பின்பற்றுபவர்கள்

23 ஏப்ரல், 2009

உறுப்புதானமும், பாவ புண்ணியங்களும் !

தற்காலப் பழமொழிகளாக வந்துள்ள 'தானத்தில் சிறந்தது இரத்த தானம்', 'உடல் உறுப்பு தானம்' என்பது வழங்கப்பட்டு உயிர்காத்தல் பற்றி வழியுறுத்துகிறது. தான் நலிவுறாமல்(பாதிப்பு அடையாமல்) பிறருக்கு நன்மை செய்யமுடியுமென்றால் அதுவே பிறர் மீது செலுத்தும் அன்பிற்கான அடையாளம், அந்த வகையில் உதிர தானம் மனிதர்களிடையே அன்பை வளர்க்கத் தூண்டுகிறது. உதிரத்தில் வகைகள் உண்டு, ஆனால் அந்த வகைகள் சாதி மதம் கடந்து அனைத்து இன மக்களிலும் அந்த வகைகள் இருக்கிறது. எந்த ஒரு சாதிக்காரன், மதத்துக்காரனுக்கும் தனிப்பட்ட பிரிவு வகை உதிரங்கள் கிடையாது. (விந்தனுவும், கருமுட்டையும் கூட அப்படித்தான், இணைந்தால், இணைத்தால், அவை இணையும்) பல இன மக்களுக்கும் பலவகை உதிரங்கள் பொதுவானவையே. வெள்ளயன் ஒருவருக்கு ஏ+ உதிரம் தேவைப்பட்டால் கருப்பர் இனத்தில் உள்ளவருக்கு அதுவே இருந்து கொடுக்க முன்வந்தால் அந்த உதிரம் வெள்ளையர் உடலில் கண்டிப்பாக சேரும். நிறவேறுபாடுகள் தோலுக்கு மட்டுமே உடலில் இருக்கும் உறுப்பின் தன்மைக்கும், உதிரத்திற்கும் கிடையாது. உறுப்புதானம், உதிரதானம் பல்வேறு இனமக்கள் அனைவரும் மனிதர்களே என்று உணர்த்தவும், உயிர்காக்கவும் செய்யப்படும் நற்கொடை.

*****

பிறப்பற்ற நிலையை அடைவதே வாழ்வின் நோக்கம் எனவே பாவ புண்ணியங்களை முடிந்த அளவுக்கு நேர் செய்வது அல்லது இல்லாமல் செய்வதன் மூலம் அந்த நிலையை அடைய முடியும் என்பதாக பல்வேறு மத நம்பிக்கைகள் வலியுறுத்துகின்றன. இன்னும் சில மதங்கள் வெளிப்படையாகவே அனைத்தும் இறைவன் செயல்தான், துன்பப்படுபவர்களை துன்பம் அடைந்தவராகப் பார்க்காதீர்கள், அவரின் முற்பிறவி (கரும )வினையைத்தான் துய்கிறார், இறைவனாகிய நீதிபதி கொடுக்கும் தண்டனை, எனவே அவர்களுக்கு உதவி இறைவனின் கோபத்துக்கு ஆளாகதீர்கள் என்கிறார்கள். குறிப்பாக சுனாமி சாவுகளின் போது வெட்கம் சிறுதுமின்றி இத்தகைய கருத்தாங்கங்கள் இறை நம்பிக்கை என்ற பெயரில் எழுந்தன.

