பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2009

கருணாநிதியின் கையாலாகத்தனத்திற்கு வைகோவும் காரணம் !

கலைஞர், தமிழின தலைவர் என்று சொல்வதற்கு கூசுவதால் கருணாநிதியென்றே சொல்கிறேன். நான் கட்சித்தொண்டோனோ திமுக அனுதாபியோ கிடையாது, திராவிட சித்தாந்தங்களின் மீது இருந்த ஈர்ப்பால் அண்ணாவழி வந்த இயக்கம் என்பதாலும் திமுகவின் மூத்த தலைவர், தமிழ் பற்றாளர் என்பதால் பலரைப் போல் 'கலைஞர்' என்றே நானும் எழுதி வந்தேன். இப்போதைய சூழலில் அந்த பெயரெல்லாம் கட்சித்தொண்டர்கள் கட்டாயத்தின் பேரில் அழைக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு தமிழன் என்ற முறையில் அவர்களும் அப்படி அழைப்பார்களா என்பதே ஐயம்தான்.

***

சென்ற சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடம் மிகுதியாக வைகோ கேட்க, கருணாநிதி முடியாது என்று சொல்ல, சிறையில் தின்ற களி செறிப்பதற்குள் அம்மாவிற்கு கொடுத்த பூச்செண்டில் தனது தன்மானத்தையும் சேர்த்தே முடிந்து கொடுத்தார் வைகோ. அதற்கு வைகோ கூறிய காரணங்கள் ஆயிரம் என்றாலும், பலரும் முகம் சுளித்தனர். ஈழவிடுதலையை ஆதரித்தவர் என்பதை சாக்காக வைத்து எதிர்தரப்பில் இருந்த ஒருவரை வெறும் அரசியல் பழிவாங்களால் அவரை பொடா சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டார் ஜெ. மற்றபடி பொடோவை பயன்படுத்தி வைகோவை உள்ளே போட ஈழவிடுதலையை ஆதரித்தார் என்று சொல்லியது அதை ஒரு சட்ட பூர்வ நடவெடிக்கையாக காட்ட மட்டுமே. அந்த வழக்கில் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால் வைகோ வெளியே வரமுடிந்தது. வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும் பொடா பாய்ச்சப்பட்டு சிறை செல்ல நேர்ந்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஜெ வின் இந்திய இறையாண்மை காப்பில் இருந்த அக்கரையின் தன்மையை அரசியல் அறிவே இல்லாதவர்கள் கூட அதை பழிவாங்கும் நடவெடிக்கை என்றே விமர்சித்தார்கள், அதையே திமுக அரசும் இன்று சீமான் போன்றவர்களிடம் தோற்றுப் போகும் வழக்கு என்று தெரிந்தே செய்துவருவதையும் கவனிக்க வேண்டும். இவை வைகோவிற்குத் தெரியாதா ?

தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கி வாழ்வில் ஓர் ஆண்டுகளுக்கும் மேலான நாட்களை சிறையில் கழிக்க வேண்டி இருந்ததை, உணர்ச்சி உள்ள ஒருவன் வாழ்நாள் முழுவதுமே இதனை மறக்கமாட்டான். ஆனால் ஜெவுக்கு பூச்செண்டு கொடுக்க முனைந்த அந்த நொடியே வைகோ உணர்ச்சியற்றவராக மாறிவிட்டார். தன்னைப் பலரும் தூற்றுவார்கள், இனி எப்படி பொதுமக்கள் முகத்தில் விழிப்பேன் என்ற உணர்வு / வெட்கம் சிறிதும் இல்லாமல், திருடி மாட்டிக் கொண்டவன் விழிப்பதைப் போன்ற பூச்செண்டு கொடுத்துக் கொண்டு விழித்தார். புலியாக சீறிக் கொண்டு இருந்தவர் தான் வெறும் பூனை என்பதாக தனக்கு தானே அடையாளப்படுத்திக் கொண்டு, அதுவரை கட்டிக் காத்த இயக்கத்தையும், தொண்டர்களையும் தன்னை மிதித்தவர் கால்களில் வைத்தார், அதன் தொடக்கமே தமிழர்களுக்கான கெட்டகாலம் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வைகோ அல்லது கருணாநிதி பிடிவாதத்தை விட்டுவிட்டு சென்ற சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தால் திமுக போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வென்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்து இருக்கும், ஆனால் அது நடக்காமல் போக வைகோவின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குச் செல்ல, பல இடங்களில் திமுக மண்ணை கவ்வியதற்கு அதுவே காரணம், திமுகவிற்கு பெரும்பாண்மை இடம் கிடைக்காமல் போகவே காங்கிரசின் தயவிலும், பாமக தயவிலும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. பாமக உறுப்பினர்கள் சொற்ப அளவே, ஆனால் காங்கிரசின் துணை இன்றி திமுக அரசை அமைக்க முடியாத நிலையும், அமைத்த அரசை தொடர முடியாத நிலையும் அன்றிலிருந்தே தொடர்ந்து வருகிறது. காங்கிரசின் ஆதரவே திமுக அரசின் கடிவாளமாகிப் போனதால் காங்கிரசை மீறி ஈழத்தமிழர்களுக்காக எந்த வித அழுத்ததையும் கொடுக்க முடியாத நிலைக்கு திமுக சென்றுவிட்டது. இல்லை என்றால் பெருசாக புடிங்கி இருக்குமா என்றெல்லாம் கேட்காதிங்க.

