பின்பற்றுபவர்கள்

19 ஆகஸ்ட், 2007

கூத்தணி ஆட்சி !

கொள்கை (முரண்பாடு)களால் எந்தக் கட்சிக்கும் பொதுமக்கள் முதன்மைத்துவம் கிடைக்காத நிலமை தற்பொழுதைய காலகட்டங்களில் இந்திய அளவிலும், கூட்டணி ஆட்சி நடைமுறை(யற்று ?) நடந்துவருகிறது. ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் அது கனவுகளில் மட்டுமே நடக்கும். அது கனவு மட்டுமின்றி செயல்படுவது போலத்தான் இங்கு பல்வேறு முரண்(பட்ட) கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்துகின்றன.

கூட்டணி ஆட்சியால் ஆட்சி கவிழ்ப்பு நடந்து பல முதல்வர்கள் மாற்றப்பட்ட கேலிக் கூத்துகள் அண்டை மாநிலம் கர்நாடகாவில் பார்த்துவருகிறோம். தமிழக அளவில் எப்பொழுது வெடிக்குமோ என்ற நிலையில் திமுக - பாமக கூட்டனி கூத்துக்கள் ஒரு பக்கம். அனு ஆயுத ஒப்பந்தம் குறித்து உடன்பாடில்ல நிலையில் காங்கிரஸ் - இடது சாரிகள்.

என்ன நடக்குது நாட்டில் ?

கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஒத்திவைப்புத் தீர்மாணங்களால் முடக்கப்பட்டும், எதிர்கட்சிகளுக்கு சவால் விட்டு சட்டையை கிழித்துக்கொண்டு சவால் விடும் ஆளும் கட்சிகள். பாதிக்கப்படுவது மக்கள் செயல் திட்டங்களும் வரிப்பணங்களுமே.

மக்கள் பணி என்பதைத் தாண்டி அரசியல் என்பது லாப நோக்கோடு வளரும் நிறுவணம் என்று பரிமாணம் அடைந்ததின் விளைவாக இதைப் பார்க்க முடிகிறது. லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக அரசியலும் அதை வெற்றிகரமாக நடத்தும் நிறுவணங்களாக கட்சிகளும், அதை திறமையாக கையாளுபவர்களாக அரசியல் தலைவர்களும் ஆகிவிட்டனர். இவர்களுக்கு தேசியபாதுகாப்பு, சட்டப்பாதுகாப்பு என்ற வளையத்துக்குள் இருந்து எதையுமே சாதித்துக் கொள்ள முடிகிறது.

இவ்வளவு சீர்கேட்டையும், முரண்பாடுகளையும் வைத்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து இவர்கள் ஆற்றும் உரையென்பது இவர்களின் செஞ்சோற்றுக் கடனாகத்தானே நினைக்க முடிகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்களாம்...இதன் பெயர் கூட்டனி ஆட்சியாம். திருட்டு பணத்தை பங்கு பிரிக்கும் திருடர் கூட்டனிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு ?

மக்கள் நலம் ? மண்ணாங்கட்டி !!!

சாகும் முன் சம்பாதிப்போம் வரையறையின்றி தலைமுறைகளைத்தாண்டி அவை தம் குலம் காக்கும் ! என்ற கொள்கையில் இருந்து கொண்டு செய்யும் இவர்கள் கூட்டணி கூட்டணியா ? கூத்தணி !

போங்கடா, நீங்களும் நீங்கள் பேசும் மக்கள் நலனும்.

இதையும் தாண்டி அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேச முடிந்தால் ? அது

'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?' என்ற பழமொழிதான்

மக்கள் ஆட்சி தத்துவங்கள் மரணித்துப் போகும் காலங்கள் விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

சரியான கூத்துதான் இந்த கூட்டணிகள்.
மிகச்சரியாக சொல்லப்பட்டுள்ள பதிவு.
தேர்தல் முடிவுகள் இந்த மாதிரி வந்தால் வேறென்ன செய்யலாம் என்றும் சொன்னால் நல்லது.

TBCD சொன்னது…

தலைப்பிலே ஒரு சொற்க் குற்றம்...இருக்கிறது....:))))

இது தான்..எல்லார் மணசிலேயும்..இருக்கு..."எரிகிற கொள்ளியில எந்த கொள்ளி"

புலம்பி என்ன ஆகப்போகின்றது...

Hariharan # 03985177737685368452 சொன்னது…

கோவி.கண்ணன்,

//அனு ஆயுத ஒப்பந்தம் //

யாருங்க இந்த அனு?

//திமுக - பாமக கூட்டனி//

பகிரங்கமான இந்த கூட்டணி தேய்மானத்தை இப்படி சிம்பாலிக்கா "கூட்டனி" குறிப்பிட்டு இருக்கீங்க:-))

வடுவூர் குமார் சொன்னது…

மக்கள் நலம் ? மண்ணாங்கட்டி !!!
ரொம்ப சூடா இருக்கு.
'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?'
எல்லாம் ஒரே குளத்தில் ஊறும் மட்டைகள் என்று யாரோ சொன்னது ஞாபகம் வருது.
திருத்தனும் என்று யோசித்தாலும் எங்கிருந்து என்று தெரியாத முடிச்சு இது.

G.Ragavan சொன்னது…

கோவி, இந்தக் கூத்தைத்தான் தேர்தல் முடிவு வந்த பொழுதே நான் குறிப்பிட்டேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை என்று. நீங்க அந்த நிலைக்கு இன்று வந்திருக்கின்றீர்கள். என்று வந்தால் என்ன...உண்மை அதுதான். தேனை எடுத்தது எந்தக் கையானா என்ன நக்காமலா விடுவாங்க. நாமதான் இவங்களை விட அவங்க நல்லவங்க. அது இதுன்னு ஏமாத்திக்கிறோம்.

ஜீவி சொன்னது…

//மக்கள் ஆட்சி...தெரிகிறது//
இதை உணர்ந்து தான், இதற்குப்
பின்னால் என்னவென்று யோசித்துத் தான் 'நதி நீர் இணைப்பு' என்கின்ற
பெயரில் பதிவு ஒன்று போட்டிருக்கிறேன். அந்தக் கட்டுரையைப் படித்தீர்களென்றால்
ஒட்டுமொத்த இந்திய ஆட்சி மாற்றத்திற்கு, அதிகார மாற்றத்திற்கு
ஒரு வழி புலப்படும். ஆனால் இதெல்லாம் வெகு லேசில் நடந்து
விடக்கூடியதல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்