ஒருவருக்கு உதவுவது என்பது புண்ணிய கர்மமாம், அதனால் ஆன்மாவில் கர்மம் சேர்ந்துவிடுமாம், மீண்டும் பிறவிப் பெருங்கடலில் அந்த புண்ணிய கர்மம் பிடித்து தள்ளிவிடுமாம். புண்ணியம் செய்தவர்கள் அதன் பலனான மகிழ்வான வாழ்வை அனுபவிக்க மீண்டும் பிறப்பார்களாம், அப்படி மீண்டும் பிறந்துவிட்டு சூழல் தவறு செய்தால் பாவம் ஏற்பட்டு அதன் பிறகான மற்றொரு மறுபிறவி எடுப்பார்களாம், இப்படியாக பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடாமல் உழல்வார்களாம். இப்படியான நம்பிக்கை சாதரணவர்களிடம் கூட இல்லை, பல 'வேதாந்திகள்' இத்தகைய நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இவர்கள் அறிவுறுத்துவது உடல் உறுப்பு தானமோ, உதிரதானமோ தனிமனித ஆன்மாவுக்கு தீமையையே அதாவது தனக்குத்தானே தீமையையே கொடுக்கும் என்கிறார்கள். இவர்களெல்லாம் இறை நம்பிக்கை என்று எதை நினைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 'அன்பு' இந்த சொல்லுக்குத்தான் இறைவனும் கட்டுப்படுவதாக பலரது நம்பிக்கை, இறைவனிடம் அன்பு செலுத்துவது இயல்பானதாக எப்பொழுது ஏற்படுகிறதென்றால் சக மனிதரை நேசிக்க தெரிந்தால் மட்டுமே கண்ணுக்கு தென்படாத இறைவனை நேசிப்பதற்கு அது பயிற்சியாக அமைகிறது.

சகமனிதர் மீது அன்பு செலுத்தாதவன் தன்னலமாக பிறவி அறுக்கிறேன், பேரின்பம் காணப் போகிறேன் என்ற பெயரில் முட்டாள் தனமாக உயிர்காப்புக் கொடைகளை எதிர்ப்பது உண்மையிலே பலன் அளிக்குமா ? வின்னுலகம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும் மன்னுலகில் மனிதனை நேசிக்கத் தெரியதவன் ஆன்மிகம் என்ற பெயரில் இவற்றையெல்லாம் வழியுறுத்துவது எந்த வகை உயர்ந்த கொள்கை என்று தெரியவில்லை. பிறவி என்பது அவ்வளவு கசப்பா ? துன்பமா ? வின்னுலக அறிவைத் தறுவது பிறவியின்றி வேறென்ன என்று அவர்கள் கிஞ்சித்தும் நினைப்பதே இல்லை.

அன்பிற்கு கல்லும் கரையும் என்பதாக அன்பைப் பற்றிய மென்மையை மேன்மையை பேசுவது நல்லோர் மாண்பு, அதை மறுத்துவிட்டு காணப்போவதாக நம்பம்படும் பரப்பிரம்மம், பரமானந்தம், பேரிண்பம் வேறு என்ன எழவாவது இருக்கட்டும் அது அவ்வளவு உயர்ந்ததா ?

*****

என்னைக் கேட்டால் இறைவன் இருந்தால் அவனும் நாத்திகனே ஏனெனில்

1. இறைமறுப்பு - இறைவன் யாரையும் வணங்குவதாக, வணக்கத்துக்குரியதாக நினைப்பதில்லை
2. எல்லோரையும் சமமாகவே நினைக்கிறான் (மனிதர்களால் நடத்தப்படும் வழிபாட்டு தளங்கள் தான் அவற்றில் கட்டுப்பாடு வைத்திருக்கிறது)
3. எந்த மதத்திற்கும் உடையவன் அல்ல ( ஆனால் மதவாதிகள் மதத்தை இறைவன் தோற்றுவித்தான் என்பர், அப்படி என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களை முரணான கொள்கையுடன் தோற்றுவிக்க முடியுமா ?)
4. பால்(ஆண்/பெண்) ஆதிக்கம் செலுத்தாதவன்

இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையாலும் அதன் கொள்கைகளாலும் ஆத்திகன் என்ற பெயரில் சக மனிதனுக்கும் உதவும் மனப்பாண்மையை துறந்து, அதாவது புண்ணியம் பெற்று பிறவி அடைந்துவிடுவோ என்று நினைப்பதைவிட, கொள்கை, குப்பை பற்றி எதுவும் நினைக்காமல் நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.

42 கருத்துகள்:

Test சொன்னது…

மீ த பஸ்ட்

மிக சிறந்த பதிவு, 'இரத்த தானம்', 'உடல் உறுப்பு தானம்' பொறுத்தவரை மட்டுமே :)

லோகன்

நிகழ்காலத்தில்... சொன்னது…

//இறைவனிடம் அன்பு செலுத்துவது இயல்பானதாக எப்பொழுது ஏற்படுகிறதென்றால் சக மனிதரை நேசிக்க தெரிந்தால் மட்டுமே கண்ணுக்கு தென்படாத இறைவனை நேசிப்பதற்கு அது பயிற்சியாக அமைகிறது.//

சரியான கருத்து.

