பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2009

கொஞ்சம் புலம்பல் !

விடுதலைப் புலிகள் வைகோவிடம் அதிமுக கூட்டணியில் தொடரும் படிக் கேட்டுக் கொண்டதாலேயே வைகோ நான்கு இடங்களுக்கு உடன்பட்டு அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக சிங்கை தமிழ் முரசு நாளிதழில் தகவல் வெளி ஆகி இருந்தது. ஏன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு விடுதலைத் தரப்பு சொல்லி இருந்த காரணம்,

1. ஜெ, ஈழத்தில் தமிழர்களுக்கான சுய ஆட்சி முறை வேண்டும் என்று வழியுறுத்துகிறார்
2. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்று கருத்துரைக்கிறார், உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

என்றும் மேலும் சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் காங்கிரசு அரசு, ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம் என்பதை இரட்டை வேடம் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும், மேலும் இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொருத்த அளவில் ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தி வாக்கு கேட்பவர்களுக்கே மிகுதியாக வாக்கு கிடைக்கும் போல் தெரிகிறது. ஆனால் யார் உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்துக் கட்சிகளும் அறிக்கைப் போர்களாக அடித்துக் கொள்ளும் வேளையில், யாருடைய கூட்டணி வெற்றி ஈழத்தமிழர்களுக்கு நன்மைசெய்ய முடியும் என்று முடிவு செய்யும் ஈழத்தமிழர்களின் குரலாக போராளிகளின் எண்ணம் வெளிப்பட்டதாகவே கருத முடிகிறது.

விடுதலைப் புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிமுக ஜெ கூட்டணி வெல்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தற்போதைய அரசியல் வாதிகளின் மன நிலையை வைத்து எவரும் சரியாக சொல்ல முடியாது. இருந்தாலும்

தமிழின மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் காங்கிரசு கூட்டணிக்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை பதிய வைத்ததாக அமையும். ஒருவேளை அதிமுக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரசை ஆதரித்தால் ? அப்போது திமுக எதிர்கட்சி தானே, அவர்களே அதிமுக - காங்கிரசு கூட்டணியின் சந்தர்பவாதம் பற்றிப் பேசுவார்கள். எப்படியும் எந்த கூட்டணியும் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை, வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் 'காங்கிரசுக்கு எதிராக' என வாக்குகளைப் அளிப்பதன் மூலம் எதிர்ப்பு பதிய வைக்கப்படுகிறது. இதைத்தான் ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்கள், அதைத்தான் வைகோவிடம் போராளிகள் சொல்லி வைகோவை அதிமுகவில் தொடர கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதாக நினைக்க முடிகிறது.

காங்கிரசை அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக அழைத்துப் பார்த்ததில் ஒன்றும் பலனில்லை என்பதால் மாற்று வழிகளில் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தவராக ஜெ ஈழ அரசியலை கையில் எடுத்தார் என்பது அரசியல் நோக்கர்கள் அறிந்த ஒன்றுதான். ஈழத்தமிழர்களின், தமிழக மீனவர்களின் நலனைவிட காங்கிரஸ் - திமுக கூட்டணியும், நட்பும் உறுதியானதா ? இந்த உறுதிக்கு பெவிக்கால் ஆனவை இரண்டு

1. சிறுபாண்மை உறுப்பினர்களுடன் தொடரும் திமுக அரசின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிற தொடர் மிரட்டல்
2. திமுகவின் ஸ்பெக்ட்ரம் ரகசியம் அறிந்துள்ள காங்கிரசு மே(லி)டம்

ஒரு வேளை ஜெ வென்றால் அதன் பிறகு திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அமைந்ததும், திமுக அரசை கவிழ்த்துவிட்டு விட்டு, டெல்லியில் ஒரு தேனீர் விருந்தில் கலந்து கொண்டு காங்கிரசையும் கவிழ்பார், அதன் பிறகு என்ன ? அதிமுக, காங்கிரசு, திமுக தனித்தனியாக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும், இதன் மூலம் இமேஜை உயர்த்திக் கொண்டு, சில்லரைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் தமிழக அரியணை ஏறலாம் என்பதே அதிமுகவின் அரச தந்திர திட்டம் என்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும், பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்

31 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ம்ம்ம்! சரிதான்!

//யாரும் காப்பாத்த முடியாது, அறிவும் பலமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்//

நூத்துல ஒரு வார்த்த!

