பின்பற்றுபவர்கள்

10 செப்டம்பர், 2007

தந்தை பெரியார் தமிழ் விரோதி ?

பெரியார் தமிழை முன்னிறுத்தவில்லை, மாறாக 'திராவிடர் இயக்கம்' என்று சொல்லை முன்னிறுத்திவிட்டார், அவர் தம்மை கன்னடர் என்று கருதி இருந்ததாலேயே தான் திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர், எனவே பெரியார் தமிழுக்கு விரோதியா ? என்கிற ஐயப்பாட்டை நண்பர் அரைபிளேடு வெளிப்படுத்தினார்.

எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பொதுமக்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் குட்டையை குழப்பி மீன் பிடிப்பதில் அதிக மீன்களை சுலமாக பிடிக்க முடியும் என்பது ஒரு வகை உத்திதான். பெரியார் கொள்கைகளை அறிந்த நண்பர் அரைபிளேடு அதுபோல் செய்திருக்க வாய்ப்பில்லை. 'திராவிட' என்ற சொல்லே 'சூத்திர' பாசை என்று இழித்துக் கூறப்பட்ட தமிழை முதன் முதலில் பலுக்கத் தெரியாமல் (உச்சரிப்பில்) திரித்துச் சொல்லப்பட்ட தமிழின் மற்றொரு பெயர் ( பாவணர் கூற்றுப்படி தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட). பின்னாளில் தமிழிலிருந்து திரிந்து போன மொழிகளே கன்னடம், தெலுங்கு, துளு மற்றும் மலையாளம். இவை பேசப்படும் நிலப்பரப்புகளை நாம் இன்னாளில் திராவிட நிலங்கள் என்று புதிதாக அடையாளப்படுத்தவில்லை. அவை ஏற்கனவே வடமொழியாளர்களால் அப்படி குறியீடு செய்யப்பட்டவைதான். சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் திராவிட என்ற சொல்லை பார்பனீய அல்லது பிராமன சித்தாந்தங்களுக்கு எதிராக பயன்படுத்தி அந்த சொல்லை வெளிக் கொணர்ந்தவர்
அயோத்திதாச பண்டிதர். அதன் பிறகே பெரியாரும் அதே சொல்லை திராவிட இயக்கம் என்ற பெயருக்கு பயன்படுத்திக் கொண்டார்.

எதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிய கொடுமைகள் நடப்பதாக பெரியார் நினைத்திருந்தால் 'தமிழர் இயக்கம்' என்று கூட வைத்திருந்திருப்பார். அவர் கேரளா வைக்கம் வரை சென்று போராடி இருப்பதை நினைவு கூர்ந்து பார்க்கையில் ஒட்டு மொத்த திராவிட நிலப்பரப்பும் சாதிய கொடுமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்று பரந்த நோக்கில் 'திராவிடர் இயக்கம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். பெரியார் தம் இயக்கம் வலுப்பெற்றிருந்தாலும் அதை அரசியல் கட்சியாக்கி நிறுவனப்படுத்த பெரியார் நினைத்தவர் அல்ல. இந்நாளில் திராவிட கட்சிகள் கொள்கைகளை மறந்து 'தூய அரசியல்' செய்து கொண்டிருப்பதை பார்க்கையில் பெரியாரின் முன்னறிதலால்(தீர்க தரிசனம்) உணர்ந்திருந்து, திராவிட இயக்கம் அரசியல் கட்சியாக வளர்ந்தால் அதனால் சமரசங்கள் ஏற்பட்டு கொள்கைகள் திரியும் என்று நன்கு உணர்ந்திருந்தார்.

பெரியார் சுதந்திர நாளை துக்க தினமாக அறிவித்ததற்கு காரணமே ஆட்சி அதிகாரம் என்பது ஆதிக்க சக்திகளின் கைகளில் வீழ்ந்து மீண்டும் இந்திய பழமை வாதத்தைத் தாங்கிப் பிடித்து, மூவர்ண கொடி என்பது நான்கு வருண கொடியாகவே ஆகிவிடும் என்று நம்பியதால் தான். அதையே தான் மகாத்மா காந்தி வேறு வடிவில் வலியுறுத்தினார். அதாவது சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். பெரியார் சொன்னதும் சரி, மகாத்மா சொன்னதும் சரி இரண்டுமே ஆதிக்க சக்திகளின் கையில் மீண்டும் இந்தியா விழுந்துவிடும் என்று நன்கு உணர்ந்தாதால் ஏற்பட்ட மாற்றுச் சிந்தனைகள். அண்ணாதுரை போன்றவர்கள் சுதந்திர தினம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் குறுதிக்கு கிடைத்த பலன் என்றும் அந்த சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தது தவறு என்று போர் கொடி தூக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். திராவிட கட்சிகளின் உதயம் என்பது சுதந்திரம் அடைந்ததை குறித்த வெளிப்படையான கருத்துக்களால் பெரியாருக்கும் அவரது பற்றாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவான இயக்கம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவாக்கி முதல்வராக அமர்ந்த அண்ணாதுரை அவர்களும் அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கி தாம் பெரியாரின் பாசறையை சேர்ந்தவர் என்று பெரியாருக்கே புரியவைத்தார் என்பது பெரியார் திரைப்படத்திலும் பதிவாகி இருக்கிறது.

