பின்பற்றுபவர்கள்

3 ஏப்ரல், 2009

சூடான இடுகைகளில் மீண்டும் லக்கிலுக், கோவியார் !

சூடான இடுகை, ஆறிப்போன இடுகை இதெல்லாம் என்னனு சொல்லனுமா ? தமிழ்மணம் திரட்டியில் படிப்பவர்களுக்கு எல்லாம் அத்துப்படி. தமிழ்மணம் திரட்டி வழியாக வாசகர்களால் மிகுதியாக வாசிக்கப்படுபவை தமிழ்மணத்தில் சூடான இடுகைகளாம், அதைச் செம்மைப் படுத்துகிறோம் என்கிற தமிழ்மண அறிவிப்பில்,

"சூடான இடுகைகள், வாசகர்கள் எதனை அதிகம் வாசிக்கிறார்கள் என்பதன் ஒரு குறியீடு மட்டுமே. அதேநேரத்திலே தமிழ்மணம் சூடான இடுகைகளில் தொடர்ந்து இடம் பெற வேண்டுமென்ற நோக்கத்துக்காகவே போடப்படும் பதிவுகள் அதிகரித்த நிலையிலே இந்த வசதியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள் தற்பொழுது சோதனையில் உள்ளன.

அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன, மேலும்
படிக்க...
"

- எனது மற்றும் சில பதிவர்களின் இடுகைகளை நீக்கியதை அறிந்து நானும் சிலரும் பதிவிட்ட பிறகு, மேற்கண்ட அறிவிப்பை தமிழ்மணம் வெளியிட்டு இருந்தது. சூடான இடுகையில் இடம் பெறும் நோக்கத்துக்காக 'குறிப்பிட்ட தலைப்பில்' பதிவு போடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை என்னைப் பொறுத்த அளவில் மறுக்கிறேன். குறிப்பிட்ட தலைப்பில் என்பதற்கான வரையறை எதுவும் இல்லை. 'நமீதாவுக்கு கணுக்காலில் சுளுக்கு' என்கிற பரபரப்புத் தலைப்பு எவர் வைத்தாலும் ஆர்வத்துடன் வாசகர்கள் படிப்பது இயல்பே, இங்கே யாரும் இலக்கியச் சாற்றைக் குடித்து இருக்கிறோம் அதனால், இதை இதையெல்லாம் புறம்தள்ளுவோம் என்ற மனநிலையில் படிப்பது கிடையாது, வலையுலகம் எழுத்துக்கான பயிற்சிக்களம், நாளடைவில் ஒரு பதிவர் தொடர்ந்த பரபரப்பு தலைப்பு வைத்து வந்தால் ... 'இவருக்கு இதே வேலையாப் போச்சு' என்று 'புலிவருது கதையாக' வாசகர்கள் அதனை நிராகரிப்பார்கள். சூடான இடுகையில் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக என்னை எப்படி எடுக்கலாம் என்றோ வரிந்து கட்டவோ, எடுக்கப்பட்டவர்கள் எவரும் வெளியேறவோ, பதிவுகளைக் குறைத்துக் கொள்ளவோ இல்லை.

தொடர்புடைய சுட்டிகள் :
சூடான இடுகையை ஆக்கிரமிப்பவர்கள் நீக்கம் ? - கோவி.கண்ணன்
சூடான இடுகை! - யுவகிருஷ்ணா (லக்கிலுக்)
சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள் - டோண்டு இராகவன்

தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்! - வருண்

ஐயையோ....உண்மையிலேயே நகைச்சுவையாகத் தான் எழுதனும் என்று தொடங்கினேன். அங்கே தொட்டு இங்கே தொட்டு,

அப்படியாகப் பட்ட சூடான இடுகைகளில் என்னையும் குறிப்பிட்ட பதிவர்களையும் நீக்கி இருந்த தமிழ்மணம் மறுபடியும் இணைத்திருக்கிறது,





ஏப்ரல் 1க்குத் தான் 'ஏமாற்றுப் பதிவுகள்' பதிவிடனுமா ? ஏப்ரல் 3ல் போட்டால் தவறா ?

சூடான இடுகையில் இருப்பது உண்மை. ஆனால் தமிழ்மணத்தின் தேர்தல் திரட்டி பகுதியில் இருக்கு, அங்கே 'சூடான தேர்தல் இடுகைகள்' என்ற தலைப்பு இருக்கு, அதில் தான் திரட்டுகிறர்கள். பொய் சொல்கிறவர்களுக்குத் தான் தூங்கும் போது கண்ணு தெரியாதாம்.

14 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

சூடான

வாழ்த்துகள்

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

அதான பாத்தேன்... உங்களுக்கெல்லாம் என்னைக்கும் சூடான இடுகைகளில் இடம் கிடையாது கோவியார் :)

லக்கிலுக் சொன்னது…

:-)))))))

நல்ல தரமான பதிவுகள் இப்போது சூடான இடுகைகளை ஆக்கிரமித்திருக்கிறது. மறுபடியும் லக்கி, கோவி, டோண்டு பதிவுகளை போட்டு சூழலை கெடுக்க தமிழ்மணத்துக்கு என்ன விசிறா பிடித்திருக்கிறது?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் 5:33 PM, April 03, 2009
அதான பாத்தேன்... உங்களுக்கெல்லாம் என்னைக்கும் சூடான இடுகைகளில் இடம் கிடையாது கோவியார் :)
//

இதுவரமா ? சாபமா ?
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துகள் கோவியார்!
எங்க இருந்தாலும்,
தூண்டி, துருவெடுத்திடுவீகளே!
-:(

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//வாழ்த்துகள் கோவியார்!
எங்க இருந்தாலும்,
தூண்டி, துருவெடுத்திடுவீகளே!//

repeateyyy

Raju சொன்னது…

நீங்க் நல்ல்வரா? கெட்டவரா அண்ணே...?
இலக்கியச் சாறுன்னா என்னண்ணே..?

மணிகண்டன் சொன்னது…

உங்கள, லக்கிய தமிழ்மணம் சூடான இடுகைலேந்து நீக்கியத முழுமனதோட ஆதரிக்கறேன். நன்றி தமிழ்மணம்.

சி தயாளன் சொன்னது…

haahaha...:-))

Unknown சொன்னது…

feel that much expecting your post to be in the “Hottest Topic”… anyhow nice one govikannan.

சி சி இந்த பழம் புளிக்கும் :D

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரின் பெயர் ஜெயலிதாவிற்கு பக்கத்தில் இருப்பதால், கோவியாருக்கு ஓர் எம்.பி சீட்டு உறுதி என்று நினைக்கிறேன்.

அது சரி(18185106603874041862) சொன்னது…

அப்ப தேர்தல் திரட்டில தோதான இடுகைகள் மட்டும் வராதா?? என்ன அக்கிரமமா இருக்கு?? :0))

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அதான பாத்தேன்... உங்களுக்கெல்லாம் என்னைக்கும் சூடான இடுகைகளில் இடம் கிடையாது கோவியார் :)
//

ரிப்பீட்டேய்!!

கிரி சொன்னது…

//ஜோதிபாரதி said...
வாழ்த்துகள் கோவியார்!
எங்க இருந்தாலும்,
தூண்டி, துருவெடுத்திடுவீகளே!
-:(//

கோவி கண்ணன் னா சும்மாவா! ;-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்