VSK சொன்னது…

எப்படியாகிலும், திமிக தோற்றுவிடக்கூடாதே எனும் உங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு நன்கு புரிகிறது.

காங்கிரஸ் திமுக எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை.
நீங்கள் சுட்டியிருக்கும் நிலையும் நடக்காது

VSK சொன்னது…

திமுக
தட்டச்சுப்பிழை

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
எப்படியாகிலும், திமிக தோற்றுவிடக்கூடாதே எனும் உங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு நன்கு புரிகிறது.//

திமுக மீது இன்றைய அரசியல் சூழலில் எனக்கு எந்த தனிப்பட்ட பாசமும் இல்லை

//காங்கிரஸ் திமுக எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை.
நீங்கள் சுட்டியிருக்கும் நிலையும் நடக்காது
//

பதிவின் கடைசி பத்திக்கும் மேல் இன்னும் கொஞ்சம் சேர்த்து சுட்டி இருக்கிறேன் :)

அப்பாவி முரு சொன்னது…

//யாரும் காப்பாத்த முடியாது, அறிவும் பலமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்//


அய்யோ., அப்ப நானெல்லாம்?

அக்னி பார்வை சொன்னது…

காங்கிரஸ்க்கு எதிராக ஓட்டு என்று வைத்துக்கொண்டால் விஜயகாந்திற்க்கு போடலாம் - அவ்ர் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது மட்டுமில்லாமல்,ஓட்டு அரசியல் வருவதற்க்கு முன்பே தெனி ஈழத்தை ஆதரித்தர்....

தமிழர்களுக்கு சுயஆட்சியை ஏற்கனவே தந்தை செல்வா ஆரம்பித்தது, அது சாத்தியமில்லை என்று தெரிந்த பின்பு தான் தனீஇழ முழக்கமே வந்த்து..

சுய ஆட்சியை முன்னிறுத்தி தான் ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் இயற்றபட்டு, புலிகளை ஆயுதங்களி ஒப்படைக்க
சொன்னார்கள்..அப்பொழுது இலங்கை தந்திர்மாக ஏமாற்றுகிறது அதற்க்கு ராஜிவ் நம்பி ஏமற்றுபடுகிறார் என்று தனி ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
நீங்கள் படிக்கு அந்த சிங்கை பத்திரிக்கைக்கு தெ ஹிண்டுவே தெவலை.. ஒரு வேளை இதை புலிகள் உண்மையாகவே சொல்லியிருப்பார்கல் என்றால் ..ராஜிவ் சொன்ன ஒரு கருத்து தவறேயில்லை ”ஈழ மக்களுக்கு இரண்டு பேரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் ஒன்று இலங்கை அரசு இன்னொன்று விடுதலை புலிகள்”


தல அந்த பேபர மாத்துங்க...

அக்னி பார்வை சொன்னது…

காங்கிரஸுக்கு எதிராக 49ஓக்குட போடலாம்.. ஆதிமுகவை ஆதரிக்க வேஎண்டிய அவசியமில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்னி பார்வை said...
காங்கிரஸ்க்கு எதிராக ஓட்டு என்று வைத்துக்கொண்டால் விஜயகாந்திற்க்கு போடலாம் - அவ்ர் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது மட்டுமில்லாமல்,ஓட்டு அரசியல் வருவதற்க்கு முன்பே தெனி ஈழத்தை ஆதரித்தர்....

தமிழர்களுக்கு சுயஆட்சியை ஏற்கனவே தந்தை செல்வா ஆரம்பித்தது, அது சாத்தியமில்லை என்று தெரிந்த பின்பு தான் தனீஇழ முழக்கமே வந்த்து..

//

அக்னி பார்வை சார்,

திருமாவும், வைகோவும் தொடர்ந்து ஈழ விடுதலையை ஆதரிப்பது போல் விஜயகாந்து விடுதலைப் புலிகளை தடைசெய்த பிறகு ஆதரவு கொடுக்கவில்லை. தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று பொதுவாக எல்லோரும் சொல்வதை மட்டுமே சொல்லி வந்தார். ஈழ விடுதலையை போராளிகள் தவிர்த்து பிறர் போராடி பெற்றுத்தர ஏதேனும் வாய்புள்ளது ? விஜயகாந்த் ஆதரிக்கும் முன்பே பலரும் ஆதரித்தார்கள், ஆனால் தற்போதைய நிலையில் எல்லோரும் சொல்வது போல் தான் இவரும் சொல்கிறார், கலைஞருக்கும் மட்டும் தமிழ் ஈழம் அமைவதில் விருப்பம் இல்லையா என்ன ? நம்ம காங்கிரசு பதிவர் சஞ்செயிடம் கேளுங்க அவரும் ஈழம் அமைவதை தமிழக காங்கிரசு ஆதரிக்கிறது என்பார் :)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

புலம்புவதைத் தவிர நம்மால் ஆகக்கூடியது ஏதும் இல்லை

மதிபாலா சொன்னது…

அது நட்புக்காக படம் என்று நினைக்கிறேன்.

