பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2008

உங்கள் மனதில் வாழ்பவர்கள் யார் ?

மனசு இருக்கிறதா ? இல்லையா ? என்பதே ஆராய்ச்சிக்கு உரியது, செல்கள் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்களின் ஒழுங்கான திரளே மனசு என்கிறது அறிவியல். மனது தனியாக அது எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. இதயம் மனது இல்லை என்று நன்கு தெரிந்தும், மனதைத் தொட்டு சொல்வதாக நெஞ்சில் கைவைத்து பேசுவோம். மனது இதயத்தில் இல்லாவிட்டாலும் மனக்கஷ்டம் மகிழ்ச்சி என்றால் உடனே செயலாற்றுவது இதயம் தான், சொல்லமுடியாத துன்பம் வரும் போது மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். அது போல் கோபம் கொள்ளும் போது இதயத்தில் இரத்த அழுத்தம் ஏற்படும், இந்த மருத்துவ காரணத்தினால் தான் இதய நோயாளிகளின் உணர்வை தூண்டாமல் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி, அவர்களையும் அவ்வாறு இருக்க முயற்சிக்க சொல்வார்கள். மனம் பாதிப்படையும் போது அதற்கேற்றவாறு இதயம் செயலாற்றுவதால் மனதும் இதயமும் ஒன்று என்று நினைப்பது சரிதான்.

உலகத்திலேயே மிகப் பெரியது மனித மனம் தான். அதில் எவருக்கும் இடம் கொடுக்க முடியும். அரசியல் தலைவர்களெல்லாம் இதயத்தில் இடம் இருப்பதாக சொல்வது அதை வைத்துதான். அது உறவு முறைகளின் அல்லது நெருக்கத்தின் அடிப்படையில் அதை வரிசைபடுத்தி வைத்துக் கொள்ளும். நம் மனது ஒன்றுதான். அதில் இடம் பெறுபவர்கள் இருவகையானவர்கள். ஒருசாரர் நம்மீது அன்பு வைத்திருப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள், இன்னொருசாரர் நம்மை விரும்பாதவர்கள், நம்மால் விரும்பப்படாதவர்கள்.

ஒருவரை நாம் எந்த அளவு நேசிக்கிறோம் என்பதை எப்படி அறிவது ? அது மிகவும் சுலபம், அவர் எதிரில் இல்லாவிட்டாலும், அவரை நினைக்கும் போது உங்கள் மனதில் உவகை பூக்கிறதென்றால் நீங்கள் அவர் மீது உள்ளன்பு வைத்திருக்கிறீர்கள் என்று பொருள். இது போல் சிலரைப்பற்றி நம் நினைவில் வரும் போது நெஞ்சம் உவகை அடைந்தால் அவர்களெல்லாம் நமக்கு நெருக்கமானவர்களே. இவர்களெல்லாம் நம் இதயத்தை மெல்ல வருடிவிடும் பூக்கள் போன்றவர்கள்.

நம்மை எரிச்சல் அடையவைப்பவர் யார் ? இந்த கேள்விக்கு மேற்கண்ட கேள்வியை விட விடை வேகமாக வரும், இவனை நெனச்சாலே, என்று நினைக்கும் போதே அவர் எதிரில்
இல்லாத போதே நம் முகம் கருத்துவிடும், இவனுக்கு என்றாவது ஒருநாள் பாடம் கொடுத்தே ஆகவேண்டும் என்று நினைக்க வைப்பவரே நம்மை எரிச்சல் அடையவைப்பவர்,
யார் யாரெல்லாம் நம் இதய ஓட்டத்தை துரிதப்படுத்துகிறார்களோ அவர்களே நம்மை எரிச்சல் அடைய வைப்பவர்கள். சிலரைப்பற்றிய நினைவே நாம் பலவீனமானவராக இருந்தால் நம்மை சோர்வடைய வைத்துவிடும். யார் யாரெல்லாம் நம்மை காயப்படுத்துகிறார்களோ அவர்கள் நம் இதயத்தை கிழிக்கும் முட்கள் போன்றவர்கள். இவர்களால் நம் உடல் நலத்துக்கே சவால்.

இருசாரரும் நம் மனதில் இருக்கிறார்கள், நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் நம் முட்களையும் விரும்பியே சுமக்கிறோம். நம் மனது தான் ஆனால் முட்களை தூக்கியெறிய நாம் நினைப்பதே இல்லை. அவர்களையெல்லாம் நினைப்பதன் மூலம் நமது இதயத்தில் இடம் அளிக்கிறோம்.