தனிபலம் இருந்திருந்தால் சட்டசபை கவிழும் மோசமான நிலை இருந்திருக்காது. மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்று இருப்பார்கள், ஏனென்றால் தமிழர்கள் நலனில் தொடர்ந்து பாடுபடுகிறோம் என்று காட்டவதற்காகக் கூட அவ்வாறு செய்து 'தமிழின தலைவர்' பதவியை தொடர்ந்து காப்பாற்ற முயன்றிருப்பார்கள், ஆனால் இன்றைய சூழலில் அந்த பதவியை காக்க முயன்றால் முதலமைச்சர் பதவி பறிபோய்விடும். மேலும் ஸ்பெக்டரம் ரகசியங்கள் சோனியாவுக்கு தெரிந்திருக்கலாம், அதன் மிரட்டலில் வேறுவழியின்றி காங்கிரசு நிலைப்பாட்டையே அவர்களும் தொடர்வதுடன், நாங்களும் போராடுகிறோம் என்று காட்ட மனித சங்கிலி, வேலை நிறுத்தம் போன்ற நாடகங்களை நடத்திக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.வேலை நிறுத்த போராட்டம் என்பது அரசுக்கு எதிராக பொதுமக்களோ, எதிர்கட்சிகளோ நடத்துவதே வழக்கம். மக்களால் அரசு அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி, மக்கள் இயல்பு வாழ்க்கை நலிவடையும் வேலை நிறுத்தங்களை நடத்துவதும் அது வெற்றிகரமாக நடந்ததாக பீற்றிக் கொள்வதும் மக்களாட்சியின் கேலிக் கூத்துகள்.

இன்றைய சூழலில் திமுக அரசு தற்காப்பு தன் நலநோக்கில் செயல்படுவது மறைமுகமாக அன்றைய நாளில் வைகோ எடுத்த தவறான முடிவினால் தான். ஒண்ணால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய். நம்மால் ஈழத்தமிழர்கள் நம்பிக் கெட்டார்கள் என்பது இருவருக்குமே தெரியும்.

***

கேடுகெட்ட அரசியல் வியாதிகள். இனி வருங்காலத்தில் கொள்கைகளில் தெளிவும், நடத்தையில் தூய்மையும், வாக்கில் நேர்மையும் உள்ள அரசியல்வாதிகள் எவரையுமே பார்க்க முடியாது, ஏனென்றால் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாரிசு அரசியல் நிறுவனங்கள் ஆகிப் போய்விட்டன, அதன் நோக்கு மக்கள் நலன் அல்ல. முடிந்தவரையும் அதன் மூலம் பதவி சுகங்களை அனுபவித்து, பணக் குவியல் திரட்டுவது தான் நோக்கமே. தமிழ், தமிழர், கொள்கை போன்ற இனிய சொற்களை அரசியல் வாதிகள் பேசும் போது அவற்றைக் கண்டு கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் சொற்பொழிவாகக் கேட்டுக் கொண்டு தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அரசியல் வாதிகளின் செயல்களில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

36 கருத்துகள்:

TBCD சொன்னது…

கடலுக்குள் தூக்கிப் போட்டாலும் மரமாக மிதந்து தமிழர்களுக்கு உதவுபவர்களுக்கு ஆட்சி ம*ரு அவசியமில்லையே !

நீங்களும் உங்க ஆராய்ச்சியும் !

சப்பைக்கட்டு கட்ட காரணம் தேடுபவர்களுக்கு எடுத்துக் கொடுக்குறீங்க !

சென்ஷி சொன்னது…

ஹா ஹா ஹா....

ஆனாலும் உங்களுக்கு ஓவரு நக்கலுங்ண்ணோவ்...

ஆனாலும் இது தேசிய வியாதி மாதிரி ஆகிப்போச்சு ஈழத்தை பத்தி பேசறதும் அதுக்கு ஒண்ணும் நடக்காததுக்கு காரணம் தேடுறதும்.

டேய் ஆமாண்டா எங்களால ஒண்ணும் முடியாதுன்னு சொல்ல அவனுங்களுக்குத்தான் தைரியம் இல்லைன்னா நீங்ககூட அதுக்கு ஆமோதிப்பா ஒரு காரணம் தேடி கொடுக்கறீங்க.

வாரிசு அரசியல் இப்ப இல்லை. ரொம்ப முன்னாடியே வந்த ஒரு கெடுதி. அப்படி இல்லைன்னா இந்திரா, ராஜீவ், சோனியா இப்ப ராகுலா பிரியங்காவான்னு யாரும் ஜோசியம் பார்த்துட்டு இருக்க மாட்டாங்க.

என்னமோ போங்க. நானும் புதசெவிக்கு ஒத்து ஊதிட்டு போக வச்சுட்டீங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
கடலுக்குள் தூக்கிப் போட்டாலும் மரமாக மிதந்து தமிழர்களுக்கு உதவுபவர்களுக்கு ஆட்சி ம*ரு அவசியமில்லையே !//
:)

//நீங்களும் உங்க ஆராய்ச்சியும் !

சப்பைக்கட்டு கட்ட காரணம் தேடுபவர்களுக்கு எடுத்துக் கொடுக்குறீங்க !//

இன்னிக்கு எல்லாம் இடையாப்ப சிக்கலாகி, சுய நல அரசியல் ஆகிப் போனதற்கு வைகோவின் பூச்செண்டே காரணம்
//

கோவி.கண்ணன் சொன்னது…

// சென்ஷி said...
ஹா ஹா ஹா....

