பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2008

முல்லை பெரியார், ஒகனேகல் மெத்தனங்கள் !

கேரளா ஒருபக்கம் முல்லை பெரியார் அணையை உயர்த்துவதற்கு எதிராக போராடி வருகிறது கூடவே மாற்று அணை எழுப்பும் திட்டம் தீவிரமாக நடத்தி வருகிறது, மறுபக்கம் ஓக்கனேகல் எங்களுக்கே சொந்தம் என கர்நாடகமாநிலம் அவ்வப்போது தொல்லைபடுத்தி வருகிறது. கிருஷ்ணா கூட்டுக்குடி நீர்த்திட்டம் என்ற பெயரில் செயல்படும் என்று நினைத்ததிட்டம், வாய்க்கால் தோண்டியதில் மழைகாலத்து வெள்ள உபரி நீரை திருப்பிவிட ஏதுவாக ஆந்திர மாநிலத்திற்கு பயனாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து தமிழகத்து பைசா பயனில்லை.

கர்நாடக மாநிலத்தாருக்கு எப்போதுமே தமிழக இயற்கை வளங்கள் மீது ஒரு கண் தான், ஊட்டி, தொட்டபெட்டா அதனைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகியவை கர்நாடக மக்களுக்கு உரிமை உள்ளது போல் அம்மக்கள் நினைத்துவருகிறார்கள். முன்பு பெங்களூரில் வேலை பார்த்த போது அலுவலக சுற்றுலா ஏற்பாட்டில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம், உடன் வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த அலுவலக நண்பர்கள் ஊட்டியும் தொட்டபெட்டாவும் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவை என்று வெளிப்படையாக சொல்லி அந்த பெயர்கள் கன்னட பெயர்கள் என்று காரணமும் சொன்னார்கள், தொட்ட பெட்டா என்றால் பெரிய மலை என்று பொருள் அதைவைத்துச் சொன்னார்கள். எங்களிடம் ஊட்டி இருந்தால் நாங்கள் அதை பரமரிக்கும் முறையே வேறு, உங்கள் மாநிலத்தில் எங்கள் நிலம் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கிறது என்று மிகவும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள்.

ஒக்கனேகல் என்பதும் கன்னட பெயர்தான், புகைவரும் பாதை என்று பொருள் வரும் என்று நினைக்கிறேன், அதனால் தான் பொகையை போட்டு பார்க்கிறார்கள் போல். அந்த ஒரு காரணத்தினாலேயே கர்நாடக அரசு தமிழகத்திடமிருத்து எப்படியும் கவர்ந்துவிடலாம் என்று நினைக்கிறது. பிறமாநில எல்லைக்குள் சுற்றுலா தவிர்த்து அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் நுழைந்தால் அனுமதி பெற்றுக் கொண்டு சொல்லவேண்டும், ஆனால் தமிழக அரசிற்கு தலையில் அடித்தாலும் நீதிமன்றத்துக்குத்தானே செல்வார்கள், என்றைக்கு நாம் நீதியை மதித்து நடந்திருக்கிறோம் என்கிற முன் அனுபவத்திலும், வீரப்பன் தற்போது உயிருடன் இல்லை என்பதாலும் கர்நாடக மாநில தலைவர்கள், நினைக்கும் போதெல்லாம் தமிழக எல்லைக்குள் ஊடுறுவி அளவெடுப்பதும் போராட்டம் நடத்துவதுமாக ஒகனேக்கல்லை கவர்ந்து கையப்படுத்தும் திட்டத்தில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

