பின்பற்றுபவர்கள்

22 ஏப்ரல், 2008

முடியல்ல... தயவு செய்து நிறுத்தவும் - குசும்பன் !

கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதான்னு கேட்க குசும்பன் தம்பிக்கு தொலைபேசினேன்...

நம்ம சரவணவேலு குசும்பன் தம்பி மூச்சு விட சிரமப்படுறாராம்,

"யோவ் என்னய்யா சின்ன வயசுதானே அதுக்குள்ளே இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு..."

"பெருசு ஓவராக கற்பனை பண்ணாதிங்க...இது அது இல்ல இது வேற மேட்டர்".

"என்னைய்யா மேட்டரு...சொல்லேன்யா"

"கல்யாணம் ஆகி 7 நாள் ஆச்சு"

"சந்தோசம் தானே"

"டெய்லி நான் வெஜ்ஜா போட்டு கொல்லுராங்கய்யா ...எறா சுறா நண்டு நெத்திலி, ஆடு, கோழி......எவ்வளவு தான் திங்க முடியும்"

"யோவ் துபாய் போனால் இப்படி சாப்பிட முடியுமா ... அன்பான உபசரிப்பு கிடைக்குமா எஞ்சாய் பண்ண வேண்டியதுதானே...."

"அது இல்ல பெருசு...பேண்ட் எல்லாம் இடுப்புல ஏறமாட்டக்குது.....புதுசா ஒரு டஜன் பேண்ட் சர்ட் எடுக்கனும் போல இருக்கு...முடியல நான் வெஜ்ஜை தயவு செய்து நிறுத்தவும்னு சொல்லப் போறேன்"

"கல்யாணம் ஆச்சுன்னு ஓணான் கூட கொமோடோ சைசுக்கு பெருசாகிடும்யா"

"பினாங்கு பதிவருக்கு போட்டியா ஆகிடுவேனோன்னு பயமாக இருக்கு"

"ஆனா என்னையா ?"

"அவரு உடம்ப வச்சுதான் ஓட்டுவேன்...இனிமே எந்த மூஞ்சோடு ஓட்டுறது"

"அவனவனுக்கு ஆயிரம் கவலை...ஒனக்கு டிபிசிடியை ஓட்ட முடியலைன்னு கவலை "

"அண்ணாச்சி, சிவா மோசம் பண்ணிப்புட்டான்"

"தண்ணி அடிச்சு படுத்து தூங்கி மூகூர்த்த நேரத்துக்கு வராம இருந்துட்டானா ?"

"அதை செஞ்சிருந்தாலும் பரவாயில்லை, எதிரிலேயே இருந்தான்... மேரேஜை லவ் டெலிகாஸ்ட் பண்ணப் போறேன்னு லேப்டாப்பை நோண்டிக்கிடே இருந்தான்...என்கிட்ட வந்து பேசவே இல்லை... எனக்கு கடுப்பாயிட்டு"

"கல்யாண மண்டபத்தில் கலர் பஞ்சமா ? பாவம் சிவா... வேற வழி இல்லாமல் வீக் எண்டு ஜொள்ளுக்காக எதாவது படம் தேடி இருப்பான்... அதை விடுய்யா"

"நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்க, அறிமுகம் இல்லாதவர்கள் கூட போன் பண்ணி வாழ்த்தினாங்க, மனசுக்கு சந்தோசமாக இருந்துச்சு பெருசு..."

"மிக்க மகிழ்ச்சி... ம் ஏன்யா பெருசு பெருசுன்னு கொல்லுறே...எனக்கு மீசை கூட நரைக்கல தெரியுமா ?"

"டிபிசிடியும் நீங்களும் ஒருத்தர் ஒருத்தர் பேசிவச்சிக்கிட்டு அவரு உங்களை பார்த்து 'நீங்க இளமையோ இளமைங்கிறது', நீங்க அவரைப் பார்த்து 'ரொம்ப ஸ்லிம்மா ஸ்மார்டாக இருக்கேன்னு' சொல்லிக்கிட்டு ஊரை ஏமாற்றி வருவது எனக்கு தெரியாதா ?"

"யாரோ கூப்பிடுறாங்க ....சரிடா சரவணா நான் போனை வச்சுடுறேன்...கல்யாண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடு"

"இன்னொருதடவை காலங்காத்தால போனைப் போட்டு...இங்கிதம்..."