ஆனாலும் உங்களுக்கு ஓவரு நக்கலுங்ண்ணோவ்...//

:) அட அப்படி எல்லாம் இல்லிங்க

//ஆனாலும் இது தேசிய வியாதி மாதிரி ஆகிப்போச்சு ஈழத்தை பத்தி பேசறதும் அதுக்கு ஒண்ணும் நடக்காததுக்கு காரணம் தேடுறதும்.//

மனச தேற்றிக் கொள்ள வேண்டி இருக்கே.

//டேய் ஆமாண்டா எங்களால ஒண்ணும் முடியாதுன்னு சொல்ல அவனுங்களுக்குத்தான் தைரியம் இல்லைன்னா நீங்ககூட அதுக்கு ஆமோதிப்பா ஒரு காரணம் தேடி கொடுக்கறீங்க.//

மசுரு நீற்றால் உயிர்வாழக கவரி மான்கள், எப்படி வாயால சொல்லுவாங்க :)

//வாரிசு அரசியல் இப்ப இல்லை. ரொம்ப முன்னாடியே வந்த ஒரு கெடுதி. அப்படி இல்லைன்னா இந்திரா, ராஜீவ், சோனியா இப்ப ராகுலா பிரியங்காவான்னு யாரும் ஜோசியம் பார்த்துட்டு இருக்க மாட்டாங்க.

என்னமோ போங்க. நானும் புதசெவிக்கு ஒத்து ஊதிட்டு போக வச்சுட்டீங்க :)
//
:)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ரொம்ப அநியாயத்துக்கு யோச்சிசுட்டீங்ணா.

சொல்லியிருக்க காரணம் தர்க ரீதியா சரியாத்தான் தோணுது. வைகோ மட்டும் காரணமில்ல. வைகோ ஒன்னு ஒழுங்கா இராமதாஸ் மாதிரி அரசியல்வாதியா இருக்கனும், இல்ல நெடுமாறன் மாதிரி ஈழத்தமிழர்களுக்காக போராடணும். ரெண்டுலயும் கால வைச்சுக்கிட்டுருந்தாருன்னா எல்லா பக்கமும் மொத்து வாங்க வேண்டியது தான்.

♫சோம்பேறி♫ சொன்னது…

காகம் கரையும். நாய் குரைக்கும் என்ற வரிசையில் 'நடத்தையில் தூய்மையும், வாக்கில் நேர்மையும் உள்ள அரசியல்வாதிகள் எவரையுமே பார்க்க முடியாது' எப்போதோ சேர்த்தாகி விட்டது.

அரசியல்வாதிகளின் பேச்சை, உங்களால் சொற்பொழிவாக எடுத்துக் கொள்ள முடிகிறதா!?

எனக்கென்னவோ, 'கலக்கப் போவது யாரு', 'அசத்தப் போவது யாரு' மாதிரி எடுத்துக் கொள்ள முடிகிறது.

ஆனால் கருனாநிதி பல சீரியஸான கேள்விகளுக்கும் நகைச்சுவையாக பதில் சொல்லி(சொல்வதாவதாக எண்ணிக் கொண்டு) கடுப்பேற்றுகிறார்.

அவரது சொற்சுவை பதில் சொல்ல முடியாத கேள்விகளை மழுப்புவதற்கு பயன் பட்டிருக்கிறதே ஒழிய, அதனால் மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா?(மக்களுக்கு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும்)

முனிசாமி. மு சொன்னது…

ஈழ பிரச்சனைக்காக ஒவ்வொரு கட்சியும் என்னென்ன செய்தன (உண்மையாக) என்பதை பட்டியலிட்டாலே அவற்றின் கபடங்கள் தெரியும்....பட்டியலிடுங்களேன்....

முனிசாமி. மு சொன்னது…

ஈழ பிரச்சனைக்காக ஒவ்வொரு கட்சியும் என்னென்ன செய்தன (உண்மையாக) என்பதை பட்டியலிட்டாலே அவற்றின் கபடங்கள் தெரியும்....பட்டியலிடுங்களேன்....

G.Ragavan சொன்னது…

கருணாநிதியைக் கலைஞர்னெல்லாம் கூப்புட முடியாது. அப்படிச் சொல்றதுக்கும் ஜெயலலிதாவை புரட்சித் தலைவின்னு சொல்றதுக்கும் வித்யாசம் ஒன்னுமில்லை.

தாமரை சொன்னாப்புல.... ஜெ.. அம்மாவாசை. கருணாநிதி அதுக்கு அடுத்தநாளு.

கருணாநிதியின் கையாலாகாதத் தனத்துக்கு வைகோவும் காரணம்னு சொல்ல முடியாதுன்னு நெனைக்கிறேன்.

ஆகக்கூடி சட்டசபைல முழுப்பலம் இருந்தாத்தான் அழுத்தம் கொடுக்க முடியுமாக்கும். ஏங்க.... ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி சோனியாவுக்குத் தெரிஞ்சிருக்குறதால..அவரு சும்மாயிருக்கார்னா.... அவரு ஊழல் பெருச்சாளிங்க. அப்புறம் யார் எந்தப்பக்கம் போயிருந்தா என்ன?

சரிய்யா.... மக்கள் பெருசா பதவி பெருசா.... என்னவோ ரயில்ல படுத்தேன் தண்டவாளத்துல தலைய வெச்சேன்னு பெருமையாப் பேசுறவங்க... பதவிய விட மக்கள்தான் பெருசுன்னு தூக்கி எறிஞ்சிருந்தார்னா.. இந்நேரம் உலகத் தமிழர்களெல்லாம் அவருக்குப் பின்னாடி நின்னிருப்பாங்க. தமிழ்நாடே கொந்தளிச்சிருக்கும். பண்ற தப்பெல்லாம் பண்ணீருவாராம். அது வெளிய வரக்கூடாதுன்னு சும்மாயிருப்பாராம். ஆனா அந்தக் கையாலாகாதத்தனத்துக்கு இன்னொருத்தரு காரணமாம். நல்லாயிருக்கு கதை.

