கிறீர்களா என்று பிரித்து பார்த்தாலே போதும்.

அந்த வகையில் மனிதன் சமூகத்தின் ஊடாக வாழ்வதை அதாவது "சமூகத்தின் இயங்கியலை" பேசுவது திருக்குறள்.

சும்மா அதிருதுல சொன்னது…

பதிவை பற்றி நோ கமாண்ட்ஸ்

:)

G.Ragavan சொன்னது…

கீதை என்ன சொல்கிறதென்பது எனக்குத் தெரியாது. படித்திருந்தால்தானே தெரிவதற்கு. ஆகையால் நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட சொல்ல முடியாது.

ஆனால் சில கேள்விகள் எழாமல் இல்லை. அந்த வர்ணம் பற்றிய செய்தியைப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது அந்த வரிகளை நேரடியாகப் படிக்கவே விருப்பத்தைத் தூண்டுகின்றீர்கள். அந்த வரிகளைக் கொடுக்க முடியுமா? வடமொழி தெரியாது என்றால் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமே!

பகவத்கீதையை வைத்துச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை நாம் மறுக்கமும் முடியும் என்று நினைக்கிறேன். சத்தியத்தைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தால் கீதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு முருகன் மேல் என்று சொல்வேன். அசத்தியம் என்று முடிவு எடுத்து விட்டால் எந்த நூலாக இருந்தால் என்ன.

இராம.கி சொன்னது…

அன்பிற்குரிய கோவி.கண்ணன்,

"சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன." என்று எழுதியிருந்தீர்கள்.

சாணக்யரும் கௌடில்யரும் ஒருவரே. குடிலன் என்பது அவர் குடும்பப் பெயர். குடிலன் சங்கத முறைப்படி கௌடில்யன் ஆவான். சாண்க்யன் என்பதும் இட்ட பெயர் அல்ல. அதுவும் ஏதோ ஒரு காரணப் பெயர் ஆகும். சாண்க்யர்/குடிலர் (இவரின் இயற்பெயர் இன்னும் யாருக்கும் தெரியாது) எழுதியநூல் பொருள் நூல். எனப்படும் அர்த்த சாத்திரம். அதே போல், வாத்சாயனர் எழுதிய நூல் காமசூத்திரம். குடிலரும், வாத்சாயனரும் தெற்கத்தி ஆட்களாய் இருக்கலாம் என்ற முன்னீடுகள் நெடுநாட்களாய் உண்டு. முடிந்த முடிவு இதுவரை ஏற்படவில்லை. காமசூத்திரத்தின் பல குறிப்புகள் தமிழக அகத்திணைக் குறிப்புகளோடு, குறிப்பாகத் தொல்காப்பியக் குறிப்புகளோடு, பொருந்திவருவது பலருக்கும் வியப்பையே அளிக்கிறது. பொருள்நூலின் காலம் கி.மு.400/300 என்றும், காம நூலின் காலம் அதற்கும் சற்று பின்னால் என்றும் சொல்லுவார்கள். இன்றையக் கணிப்பில் தொல்காப்பியம் கி.மு.700க்கு அண்மையில் என்றே எண்ணப் படுகிறது.

தர்மசூத்திரம் எழுதியது 4 பேர். அவற்றில் மிகவும் பழமையானது கிருஷ்ண யஜுர்வேதம் சார்ந்த ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், அடுத்தது கிருஷ்ண யஜுர்வேதம் சார்ந்த பௌதாயன (போதாயனர் என்று தமிழில் சொல்வார்கள்) தர்மசூத்திரம், மூன்றாவது இருக்குவேதம் சார்ந்த வசிஷ்ட தர்மசூத்திரம், நாலாவது சாமவேதம் சார்ந்த கௌதம தர்மசூத்திரம். தமிழ்ப்/கேரளப் பார்ப்பனரிடையே போதாயன, ஆபஸ்தம்ப தர்ம சூத்திரங்களே (கேரள நம்பூதிரிகளால்) பெரிதும் ஓதப் படுகின்றன.

இவை எல்லாமே சட்டம், சடங்குகள் பற்றிச் சொல்லும் வடமொழிப் பொத்தகங்கள். இவற்றின் காலம் கி.மு.500/300 என்றே சொல்லுகிறார்கள். முடியுமானால், http://en.wikipedia.org/wiki/Dharmasutra என்ற பக்கத்தைப் பாருங்கள்.