பெரியாரின் தமிழ்பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தகாலத்தில் தமிழ் முற்றிலும் சிதைந்ததாகவே இருந்தது. அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது. திருக்குறளுக்கு கொடுக்கப்பட்ட திரிக்கப்பட்ட விளக்கங்கள் போன்றே சிலப்பதிக்காரகதைகளின் உட்பொருளை சிதைத்து கற்பை முன்னிறுத்தி அவை உயர்வாக பேசப்பட்டது. இதையெல்லாம் பார்த்தே பெரியார் பழமைவாதம் பேசும் மொழியாக தமிழை நினைத்து தமிழ் 'காட்டு மிராண்டி பாசை' என்றார். பின்னாளில் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றவர் தமிழில் இருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ் சொற்களை சங்க இலக்கியங்களில் இருந்து அறிமுகப்படுத்தினர். பக்தி பாடல்கள் எழுதினாலும் பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களைத்தான் அவற்றில் பயன்படுத்துகிறோம் :) பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.

'மெல்லத் தமிழினி சாகும்' என்று சொல்லில் தமிழ் வீழவேண்டும் என்ற ஆசையில் தான் பாரதி தமிழுக்கு சாபம் கொடுத்தான் என்று நாமாகவே நினைத்து கேள்வி எழுப்பி பாரதியின் தமிழ்பற்றை குறைபட்டுக் கொள்ளவது எவ்வளவு நம் அறியாமையை காட்டுமோ, அது போல் தான் தந்தை பெரியாரின் தமிழ் குறித்த பேச்சுக்கள் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்.

30 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

GK,

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.

அருமை.

உங்கள் கருத்தை முழுவதும் வழிமொழிகிறேன்.

அதே போன்று திராவிடன் என்ற உணர்வுதான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட வைத்தது, வைக்கிறது. அதை முன் நிறுத்தித்தான் பெருந்தலைவர்கள் பெரியாரும் அண்ணாவும் நம் இனத்தை எழுச்சியடைச் செய்தனர்.

பதிவுக்கு மிக்க நன்றி!

அரை பிளேடு சொன்னது…

அன்புள்ள கோவியாருக்கு...

//தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட//

தமிழ்தான் திராவிட மொழிகள் யாவுக்கும் மூலமும் முதலுமான மொழி என்பதும்.. "திராவிட" என் சொல்லே தமிழ் என்பதிலிருந்து தோன்றியது என்பதுமான தங்கள் விளக்கங்கள் அருமை.

தூங்குபவனை தட்டித்தான் எழுப்பமுடியும். பெரியாரின் காலகட்டம் வெறுமனே சுட்டி காட்டுவதால் பலனில்லாத காலகட்டம். அதனால் பெரியார் தமிழனை அவன் தமிழ்த் தலையில் குட்டியே உணர்வு கொள்ளச் செய்தார்.

பெரியாரின் கருத்துக்களை அக்கருத்துக்களின் பின்னணியை அறியாது படித்தலினால் சற்று குழப்பம் வரலாம். பெரியார் விரிவாக படிக்கப்பட வேண்டும் என்ற சிறு முயற்சியாகவே எனது பதிவு இடப்பட்டது.

தமிழர் தம் இன உணர்வும் மொழியுணர்வும் கொள்ளுதல் அவசியமாகும்.

விளக்கங்களுக்கு நன்றி.

அன்பன்
அரைபிளேடு.

தமிழ் சொன்னது…

எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை
எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பார்க்கவேண்டும்

பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள்
பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது
போன்று அக்கரைகளினால் எழுந்த
கோபமேயன்றி அது துவேசம் இல்லை.

உண்மைதான்.