இதயமே கோவில் என்கிறார்கள் அதில் யார் யரெல்லாம் இருக்கலாம் என்பதை நாம் தான் முடிவு செய்ய முடியும். நம்மை பிடிக்காதவர்களைக் கூட நாம் மனதில் வைத்திருந்தால் அதற்கு பெயர் தாராள மனதா ?

நமக்கு விருப்பமே இல்லாத ஒன்றை ஏசுநாதர் சுமந்தது போல் நாம் சுமக்க வேண்டுமா ? அகற்ற ஒரே வழிதான். ஒன்று பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வது, இல்லை என்றால் பெரும்தன்மையாக மறந்துவிடுவது.

உங்கள் இதயம் மென்மையனதாக நீங்கள் நினைத்தால் எதிரிகளுக்கு அதில் எந்த வகையிலும் இடமளிக்காதீர்கள்.

என்னைப் பொருத்தவரை என்மனதில் நான் விரும்பாதவர்கள் / என்னை விரும்பாதவர்கள் ஒரு சில நாட்கள் இருப்பார்கள், அதன் பிறகு தேவையற்ற சுமை அகற்ற வேண்டும் என்று நானே அவர்களிடம் பேசுவேன். என்மீது தவறு இல்லை என்றாலும், சிறியவர்கள் என்றாலும் காலில் கூட விழுவேன். சரிவரவில்லை என்றால் மற்றொருமுறை முயற்சி செய்வேன். அதற்கும் மேல் அவர்களை நான் என் இதயத்தில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

நாம் மனதில் யாருக்கு இடம் என்பதை நாம் தான் தீர்மாணிக்க முடியும், அங்கே முட்களாக அறுப்பவர்களுக்கும் இடமா ? மென்மை போய்விடுமே ! நாம் இல்லை என்றால் நட்டமில்லை என்பவர்களுக்கு நம் இதயத்தில் இடமில்லாவிட்டால் என்ன நட்டமாகிவிடப் போகிறது ?

முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு இடம் கிடைக்குமே !
நம்மால் விரும்பப்படுபவர்களும், நம்மை விரும்புவர்கள் மட்டுமே நம் இதயத்தில் வாழட்டும். மறற இடங்கள் வெற்றிடமாகட்டும்.


பின்குறிப்பு : நல்லிதயம் கொண்ட நண்பர்கள் சொன்னார்கள் என்பதற்காகவும், மேலும் என் உளவியல் பதிவைத்தான் விரும்பி படிப்பதாகவும் இதுபோன்றே எழுதுங்கள் என தனிமடலிலும் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு இந்த பதிவை கனிவுடன் சமர்பிக்கிறேன்

16 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

பதிவு நல்லாத்தான் இருக்கு...
ஆனால் பின்குறிப்பைப் பார்த்தால் ஏதோ உள்குத்து இருக்க மாதிரித் தெரியுது.. ஆனா என்னன்னு தான் தெரியலை... சோ மீ த எஸ்கேப்பு...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பதிவு நல்லாத்தான் இருக்கு...
ஆனால் பின்குறிப்பைப் பார்த்தால் ஏதோ உள்குத்து இருக்க மாதிரித் தெரியுது.. ஆனா என்னன்னு தான் தெரியலை... சோ மீ த எஸ்கேப்பு...
//

உள்குத்தா ? எழுதியதன் கருப்பொருள் எனக்கும் கூட பொருந்தும்.

மங்களூர் சிவா சொன்னது…

/
யார் யாரெல்லாம் நம் இதய ஓட்டத்தை துரிதப்படுத்துகிறார்களோ அவர்களே நம்மை எரிச்சல் அடைய வைப்பவர்கள
/

அழகான பொண்ணுங்களை பாத்தா இதயம் வேகமா அடிக்குது ஆனா எரிச்சல் வரதில்லையே!?!?

புரியல தயவு செய்து விளக்கவும் (நன்றி ஏபிசிடிஇஎப்ஜிஅச்)

RATHNESH சொன்னது…

//நம் மனது ஒன்றுதான் அதில் இடம் பெறுபவர்கள் இருவகையானவர்கள். ஒருசாரர் நம்மீது அன்பு வைத்திருப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள், இன்னொருசாரர் நம்மை விரும்பாதவர்கள், நம்மால் விரும்பப்படாதவர்கள்.//

நம் மீது அன்பு வைத்து நம்மால் விரும்பப்படாதவர்கள் என்றும், நம்மால் நேசிக்கப்பட்டு நம்மைக் கண்டு கொள்ளாதவர்கள் என்றும் இன்னும் இரு வகையினர் பற்றிச் சொல்லவே இல்லை?