நிகழ்காலத்தில்... சொன்னது…

//நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.//

அங்கேயிருந்து இன்னும் மேலே வாருங்கள் என்றே நாம் சொல்கிறோம்.

’ஆன்மீகவாதிகள்’ இறைவனை மனிதஉருவமாக நினைக்கிறார்கள்.

அவர்களோடு கடுமையாக போராடுவதை விடுத்து இறைவன் என்பது இறை - ஆற்றல் - அது - எது என உணர்வோம், உணர்த்த முயற்சிப்போம். இதையே நான் நாத்திகவாதிகளிடம் விரும்புகிறேன்

அப்பாவி முரு சொன்னது…

//இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையாலும் அதன் கொள்கைகளாலும் ஆத்திகன் என்ற பெயரில் சக மனிதனுக்கும் உதவும் மனப்பாண்மையை துறந்து, அதாவது புண்ணியம் பெற்று பிறவி அடைந்துவிடுவோ என்று நினைப்பதைவிட, கொள்கை, குப்பை பற்றி எதுவும் நினைக்காமல் நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.//

கலைஞர், வேலூர் பொற்கோவிலில் இதைத்தான் “ஆத்திகமும், நாத்தீகமும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகள். ஒன்றை ஒன்று அழிக்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Logan said...
மீ த பஸ்ட்//
நன்றி !

//மிக சிறந்த பதிவு, 'இரத்த தானம்', 'உடல் உறுப்பு தானம்' பொறுத்தவரை மட்டுமே :)

லோகன்
//

அது போதும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
//இறைவனிடம் அன்பு செலுத்துவது இயல்பானதாக எப்பொழுது ஏற்படுகிறதென்றால் சக மனிதரை நேசிக்க தெரிந்தால் மட்டுமே கண்ணுக்கு தென்படாத இறைவனை நேசிப்பதற்கு அது பயிற்சியாக அமைகிறது.//

சரியான கருத்து.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...

’ஆன்மீகவாதிகள்’ இறைவனை மனிதஉருவமாக நினைக்கிறார்கள்.//

எப்படியாவது நினனக்கட்டும், மதவெறியிலும், கொள்கைகளினாலும் மனிதத்தை மறக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்
நாத்திகர்கள்.

//அவர்களோடு கடுமையாக போராடுவதை விடுத்து இறைவன் என்பது இறை - ஆற்றல் - அது - எது என உணர்வோம், உணர்த்த முயற்சிப்போம். இதையே நான் நாத்திகவாதிகளிடம் விரும்புகிறேன்
//

கடுமையான சாடல் மூட நம்பிக்கை குறித்தே. ஒருவருக்கும் பிரச்சனை இல்லாத நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் இருக்கட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//கலைஞர், வேலூர் பொற்கோவிலில் இதைத்தான் “ஆத்திகமும், நாத்தீகமும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகள். ஒன்றை ஒன்று அழிக்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

2:44 PM, April 23, 2009
//

கலைஞர் பேசும் போது இலக்கணத்துடன் பேசுவார்.

Test சொன்னது…

// அறிவே தெய்வம் said...
இறைவனிடம் அன்பு செலுத்துவது இயல்பானதாக எப்பொழுது ஏற்படுகிறதென்றால் சக மனிதரை நேசிக்க தெரிந்தால் மட்டுமே கண்ணுக்கு தென்படாத இறைவனை நேசிப்பதற்கு அது பயிற்சியாக அமைகிறது.//

சரியான கருத்து.
//
ரிபிடு :)

மணிகண்டன் சொன்னது…

****
சில மதங்கள் வெளிப்படையாகவே அனைத்தும் இறைவன் செயல்தான், துன்பப்படுபவர்களை துன்பம் அடைந்தவராகப் பார்க்காதீர்கள், அவரின் முற்பிறவி (கரும )வினையைத்தான் துய்கிறார், இறைவனாகிய நீதிபதி கொடுக்கும் தண்டனை, எனவே அவர்களுக்கு உதவி இறைவனின் கோபத்துக்கு ஆளாகதீர்கள் என்கிறார்கள்.
***

