பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2009

வலைப்பதிவில் மூன்று ஆண்டுகள் !

பதிவுலகம் அறிமுகமான பிறகு தயங்கி தயங்கி முதன் முதலில் கூகுள் புண்ணியத்தில் வலைப்பதிவில் துண்டுப் போட்டு இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக செய்த ஒரே செயல் என்றால் அது வலையில் எழுதி வருவது மட்டுமே. இதற்காக தியாகம் செய்த மணித்துளிகள் ஏராளம் ஏராளம். இந்த மணித்துளிகளை தொழில் தொடர்பில் பயன்படுத்தி இருந்தால் பொருளாதாரத்தைக் கூட்டி இருக்கலாம். மற்றபடி செலவு செய்த மணித்துளிகளால் நட்பு வட்டம் பெருகியது, தனிப்பட்ட மகிழ்ச்சி, பொழுது போக்கு என்ற அளவில் பயன் தான்.

நமக்கு பிடித்த செயல் என்றால் அதில் அலுப்பே வராது. வலையுலகம் ஒரு போதை என்று சொல்வதும் ஓரளவு உண்மைதான். எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றாலும் அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டுகள் இவற்றிற்கு அடிமை ஆகிறோம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று. மிகச் சிலரே நேரம் கிடைக்கும் போது எழுதுவதையும் வெறும் பொழுது போக்கு என்ற அளவில் வலைப்பதிவை மிகச் சரியாக கையாளுகின்றனர். கட்டட்டச் சுதந்திரத்தை வழங்குகிறது என்பதை தவறாகப் பயன்படுத்திக் கருத்து திணித்தலும் இங்கு உண்டென்றாலும் அதனால் பெரும் பாதிப்புகள் இல்லை என்று சொல்லலாம். இங்கும் மதப்பிரச்சாரங்கள், கொள்கைகள், பகுத்தறிவு போன்றவைகள் எழுதப்பட்டாலும் படித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. சிற்றிதழ்கள், இலக்கிய இதழ்கள் பொதுவாக வாசகர் மனநிலையைக் கட்டமைத்துவிடும், அவற்றில் எழுதி இருப்பதே உலக நடப்பாகும் என்று தனது சிந்தனையை அவற்றிற்கு அடிமை ஆக்குவதும், அடகு வைப்பதும் போன்ற ஆபத்துகள் இங்கு இல்லை. சொல்லப் போனால் கட்டமைக்கப் பட்ட வாசக மனநிலையை வலைப்பதிவு என்னும் மாற்றூடகம் வெற்றிகரமாக உடைத்தே வருகிறது.

மாற்றுக் கருத்துகள் சிறப்பானவையாக இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளும் மனநிலையை வலைப்பதிவாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள், முன்பு போல் 'ஒரே பார்வை' அதுவே சரியாக இருக்கும் என்கிற மனநிலையை வலைப்பதிவு வாசகர் வட்டம் தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்திருக்கிறது. ஆன்மிகவாதிகள் இறைமறுப்பாளர்களைவிட மென்மையான மனதுடையோர் என்கிற எண்ணம் ஒருகாலத்தில் எனக்கு இருந்தது, ஒருவன் திருந்தி வாழ இறைநம்பிக்கையே கைகொடுக்கிறது என்கிற கருத்தையெல்லாம் நான் கொண்டிருந்தேன். ஒழுக்கத்திற்கும் ஆன்மிகத்திற்குமான பலமான முடிச்சு இருப்பதாக நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அவையெல்லாம் உடைபட்டு...தனிமனித ஒழுக்கம் என்பது வேறு, நம்பிக்கைகள் வேறு அதற்கும் இறை நம்பிக்கை / நம்பிக்கை இன்மை இவற்றிற்கு யாதொரு தொடர்பும் இல்லை என்று தெளிந்தது வலைப்பதிவுகளில் வரும் பல்வேறு தரப்பினரின் கட்டுரைகளை எண்ணங்களை வாசித்து அறிந்த பிறகுதான். இங்கே வலைப்பதிவில் கருத்துத் திணித்தல் என்பது பலமாக எதிர்க்கப்படுகிறது, அப்படி முன்முடிவுடன் எழுத வருபவர்கள் வெறும் விளம்பரதாரர்களாக அறியப்படுகின்றனர்.

