பின்பற்றுபவர்கள்

7 ஏப்ரல், 2009

தமிழ் பால் மற்றும் இந்தி குசுபு !

தமிழ் மேம்பாட்டுச் சிந்தனைவாதிகளில் இரு குழுக்கள் உண்டு. ஒரு குழு பிறமொழிச் சொற்களை தமிழில் அப்படியே எழுத வேண்டும் என்றும் எடுத்துக்காட்டு 'ஆஸ்திரேலியா, ஜப்பான்... குஷ்பு, ஸ்ரேயா'
மற்றொரு குழு தமிழில் வடசொல் தவிர்த்தும், மெய்யெழுத்து முதலில் வராமல் எழுதவேண்டும் என்றும் எடுத்துக்காட்டு 'ஆசுதிரேலியா, சப்பான், குசுபு, சிரேயா' இதில் எவர் சொல்வது தமிழை வளர்க்கும் அல்லது காக்கும் என்பது பல்வேறு காலகட்டங்களில் விவாதமாக நடைபெற்று வருகிறது.

வட எழுத்து வேண்டுமென்போர் சங்க காலத்திலேயே வடமொழிப் புணர்ச்சிக்கு இலக்கணம் எல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள், எனவே புறக்கணிப்பது தவறு என்கிறார்கள். எனக்குத் தெரிந்து திருகுறள் உட்பட எந்த சங்க இலக்கியத்திலும் வட எழுத்துக்கள் இல்லை. வட சொற்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் வடசொற்களாக வட எழுத்துக் கொண்டு அதை எழுதுவது தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது, சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் ஆகியவற்றில் வட எழுத்துக்களின் (ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் போன்ற) ஒலிகளைக் குறிக்கும் ஒரு எழுத்தைக் கூட காணவியலாது. ல்க்ஷ்மன் என்பதை இலக்குவன் என்றும் விபிஷனன் என்ற விபிடனன் மாற்றியே எழுதினான் கம்பன். தசம் என்பது தமிழ்சொல் இல்லை என்றாலும் வடஎழுத்துக்கள் இல்லாமல் எழுத முடியும் என்பதால் பத்து இரதங்களைக் கொண்டவன் என்ற பொருள் படும் தசரதன் என்ற பெயரை அப்படியே வைத்துக் கொண்டான். இது போன்றே சிலப்பதிகாரத்தில் அறியப்படும் அளவுக்கு வடசொற்கள் கலந்திருந்தலும் வட எழுத்துக்களைக் காணவே முடியாது. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேம்பாவணி மற்றும் சீறாப் புராணம் என்னும் தமிழ் கிறித்துவ, இசுலாமியர் இலக்கியத்திலும் வட எழுத்துக்களே கிடையாது

வட எழுத்துக்களில் இருக்கும் உயிர், மெய் என 51 எழுத்துக்களில் தமிழுக்கும் பொதுவாக இருக்கும் எழுத்துக்கள் தவிர்த்து ஒலி பொருந்தி வராமல் இருக்கும் ij,sh, ssh, ksha, ikh ஒலியை உடைய எழுதுக்களை தமிழில் எழுதுவதற்க்கக ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் ஆகிய மெய் எழுத்துக்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்படது, இவை வட ஒலியை குறிக்க பயன்படும் எழுத்து என்றாலும் இவை தமிழிருவில் ஆக்கிப் பயன்படுத்திய (கிருந்த) எழுத்துக்கள், இந்த வடிவத்தில் (ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ்) பிற மொழிகளில் இதே எழுத்துகள் எங்கும் பயன்படுத்தபடவில்லை. எனவே இவை வட சொற்களை எழுதப்பயன்படும் தமிழ் உருவ எழுத்துக்கள் என்றே புரிந்து கொள்வது நலம், சரி. இவற்றை வட எழுத்துக்கள் என்று சொல்வதைவிட திசைச் சொற்களை எழுதப் பயன்படும் தமிழ் திசை எழுத்துக்கள் என்று சொல்வதே சிறப்பு.

இதை பயன்படுத்தலாமா ? கூடாதா ?

உலகில் வேறெங்கிலும் அந்தந்த மொழிகளில் உள்ள மொத்த எழுத்துக்களை கூட்டுவதோ குறைப்பதோ வழக்கில் இல்லை. அப்படி கூட்டும் பொழுது மொழியின் தன்மையில் பெரிய இழப்பும், கலப்பும் ஏற்படும். சீனம் தவிர்த்து சீனப் பெயர்களை அதே உச்சரிப்பில் எழுதும் மொழிகள் எதுவுமே கிடையாது, ஏனெனில் மொழி என்பது நாவசை, தொண்டை, உள் நாக்கு, அடிநாக்கு ஆகியவற்றில் ஒலி தொடர்புடன் இயல்பாக அமைந்து, அம்மொழி சொற்களால் பேசப்பட்டு எழுத்து வழக்காகிறது. இதுவே உலக மொழிகள் அனைத்திலும் நடைமுறை. சுட்டுப் போட்டாலும் ஒரு சீனக்காரனை 'R' என்ற ஒலிக்குறிப்பை அவனைச் சொல்ல வைக்கவே முடியாது, அவர்கள் மொழியிலும் 'R' ஐக்குறிக்கும் எழுத்துகள் கிடையாது, இது போன்றே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அந்த தனித்தன்மை பிற மொழிகளில் இல்லாதது என்பது அம்மொழியின் குறைபாடுகள் அல்ல. தமிழின் சிறப்பான 'ழ' மலையாளம் தவிர்த்து உலகில் எந்த மொழிகளிலும் கிடையாது, அனைத்து மொழிகளுமே டமில் என்றே தமிழைக் குறிக்கும் இடங்களில் எழுதி வருகின்றன.

தமிழ் இலக்கண முறைப்படி மெய்யெழுத்துக்கள் சொல்லின் முதலில் வருவதென்பது ஒப்பில்லாத ஒன்று. ப்ரேமா > பிரேமா என்றே எழுதுவது வழக்கம், ஜீஸஸ் என்பதை ஏசு என்று கிறித்துவ தமிழார்வளர்கள் தமிழ் மொழி ஒலிக்கு ஏற்றவாரே பெயர் மாற்றி பயன்படுத்தினர். 'ஏசு' என்று பிற மொழிக்காரர்களிடம் சொல்லிப் பாருங்கள், அந்த பெயர் யாருடையது என்று எவருக்கும் தெரியாது. மொஹமட் என்ற நபிப் பெயரை தமிழர்கள் முகமது என்றே மாற்றி எழுதி பயன்படுத்தினார்கள்.