ரொம்ப கரெக்ட்டு. அந்த மதத்துக்கு என்ன பேரு? கோவிகண்ணன் மதமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
****
சில மதங்கள் வெளிப்படையாகவே அனைத்தும் இறைவன் செயல்தான், துன்பப்படுபவர்களை துன்பம் அடைந்தவராகப் பார்க்காதீர்கள், அவரின் முற்பிறவி (கரும )வினையைத்தான் துய்கிறார், இறைவனாகிய நீதிபதி கொடுக்கும் தண்டனை, எனவே அவர்களுக்கு உதவி இறைவனின் கோபத்துக்கு ஆளாகதீர்கள் என்கிறார்கள்.
***

ரொம்ப கரெக்ட்டு. அந்த மதத்துக்கு என்ன பேரு? கோவிகண்ணன் மதமா
//

சுனாமி இறைவன் ஆகிய சொற்களைக் கூகுளில் இட்டுத் தேடிப்பாருங்கள், 100க் கணக்கானவை கிடைக்கும்

இதுபோல

Sasirekha Ramachandran சொன்னது…

gud post!!

அப்பாவி முரு சொன்னது…

///கோவி.கண்ணன் 3:34 PM, April 23, 2009
//கலைஞர், வேலூர் பொற்கோவிலில் இதைத்தான் “ஆத்திகமும், நாத்தீகமும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகள். ஒன்றை ஒன்று அழிக்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

2:44 PM, April 23, 2009
//

கலைஞர் பேசும் போது இலக்கணத்துடன் பேசுவார்.///

இலக்கணமா முக்கியம், அதன் உள்!!அர்த்தம் தான் முக்கியம்.

மணிகண்டன் சொன்னது…

****
சுனாமி இறைவன் ஆகிய சொற்களைக் கூகுளில் இட்டுத் தேடிப்பாருங்கள், 100க் கணக்கானவை கிடைக்கும்

இதுபோல
*****

பாத்தேன் ! சூப்பரு. ரெண்டாவதா வந்த ரிசல்ட்ல இந்த கவிதை இருந்தது.

கடற்கரையில் நீ நடந்து போகாதே.!
உன்னை தொட்டு போகும் முயற்சியில்..!
கடல் அலைகள் சீறி வரும்..!
வேண்டாம்!..இன்னொரு சுனாமி

கவிதை எப்படி ? :)-

Rajaraman சொன்னது…

\\கொள்கை, குப்பை பற்றி எதுவும் நினைக்காமல் நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.//

யாரு நம்ம கொலைஞர் போலவா.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
****
சுனாமி இறைவன் ஆகிய சொற்களைக் கூகுளில் இட்டுத் தேடிப்பாருங்கள், 100க் கணக்கானவை கிடைக்கும்

இதுபோல
*****

பாத்தேன் ! சூப்பரு. ரெண்டாவதா வந்த ரிசல்ட்ல இந்த கவிதை இருந்தது.

கடற்கரையில் நீ நடந்து போகாதே.!
உன்னை தொட்டு போகும் முயற்சியில்..!
கடல் அலைகள் சீறி வரும்..!
வேண்டாம்!..இன்னொரு சுனாமி

கவிதை எப்படி ? :)-
//

மணி,

தூண்டில் காரணுக்கு மீன் இரையை இழுக்கிறதா ? என்றே நினைப்பு இருக்குமாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
\\கொள்கை, குப்பை பற்றி எதுவும் நினைக்காமல் நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.//

யாரு நம்ம கொலைஞர் போலவா.
//

ஆகா வந்துட்டாரு இராஜாராமன்,

இறைவா, உன்னை விரைவில் அடைய வேண்டும், நல்லவனாக 100 பிறவிகள் வேண்டாம், நாத்திகராக பிறந்து மூன்றே பிறவிகளில் உன்னை அடைய வேண்டும் என்று ஜெய விஜயனைப் போல், எப்போதும் கலைஞர் நினைவாகவே இருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sasirekha Ramachandran said...
gud post!!
//

நன்றி !