அவரு கூட்டணி மாறுனாரு. ஜெயில்ல வெச்சவரோட கூட்டணி வெச்சாரு. மானம் போச்சு. உணர்ச்சி போச்சு...எல்லாம் சரிதான்.

இங்க என்ன வாழுது. இதே காங்கிரசு தானே கருணாநிதி முழுப்பலத்தோட ஆட்சீல இருந்தப்போ கலைச்சது. ராஜீவ்காந்தியக் கொன்னதே திமுகதான்னு இதே காங்கிரஸ்தானே சொல்லுச்சு. எப்போ அப்பேர்ப்பட்ட காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சாங்களோ அப்பவே கருணாநிதிக்கு உணர்ச்சி போச்சு. மானம் போச்சு.

ஊரெல்லாம் ஊத்தப்பல்லு... சொல்றது மட்டும் ஒருத்தரையா... தேவைப்பட்டா திரும்பவும் பிஜேபியோட திமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லைன்னா சொல்றீங்க? அப்படி வெச்சா.. கருணாநிதியோட எது போகும்? ஏன்னா மானமும் உணர்ச்சியும் காங்கிரசோட கூட்டணி வெச்சப்பவே போச்சே.

வைகோ செஞ்சது சரின்னு சொல்றதுக்காக இதெல்லாம் சொல்லலை. அவரை என்னெல்லாம் சொல்லலாமோ...அத்தன கருமாந்திரங்களையும் இங்கயும் சொல்லலாம். ஜெ கிட்டயும் சொல்லலாம்.

G.Ragavan சொன்னது…

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... மிசா கிசான்னு சொல்றாங்களே... அதுல யாரோ ஜெயிலுக்கெல்லாம் போனாங்க. அந்த மிசாவைக் கொண்டாந்த கட்சியோட இப்பக் கூட்டணி வெச்சி... ஆட்சியில பங்கு வெச்சி.. ஆனா அடுத்தாள் பண்ணா அசிங்கமாக்கும்.

Unknown சொன்னது…

கோவி,

தமிழக தேர்தல் வரும் முன்னரே திமுக கூட்டணி 40 இடங்களை வென்று மத்திய அரசில் வலுவான பதவிகளில் இருந்தது... அந்த பதவிகளை காப்பாற்றிக் கொள்ள காங்கிரசுக்கு தொகுதிகளை வாரிக் கொடுத்ததும், ஓடுகாலிகள் என்று தெரிந்தும் சில ஜாதிக் கட்சிகளுக்கு வாரி வழங்கியதும் தான் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைக்க முக்கிய காரணம்...

இப்பொழுது நீங்கள் வை.கோ தான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறீர்கள்...வளர்க உங்கள் கண்டுபிடிப்பு திறமை!

வைகோ ஜெயாவுடன் கூட்டணி அமைத்தது உண்மையே....ஆனால் தன் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலிருந்து அவர் என்றும் மாறியது இல்லை...இறையாண்மை பொறையாண்மை என்று பித்தலாட்டங்கள் அவர் காட்டியது இல்லை.....இன்றைக்கு வைக்கோவின் மகன் இளைஞர் அணித்தலைவராகவும், பேரன் மத்திய அமைச்சராகவும் இல்லை...

என்னிடம் அதிகாரம் இல்லை...இருந்தால் உங்களுக்கு நோபல் பரிசு பரிந்துரை செய்திருப்பேன்!

Krish சொன்னது…

யாருமே ஒழுங்கு இல்லீங்க! இதுக்கு மக்களும் ஒரு காரணம். இவனுக மாறி மாறி கூட்டணி வச்சிக்கிட்டு, கூசாம ஒருத்தர ஒருத்தர் திட்டிகிட்டு எந்த தைரியத்துல வராங்க? பணம், இலவசம், ஜாதி ...முக்காவாசி பேர் இது மூனையும் வெச்சி தான் ஓட்டு போடறாங்க. தெளிவா சிந்திக்கரவங்க பாதி பேர் ஓட்டு போட வரத்து இல்லை!!!

aki சொன்னது…

ஈழத்தவர்களின் அவல நிலைக்கு வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி என்று யாருமே காரணமில்லை.

புலிகள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம்.

வைகோவையும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நம்பியா புலிகள் போர் நடத்திக்கொண்டிருந்தார்கள்? இன்று கைவிட்டுவிட்டார்கள் என்று அழுவதற்கு?

வெற்றிபெற்றிருந்தால், காரணம் வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா என்று சொல்வார்களா? அப்போது தோல்வியுறும்போது ஏன் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் வைகோவையும் காரணம் காட்டவேண்டும்?

அல்ஜஜீரா தொலைக்காட்சியில் புலிகளிடமிருந்து தப்பிவந்த ஈழ மக்களை பேட்டிகண்டார்கள். ஐநாவும் இலங்கை அரசாங்கமும் இலவசமாக அளித்த உணவுப்பொருட்களை கூட அதிக விலைக்கு அந்த மக்களிடமே விற்று காசு பண்ணினார்கள் புலிகள். அந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் பட்டினி கிடந்தார்கள்.