கலைஞர் அனுபவம் மிக்கவர் தான் இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் செயல்படுவது எப்படி என்பதை அவர் முன்னாள் முதல்வரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, இதுவே ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் எல்லைக்குள் அனுமதி இன்றி வருவதற்கு துணிய மாட்டார்கள், அப்படி நுழைந்தால் அடுத்த மாநில முதல்வர் என்றும் பார்க்காமல் கைது ஆணையை பிரப்பித்து சிறையில் அடைத்துவிடுவார். இவ்வளவு தூரம் செய்யத் தேவை இல்லைதான். குறைந்த அளவாக பிறமாநிலத்தினர் முன்னனுமதி பெறாமல் அரசியல் ரீதியான காரணங்களுக்காக தமிழக எல்லைக்குள் நுழைவதை தமிழக அரசும், கலைஞரும் தடுத்து இருக்க வேண்டும். கலைஞரின் மகள் பெங்களூருவில் இருப்பதால் கர்நாடக மக்களையும் அரசையும், கலைஞர் உறவினர்களின் மானிலம் என்று நினைக்கிறார் போலும். இங்கிருக்கும் தமிழக அரசியல் தலைவர்களால் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து போராட அந்த அரசு அனுமதிக்குமா ? ஒருமுறை மருத்துவர் இராமதாசு பெங்களூரில் போராட்டம் நடதத முயன்றார், ஓசூரை தாண்டி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்த கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் ஒக்கனேகல் விசயத்தில் உரிமை கோரும் போது அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டாமா ? பெயர் கன்னட பெயராக இருந்தால் அந்த மாநிலத்திற்கு உரிமை உடையது என்று சொன்னால், திருவேங்கடம் திருப்பதி கூட தமிழ் பெயர்தான், தில்லை என்ற தமிழ்பெயரே பெயரே டெல்லி என்று திரிந்ததாகக் கூடச் சொல்கிறார்கள், திருவனந்தபுரம் இன்னும் பிறமாநிலத்தில் இருக்கும் பல பெயர்களில் தமிழ் இருக்கிறது என்பதற்காக அங்கெல்லாம் நாம் முக்கை நுழைக்க முடியுமா ?

காவேரிக்கு பிறகு ஒக்கனேக்கல் அரசியல் என இன்னொருமுறை தமிழகத்தின் தலையில் கர்நாடக மிளகாய் அரைக்க முயன்று அதில் வெற்றிபெற்றுவிட்டால் பிறகு ஊட்டியையும் இழந்து ஓட்டாண்டி ஆகி அண்டை மாநிலத்திற்கு பஞ்சம் பிழைக்கவும், தேயிலை தோட்டத்தொழிலாளியாகவும் தான் செல்வான் தமிழன்.

கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் 50 விழுக்காட்டு அளவிற்காவது தமிழக தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். நம்மவர்கள், வந்தாரை வாழவைப்போம் என்று வாய்(கள்) வெந்தபிறகும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் போல. ஹூம்

14 கருத்துகள்:

TBCD சொன்னது…

தங்கள் ஆதங்கம் புரிகிறது.

பொதுவாகவே, மிதமான அரசு என்ற பெயர் எடுக்க முனைவதாகத் தெரிகிறது.

பின்னனியில் ஏதேனும் திட்டம் தீட்டி, நடவடிக்கைகள் எடுத்தாலும், அரசு அதை மக்களுக்கும் சொல்ல வேண்டும்.

ஜெகதீசன் சொன்னது…

//
கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் 50 விழுக்காட்டு அளவிற்காவது தமிழக தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். வந்தாரை வாழவைப்போம் என்று வாய்(கள்) வெந்தபிறகும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் போல. ஹூம்
//

கோவி.கண்ணன் அய்யா,
கர்நாடக மாநிலத்தாருக்கு இருந்தால் அதரற்குப் பெயர் மாநில உணர்வு, ஆனால் நமக்கு இருந்தால் மட்டும் அது பிரிவினைவாதமாம்......
:((

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி.கண்ணன் அய்யா,
கர்நாடக மாநிலத்தாருக்கு இருந்தால் அதரற்குப் பெயர் மாநில உணர்வு, ஆனால் நமக்கு இருந்தால் மட்டும் அது பிரிவினைவாதமாம்......
:((
//

ஜெகதீசன்,
மாநில உணர்வு மரத்துப் போய் இருக்கும் தமிழன் தான் உண்மையான தேசிய வியாதியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
தங்கள் ஆதங்கம் புரிகிறது.

பொதுவாகவே, மிதமான அரசு என்ற பெயர் எடுக்க முனைவதாகத் தெரிகிறது.

பின்னனியில் ஏதேனும் திட்டம் தீட்டி, நடவடிக்கைகள் எடுத்தாலும், அரசு அதை மக்களுக்கும் சொல்ல வேண்டும்.
//

TBCD ஐயா,

நம்ம லக்கி லுக் ஐயா, தமிழக அரசின் நடவெடிக்கைகளைப் பற்றிய அதிகாரபூர்வமற்ற தகவல்களையாவது தருகிறாரா பார்ப்போம்.

