பின்பற்றுபவர்கள்

26 மார்ச், 2008

கவுண்டமணி செந்தில் - காமடி டைம் !

கவுண்டர் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்

செந்தில் : என்னண்ணே இப்படி சோகமாக ஒட்கார்ந்திருக்கிங்க ?

கவுண்டர் : ஆமாம், இவன் ஒரு கர்ண பிரபு, கஷ்டத்தைச் சொன்னா கடன் வாங்கியாவது கொடுத்துட போறான்

செந்தில் : பணம் என்னண்ண பணம், பணம் கொடுத்தாதான் உதவியா ? நாலு யோசனை சொன்னால் கேட்கமாட்டிங்களா ?

கவுண்டர் : வந்துட்டாருய்யா ஹோம் செகரட்டரி, எருமையையே ஒழுங்கா மேய்க்க தெரியாத நாயி நிய்யி, நீ யோசனை செல்லப் போறியா ?

செந்தில் : போங்கண்ணே, போனவாரம் என்கிட்ட யோசனை கேட்டு ஒருத்தன் லட்சாதிபதி ஆகி இருக்கான்.

கவுண்டர் : என்னடா பேங்குல கொள்ளையடிக்க சொல்லிக் கொடுத்தியா ?

செந்தில் : அதுல்லண்ண, எனக்கு தெரிஞ்ச சாமியார் இருக்கார், அவர்கிட்ட அழைச்சிட்டுப் போறேன், உங்க ரேகையப் பார்த்து பரிகாரம் செஞ்சா கஷ்டமெல்லாம் பறந்து போய்டும்ண்ண

கவுண்டர் : நான் இருக்கிற நெலமயில நாயி கூட யோசனை சொல்ல வந்துடும், நீ சொல்றதையும் கேட்கிறேன், வா போவோம்.

**************

செந்தில் : அண்ணே, சாமியாரை கும்புட்டுகுங்க,

சாமியாரைப் பார்த்த கவுண்டமணி யோசனை செய்கிறார், இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே,

சாமியாரைப் பார்த்து,

கவுண்டர் : டேய் நீ முனுசாமி தானே ?

சாமியார் அதிர்ச்சி அடைந்து செந்திலை பார்க்கிறார்

செந்தில் : என்னண்ணே இவர் வடநாட்டில் இருந்து வந்திருக்கிற மூன் சாமி, அதாவது சந்திர சாமியார்

கவுண்டர் : யாரு இவனா ? இந்த நாயி சினிமா கொட்டகை வாசலில் மூனு சீட்டுப் போடுற முனுசாமி, இவன் மூன் சாமியா ?

செந்தில் : அண்ணே நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிங்க

கவுண்டர் : டேய் இந்த நாய்க்கு சேவிங் பண்ணிப்பாரு, போலிஸ் காரன் பொளந்ததுல தாடை கிழிஞ்சி இருப்பது தெரியும்

செந்தில் பம்முகிறார்

கவுண்டர் : டேய் அவனை உதைக்கப் போறதில்ல, அவனை ஊரு ஜெனங்ககிட்ட புடிச்சு கொடுத்துடுவன், உன்னையத்தான் உதைக்கப் போறேன்

செந்தில் : அண்ணே, எவனும் வேலை கொடுக்க மாட்டேன்கிறா, இவன் தான் எனக்கு ஆள்புடிச்சு கொடுத்த கமிசன் கொடுப்பதாக சொன்னான், அதான்ண்ண பொழப்புக்காக செஞ்சிட்டேன், மன்னிச்சிடுங்க

கவுண்டர் : எலேய் உன்னைப் பத்தி தெரிஞ்ச என்னையே ஏமாத்த இவன்கிட்ட கூட்டியாந்திருக்க, மற்ற அப்பாவி ஜெனங்களை நீ எப்படியெல்லாம் ஏமாத்தி இருப்பே ?

செந்தில் ஓட்டமெடுக்கிறார்,

கவுண்டர் : அடே அடே நீ எந்த மூலையில் போய் ஒளிஞ்சாலும் விடமாட்டேன்.

துறத்திக் கொண்டு செல்கிறார்...

12 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

:)))))))))

கலக்கல்

RATHNESH சொன்னது…

சுவாமிகளே! எனக்கு ஒரு சந்தேகம்.

"ராமச் சந்திரன்" என்று பெயர் வைக்கிறார்களே; அது ஏன்? ராமாயணத்தில் ராமனின் முழுப்பெயர் ராமன் தானே? ராமன் ஏக பத்தினி விரதன்; இந்த இப்பிறவிக்கிரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இருந்தவன். இந்த சந்திரனோ குருவின் மனைவியையே 'கணக்கு' பண்ணிய கயவன். பிறகு 'ராமச்சந்திரன்" என்று ஏன் இணைக்கிறார்கள்?

உடன்பிறப்பு சொன்னது…

நல்ல நகைச்சுவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

ஜெகதீசன் சொன்னது…

:)))))))))))))))))))))))))

வடுவூர் குமார் சொன்னது…

துத்துவது தான் பெரிதாக இருக்கு.
:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
சுவாமிகளே! எனக்கு ஒரு சந்தேகம்.

"ராமச் சந்திரன்" என்று பெயர் வைக்கிறார்களே; அது ஏன்? ராமாயணத்தில் ராமனின் முழுப்பெயர் ராமன் தானே? ராமன் ஏக பத்தினி விரதன்; இந்த இப்பிறவிக்கிரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இருந்தவன். இந்த சந்திரனோ குருவின் மனைவியையே 'கணக்கு' பண்ணிய கயவன். பிறகு 'ராமச்சந்திரன்" என்று ஏன் இணைக்கிறார்கள்?
//

ரத்னேஷ் அண்ணா,

எனக்கு தெரிந்த விளக்கத்தைச் சொல்கிறேன்.

இந்திய அரசபரம்பரைகளில் பண்டைய காலம் தொட்டே சந்திர வம்சம் சூரிய வம்சம் என்ற இருபிரிவுகள் உண்டு, இராமன் சந்திர வம்சம். அதனால் சர் நேமாக இராமச்சந்திரன் என்ற பெயர் வந்திருக்கிறது.

தாத்தா மன்மதராசாவாக இருந்தால் பேரன் அவரது பெயரை போட்டுக் 'கொல்ல'க் கூடாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
துறத்துவது தான் பெரிதாக இருக்கு.
:-)
//

குமார்,
எப்பவும் அதுதானே நடக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
நல்ல நகைச்சுவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
//

நன்றி,

நலமாக இருக்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//

மங்களூர் சிவா said...
:)))))))))

கலக்கல்
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)))))))))))))))))))))))))
//

நீளமாக போட்டால் அது வெடிச்சிரிப்பா ?
புதசெவி.

Unknown சொன்னது…

:)))))))))

(வெடிச்சிரிப்பு எனக் 'கொல்க') :)

ஆ.கோகுலன் சொன்னது…

Superb..!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்