பின்பற்றுபவர்கள்

28 மே, 2009

திராவிடம் பேசுறாராம் திமுக தலைவர் !

1971ம் ஆண்டு தேர்தலின் போது சில பத்திரிகைகள் திமுகவுக்கு எதிராக இருந்தன. ராஜாஜி, காமராஜரை ஆதரித்தார். பெரியார் மீண்டும் நம் பக்கம் வந்தார். அப்போது நாம் முன்பு இருந்த இடத்தை விட கூடுதலாக 20 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றோம்.

அப்போது நடந்தது போன்று மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது. இந்த சிந்தனையை தட்டி எழுப்ப என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிப்பாய்கள் இருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

*****

பிரச்சனைகள் இருந்த போது எதைத் தூண்டி மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தார்களோ, அதை மீண்டும் கையில் எடுக்கிறார் கருணாநிதி.. திராவிடக் கழகங்களை பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று தான் பார்க்க வேண்டும், பெரியார் பார்ப்பன எதிர்பை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை, சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு தளங்களில் இயங்கினார். பெண்ணடிமைத்தனம் இன்றைய தேதியில் பெரிதாக இல்லை, அதை விட்டுவிட்டாலும், அவரைப் பின்பற்றி வந்தவர்கள் மற்றதையெல்லாம் மறந்து பார்பன எதிர்ப்பை மட்டுமே திராவிட அடையாளமாக அடிக்கடி மக்கள் முன் வைக்கின்றனர், இதற்கு வசதியாக இவர்கள் கையில் எடுத்துக் கொள்வது தமிழுணர்வு.

ஆறிப்போன ஒன்றை கையில் எடுத்து 'ஆரிய திராவிடப் போர்' என்கிறார், ஊடகங்களும், பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளும் பார்பனர்களின் கையில் இருந்தது உண்மைதான் என்றாலும் கருணாநிதிக் குடும்பத்தினரிடம் தமிழக அளவில் இருக்கும் ஊடகங்களையும், நிறுவனங்களையும் ஒப்பிட்டால் அது சொற்பமே. தேர்தலுக்கு முன்பு புலம்பி இருந்தாலும் எதோ பொருள் இருக்கிறது என்று சொல்லலாம், தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் போர் என்பது எதைக் குறிக்கிறது ? ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் வண்ணம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, மக்கள் எழுச்சியை தடுக்கும் வண்ணம் அவசர உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து, பின்னர் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என அப்போது தான் அறிந்த செய்தி போல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு அறிவித்தார். நார்வே போன்ற மேற்கத்திய நாடுகள் அடையும் பதற்றங்களில் ஒரு சிறு அளவேனும் இவர் இவரை 'தமிழின தலைவர்' என்று சொல்லும் தமிழர்களின் குரலாக ஒலித்திருக்க வேண்டும். ஆனால் இலங்கைப் பிரச்சனை தேர்தலில் பாதிக்காது (பாதிக்க விடமாட்டோம் என்பதே அதன் மறைமுகப் பொருள், அது போல் தான் திமுக சார்பு ஊடகங்கள் நடந்து கொண்டன) என்று வெளிப்படையாக அறிவித்திலிருந்தே தமிழ் தமிழினம் என்பதெல்லாம் வெறும் ஓட்டு அரசியல் என்று தெரிந்துவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் எதைச் சொல்லி 'திராவிடம்' பேசமுடியும், 'திராவிடக் கட்சியாக' காட்டிக் கொள்ள முடியும், என்று உட்கார்ந்து யோசித்து 'மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது' என்கிறார். 'சோ' இராமசாமியை மனதில் வைத்துச் சொன்னால், 'சோ' இராமசாமியை எத்தனை பேர் சீந்துகிறார்கள் என்றே தெரியவில்லை. வட இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்த ஒரே பத்திரிக்கையாளர் சோ என்பதால் அவரைப் பேட்டி எடுத்திருப்பார்கள். மற்றபடி அந்த பேட்டியை எத்தனை தமிழன் பார்த்தான் படித்தான் என்றே தெரியவில்லை. அரசியலுக்கு திராவிடம் பேசுவது எடுபடாது. திமுக உண்டியல் குலுக்கும் கட்சி என்றால் இதையெல்லாம் பேசமுடியும், ஆனால் திமுகவின் வாரிசு அரசியல் அசுர வளர்ச்சி தடைபடாமல் இருக்க திராவிட - ஆரியபோராட்டம் என்கிற கூப்பாடுகள் யானைக்கு சோளப் பொறி போன்றதே. பயனளிக்ககது

இன்றைய திராவிடக் கட்சிகள் எதுவுமே திராவிடக் கொள்கைகளில் முனைப்புக் காட்டுவதில்லை, அல்லது அவற்றிக்கான தேவையும் தீவிரமும் குறைவு என்பதே உண்மை. தாலியைப் பார்க்கும் போது புருஷன் நினைவு வருவது போல் கட்சிப் பேரை படிக்கும் போது 'திராவிட' சித்தாந்தம் ஊற்றெடுத்து உடனே அடங்கும் போலும்.

ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்.

29 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

மீ த பஸ்டு.

Unknown சொன்னது…

நீங்கள் கோவி கண்ணனா இல்லை "கோபக்" கண்ணனா?பொரிந்து தள்ளி விட்டீர்கள் ஐயா.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அவருடைய கட்சி திராவிட கட்சியா? (:
அதற்கான முகவரியை இழந்து நாளாயிற்று!
அதற்கான வரலாற்று தேதி மட்டும் குறித்து வைத்துக் கொள்ளவில்லை போலும்!
வசதியாக மறந்து போயிற்றோ?

Suresh Kumar சொன்னது…

தமிழர்கள் இளிச்சவாயர்களாக இருக்கும் வரை எதை சொல்லியாவது பிழைப்பை நடத்த வேண்டியது தான்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

///ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்///

;-)))

பெயரில்லா சொன்னது…

:):):)
(ராஜ பரம்பரை பற்றி பேச உங்களுக்கோ எனக்கோ என்ன அருகதை உள்ளது, எனக்கு தெரிந்து இன்னும் 100 வருடம் அவரது குடும்பமே நம்மை ஆள போகிறது, அதற்கான் அஸ்திவாரம் பலமாக போட்டு விட்டார்கள், டிவி, பத்திரிக்கை, தமிழர்களின் பார்பண வெறுப்பு, தமிழர்களின் பலவீனம் மஞ்சள் துண்டுக்கு அத்துபடி ஐயா!)

வேடிக்கை மனிதன் சொன்னது…

//தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் .போர் என்பது எதைக் குறிக்கிறது ?//

போன முறை கிடைத்த செல்வாக்கு இந்த முறை மத்தியில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்,காங்கிரஸ் ஒரு பார்ப்பனக்கட்சி என்பதை நினைவு கூர்ந்து ”தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் போர்னு” சொல்லியிருக்கலாம்.

என்ன அண்ணே கரக்டா

Venkatesh Kumaravel சொன்னது…

நெத்தியடி... தங்களது ANTI-தி.மு.க பதிவுகள் என்னை மிகவும் கவர்கின்றன! ;)

அமர பாரதி சொன்னது…

// திராவிடக் கழகங்களை பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று தான் பார்க்க வேண்டும்// ???

திராவிடக் கழகங்களே பெரியாருக்குப் பின் தானே ஸ்வாமி?

கோவி.கண்ணன் சொன்னது…

//அமர பாரதி 5:03 AM, May 29, 2009
// திராவிடக் கழகங்களை பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று தான் பார்க்க வேண்டும்// ???

திராவிடக் கழகங்களே பெரியாருக்குப் பின் தானே ஸ்வாமி?
//

பெரியார் மறைவுக்கு முன், பின் என்று வாசியுங்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
மீ த பஸ்டு.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பாஸ்கர் said...
நீங்கள் கோவி கண்ணனா இல்லை "கோபக்" கண்ணனா?பொரிந்து தள்ளி விட்டீர்கள் ஐயா.
//

கோபமாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அவருடைய கட்சி திராவிட கட்சியா? (:
அதற்கான முகவரியை இழந்து நாளாயிற்று!
அதற்கான வரலாற்று தேதி மட்டும் குறித்து வைத்துக் கொள்ளவில்லை போலும்!
வசதியாக மறந்து போயிற்றோ?
//

:)

திமுக என்பதை குமுக என்று மாற்றிக் கொள்ளலாம், குடும்ப முன்னேற்ற கட்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Suresh Kumar said...
தமிழர்கள் இளிச்சவாயர்களாக இருக்கும் வரை எதை சொல்லியாவது பிழைப்பை நடத்த வேண்டியது தான்
//

:) ஏமாறுகிறவர்கள் எப்போதும் ஏமாறுவார்கள் என்று சொல்ல முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
///ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்///

;-)))
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//manippakkam said...
:):):)
(ராஜ பரம்பரை பற்றி பேச உங்களுக்கோ எனக்கோ என்ன அருகதை உள்ளது, எனக்கு தெரிந்து இன்னும் 100 வருடம் அவரது குடும்பமே நம்மை ஆள போகிறது, அதற்கான் அஸ்திவாரம் பலமாக போட்டு விட்டார்கள், டிவி, பத்திரிக்கை, தமிழர்களின் பார்பண வெறுப்பு, தமிழர்களின் பலவீனம் மஞ்சள் துண்டுக்கு அத்துபடி ஐயா!)
//

1000 வரை கூட ஆளட்டும், ஆனால் திராவிடம் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமே !

கோவி.கண்ணன் சொன்னது…

//வேடிக்கை மனிதன் said...
//தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் .போர் என்பது எதைக் குறிக்கிறது ?//

போன முறை கிடைத்த செல்வாக்கு இந்த முறை மத்தியில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்,காங்கிரஸ் ஒரு பார்ப்பனக்கட்சி என்பதை நினைவு கூர்ந்து ”தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் போர்னு” சொல்லியிருக்கலாம்.

என்ன அண்ணே கரக்டா
//

சரிதான், ஒண்ணும் கிடைக்கவில்லை என்றால் இத்தாலி ஆளுகிறது, இந்தியா தாழுகின்றது என்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

//வெங்கிராஜா said...
நெத்தியடி... தங்களது ANTI-தி.மு.க பதிவுகள் என்னை மிகவும் கவர்கின்றன! ;)
//

நன்றி !

லக்கிலுக் சொன்னது…

கோவி அண்ணனும் திராவிடம் பேசுறாராம் :-)

புரட்சிக்கவி சொன்னது…

திராவிடம் என்ன லக்கிலுக்கின் குடும்ப சொத்தா என்ன ? யார் வேண்டுமானாலும் திராவிடம் பேசலாம்.

நிற்க ! திராவிடம் என்பதெல்லாம், எப்போது அண்ணா பெரியாரை விட்டு விலகினாரோ, அப்போதே முடிந்து விட்டது. ஆனால், அந்த ஆசையிலும் அண்ணா அளவோடு இருந்தார் - பதவி துண்டு, கொள்கை வேட்டி என்று !!!

பின்னால் வந்த தம்பிகள், துண்டினை வேட்டியாகக் கட்டிக் கொண்டு, 8 கோடி தமிழர்களின் வேட்டியையும் உருவி விட்டார்கள் !!!

அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

RK Anburaja சொன்னது…

## திராவிடம் என்பதெல்லாம், எப்போது அண்ணா பெரியாரை விட்டு விலகினாரோ, அப்போதே முடிந்து விட்டது. ஆனால், அந்த ஆசையிலும் அண்ணா அளவோடு இருந்தார் - பதவி துண்டு, கொள்கை வேட்டி என்று !!!

பின்னால் வந்த தம்பிகள், துண்டினை வேட்டியாகக் கட்டிக் கொண்டு, 8 கோடி தமிழர்களின் வேட்டியையும் உருவி விட்டார்கள் !!! ##

இன்று பாத்தீரா மு.க மகனுக்கு துணை முதல்வர் பதவி. நினைத்ததை சாதிப்பவர் தமிழகத்தில் அவர் மட்டுமே!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்.//

உண்மைதானோ

ரவி சொன்னது…

இது கண்மூடித்தனமான அதிமுக டைப் எதிர்ப்பு.

அந்த உரைக்கு பின்னால் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளவேண்டும்...

தலித் சமுதாயத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஏ ராசாவுக்கு எதிரான பார்ப்பண ஊடக அரசியலை எதிர்த்தே வந்தது அந்த ஸ்டேட்மெண்ட்.

Gokul சொன்னது…

செந்தழல் ரவி அவர்களே,

ராசா தலித்தாக இருந்தால் 60000 கோடி ஊழலும் அதற்கு பங்கு தொகையாக 3000 கோடியும் இருக்கலாமா?

மனு நீதியில் சொல்லி இருப்பது என்னவென்றால் "எந்த குற்றம் செய்தாலும் அது குலத்தை பொருத்து தண்டனை" அதாவது பிராமணர் என்றால் அது குற்றமே இல்லை, சூத்திரர் என்றால் அது பெரும் குற்றம்"

இங்கே நடப்பதும் அதே போல்தான், அதாவது தலித் குற்றம் செய்தால் அது குற்றமே இல்லை , பழியும் 'பார்ப்பன ஊடகங்கள்தான்' அல்லவா?

ஆக நீங்களும் ஒரு மனு நீதியை ஆதரிக்கறீர்கள், என்ன வித்தியாசம் என்றால் தலித்தும் பிராமிணரும் இடம் மாறி இருக்கிறார்கள். அநீதி என்னவோ அதேதான்.

