பின்பற்றுபவர்கள்

24 ஏப்ரல், 2008

நீங்கள் இந்துவா ? உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் !

நீங்கள் இந்துவா ? இல்லையா என்பதை திரு லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதி இருப்பதையும், முன்னாள் தமிழ்மண பதிவர் திரு ஜெயராமன் அவர்களின் இடுகையை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.


பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,

- மேற்கண்ட இந்த பொன்னெழுத்தை நான் கண்டது, திரு லட்சுமிநாரயணன் அவர்களின் பார்பனர்கள் தமிழர்களா ? என்ற பதிவில்.

பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை. இங்கே இவர் சொல்கிறார், 'இந்து' என்பதற்கு அடையாளம் இருக்கிறதாம், இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் இந்து இல்லையாம் ?

இந்துமதக் கோட்பாடு என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? பகவத்கீதை என்ற மனுச்சார்பு, வைணவசார்பு நூல் தவிர்த்து இந்துமதம் சார்பாக எதாவது நூலோ கோட்பாடோ இருக்கிறதா ? அடுத்து இவர் சொல்கிறார், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் இந்து இல்லையாம் ? வேதங்கள் உண்மை என்று தானே ஆராய்ச்சியாளர்கள் கூடச் சொல்கிறார்கள், அது உண்மை இல்லை என்றால் தஸ்யூக்களை அழித்தகதையும், இந்திரனுக்கு பிடித்த பாணம் சோமபானம் என்றும் அதை ஆரியர்கள் அமுதமாகவே பருகினார்கள் என்றே தெரியவந்தது. வேதங்கள் உண்மைதான் ஐயா. சத்தியமான உண்மை, ஆனால் அந்த வேதங்கள் யாருக்கானது என்பது தெரிந்ததால் தான் பார்பனர்தவிர்த்து மற்றவர்கள் அதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. பார்பனர் வேதத்ததை பார்பனர் அல்லோதோர் படித்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரத்தானே பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம் மனுவேதம் இயற்றி அதை மன்னர்களால் செயல்படுத்த வைத்து, நிறைவேற்றாவிடில் ஆட்சிக்கு அபச்சாரம் நேர்ந்துவிடும் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள். இதையெல்லாம் இந்து என்பதால் பார்பனர் அல்லோதோர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது என்ன வகையான கட்டாயம் ? முதலில் இந்து என்ற அடையாளம் இதுவெல்லாம் என்று எதாவது இருக்கிறதா ? என்னைக் கேட்டால் காதுக் குத்திக் கொள்ள மறுப்பவன் இந்து இல்லை என்று சொல்லலாமா ? இல்ல (குடும்ப) வழக்கத்தின் காரணமாக பகுத்தறிவாளர்கள் கூட காது குத்திக் கொள்ளவது உண்டு.

லட்சுமி நாராயணன் அவர்களே, வேதங்களில் சொல்லி இருப்பது போல் மூவர்ணத்தாரில் யார் யாரெல்லாம் பூணூல் அணியவில்லையோ அவர்களெல்லாம் இந்து இல்லை என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை ? இந்தியாவில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் தொகை பழங்குடியினர் மற்றும் தலித் பெருமக்களே, இவர்களையெல்லலம் சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே இரவில் இந்துவாக அறிவித்தது அவர்களைக் கேட்டுத்தான் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா ? இல்லை அவர்கெளெல்லாம் நீங்கள் சொல்லும் இந்து மத கோட்பாடுகளை, வேதங்களை ஏற்றுக் கொண்டு இந்துவாக மாறினார்களா ?

நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆகவே இதை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும், பார்பனர் தவிர்த்து, இந்து அரசியல் தெரியாதவர்கள் தவிர்த்து எவருமே இந்து இல்லை, மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுக்குள் சுமக்கும் மலம் போல, வேறு வழியின்றி இந்து மதம் என்ற பெயரை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கும் முன் கோவில் வாயில் கதவுகளையும் சாத்தி வைத்திருந்தது தான் தாங்கள் சொல்லும் கோட்பாடு என்ற பெயரில் கட்டுப்பாட்டில் இருந்த இந்துமதம்.

நீங்கள் சொல்வது போல் இல்லாவிடில் ஒருவர் இந்து இல்லை என்று வைத்துக் கொள்வோம், ஒருவன் ஒரு பார்பனன் இல்லை என்று எவ்வாறு சொல்வீர்கள் ?

ஒரு வேண்டுகோள், பிறப்பினால் பார்பனாக பிறந்ததால் ஒருவன் பார்பனன் இல்லை என்றும், யார்யெரெல்லாம் பார்பனர் இல்லை என்று தெரிவித்து ஒரு பட்டியல் அளித்தால் நன்றாக இருக்கும்.