வட எழுத்துக்கள் மிகுதியாக பயன்படும் இடங்கள் என்றால் அது பெயர் சொற்களில் தான். முடிந்த அளவு அதைத் தவிர்ப்பதால் தமிழுக்கு நலமே.
எதோ ஒரு பதிவில் (ரத்னேஷ் அண்ணன் பதிவில் என்றே நினைக்கிறேன்) சரியாக நினைவு இல்லை, குஷ்பு என்பதை குசுபு என்று எழுதினால் அபத்தமாக இருக்காதா ? என்பது போல் எழுதி இருந்தார். குசும்பன் என்று எழுதிப் படிக்கும் போது குசுபு என்பதில் என்ன அபத்தம் என்பது எனக்குப் புரியவில்லை. தஞ்சை என்று தமிழில் எழுதிய சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் போது Thanjai என்றே எழுதுகிறோம், அதில் ஒலிப்பும் மாறவில்லை. தமிழில் இல்லாத 'ஜ' உட்சரிப்பு அந்த சொல்லில் இருக்கிறது அல்லவா ? 'ங்''ஞ்' போன்ற சொற்கள் அத்தகைய பலுக்குதலை (உச்சரிப்பை) தரவல்லது. இன்னொரு பதிவில் ஜானி என்பதை தமிழில் எழுதினால் சானி என்று தானே வரும் அபத்தமாக இல்லையா என்று கேட்கப்பட்டு இருந்தது. சாணி குறித்து எழுதும் போது தானே சாணியைப் பற்றி எழுதி இருப்பார்கள், சானியை சாணியாக்கிப் பார்ப்பது நம்முடைய பிழைதானே. சானி என்று எழுத்தளவில் எழுதிவிட்டு படிக்கும் போது 'ஜானி' என்று படித்தால் எந்த தவறும் இல்லை. இவை ஆங்கிலத்திலும் உள்ள முறைதான், pseudo என்பதில் முன்னே 'P' படிக்கப்படாமல் இருக்கும் 'சியோடோ' ஓசைதானே
இருக்கும். World என்று R சேர்த்து எழுதிவிட்டு வேல்ட் என்று தானே படிக்கிறோம், இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்ற நெடிலோசைகளே கிடையாது

எழுதுவது போலவே படிக்கப் படவேண்டும் என்ற இலக்கண விதிக்கு மாறாக சில சொற்களை இப்படித்தான் படிக்க வேண்டும் என்று விதி வைத்திருக்கிறார்கள். தமிழில் அம்முறையை நாம் பழக்கபடுத்திக் கொள்ளவில்லை என்பது தமிழர்களின் குறையே அன்றி தமிழின் குறை அல்ல. அது மட்டுமல்ல ஒரு மொழியின் குறிப்பிட்ட சில சொற்கள் பிற மொழிகளில் தரக்குறைவான (ஆபாசச்) சொல்லின் ஓசையை போன்று இருக்கும், அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தரமுடியும். தமிழில் பால், இந்தியில் பால் என்றால் முடி/மயிர். ஜான் பால் (இந்தி பொருளில் ஜான் மயிர்) என்ற பெயரை இந்தியில் எழுதாதீர்கள் என்று எவரும் சொன்னால் அது அறிவீனம் தானே. குசுபு, சானி என்று எழுதும் போது எழுதிவிட்டு படிக்கும் போது 'குஷ்பு', 'ஜானி' என்று படித்தால் என்ன தவறு. என்ன தான் வடசொற்களில் எழுதினாலும் படித்தவர்கள் தவிர்த்து கிரமப் புரங்களில் குசுபு, எம்சிஆர்,சிவாசி, ரசினி, பிரபு என்று தானே சொல்லுவார்கள்.

'சாலி சம்பர்' என்று எழுதும் போது எழுதிவிட்டு ஜாலி ஜம்பர் என்று படித்தால் எந்த தவறும் இல்லை :)

*****

தமிழில் பிற மொழி ஒலிவடிவை அப்படியே தரவேண்டும் எனவே அவற்றை வட எழுத்துக்களில் தான் எழுதவேண்டும் என்று சொல்லுபவர்கள் அதன் மூலம் எந்த புரட்சியையும் செய்யவில்லை
அதே போன்றே வட எழுத்துக்களை தவிர்த்து விட்டு தமிழ் எழுத வேண்டும் என்று சொல்பவர்களை பிற்போக்கு வாதிகளாக கருதத் தேவையும் இல்லை. உண்மையில் வட எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டு தமிழைப் பயன்படுத்தி வந்தால், பெயர்ச் சொல் தவிர்த்து வினைச் சொற்களிலும் மிகுதியாக (இங்க த்ரி கேர்ள்ஸ் வந்திருக்காங்க, வெரிகுட் டான்ஸ் ஆடினாங்க...விஜய் டிவி காம்பெயரிங்) கலந்த பிற மொழிச் சொற்களின் தாக்கம் குறைந்திருக்கும்.

47 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல ஆராய்ந்த ஆய்வு...

தெரிந்து கொள்ள எவ்வளவோ இருந்து கொண்டேயிருக்கின்றது

கற்போம் கற்பிப்போம்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நீங்கள் சொல்வதை ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று ஆனால் ஒரு சிலரால் மாற்றம் கொடுக்க முடியாது. மற்றும் சில வார்த்தைகளை அப்படியே தமிழ் வார்த்தை போல உள்வாங்கிக்கொல்வதும் மொழிக்கு நல்லது என்றே தோன்றுகின்றது. பைபிளில் நல்ல தமிழ் வார்த்தைகள் நிறைய பயன்ப்படுத்தியுள்ளார்கள் அதைவிட அதிகம் வடமொழி எழுத்துகள் உண்டு ஏனனில் அதன் வரலாறு இடம், பெயர்கள் அப்படி...

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...
நீங்கள் சொல்வதை ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று ஆனால் ஒரு சிலரால் மாற்றம் கொடுக்க முடியாது. மற்றும் சில வார்த்தைகளை அப்படியே தமிழ் வார்த்தை போல உள்வாங்கிக்கொல்வதும் மொழிக்கு நல்லது என்றே தோன்றுகின்றது. பைபிளில் நல்ல தமிழ் வார்த்தைகள் நிறைய பயன்ப்படுத்தியுள்ளார்கள் அதைவிட அதிகம் வடமொழி எழுத்துகள் உண்டு ஏனனில் அதன் வரலாறு இடம், பெயர்கள் அப்படி...
//

நல்லது என்றால் என்ன வகையில் ? ஒரு சீனாக்காரனிடம் சிங்கப்பூர் என்பதை அவர்கள் எவ்வாறு எழுதுவார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//எழுதுவது போலவே படிக்கப் படவேண்டும் என்ற இலக்கண விதிக்கு மாறாக சில சொற்களை இப்படித்தான் படிக்க வேண்டும் என்று விதி வைத்திருக்கிறார்கள். தமிழில் அம்முறையை நாம் பழக்கபடுத்திக் கொள்ளவில்லை என்பது தமிழர்களின் குறையே அன்றி தமிழின் குறை அல்ல//
வழிமொழிகின்றேன்.. மேலும் நான் முன்பு தமிழில் இருக்கும் ஒரு எழுத்தையும் அறிமுகம் செய்துள்ளேன், பார்க்கலாம்
முழுமையான தமிழை காணமுடியுமா?.. பகுதி-2

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//நல்லது என்றால் என்ன வகையில் ? ஒரு சீனாக்காரனிடம் சிங்கப்பூர் என்பதை அவர்கள் எவ்வாறு எழுதுவார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.//

சீனர்களிடம் உள்ள மொழி அழுத்தம் நம்மிடையே இல்லை என்பதை ஒப்பு கொள்கின்றேன்.... அதேபோல் கலந்துவிட்ட வடசொல்லை கழைவதும் சிறமம் என்று சொல்கின்றேன்..... வரும் முன் தடுக்காமல் விட்டது தமிழ் ஆர்வகள் செய்த சோம்பேரிதனம்

கோவி.கண்ணன் சொன்னது…

//சீனர்களிடம் உள்ள மொழி அழுத்தம் நம்மிடையே இல்லை என்பதை ஒப்பு கொள்கின்றேன்.... அதேபோல் கலந்துவிட்ட வடசொல்லை கழைவதும் சிறமம் என்று சொல்கின்றேன்..... வரும் முன் தடுக்காமல் விட்டது தமிழ் ஆர்வகள் செய்த சோம்பேரிதனம்//

நான் சீனர்களிடம் மொழி அழுத்தம் இருக்கிறது என்று சொல்லவில்லை, அப்படி இருக்கிறதா என்றும் தெரியவில்லை, சீன எழுத்து சீன மொழிக்கு, தமிழ் எழுத்து தமிழுக்கு.