யார் யாரெல்லாம் எழுதலாம் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு அவர்களின் கருத்துக்களையே பொதுமக்களின் கருத்தாக அமைக்கும் அச்சு ஊடகங்களில் நச்சுத் தன்மைகள் போன்றவை வலைப்பதிவில் எடுபடுவதில்லை. ஒரு கட்டுரை எழுதப்பாட்டால் அதில் சொல்லப்பட்டிருப்பவை என்ன மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளவை எவை என்பதை வாசகர்கள் மிகச் சரியாக அடையாளம் கண்டு உடனடியாக எதிர்வினையைப் பதியவைக்கிறார்கள், இதற்கு 'சிவாஜி' ஷங்கரோ, 'அயோத்தியா மண்டபம்' சுஜாதாவோ தப்புவதில்லை. வாசகர் கடிதம் என்ற அளவில் அதுவும் அந்த இதழிலுக்கு எதிராக அமையவில்லை என்றால் மட்டுமே பொதுமக்களின் கருத்துகள் ஊடகங்களில் இடம்பெற்று வந்தது. ஒரு இணைய இணைப்புடன் கணினி இருந்தால் நமது எண்ணங்களை உலகம் முழுவதும் உள்ள இணைய வாசர்களிடம் எடுத்துச் சொல்லிவிட முடியும்.
தொடர்ந்து ஆதரவு கொடுத்து, மாற்று கருத்து தெரிவித்து, பாராட்டுத் தெரிவிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி !

காலம் தொடர்ந்து சுழலும்...

46 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா!

S.A. நவாஸுதீன் சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கிரி சொன்னது…

//இதற்காக தியாகம் செய்த மணித்துளிகள் ஏராளம் ஏராளம். இந்த மணித்துளிகளை தொழில் தொடர்பில் பயன்படுத்தி இருந்தால் பொருளாதாரத்தைக் கூட்டி இருக்கலாம். //

நல்லா சொன்னீங்க :-)

//செலவு செய்த மணித்துளிகளால் நட்பு வட்டம் பெருகியது, தனிப்பட்ட மகிழ்ச்சி, பொழுது போக்கு என்ற அளவில் பயன் தான்.//

உண்மை

//காலம் தொடர்ந்து சுழலும்.//

கலக்குங்க

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோவி கண்ணன்

சி தயாளன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

நீங்கள் எழுதின பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்தா,,நன்னா மினக்கெட்டு இருக்கிறியள்...:-))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே!
நல்ல பதிவு!

நாகை சிவா சொன்னது…

வாழ்த்துக்கள்...

தொடர்ந்து சுழலட்டும்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்... காலம் என்றும் போல சுழலட்டும்...

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

காலம் அறியும் களமாக இல்லாமல்
காலத்தை கூறும் கலமாக உங்கள் வலைப்பூ இருக்கிறது.


வாழ்த்துக்கள்

மூன்றாண்டுகள் என்பது உங்கள் பணிக்கு சாதாரணமய்யா :)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என்னைப் போன்றவர்களை எழுத வைத்ததும் உங்கள் சாதனை(என் பதிவை படிப்பவர்கள் வேதனை வேறு விஷயம்)
வாழ்த்துகள் கண்ணன்

சென்ஷி சொன்னது…

:-))

வாழ்த்துக்கள் கோவியாரே..!

வடுவூர் குமார் சொன்னது…

வழக்கம் போல் பல நல்ல பதிவுகளை வரும் ஆண்டுகளிலும் எதிர்பார்கிறோம்.
வாழ்த்துகள்.

மனுநீதி சொன்னது…

வாழ்த்துக்கள் சார்.

VANJOOR சொன்னது…

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோவியாரே!

Subankan சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா! தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து படிக்கின்றோம.

Unknown சொன்னது…

Wish you all the best gk.

We enjoyed lot when we reading your post, I hope you covered most of the subject… I believe that now you are going to spiritual area… bcoz most of topic comes related spiritual.

Wish you all the success Govi Kannan and bright future.

We expecting much and much nice topic from your side.

Anyhow gk, How is the Singapore now? I have some questions; can I have your email address please?