திருக்குறளின் காலம் இப்பொழுது உள்ள ஆய்வுப் புரிதலில் கி.மு.100 அளவில் என்றே கொள்ளப் படுகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய தருக்க உரையாடல் மிகவும் பெரியது. அதில் ஆசீவகம், சைனம், புத்தம், வேதிகம் ஆகிய சமயங்கள் முன்வைத்த கருத்துக்களும், அவற்றில் ஒன்றுக்குள் ஒன்றான முரண்களும், திருக்குறள் எப்படி அவைகளோடு ஒன்றுபட்டது, எங்கு வேறுபட்டது என்பதும், மிக நீண்ட வாதமாய் இருக்கும். அதையெல்லாம் ஆய்வதற்கு நம்மில் எத்தனை பேருக்குப் பொறுமை இருக்கும்?

அன்புடன்,
இராம.கி.

நந்தா சொன்னது…

கோவி.மிக அருமையாக துவைத்துக் காயப்போட்டிருக்கிறீர்கள்....

சரியான சாட்டையடிப் பதிவு இது.

எதைக் கொண்டாவது மக்களை ஒன்றுபடுத்த்தித் திரட்டிப் போராட வேண்டியதன் அவசியத்தை அப்போதைய தலைவர்கள் உணர்ந்திருந்ததை அழ்காய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

http://blog.nandhaonline.com

Kasi Arumugam சொன்னது…

பொதுவில் ஒத்துப் போகும் சிந்தனைகள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு பிழை: //சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம//
சாணக்கியரும் கௌடில்யரும் ஒருவரே என்கிறது இந்த விக்கிப்பீடியா கட்டுரை:
He is generally called Chanakya[5] but, in his capacity as author of the Arthaśhāstra, is generally referred to as Kautilya.[6]

Please see: http://en.wikipedia.org/wiki/Chanakya#Identity

பொதுவில் சுவாரசியமாகப் போகிறது நட்சத்திர வாரம்:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kasi Arumugam - காசி said...
பொதுவில் ஒத்துப் போகும் சிந்தனைகள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு பிழை: //சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம//
சாணக்கியரும் கௌடில்யரும் ஒருவரே என்கிறது இந்த விக்கிப்பீடியா கட்டுரை:
He is generally called Chanakya[5] but, in his capacity as author of the Arthaśhāstra, is generally referred to as Kautilya.[6]

Please see: http://en.wikipedia.org/wiki/Chanakya#Identity

பொதுவில் சுவாரசியமாகப் போகிறது நட்சத்திர வாரம்:-)
//

காசி அவர்களே,

பாராட்டுக்கு மிக்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்கு நான் குறிப்பிட்ட மூன்று நூல்களின் ஒரு புத்தகத்தில் இருந்துதான் எடுத்தேன். அதில் நூலின் பெயரும் எழுதியவர் பெயரும் இருந்தது. இருவரும் ஒருவர் என்று குறிப்பிடவில்லை. அவ்வாறு குறிப்பிடவில்லை என்பதற்காக இருவரும் தனித்தனியென்றும் கொள்ளமுடியாதென்றே நினைக்கிறேன். ஐயா இராமகி அவர்கள் சொன்னது போல் அவைகளின் காலங்களில் பெரும் வேறுபாடு இருப்பது போல் தோன்றுகிறது.

விக்கிபீடியாவில் உள்ளவை உண்மையான தகவல்களா ? என்பதே ஆராய்சிக்கு உரியவை. ஏனென்றால் விசமிகள் 'பெரியார்' என்பதற்கு பெரிய ஆறுகள் உள்ள ஊரில் பிறந்ததால் பெரியார் என்று இராமசாமி நாயக்கர் என்பவருக்கு பெயர் வந்ததாக எழுதி இருப்பதாகவும், அதை எத்தனை முறை திருத்தினாலும் அதே வேலையாக திரும்பவும் தவறான விளக்கத்தையே எழுதி வைப்பதாகவும் வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.

வீக்கிபீடியாவின் தகவல்களின் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்கு உட்பட்டது. :))

இராம.கி சொன்னது…

நண்பரே!