அய்யா நல்லவருங்கோ.......என்று ஒரு பாட்டு வரும். சரத்குமாரும் , விஜயகுமாரும் எதிர்ப்பாட்டுப் பாடி அதுவும் சரி.....இதுவும் சரி என்று ஆமாம் பாட்டு போடுவார்கள் அடிப்பொடிகள்.

அப்படியாகி விட்டது போங்க நம்ம நிலை!!!!!!!!!!!!!!

அக்னி பார்வை சொன்னது…

//காங்கிரஸுக்கு எதிராக 49ஓக்குட போடலாம்.. ஆதிமுகவை ஆதரிக்க வேஎண்டிய அவசியமில்லை///

இதையும் கவனிங்க தல

//நம்ம காங்கிரசு பதிவர் சஞ்செயிடம் கேளுங்க அவரும் ஈழம் அமைவதை தமிழக காங்கிரசு ஆதரிக்கிறஹனி இது என்பார் :)///

காங்கிரஸின் நிலைபாடு படு தெளிவு, தனி ஈழம் அமையட்டும் அமையாமல் போகட்டும், ராஜிவை கொன்ற புலிகளை நாங்கள் சும்ம விட மாட்டோம் என்பது தான் ...

Rajaraman சொன்னது…

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

NO சொன்னது…

Dear Govi Sir,

There you go again trying to extract some more juice out of the already dried up cortex of yours!

You will not stop wont you??

Your expert opinion today is about politics!

An inaccurate,untruthful and a self obsessed mind like yours runs to two things when the need to prove your intellectual superiority raises. One is Cinema and other one is politics. A Skill to construct a decent prose is all that is required for writing about these two topics.

You dear Govi, have resorted to write today about politics and that too have started to connect all you know with the subject that you think you are good at and what other people will have difficulty in refuting.

You know what I mean. When BJP is weak, its Ram Mandir, when Shiv Sena is weak, its Maharashtrians only, when Congress is weak, its secularism, when KK is weak its Tamil protection, when JJ is weak its KK's misrule and finally if Govi is weak its Tamil Eelam!

Sitting in Singapore, this super pseudo intelligent political analyst, gives his awesome reading on the political situation in TN! Of course Govi sticks to his line of not having to do anything with truth. Atleast this is one area he keeps his promise.

யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும, பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்

I agree. You know exactly how to write trash like this and still have those 10 to 12 guys comming to your blog and commenting.

Of course you do not have ஆள் பலம். But have considerable Poi Balam to back it up.

Please keep the outlets of your drainage pipe closed for some time dear Govi. Your pollution then will not warrant Al Gore's attention!

Thanks

Sanjai Gandhi சொன்னது…

ஜெயலலிதா, போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னதையும் பிரபாகரனை இலங்கை ராணுவத்தால் பிடிக்க முடியவில்லை என்றால் இந்திய ராணுவத்தை அனுப்பி பிடித்துவர வேண்டும் என சட்ட மன்றத்திலே தீர்மானம் போட்டதையும் யாராவது கோவியாருக்கும் பிரபாகரனுக்கும் நினைவு படுத்தினால் நலமே.

இப்படி செயல்படுபவரை நம்புங்கள் அவருடன் கூட்டணியைத் தொடருங்கள் என்று புலிகள் சொல்லி இருந்தால், இவர்களை விட சந்தர்ப்பவாதிகள் அறிவிலிகள் யாரும் இருக்க முடியாது.

வைகோ தான் ஈழத் தமிழர்களின் பிரதிநிதி என்பது போல் சித்தரிபப்தே வேடிக்கை. சமீபத்தில் போர் நிறுத்தும் வலியுறுத்தி ரயில் பிரச்சாரம் மேற்கொண்ட மாணவர்கள் சென்னை ரயில் நிலையத்தில் வைகோவை பார்த்து “ வைகோ.. வெளியே போ” என்று சொன்னதை நினைவில்கொள்ள வேண்டும்.