Rajaraman சொன்னது…

இன்னுமா அந்தாளை நம்பி தாங்கி பிடிச்சிட்டு இருக்கீங்க. ஒ நீங்க வெளி நாட்டில் இருக்கீங்க இல்ல, அதான் இங்க உள்ள நடப்பு புரியல போலிருக்கு.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//என்னைக் கேட்டால் இறைவன் இருந்தால் அவனும் நாத்திகனே ஏனெனில்

1. இறைமறுப்பு - இறைவன் யாரையும் வணங்குவதாக, வணக்கத்துக்குரியதாக நினைப்பதில்லை
2. எல்லோரையும் சமமாகவே நினைக்கிறான் (மனிதர்களால் நடத்தப்படும் வழிபாட்டு தளங்கள் தான் அவற்றில் கட்டுப்பாடு வைத்திருக்கிறது)
3. எந்த மதத்திற்கும் உடையவன் அல்ல ( ஆனால் மதவாதிகள் மதத்தை இறைவன் தோற்றுவித்தான் என்பர், அப்படி என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களை முரணான கொள்கையுடன் தோற்றுவிக்க முடியுமா ?)
4. பால்(ஆண்/பெண்) ஆதிக்கம் செலுத்தாதவன்//

நல்ல கருத்துக்கள். ஆத்திகனோ, நாத்திகனோ நல்லவை செய்து மனிதனாக இருங்கள்.

மணிகண்டன் சொன்னது…

***
தூண்டில் காரணுக்கு மீன் இரையை இழுக்கிறதா ? என்றே நினைப்பு இருக்குமாம்.
***

suthamaa puriyala govi

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் 10:00 PM, April 23, 2009
***
தூண்டில் காரணுக்கு மீன் இரையை இழுக்கிறதா ? என்றே நினைப்பு இருக்குமாம்.
***

suthamaa puriyala govi
//

பம்மல் கே. சம்பந்தம் படம் பார்த்திங்களா ?

இதுவும் புரியவில்லை என்றால் சொல்லுங்கள் சொல்கிறேன் :)

மணிகண்டன் சொன்னது…

***
பம்மல் கே. சம்பந்தம் படம் பார்த்திங்களா ?

இதுவும் புரியவில்லை என்றால் சொல்லுங்கள் சொல்கிறேன் :)
**

இது புரியுதே !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
***
பம்மல் கே. சம்பந்தம் படம் பார்த்திங்களா ?

இதுவும் புரியவில்லை என்றால் சொல்லுங்கள் சொல்கிறேன் :)
**

இது புரியுதே !
//

அது........! அனுபவிக்கனும் ஆராயப்படாது ! :)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எழுதிய உங்களையும், இதை எழுத தூண்டிய “அவனையும்” வன்மையாக கண்டிக்கிறேன். :))

நீங்கள் எல்லாம் எப்பொழுது நல்ல கார்மாவை சேர்க்க போகிறீர்களோ....

பீர் | Peer சொன்னது…

//1. இறைமறுப்பு - இறைவன் யாரையும் வணங்குவதாக, வணக்கத்துக்குரியதாக நினைப்பதில்லை//

அவன் நினைப்பதில்லை, மாறாக அவனை மட்டுமே அனைவரும் வணங்கத்திற்குரியவனாக நினைக்க வேண்டும் என்கிறான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//" உழவன் " " Uzhavan " said...

நல்ல கருத்துக்கள். ஆத்திகனோ, நாத்திகனோ நல்லவை செய்து மனிதனாக இருங்கள்
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
எழுதிய உங்களையும், இதை எழுத தூண்டிய “அவனையும்” வன்மையாக கண்டிக்கிறேன். :))//

எல்லாம் (அ)வன் செயல் என்கிறீர்களா ?
:)

//நீங்கள் எல்லாம் எப்பொழுது நல்ல கார்மாவை சேர்க்க போகிறீர்களோ....
//

நல்ல கர்மாவை சேர்த்தாலும் பிறப்பு தானாம். அதனால் நல்லா யோசிச்சு முடிவெடுக்கனும்.

ம் உங்க கிட்ட ஒரு கேள்வி, ஆதிசங்கரர் பிரம்மத்தை அடைந்தார் என்று சொல்கிறார்கள்.

சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்ததும் நல்ல கருமாவில் தானே அடங்கும், ஏனெனில் சொல்லிக் கொடுப்பதால் ஒருவரின் அறிவு வளர்கிறது, ஒருவரின் செயலை மாற்றி அமைப்பது, அப்படி என்றால் ஆதிசங்கரர் கர்மம் அற்றவர்(விகர்மி) என்று எப்படி சொல்ல முடியும் ?

பீர் | Peer சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

Peer said...
////1. இறைமறுப்பு - இறைவன் யாரையும் வணங்குவதாக, வணக்கத்துக்குரியதாக நினைப்பதில்லை//

அவன் நினைப்பதில்லை, மாறாக அவனை மட்டுமே அனைவரும் வணங்கத்திற்குரியவனாக நினைக்க வேண்டும் என்கிறான்.
////

Peer, நன்றி ! தனக்கு மேல் யாரும் இல்லை என்பவன் நாத்திகன் தானே ?
:)

பீர் | Peer சொன்னது…

அத்தோடு நின்றுவிடவில்லை, தன்னை வணங்கவும் சொல்கிறானே?
அகராதியில் நாத்திகனுக்கு, தன்னை வணங்கச்சொல்பவன் என்றும் வருகிறதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Peer said...
அத்தோடு நின்றுவிடவில்லை, தன்னை வணங்கவும் சொல்கிறானே?
அகராதியில் நாத்திகனுக்கு, தன்னை வணங்கச்சொல்பவன் என்றும் வருகிறதா?
//

தனக்குக் கிழாக சகமனிதனை நாத்திகன் நினைப்பது
இல்லை. தனக்கு சமமாகவே நினைப்பான். பலகடவுள் இருந்தால், ஒவ்வொருவரும் சமமாக இருந்தால் என்னை மட்டுமே வணங்கு என்று கடவுளால் சொல்ல முடியாது அல்லவா ? பல நாத்திகர்கள் இருப்பதால் தான் அவ்வாறு சொல்ல முடியவில்லை.

லாஜிக் சரியா ?

பீர் | Peer சொன்னது…

// கோவி.கண்ணன் said...

லாஜிக் சரியா ?//

'பலகடவுள் இருந்தால்' இதுதான் இடிக்கிறது. நாத்திகர்கள், இதனால்தான் / இதை பிடித்துக்கொண்டிருப்பதால்தான் நாத்திகனாயிருக்கிறார்கள்.
அவன் மேலும் சொல்கிறான், ' வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை'
அவன் எத்தேவையுமில்லாதவன், அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை, அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். - இறைவேதம் 112 - 1-4

பீர் | Peer சொன்னது…

பி.கு; இதைச்சொல்வதனால், உங்கள் தலைப்பு "உறுப்புதானமும், பாவ புண்ணியங்களும் !" க்கு மாற்றுக்கருத்து கொண்டுள்ளேன் என்பதாகாது.

இறை நம்பிக்கை பெற்றோர்கள் வழி வருவதுதான், நான் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால் நான் ஒரு இஸ்லாமியனாக இருப்பேன். மற்றப்டி பிறக்கும் குழந்தைகள் எதுவுமே தனக்கு இதுதான் கடவுள் என்று நினைத்துக் கொண்டு பிறப்பது இல்லை. நினைவு தெரியாதவரை எந்த குழந்தைக்கும் கடவுள் கிடையாது, தனக்கு மேல் ஒருவன் இருப்பான் என்றெல்லாம் நினைக்காது.

பெற்றோர்களின் நம்பிக்கையை கடந்த / தகர்த்த நாத்திகன் ஒரு வளர்ந்த குழந்தை.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Peer said...
பி.கு; இதைச்சொல்வதனால், உங்கள் தலைப்பு "உறுப்புதானமும், பாவ புண்ணியங்களும் !" க்கு மாற்றுக்கருத்து கொண்டுள்ளேன் என்பதாகாது.
//

நான் அப்படிக் கொள்ளவில்லை. இறை மறுப்பு அனைவருமே செய்கிறார்கள். ஆனால் மறுக்கப்படுவது பிற மதத்தின் இறை(நம்பிக்கை)யை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்

பீர் | Peer சொன்னது…

// கோவி.கண்ணன் said...
நான் அப்படிக் கொள்ளவில்லை. இறை மறுப்பு அனைவருமே செய்கிறார்கள். ஆனால் மறுக்கப்படுவது பிற மதத்தின் இறை(நம்பிக்கை)யை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் //

இறையை மறுப்பவனுக்கான நம்பிக்கைதான் இங்கு இடப்படுவது. பிற மதத்தின் நம்பிக்கையை மறுப்பதற்கான மேடை இதுவல்ல என்பதை அறிவேன்.