Take care,
--Mastan

ராம்.CM சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தருமி சொன்னது…

தொடர ...

வளர ....

வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

மூன்றாண்டுகளில் மிக அதிக இடுகைகள் கொண்ட பதிவர் என்ற பெருமை தங்களுக்குரியதாகத்தான் இருக்கும். தொடர்ந்து வ(ள)ர வாழ்த்துக்கள் ஜிகே.

ச.பிரேம்குமார் சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா :)

அது சரி(18185106603874041862) சொன்னது…

வாழ்த்துக்கள் தல..

Suresh சொன்னது…

வாழ்த்துகள் நண்பா :-)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா...

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

வாழ்த்துக்கள் , நான் இப்ப தான் தொடங்கயுள்ளேன், பார்க்கலாம் அப்பப்போ

TBCD சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணாச்சி..

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

உங்களைப் போன்றவர்களின் எழுத்துகள் மூலம் தான்
தமிழை சுவைக்கின்றேன்

பழமைபேசி சொன்னது…

வாழ்த்துகள் அன்பரே!

ராஜ நடராஜன் சொன்னது…

மூன்று வருடமாக சிந்திப்பது தவிர எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்று சொல்லுங்கள்:)எனக்கெல்லாம் இந்தப் பிரச்சினையே இல்லை.வந்தமா,உட்கார்ந்தமா,பார்த்தமா,பின்னூட்டம் அங்கே இங்கேன்னு ரெண்டு (பின்னூட்டம்)போட்டமான்னு ஓடுது வாழ்க்கை.எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்களுடன்...

anujanya சொன்னது…

வாழ்த்துகள் கோவி. இதே உற்சாகத்துடன் வரும் நாட்களில் தொடரவும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

enRenRum-anbudan.BALA சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள், கோவி. கண்ணன்...

Subramanian சொன்னது…

'எங்கள்' வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.

குடுகுடுப்பை சொன்னது…

vazhtukkal

நிகழ்காலத்தில்... சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன் கோவியார்.

முகவை மைந்தன் சொன்னது…

வாழ்த்துகள். உங்களின் சிறப்பான இடுகைகளை தொகுத்து பொத்தகமாக வெளியிடலாமே! நான் வாங்குறேங்க :-)

Thekkikattan|தெகா சொன்னது…

அதுக்குள்ளும் 3 வருஷமாச்சா... காலத்துக்கு ஏது காலம் :-)).

அழகா புட்டு புட்டு வைச்சிருக்கீங்க, இந்த வலைப்பதிவுகளால் எப்படி வாசிப்பாளனின் சிறைபட்ட(பெரிய ஊடகங்களால்) எண்ண ஓட்டம் அடைப்பு நீக்கப்பட்டு இப் பெரும் உலகத்திற்குள் பிரவேசிக்க வைக்கிறதுன்னு...

தொடர்ந்து பாயட்டும் காலத்தின் arrow ... வாழ்த்துக்கள்!!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வாழ்த்த வயதில்லை பெரியவா.
வணக்கங்கள்.
நீங்க செய்யிற அளவுக்கு கடுமையான உழைப்பு எங்களால செய்யமுடியல. உங்களோட பதிவெழுதும் வேகம் என்னைப் போன்ற சோம்பேறிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

priyamudanprabu சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!

priyamudanprabu சொன்னது…

அப்ப்பாடியோவ்
எம்புட்டுபதிவு!!?!?!?!??
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!

priyamudanprabu சொன்னது…

மூன்றாண்டுகள் என்பது உங்கள் பணிக்கு சாதாரணமய்யா :)

பரிசல்காரன் சொன்னது…

//தொடர்ந்து ஆதரவு கொடுத்து, மாற்று கருத்து தெரிவித்து, பாராட்டுத் தெரிவிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி !//

--மாற்று கருத்து தெரிவித்து--
--மாற்று கருத்து தெரிவித்து--
--மாற்று கருத்து தெரிவித்து--

இதுதான் உங்களிடம் எனக்குப் பிடித்தது. சொல்லப்போனால் சிங்கைப் பதிவர்களிடம் என்றும் சொல்லலாம்!