புலிகள் சொன்னார்கள் என்பதெல்லாம் வைகோவில் இயலாமைக்கும் பல்வீனத்துக்கும் வெறும் சப்பைக் கட்டு தான். அப்ப்டி அவர்கள் சொல்லி இருந்தால், அவர்களும் மிகப் பெரிய சந்தர்ப்பவாதிகள் தான். தேர்தல் முடியட்டும். வைகோவுக்கு அம்மா தரும் மரியாதையை பாருங்க.

Sanjai Gandhi சொன்னது…

//நம்ம காங்கிரசு பதிவர் சஞ்செயிடம் கேளுங்க அவரும் ஈழம் அமைவதை தமிழக காங்கிரசு ஆதரிக்கிறது என்பார் :)//

கோவியாரே.. இதர்கு சிரிப்பன் எல்லாம் அவசியமில்லை. இப்போதும் சொல்கிறேன். தனி ஈழம் அமைவதை ஆதரிக்கிறோம். அதற்கான காரணங்களையும் நான் சொல்லி இருக்கிறேன். காஷிமிரில் அந்த மக்கள் முழு அதிகாரத்தோடு தான் வாழ்கிறார்கள். ஈழத்தில் அப்படி இல்லை. ஆனால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம். இன்று அவர்கள் நினைத்தால் போர் முடிவுக்கு வரும். ஆனால் பிரபாகரன் தமிழ் மக்கள் செத்தாலும் பரவாயில்லை என தன் ஈகோவை கட்டி அழுகிறார். ஆயிரக் கணக்கில் மக்கள் இறந்துக் கொண்டிருக்கிரார்கள். இவர் சரணடைய வேண்டியது தானே. இப்போது எதை சாதித்துக் கொண்டிருக்கிறார்.

போராளிக் குழுக்கள் ஆரம்பித்த காலம் போல் இப்போது இல்லையே. காலம் மாறிவிட்டது. உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தாகிவிட்டது. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதன் மூலமும் , அஹிம்சை போராட்டங்கள் ஒடுக்கப் படுவதை உலகிற்கு வெளிப்படுத்துவதன் மூலமும் தனி ஈழம் இல்லை என்றாலும் சம உரிமைகளாவது பெற முடியுமே. அஹிம்சை வழியில் தங்கள் உரிமைகளை மக்கள் பெற முடியும். அதற்கு முதலில் அவர்களுக்கு நிரந்தரமான இடம் வேண்டும். ஆனால் இந்த புண்ணியவான்கள் உயிரோடு இருக்க மக்களை துப்பாக்கி முனையில் கடத்தி போய் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழர்களுக்கு முதல் எதிரிகளே புலிகள் தான். அடுத்து தான் சிங்களர்கள்.

Unknown சொன்னது…

இது உண்மையென்றால் ஜெயலலிதாவே வரட்டும். மீண்டும் ஒரு பெரிய தவறைச் செய்ததற்காக புலிகள் மிக வருந்த நேரிடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சுல்தான் said...
இது உண்மையென்றால் ஜெயலலிதாவே வரட்டும். மீண்டும் ஒரு பெரிய தவறைச் செய்ததற்காக புலிகள் மிக வருந்த நேரிடும்.
//

சுல்தான் ஐயா, புலிகள் தவறாக ஊகம் செய்தார்களா என்பது தெரியாது, ஆனால் ஜெ ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் அதைத் தொடர்வதற்கு ஜெ ஆதரவு கொடுக்கமட்டார். ஈழ ஆதரவுக்கு துணையாக இருந்தால் புலி பயம் இன்றி இருக்கலாம் என்று ஜெ நினைக்கவும் வாய்ப்பு இருக்கிறதே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ கருத்துக்கு நன்றி, இவை தாங்கள் ஏற்கனவே உதிர்த்த கருத்துகள் தான்.

இலங்கையில் பிரிவினையை தலை தூக்க்கியதும், சூழல் ஏற்பட்ட பிறகும், அதனை வளர்த்துவிட்டவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

தான் அடிவாங்கும் போது தான் வலி தெரியும் என்பார்கள். காங்கிரசின் அன்றைய தவறுகளால் பாதிக்கப்படுபவர்கள் இன்றும் ஈழத்தமிழர்கள் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
Dear Govi Sir,

//
Mr No,

Not Enough ! Today your comments are too small. I am not Happy, Please write atleast more than 500 lines.

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
//

மூன்று மாத காலம் சென்று தாமதமாக வந்தாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !

:)

NO சொன்னது…

Govi Kannan, an irrepressible Annan!