//என்னைப் பொருத்தவரை என்மனதில் நான் விரும்பாதவர்கள் / என்னை விரும்பாதவர்கள் ஒரு சில நாட்கள் இருப்பார்கள், அதன் பிறகு தேவையற்ற சுமை அகற்ற வேண்டும் என்று . . . . அதற்கும் மேல் அவர்களை நான் என் இதயத்தில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

நாம் மனதில் யாருக்கு இடம் என்பதை நாம் தான் தீர்மாணிக்க முடியும், //

நீங்க இவ்வளவு பெரிய மகான் என்றே தெரியாமல் ஆளாளுக்கு தம் மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி என்று வாழ்நாளெல்லாம், தியானம், யோகம், தேடல், அது, இது என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்!

கோவி.கண்ணன், நீங்க அடுத்தவரை ஏமாற்றும் டைப் அல்ல; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் அப்பாவி என்பதை இவ்வளவு வெள்ளந்தியாகப் பதிவு எழுதிக் காட்ட வேண்டுமா?

//முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு இடம் கிடைக்குமே !
நம்மால் விரும்பப்படுபவர்களும், நம்மை விரும்புவர்கள் மட்டுமே நம் இதயத்தில் வாழட்டும். மறற இடங்கள் வெற்றிடமாகட்டும்.//

அடடா! பூவரிக்கிறது! என்ன, ஏதாவது பத்திரிகையில் ஆன்மீக உற்சாகத் தொடர் எழுதப் பயிற்சியா?

கோவி.கண்ணன் சொன்னது…

ரத்னேஷ் அண்ணா,

உங்களுக்கு குசும்பு அதிகமாக போச்சு !

//நம் மீது அன்பு வைத்து நம்மால் விரும்பப்படாதவர்கள் என்றும், //

இவர்கள் நம்மனதில் இல்லாமல் போவது நம் குறைதான். பூக்காமல் இருக்கும் மொட்டு !

//நம்மால் நேசிக்கப்பட்டு நம்மைக் கண்டு கொள்ளாதவர்கள் என்றும் இன்னும் இரு வகையினர் பற்றிச் சொல்லவே இல்லை?
//

இவர்கள் மனதில் தானே இருக்கிறார்கள். நாமே விரும்பி நேசிப்பவர்களை நம்மால் குறை சொல்ல முடியாது. விட்டுடுவோம். அது வாடாமல்லி பூ !

//நீங்க இவ்வளவு பெரிய மகான் என்றே தெரியாமல் ஆளாளுக்கு தம் மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி என்று வாழ்நாளெல்லாம், தியானம், யோகம், தேடல், அது, இது என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்!//

சாமியார் மடம் ஆரம்பித்தால் சொல்லி அனுப்புகிறேன். :)

//கோவி.கண்ணன், நீங்க அடுத்தவரை ஏமாற்றும் டைப் அல்ல; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் அப்பாவி என்பதை இவ்வளவு வெள்ளந்தியாகப் பதிவு எழுதிக் காட்ட வேண்டுமா?//

அதெல்லாம் இல்லிங்க, உண்மையைத்தான் எழுதினேன். அது என்னை ஏமாற்றுவதாக தெரியவில்லை. தேவையற்ற எண்ணங்கள் பலவற்றை இவாறு தான் களைந்திருக்கிறேன். நாளைக்கே செத்தாலும், நம்மை வெறுப்பவர் எவரும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் தான். காலம் பதிவில் கீழே ஒண்ணு எழுதி இருப்பேன். எனக்கு ஒர்க் அவுட் ஆகுது !
:)

நண்பராக இருப்பதால் வெள்ளந்தி என்கிறீர்கள், இல்லை என்றால் லைலா பாணியில் 'லூசாப்பா நீனு' என்பீர்கள் !

//அடடா! பூவரிக்கிறது! என்ன, ஏதாவது பத்திரிகையில் ஆன்மீக உற்சாகத் தொடர் எழுதப் பயிற்சியா?//

இன்னிக்கு ஆன்மிகம் தான் எழுதினேன். அதை போடவில்லை. நாளைக்குதான் அது !
:)

துளசி கோபால் சொன்னது…

//பூவரிக்கிறது!//

மெத்தச் சரி.
புல் மட்டும்தான் அரிக்கணுமா என்ன? :-))))

TBCD சொன்னது…

வா என்றால் வாரா..
போ என்றால் போகா...


