பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2009

வாக்காள பெருங்குடி மக்களே ... 1

ஸ்டாலின் : மத்திய சென்னை வாக்காளர்கள் மீண்டும் தயாநிதி மாறன் அவர்களை மத்திய அமைச்சர் ஆக்க உதவ வேண்டும்.
பொது மக்கள் : சன் டிவியிடம் இனி அழகிரி அண்ணன் பற்றி கருத்து கணிப்பு நடத்தமாட்டோம் என்பதை கைப்பட எழுதி வாங்கிட்டிங்களா ?

அத்வானி : பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றார்.
பொது மக்கள் : அதுக்கும் முன்பு 'டீ' பார்டிகள் நடத்தும் ஓட்டல்களை விலை கொடுத்து வாங்கிவிடுவோம் என்பதை எப்போது அறிவிப்பீர்கள் ?

ஜெ: எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
பொது மக்கள் : தேர்தல் முடிந்ததும் தானே முழு செலவுக் கணக்கும் தெரியும். முன்பே பேச்சு வார்த்தை நடத்தி நட்டப்பட அம்மாவுக்கு அரசியல் அனுபவம் போதாதுன்னு நாங்களும் நினைக்கலையே

இல.கணேசன் : தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
பொது மக்கள் : அரசி சூட்டிங்க்கு சித்தி அவுட்டோர் போய் இருப்பாங்க, எதுக்கும் ஒருவாரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்


திருமாவளவன் :நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர்
பொது மக்கள் : யாரோ விசமிகள் சத்திய மூர்த்தி பவனில் கல் எரிந்ததை விசமிகள் விடுதலை சிறுத்தைகள் செய்ததாக கிளப்பிவிட்டனர் என்பதை விட்டுவிட்டீர்களே.

விஜயகாந்த்: கருமவீரர் காமராஜரின் மணி மண்டபத்தைக் கூட பராமரிக்க முடியாத காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் : கேப்டன் ...கேப்டன் நீங்க தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த போது சிவாஜிக்கு மணி மண்டபம் அமைத்த வேகத்துக்கு தமிழக காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியாது

இராமதாஸ் : தமிழகத்தில் திமுக அரசு 3 மாதத்தில் கவிழும், சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரும்.
பொது மக்கள் : அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா

19 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நகைச்சுவை பதிவு என்றே வேண்டாம்...இப்போது தலைவர்கள் பேச்சு எதைப்போட்டாலும் நகைச்சுவைதான்.

கீழை ராஸா சொன்னது…

கலக்குங்க...இது இரத்த புகைப்படத்திற்கான பின்னூட்டம்...
//இதைப்பார்த்து வயிறு எரியாதவன் தமிழனின் இரத்தமாக இருக்க முடியாது.//

மனிதனாகவே இருக்க முடியாது...

S.A. நவாஸுதீன் சொன்னது…

நல்ல நகைச்சுவை கலந்த நக்கல்.

அதோடு இதையும் (T.V.Radhakrishnan said...

நகைச்சுவை பதிவு என்றே வேண்டாம்...இப்போது தலைவர்கள் பேச்சு எதைப்போட்டாலும் நகைச்சுவைதான்.) ரிப்பீட்டுக்கிறேன்

NO சொன்னது…

Anbana Nanbar Thiru Govi,

Hmm….Hmmm Hmm…..Looks like there is no known method to stop you my friend!

What I said is correct. Govi Annan, even if he becomes Ghost Kannan will still write unceasingly.

It is said that the people may die but their writings will not!
In your case dear Govi, what you write is already dead!

But you should live long dear friend. Write and keep writing till the World Wide Web itself gets a life and takes revenge on you! After all the WWW is getting as complicated by the day as the neural network in a human’s brain and no doubt, the day it starts thinking independently, you will be first on the hit list.

May you live long and spread the good message to this world.
Or should one say spread your dead messages to the world.
Or should one say spread your dead mess to the world.
Or should one say mess the world through all your age.
Or should one say age the world through your mess.

What ever dear Govi, you certainly are a museum piece; one whose life, times and writings are to be preserved for posterity! There cannot be someone in this world that can write a thesis on “Idiocy and its evolution” without doing a research on your writings!
.
Dear Govi, web world needs to align its history based on the magnificent footprints that you have planted on it.
Henceforth, there can be only two ways to write in web!
One is the Govi way and the other is the wrong way!

Chronologically, web world’s history can also be classified into two ways!

BC – Before cacophony (before Govi Annan began to write)
AD – After the deluge (of nonsense from Annan)

Long live Govi’s and his long dead writings!

Nandri, Vanakkam!

Thanks

பதி சொன்னது…

//அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா//

:)

ஆனாலும் 3 மாசம் ஒரே இடத்துல இருப்பாங்கன்னு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகமா தெரியலையா உங்களுக்கே??

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நகைச்சுவையா? உண்மையா?...

ஆமாம் யாருங்க இந்த Mr No..

கிரி சொன்னது…

//தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.//

இதுல கேள்வியே காமெடி :-)))

NO சொன்னது…

Nursery Rhymes about Annan Thiru Govi Kannan,

Jack & Jill:
------------

Jack and Jill went up the hill to read Govi Annan’s blog matter
I don’t know what happened there
But they seem to have died of excessive laughter!


