பின்பற்றுபவர்கள்

11 மே, 2009

Good Touch ... MM அப்துல்லா !

இந்த முறை ஊர் திருவிழாவிற்காக நாகை சென்று (அது பற்றி தனி இடுகைகள் வரும்) சிங்கை திரும்பும் முதல் நாள் (நேற்று) தம்பி அப்துல்லாவை எதிர்நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது, 'அண்ணன் எங்கே இருக்கிங்கன்னு சொல்லுங்க' நானே வந்து அழைச்சிட்டுப் போகிறேன்' என்றார். சென்ற முறை சென்னையில் அவரை பார்க்க நேரமில்லாமல் போனதால் இந்த முறை நான் தமிழகம் வருவதை அறிந்த தம்பி என்னை பார்க்க ஆவல் கொண்டிருந்தார். அடிக்கிற வெயில் அத்தனையும் மேலே படும் நேரம் சரியாக காலை 11 மணி வாக்கில் அடையார் மலர் மருத்துவமனை அருகில் காத்திருந்தேன். அவரது சிற்றுந்தில் வந்து அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சென்னை செல்லும் பதிவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அருமையான இடம் தம்பியின் இல்லம். சாப்பாடு, போக்குவரத்து தம்பியே கவனித்துக் கொள்வார் :).



தம்பி அப்துல்லா முதன் முதலாக இசை இயக்குனர் பரத்வாஜின் பின்னனி இசையில் பாடிய பாடலை நடனத்துடன் அமைந்த காட்சியை எனக்கு போட்டுக் காண்பித்தார். அதைப் பார்த்த முதல் பதிவர் என்கிற பெருமை எனக்கே. துள்ளிசைப் பாடல், நல்ல ஏற்ற இறக்கத்துடன் அருமையாக பாடி இருந்தார். தம்பி இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை. நல்ல குரல் வளம். ஓரளவு இசை அறிவு பெற்றதன் பின்னனி குறித்தும் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டார். எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது. கட்டியணைத்து பாராட்டுத் தெரிவித்தேன். தலைப்பு வந்துச்சா ? :)





தம்பியின் வீட்டில் சிறிது நேர ஓய்விக்கிற்கு பிறகு மதிய உணவருந்த டிடிகே சாலை சரவணபவனுக்கு அழைத்துச் சென்று செமத்தியாக கவனித்தார். போகும் வழியிலேயே மாலை மருத்துவர்கள் ஷாலினி மற்றும் ருத்ரன் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சியும் அதில் பதிவர்கள் கலந்து கொள்ளும் தகவலையும் சொன்னார். அன்று மாலை இருந்த வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வருவதாகச் சொன்னேன். பிறகு என் விருப்பத்தின்படி தி.நகரில் மதியம் 3 மணிக்கு இறக்கிவிட்டுவிட்டு விடைபெற்றார்.



மாலை சரியாக 4:45க்கு பதிவர் பத்ரி அண்ணனின் கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடிக்குச் சென்றேன். பெரும் கூட்டம். நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றார்கள். லக்கி, அதிஷா, அக்னி லுக், கேபிள், பயணங்கள் மருத்துவர், பழைய தாமிரா, கார்க்கி, பைத்தியக்காரன், பத்ரி, டோண்டு இராகவன், நர்சிம் மற்றும் பலர் மற்றும் நம்ம செல்லப் பதிவர் குழந்தை பாரதி ஆகியோருடன் சிறு அளவளாவ வாய்ப்புக் கிட்டியது.


எதிர்பாராமல் மருத்துவர் ஷாலினி மற்றும் மருத்துவர் ருத்ரன் ஆகியோரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பயனாகவும், பதிவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் அமைந்தது.


எனக்கு மருத்துவர் ருத்ரனை நல்லா தெரியும்...ஆனால் அவருக்குத்தான் என்னை தெரியாது :)

வாய்ப்பு வழங்கிய தம்பி அப்துல்லாவிற்கும், பார்த்து உரையாடிய, கைக்குலுக்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றி





டோண்டு இராகவன் குறிப்பு எடுக்கிறார்


சொன்னா கேப்போம்ல...அதுக்காக கையையா ஓங்குறது ?


யாராவது பாலியல் ஜோக் அடித்திருப்பார்களா ?


நர்சிம் வெக்கப்பட்டா ...? அழகாகத்தான் இருக்கிறார் ! வெக்கப்படாதிங்க பாஸ் !


அக்னி பார்வை: கத்திரி வெயில்....ஸ்ஸ்....நிஜமாவே கண்ணைக் கட்டுதே !




எப்பதான் முடியும் ? இருங்கய்யா....இன்னும் 5 நிமிடத்தில் கூட்டம் முடிந்துடும் !

29 கருத்துகள்:

வேத்தியன் சொன்னது…

சந்திப்பு அருமையா நடந்தது சந்தோஷம்...

அக்னி பார்வை சொன்னது…

உங்களை சந்தித்தது எதிர்பாராத்து என்றாலும் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்

கிரி சொன்னது…

வாங்கோ! வாங்கோ!

Athisha சொன்னது…

அண்ணே என்னை ஒரு படம் கூட எடுக்காததால் உங்களை வன்மையாக கண்ணடித்து வெளியேறுகிறேன்..

உங்க பேச்சு க்கா

வால்பையன் சொன்னது…

//நல்ல குறல் வளம்.//

இதுல எதாவது உள்குத்து இருக்கா?

ஆளவந்தான் சொன்னது…

//
. நல்ல குறல் வளம்.
//
குரல் :)

வால்பையன் சொன்னது…

போன் பண்ணவேயில்ல!

