பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2008

இலவு காத்த ...

"அதிமுகவுடன் கூட்டணி சேர நாங்கள் தயார், எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன" - பிஜேபி கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜெயலலிதா தேடிச் சென்று கூட்டணி அமைக்க விருப்பம் கொண்டவர் போல் கதவு திறந்து இருக்கிறது என்று அறிவிப்பு வெளி இடுகிறார்கள், எல்லோரும் போயாஸ் தோட்டத்து வாசலில் கதவு திறக்குமா திறக்காதா என்று தவமிருப்பது தான் வழக்கம், இங்கே கமலாலயம் ஜெவின் வருகையை எதிர்பார்த்து கதவு திறந்து வைத்திருக்கிறது.

ஜெவின் தயவால் எங்கள் அத்வானிஜி 13 மாதம், அல்லது 13 நாள் ஆட்சி செய்தால் கூட எங்களுக்கு அது சாதனைதான் என்று நினைக்கிறார்கள் போலும். பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ப்பு எப்படி இருக்கும் என்றெல்லாம் ஜெ ஏற்கனவே ரகசிய வாக்கெடுப்பெல்லாம் நடத்திப் பார்த்துவிட்டு, சொல்லிக் கொள்கிற மாதிரி பலன் இல்லை, பிஜேபியின் கூடா நட்பால், கிடைக்கும் தொகுதிகளைக் கூட அதிமுக இழக்க நேரிடும் என்றே, ஜெ நடத்திய சர்வே சொல்லியதாக நக்கீரனில் எழுதி இருந்தார்கள். இது மோடி வருகைக்குப் பிறகு எடுக்கப்பட்ட சர்வே என்பது குறிப்பிடத் தக்கது.

மோடிக்கு ராஜவிருந்து வைத்ததை தமிழக பிஜேபி தனக்கு வைத்ததாக நினைத்துக் கொண்டு கூட்டணிக்காக கதவு திறந்து வைத்திருப்பதாக அறிவித்து இருக்கிறது. பிஜேபியால் தமிழக திராவிட கட்சிகள் பெற்றதைவிட இழந்ததே மிகுதி. முன்பெல்லாம் திமுக கூட்டணி தயவில்லாமல் தனி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது, கடந்த காலங்களில் பிஜேபியுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசிலும் இடம் பிடித்ததைத் தொடர்ந்து திமுகவின் மதச்சார்பின்மை கேலிக் குறியதாயிற்று, கடந்த காலத்தை மறந்து, அண்மையில் கலைஞர் கருணாநிதி "மகாத்மாவை கொன்ற பாவிகள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரலாமா ?" என்ற பேசியதை யாரும் பெரியதாகவே எடுத்துக் கொள்ளமல், 1996ல் காந்தியைக் கொன்றவர்கள் பற்றி விசாரணை நடந்து கொண்டிருநத்து போலவும் தற்போதுதான் அது குறித்து தீர்ப்பு வெளியானது போலவும் கலைஞர் சொல்லிய "மகாத்மா காந்தியைக் கொன்ற பாவிகள்" அருள்வாக்கு, அவரது இரட்டை நிலைக்கு மேலும் ஒரு சான்று என நினைத்து சிரிப்பையே வரவழைத்தது. கலைஞர் அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு கலகலப்பூட்டுவார். :)

தமிழகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக கூட பிஜேபி கூட்டணிக்கு பை பை சொல்லிவருவது தெரிந்தும், கூட்டணிக்காக பிஜேபி தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவை நோக்கி தவமிருப்பது தமிழகத்தில் இருந்து தமக்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது கிடைக்காதா என்ற நப்பாசையே. அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர்கள் தாம், அத்வானிஜி பிரதமர் ஆக ஆதரவு கொடுப்பார்கள் என்று கூட நினைத்து, பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதற்கு பிஜேபி முன்வரும். ஜெ ஏற்றுக் கொள்வாரா என்பது வேறு.

தலைப்பு குறிப்பு : இலவு காத்த "..." - இங்கு உங்களுக்கு பிடித்த விலங்கு, பறவை போட்டுக் கொள்ளுங்கள், கிளியை கேவலப்படுத்தவிருப்பமில்லை.

பின்குறிப்பு : ஜார்ஜ் புஷ், ஹிலாரி கிளிண்டன், ஒபமா ஆகியோர் பற்றிய தகவல் எதும் தற்போது கைவசம் இல்லாததால் இன்றைய இடுகை இந்திய அரசியல் தான். :)

5 கருத்துகள்:

Me சொன்னது…

இலவு காத்த.... என்கிற பழமொழியை விட "கொக்குத் தலையில் வெண்ணையை வைத்து ..." என்கிற பழமொழிதான் தற்போதைய தமிழக பா.ஜ.க விற்கேற்ற‌ ப‌ழமொழி.

அதனால்தான் அம்மையார், கேப்டன், நாட்டாமை, சூப்பர் ஸ்டார் என்று எல்லா கொக்குகளின் தலையிலும் வெண்ணையை வைத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said...
இலவு காத்த.... என்கிற பழமொழியை விட "கொக்குத் தலையில் வெண்ணையை வைத்து ..." என்கிற பழமொழிதான் தற்போதைய தமிழக பா.ஜ.க விற்கேற்ற‌ ப‌ழமொழி.

அதனால்தான் அம்மையார், கேப்டன், நாட்டாமை, சூப்பர் ஸ்டார் என்று எல்லா கொக்குகளின் தலையிலும் வெண்ணையை வைத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.
//

இதுவும் நல்லாதான் இருக்கு,
:)

tommoy சொன்னது…

//இலவு காத்த "..." - இங்கு உங்களுக்கு பிடித்த விலங்கு, பறவை போட்டுக் கொள்ளுங்கள், கிளியை கேவலப்படுத்தவிருப்பமில்லை.//

உங்களுக்கு மட்டும் கிளியை கேவலப்படுத்த விருப்பமில்லை. ஆனா எங்களுக்கு பிடித்த விலங்கை பறவையை கேவலபடுதனுமா?? நல்ல கதை..

இப்படி மாற்றி வேனும்னா சொல்லலாம்..

இலவு காத்த "..." - இங்கு உங்களுக்கு பிடிக்காத விலங்கு, பறவை போட்டுக் கொள்ளுங்கள், கிளியை கேவலப்படுத்தவிருப்பமில்லை

ரூபஸ் சொன்னது…

இலவு காத்த குருவி ன்னு வைச்சுக்கவா??

ரூபஸ் சொன்னது…

இலவு காத்த குருவி ன்னு வைச்சுக்கவா??

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்