Twinkle Twinkle:
----------------

Twinkle Twinkle little star
How I wonder this Annan has come so far,
Up above in his lies fly high
Like a kite floating in his empty sky

Little Jack Horner:
-------------------

Little Jack Horner
Sat in a corner
Reading Annan’s Blog
He put his thumb and pulled out his tongue
And said “what an idiot am I”

Humpty Dumpty:
---------------

Humpty Dumpty sat on a wall
To the great Govi Annan he made a call
Annan Talked, Humpty was shocked
Humpty couldn’t make Annan to stop
All the kings Horses, could not contain Annan’s farces
And all the kings men could not stop his pen
Humpty then decided to have this great fall!

Thanks

கோவி.கண்ணன் சொன்னது…

//No 1:23 PM, April 14, 2009
Nursery Rhymes about Annan Thiru Govi Kannan,

Jack & Jill:

//

யாரு பெற்ற பிள்ளையோ...இப்படி முற்றிப் போச்சே !
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
நகைச்சுவை பதிவு என்றே வேண்டாம்...இப்போது தலைவர்கள் பேச்சு எதைப்போட்டாலும் நகைச்சுவைதான்.
//

பா.சிதம்பரம் போன்ற நல்ல அரசியல் வாதிகளும் இருக்காங்க, அவருப் பாருங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார், மன்னிக்கிறார்.

ஹலோ நான் சீரியஸாக சொல்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// கீழை ராஸா said...
கலக்குங்க...
//
நன்றி !

//இது இரத்த புகைப்படத்திற்கான பின்னூட்டம்...
//இதைப்பார்த்து வயிறு எரியாதவன் தமிழனின் இரத்தமாக இருக்க முடியாது.//

மனிதனாகவே இருக்க முடியாது...
////

மேலும் நன்றி ! அந்த படத்தில் இருக்கும் குழந்தை தங்கள் மகளைப் போன்று, தங்கையைப் போன்று இருக்கிறாள் என்பவர்களுக்கு இரத்தம் கொதிக்கவே செய்யும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
நகைச்சுவையா? உண்மையா?...//

உண்மையான நகைச்சுவை

//ஆமாம் யாருங்க இந்த Mr No..
//

அட சும்மா இருங்க, உங்களுக்கு அவரிடம் இருந்து எதோ கேட்கிறது !

கோவி.கண்ணன் சொன்னது…

//BC – Before cacophony (before Govi Annan began to write)
AD – After the deluge (of nonsense from Annan)

Long live Govi’s and his long dead writings!

Nandri, Vanakkam!

Thanks//

இஷ்ட தெய்வத்துக்கிட்ட இந்த கஷடம் தீர யாராவது எனக்காக வேண்டிக் கொள்ளுங்களேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பதி said...
//அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா//

:)

ஆனாலும் 3 மாசம் ஒரே இடத்துல இருப்பாங்கன்னு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகமா தெரியலையா உங்களுக்கே??//

3 மாதத்துக்கு ஒரு முறை எலெக்சன் வந்தால் தான் நீங்க சொல்லும் கணக்கு. ஜெயித்த அடுத்த நாளே போன முறை அன்பு சகோதரிக்கு டா டா காட்டினார்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.//

இதுல கேள்வியே காமெடி :-)))
//

பேசமல் இவர்களும் தெய்வத்துடன் கூட்டணி வைத்திருக்கலாம், கேப்புல கேப்டன் கெடா வெட்டிவிட்டார்

கோவி.கண்ணன் சொன்னது…

//Syed Ahamed Navasudeen said...
நல்ல நகைச்சுவை கலந்த நக்கல்.
//

சையத், பாராட்டுக்கு நன்றி !

NO சொன்னது…

Dear Govi Sir,

There is only one person that can save you now. He also happens to be your Ishta Deivam!

Guess who???

The man in your mirror dear Govi!
Just ask this image to say "I will not write trash like this" and follow his advice!

Dear self obsessed Nanbare, I rant only against you and none else as you are just a representation of beings that are pouring such mindless trivia into web world.

By the way, what you said to dear Thiru Gnanasekaran was correct. I got indeed curious and he certainly seems to be a great guy, just in your mold!

I took a few minutes to read his blabber! One posting was something about Iraivan Irandu Bommaigal……

The great Annan Gnanam says something like Indraya Appa Amma, Netriya Pillaigal, Indrraya Pillaigal nalaya Ammam Appa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Engirindu Sir, Ippadi vidham Vidhama kilambi varinga?????????????

Dear Gnaname illada nanbar Gnanasekaran avargale, please stick only to your CNC programming!

Or else your computer numerical control when applied to your writing becomes a Complete Nonsense Content!

Thank goodness you have not written about the books you like. If indeed you had, then the inspiration would be coming form you and not from Govi Annan!

Thanks Sir for the opportunity and by the way Nan Yaar enbadhu is immaterial. Neengal yar enbadhu ennakku ippodhu purindhuvittadhu!

You are but a less prolific Govi!

Thanks Sir for your time!

Tech Shankar சொன்னது…

உண்மையையே நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

சி தயாளன் சொன்னது…

கலக்கல்...அட கும்மிகூட நன்னா களை கட்டுதே..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்