பின்பற்றுபவர்கள்

21 செப்டம்பர், 2007

முக முறிவுகள் ஏன் ?

மூஞ்சை காட்டுவது என்று வழக்கில் சொல்லுவார்கள். நாம் சிலருடன் சாதரணமாகத்தான் பழகுவோம். அல்லது நெருக்கமாக இருப்பதாக நாமே நினைத்துக் கொள்வோம். எனவே நமது செயல்களில் மாற்றம் எதுவும் இல்லையென்றாலும், நமக்கு நெருக்கமானவர்களுக்கு நமது செயல்கள் பிடிக்காது போனால் நம் மீது பழகிய காரணத்தால் சிலவற்றை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக ஒரு பெரிய பழியை எதிர்பாராத நேரத்தில் சுமத்துவார்கள். அவர்களுக்கு நமது செயல் பிடிக்கவில்லை என்றே அறிந்திருக்காத சமயத்தில் ஒரு பழியை போட்டுவிடும் போதும், நாம் நிலைகுலைந்து போய்விடுவது உண்மைதான். ஏன் எதற்கு என்று நினைத்துப் பார்த்தால் பழகிய பழக்கம் தான் காரணம். பழகிவிட்டதால் எதையும் உடனடியாக அல்லது பேசி புரிய வைக்க முடியாது என்ற தயக்க உணர்வைவிட பழியை போட்டுவிட்டு உடனடியாக வெட்டிவிடுவது எளிதான வழி போன்ற உளவியல் காரணம் என்று நினைக்கிறேன்.

எனது அலுவலகத்தில் உடன் வேலைபார்பவர் ஒருவரும் நானும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள். முன்பு இருவருமே ஒன்றாக வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தோம். அவர் அங்கிருந்து வேறொரு அலுவலகத்திற்கு சென்று ஓராண்டுக்கு பின்பு அவரது அலுவலத்தில் வேலை செய்தவர் ஒருவர் விலகவே என்னை அந்த இடத்துக்கு பரிந்துரைத்து அழைத்தார். ஆனால் அந்த அலுவலகம் தொலைவு என்பதால் அதையே காரணம் சொல்லி மறுத்தேன். அவர் நாள்தோறும் அவரது வாகனத்தில் அலுவலகத்தில் செல்லலாம் என்று சொன்னார். உடனடியாக சரி என்று சொல்லாவிட்டாலும் வேலை செய்யும் இடத்தில் மாற்றம் வந்தால் புதியவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதால் சிரிது தயக்கத்திற்கு பிறகு வேலையில் சேர்ந்துவிட்டேன். அவர் தன்னுடைய வாகனத்தில் அழைத்துச் செல்கிறேன் என்கிறாரே என்பதால் அதையே சாக்காக வைத்து அவரது வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாமல் முடிந்த அளவு தவிர்த்தே நான் தனியாகவே அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் என்றாவது தாமதம் ஆனால் அவருக்கு தொலைபேசிவிட்டு அவருடன் செல்வதுண்டு. இது மாதத்திற்கு ஒரு முறை நிகழ்வது கூட அரிது. இப்படி ஒருநாள் அவருடன் செல்லும் போது வழக்கத்துக்கு மாறாக கடுகடு என்றிருந்தார். காரணம் புரியவில்லை. அதன் பிறகு பேச்சுக் கொடுத்தபோது அவருக்கு என்னை அழைத்துச் செல்வதில் விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவருடன் செல்வதை முற்றிலும் தவிர்த்தேன். இது போன்று தான் சிலர் வெளிப்படையாக சொல்ல தயக்கப்பட்டு ஒரு நாள் முகத்தை காட்டிவிடுவார்கள். வெளிப்படையாக சொன்னால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் முகத்தைக் காட்டும் போது உறவுகளே கூட கெட்டுப் போய்விடும். முகம் நோக்க முடியாது போய்விடும்.