He writes about all things in the world, and thinks his writings are worth more than gold!
Without understanding that the readers brain go cold, for his blog is something where truth is not being told!

He writes daily without rest, like an ox pulling the mill with zest
What he actually is, a pest, which so far have not been subjected to any test!

Truth is not his friend, as his virtue is always to give the reality a bend
For he has no knowledge to lend, and only idiocy is his best friend!

To write, he thinks, is his virtue, but idiocy is what he pursues!
He gives opinion about everything, but the contents show he knows nothing!
He gives any criticism a damn, as truth for him is only a sacrificial lamb!

Govi dear Govi, I know you will not stop writing, even if you became an Aavi!

Govi Kannan, indeed an irrepressible Annan,
Aaga Motham, kadhai viduvathil Mannan!

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
Govi Kannan, an irrepressible Annan!

//

மற்றவர்களில் பதிவுகளுக்கும் சென்று தங்கள் உளவியல் பார்வையை பதிய வைக்கக் கூடாதா ?

No அண்ணனை எங்கப் பதிவுக்கும் வரச் சொல்லுங்க என்று உரையாடியில் எனக்கு பயங்கர நைச்சா இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
புலம்புவதைத் தவிர நம்மால் ஆகக்கூடியது ஏதும் இல்லை
//

அதனால் நம்மால் ஆகும் புலம்பலை தொடருவோம் என்கிறீர்களா ? இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மதிபாலா said...
அது நட்புக்காக படம் என்று நினைக்கிறேன்.

அய்யா நல்லவருங்கோ.......என்று ஒரு பாட்டு வரும். சரத்குமாரும் , விஜயகுமாரும் எதிர்ப்பாட்டுப் பாடி அதுவும் சரி.....இதுவும் சரி என்று ஆமாம் பாட்டு போடுவார்கள் அடிப்பொடிகள்.

அப்படியாகி விட்டது போங்க நம்ம நிலை!!!!!!!!!!!!!!
//

ஆடும் வரை ஆட்டம், சுடுகாட்டிலும் கூட கூட்டணியாகத்தான் அலைவாங்களோ !
:)

NO சொன்னது…

Anbana Govi Annan Avargale,

Thanks for the invitation. Before I migrate, have few more gems. So bear with me for some time more till I see you approaching a curative phase! Remember my first posting!

And of course, none inspires me like you.

Question and Answer:

Q: How to pack Govi Annan in a Match box
A: Give him enema. He becomes small enough! (he is full of shit)

Q: What do you throw at a drowning Govi Annan?
A: A party!

Q: Govi Annan, TBCD Annan & Mani Annan were going in a boat. The boat suddenly capsized and a rescue attempt mounted. Know who was saved?
A: Tamil pesum Nalulagam!

Q: When do you tell when Govi Annan is lying?
A: As we read his blog.

Q: What do you like the most about Govi Annan.
A: His absence

Q: What will Govi Annan write when asked about cold war?
A: Life of Penguins.

************************

Action Drama: Govi Meets Mani

Scene 1: Introducing each other.

G: I am Govi, and I have the savi, for every Pavi to reach the Parisutha Avi!
M: I am Mani, I am always Thani but my writings are many, which if one reads can drive away Lord Sani.

Scene 2: Talking it out

G: Mani dear, do not fear “No” body’s here, so let’s scribble without fear!
M: What are you talking Govi, I am after all the great Mani and not just any, that will succumb to threats of an anani!
G: That’s right Mani, we should just write and write, till this anani gets a fright and calls of this fight!
M: That’s great Govi. I will do as you say. But there is one thing which is my pay, that I lost today for wasting my time with you in this way!
G: Come on Mani, why bother about pay? If this office is bothering you, call it a day. Its going to be may and I will show you the way to make a good deal of hay.
M: Is it Govi is it? Can you help me find a job so that my friends don’t call me a lazy slob. Please note that I would like a job, where one doesn’t require to slog,
G: Please Mani, believe in me, as I am a genius and I am very serious.
M: Ok Govi, you are here and I keep aside my fear. But tell me this job is near.
G: Mani dear its very near and it’s a job of my assistant, but don’t be hesitant.
M: What, your assistant????
G: Yes dear Mani, being a genius I find it difficult to type and I want some one more genius to blow the pipe when my brilliant mind takes a hike.

Scene 3: Action

There is a big sound of somebody hitting something!