வருமுன் தடுக்காமல் விட்டது மொழிப் பற்றிய விழிப்புணர்வு இன்மையே, தனித்தமிழ் இயக்கம் தமிழ் கலப்பை வெற்றிகரமாக களைந்திருக்கிறது.

கிரக பிரவேஷம் > புதுமனை புகுவிழா
விவாக சுபமூகூர்த்த பத்திரிக்கை > திருமண அழைப்பிதழ்
உத்திரகிரியை, கருமாதி > நீத்தார் இறுதி சடங்கு இதுபோன்ற எண்ணற்ற சொற்கள் பயன்பாட்டில் வந்திருக்கிறது. நாம் கடமையாக நாம் அவர்கள் பரிந்துரைகளை கடைபிடிக்கலாம், அதை யாரும் தடுக்கப் போவதில்லை

cheena (சீனா) சொன்னது…

ஆய்வு நன்றாக இருக்கிறது - ஆனாலும் கருத்துடன் உடன் பட எனக்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தனித்தமிழ் இயக்கம் தமிழ் கலப்பை வெற்றிகரமாக களைந்திருக்கிறது.//
நல்ல தகவல்..
//கடமையாக நாம் அவர்கள் பரிந்துரைகளை கடைபிடிக்கலாம், அதை யாரும் தடுக்கப் போவதில்லை//

ஒப்புகொள்கின்றேன்

பள்ளிகளிலும் விளிப்புணர்வு உருவாக்க வேண்டும் என்பது என் எண்ணம்.. நாளைய தலைமுறைனரை தயார்படுத்துவது நல்ல விடயமாக இருக்கலாம்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//சுட்டுப் போட்டாலும் ஒரு சீனக்காரனை 'R' என்ற ஒலிக்குறிப்பை அவனைச் சொல்ல வைக்கவே முடியாது,//

மொழிக்காக சீனர்களை சுட சொல்லும் கோவியாரை வன்மையாக கண்டிக்கிறேன். :))

தமிழ் பாட நூல் அரிச்சுவடியில்
அ- அம்மா, ஆ-ஆடு எனும் வரிசையில் ஐ -ஐஸ் என இருக்கிறதே... இதெல்லாம் விளங்குமா?

ஸ்வாமி ஓம்கார்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
//சுட்டுப் போட்டாலும் ஒரு சீனக்காரனை 'R' என்ற ஒலிக்குறிப்பை அவனைச் சொல்ல வைக்கவே முடியாது,//

மொழிக்காக சீனர்களை சுட சொல்லும் கோவியாரை வன்மையாக கண்டிக்கிறேன். :))

தமிழ் பாட நூல் அரிச்சுவடியில்
அ- அம்மா, ஆ-ஆடு எனும் வரிசையில் ஐ -ஐஸ் என இருக்கிறதே... இதெல்லாம் விளங்குமா?

ஸ்வாமி ஓம்கார்
//

அரிச்சுவடியில் 'Q' ஒலியும் கூட இல்லை என்பதற்காக சேர்க்க முடியுமா ? தேவை இல்லை என்பதற்க்குத்தானே 'QUARAN' என்பதை குரான் (KURAAN) என்ற ஒலியில் எழுதுகிறோம். அது சரி வட மொழியில் 'QUARAN' அதே ஒலிப்புடன் எழுத முடியுமா ?

அ- அம்மா, ஆ-ஆடு எனும் வரிசையில் ஐ -ஐஸ் என இருக்கிறதே - அது தேவையற்ற நுழைப்பு என்பது என்கருத்து 'சுவாமி' என்று எழுதினால் என்ன தவறு ஸ்வாமி ?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஆய்வு நன்றாக இருக்கிறது

NO சொன்னது…

Thiru Kovi Kannan,

Apologize for not being able to write in Tamil. I move around quite often and its difficult to set myself to Tamil fonts. If I resort to typing Tamil through English, it would be too tiresome for you to read.

At the outset, let me tell you that you have been writing posts as if the world is waiting for your wise comments. Added to that I believe someone has told you wrongly that you are one wise guy and you seem to know a lot.
Having not wanting to waste such great talent inside you, and having deluded yourself by believing that the world desperately wants advice and comments from a philosopher, you it seems have decided to train your intellectual genius on a very few by your blog!
When I say very few, I picked up some statistics in the comments from your blog’s. First of all, 50% of the comments on those are yours. This you do in the guise of "explaining your position" to some poor jobless fellow who wastes his time by browsing such pseudo intellectual sites such as yours. The other 50% is made up by some 10 to 15 guys whose names just get repeated not only in your blog but in also quite a few Tamil blogs. In total you seem to belong to the cadre of jobless, time wasting, vetti gumbal that also seeks your site to give "comments" about the comedy you keep writing!

The reason why I took time to write this to you Mr. Kovi Kannan, is only out of sympathy. You seem to march towards a peculiar mental condition called Grandiose Delusion. I give below the definition of what grandiose delusion is.
• Grandiose delusion: An individual exaggerates his or her sense of self-importance and is convinced that he or she has special powers, talents, or abilities. Sometimes, the individual may actually believe that he or she is a famous person (for example, a rock star or Christ). More commonly, a person with this delusion believes he or she has accomplished some great achievement for which they have not received sufficient recognition.
If you are not convinced please see this link http://www.biology-online.org/dictionary/Grandiose_delusion
Of course there is nothing wrong with grandiose delusions if those are momentary. It’s a problem only when it persists. In your case, those wonderful blogs of yours, which you keep writing on a continuous basis, that wants to expound about anything and everything in this world, without any proper understanding, knowledge, reference or a basic scholarly analysis or attributes, seems to confirm me that you are moving towards the logical end of grandiose delusion which is schizophrenia!

This Mr. Kovi Kannan will be a problem for you! Of course I am not worried about the people who read it as they are not more than 30 or 40 at the most and out of which 10 are again you in form of clarifying what you have already written!
Hence the purpose of my note again is just to warn you not to continue dreaming and writing those turgid, meaningless, incoherent and patently false blogs! Of course you can choose to ignore my friendly warning. But please note you will have to visit a psychiatrist, maybe in a year’s time if you continue to do what you are doing now.
Please don’t be upset and angry as this warning is not only for you. I see a lot of idiots writing whatever they feel in so many blogs thinking that they know everything under the sun! But the crucial difference is that you have gone a extra few miles in displaying utter ignorance and shallowness, which is not good for your health even in the short run.
So please take a few days off, do not come near the computer, and if possible avoid contact and look inwards. Maybe you will realize finally that you are just an idiot like so many others but who just managed to read something here and there and that which had made you to feel that you know lot of things in this world and hence give opinions about everything in this world.
Mr Kovi Kannan, I am sorry to say again that your blogs are just shallow and your writings do not have any intelligent content in it. These are just out of context jottings from a lazy mind that professes to be an intellectual!