9 கருத்துகள்:

TBCD சொன்னது…

இதுக்கு பதில் சொல்ல பாலா வருவாரா....? ஜயராமன் வருவாரா.....?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இதுக்கு பதில் சொல்ல பாலா வருவாரா....? ஜயராமன் வருவாரா.....?
//

டிபிசிடி ஐயா,

ஏற்கனவே சொல்லியபடி பாலா வந்தால் பின்னூட்டம் வெளி இடப்படாது, திரு ஜயராமன் வந்தால் பின்னூட்டம் வெளி இடப்படும் !

ஜெகதீசன் சொன்னது…

//
TBCD said...

இதுக்கு பதில் சொல்ல பாலா வருவாரா....? ஜயராமன் வருவாரா.....?

//

அவா எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவா....

மாசிலா சொன்னது…

நீங்க ஒன்னு கோவி. கண்ணன்! உலகம் போகிற வேகத்தில், இனிமேலும் இவங்களுடைய பொய் பித்தலாட்டங்க எதுவும் வேகாதுங்க. இவங்க பிதற்றல்கள் எல்லாம் வானத்தை பார்த்து காரி உமிழறவங்களுக்குத்தான் சமானம். வேணும்னா, அவங்க கட்டவிழ்ப்புகளை வைத்து சில காமிக்ஸ் படங்களை செய்ய சொல்லுங்க. வயிறு வலிக்க சிரிச்சுட்டு போகலாம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//மாசிலா said...
நீங்க ஒன்னு கோவி. கண்ணன்! உலகம் போகிற வேகத்தில், இனிமேலும் இவங்களுடைய பொய் பித்தலாட்டங்க எதுவும் வேகாதுங்க. இவங்க பிதற்றல்கள் எல்லாம் வானத்தை பார்த்து காரி உமிழறவங்களுக்குத்தான் சமானம். வேணும்னா, அவங்க கட்டவிழ்ப்புகளை வைத்து சில காமிக்ஸ் படங்களை செய்ய சொல்லுங்க. வயிறு வலிக்க சிரிச்சுட்டு போகலாம்!
//

மாசிலா,

ஏற்கனவே இராமயண, மகாபாரத புளுகுகள் கார்டூன் படமாக உலாவுது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

அவா எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவா....//

ஜந்துக்களுக்கு கிடையாதா ?

:))

நையாண்டி நைனா சொன்னது…

/*பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை.*/

என்ன ஓய்...இப்படி ஆபிஸ்டு ஆட்டம் பேஸூறேல். லோகாத்துலெ ஜனமெல்லாம் ஷேமமா ஜீவிக்க வேண்டாமோ? ( இது என்ன மொழி? யார் பேசுற மொழி ? )

/*பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம்*/
சிவ...சிவ...சிவா.. இப்படி யாராவது பண்ணுவாலா? நீங்க ஜாஸ்தியாயிட்டு பேஸூறேல். ஈயத்தை காய்த்து ஊற்றினால் காது நல்ல கேக்கு மே.. அவாலும் நன்னயிட்டு படிப்பாளேன்னாக்கும் அப்படி பெரிய பெரிய ரிஷி எல்லாம் நடைமுறை வச்சுண்டா...

/*நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், */
அப்படியா... ????
திரும்பவும் அசடாட்டம் ஸொல்றேளே... லட்சுமி கடாட்சம் கிட்டுமென்றால், ஆகமம், ஆசாரம் எல்லாம் ஒண்ணும் கிடையாதுவோய்....

***இதில் தங்களை மரியாதை குறைவாக விளிக்கும் நோக்கம் இல்லை. அவா பாஷை அவ்வாறு தான் உள்ளது.... மன்னிக்கவும்.***

Thamizhan சொன்னது…

பார்ப்பனர்களின் இந்து நாடகத்தை முழுமையாகத் தோலுரித்துக் காட்டியவர் விவேகானந்தர்.அவர் பார்ப்பனரில்லை வேதம் பற்றிப் பேசக் கூடாது என்ற சொன்ன சென்னைச் சவுண்டிக் கூட்டத்தைப் பிய்த்துத் தூளாக்கியவர்.
அவருடைய கீதை நடந்த நி்கழ்வல்ல,நடந்திருக்க முடியாது என்றும் அதில் வரும் பல கருத்துக்கள் புகுத்தப் பட்டன் என்பதையும் மூடி மறைக்கிறது பார்ப்பனீயம்.விவேகானந்தர் பார்ப்பனீயத்தின் உண்மை உருவைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.அவரது கருத்துக்களை அப்படியே மூடி மறைக்கிறார்கள்.