நான் விக்கிபீடியாவை இங்கு குறிப்பிட்டுக் காட்டியது, நீங்கள் சட்டென்று உடனே படிக்கமுடியும் என்பதற்காக அன்றி, வேறெதற்கும் அல்ல. நான் "விக்கிபீடியாவை நம்பிவிடுங்கள், அதற்கு மீறி ஒன்றும் கிடையாது" என்று சொல்லவில்லை. பல நேரங்களில் அதில் வரும் செய்திகள் மேம்போக்காகவும், சில போது உண்மைக்கு மாறாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் முதலில் தேடுவதற்கு அது வாய்ப்பாக இருப்பதை மறுக்கமுடியாது. அதில் படிப்பவற்றை, வேறு வகையில் உறுதி செய்து கொள்ளுவது தேவை தான்.

தருமசூத்திரம் 4 பேர் எழுதியது என்பது முற்றிலும் உண்மையே. அதே போல குடிலரும், சாணக்யரும் ஒருவரே. பொருள்நூலையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துப் பாருங்கள். மகதப் பேரரசுக் காலத்துத் தேற்றங்கள் (theses), பொள்ளிகைகள் (policies) புலப்படும். He was definitely a logician, that is sure.

தர்ம சூத்திரம் பற்றி வேறு இடங்களில் தேடினாலும் அறிய முடியும். (மறக்காது இவைகளின் பின்வந்து, இந்தியாவில் பெரும் ஆட்சி செய்த மனுநூலைப் படியுங்கள். இந்தியக் குமுகாயத்தில் இந்த நூலின் தாக்கம் ஒரு 1500 ஆண்டுகள் இருந்திருக்கிறது. இன்றையப் பல நடைமுறைகளின் தொடக்கம் அதில் தான் இருக்கிறது. மனு நூலை மறுக்காமல் புதிய சிந்தனை மலர முடியாது. If at all there was a law book which had a tremendous influence on the Indian society, including Tamil society, till the English times, it was this book. Every King since the Pallava Kingdom had tried to follow to the letter what was written there.)

முடியுமானால், வேத நூல்கள் பற்றி விவரம் அறிந்த யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். நூலகங்களிலும் தேடிப் பாருங்கள். அவற்றை ஓரளவு அறிந்திருப்பது தேவையானதே.

தேடுதல் பல திசையிலும் இருக்க்ட்டும்.

அன்புடன்,
இராம.கி.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம.கி said...
நண்பரே!

நான் விக்கிபீடியாவை இங்கு குறிப்பிட்டுக் காட்டியது, நீங்கள் சட்டென்று உடனே படிக்கமுடியும் என்பதற்காக அன்றி, வேறெதற்கும் அல்ல. நான் "விக்கிபீடியாவை நம்பிவிடுங்கள், அதற்கு மீறி ஒன்றும் கிடையாது" என்று சொல்லவில்லை.
//

இராமகி ஐயா,

விக்கிப்பீடியாவில் காட்டியிருப்பது உண்மையான தகவல் இல்லை என்று குறிப்பிட்டதற்கு அதன் நம்பகத் தன்மை குறித்து என்பதால் மட்டுமே. குறிப்பிட்ட இந்த விடயத்தில் அதில் தவறு இருக்கிறதா ? என்று சொல்லும் அளவுக்கு எனக்கு சமய அறிவு இல்லை.

'நீங்கள் தவறான தகவல்களை தருகிறீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன்' என்று கருதி மறு பின்னூக்கி போட்டு இருக்கிறீர்கள் என்று நான் கருதவில்லை. மேல் விளக்கத்திற்காக மறுபடியும் கொடுத்திருக்கிறீர்கள் என்றே கொள்கிறேன்.

உங்களுடைய தமிழும், சமய அறிவிலும் எனக்கு பெருமதிப்பும், நல்ல புரிதல் இருக்கிறது ஐயா.

Kasi Arumugam சொன்னது…

ஆமாம், இராம.கி. ஐயா சொன்னதுபோல விக்கிப்பிடியா முதலும் முற்றுமான ஆதாரமில்லைதான். ஆனாலும் நீங்கள் படித்த அந்தப்ப் புத்தகம் தொடங்கி, ஐயா எழுதுவது, நீங்கள் எழுதுவதும், நாங்கள் மறுமொழிவதும், எதையுமே இயன்றவரையில் சரிபார்த்து குறைநிறை கண்டுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//Kasi Arumugam - காசி said...
ஆமாம், இராம.கி. ஐயா சொன்னதுபோல விக்கிப்பிடியா முதலும் முற்றுமான ஆதாரமில்லைதான். ஆனாலும் நீங்கள் படித்த அந்தப்ப் புத்தகம் தொடங்கி, ஐயா எழுதுவது, நீங்கள் எழுதுவதும், நாங்கள் மறுமொழிவதும், எதையுமே இயன்றவரையில் சரிபார்த்து குறைநிறை கண்டுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்!
//

காசி அவர்களே நன்றி ! செவிமடுக்கிறேன். :)

இங்கு ஒப்பீட்டுக் கொடுத்திருப்பது காலம் குறித்த ஆராய்ச்சிக்கு இல்லை என்றாலும், நம் திருக்குறளில் இல்லாத ஒன்றை அவை சொல்லவில்லை என்பதற்கான ஒரு குறிப்பு மட்டுமே.