Get well soon Sir!


Note below:

The saying goes……
I understood that God is inside me only after I realized that when I pray I was only talking to myself!

In your case Sir, you should be telling, “I understood I am just an another idiot only after I started noting that no one (except maybe 10 to 15 jobless geeks) was reading what I am writing day in and day out”!

கோவைகத்துக்குட்டி சொன்னது…

திரு கோவியார் அவரகளுக்கு வணக்கம்,
தமிழில் பிற மொழிச் சொல் கலப்பு இல்லாமல் எழுதுவது சிறப்பு என்றாலும் சில நேரங்களில் வடமொழி எழுத்து, வார்த்தை வருவது தவறு இல்லை என்பது என் கருத்து.
தமிழ்நாட்டில் சில அரசு பேருந்துகளில் point to point என்பதற்க்கு முனைப் பேருந்து என எழுதி இருப்பதை பார்திருக்கிரேன். எனக்கு முனைப் பேருந்து என்பதற்கு அர்தம் புரியவில்லை இதுபோல் பல உண்டு. பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் நமக்கு எளிமையாக உ்ள்ளதை ஏற்றுக்கொண்டு இப்பொழுது நடைமுறைப் படுத்திவருகிறோம். பாரதியார் கூட வடமொழிச் சொல் பயன்படுத்தியதாக படித்திருக்கிரேன். Diesel, Petrol இவைகளை திரவ எரிபொருள் என பொதுவாகத்தான் குறிப்பிடுகிறோ்ம். அதை டீசல், பெட்ரோல் என குறிப்பிடலாம். ஆண்கள் வேட்டியையும் பெண்கள் தாவனியையும் மாற்றியது போல் இந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். நல்லது எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம், மாற்றம் காலத்திற்கு உரியது

அன்புடன்
செல்லி

மணிகண்டன் சொன்னது…

Mr No, I am one of the jobless Geek ! Are you running some psychiatry practise ? Let me know, I need some help !

கோவி,

எழுத்துக்கள் எல்லா மொழியிலயும் மாறவே இல்லையா ? இது ஆராய்ச்சி பண்ணி எழுதினீங்களா இல்லாட்டி சும்மா போற போக்குல எழுதினீங்களா ?

வேற்று மொழி எழுத்துக்கள க்ரகித்து கொண்டால் மொழியின் தாக்கம் குறையும்ன்னு எத வச்சி சொல்றீங்க ?

sultangulam@blogspot.com சொன்னது…

ஜான் பால் = John Paul
(ஹிந்தி) பால் = Baul = முடி

படிக்கும் போது இடத்துக்கு தகுந்தாற்போல் ஏற்கனவே மாற்றி சில வார்த்தைகளைப் படித்தே வருகிறோம்.
பட்டம், படம் இவற்றிலுள்ள 'ட' இரண்டிலும் வித்தியாசமாய் ஒலிக்கும்.
இது போல வடமொழி எழுத்துக்களை எழுதுமிடத்தில் தனித்தமிழில் எழுதி வடமொழி உச்சரிப்பு போல் உச்சரித்தால்... நன்றாகத்தான் இருக்கிறது.

நம் பண்ணையார்களுக்கு பாடம் தரும் தமிழறிஞர் நன்னனிடம் கேட்டால் 'புதிதாக சேர்க்க தேவையில்லாதவாறு தமிழ் வளமாகவே இருக்கிறது' என்று சொல்வாரோ?

பாச மலர் / Paasa Malar சொன்னது…

நல்ல பதிவு கோவி.

பெயர்கள் பொறுத்தவரை பொதுவாக வேற்று மொழிப் பெயர்களைப் பயன்படுத்தும்போது இந்த எழுத்து மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. நம் இலக்கண விதிகளே இப்படி இருப்பதால் நமக்கு இது பழகிப் போய்விட்டது..

மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் தமிழ் எழுத்துகளில் எழுதலாம்தான்..

இரண்டு சாரரும் அடுத்தவர் செய்வது தவறு என்னும்போதுதான் ப்ரச்னை வருகிறது..

என்னைப் பொறுத்தவரை இரண்டும் சரியே...எழுத்து மாற்றத்தில் மட்டும்...

மற்றபடி தமிங்கில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று..எழுதப்படாத விதியாக இப்போது இருக்கிறது..இதை விதியாக எழுதிவிட்டால்..தமிழின் விதி மாற்றம் எங்கே கொண்டு போய் விடுமோ..

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

வடமொழில் சொற்கள் பயன்படுத்தலாமா ? ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் போன்றவற்றை உபயோகபடுத்தலாமா ? என்பதற்கு அப்பாற்பட்டு...

தமிழ் எழுத்துக்களை கொண்டு எழுதும் பொழுது.....

சந்தோஷம் போய் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது...

படிக்க இஷ்டம் போய் விருப்பம் ஏற்படுகின்றது...

வேற்றுமொழி சொற்களாக இருந்தாலும்

ஜன்னல் சன்னலாக

ஜனநாயகம் சனநாயகமாக

விஷயம் விசயமாக

மாறும் பொழுது அல்லது படிக்கும் பொழுது கண்டிப்பாக மனமகிழ்ச்சி ஏற்படுகின்றது...

வேற்றுமொழி கலவையின்றி, ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் போன்றவற்றை தவித்து ஒரு நல்ல பதிவு வரும்பொழுது தமிழின் ஆளுமை புலப்படுகின்றது...

நடப்பு தமிழுக்கும்,, பிறவி தமிழுக்கும் உள்ள வித்தியாசம் புரிகின்றது...

தமிழில் உள்ள பதிவை படிக்கும் பொழுது உள்ள ஈடுபாடு கலவை தமிழை படிக்கும் பொழுது இருப்பதில்லை.... நல்ல பதிவாக இருந்தால் கூட மனநிறைவு ஏற்படுவதில்லை..

ஆனால் இந்த கணினி உலகில். புதிது புதிதாக சொற்கள் கண்டுபுடிக்கவேண்டிய கட்டாயத்திலும் அதை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்லவேண்டி இருப்பதால் ... நீங்கள் சொல்வது, சாத்தியப்படுவது கடினம் தான்...

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
Thiru Kovi Kannan,
//

Mr No, you are 'Yes'. But you wrongly posted the comment into this post. You might post this comments on this Post !

Thanks for you kind advise.

தருமி சொன்னது…

Dr. No

hats off to the style of your language.
but the content - less said would be better.

Judge Not Lest Ye Be Judged!

Matra சொன்னது…

My thoughts.

1. Languages do evolve and change over the years. English as spoken and written now is different from as little as 200 years back.

