பின்பற்றுபவர்கள்

3 ஜூன், 2009

லங்கா ரத்னாக்கள் மற்றும் அமிதாப் !

புதுடில்லி: "ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை நிராகரிப்பது குறித்த முடிவை எனது மனசாட்சிப் படி எடுத்தேன்,'' என்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டதாக, அமிதாப் பச்சன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில், ஐ.ஐ.எப்.ஏ., விருதுகள் விழாவை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் வழங்க இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை நிராகரிக்கும் முடிவு என் தனிப்பட்ட முடிவு. எனது நாட்டு மக்கள் கவுரவமின்றி நடத்தப்படும் நிலையில், இந்த கவுரவ விருதை ஏற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. இது எனது மனசாட்சிப் படி எடுத்த முடிவாகும்.

நன்றி தினமலர்(முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவிடம் லங்க ரத்னா விருது பெற்ற 'இந்து ராம்')

இலங்கைப் போரில் சிங்களவர்களைவிட முனைப்புக் காட்டிய இந்தியர்களுக்கு இன்னும் பல விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வெறுப்புகள் ஏன் குறையாமல் இருக்கிறது என்பதற்கு வராலாறுகள் தோறும் இதுபோன்ற நிகழ்வுகள் இருப்பதைவிட வேறென்ன காரணமாக இருக்க முடியும் ? மனசாட்சிகளே இல்லாத விலங்குகளிடையே வாழ்வது தான் மனிதம் பற்றி அவ்வப்போது நினைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது.

7 கருத்துகள்:

கிஷோர் சொன்னது…

ஹ்ம்ம்ம் என்னத்த சொல்ல? :(

சரி பிறந்தநாள் சிறப்பு பதிவு இல்லையா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இனத் துரோகிகள் குப்பை கொட்டும் காலம் மட்டும் அல்ல. மனித நேயம் மரிக்கும் காலமும் கூட. பணம் மட்டுமே இப்போது உயிர் பெற்றிருக்கிறது. அதாவது வாழட்டும்!

கண்டும் காணான் சொன்னது…

நாம் தமிழர் கண்ணன் அவ்வளவுதான்

வால்பையன் சொன்னது…

தமிழின தலைவருக்கு என்ன பட்டம் கொடுப்பாங்கன்னு ஒரு சர்வே நடத்தலாமா?

Raj சொன்னது…

இந்த ஆள்(ராம்) தமிழன் தானா...சிங்களவன்னு கேள்விப்பட்டேனே???????

பெயரில்லா சொன்னது…

அமிதாப்பும் அவ்வளவு தூரம் தகுதியானவர் கிடையாது. ஏற்கனவே பிரபலம். பாவம் ராம் என்ன செய்வாரு? நீங்களே கூப்பிட்டு ஏதாவது குடுங்க வாங்கிக்குவாரு.

Ginger சொன்னது…

பாத்திகிணே இருங்க, நம்ம சண்டிவிக்கு, சிங்கள டிவி, எஃபெம் உரிமை கிடைக்கும்போது, திராவிட தலைவர் அங்க போய் கால்ல விழுவாரு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்