மீண்டும் வந்ததற்கு மீண்டும் நன்றி !
:)

SnackDragon சொன்னது…

இராம‌.கி ஐயா சொன்ன‌து கெள‌டில்ய‌ர்தான் சாண‌க்கிய‌ர் என்ப‌து வ‌ரலாறு பாட‌புத்த‌க‌ங்க‌ளில் ப‌டித்த‌ நினைவுள்ள‌து. நூல்க‌ளில் இருப்பனவைக்கு இணைய‌த்தில் ஆதார‌ம் காட்ட‌முடியுமாவென்ப‌து என்றைக்கும் இருந்துகொண்டிருக்க‌க்கூடிய‌ கேள்வியும், அவ‌சிய‌மான‌ கேள்வியும் கூட‌.

இந்த‌ சுட்டியில் இன்னும் கொஞ்ச‌ம் விவ‌ர‌ம் பெற‌லாம். மெய்பொய் காண்ப‌து நீண்ட‌ வேலையாகிவிடும் வ‌ழ‌க்க‌ம் போல‌வே.


Dr. R. Shamashastry, the translator of the English version of Kautilya's Artha-Sastra, quotes a prediction from the Vishnu Purana fourth canto, twenty-fourth chapter, regarding the appearance of Chanakya Pandit. This prediction, incidentally, was scribed fifty centuries ago, nearly 2700 years before this political heavyweight and man of destiny was to appear. The prediction informs us: "(First) Mahapadma then his sons - only nine in number - will be the lords of the earth for a hundred years. A brahmana named Kautilya will slay these Nandas. On their death, the Mauryas will enjoy the earth. Kautilya himself will install Chandragupta on the throne. His son will be Bindusara and his son will be Ashokavardhana." Similar prophecies are also repeated in the Bhagavata, Vayu and Matsya Puranas.

கோவி.கண்ணன் சொன்னது…

//சும்மா அதிருதுல said...


என்னைய வைச்சி காமெடி பண்ணலையே... :)
//

நீங்க போட்டிருக்கிற படம் தான் காமடியாக இருக்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
கோவி,
"பிழைப்புவாதம்" என்பது ஓரு கருத்தியல்...
அதன்படி நீ பிழைக்க வேண்டுமானால் அல்லது வெற்றி பெற வேண்டுமானால் அல்லது இந்த உலகத்தில் நீடித்திருக்க வேண்டுமானால் அதற்க்காக எதையும் செய்யலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

இந்த கருத்தியல் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் "அர்த்தசாஸ்திரம்"

தப்பி பிழைத்தல் - இதுவும் ஒரு உயிர் பரிணாமத்தின் கருத்தியல்.

மனித சமூகம் எவ்வாறு இந்த விலங்குகளின் உலகத்திற்க்கான கருத்தியலில் இருந்து வேறுபடுகிறது என்றால் அதுவே தத்துவஞானியின் சாக்ரடீஸின் ஓற்றைவரி
"மனிதன் ஓரு சமூக விலங்கு"

இப்படி எந்தவொரு செயலையும் இரண்டு நிலைக்கொண்டு பார்க்கலாம் ஓன்று நீங்கள் தப்பி பிழைப்பதற்க்காக செய்கிறீர்களா அல்லது சமூகத்தின் ஊடாக வாழ்கிறீர்களா என்று பிரித்து பார்த்தாலே போதும்.

அந்த வகையில் மனிதன் சமூகத்தின் ஊடாக வாழ்வதை அதாவது "சமூகத்தின் இயங்கியலை" பேசுவது திருக்குறள்.
//

பாரி நல்ல விளக்கம், இது பற்றி பதிவில் எழுதுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
கீதை என்ன சொல்கிறதென்பது எனக்குத் தெரியாது. படித்திருந்தால்தானே தெரிவதற்கு. ஆகையால் நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட சொல்ல முடியாது.