2. Thamizh itself would have evolved and changed over the years . It did not suddenly come into being. That being the case, how do people decide that Sangam Thamizh is the only correct one.

3. As times change, we have to accommodate. This however should be appropriate and sensible.

4. Just insisting that 'குஷ்பு' should be written as 'Kuspu' is a little extreme and leads to confusion. Nobody likes their name being mutilated. Nothing wrong in writing Khushbhu as குஷ்பு. This may be followed for proper names.

5. For names of objects etc, we can come up with a equivalent Thamizh name. Examples would be as done for Kanini, Paerundhu etc.

6. There are no native sounds like ஞ , ழ in English. We came up with Gna , zha. Nobody complained.

7. 'Jesus' is pronounced as 'Yesus' 'Hesus', 'Yesu' in some languages.

8. Flexibility, adaptivity and openness to new words and terms has made English grow stronger and more popular.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
Dr. No

hats off to the style of your language.
but the content - less said would be better.

Judge Not Lest Ye Be Judged!

1:42 AM, April 08, 2009
//

தருமி சார், அவரு மற்றவர்களையெல்லாம் விட்டுவிட்டு எனக்கு எழுதி இருக்கிறார். என்னோட எழுத்துக்கள் அவரை ரொம்ப பாதித்து இந்த அளவுக்கு எழுத வைத்திருப்பதாகத் தான் புரிந்து கொண்டேன். ஓரளவு உண்மையாக இருப்பதால் முற்றிலும் மறுப்பதற்கும் இல்லை. ஆனால் ஏன் இதை எழுதினேன் என்று அவர் சொல்வது மட்டும் ஏற்பது கடினம். உளவியல் தான் அனைத்துச் செயலுக்கும் காரணம் என்று நினைப்போர் எப்போதும் அனைத்துச் செயலையும் அதில் பொருத்திப் பார்ப்பார்கள், அவர் உளவியல் எப்போதும் படிப்பார் போல. நோக்கமற்ற செயல்களை உளவியலில் பொருத்துவதும் கடினம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra said...
My thoughts.

1. Languages do evolve and change over the years. English as spoken and written now is different from as little as 200 years back. //

Yes Sir.

//2. Thamizh itself would have evolved and changed over the years . It did not suddenly come into being. That being the case, how do people decide that Sangam Thamizh is the only correct one.//

No one says that everyone must follow sanagam thamiz. Talking about sangam thamiz only recomentation / suggestion for some ref.

//3. As times change, we have to accommodate. This however should be appropriate and sensible.//

But you have to think the difference between business language and mother tongue. if you compare languages there are too many, each has some words with special meaning those words cannot be translated. those words are unique to that language, for example 'எத்தனையாவது ?' in thamiz, it is not easy to fit with a single word in english as well as other languages. we also cannot just compare word to word of each languages.

//4. Just insisting that 'குஷ்பு' should be written as 'Kuspu' is a little extreme and leads to confusion. Nobody likes their name being mutilated. Nothing wrong in writing Khushbhu as குஷ்பு. This may be followed for proper names.//

Sir, the orginal pronounsation is 'khusbhu' not kuspu. 'khu' we written as 'ku' why not 'sh' to 'su' ?

//8. Flexibility, adaptivity and openness to new words and terms has made English grow stronger and more popular.

8:33 AM, April 08, 2009
//

English is a business language. No other languages getting popular or widely used. please tell me which language follows the way of english that means collecting new words from other languages

Matra, Thanks for the comments !

NO சொன்னது…

Anbana Thiru Kovi avargale,

I promised to myself that I would not waste any more of my time writing about you and your blog, even if it’s only out of sympathy. Unfortunately for you, I had to break the promise as I had some time to kill in the hotel after my assignment.

Finally I decided to take a look and see how this pre-identified but only a prospective psychiatric patient would react to my unusually strong verbiage.

Mr. Kovi, I did see your recommendation of a site to repost my riposte. I thought you were trying to push my response to somewhere outside but was pleasantly surprised to see that you indeed have asked me to post my comments on a site that you have written.

While your YES and your recommendation was certainly gentlemanly, the same cannot be said about the quality of contents that I found in the self advertised ranting.

Again Mr. Kovi, the post was all about propagating the genius in you and nothing more. Not stopping at telling to the world how you managed to scribble nonsense for three years, you have also added your thoughts about blogger’s mind and so many other mind numbing theories, philosophies and discoveries. After seeing your writing on writing in blogs I agree and cannot agree more that I have come across a very few like you that have the perseverance to vomit so much sludge and slime for so long, without even giving a decent break, atleast to recoup, without feeling even remotely tired about it!

Mr. Kovi, your conviction to just keep on writing rubbish, inspite of not having any one except a few bored and retired geeks to read those, your single mindedness to keep on writing utterly idiotic posts without a care about what truth is all about and your phenomenal self delusion that makes you think that you are a descendant of Plato and Aristotle, makes me feel that no other person on earth if called as an idiot should feel sad about it! You have proved and shown the light to several simpletons and village buffoons that idiocy is not at all a constraint if some one wants to express an opinion!

Dear idiots of the world read Mr. Kovi’s blogs and get clarity on how to disprove your idiocy to the world! Thiru Kovi has shown clearly that all you need to break your chains is a partially functioning brain and of course a blog!

Dear Kovi Sir, Oh my god, I wrote this after I took lots of time and read what you have spitted so far in many of your blogs! You truly are a genius except that you seem to forget that the blogs are also seen by people with brains! No doubt Alexander Dumas quoted that the Rogues are preferable to imbeciles because they some times take a rest!

As a final note I can recollect Mark Twain’s quote which was “In the first place God made idiots; that was for practice; then he made school boards”!

I rephrase this a bit as “In the first God made idiots; this was just a start; he wanted the kind to grow and multiply; then he made Mr. Kovi and of course internet and blogs”!
The comment will not be complete if I do not say anything about this phenomenal person; the one who wrote that my language was great but the contents were ….(maybe he wanted to say trash, nonsense etc)!

So I decided to peek into his golden world of blogging and I was utterly taken back by the prolific blog writing this retired gentle man is indulging! Maybe he is not retired, I do not know. But this professor has truly found a way to engage himself in blogging in all of his spare time or should I say, all of his time, and that too with a feverish and monstrous perseverance! I feel that this gentleman has completed all his duties in life and as dedicated himself to educate the world, which he feels is incomplete with only one Kovi!

I hope you would have figured out whom I am talking about. This is about the venerable Mr. Tharumi, who I accept, is an extraordinary character that seeks salvation in life by blogging, blogging and more blogging which is of course is done without a slightest concern for the kind of E-waste and server clogging that he creates by dishing out reams and reams of electronic bits and bytes day in and day out!

I was truly shocked when I noted that he has atleast four or five blogs which he keeps filling up with such inanity and such regularity. In fact I almost started crying when I saw in one of his blogs about meeting with a co-blogger and discussing many things that otherwise would not interest even a bit to anyone in this world including his own shadow!

Such is the belief and manic perseverance to blog that has beholden this gentleman, I surely feel that he gets a version of drug withdrawal symptom when not allowed to touch a computer even for a day. I believe the condition is called golden Turkey which happens when a drug addict stops using marijuana, cocaine or brown sugar, even for a day!