எந்த பிணக்குகள் ஏற்பட்டாலும் முற்றிவிடும் முன்பு வெளிப்படையாக பேசினால் எதாவது நல்ல முடிவு கிடைக்கலாம், பாதிப்பின்றி முடித்துக் கொள்ளலாம் இல்லை என்றால் காழ்புணர்வும், முகமுறிவும் தான் மிஞ்சும். இதில் நமது குறைபாடும் உண்டு. நாம் அடுத்தவரை நாடுவது என்பது வெறும் நட்புக்காக, நேர போக்கிற்காக கூட இருக்கலாம். ஆனால் அவர் விருப்பத்துடன் தான் செய்கிறார் / உடன்படுகிறார் என்ற தவறான அனுமானத்தை வைத்திருப்பதால் அவை மோசமாகும் போதுதான் நமக்கே அதுபற்றி தெரியவரும். மனிதர்களின் மனநிலை வேறு வேறு என்பதால் இவை வாழ்க்கை முழுவதுமே அவ்வப்போது எவருடனாவது ஏற்படும் ஒரு விரும்பதாக நிகழ்வுகள் தான். பாடம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை அளவு கோலாகவைத்து எல்லோரையும் எடை போட முடியாது இருந்தாலும் அதுபோன்ற ஒத்த நிகழ்வுகளில் சிறுது முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

டிஸ்கி : இது பதிவுலக பதிவர்கள் எவரையும் குறித்து எழுதப்படவில்லை. குறிசொற்கள் அனுபவம் / நிகழ்வு :)

10 கருத்துகள்:

SP.VR. SUBBIAH சொன்னது…

கவுண்டமணி பாஷையில் சொன்னால்:
இதெல்லாம் இன்னைக்கு வாழக்கையில சகஜமப்பா.
கண்டுக்காம விடப்பா. இதுக்கெல்லாம் சேத்துத்தான நம்ம கலிகங்கப் பட்டிக்காரரு ஒரு பாட்டு எழுதியிரிக்கார்ல:
"ஊர்வசி, ஊர்வசி....டேக் இட் ஈஸி பாலிஸி"
*****
ஒரு நாள் நிகழ்வை வைத்து ஒரு முடிவிற்கு வராதீர்கள். அன்றைக்குக் காலையில் அவர் தன் மனைவியிடம் மாத்து (dose) வாங்கியிருக்கலாம்.அதன்காரணமாக முகத்தைக் காடடாமல் இருந்திருக்கலாம்.

நீங்கள் உங்களுக்கென்று தவறான முடிவிற்கு வந்திருக்கலாம்

ஆகவே இந்தக் கட்டுரையை மறந்துவிட்டு அவருக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்கள்

வடுவூர் குமார் சொன்னது…

நண்பர் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்த பிறகு பல விஷயங்களை முகத்துக்கு நேராக சொல்லமுடிவதில்லை.அவர் மனம் கஷ்டப்படுமோ என்ற எண்ணம் தான்.
உங்கள் பதிவில் இருக்கும் டிஸ்கி தான் இதுக்கும். :-))

லக்கிலுக் சொன்னது…

ஏன்? என்னாச்சி?

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

"தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்பது தாங்கள் அறியாததாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

நீரடித்து நீர் விலகுவதில்லை; அப்படி விலகினால் இரண்டில் ஒன்று நீரல்ல. கிளைஞரை நீட்டி அளக்க உதவிய கோல் தான் அத்தகைய சம்பவம்.

மேலும், இருபுற நியாயங்கள் உள்ள விஷயங்களில் ஒரு புற வாக்குமூலம் மீதான கருத்துப் பரிமாற்றம் எவ்வளவு தூரம் சரியாக இருக்க முடியும்?

RATHNESH

VSK சொன்னது…

நான் சொல்ல நினைத்ததை வெகுத் தெளிவாக திரு. ரத்னேஷ் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு என் நன்றி.

"இரண்டில் ஒன்று நீரல்ல"

மிகச் சரியான கணிப்பு!

தீரா இடும்பை தரும்!

ஆசானும் பாடம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

இதற்கு மேல் என்ன சொல்வது?

தனியே தீர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழக்கை.