G: Mani, no no no, please don’t hit me with the keyboard. No No. please. Thank god. you stopped if not I will write this in my blog!...... No..No…No please dont hit me again Mani…no no…no…not with that LCD monitor. No…No…not in the back. Please hit only on my head….please only on the head as there is nothing inside…….

Scene 4: Climax

While Mani beats the hell out of Govi Annan, some one enters the scene with a big noise in an effort to stop the bashing.

M: Who are you and what are you doing here??

D: I am Dondu, and I daily play my Baandu, in a blog which is a unique brandu, which I do it without any gandu! So dear Manikandoo, listen to Annan Dondu and stop hitting this guy who is just an immature vandu!
M: Vanga Sir Vanga, Konjam Irunga, I am not finished with his hands, nama oru minutila pazhagalam! Appadiye pakkathula vanga!

After this dialogue, Mani does something which makes Dondu run without his pantu!

Meanwhile the ambulance collected what was left of Govi Annan.

How he recovered? Read his blog tomorrow!

Thanks

கோவி.கண்ணன் சொன்னது…

//No Said...
.....
.....
.....
After this dialogue, Mani does something which makes Dondu run without his pantu!

Meanwhile the ambulance collected what was left of Govi Annan.

How he recovered? Read his blog tomorrow!

Thanks//

Mr No,

செல்லாது செல்லாது நான் குறைந்த அளவாக 500 வரிகளாவது பின்னூட்டத்தில் எதிர்பார்த்தேன்.

ராம்.CM சொன்னது…

அரசியலோ..அரசியல்.

பாரதி.சு சொன்னது…

என்னமோ!!போங்க....
புலிகள் தான் ஜெ-வைகோ கூட்டுக்கு காரணம் என்று யாருப்பா தகவலை உறுதிப்படுத்தியது???
தி.மு.க, அ.தி.மு.க இதர கட்சிகள் எல்லாமே ஈழத்தமிழர்களினை மட்டுமல்ல தமிழக மக்களையும் ஏமாற்றி நாமம் போடுவதுடன் தங்கள் பைகளினை நிரப்புகிறனர். உணர்ந்து கொள்ளுங்கப்பா....அடம்பிடிக்காதிங்க...
ஈழத்தமிழர்களினை பொறுத்தவரை என்றும் மதிப்பிற்குரியவர்கள் தற்போது பழ. நெடுமாறன், வைகோ இருவர் மட்டுமே............
வைகோவின் கட்சி சார்ந்த செயல்பாடுகள் எமக்கு பிடிக்காவிட்டாலும் தனக்கு உள்ள விருப்பு வெறுப்புகளை மாற்றிக்கொள்ளாதவர்.
ஈழத்தமிழர்களை பொறுத்தவரை கலைஞர் இன்னொரு நம்பிக்கைத்துரோகி.
கருணா போல...இதை வைத்து நான் புலியாதரவு என எண்ணினால் அது 50% மட்டுமே சரி. ஏனென்றால் நான் புலிகளின் தவறுகளை சரி என நியாயப்படுத்தாத...விமர்சனங்கள் கொண்டுள்ள... போராளிகளாக உள்ள என் நண்பர்களின் , சகோதரர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்துள்ள ஒரு சராசரி தமிழன்.
இன்னொரு கேள்வி வலைப்பதிவாளர்களே....புலிகள் தவிர்ந்த வேறு யாருடன் சமாதானம் பற்றி கதைப்பதை தமிழ் சமூகம் விரும்புகிறது???

நன்றி.

தமிழ் குரல் சொன்னது…

பராவாயில்லை...

ஜெ... இரண்டு கருத்துக்க்ளை தெளிவாக சொல்லியுள்ளார்...

1. சிங்கள அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட தீர்வை... ஜெ... ஆதரிக்கிறார்...

அதாவது சிங்கள அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டும்...

2. இந்தியா ரகசியமாக ஆயுதம்... ஆள் கொடுப்பதை எதிர்க்கிறார்...

இவருக்கு அதிகாரம் பகிரங்கமாக கொடுப்பார்...

ஜெவை பொருத்த வரை... ஈழ தமிழர்களின் அவலத்திற்கு காரணம் கருணாநிதி...

அவர் ஒரு வார்த்தை கூட ராஜபக்சேக்களை கண்டிக்க வில்லை...

இதற்கு மேலும் விடுதலை புலிகள்... ஜெவை ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு....

தமிழ் குரல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆ.ஞானசேகரன் சொன்னது…

//யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும், பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்//

அப்படி இருக்க நாம பேசிதான் என்ன பயன்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்