பொழுது விடிய போகுது இன்னும் தூங்க ஆரம்பிக்கல...

நல்லா தூங்குங்க !

for a person A,

B = 0; C = 0

for a person B,

A = 0; C = 0

for a person C,

A = 0; B = 0

for a person D,

A = 0; B = 0; C = 0

D - இங்கே நாத்திகன்.

பீர் | Peer சொன்னது…

//கோவி.கண்ணன் said...

for a person A,

B = 0; C = 0

for a person B,

A = 0; C = 0

for a person C,

A = 0; B = 0

for a person D,

A = 0; B = 0; C = 0

D - இங்கே நாத்திகன்.//

Simply superb... rest in next..

ஆ.ஞானசேகரன் சொன்னது…

// நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.//

வழிமொழியலாம்....

மணிகண்டன் சொன்னது…

****
சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்ததும் நல்ல கருமாவில் தானே அடங்கும், ஏனெனில் சொல்லிக் கொடுப்பதால் ஒருவரின் அறிவு வளர்கிறது, ஒருவரின் செயலை மாற்றி அமைப்பது, அப்படி என்றால் ஆதிசங்கரர் கர்மம் அற்றவர்(விகர்மி) என்று எப்படி சொல்ல முடியும் ?
****

நல்ல கேள்வி. இதற்கு ஒரு சிறு விளக்கம் மற்றும் கதை.

ஒருமுறை ராதே / கிருஷ்ணர் / துர்வாச முனிவர் மூணு பெரும் மீட் பண்ண முடிவு எடுத்தாங்க. யமுனையோட ஒரு பக்கம் ராதே மற்றும் துர்வாசர், அடுத்த பக்கம் கிருஷ்ணர். ராதே கிருஷ்ணருக்கு நல்ல சாப்பாடு ஒரு லஞ்ச் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு வராங்களாம். ஆனா துர்வாச முனிவருக்கு ஒரே பசியாம். அத மொத்தத்தையும் அவர் வாங்கி நல்ல துன்னுட்டாராம் ! ராதேக்கு ஒரே கடுப்பு. பட், இருந்தாலும் கிருஷ்ணர் பாக்க போற சந்தோஷத்துல முனிய மன்னிசுடறாங்க. ஆனா, யமுனையை பாத்தா ஒரே வெள்ளம். இவங்க கிட்ட கப்பல், படகு, எதுவுமே இல்ல. ராதே என்ன பண்றதுன்னு துர்வாசர் கிட்ட கேட்டவுடன, யமுனையே, பசியோடு இருக்கும் முனி சொல்றேன், வழி விடுன்னு சொல்லுவாராம். யமுனை டக்குன்னு ஒரு பாத் கிரியேட் பண்ணி கொடுக்குமாம். நடந்து போய்டுவாங்களாம். அங்க போயிட்டு கிருஷ்ணர பாத்து ஜாலியா கொஞ்ச நேரம் லவ் பண்ணிட்டு டைம் பாத்தா இரவு 8 மணி ஆயிடுமாம். ராதேக்கு வூட்டுக்கு எப்படி போகுதுன்னு ஒரே டரியல் ஆயிடுமாம். கிருஷ்ணர் கிட்ட வழி கேட்பாளாம். அதுக்கு அவரு, யமுனையே, யமுனையே - கல்யாணம் பண்ணாத பிரமச்சாரி சொல்றேன். வழி விடுன்னு சொல்லுவாராம். படக்குன்னு மறுபடியும் வழியாம் !

ராதேக்கு ஒரே குழப்பமாம். ஆனா, அப்ப இந்த கதையை சொல்ல நான் அங்க இல்ல !

புருனோ Bruno சொன்னது…

உங்களின் மின்னஞ்சல் முகவரி என்ன. எனக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்புங்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்