மாற்றுக் கருத்தை மதித்து விவாதிக்கும் பாங்கு.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//இதுதான் உங்களிடம் எனக்குப் பிடித்தது. சொல்லப்போனால் சிங்கைப் பதிவர்களிடம் என்றும் சொல்லலாம்!

மாற்றுக் கருத்தை மதித்து விவாதிக்கும் பாங்கு.//

பலமுறை சிங்கைப்பதிவர்களின் இந்தப் பண்பை பாராட்டியுள்ளீர்கள் பரிசல் அண்ணா.

இந்தப் பண்பு எங்களிடம் மட்டுமல்ல
அப்துல்லா, அபி அப்பா என பல பதிவர்களிடமும் இருக்கின்றது. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா.

சிங்கைப் பதிவர்கள் சார்பாக
ஜோசப் பால்ராஜ்

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் 2:07 PM, April 05, 2009
வாழ்த்துகள் அண்ணா!//

வாழ்த்துக்கு நன்றி தம்பி !

//Syed Ahamed Navasudeen 2:08 PM, April 05, 2009
மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

சையத், மிக்க நன்றி !

//கிரி 2:12 PM, April 05, 2009
//இதற்காக தியாகம் செய்த மணித்துளிகள் ஏராளம் ஏராளம். இந்த மணித்துளிகளை தொழில் தொடர்பில் பயன்படுத்தி இருந்தால் பொருளாதாரத்தைக் கூட்டி இருக்கலாம். //

நல்லா சொன்னீங்க :-)

//செலவு செய்த மணித்துளிகளால் நட்பு வட்டம் பெருகியது, தனிப்பட்ட மகிழ்ச்சி, பொழுது போக்கு என்ற அளவில் பயன் தான்.//

உண்மை

//காலம் தொடர்ந்து சுழலும்.//

கலக்குங்க

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோவி கண்ணன்//

கிரி தம்பி, பாராட்டு மிக்க நன்றி !

//’டொன்’ லீ 2:13 PM, April 05, 2009
வாழ்த்துக்கள்...

நீங்கள் எழுதின பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்தா,,நன்னா மினக்கெட்டு இருக்கிறியள்...:-))//

டொன் லீ தம்பி, மிக்க நன்றி ! ஆமாம் நிறைய நேரம் இதில் மூழ்கி இருக்கிறேன் !

//ஜோதிபாரதி 2:24 PM, April 05, 2009
வாழ்த்துகள் கோவியாரே!
நல்ல பதிவு!//

வெளிச்சப் பதிவர் நன்றி !

//நாகை சிவா 2:42 PM, April 05, 2009
வாழ்த்துக்கள்...

தொடர்ந்து சுழலட்டும்.//

சிவா நன்றி !

//ஆ.ஞானசேகரன் 2:52 PM, April 05, 2009
மூன்றாம் ஆண்டில் அடிவைக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்... காலம் என்றும் போல சுழலட்டும்...//

ஞானசேகரன், மிக்க நன்றி !

//ஸ்வாமி ஓம்கார் 3:09 PM, April 05, 2009
காலம் அறியும் களமாக இல்லாமல்
காலத்தை கூறும் கலமாக உங்கள் வலைப்பூ இருக்கிறது.


வாழ்த்துக்கள்

மூன்றாண்டுகள் என்பது உங்கள் பணிக்கு சாதாரணமய்யா :)//

பாராட்டுக்கு நன்றி ஸ்வாமி ஓம்கார்.


//T.V.Radhakrishnan 3:16 PM, April 05, 2009
என்னைப் போன்றவர்களை எழுத வைத்ததும் உங்கள் சாதனை(என் பதிவை படிப்பவர்கள் வேதனை வேறு விஷயம்)
வாழ்த்துகள் கண்ணன்//
நீங்களெல்லாம் இலக்கியத் துறையில் மரம் வளர்த்தவர், எவ்வளவு நாளைக்குத்தான் பழம் திண்ணு கொட்டை போட்டவர்னு சொல்வது ? அது பழைய டயலாக்:), உங்களைப் போன்றவர்களுடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது வலையால் கிடைத்த பலன்

//சென்ஷி 3:28 PM, April 05, 2009
:-))

வாழ்த்துக்கள் கோவியாரே..!//

சென்ஷி, நன்றி !