அப்பாவி முரு சொன்னது…

சுனாமி சிங்கை பக்கம் வந்திட்டதா...

இனி அடுக்கடுக்காய் இடுக்கைகள்...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சென்னையிலேயே ரெண்டு மூணு நாள் இருந்தமாதிரி தெரியுது.
அப்துல்லா உள்ளிட்ட பதிவர் நண்பர்களைச் சந்தித்தது நிறைவைத் தரும்.
ஓட்டு போடாம சிங்கப்பூருக்கு வந்துட்டியளா?
ஒரு ஓட்டு போச்சே! ஒரு ஓட்டு போச்சே!!

Cable சங்கர் சொன்னது…

என் படத்தை இருட்டில் போட்டு இருட்டடிப்பு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் பதிவை பாராட்டுகிறேன். :):)

நையாண்டி நைனா சொன்னது…

present sir

அகநாழிகை சொன்னது…

நீங்கள் வந்ததே பிறகுதான் தெரியும். அனைவரும் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டிருக்கலாம். சிலர் வந்திருந்தும் பேச முடியாமல் போனது.

''அகநாழிகை''
பொன்.வாசுதேவன்

கார்க்கிபவா சொன்னது…

உங்கள நான் தான் சரியா கண்டுபிடிச்சேன்.. அதை பத்தி சொல்லியிருக்கலாம் :(

கோவி.கண்ணன் சொன்னது…

//"அகநாழிகை" said...
நீங்கள் வந்ததே பிறகுதான் தெரியும். அனைவரும் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டிருக்கலாம். சிலர் வந்திருந்தும் பேச முடியாமல் போனது.

''அகநாழிகை''
பொன்.வாசுதேவன்
//

நிகழ்ச்சியின் முதன்மைத்துவம் கெட்டுவிடக் கூடாது என்பதால் சுய விளம்பரங்களை எல்லோருமே தவிர்த்தோம் என்பது உண்மை. அடுத்த முறை சந்திக்கும் போது நிறைய பேசுவோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வேத்தியன் said...
சந்திப்பு அருமையா நடந்தது சந்தோஷம்...
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்னி பார்வை said...
உங்களை சந்தித்தது எதிர்பாராத்து என்றாலும் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்
//

நீங்கள் கலந்து கொள்ளும் மொட்டை மாடி சந்திப்பில் கலந்து கொள்வது கொஞ்சம் அடி வயிற்றைக் கலக்குது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
வாங்கோ! வாங்கோ!
//

ஆச்சு ஆச்சு ! நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
அண்ணே என்னை ஒரு படம் கூட எடுக்காததால் உங்களை வன்மையாக கண்ணடித்து வெளியேறுகிறேன்..

உங்க பேச்சு க்கா
//

போஸ் கொடுக்க நர்சிம் மாதிரியே எல்லோரும் வெட்கப்பட்டா நான் எப்படி படம் போடுவது ?

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
//நல்ல குறல் வளம்.//

இதுல எதாவது உள்குத்து இருக்கா?

1:11 AM, May 12, 2009


ஆளவந்தான் said...
//
. நல்ல குறல் வளம்.
//
குரல் :)
//
பிழையை சரி செய்துவிட்டேன், சுட்டிய இருவருக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
போன் பண்ணவேயில்ல!
//

குறும் செய்தி அனுப்பினேன். பாருங்க இருக்கும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
சுனாமி சிங்கை பக்கம் வந்திட்டதா...

இனி அடுக்கடுக்காய் இடுக்கைகள்...
//

சுனாமியா ? சென்னை வெயிலில் கசங்கி வந்தேன் தம்பி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
சென்னையிலேயே ரெண்டு மூணு நாள் இருந்தமாதிரி தெரியுது.
அப்துல்லா உள்ளிட்ட பதிவர் நண்பர்களைச் சந்தித்தது நிறைவைத் தரும்.
ஓட்டு போடாம சிங்கப்பூருக்கு வந்துட்டியளா?
ஒரு ஓட்டு போச்சே! ஒரு ஓட்டு போச்சே!!
//

ஒரு ஓட்டு என்ன ? 10 ஓட்டுக்கு கேன்வாஸ் செஞ்சோம்ல !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Cable Sankar said...
என் படத்தை இருட்டில் போட்டு இருட்டடிப்பு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் பதிவை பாராட்டுகிறேன். :):)
//

உங்க மாதிரி விஐபிகளுக்கு மீடியா வெளிச்சம் இருக்கே. அதுக்கும் மேல போட்டால் வெளம்பரம் ஆகி உங்க புகழை கெடுத்துடும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
present sir
//

நைனா நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
உங்கள நான் தான் சரியா கண்டுபிடிச்சேன்.. அதை பத்தி சொல்லியிருக்கலாம் :(
//

உங்களிடமும் ஆதிமுலகிருஷ்ணனிடமும் நிறைய பேசலாம் என்றிருந்தேன், நேரமில்லாமல் போயிற்று. இருவரையும் சந்தித்தில் மகிழ்ச்சியாக இருந்தது. இருவரையும் சந்திக்க வேண்டும் என்பதும் என் நீண்ட நாளைய விருப்பமாகவும் இருந்தது.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாங்க வாங்க நாட்டாமை!!!....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க‌


http://www.ensaaral.blogspot.com

"உழவன்" "Uzhavan" சொன்னது…

அட.. நம்ம போட்டோவும் அண்ணன் பதிவுல இருக்குப்பா :-)

சி தயாளன் சொன்னது…

:-))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்