Based on Mr. Tharumi’s phenomenal capacity to continuously punish keyboard buttons and of course his own fingers and contaminate the privileged few’s (the audience also shared by Mr. Kovi) brain mass, I have decided to remove Mr. Kovi from the pedestal of number ONE most unwanted but persistent word processor and place you Mr. Tharumi on it!

Hence the story now moves from Mr. Kovis’s cacophony in web to Mr. Tharumi’s obsessive, prolific yet cogency deficit brain out put!

Just a little more about Mr. Kovi before I get into the superficially intellectual and semantic jugglery of Mr. Tharumi.

Mr Kovi Sir, the moment you read my comments and again in the guise of explaining to the world on your readings of my writing, which in any case doesn’t look up to you for anything at all, you have indulged again in trying to put into print your semi literate and incoherent analysis by talking about Ullavial etc etc. There you go again Kovi Sir. You just cannot keep your hands from typing stuff do you? And that too stuff that you think you understand very well! Neenga Thirundhave mattingla Sir.

Finally Mr. Kovi,as you have said in your web, I am not at all affected by your blog. I had actually reserved this rant for many others that pollute web pages by vomiting unpalatable and untruthful analysis’s on various subjects, and think that they have made a difference to this world!
Unfortunately I happened to see your blog and I could make out that you just happened to lead the pack of those unapologetic self claimed geniuses that was willing to write about so many different subjects and that too without a shred of scholarly knowledge or a basic modicum of understanding of the subject under discussion.
I initially got angry but I decided to advice you on something I know about mental condition that which I thought might afflict you shortly! Hence the note to you.
So please do not think even for a moment that I poured filth over you as a result of some doctrinal differences I had about t he content of your blog. Not at all Sir, not at all as all your writings amount to nothing and there is nothing in it that would enthuse an intelligent or for that matter a normal mind!

Its just that I was astonished to see how you can write nonsense so regularly and spread that nonsense over atleast 30 different subjects and still remain sane with same vigor and energy to continue your perceived good work for years to come. Hats off and hats off but sorry for passing the mantle to Mr. Tharumi, whose mental status starts baffling me even as I type!

(I should also add that there maybe many more idiots in blog world that do things as good as Mr Kovi, unfortunately for me I have not had the time and energy to read them and hence I had to treat Mr. Kovi as a representation for this prevailing Idiocy. I should again add that Mr. Kovi certainly fits the bill and is eminently qualified to play the boss of all brain less bloggers)

Thanks.

Matra சொன்னது…

Don't know why 'Dr No' is spouting so many words in order to convey whatever he/she wants to.

I get the feeling that all these words may be found posted in the comments section of other blogs with just a change from 'Kovi' to whatever that blogger's name is. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra 7:20 AM, April 09, 2009
Don't know why 'Dr No' is spouting so many words in order to convey whatever he/she wants to.//

He try to convey that he knows good english as well as Psychology. We can appriciate the person if we know him. unfortunately he is unknown to us.

//I get the feeling that all these words may be found posted in the comments section of other blogs with just a change from 'Kovi' to whatever that blogger's name is. :(
//

I was thought the same, but he written specific topic and contents which is not suitable for other places / topic. So I consider and appriciated, he spend lots of time to write this long comments.

Today, If there is one more confrerence for him to attend, he may continue :)

தமிழ் சொன்னது…

/வட எழுத்துக்களில் இருக்கும் உயிர், மெய் என 51 எழுத்துக்களில் தமிழுக்கும் பொதுவாக இருக்கும் எழுத்துக்கள் தவிர்த்து ஒலி பொருந்தி வராமல் இருக்கும் ij,sh, ssh, ksha, ikh ஒலியை உடைய எழுதுக்களை தமிழில் எழுதுவதற்க்கக ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் ஆகிய மெய் எழுத்துக்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்படது, இவை வட ஒலியை குறிக்க பயன்படும் எழுத்து என்றாலும் இவை தமிழிருவில் ஆக்கிப் பயன்படுத்திய (கிருந்த) எழுத்துக்கள், இந்த வடிவத்தில் (ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ்) பிற மொழிகளில் இதே எழுத்துகள் எங்கும் பயன்படுத்தபடவில்லை. எனவே இவை வட சொற்களை எழுதப்பயன்படும் தமிழ் உருவ எழுத்துக்கள் என்றே புரிந்து கொள்வது நலம், சரி. இவற்றை வட எழுத்துக்கள் என்று சொல்வதைவிட திசைச் சொற்களை எழுதப் பயன்படும் தமிழ் திசை எழுத்துக்கள் என்று சொல்வதே சிறப்பு.
/
சரியாகச் சொன்னீர்கள்

தமிழ் சொன்னது…

/எழுதுவது போலவே படிக்கப் படவேண்டும் என்ற இலக்கண விதிக்கு மாறாக சில சொற்களை இப்படித்தான் படிக்க வேண்டும் என்று விதி வைத்திருக்கிறார்கள். தமிழில் அம்முறையை நாம் பழக்கபடுத்திக் கொள்ளவில்லை என்பது தமிழர்களின் குறையே அன்றி தமிழின் குறை அல்ல./

பழமையைப் பேசிக் கொண்டு இருப்பதால் மட்டும் பயனில்லை.
காலத்திற்கு ஏற்ப ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.அதே வேளையில் மொழியின் இனிமை குன்றாம‌ல் த‌மிழின் பெருமையை காக்க‌ வேண்டும் என்ப‌தே என் அவா.

தமிழ் சொன்னது…

" கம்பர் தம் பல்லாயிரம் பாடல்களில் இராமன் கதையையே கூறுகின்றாராயினும் ஓரிடத்தில்கூட இராமனை ராமனென்று குறிக்கவில்லை.அவர் வடமொழிப் பெயர்களைத் தமிழ் ஒலிப்படுத்தியும் மொழிப்படுத்தியும் ஆக்கும் பெயரமைப்புகள் குறிப்பிடத்தக்கன. அவற்றை நம் இளைய தலைமுறையினர் அறியவேண்டாமா?
ரிஷபம் இடபமாய், லட்சியம் இலட்சியமாய், பைபிள் விவிலியமாய்,ஜாக்கப் ஆக்கோபு ஆய் ஆக்கம் பெற்ற பழம் மரபுகளை என்ன செய்வது? இவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்ற பழந்தமிழிலக்கியங்களை எதிர்கால இளம்தலைமுறையினர் விளங்கிக் கொள்ள வேண்டாமா?

பழைய மரபையும் விட்டுவிடாமல், இன்றைய புதிய சொல்லாட்சிகட்கும்
இடம் கொடுத்துத் தமிழின் இனிமையும் எளிமையும் இளமையும் கெடாமல் வரம்புகட்ட வேண்டி நேரம் இது. இதில் தமிழர்கள் ஓற்றுமையுடன்
கூட்டுணர்வுடன் செயற்பட வேண்டும்.
வெறும் விவாதங்கட்கு இடம் தந்து தமிழை இழந்துவிடக் கூடாது.