//வடுவூர் குமார் 3:35 PM, April 05, 2009
வழக்கம் போல் பல நல்ல பதிவுகளை வரும் ஆண்டுகளிலும் எதிர்பார்கிறோம்.
வாழ்த்துகள்.//

குமார் அண்ணா, நன்றி !

//உள்ளத்தில் இருந்து.. 3:38 PM, April 05, 2009
வாழ்த்துக்கள் சார்.//

மிக்க நன்றி சார்.

//VANJOOR 3:50 PM, April 05, 2009
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோவியாரே!//

மிக்க நன்றி வாஞ்சூரார் !

//Subankan 3:54 PM, April 05, 2009
வாழ்த்துகள் அண்ணா! தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து படிக்கின்றோம.//

சுபங்கன் மிக்க நன்றி !

//Mãstän 4:06 PM, April 05, 2009
Wish you all the best gk.

We enjoyed lot when we reading your post, I hope you covered most of the subject… I believe that now you are going to spiritual area… bcoz most of topic comes related spiritual.

Wish you all the success Govi Kannan and bright future.

We expecting much and much nice topic from your side.

Anyhow gk, How is the Singapore now? I have some questions; can I have your email address please?

Take care,
--Mastan//

மிக்க நன்றி மஸ்தான், ஸ்பிர்ட்சுவல் நம் அன்றாட வாழ்க்கையில் எப்படியேனும் வந்து போகும், அதனால் அதுபற்றி அவ்வப்போது எழுதுகிறேன், வாழ்த்துக்கு மிக்க நன்றி, மின்னஞ்சல் govikannan at gmail dot com

//ராம்.CM 4:44 PM, April 05, 2009
மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ராம்.

//தருமி 5:40 PM, April 05, 2009
தொடர ...

வளர ....

வாழ்த்துக்கள்//

நன்றி தருமி ஐயா.

//நிஜமா நல்லவன் 6:04 PM, April 05, 2009
மனமார்ந்த வாழ்த்துகள்.
//
பாரதி தம்பி வாழ்த்துக்கு நன்றி !

//சுல்தான் 6:24 PM, April 05, 2009
மூன்றாண்டுகளில் மிக அதிக இடுகைகள் கொண்ட பதிவர் என்ற பெருமை தங்களுக்குரியதாகத்தான் இருக்கும். தொடர்ந்து வ(ள)ர வாழ்த்துக்கள் ஜிகே.//

மிகுதியான இடுகை எழுதியவர் என்று சொல்ல முடியாது, பலர் இருக்கிறார்கள், மற்றபடி கட் அண்ட் பேஸ்ட் இல்லாது நிறைய எழுதி இருக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி சுல்தான் ஐயா

//பிரேம்குமார் 6:31 PM, April 05, 2009
வாழ்த்துகள் அண்ணா :)//

பிரேம்குமார் மிக்க நன்றி !

//அது சரி 6:46 PM, April 05, 2009
வாழ்த்துக்கள் தல..
//
வாழ்த்துக்கு நன்றி

//Suresh 7:53 PM, April 05, 2009
வாழ்த்துகள் நண்பா :-)//

வாழ்த்துக்கு நன்றி சுரேஷ் !

//VIKNESHWARAN 8:15 PM, April 05, 2009
வாழ்த்துகள் அண்ணா...
//

நன்றி தம்பி !

//அது ஒரு கனாக் காலம் 8:31 PM, April 05, 2009
வாழ்த்துக்கள் , நான் இப்ப தான் தொடங்கயுள்ளேன், பார்க்கலாம் அப்பப்போ//

வாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள் !

//TBCD 9:00 PM, April 05, 2009
வாழ்த்துக்கள் அண்ணாச்சி..//

நன்றி பெரிய தம்பி !

//திகழ்மிளிர் 9:23 PM, April 05, 2009
வாழ்த்துகள்

உங்களைப் போன்றவர்களின் எழுத்துகள் மூலம் தான்
தமிழை சுவைக்கின்றேன்//

திகிழ்மிளிர் வாழ்த்துக்குக்கும் பாராட்டுக்கும் நன்றி !

//பழமைபேசி 9:25 PM, April 05, 2009
வாழ்த்துகள் அன்பரே!//

பழமைபேசி ஐயா :) மிக்க நன்றி !