வெளியேறியவர்களை சுட்டார்கள். வெளியேற விரும்பியவர்கள் மிரட்டப்பட்டார்கள். சிறு குழந்தைகளை கூட விடாமல் பிடித்துச்சென்று ராணுவத்துடன் மோத தூக்கமுடியாத துவக்குகளை கொடுத்து போர்முனைக்கு அனுப்பினார்கள். வெளியே வந்தவர்கள் யாரோ முன்பின் தெரியாத பத்திரிக்கையாளர்களிடம் கதறுகிறார்கள்.

இவர்களை காப்பாற்ற என்ன அவசியம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சோனியாவுக்கும்?

அங்குள்ள மக்களை காப்பாற்றவேண்டும். புலிகளை அல்ல. ஆகவே அந்த மக்களை வெளியே விடும்படி புலிகளை தமிழர்கள் நிர்பந்திக்கவேண்டும். அதுவே இன்று தமிழர்களின் நலம் விரும்பிகள் செய்யவேண்டியது? புலிகளையோ புலித்தலைமையையோ காப்பாற்ற அல்ல.

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ராவணன் சொன்னது…

இன்னும் சில காரணங்களை விட்டுவிட்டீர்கள்.

1.வையாபுரி நாயக்கர்தான் காரணம்,
வைகோ என்ற மகனை பெற்றதற்காக.

2.முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார்தான் காரணம்,கருணாநிதி என்ற ஒன்றை பெற்றதற்காக.

3.வேலுப்பிள்ளைதான் காரணம்,பிரபாகரன் என்ற வீரனை பெற்றதற்காக.

4.ஜெயராமன் மற்றும் சந்தியாதான் காரணம்,ஜெயலலிதா போன்றவற்றை பெற்றதற்காக.


இதுபோல பலகாரணங்கள் உள்ளன.நன்றாக யோசித்து இன்னும் பல பதிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ராவணன்

ராஜரத்தினம் சொன்னது…

எனக்கு ஒரு நப்பாசை.இந்த ஜெயலலிதா எதை சொன்னாலும் ஒரு வீம்புக்காகவாவது அதையே தொடர்ந்து செய்வார். அவர் இப்பொழுது எதோ ஈழம் தான் தீர்வு என்கிறார். அவரை நம்பித்தான் பார்ப்போமே?

தமிழர் நேசன் சொன்னது…

வணக்கம் அண்ணே!

வைகோ - ஈழத் தமிழர்கள் நலத்திற்காக தனி ஈழம் என்ற ஒன்றே தீர்வு என்பதை தன் கட்சியின் கொள்கையாகவே கொண்டு இது நாள் வரை கடைப்பிடித்து வருகிறார். அவர் அந்த கொள்கையை எந்த நேரத்திலும் விட்டு கொடுத்ததாக எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வைகோவை தன் சுய / குடும்ப நலத்திற்காக பயன்படுத்த முயன்றவர்தான் கருணாநிதி. அவர் ஏன் த.மு.க விலிருந்து நீக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். தவிர அவர் அ.தி.மு.க வில் கூட்டு சேர்ந்ததற்கு அவர் முடிவு மட்டும் காரணம் அல்ல. ம.தி.மு.க என்பது தி.மு.க போலவோ, அ.தி.மு.க போலவோ, தனிநபர் ஆதிக்கத்துடன் இருக்கும் கட்சி அல்ல, வைகோ அதன் பொது செயலாளராக இருப்பினும், அவரை விட மூத்த உறுபினர்கள் ஆலோசனை கேட்பது அவருக்கு முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கூட்டணி மற்றும் அரசியல் விவகாரங்களில் மற்றவர் ஆலோசனை கேட்க நேர்ந்தாலும், கொள்கை என்று வந்தால் வைகோ எப்போதும் உறுதியானவர் என்பது என் கணிப்பு. வெளியே வந்த சில முக்கிய உறுப்பினர்கள் எவரும் வைகோவின் கொள்கை பற்று குறித்தோ அவரை தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்க முடியாதவர்களாக உள்ளனர் என்பதை கவனிக்கவும். அவர்கள் கூறும் காரணம் எல்லாம் தங்கள் நலன்(!) பாதுகாக்க படவில்லை என்பது தான்!!

கருணாநிதி - http://tamilarnesan.blogspot.com என்னுடைய புதிய பதிவை தயவு கூர்ந்து பார்க்கவும்.

இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை மிகவும் சிக்கலானது தான். உண்மைத் தலைவர்களை இனம் காண்பது சற்று கடினம் தான்.

Unknown சொன்னது…

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழர் நேசன் said...
வணக்கம் அண்ணே!

வைகோ - ஈழத் தமிழர்கள் நலத்திற்காக தனி ஈழம் என்ற ஒன்றே தீர்வு என்பதை தன் கட்சியின் கொள்கையாகவே கொண்டு இது நாள் வரை கடைப்பிடித்து வருகிறார்.
//

கொள்கை ரீதியாக சரியாக இருக்கிறாரா ? ஜெ எந்த நாளும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை என்று இன்று வரை அறிக்கை விடுத்து வருகிறார். ஜெவுடன் கூட்டணி வைக்க வைகோவிற்கு அரசியல் ரீதியான நோக்கம் தான் என்ன ?