அல்லது வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள், கோவியாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு நாள் நிகழ்வை வைத்து ஒரு முடிவிற்கு வராதீர்கள். அன்றைக்குக் காலையில் அவர் தன் மனைவியிடம் மாத்து (dose) வாங்கியிருக்கலாம்.அதன்காரணமாக முகத்தைக் காடடாமல் இருந்திருக்கலாம்.

நீங்கள் உங்களுக்கென்று தவறான முடிவிற்கு வந்திருக்கலாம்

ஆகவே இந்தக் கட்டுரையை மறந்துவிட்டு அவருக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்கள்
//

சுப்பையா ஐயா,
ஒருநாள் முடிவல்ல, ஒருநாளில் இறுதி வடிவம் பெற்றது. நாம் எவரிடமாவது எதிர்பார்ப்பு வைத்திருந்தால் என்றாவது ஏமாற்றமே மிஞ்சும் என்று பலரால் உணர்ந்திருக்கிறேன். இது வேறுவிதமான அனுபவம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நண்பர் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்த பிறகு பல விஷயங்களை முகத்துக்கு நேராக சொல்லமுடிவதில்லை.அவர் மனம் கஷ்டப்படுமோ என்ற எண்ணம் தான்.
உங்கள் பதிவில் இருக்கும் டிஸ்கி தான் இதுக்கும். :-))
//

குமார்,
நீங்க எதோ சொல்ல தயங்குகிறீர்கள் என்பது தெரிகிறது.
:)
பின்னூட்ட கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
ஏன்? என்னாச்சி?
//

அண்ணாச்சி, அதே நாளில் நீங்களும் இது போன்றே பதிவு போட்டு இருக்கிறீர்களே ஆனால் எனக்கு பிறகு தான். உங்கள் பதிவும் ஆறுதலான பதிவு எனக்கு.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன் சார்,

"தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்பது தாங்கள் அறியாததாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

நீரடித்து நீர் விலகுவதில்லை; அப்படி விலகினால் இரண்டில் ஒன்று நீரல்ல. கிளைஞரை நீட்டி அளக்க உதவிய கோல் தான் அத்தகைய சம்பவம்.

மேலும், இருபுற நியாயங்கள் உள்ள விஷயங்களில் ஒரு புற வாக்குமூலம் மீதான கருத்துப் பரிமாற்றம் எவ்வளவு தூரம் சரியாக இருக்க முடியும்?

RATHNESH
//

RATHNESH,
நீங்கள் சொல்வது சரிதான். நீரில் கூட வெண்ணீர் இருக்கிறது, தெரியாமால் தொட்டுவிட்டு பல சமயங்களில் கையை சுட்டுக் கொண்ட அனுபவம் பலருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன். நான் நியாயம் அநியாயம் குறித்து எதுவும் சொல்லவில்லை. அவரவருக்கு இருக்கும் சூழ்நிலையில் இதுபோல் நடக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். ஓரளவு எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் தவிர்கலாம். ஆனால் அதுபோன்ற நிகழ்வுகளே மற்றவர்வற்றிற்கும் அளவு இல்லை என்றும் பதிவில் சொல்லி இருக்கிறேன். ஆறுதல் சொல்லுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
நான் சொல்ல நினைத்ததை வெகுத் தெளிவாக திரு. ரத்னேஷ் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு என் நன்றி.

"இரண்டில் ஒன்று நீரல்ல"

மிகச் சரியான கணிப்பு!

தீரா இடும்பை தரும்!

ஆசானும் பாடம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

இதற்கு மேல் என்ன சொல்வது?

தனியே தீர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழக்கை.

அல்லது வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள், கோவியாரே!
//

எஸ்கே ஐயா,

தனியேதான் புலம்பிக் கொள்கிறேன். அவரரிடம் கேட்ட போது விரும்பவில்லை என்று குறிப்பால் உணர்த்தினார். அதன் பிறகு மவுனமாகவே இருந்தார். அது ஒரு நீண்ட பயணம், விரும்பவில்லையா ? என நான் கடைசியாக கேட்டபோது இறுதிவரை இறுகிய முகத்துடன் இருந்தது அவர் விரும்பவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. ஆனால் தவறாக நினைக்கவில்லை. என்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே எண்ணினேன்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்