பிறமொழிச் சொற் கலப்பு ஒரு மொழிக்குப் புறத்தே ஏற்படும் மாற்றம் போன்றது; ஒலிக்கலப்பு அகத்தே ஏற்படும் மாற்றமாகும். பிற சொற்களை தமிழ்ப்படுத்தி , தமிழ்மயமாக்கி ஆள்வதன் மூலம் தமிழ் வளரும்; பிறமொழி ஒலிப்புக்களைப் புகுத்தப்புகுத்த ஒரு மொழி வேறொரு மொழி போல் மாறித் தோன்றத் தொடங்கும்.

ஒரு மொழியின் இலக்கண மரபுகள் அதன் வாழ்வாகும். அடிப்படை இலக்கண மரபுகளை மாற்றுவது, இனம் மாறிப் பிறிதொரு இனத்திற்கு ஆட்படுவதாகும். "


இதுதான் என்னுடைய கருத்தும் எண்ணமும்

Suresh ET சொன்னது…

(வடமொழிச் சொற்களில் பொதிந்துள்ள சாதிய தன்மையை நான் அறிவேன்; அதனடிப்படியில் முன்வைக்கப்படும் மாற்றங்களை கோட்பாடு ரீதியில் எதிர்க்கவில்லை.)

இங்கே தமிழுக்கு அப்பாற்பட்டு சில பொது புள்ளிகள்:

ஒரு மொழி எப்பொழுது முழுமை அடைகிறது? தமிழ் என்ற மொழி "தோன்றிய" தினமே 247 எழுத்துக்களும் வந்து சேர்ந்து கொண்டனவா? காலப் போக்கில் தான் சேர்ந்ததெனில் 230'ஆக இருந்தபோது அது தமிழென அறியப்படவில்லையா? யார் இயற்றிய சட்டம் இது: "இதுதான் தமிழ், இதில் 247 எழுத்துக்களும், இன்ன உச்சரிப்புகள் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே 'தூய' தமிழ்," என்று? எந்த அடிப்படையில்? அந்த அதிகார அறைகூவலுக்கு அனைவரும் ஏன் கட்டுப்பட வேண்டும்?

இந்த கேள்விகள் குதர்க்கமாக தோன்றுமெனில், மொழி என்ற இடத்தில கலாச்சாரம் என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கவும். எது தமிழ் கலாச்சாரம்? எது "பாரம்பரிய" உடை? எது "தூய்மையான" தமிழ் பண்பாடு?

இந்த "தூய்மை" என்ற சொல்லாடல் அடிப்படையில் ஒரு வகை பாசிச தன்மை கொண்டது. மொழியின் "மகத்துவத்தை," சுவையை, பறைசாற்றும் அதே நேரத்தில் அவற்றை ஒரு இருக்கதன்மை கொண்ட கற்பிதங்களாக முன்னிறுத்தல் தவிர்க்கப்பட வேண்டியது. இங்கே பெரியார் தமிழ் எழுத்துக்கள் சில வற்றில் கொண்டு வந்த மாற்றங்களையும் நினைவு கொள்ள வேண்டும்.

மொழிகளை ஒப்பீட்டளவில் பார்பதேனில் நீங்கள் குறிப்புட்டுள்ள மொழிகளுக்கு நேர் எதிரான தன்மைகள் கொண்ட மொழிகளைச் சுட்ட முடியும். (துருக்கி, இந்தோனீசிய மொழிகள் போன்று.) ஏன், சீனம் என்று ஒரு மொழியுமில்லை. அது காண்டோநீஸ், மாண்டரின் போன்ற உட்பிரிவுகளை குறிக்கும் ஒரு "மொழி இனம்." அம்மொழிகளில் நமக்குத் தெரியாத கொரிய எழுத்துக்களோ, மங்கோலிய எழுத்துக்களோ இருக்கக் கூடும். (இருக்கின்றன என்றே விக்கிபீடியா சொல்லுகிறது.) ஆங்கிலத்திலும் ஒரு சொல் புழக்கத்தில் பொதுத்தன்மை அடையும் வரை அவற்றின் உச்சரிப்பு சுட்டபடுகிறது. உதாரணம்: résumé, cliché, façade (இது பற்றி மேலும் படிக்க: http://en.wikipedia.org/wiki/English_words_with_diacritics)
அவ்வாறு செய்யாததனால்தான் நம்மூர்காரர்கள் பலர் "ரெசுமே" என்று சொல்லவேண்டியதை "ரெஸ்யூம்" என்று உச்சரிக்கிறார்கள்.

ஆக மொழியின பயன்பாடு, கால, அரசியல், இயங்கியல் சார்ந்து முறைமைபடுத்தப் படுவதே சரியாக இருக்கும். இங்கே மார்க்சியம் முதல் பின்நவினத்துவம் வரை கோட்பாடுகளையே தமிழ் வழி கற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில 'வெளிநாட்டு' இடப் பெயர்களையும், இலக்கியச்/கலைச் சொற்களையும் முதலில் தமிழில் படிப்பவரால் எப்படி எழுத்தினின்று உச்சரிப்பைத் திருத்திப் படிக்க முடியும்? அப்படித்தான் மற்ற மொழிக்காரர்கள் படிகிரார்களெனில் நாமும் ஏன் அதையே பின் பற்ற வேண்டு? ஏன் இந்த மந்தையாட்டுதனம்?

தமிழ் மொழியின் எளிமையே அதன் phonetic தன்மையில் தான் உள்ளது. இதில் இருக்கும் pa, Ba, ta, Da பிரித்துப் படிக்கவே சிறார்களுக்கு ஆண்டுகள் எடுக்கிறது. (ஆங்கிலத்தில் இந்த 'காலம்' இன்னும் நீளுகிறது.)

எது எப்படியோ, நன் முன்னவே சொன்னது போல், யாருடைய விதிக்கும் யாரும் கட்டுபடப் போவதில்லை. அவரவர் தத்தம் வசதிக்கேற்றார் போல்தான் எழுதப்போகிறார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவையாரே!
இந்த No யார் பெத்தபிள்ளையோ, நல்ல படிப்பாளியாய் இருப்பார் போல இருக்கு,
ஆனாலும் அவருக்கு ஏதோ பிரச்சனையுண்டு.
உண்மையில் அவர் ஆங்கிலம் முழுமையாக எனக்குப் புரியவில்லை.
ஆனாலும் பக்கம் பக்கமாக எழுதி அவர் ஏன் இந்தக் குதி குதிக்கிறார்.
விரைவில் அவர் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
அவர் பக்கம் பக்கமாக எழுத, நீங்கள்
ஒரு வரியிலே முடித்தது.
சிறப்பு.

குடுகுடுப்பை சொன்னது…

கட்டுரை பற்றி என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் Mr No's comment நன்றாக சிரிக்க வைத்தது சில சமயங்களில் யோசிக்கவும் .என்னுடைய பதிவெல்லாம் படிச்சா என்ன சொல்வார்?

புருனோ Bruno சொன்னது…

//pseudo என்பதில் முன்னே 'P' படிக்கப்படாமல் இருக்கும் 'சியோடோ' ஓசைதானே//

pseudo என்பதை சூடோ என்று தான் ஒலிக்க வேண்டும்

oesophagus என்பது இசோபேகஸ்

புருனோ Bruno சொன்னது…

சீன துரோகி கோவியை வன்மையாக கண்டிக்கிறேன்.

