பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2009

தமிழகத்தில் நடக்கும் காங்கிரசு ஆட்சி !

காமராஜர் மறைவுக்கு பின்னர் தமிழக காங்கிரசு குழுமங்களின் தேர்தல் கால கோஷமான 'மீண்டும் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி' தற்பொழுது வெற்றிகரமாக நடந்து வருவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள், இலங்கை - இந்திய அரச தந்திர உறவுக்கு முழுமையாக ஆதரவு கொடுப்பதை இன்றைய தமிழக தலைமையிலான ஆட்சி செய்து வருவதைப் பற்றித்தான் மக்கள் அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் காங்கிரசு ஆட்சிகாலத்தில் இருந்ததைப் போல் பல தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பதவி பெற்று சிறப்பாக தமிழகத்தை வழி நடத்தியது போலவே தற்பொழுதும் நடைபெறுவதாக நினைக்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு நன்மை என்றாலும் கோஷ்டிகளில் புதிய வரவாக மேலும் ஒரு கோஷ்டி சேர்ந்திருப்பது தமிழக காங்கிரசின் மூத்த அரசியல் வாதிகளை அதிர்ச்சிக்குள்ளாகியதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருகாலத்தில் திராவிடக் கட்சிகள் இருந்ததாகவும், தற்பொழுது அவை காங்கிரசு மற்றும் பாரதிய ஜெனதா கட்சியுடன் இணைந்து தேசியவாதிகள் ஆகிவிட்டனர் என்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கவும் அவை சபதம் செய்து திராவிடக் கட்சிகளைக் களைத்துக் கொண்டதாகவும் ஒலக அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தமது நிருபர் இதனை தெரிவித்தார் என்று நாவாலந்தீவு செய்தி நிருவனம் ஒன்று இந்த தகவலை தெரிவித்தது

7 கருத்துகள்:

நிஜமா நல்லவன் சொன்னது…

:))

நிஜமா நல்லவன் சொன்னது…

/கோஷ்டிகளில் புதிய வரவாக மேலும் ஒரு கோஷ்டி சேர்ந்திருப்பது/

:))))

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

காங்கிரசில் தலைவர்களை விட தொண்டர்கள் குறைவு .கோக்ஷ்டிகள் ஏராளம்...

அஸ்குபிஸ்கு சொன்னது…

கலைஞர் அவர்களின் காரசார பதில்:
பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, அவையோர்களே மற்றும் பதிவர்களே,
தமிழகத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சியாம், உண்மை உணராது உளறியிருக்கிறார் கோவி கண்ணன் என்ற அண்ணன். அவ்ர் கூறியது முற்றிலும் பொய் என்பதற்கான ஆதாரத்தை என்னால் காட்ட முடியும். ஏற்றுக் கொள்ள அவர் தயாரா?

நான் கூறுகிறேன். தமிழகத்தில் நடப்பது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இல்லை, கயவாளிகளின் ஆட்சி, காட்டிக்கொடுப்பவர்களின் ஆட்சி, உண்மைத்தமிழர்களை காலில் போட்டு மிதிக்கும் ஆட்சி. இதில் சந்தேகம் ஏதுமிருந்தால் பேராசிரியர் அன்பழகனிடம் கேளுங்கள். அவர் நீண்ட உரை தருவார். உங்களுக்கு ஏதும் சந்தேகமிருந்தால் என்னிடம் கேளுங்கள். மாறாக நீங்களே எதையாவது எழுதித் தொலைக்காதீர்கள்.

ராசா சொன்னது…

காமராஜர் ஆட்சினு சொல்லுரதுக்கு ஒரு தகுதி கூட இல்லாத கட்சிகள்தான்.இன்றைய அரசியல்..
அவரையே தோற்கடிச்ச மக்கள் தான் நம்ம மக்களும்...

சி தயாளன் சொன்னது…

//நாவாலந்தீவு

அதெல்லாம் அந்தக் காலத்திலேயே அழிந்து விட்டதே....:-)

www.mdmkonline.com சொன்னது…

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

http://www.mdmkonline.com/news/latest/fasting_of_karunanithi.html


கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.

இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை . அம்மையாரின் செய்தியை இங்கே காணுங்கள் .
அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .

* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .
* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html
* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?
இந்த செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html

* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .
அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .
* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html
* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .
இந்த செய்தியையும் பாருங்கள்

* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .
* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .
* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .
* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .
* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .
* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .

* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .

http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html


- தோழர் .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்