பார்ப்பனீயம் தான் இந்துத்வா என்பதைப் புரிந்து கொள்ளாத ஏமாற்றப் பட்டு வரும் இந்துக்களுக்கு விவேகனந்தர் நல்ல பாடம்.அவர் முயன்ற மாற்றங்கள் பார்ப்பனர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.மகாத்மா காந்தி சொன்ன மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
இந்து என்பவர்களில் பலர் தாங்கள் சூத்திரர் என்று ஏற்றுக் கொள்கிறார்களா?
பார்ப்பனர்கள் தாங்கள் தமிழர்கள்தான் என்று சொல்வது பிழைப்பிற்காகவா அல்லது தமிழ்நாட்டிலே பிறந்து விட்டதாலா?
இப்போது அவர்கள் எல்லாம் இந்துத்துவா மோதி புரத்துக்குக் கூண்டோடு போகப் போவது உண்மயா?விரைவில் விடை கொடுத்து அனுப்புவோமே.

ஜமாலன் சொன்னது…

“அல் ஹிந்த்“ என அரபியல் அழைக்கப்படும் இந்தியாவிற்கு இந்துஷ்தான் என்ற பெயரை வைத்தவர்கள் அர்புரூனி போன்ற அரபு யாத்ரீகர்களே. அல்புரூனி தனது நூலில் நால்வருணமுறை மற்றும் பார்பனர்களின் சடங்கு நடைமுறைகள் மைற்றும் இறைக்கொட்பாடு் பற்றியெல்லாம் எழுதுகிறார்.

இந்துமதம் என்கிற பெயர் பிற்காலத்திய ஆங்கிலேயே காலனிய “எஜமானர்களால்“ வைக்கப்பட்ட பெயர். ஆக இந்து மதம் என்பது ஒரு தொகுக்கப்பபட்ட மதம் என்பதே வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதனை “தெய்வத்தின் குரல்“ எழுதிய காஞ்சி முன்னால் பெரியவர்கூட ஒரு பேச்சில் குறிப்பிட்டதை ஐராவதம் மகாதேவன் தினமணியில் எழுதியுள்ளார்.

இந்துமதம் என்பது திராவிடர்களின் உருவ வழிப்பாட்டு மதமும், பார்ப்பனிய வேதமதமும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு மதமே. கோவில் வழிபாடு திராவிடர்களாலும், அக்னி வழிப்பாடு பார்ப்பனர்களாலும் ஒருங்கிணைந்த கொவிலில் தூபம் காட்டும் வழக்கமாகி உள்ளது. அக்னியின்றி ஒரு சடங்கும் இல்ல என்பதாக ஆகி உள்ளது. அதனால் இந்து மதம் என்பதற்கு ஒற்றை அடையாளம் சாத்தியமில்லை. அதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும். சாதியமுறை என்பது வெவ்வேறு இனக்குழுக்களாக இருந்த பல குழுக்கள் ஒரு அமைப்பிற்குள் சானாதன வர்ண தருமத்திற்குள் கொண்டவரப்பட்டு உள்ளடக்கப்பட்டதே இன்றைய இந்துமதம். அதனால் இந்தமதம் என்பது அடிப்படையில் சனாதன தர்மம்தான் என்பதாக பார்ப்பனியம் மையப்படுத்தியுள்ளது. இந்து என்பது பார்ப்பனிய தர்மத்தை ஏற்பதாகவே நடைமுறையில் உள்ளது. அதனால்தான் இந்து என்கிற சொல் அடிப்படையிலேயே சமத்தவமின்மையை கொண்டதாக அண்ணல் அம்பேத்கராலும், அடிமைத்தனத்தைக் குறிக்கும் இழிவான ஒரு சொல்லாக தந்தை பெரியாராலும், தன்னை ஒரு சூத்திரனாக உணர்ந்து கொள்ளும் ஒரு இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையாக தேசத்தந்தை காந்தியாலும் பாவிக்கப்பட்டது. இந்துமதம் முன்வைக்கும் பன்முகப்பட்ட வாழ்க்கையை தனது ஆதிக்க அதிகார வெறிக்குள் திணித்து சமத்துவமின்மை என்கிற அடிமைத்தனத்தை பாதுகாப்பதற்கானதாக இன்றைய இந்து மதவாத சக்திகள் குறிப்பாக மேல்சாதி சக்திகள், பார்ப்பனர்கள் என்கிற கூட்டமைப்பாக செயல்படுகிறது.

அன்புடன்-
ஜமாலன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்