சீன மொழியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான எழுத்துகளுக்கு தகுந்த எழுத்து தமிழில் இல்லை. ஆகவே சீனர்களின் பெயரை எழுதுவது மற்றும் உச்சரிப்பது கடினமாக இருக்கிறது்

உலகில் அதிகம் மக்கள் பேசும் மொழியான சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் தமிழில் சேர்க்க வேண்டும்

சீன மொழி எழுத்துக்கள் அனைத்தையும் தமிழிலும் சேர்க்க வேண்டும் என்ற என் கோரிக்கையை மீண்டும் கூறுகிறேன்

புருனோ Bruno சொன்னது…

உங்களுக்கு இந்தி தெரியுமா

தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

तमिल என்றா
அல்லது
तमिழ் என்றா

இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்

புருனோ Bruno சொன்னது…

வள்ளி என்பதை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது தமிழ் கலந்துதான் vaள்ள்i என்று எழுதுகிறார்களா

புருனோ Bruno சொன்னது…

//அ- அம்மா, ஆ-ஆடு எனும் வரிசையில் ஐ -ஐஸ் என இருக்கிறதே... இதெல்லாம் விளங்குமா?//

கண்டிப்பாக விளங்காது

ஏ - ஏரோப்ளேன் என்று இருந்த ஒரு குழந்தைகள் புத்தகத்தை பார்த்து நான் மிரண்டது உண்மைதான்

புருனோ Bruno சொன்னது…

//At the outset, let me tell you that you have been writing posts as if the world is waiting for your wise comments. //

நான் காத்திருக்கிறேன்

//Added to that I believe someone has told you wrongly that you are one wise guy and you seem to know a lot.//

உண்மைதான். நான் கூட கூறியிருக்கிறேன்

புருனோ Bruno சொன்னது…

//. I see a lot of idiots writing whatever they feel in so many blogs thinking that they know everything under the sun! //

நீங்கள் மறுமொழி எழுதுவதை போல்தானே ஐயா !!

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//At the outset, let me tell you that you have been writing posts as if the world is waiting for your wise comments. //

நான் காத்திருக்கிறேன்

//Added to that I believe someone has told you wrongly that you are one wise guy and you seem to know a lot.//

உண்மைதான். நான் கூட கூறியிருக்கிறேன்
//

புருனோ,

நீங்கள் பாம்பு புற்றுக்குள் கையை நுழைக்கிறீர்கள். அவ்வளவுதான் சொல்லிட்டேன். எதுக்கும் என்னோட கடைசி இடுகையை ஒரு முறை பார்த்துடுங்க.
:)

புருனோ Bruno சொன்னது…

//அதை டீசல், பெட்ரோல் என குறிப்பிடலாம். //

டீசல் என்பது பெயர்சொல் - அதை டீசல் என்றே கூறலாம் (அல்லது இடீசல்)

பெட்ரோல் என்பது காரணப்பெயர் - அதற்கு கல்நெய் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்

புருனோ Bruno சொன்னது…

//Nothing wrong in writing Khushbhu as குஷ்பு. This may be followed for proper names.//

//6. There are no native sounds like ஞ , ழ in English. We came up with Gna , zha. Nobody complained.//

gna, zha என்பதை யாரும் புகார் செய்ய வில்லை

அதே நேரம் tamiழ்nadu என்றும் vaள்ளi என்றும் யாரும் எழுதவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

புருனோ Bruno சொன்னது…

//8. Flexibility, adaptivity and openness to new words and terms has made English grow stronger and more popular.//

உண்மைதான். ஆனால் ஆங்கிலத்தில் தமிழ் எழுத்துக்களோ, வடமொழி எழுத்துக்களோ அல்லது சீன எழுத்துக்களோ சேர்க்கப்பட வில்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//அதை டீசல், பெட்ரோல் என குறிப்பிடலாம். //

டீசல் என்பது பெயர்சொல் - அதை டீசல் என்றே கூறலாம் (அல்லது இடீசல்)

பெட்ரோல் என்பது காரணப்பெயர் - அதற்கு கல்நெய் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்
//

புருனோ, டீசல் பெட்ரோலுக்கு பொதுவாக கச்சா எண்ணெய் என்ற பெயருண்டு, திரவ எரிபொருள் என்றும் சொல்லுவார்கள். திரவ(ம்) என்பது வடசொல், நீர்(நிலை) எரிபொருள், மண் எண்ணெய் என்றும் பொதுவாக சமையலுக்கு பயன்படும் எரிபொருளை குறிப்பதுண்டு. பெட்ரோல் - சுத்திகரிகப்பட்ட எண்ணெய்
டீசல் - அளவாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
ஈதர் - உயர் வெப்ப எரிபொருள்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், நாம் பயன்படுத்தினால் நாளடைவில் பெட்ரோல், டீசல் எல்லாம் தமிழுக்கு மாறும்

சாலிசம்பர் சொன்னது…

கோவியாரே,
இந்தப்பதிவை இத்தனை நாள் எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை.தக்க விளக்கங்களுடன் கூடிய நல்ல பதிவு.ஜ,ஸ,ஷ, போன்ற எழுத்துகள் வடமொழி உச்சரிப்பைக்குறிக்க தமிழில் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாஎன்பது குறித்து சந்தேகம் இருந்தது,தீர்த்து வைத்து விட்டீர்கள்.நன்றி.

முகவை மைந்தன் சொன்னது…

நீங்க கட்டம் போட்டா அதுக்குள்ள புருனோ அழகாக விளையாடி இருக்கிறார். அருமை. சிறப்பான விவாதம்.

@Suresh
//யாருடைய விதிக்கும் யாரும் கட்டுபடப் போவதில்லை. அவரவர் தத்தம் வசதிக்கேற்றார் போல்தான் எழுதப்போகிறார்கள்.//

உண்மை. ஆனால் இயல்புக்கு மாற பலரும் சொல்லும் ஏரணம் பழகிருச்சுன்றது தான். பழக்கத்துக்கு கொண்டு வந்தா போச்சு. திரும்ப துவக்கப் புள்ளிக்கு வருவதும் இயற்கையின் இயல்பே. முன்பு இயல்பு தவறியது, திணிப்பு. நாங்கள் மாற முயற்சிக்கிறோம், மாற்ற விரும்பவில்லை.

முகவை மைந்தன் சொன்னது…

@cheena (சீனா)
//ஆய்வு நன்றாக இருக்கிறது - ஆனாலும் கருத்துடன் உடன் பட எனக்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது//

சரியான ஆள்ட்ட தான் "காலம்" கேட்டுருக்கீங்க ;-)

குமரன் (Kumaran) சொன்னது…

சில கருத்துகள் கோவி. கண்ணன்.

தசரதன் என்ற பெயரைத் தயரதன் என்றது தமிழ் இலக்கியம்.

ஜீசஸ் என்ற சொல்லில் இருந்து ஏசு வரவில்லை என்று நினைக்கிறேன். ஹீப்ரூ மொழியில் இசையா என்ற பெயர் அவருக்கு. இதையே இசா நபிகள் என்கிறது இஸ்லாம். இப்பெயரே தமிழில் ஏசு என்று ஆனது.

Hebrew isaiyaa à French jEsu (remember Yogan is written as Johan in French) à English Jesus.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்