சரி அதையெல்லாம் விடுங்க. ஒரே ஒரு சீட்டுக்காக திமுக கூட்டணியில் இருந்து வெளி யேறியவர் தற்பொழுது 7 ல் இருந்து 4 சீட்டுக்கு இறங்கி வந்திருக்கிறார். அந்த ஒரு சீட்டு பேரம் சட்ட மன்ற தொகுதி, இங்கே மூன்று சீட்டுகள் கூடுதலாகக் கேட்டு கிடைக்காமல் போனதும் இறங்கிவந்து வேறே வழியே இல்லாமல் நிற்பதை சரி என்று சொல்கிறீர்களா ? இதே முடிவை முன்பு எடுத்திருக்கலாமே, இப்போ பட்டதைவிட அவமானமும் குறைந்தே இருக்குமல்லவா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Raja said...
எனக்கு ஒரு நப்பாசை.இந்த ஜெயலலிதா எதை சொன்னாலும் ஒரு வீம்புக்காகவாவது அதையே தொடர்ந்து செய்வார். அவர் இப்பொழுது எதோ ஈழம் தான் தீர்வு என்கிறார். அவரை நம்பித்தான் பார்ப்போமே?

11:00 AM, April 26, 2009
//

தேர்தல் முடிந்ததும் மறுபடியும் பல்டி அடிப்பார். நான் அவ்வாறு சொன்னது தவறு என்று தற்போது உணருகிறேன் என்று அவர் கடந்த காலங்களில் பல்டி அடித்திருக்கிறார். திமுக கூட்டணியில் சேர்வதால் காங்கிரஸ் புதை குழியில் விழுகிறது என காங்கிரசுக்கு மறைமுக தூதுவிட்டு, முடியாமல் போகவே காங்கிரசை எச்சரித்தேன் என்று பல்டி அடித்தவர் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
இன்னும் சில காரணங்களை விட்டுவிட்டீர்கள்.

1.வையாபுரி நாயக்கர்தான் காரணம்,
வைகோ என்ற மகனை பெற்றதற்காக.

2.முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார்தான் காரணம்,கருணாநிதி என்ற ஒன்றை பெற்றதற்காக.

3.வேலுப்பிள்ளைதான் காரணம்,பிரபாகரன் என்ற வீரனை பெற்றதற்காக.

4.ஜெயராமன் மற்றும் சந்தியாதான் காரணம்,ஜெயலலிதா போன்றவற்றை பெற்றதற்காக.


இதுபோல பலகாரணங்கள் உள்ளன.நன்றாக யோசித்து இன்னும் பல பதிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ராவணன்
//

இல்லை அப்படி சொல்ல முடியாது, நடந்த நிகழ்வுகளில் சிலவற்றை தவிர்த்திருந்தால் ஈழ ஆதரவு இடியாப்ப சிக்கல் ஆகி இருக்காது என்பதற்காகச் சொன்னேன். இதில் எனக்கு தனிப்பட்ட காழ்புணர்வோ, லாபமோ இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//kanishka said...
கோவி,


தமிழக தேர்தல் வரும் முன்னரே திமுக கூட்டணி 40 இடங்களை வென்று மத்திய அரசில் வலுவான பதவிகளில் இருந்தது... அந்த பதவிகளை காப்பாற்றிக் கொள்ள காங்கிரசுக்கு தொகுதிகளை வாரிக் கொடுத்ததும், ஓடுகாலிகள் என்று தெரிந்தும் சில ஜாதிக் கட்சிகளுக்கு வாரி வழங்கியதும் தான் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைக்க முக்கிய காரணம்...

இப்பொழுது நீங்கள் வை.கோ தான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறீர்கள்...வளர்க உங்கள் கண்டுபிடிப்பு திறமை!//

அம்மாவிடம் இறங்கி வந்து 4 சீட்டுகளுடன் கப்சிப் ஆகியது திமுகவுடன் அவரால் ஏன் இணக்கமாகச் செல்ல முடியவில்லை ?

இல்லேன்னு சொல்றவ மகராசி, கொடுக்கிற மூதேவி நீ கொடுப்பதில் என்ன குறைச்சல் ? என்றானாம் ஒருவன். அந்த கதைதான்.


//வைகோ ஜெயாவுடன் கூட்டணி அமைத்தது உண்மையே....ஆனால் தன் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலிருந்து அவர் என்றும் மாறியது இல்லை...இறையாண்மை பொறையாண்மை என்று பித்தலாட்டங்கள் அவர் காட்டியது இல்லை.....இன்றைக்கு வைக்கோவின் மகன் இளைஞர் அணித்தலைவராகவும், பேரன் மத்திய அமைச்சராகவும் இல்லை...//

பெரிய அளவில் வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் சொக்கத் தங்கங்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
கருணாநிதியைக் கலைஞர்னெல்லாம் கூப்புட முடியாது. அப்படிச் சொல்றதுக்கும் ஜெயலலிதாவை புரட்சித் தலைவின்னு சொல்றதுக்கும் வித்யாசம் ஒன்னுமில்லை.//

ஜிரா, நான் கருணாநிதியையோ, திமுகவையோ ஆதரித்து இதை எழுதவில்லை என்பதை விளக்கவே முன்னோட்டத்துடன் தொடங்கினேன். நிகழ்வுகளை ஒப்பிட்டு இருப்பது கடைசியில் இவர்கள் ஏன் சுய நல நோக்கோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான ஆணிவேர் இவை என்று சுட்டினேன். மற்றபடி அரசியல் வாதிகள் அனைவருமே கடைதேர்ந்த அயோக்கிய சிகாமணிகள் என்பதையே முத்தாய்பாக முடித்திருக்கிறேன். இதில் சப்பைக் கட்டுகள் எதுவுமே இல்லை. ஆதங்கம் மட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//முனிசாமி. மு said...
ஈழ பிரச்சனைக்காக ஒவ்வொரு கட்சியும் என்னென்ன செய்தன (உண்மையாக) என்பதை பட்டியலிட்டாலே அவற்றின் கபடங்கள் தெரியும்....பட்டியலிடுங்களேன்....
//

தேர்தல் இல்லாமல் இருந்தால் பட்டியல் கொடுப்பது எளிதுதான், பழநெடுமாறன், சீமான் போன்ற தனிமனிதர்கள் தவிர அரசியல் கட்சிகள் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லலாம்.

