பின்பற்றுபவர்கள்

17 ஏப்ரல், 2008

சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

தினமலரின் 'அந்த' விளம்பரம் சன் டீவியில் ஓடியது, "சன்டேன்னா இரண்டு"

"உங்க வெளம்பரம் ஓடுது"

சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தாள் என் மனைவி

"எப்படியோ உனக்கு என்னை ஓட்டனும்"

"சந்தர்பம் கிடைப்பதைத்தானே பயன்படுத்த முடியும்"

"பொல்லாத சந்தர்பம், ஊரு ஒலகத்தில் கல்யாணம் ஆன ஆம்பளைங்க செய்யாததையா நான் செஞ்சிட்டேன்"

"சரி...நான் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்"

"ம்...சரி சரி...நானும் எல்லாம் இருக்கா என்று பார்க்கிறேன்... இப்பெல்லாம் எப்போ தீறுதுன்னு கணக்கு வச்சிக்க முடியல..."

"எல்லாத்தையும் நானே உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கு..."

"அது...இல்லடி 10 - 12 நாளைக்கு ஆகும் னு தான் வாங்குறோம்...எல்லாத்தையும் அளந்து, அளந்து செஞ்சுகிட்டு இருக்க முடியுமா ?"

"ஐயா சாமி...உசிரை வாங்காதிங்க, போய் திறந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது"

"வளைஞ்சு கொடுத்துதான் ஆகனும்...என்ன பண்ணறது...வெளியில் தான் பெண்ணியம் பேசுகிறேன் என்று வேறு சொல்றாங்க ... உன் விருப்பத்தையும் பார்க்க வேண்டி இருக்கே"

"உங்க இலக்கிய பேச்செல்லாம் வேறு எங்காவது வச்சிகுங்க ... முதலில் போய் ப்ரிட்ஜை திறந்து என்னனென்ன இல்லையோ பார்த்து வாங்கிட்டு வாங்க..."

"சரிடியம்மா...."

அடுத்து சிறுகதையின் தலைப்பை இங்கே தான் சொருகி இருக்கிறேன் கவனமாக பிடித்துக் கொள்ளுங்க :)

"என்ன முனகல்...சன்டேன்னா... காலை டிபன், மதிய சாப்பாடு இரண்டு வேளை சாப்பாடும் நீங்க தானே எப்பவும் செய்றிங்க..."

"ம் பழகுன மாடுதானே ஏன் பம்மனும்னு கேட்கிறியா...? சரி பிரிட்ஜைப் திறந்து பார்த்துட்டு கடைக்கு கிளம்புறேன்"

"அப்பா...நானும் உன் கூட கடைக்கு வர்றேன்"

அடுத்து இரண்டாவது டார்சர் மெல்ல ஆரம்பிக்குது, சன்டேன்னா பொண்டாட்டி, பொண்ணு இரண்டு பேரோட டார்சர் தாங்கல.

*******

இது வவாச போட்டிக்காக எழுதியது ... ஆனால் எந்த பிரிவில் சேர்ப்பது என்று தெரியல, சிறுகதை, நகைச்சுவை, மொக்கை, அனுபவம்.

இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.

நினைவு படுத்திய வெட்டிப்பயல் (எ) பாலாஜிக்கு நன்றி ! அங்கேயும் சன்டேன்னா இரண்டா ? :)

21 கருத்துகள்:

வெட்டிப்பயல் சொன்னது…

கேட்டதும் கொடுப்பவனே கண்ணா, கண்ணானு கொடுத்துட்டீங்க...

அது எப்படி கேட்டு முப்பது நிமிஷத்துல எழுதிட்டீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
கேட்டதும் கொடுப்பவனே கண்ணா, கண்ணானு கொடுத்துட்டீங்க...

அது எப்படி கேட்டு முப்பது நிமிஷத்துல எழுதிட்டீங்க?
//

பாலாஜி,

ஒரு படைப்பாளியை(?) இப்படியெல்லாம் கேட்டு நெளிய வைக்கலாமா ?
:)))))))))))

- இது ரொம்பவே ஓவர் தானே !!!

வெட்டிப்பயல் சொன்னது…

//பாலாஜி,

ஒரு படைப்பாளியை(?) இப்படியெல்லாம் கேட்டு நெளிய வைக்கலாமா ?
:)))))))))))

- இது ரொம்பவே ஓவர் தானே !!!//

இல்லை நிஜமாவே தான் கேட்டேன்...

உங்க வேகத்தை பார்த்தா அதிகமான படைப்புகள் பரிசு வாங்கிடுவீங்க போல :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//- இது ரொம்பவே ஓவர் தானே !!!//

இல்லை நிஜமாவே தான் கேட்டேன்...//

பாலாஜி,
நீங்க நிஜமாக சொல்றிங்களான்னு கேட்கல,

என்னை நான் படைப்பாளின்னு சொல்லிகிறது ஓவர் என்று சொல்லிக் கொண்டேன்.
(தன்னடக்கம் தன்னடக்கம் கண்டுக்கப்படாது)
:))

ஜெகதீசன் சொன்னது…

:)
பூரிக்கட்டையால ரெண்டு அடி வாங்க்குனீங்களே.... அதைப் பத்தி ஏன் சொல்லவில்லை?