MK சொன்னது…

//
கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் 50 விழுக்காட்டு அளவிற்காவது தமிழக தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.
//

உண்மை தான்... அதனால தான் அல்லர சில்லர பிரச்சனைக்கெல்லாம் கூட கட்சி பேதம் பாக்காம "அந்த மஞ்சள் சிவப்பு கொடி"-ய புடிச்சிக்கிட்டு.. போராட்றான்.. அநேகமா மாநிலத்துக்குனு தனி கொடி ஏத்தி "ராஜ்யோத்ஸவம்" கொண்டாடறது.. கர்நாடகாவா மட்டும் தான் இருக்கும்.. இதே பாணிய நாமும் தான் கடைபிடிச்சி பாத்தா என்னவாம்..? தவிர நமக்கொண்ணும்.. கொடிய பத்தி தெரியாமயில்லயே.. புலி, மீன், வில்-அம்பு காலம் தொடங்கி.. தற்போதைய multi-colour கொடி வரைக்கும்.. நாம பாக்காத கொடியா?

நையாண்டி நைனா சொன்னது…

கோவியாரே வணக்கம்......
மீண்டும் பதிவிட வந்தமைக்கு நன்றி.
கோவியாரே, இனி யார் என்ன சொன்னாலும் "கோவி"யாரே.. என்று கொள்ளலாமா?
==============================
இப்போ நாம் பதிவின் பின்ணூட்டதிற்கு வருவோம்

இந்த சூழல் என்றல்ல, அனைத்து சூழலுக்கும் பொருந்த ஒன்று கூறுகிறேன்.
அய்யா... நமக்கு .. சுய புத்தி கிடையாது.
நம்மை பொருத்தவரை நாம் மானசீகமா ஒரு தலைவன் வச்சிருப்போம்
அவன் என்ன சொன்னாலும் சரி என்போம்.
மற்றவன் நல்லதே சொன்னாலும் குற்றம் காண்போம்.
இந்த மனநிலை மாறினால், நம்மிடையே ஒற்றுமை உள்ளது என்று அர்த்தம்
நாமும் முன்னேறு வோம்.
மற்றபடி எதுவும் நடக்காது. அப்படியே நடந்தாலும் அதற்கு அதிக காலம் பிடிக்கும், அனைத்தும் நம் கை மீறி போய் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...

நைனா,

என்ன கொடுமை இது, சென்ற பதிவில் தான் கீதா உபதேசம் கொடுத்தேன், இங்கிட்டு பின்னூட்டத்தில் அதையே கொடுக்கிறிங்களே, மத்தவங்களுக்கு கேடு நினச்சா, தனக்கும் பிறரால் வரும்னு சொல்லுவாங்களே அதுதான் இதுவா ?
:)

நீங்க பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசியதால் மறுமொழியும் அப்படியே.

நையாண்டி நைனா சொன்னது…

திரு கோவியார் அவர்களே,
நான் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இட வில்லை.
நான் கூற வருவதாவது,
நம் மக்கள் தம் தலைவர் கூற்றையே வழிமொழிவார்கள்.
அது "தண்ணி" பிரச்சினையில் இருந்து தண்ணி பிரச்சினை வரை.
அதற்காக தலைவன் வழி நடப்பது தவறு என்று சொல்ல வில்லை, தலைவன் என்ன சொன்னாலும்
அதை ஆமோதிப்பது தவறு என்று கூற வருகிறேன். தலைவன் ஒரு பிரச்சினையை பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கும் அது பிரச்சினை இல்லை. அதே சமயம் ஒரு பொதுப்பிரச்சினையை மற்ற தலைவர் பேசினால் அவர் சுய லாப நோக்கொடு பேசுகிறார் என்போம்
இதனை தான் நான் கூறியுள்ளேன்

சரிதான், தலைவன் பேசவில்லை என்றால் பிரச்சனை பிரச்சனையே இல்லை. :)

தலைவன் பேசாததுதான் பிரச்சனையே. முரசொலிக்கு கடிதம் எழுதுவதுதை ஒரு நாள் ஒத்திப்போட்டாலே போது பல பிரச்சனைகளை தீர்த்துடுவார்.

இல்லாட்டி எதிர்கட்சிக்கார அம்மா, நான் ஒக்கனேகல் போறேன் என்று சொல்லனும்.