விளக்கங்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அரை பிளேடு said...
அன்புள்ள கோவியாருக்கு...
தமிழ்தான் திராவிட மொழிகள் யாவுக்கும் மூலமும் முதலுமான மொழி என்பதும்.. "திராவிட" என் சொல்லே தமிழ் என்பதிலிருந்து தோன்றியது என்பதுமான தங்கள் விளக்கங்கள் அருமை.
............

//

நண்பர் அரைபிளேடு,

அங்கேயே பின்னூட்டமாக இடலாம் என்று எழுதினேன். நீண்ட விளக்கமாக போய்விட்டதால் தனி இடுகையாக இட்டேன். அதுஒரு மாற்றுக்கருத்து மாட்டுமே , உங்கள் கட்டுரைக்கான எதிர்மறை விமர்சனம் இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் மறுமொழி காட்டியது.

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !

மிக்க நன்றி !

ஜெகதீசன் சொன்னது…

விளக்கங்களுக்கு நன்றி GK.

Thamizhan சொன்னது…

அன்பு நண்பரீர்,
நன்றாகப் புரியும்படி விளக்கமாகப் பதில் கொடுத்துள்ளீர்.பாராட்டுக்கள்.
தனிப் பதிவாகப் போட்டது சிறப்பு.
சி்லர் தெரியாமல் கேட்கிறார்கள்.
சில்ர் திரித்துக் குழ்ப்பவே கேட்கிறார்கள்.
அனைவர்க்கும் சரியான பதில்.

╬அதி. அழகு╬ சொன்னது…

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்பது பாரதியின் சொற்களல்ல. அவை, லயோலா கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறியவை. அப்பேராசிரியரைப் "பேதை" என்று பாரதி பாடினான்:

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதியகலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் -இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

திருத்திக் கொள்க!

கோவி.கண்ணன் சொன்னது…

அழகு,
நானும் 'மெல்லத் தமிழினி சாகும்' என்பதை பாரதியின் வசை அல்லது சாபம் என்று சொல்லவில்லை. சிலர் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு எப்படியெல்லாம் திரிக்க முயல்வர் என்று காட்டுவதற்கே சொல்லி இருக்கிறேன்.

பாரதியாரின் பாடலுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

Collapse comments

// சிவபாலன் said...
GK,

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.

அருமை.

உங்கள் கருத்தை முழுவதும் வழிமொழிகிறேன்.

அதே போன்று திராவிடன் என்ற உணர்வுதான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட வைத்தது, வைக்கிறது. அதை முன் நிறுத்தித்தான் பெருந்தலைவர்கள் பெரியாரும் அண்ணாவும் நம் இனத்தை எழுச்சியடைச் செய்தனர்.

பதிவுக்கு மிக்க நன்றி!
//

சிபா,
பாராட்டிற்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிபா.

கோவி.கண்ணன் சொன்னது…

// திகழ்மிளிர் said...
எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை
எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பார்க்கவேண்டும்

பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள்
பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது
போன்று அக்கரைகளினால் எழுந்த
கோபமேயன்றி அது துவேசம் இல்லை.

உண்மைதான்.

விளக்கங்களுக்கு நன்றி.
//

திகழ்மிளிர்,
ஆதரவு கருத்துக்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
விளக்கங்களுக்கு நன்றி GK.
//

ஜெகதீசன்,

படித்து மகிழ்ந்ததற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
அன்பு நண்பரீர்,
நன்றாகப் புரியும்படி விளக்கமாகப் பதில் கொடுத்துள்ளீர்.பாராட்டுக்கள்.
தனிப் பதிவாகப் போட்டது சிறப்பு.
சி்லர் தெரியாமல் கேட்கிறார்கள்.
சில்ர் திரித்துக் குழ்ப்பவே கேட்கிறார்கள்.
அனைவர்க்கும் சரியான பதில்.

11:24 AM, September 10, 2007
//

தமிழன்,

"சி்லர் தெரியாமல் கேட்கிறார்கள்.
சில்ர் திரித்துக் குழ்ப்பவே கேட்கிறார்கள்" என்ற வேறு எங்கோயாவது தாங்கள் கண்டால் இந்த சுட்டியையையோ அல்லது முழுப்ப்பதிவையோ எடுத்து அங்கு ஒட்டுங்கள்.
:)

பாராட்டுக்கு நன்றி !

லக்கிலுக் சொன்னது…

இருள் என்னும் அரக்கனை விரட்ட சமயங்களில் சூரியன் தேவையில்லை. சிறு மெழுகுவர்த்தி போதும். பின்னூட்டமாக போட நினைத்தது என்று கூறி இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள். சிறு பதிவென்றாலும் வீரியம் அதிகமாக இருக்கிறது.

அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது.

சரியான நேரத்தில் சரியான பதிவிட்ட கோவியாருக்கு நன்றி!!!

கோவி.கண்ணன் சொன்னது…

// லக்கிலுக் said...
இருள் என்னும் அரக்கனை விரட்ட சமயங்களில் சூரியன் தேவையில்லை. சிறு மெழுகுவர்த்தி போதும். பின்னூட்டமாக போட நினைத்தது என்று கூறி இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள். சிறு பதிவென்றாலும் வீரியம் அதிகமாக இருக்கிறது.

அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது.

சரியான நேரத்தில் சரியான பதிவிட்ட கோவியாருக்கு நன்றி!!!
//

லக்கி,

பதிவை பாராட்டியதற்கு நன்றி,

நண்பர் அரைபிளேடு அவர்களின் பதிவிலோ, இங்கு அவர் இட்டிருக்கும் பின்னூட்டங்களோ, பெரியாரை குறைசொல்கிறார் என்கிற நோக்கம் இருப்பதாக நான் அறியவில்லை.

அவரே தாம் பெரியாரின் கருத்துக்களை போற்றுகிறேன் என்று வெளிப்படையாக எழுதி இருப்பதைத் தொடர்ந்து, அதை உள்நோக்கமாக பார்க்கத் தேவையில்லை என்று எனது கருத்தைக் கூறிக் கொள்கிறேன்.

மாசிலா சொன்னது…

அழகான விளக்கம்.

நன்றி கோவி.கண்ணன்.

லக்கிலுக் சொன்னது…

//பெரியாரை குறைசொல்கிறார் என்கிற நோக்கம் இருப்பதாக நான் அறியவில்லை.//

பெரியாரின் textஐ edit செய்து துக்ளக் சோ போடுவதற்கும், அரைபிளேடு போடுவதற்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

பெரியாரின் textஐ edit செய்து துக்ளக் சோ போடுவதற்கும், அரைபிளேடு போடுவதற்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை கோவியாரே. //

லக்கி,

பங்காளி சண்டையில் நான் தலையை கொடுக்க விரும்பவில்லை.
:))

ஜமாலன் சொன்னது…

தற்பொழுதுதான் இணையத்தை திறக்க நேரம் கிட்டியது. உங்கள் பதிவு எளிமையாகவும் கச்சிதமாகவும் தெளிவுறவும் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது. தமிழின் வடமொழி கலப்பிற்கு மணிப்பிரவாளம் என்று கூறுவதாக நினைவு. மலையாளம்கூட இந்த மணிப்பரவாளத்தின் உச்ச வடிவம்தான். தமிழ்+வடமொழி = மலையாளம் என்பதுபோல்தான அவர்களது மொழி இருக்கிறது. ஆய்வு அடிப்படை கருத்த அல்ல இது. உங்கள் பதிவிற்கும் பெரியர் பற்றிய எனது பதிவிற்கு வந்து பின்னோட்டம் இட்டதற்கும் நன்றி.

thiru சொன்னது…

கோவி,

அறியாதவர்களுக்கு புரிய வைக்கும் விளக்கமான பதிவு. பாராட்டுக்கள்

அன்புடன்
திரு

அரை பிளேடு சொன்னது…

அன்புள்ள லக்கி...

//அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது//

என்னுடைய முகமூடி கிழிந்துவிட்டது என்று தாங்கள் சொல்ல நினைத்தால் என் பதிவிலேயே சொல்லியிருக்கலாம்.

என்றேனும் தங்களை நேரில் சந்திப்பேன். அப்போது எனது மார்பில் முப்புரி நூல் இருக்கின்றதா என்பதை தாங்களே பரிசோதித்து அறியலாம். (இவ்வாறு சொல்ல நேர்ந்த இழிநிலைக்கு வெட்கப்படுகிறேன்).

கோவியாருக்கு என் நன்றியை மற்றுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பன்
அரைபிளேடு.

வவ்வால் சொன்னது…

கோவி,

மீண்டும் ... மீண்டும் சிரிப்பு!...

அரைபிளேடு உங்கள் நண்பர் குழுவில் இல்லையா, அல்லது அவர் பெண் இல்லையா? ஏன் எனில் நீங்கள் எதிர்வினை ஆற்றி இருக்கிறீர்கள், அதனால் தான் கேட்டேன், நண்பர்களோ அல்லது பெண்களோ என்ன சொன்னாலும் ஏற்றுகொள்வீர்களே எனவே தான் கேட்டேன்!