இப்பதான் அம்மா உண்ணாவிரதம் இருந்திருக்காங்க, மருத்துவர் அறிவுறுத்தலால் கருணாநிதி ஐயா அதைச் செய்யல அவ்வளவுதான்

Sanjai Gandhi சொன்னது…

தொண்டோனோ - தொண்டனோ

நடவெடிக்கையாக - நடவடிக்கையாக

அக்கரையின் - அக்கறையின்

நடவெடிக்கை - நடவடிக்கை

புடிங்கி - புடுங்கி

காட்டவதற்காக - காட்டுவதற்காக

நடத்திக் - நடாத்தி ( இப்போ இது தான் ஃபேஷன் )

... என்னாச்சி கோவிஜி? தடுமாற்றம் தெரியுது..
( நான் எழுத்துப் பிழையை சொன்னேன் :) )

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... மிசா கிசான்னு சொல்றாங்களே... அதுல யாரோ ஜெயிலுக்கெல்லாம் போனாங்க. அந்த மிசாவைக் கொண்டாந்த கட்சியோட இப்பக் கூட்டணி வெச்சி... ஆட்சியில பங்கு வெச்சி.. ஆனா அடுத்தாள் பண்ணா அசிங்கமாக்கும்.
//

நானும் இன்னொன்னு சொல்லிக்கிறேன். காங்கிரசை உடைத்து தமாக, தாமக ங்கிற கட்சி உருவாகிய போது அதை திமுக அரசு முழுமனதாக ஆதரித்து கூட்டணியிலும் சேர்த்துக் கொண்டது. காங்கிரசு கட்சி ஒடைந்ததில் திமுக மகிழ்ந்தது, ஆதரிச்சிதுன்னு காங்கிரசு காரர்களுக்கு சொல்லுவோம் :)

பாலசந்தர் கணேசன். சொன்னது…

Hi,
Can you please send your template to balachandarg@hotmail.com

I am trying to get the tamizmanam pallette for my site bunksparty.blogspot.com and it is not working.

If you can provide the template, it would be helpful.

ராஜரத்தினம் சொன்னது…

//தேர்தல் முடிந்ததும் மறுபடியும் பல்டி அடிப்பார். நான் அவ்வாறு சொன்னது தவறு என்று தற்போது உணருகிறேன் என்று அவர் கடந்த காலங்களில் பல்டி அடித்திருக்கிறார். திமுக கூட்டணியில் சேர்வதால் காங்கிரஸ் புதை குழியில் விழுகிறது என காங்கிரசுக்கு மறைமுக தூதுவிட்டு, முடியாமல் போகவே காங்கிரசை எச்சரித்தேன் என்று பல்டி அடித்தவர் தான்.//
அப்படியென்றால் ஈழத்தமிழர்களை ஜெயலலிதா ஆதரித்தாலும் தவறு, அதை அந்த கருணாநிதிமட்டும் தான் செய்யவேண்டுமா? கருணாநிதி எத்தனை விஷயங்களில் பல்டி அடித்திருக்கிறார்?அதை எண்ணமுடியுமா? இருந்தாலும் அந்த கருணாநிதி மட்டும்தான் ஆதரிக்கவேண்டும் அப்படித்தானே? உங்களின் கருணாநிதி ஆதரவை நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டால் எங்களை போன்றவர்களின் (பின்னூட்ட) நேரம் மிச்சமாகும். உங்களை போன்றவர்களின் DNA வே வித்தியாசமாக இருக்குமோ?

வாசகன் சொன்னது…

ரொம்பவும் நகைச் சுவையான பதிவு கண்ணன் ஐயா...

நொண்டிக் குதிரைக்கு சறுக்குனது சாக்கு அப்படின்னு ஒரு சொலவடை சொல்வாங்க தெரியுமா,அதுதான் நினைவுக்கு வருது!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

கோவி அண்ணா நாற்காலி ஆசை கொள்கைகளை
குப்பை க்கு அனுப்பி விடுகிற்ு ,பெரியாரின்
பெயரை மட்டும் சொல்லி கொள்கையை கைவிட்டடன் விளைவு இ்ு