இது தான் என் அனுபவம்..

சட்டென்று தூக்கிப் போட சாப்பாட்டு இலையா நினைவுகள்...உள்ளேயே இருக்கும்...உங்களையும் அறியாமலே..

அப்படி இல்லையின்னா, உங்க உடம்புல யூஎஸ்பி போர்ட் இருக்கனும் ( நோ ஆபாசம்) ..உங்க மெமெரி ஜிபியில் இருக்கனும்... :P

(இந்த கணிணி கலைச்சொல் களஞ்சியம் ஒன்னு வேனும் ...)

ஜெகதீசன் சொன்னது…

/////

//முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு இடம் கிடைக்குமே !
நம்மால் விரும்பப்படுபவர்களும், நம்மை விரும்புவர்கள் மட்டுமே நம் இதயத்தில் வாழட்டும். மறற இடங்கள் வெற்றிடமாகட்டும்.//

அடடா! பூவரிக்கிறது! என்ன, ஏதாவது பத்திரிகையில் ஆன்மீக உற்சாகத் தொடர் எழுதப் பயிற்சியா?
/////

ஆமாங்க ரத்னேஷ், "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.." வகையறா கட்டுரைகளைப் படிக்கிற மாதிரியே இருக்கு.....
:))

நையாண்டி நைனா சொன்னது…

ஆனா எனக்கு தமிழ் பட இயக்குநர்கள் "காதலுக்கு விளக்கம்" சொல்ற மாதிரி இருக்கு......
காதல்னா - தவம், இனிய அனுபவம், செடியில் உள்ள பூவு, மொட்டு, முள்ளு, ஜொள்ளு, லொள்ளு... என்று விளக்கம் கொடுக்குறா மாதிரியே இருக்கே......
யாராவது காப்பாத்துங்களேன்.............

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//பூவரிக்கிறது!//

மெத்தச் சரி.
புல் மட்டும்தான் அரிக்கணுமா என்ன? :-))))

4:43 AM, March 26, 2008
//

துளசியம்மா,

அரிப்பது என்றால் சலித்தல், சல்லடை என்றும் ஒரு பொருள் இருக்கிறது.

ஊரவைத்த அரிசியில் இருந்து கல் நீக்கும் போது அரிசி அரிக்கிறேன் என்று கிராம வழக்கில் சொல்லுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
வா என்றால் வாரா..
போ என்றால் போகா...


இது தான் என் அனுபவம்..

சட்டென்று தூக்கிப் போட சாப்பாட்டு இலையா நினைவுகள்...உள்ளேயே இருக்கும்...உங்களையும் அறியாமலே..

அப்படி இல்லையின்னா, உங்க உடம்புல யூஎஸ்பி போர்ட் இருக்கனும் ( நோ ஆபாசம்) ..உங்க மெமெரி ஜிபியில் இருக்கனும்... :P

(இந்த கணிணி கலைச்சொல் களஞ்சியம் ஒன்னு வேனும் ...)

10:19 AM, March 26, 2008
//

சரிதான்,

பழைய சேர்ந்து செய்த பழைய நினைவுகள் அதே சூழலில் மட்டும் நினைவு வரும். ஆனால் படுத்தாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
ஆனா எனக்கு தமிழ் பட இயக்குநர்கள் "காதலுக்கு விளக்கம்" சொல்ற மாதிரி இருக்கு......
காதல்னா - தவம், இனிய அனுபவம், செடியில் உள்ள பூவு, மொட்டு, முள்ளு, ஜொள்ளு, லொள்ளு... என்று விளக்கம் கொடுக்குறா மாதிரியே இருக்கே......
யாராவது காப்பாத்துங்களேன்.............
//

நைனா,

தமிழ்படங்களைப் பொருந்து 60 விழுக்காடு வெற்றியடையாமல் போவது தான் உண்மை காதல்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஆமாங்க ரத்னேஷ், "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.." வகையறா கட்டுரைகளைப் படிக்கிற மாதிரியே இருக்கு.....
:))

1:28 PM
//

போச்சுடா, இந்த அண்ணனை கைவிட்டு அந்த அண்ணன் பக்கம் பேச ஆரம்பித்துவிட்டார். :)

N.Ganeshan சொன்னது…

மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ரூபஸ் சொன்னது…

விருப்பம், வெறுப்பு இரண்டையும் யோசிக்க வைத்திருக்கிறீர்கள்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்