//ராஜ நடராஜன் 9:42 PM, April 05, 2009
மூன்று வருடமாக சிந்திப்பது தவிர எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்று சொல்லுங்கள்:)எனக்கெல்லாம் இந்தப் பிரச்சினையே இல்லை.வந்தமா,உட்கார்ந்தமா,பார்த்தமா,பின்னூட்டம் அங்கே இங்கேன்னு ரெண்டு (பின்னூட்டம்)போட்டமான்னு ஓடுது வாழ்க்கை.எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்களுடன்...//

நன்று சொன்னீர்கள் ! வாழ்த்துக்கு நன்றி ராஜ நடராஜன் அவர்களே !

//அனுஜன்யா 10:14 PM, April 05, 2009
வாழ்த்துகள் கோவி. இதே உற்சாகத்துடன் வரும் நாட்களில் தொடரவும் வாழ்த்துகள்.

அனுஜன்யா//

அனுஜன்யா மிக்க நன்றி !

//enRenRum-anbudan.BALA 10:35 PM, April 05, 2009
மனமார்ந்த வாழ்த்துக்கள், கோவி. கண்ணன்...
//

பாலா மிக்க நன்றி !

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 10:45 PM, April 05, 2009
'எங்கள்' வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.
//

ஐயா, மதுரை திரும்பிட்டிங்களா ? இருவரின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

//குடுகுடுப்பை 11:01 PM, April 05, 2009
vazhtukkal
//

நன்றி குடுகுடுப்பை !

//அறிவே தெய்வம் 11:02 PM, April 05, 2009
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அறிவே தெய்வம்,
வாழ்க வளமுடன் கோவியார்.//

வளர்க வையகம் !!! வாழ்த்துக்கு மிக்க நன்றி !

//முகவை மைந்தன் 11:10 PM, April 05, 2009
வாழ்த்துகள். உங்களின் சிறப்பான இடுகைகளை தொகுத்து பொத்தகமாக வெளியிடலாமே! நான் வாங்குறேங்க :-)//

புத்தகமா ? இதெல்லாம் டு மச் ! வாழ்த்துக்கு நன்றி !

//Thekkikattan|தெகா 11:36 PM, April 05, 2009
அதுக்குள்ளும் 3 வருஷமாச்சா... காலத்துக்கு ஏது காலம் :-)).

அழகா புட்டு புட்டு வைச்சிருக்கீங்க, இந்த வலைப்பதிவுகளால் எப்படி வாசிப்பாளனின் சிறைபட்ட(பெரிய ஊடகங்களால்) எண்ண ஓட்டம் அடைப்பு நீக்கப்பட்டு இப் பெரும் உலகத்திற்குள் பிரவேசிக்க வைக்கிறதுன்னு...
//

பாராட்டுக் கருத்துக்களுக்கு நன்றி தெகா !

//தொடர்ந்து பாயட்டும் காலத்தின் arrow ... வாழ்த்துக்கள்!!

ஜோசப் பால்ராஜ் 11:54 PM, April 05, 2009
வாழ்த்த வயதில்லை பெரியவா.
வணக்கங்கள்.
நீங்க செய்யிற அளவுக்கு கடுமையான உழைப்பு எங்களால செய்யமுடியல. உங்களோட பதிவெழுதும் வேகம் என்னைப் போன்ற சோம்பேறிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.//

யூசுப் பால்ராஜ் ஐயங்கார், பாராட்டுக்கு நன்றி !

//பிரியமுடன் பிரபு 12:52 AM, April 06, 2009
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!//

பிரபு நன்றி !

//பிரியமுடன் பிரபு 12:54 AM, April 06, 2009
அப்ப்பாடியோவ்
எம்புட்டுபதிவு!!?!?!?!??
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!
வாழ்த்துகள் அண்ணா!//
அப்பாடியோவ் ....
என்னது ? :)

//பிரியமுடன் பிரபு 12:55 AM, April 06, 2009
மூன்றாண்டுகள் என்பது உங்கள் பணிக்கு சாதாரணமய்யா :)
//

அது ஸ்வாமியின் ஆசி ! அவரு என்னச் சொன்னாருன்னு எனக்கும் புரியவில்லை :)

//பரிசல்காரன் 1:22 AM, April 06, 2009
//தொடர்ந்து ஆதரவு கொடுத்து, மாற்று கருத்து தெரிவித்து, பாராட்டுத் தெரிவிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி !//

--மாற்று கருத்து தெரிவித்து--
--மாற்று கருத்து தெரிவித்து--
--மாற்று கருத்து தெரிவித்து--

இதுதான் உங்களிடம் எனக்குப் பிடித்தது. சொல்லப்போனால் சிங்கைப் பதிவர்களிடம் என்றும் சொல்லலாம்!