ராம்.CM சொன்னது…

//ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்.//


நிசப்தமான உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி 6:25 PM, May 29, 2009
இது கண்மூடித்தனமான அதிமுக டைப் எதிர்ப்பு.

அந்த உரைக்கு பின்னால் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளவேண்டும்...

தலித் சமுதாயத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஏ ராசாவுக்கு எதிரான பார்ப்பண ஊடக அரசியலை எதிர்த்தே வந்தது அந்த ஸ்டேட்மெண்ட்.
//

நான் இணைத்திருக்கும் தட்ஸ்தமிழ் தொடுப்பில் 'ராசா' வைப் பற்றி ஒருவரியையும் காணும். திராவிட - ஆரிய திராவிடப் போரை சமாளிக்க தலித் சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரை 'துணை முதல்வர்' ஆக்கி இருக்கலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மனு நீதியில் சொல்லி இருப்பது என்னவென்றால் "எந்த குற்றம் செய்தாலும் அது குலத்தை பொருத்து தண்டனை" அதாவது பிராமணர் என்றால் அது குற்றமே இல்லை, சூத்திரர் என்றால் அது பெரும் குற்றம்"//

ஆமாங்க ஸ்பெக்ட்ரம் பற்றி பலரும் குற்றச் சாட்டினாலும், பெரிய அளவில் அதை இதுவரை திமுக மறுத்தது போல் தெரியவில்லை

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

ஒரு ஊருல ஒரு நாய் இருந்திச்சாம்... எப்படி உடம்ப வழக்குரதுன்னு தெரியாம கண்டத தின்னுபாத்தும் உடம்பு ஏறல. அப்பறமா ஒரு பெரிய மாமிசபிண்டத்த அல்லது அந்த மாதரி தோற்றத்துல இருந்தத தின்னுச்சாம்.... அதிக கொழுப்பு இருந்த மாமிச பிண்டத்த அதிகம் தின்னதால நாய் கொளுகொளுன்னு வந்துடிச்சாம்...

தேவை நிறைவேரிடுச்சின்னு அப்பறம் மீதி இருந்த அந்த மாமிச பிண்டத்த தூக்கி குப்பைதொட்டில போட்டுடிச்சாம்...

கொஞ்சம் நாள்லயே அந்த நாய் பல குட்டிகள போட்டிச்சாம், பல குட்டிகள போட்டாலும் கொளுகொளுன்னு இருந்ததால, சமாளிச்சி எல்லா குட்டிகளையும் வளதுடிச்சாம். குட்டிகல் எல்லாம் வளந்த பின்னாடி பாத்தா, குட்டிகளும் அந்த நாயும் கொஞ்சம் பலகினமான மாதரி இருந்திச்சாம்.... காசு கொடுத்து கண்டத வாங்கியும் ஒன்னும் வேலைக்கு ஆகலையாம்....

இனிமேல் நம்ம குட்டிகள் நாம இருந்த மாதரி நல்லா இருக்குனும்ம்னா,,, நம்ம தின்னதையே இதுகளுக்கும் கொடுக்கலாம்ன்னு... குப்பதொட்டிய நோக்கி ஓடிச்சாம்..

எத்தன வருசத்துக்குதான் அந்த மாமிசம் அப்படியே இருக்கும்...

இன்னும் கெட்டுபோகலன்னு குப்பைய நோன்டிகிட்டே இருக்கு அத தினத்துக்கு அப்பறம்தான் தெரியும் எப்படி நோய் தாக்கும்ன்னு.....

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

// செந்தழல் ரவி said...
இது கண்மூடித்தனமான அதிமுக டைப் எதிர்ப்பு.

அந்த உரைக்கு பின்னால் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளவேண்டும்...

தலித் சமுதாயத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஏ ராசாவுக்கு எதிரான பார்ப்பண ஊடக அரசியலை எதிர்த்தே வந்தது அந்த ஸ்டேட்மெண்ட்.
//

தலித் சமுதாயத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஏ ராசா இத்தனவருடமா வருடமா என்னத்த கிழிச்சாருன்னு சொல்லுங்க பாப்போம் ஸ்பெக்ட்ரம் ஊழல தவிர...
தன் சொந்த சமுதாயதுக்காச்சு ஏதாவது புள்ளயாச்சும் புடுங்கினாரா ?

சொந்த தொகுதிய பொது தொகுதியா மாத்திட்டாங்க, நின்னா தோத்துடுவோம்ன்னு பயந்து நீலகிரிக்கு (தனி) தொகுதிக்கு போய் நின்னவருதானே அவரு...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்