எல்லாத்துக்கும் தார் குச்சி போடனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சிங்கையன் said...
இருக்க வேண்டும்.
உண்மை தான்... அதனால தான் அல்லர சில்லர பிரச்சனைக்கெல்லாம் கூட கட்சி பேதம் பாக்காம "அந்த மஞ்சள் சிவப்பு கொடி"-ய புடிச்சிக்கிட்டு.. போராட்றான்.. அநேகமா மாநிலத்துக்குனு தனி கொடி ஏத்தி "ராஜ்யோத்ஸவம்" கொண்டாடறது.. கர்நாடகாவா மட்டும் தான் இருக்கும்.. இதே பாணிய நாமும் தான் கடைபிடிச்சி பாத்தா என்னவாம்..? தவிர நமக்கொண்ணும்.. கொடிய பத்தி தெரியாமயில்லயே.. புலி, மீன், வில்-அம்பு காலம் தொடங்கி.. தற்போதைய multi-colour கொடி வரைக்கும்.. நாம பாக்காத கொடியா?
//

சரிதான், அது போல் அவர்களது செயலை பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் ஒரு தனி நாடு போன்று கர்நாடக வரைபடத்தைக் கும்பிடுவார்கள், பூங்காக்களில் அதை செதுக்கி வைத்திருப்பார்கள்.

கூடவே

நம்ம தேச கன்னட தேச !
நம்ம நாடு கன்னட நாடு !

என்ற கோசம் வேறு.

இங்கே நம் தமிழ்நாட்டில் தப்பித்தவரி தமிழ்நாடு என்று சொல்லிவிட்டால் கூட கூடவே இருக்கும் தேசிய வியாதிகள் கொதித்து எழுந்துவிடுவார்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

காவேரி நம்து
கபினி நம்து
கிருஷ்ணராஜசாகர் நம்து
ஒகனேக்கல் நம்து
ஓசூர் நம்து
கிருஷ்ணகிரி நம்து
சேலம் நம்து
திருச்சி நம்து
காவேரி கீது தஞ்சாவுரு நம்து

பாவம் தமிழன் ஒரு திருவள்ளுவர் சிலையைத் திறக்க இன்னும் தவம் கிடக்கிறான்.

ஒரு சில தமிழனுக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள். தங்கள் கவலையில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு தூங்குகிறதா என் நினைக்கத் தோன்றுகிறது.
குட்ட குட்ட குனியக் கற்றுக்கொண்டானா தமிழன்?

வந்தாரை வாழ வைக்கிறான் பாவம்... நீ முதல்ல வாழனும் என் உடன்பிறப்பே! உணர்ந்துகொள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

RATHNESH சொன்னது…

உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அனைவருடைய உணர்வுக்கும் தமிழ் வந்தனம். ஆனால் இந்த விஷயத்தில் கருணாநிதியின் மௌனம் காரணமாகத் தான் எடியூரப்பாவின் பயணம் ஒரு டூரிஸ்ட் பயணமாக முடிந்து விட்டது. அவர் மீது கை வைத்திருந்தால் அல்லது எதாவது ரியாக்ஷன் காட்டி இருந்தால் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கும்.

இதைத் தவிர வேறு எந்த வகையிலும் இந்த விஷயத்தைக் கருணாநிதி கையாண்டிருக்க முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...

1:45 AM, March 26, 2008
//

ரத்னேஷ் அண்ணா,
இடையூரப்பா மட்டுமல்ல, கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் அவ்வப்போது இதை நடத்திவருகின்றன. தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் இதில் தீவிர நடவடிக்கை எடுத்து இருக்கலாமே, பக்கத்து மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தால் தமிழகத்துக்கு என்ன ? காவேரி ஆணையத்தின் தீர்பை மதிக்கப் போகிறார்களா ?
திமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்ததே இல்லையா ?

இப்ப பாருங்க அம்மா கையில் எடுத்துக்கொண்டார்கள். யார் செய்தால் என்ன... எப்படியோ தமிழ்நாட்டில் கன்னட அமைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்தால் நல்லது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
காவேரி நம்து
கபினி நம்து
கிருஷ்ணராஜசாகர் நம்து
ஒகனேக்கல் நம்து
ஓசூர் நம்து
கிருஷ்ணகிரி நம்து
சேலம் நம்து
திருச்சி நம்து
காவேரி கீது தஞ்சாவுரு நம்து

பாவம் தமிழன் ஒரு திருவள்ளுவர் சிலையைத் திறக்க இன்னும் தவம் கிடக்கிறான்.

ஒரு சில தமிழனுக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள். தங்கள் கவலையில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு தூங்குகிறதா என் நினைக்கத் தோன்றுகிறது.
குட்ட குட்ட குனியக் கற்றுக்கொண்டானா தமிழன்?

வந்தாரை வாழ வைக்கிறான் பாவம்... நீ முதல்ல வாழனும் என் உடன்பிறப்பே! உணர்ந்துகொள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

9:40 PM, March 25, 2008
//

ஜோதிபாரதி மிக்க நன்றி !
நீங்களும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்