திட்டுவதற்குள் போனை துண்டித்துவிட்டேன்.

10 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)

cheena (சீனா) சொன்னது…

கோவி,

குசும்பன் சொல்வது உண்மைதான் - குண்டடிச்சுட்டாரு - கல்யாணமானா எல்லோரும் குண்டடிப்பாங்கதானே - இதுலே என்ன கவலை. ம்ம்ம்ம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
//

ஜெகதீசன்,

நண்பர் சிவபாலன்,

அருமையான பதிவு, நல்ல பதிவு என்று ஒரிரு சொற்களாவது பயன்படுத்துவார், இப்படி சிரிப்பானை மட்டுமே போடுறிங்களே, ஞாயமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// cheena (சீனா) said...
கோவி,

குசும்பன் சொல்வது உண்மைதான் - குண்டடிச்சுட்டாரு - கல்யாணமானா எல்லோரும் குண்டடிப்பாங்கதானே - இதுலே என்ன கவலை. ம்ம்ம்ம்
//

சீனா ஐயா,
கவலை இருக்காதா பின்னே, குனிஞ்சு நிமிருவது கடினாமாக போய்விடுமே ! வீட்டு கதவை எடுத்துட்டு புதுசா வைக்கனுமே ! செலவு ஆகும் !

மங்களூர் சிவா சொன்னது…

/
"அவரு உடம்ப வச்சுதான் ஓட்டுவேன்...இனிமே எந்த மூஞ்சோடு ஓட்டுறது"

"அவனவனுக்கு ஆயிரம் கவலை...ஒனக்கு டிபிசிடியை ஓட்ட முடியலைன்னு கவலை "
/

:))))))))))

மங்களூர் சிவா சொன்னது…

/
"அண்ணாச்சி, சிவா மோசம் பண்ணிப்புட்டான்"

"தண்ணி அடிச்சு படுத்து தூங்கி மூகூர்த்த நேரத்துக்கு வராம இருந்துட்டானா ?"

"அதை செஞ்சிருந்தாலும் பரவாயில்லை, எதிரிலேயே இருந்தான்... மேரேஜை லவ் டெலிகாஸ்ட் பண்ணப் போறேன்னு லேப்டாப்பை நோண்டிக்கிடே இருந்தான்...என்கிட்ட வந்து பேசவே இல்லை... எனக்கு கடுப்பாயிட்டு"
/

:)))))))))))

மங்களூர் சிவா சொன்னது…

/

"கல்யாண மண்டபத்தில் கலர் பஞ்சமா ? பாவம் சிவா... வேற வழி இல்லாமல் வீக் எண்டு ஜொள்ளுக்காக எதாவது படம் தேடி இருப்பான்...
/
'நச்'

மங்களூர் சிவா சொன்னது…

/
"டிபிசிடியும் நீங்களும் ஒருத்தர் ஒருத்தர் பேசிவச்சிக்கிட்டு அவரு உங்களை பார்த்து 'நீங்க இளமையோ இளமைங்கிறது', நீங்க அவரைப் பார்த்து 'ரொம்ப ஸ்லிம்மா ஸ்மார்டாக இருக்கேன்னு' சொல்லிக்கிட்டு ஊரை ஏமாற்றி வருவது எனக்கு தெரியாதா ?"
/

:)))))))))))))))))
:))))))))))))))))))))))

இளைய கவி சொன்னது…

//கல்யாண மண்டபத்தில் கலர் பஞ்சமா ? பாவம் சிவா... வேற வழி இல்லாமல் வீக் எண்டு ஜொள்ளுக்காக எதாவது படம் தேடி இருப்பான்...
//உண்மை உண்மை முற்றிலும் உண்மை கணம் கோர்ட்டார் அவர்களே..
இதற்க்கு சாட்சியாக நான் மங்களூர்காரருடன் தான் இருந்தேன். ஆகவே தாங்கள் என்னை சம்பவத்தை நேரில் பார்த்த் சாட்சியாக கருத வேண்டுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா மற்றும் இளைய கவி,

இங்கே எழுதி இருப்பதெல்லாம் குசும்பனிடம் போன் போட்டு பேசி(சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட போது) கிடைத்த வாக்குமூலம் தான். ஒரு விழுக்காடு கூட எனது கற்பனை இல்லை.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்