ஜெகதீசன் சொன்னது…

//
சன்டேன்னா... காலை டிபன், மதிய சாப்பாடு இரண்டு வேளை சாப்பாடும் நீங்க தானே எப்பவும் செய்றிங்க..."
//
பொய் சொல்றீங்க தான‌?.....ஞாயிறு மட்டும் தான் நீங்க சமைக்கிறீங்களாக்கோம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
பூரிக்கட்டையால ரெண்டு அடி வாங்க்குனீங்களே.... அதைப் பத்தி ஏன் சொல்லவில்லை?


ஜெகதீசன் said...
//
சன்டேன்னா... காலை டிபன், மதிய சாப்பாடு இரண்டு வேளை சாப்பாடும் நீங்க தானே எப்பவும் செய்றிங்க..."
//
பொய் சொல்றீங்க தான‌?.....ஞாயிறு மட்டும் தான் நீங்க சமைக்கிறீங்களாக்கோம்?

//

ஜெகதீசன்,

எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், அப்பறம் கல்யாணமமே வேண்டாம் என்று ஓடிவிடுவீர்கள், நாட்டில் முதிர்கன்னிகள் பெருகிவிடுவார்கள்.
:)

TBCD சொன்னது…

இரண்டு தம்மைப் போட்டது பற்றி சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இரண்டு தம்மைப் போட்டது பற்றி சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்..
//

புகை(வது) உடலுக்கு பகை !

நாமக்கல் சிபி வாழ்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இரண்டு தம்மைப் போட்டது பற்றி சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்..
//

ஹலோ...! எனக்கு திருட்டு தம் பழக்கமில்லை !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.//

இந்த சுட்டியை பாருங்கள்,
http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_09.html

கணினியைச் சுமந்து இடுப்பு
கடுப்பெடுத்த இளைஞர்களுக்கு
எதாவது சொல்ல விருப்புகிறீர்களா?

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.//

இந்த சுட்டியை பாருங்கள்,
http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_09.html

கணினியைச் சுமந்து இடுப்பு
கடுப்பெடுத்த இளைஞர்களுக்கு
எதாவது சொல்ல விருப்புகிறீர்களா?

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதிபாரதி,

பார்த்தேன், சுட்டிக்கு நன்றி !

KRP சொன்னது…

அதுக்காக தலைப்பையும் ரெண்டு எடத்துல போடனுமா என்ன ??????


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

ILA (a) இளா சொன்னது…

/இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.
//
என் இனம்யா நீ..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//KRP said...
அதுக்காக தலைப்பையும் ரெண்டு எடத்துல போடனுமா என்ன ??????


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
//

கே ஆர் பி,

இன்னும் ஒரு இடத்தில் கூட இருக்கு வெளிச்சம் போட்டு (ஹைலைட்) காட்டவில்லை :)

சிறுகதையைப் பற்றி கருத்து இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
.
//
என் இனம்யா நீ..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

இளா,

நீங்களும் பேரழகனா ?
சொல்லவே இல்லையே !
:)

ஜெகதீசன் சொன்னது…

//
மாறுபட்ட வலைத்தளங்கள்

* உறையூர்காரன்
* ஒரு தமிழனின் குரல்கள் - ஜெகதீசன்
* சிந்தனை பூக்கள் - பாரி.அரசு
* மொழியும் நிலமும் - ஜமாலன்
//

புதசெவி......

என் வலைப்பூ எந்த வகையில் மாறுபட்டது??????

இப்படியெல்லாம் சொல்லி நான் மொக்கை போடுறதைத் தடுக்க முடியாது... ஆமாம் சொல்லீட்டேன்....

கோவி.கண்ணன் சொன்னது…

//* ஒரு தமிழனின் குரல்கள் - ஜெகதீசன்
புதசெவி......

என் வலைப்பூ எந்த வகையில் மாறுபட்டது??????
//

ஜெகதீசன்,

எந்த வகையில் மாறுபடலை என்று நீங்க நினைக்கிறிங்களோ, அதே வகையில் தான் மாறுபடுது, அது உங்கள் கண்ணுக்கு தெரியாது !

:)

நையாண்டி நைனா சொன்னது…

/*இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.*/
அண்ணா இது கொஞ்சம் ஓவரு.... இப்படி சொந்த அனுபவத்தை சிறுகதை என்று சொல்வது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
/*இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.*/
அண்ணா இது கொஞ்சம் ஓவரு.... இப்படி சொந்த அனுபவத்தை சிறுகதை என்று சொல்வது.
//

நைனா,

நெனச்சாலே 'திக்' 'திக்' என இருக்கா ?
அதுக்காக கல்யாணம் பண்ணிக்காம இருந்துடாதிங்க, ப்ளஸ் மைனஸ் இருக்கத்தான் செய்யும்.
:)

நையாண்டி நைனா சொன்னது…

/*நெனச்சாலே 'திக்' 'திக்' என இருக்கா?*/
ஆகா... இங்கேயும் ரெண்டா????

அதுக்கப்புறம்..இன்னொரு சந்தேகம்,
பொண்டாட்டி, பூரிகட்டையாலே "ரெண்டு" போட்டா?
எல்லாமே "ரெண்டு -ரெண்டா" தெரியுமாமே?
இதற்கு யாராவது பதில் சொல்லுங்களேன்????

please visit:
http://naiyaandinaina.blogspot.com/2008/04/blog-post_18.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்