மாற்றுக் கருத்தை மதித்து விவாதிக்கும் பாங்கு.//

சிங்கைப் பதிவர்களைக் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு நன்றி ! குறுகிய காலத்தில் மிகப் பெரிய நண்பர்கள் வட்டம் அமைத்த உங்களுக்கும் பாராட்டுகள் பரிசல் !

//எம்.எம்.அப்துல்லா 1:48 AM, April 06, 2009
வாழ்த்துகள் அண்ணா.
//

அப்துல்லா தம்பி, வாழ்த்துக்கு நன்றி !

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//இதற்காக தியாகம் செய்த மணித்துளிகள் ஏராளம் ஏராளம்//

எப்படி தான் உங்களுக்கு எல்லாம் நேரம் கிடைக்குது, ஒருவேள உங்களுக்கு மட்டும் ஒருநாளைக்கு நாப்பத்திஎட்டுமணி நேரமோ ?

//தொழில் தொடர்பில் பயன்படுத்தி இருந்தால் பொருளாதாரத்தைக் கூட்டி இருக்கலாம்//

கண்டிப்பா,, என்னாபன்னுறது ஆனா மனசுல இருக்குறத கொட்டி தீர்ப்பதே.. பிற்காலத்தில் மருத்துவத்திர்க்கு செய்யும் செலவை குறைக்கும்.

//நமக்கு பிடித்த செயல் என்றால் அதில் அலுப்பே வராது. வலையுலகம் ஒரு போதை என்று சொல்வதும் ஓரளவு உண்மைதான்//

ஆமா ஆமா.... இந்த காதல்... சரக்கு... போல...

//அங்கீகாரம், பாராட்டுகள் இவற்றிற்கு அடிமை ஆகிறோம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று//

போலியான பாராட்டுகளை தவிர்த்து... :)

//கட்டமைக்கப் பட்ட வாசக மனநிலையை வலைப்பதிவு என்னும் மாற்றூடகம் வெற்றிகரமாக உடைத்தே வருகிறது.//

மனதின் ஓட்டமே எழுத்து... கட்டுபாடற்ற நேர்மையான எழுத்துக்கு வலைப்பதிவு..

//மாற்றுக் கருத்துகள் சிறப்பானவையாக இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளும் மனநிலையை வலைப்பதிவாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள்//

நூறு %...

//தொடர்ந்து ஆதரவு கொடுத்து, மாற்று கருத்து தெரிவித்து, பாராட்டுத் தெரிவிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி !//

கண்டிப்பா.. கண்டிப்பா

//காலம் தொடர்ந்து சுழலும்.//
கருத்துக்களும் சுழலும்

பொது ஊடகங்களில் பொய் திரையை போட்டு ஒருவரை உட்சிக்கு கொண்டுசெல்லமுடியும்,.. அதை கிழிக்க சாதாரண மனிதனால் முடியாது... அல்லது அவன் பேச்சி எடுபடாது....

ஆனால் வலைப்பூவில் அது எடுபடாது.... பொய் திரைகள் கிழிக்கப்படும்.. போலிகள் ஒழிக்கப்படும்..

என் கருத்துக்கள் பல உங்கள் கருத்தோடு ஒத்துபோகிறது... :)

கோவியாரே மனமார்ந்த வாழ்த்துக்கள்

ILA (a) இளா சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.ILAM

CA Venkatesh Krishnan சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியாரே!

எந்தக் கருத்தையும் தெளிவாகச் சொல்லும் பாங்கும் மாற்றுக் கருத்தை மதிக்கும் பண்பும் நிறைந்திருக்கிறது உங்கள் வலைப்பூவில்.

காலத்தோடு வளரட்டும் உங்கள் எழுத்துக் களம்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்