ஆனால் சில கேள்விகள் எழாமல் இல்லை. அந்த வர்ணம் பற்றிய செய்தியைப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது அந்த வரிகளை நேரடியாகப் படிக்கவே விருப்பத்தைத் தூண்டுகின்றீர்கள். அந்த வரிகளைக் கொடுக்க முடியுமா? வடமொழி தெரியாது என்றால் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமே!

பகவத்கீதையை வைத்துச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை நாம் மறுக்கமும் முடியும் என்று நினைக்கிறேன். சத்தியத்தைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தால் கீதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு முருகன் மேல் என்று சொல்வேன். அசத்தியம் என்று முடிவு எடுத்து விட்டால் எந்த நூலாக இருந்தால் என்ன.
//

ஜிரா,

அந்த வரிகளை தேடி எடுக்க வேண்டும். அவசரத் தேவைக்கு KRS வைத்திருக்கலாம் கேட்டுப்பாருங்கள்.

சத்திய உறுதி ஏற்பு குறித்து தங்கள் கருத்து மிகச் சரி, ஒருவன் பிணக்குகளால் தான் நீதிமன்றம் செல்கிறான் அவன் பொய் சாட்சி சொன்னால் அதை எந்த புனித நூல் தடுக்க முடியுமா ? வழக்கில் தோற்றால், பொய் சாட்சி சொல்லி புனித நூலை அவமதித்தாக உள்ளே வைக்க முடியுமா ? பின்பு எதற்கென்றே புரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம.கி said...
அன்பிற்குரிய கோவி.கண்ணன்,

"சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன." என்று எழுதியிருந்தீர்கள்.

சாணக்யரும் கௌடில்யரும் ஒருவரே. குடிலன் என்பது அவர் குடும்பப் பெயர். குடிலன் சங்கத முறைப்படி கௌடில்யன் ஆவான். சாண்க்யன் என்பதும் இட்ட பெயர் அல்ல......
//

ஐயா,

தங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்களாக இருக்கிறது. நான் புத்தகங்களில் இருந்து எடுத்து எழுதுவதால் ஆராய்ச்சி என்ற அளவில் இங்கே நினைக்க முடியாது.

எனவே அவற்றில் தவறு இருக்க வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்.

நல்ல தகவல்களை தந்து இருக்கிறீர்கள்.
நிறைய படிக்க வேண்டும். பொருள் தேடல் மற்றும் குடும்ப பொறுப்பு நேரமின்மை, அதைவிட சோம்பல் இவையெல்லாம் வாசிப்பை குறைத்துவிடுகின்றன

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தா said...
கோவி.மிக அருமையாக துவைத்துக் காயப்போட்டிருக்கிறீர்கள்....

சரியான சாட்டையடிப் பதிவு இது.

எதைக் கொண்டாவது மக்களை ஒன்றுபடுத்த்தித் திரட்டிப் போராட வேண்டியதன் அவசியத்தை அப்போதைய தலைவர்கள் உணர்ந்திருந்ததை அழ்காய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

http://blog.nandhaonline.com
//

நந்தா,

சிறப்பான கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//KARTHIKRAMAS said...
இராம‌.கி ஐயா சொன்ன‌து கெள‌டில்ய‌ர்தான் சாண‌க்கிய‌ர் என்ப‌து வ‌ரலாறு பாட‌புத்த‌க‌ங்க‌ளில் ப‌டித்த‌ நினைவுள்ள‌து. நூல்க‌ளில் இருப்பனவைக்கு இணைய‌த்தில் ஆதார‌ம் காட்ட‌முடியுமாவென்ப‌து என்றைக்கும் இருந்துகொண்டிருக்க‌க்கூடிய‌ கேள்வியும், அவ‌சிய‌மான‌ கேள்வியும் கூட‌.

இந்த‌ சுட்டியில் இன்னும் கொஞ்ச‌ம் விவ‌ர‌ம் பெற‌லாம். மெய்பொய் காண்ப‌து நீண்ட‌ வேலையாகிவிடும் வ‌ழ‌க்க‌ம் போல‌வே.
//

கார்திக் ராம்ஸ்,
சரியாகத்தான் சொல்கிறீர்கள், அவசர உலகில் இதற்கெல்லாம் நேரம் இருக்குமா.
நேரம் கிடைக்கும் போது நினைவு வைத்து படிக்க முடியுமா என்றும் தெரியவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்