வந்தவாசி ஜகதீச பாகவதர் சொன்னது…

தமிழ்நாட்டு தமிழர்களே!
கடந்த 30 வருடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள்: கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா,
பன்னீர்செல்வம். இவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.
விஜயகாந்த் இப்பொழுதே உருப்படாதவர் போல் தெரிகிறார். ஈழமக்களை கொடுமைப்படுத்தியதால், காங்கிரஸ் இன்னும் நூறாண்டுக்கு ஆட்சிக்கு வராது. நீங்கள் இந்த தேர்தலைப்போல் எப்போதும் இவ்வளவு குழப்பத்துக்கு
உட்படவில்லை. கர்நாடக தமிழர்கள் உங்களுக்காக வருந்துகிறோம்.
J.P. Ravichandran, Bangalore.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நிறைய அலசியிருக்கீங்க கோவியாரே!
வைகோ முடிவெடுப்பதில் நிறைய பிழை செய்திருக்கிறார். ஊழல் செய்ததாக கேள்விப் படவில்லை. இதுவரை சொத்து சேர்த்ததாகவும் தெரியவில்லை. இனியும் மாட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. யாரையும் நல்லவர் என்று கேரண்டி கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. அப்படி கேரண்டி கொடுப்பவர்களைப் பார்த்து பரிதாபந்தான் பட முடியும். வைகோவைக் காரணம் காட்டி இன்னொரு பிம்பத்தை கொஞ்சம் புனிதமாக்கியது போல் தெரிகிறது. அது பிம்பம் அல்ல ஜம்பம் என்று எங்கெளுக்கெல்லாம் ரொம்ப காலத்துக்கு முன்பே தெரிந்து விட்டது. இப்போது தெரிந்து கொள்பவர்களுக்கு நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நிறைய அலசியிருக்கீங்க கோவியாரே!
வைகோ முடிவெடுப்பதில் நிறைய பிழை செய்திருக்கிறார். ஊழல் செய்ததாக கேள்விப் படவில்லை. இதுவரை சொத்து சேர்த்ததாகவும் தெரியவில்லை. இனியும் மாட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. யாரையும் நல்லவர் என்று கேரண்டி கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. அப்படி கேரண்டி கொடுப்பவர்களைப் பார்த்து பரிதாபந்தான் பட முடியும். வைகோவைக் காரணம் காட்டி இன்னொரு பிம்பத்தை கொஞ்சம் புனிதமாக்கியது போல் தெரிகிறது. அது பிம்பம் அல்ல ஜம்பம் என்று எங்கெளுக்கெல்லாம் ரொம்ப காலத்துக்கு முன்பே தெரிந்து விட்டது. இப்போது தெரிந்து கொள்பவர்களுக்கு நன்றி!
//

ஜோதி,

பிம்பத்தின் ஜம்பத்தை நான் ஆதரிக்கவில்லை. இன்றைக்கு காங்கிரசாரின் தயவில் *வாழும்* திமுகவிற்கு காங்கிரசாரின் ஈழ எதிர்ப்பை ஆதரிக்க வேண்டிய நிலைக்குச் சென்றதே மைனாரிட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பேராசை தான் காரணம், ஆனால் இந்த அளவுக்கு சென்றதற்குக் காரணமே வைகோ எடுத்த அன்றைய தவறான முடிவே.

கோவி.கண்ணன் சொன்னது…

//தவாசி ஜகதீச பாகவதர் said...
தமிழ்நாட்டு தமிழர்களே!
கடந்த 30 வருடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள்: கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா,
பன்னீர்செல்வம். இவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.
விஜயகாந்த் இப்பொழுதே உருப்படாதவர் போல் தெரிகிறார். ஈழமக்களை கொடுமைப்படுத்தியதால், காங்கிரஸ் இன்னும் நூறாண்டுக்கு ஆட்சிக்கு வராது. நீங்கள் இந்த தேர்தலைப்போல் எப்போதும் இவ்வளவு குழப்பத்துக்கு
உட்படவில்லை. கர்நாடக தமிழர்கள் உங்களுக்காக வருந்துகிறோம்.
J.P. Ravichandran, Bangalore.
//

கருத்துக்கு நன்றி,

ஈழம் மட்டுமல்ல கர்நாடக தமிழர்கள் குறித்த பிரச்சனைகளிலுமே தமிழக அரசியல் வாதிகள் அரசியல் நோக்கோடுதான் செயல்படுகிறார்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

கலைஞரின் அரசியல் சதுராட்டம் மனதில் கோபத்தை எல்லோருக்கும் வரவழைத்தாலும் அவரது தமிழ் உணர்வு கொச்சைப் படுத்தப்பட்டும் தேர்தல் களம் தமக்கு சாதகமாக இல்லையென்று தெரிந்தும் கூட நடப்பது நடக்கட்டும் என்ற அசாத்திய துணிவுக்கு பின்புல காரணம் ஏதாவது இருந்தே ஆகவேண்டும் ஸ்பெக்ட்ரம் உள்பட.

Prabu M சொன்னது…

வைகோ திமுக கூட்டணியில் இருந்திருந்தால் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க..... 91, 96 தேர்தல்களைப் போல் அனுதாப அலையோ, அதிருப்தி அலையோ கொஞ்சமும் இல்லாத தேர்தல் நாம் 2006ல் சந்தித்த சட்டசபைத் தேர்தல்..... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40/40 வாங்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சிமீதிருந்த கொடுமையான கசப்பு..... ஆனால் சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை... அதிருப்தி என்பது இப்போது ஆட்சியின் மீது இல்லை ஒட்டுமொத்த அரசியல் மீதே அதிருப்தி அலைமோதுகிறது.... வைகோ கொடுத்த பூச்செண்டு ஜெயலலிதாவின் ஷோ கேஸில் கூட முக்கியத்துவம் பெற்றிருக்காது... அதை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை நண்பரே....

இன்னொரு விஷயம்.... காரணம் தேடிப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறேன்.... வருத்தப்பட மட்டும்தான் முடிகிறது என்னால்....

கே.பழனிசாமி, அன்னூர் சொன்னது…

"கேடுகெட்ட அரசியல் வியாதிகள். இனி வருங்காலத்தில் கொள்கைகளில் தெளிவும், நடத்தையில் தூய்மையும், வாக்கில் நேர்மையும் உள்ள அரசியல்வாதிகள் எவரையுமே பார்க்க முடியாது, ஏனென்றால் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாரிசு அரசியல் நிறுவனங்கள் ஆகிப் போய்விட்டன, அதன் நோக்கு மக்கள் நலன் அல்ல. முடிந்தவரையும் அதன் மூலம் பதவி சுகங்களை அனுபவித்து, பணக் குவியல் திரட்டுவது தான்"

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்