காரணம் உங்களின் ஒரு பதிவில் , அபத்தமாக ஒருவர் கூறிய போதும் எவ்வித உணர்வும் அற்று இருந்தீர்கள்(திராவிடர்கள மட்டும் உறவில் மணம் புரிவார்கள், பிராமணர்களும் திராவிடர்கள் என்று) , நான் வந்து தான் அதை சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. இந்த அரை பிளேடு யார் என்று எனக்கும் தெரியவில்லை, பாவம் அவர் உங்களுக்கும் நண்பர் இல்லைப்போல! :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

மீண்டும் ... மீண்டும் சிரிப்பு!...

அரைபிளேடு உங்கள் நண்பர் குழுவில் இல்லையா, அல்லது அவர் பெண் இல்லையா? ஏன் எனில் நீங்கள் எதிர்வினை ஆற்றி இருக்கிறீர்கள், அதனால் தான் கேட்டேன், நண்பர்களோ அல்லது பெண்களோ என்ன சொன்னாலும் ஏற்றுகொள்வீர்களே எனவே தான் கேட்டேன்!

காரணம் உங்களின் ஒரு பதிவில் , அபத்தமாக ஒருவர் கூறிய போதும் எவ்வித உணர்வும் அற்று இருந்தீர்கள்(திராவிடர்கள மட்டும் உறவில் மணம் புரிவார்கள், பிராமணர்களும் திராவிடர்கள் என்று) , நான் வந்து தான் அதை சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. இந்த அரை பிளேடு யார் என்று எனக்கும் தெரியவில்லை, பாவம் அவர் உங்களுக்கும் நண்பர் இல்லைப்போல! :-))
//

சத்தியமாக புரியலை.

என்பதிவில் எதிர்கருத்துச் சொன்னாலும். என்பதிவை நேரம் செலவு செய்து படித்துவிட்டுதானே விமர்சிக்கிறார்கள் என்று நினைப்பதால் அவற்றை தனிமனித தாக்குதலாகவோ, கருத்தை சிதைப்பதற்க்காக மட்டுமே வருகிறார்கள் என்று நான் நினைப்பதில்லை. எல்லோரும் தமிழில் தட்டச்சும் தமிழர்கள். சிலருக்கு உணர்வு குறைவாக இருக்கலாம். மாற்றுச் சிந்தனைகள் இருக்கலாம். ஆனாலும் எவரும் நம் தனிப்பட்ட எதிரி இல்லையே.
:)))

வவ்வால் சொன்னது…

கோவி,

என்னை அதிகம் சிரிக்க வைக்கிறீர்கள்,

//எல்லோரும் தமிழில் தட்டச்சும் தமிழர்கள். சிலருக்கு உணர்வு குறைவாக இருக்கலாம். மாற்றுச் சிந்தனைகள் இருக்கலாம். ஆனாலும் எவரும் நம் தனிப்பட்ட எதிரி இல்லையே.
:)))//

அப்போ அரைபிளேடு உட்பட எல்லோரும் தமிழில் தட்டச்சு செய்யும் தமிழர்கள் என சும்மா இருக்காமல் , இதற்கு மட்டும் ஏன் ஒரு தனிப்பதிவு, அல்லது உங்கள் பதிவை வந்து படிக்கும் ஒருவரின் பின்னூட்டத்தை இழக்க விரும்பாமல் அப்போது அப்படி இருந்தீர்களா?ஒரு சிறு சலனம் கூட காட்டாமல்!

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஒருவரின் கருத்துக்கு மறுப்பு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் தனிப்பட்ட எதிரியாக இருக்க வேண்டுமா, எனக்கு அவர்களோ, யாரோ ,ஏன் யாரும் தனிப்பட்ட எதிரிகள் எல்லாம் கிடையாது, கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிலுரைப்பேன். நீங்கள் எதிர் கருத்து கூறப்பிரியப்படவில்லை என்பதால் , எதிர் கருத்து கூறுபவர்களுக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட விரோதம் காரணமாக கூறுகிறார்கள் என சாயம் பூசுகிறீர்கள்!


உங்களை இது கூட கேட்டு இருக்கமாட்டேன், அரைப்பிளேடுக்கு மட்டும் காட்டமாக மறுப்பு கூற முடியும் எனில் அதற்க்கும் ஏன் கூறவில்லை என்ற பொதுவான அடிப்படையில் மட்டுமே இதைக்கேட்டேன்.

ஒரு வேளை நீங்கள் சந்தர்ப்ப சூழல் பொறுத்து அரசியல்வாதிகளைப்போல தான் எதிர் வினையாற்றுபவர் எனில், நான் எதுவும் கேட்கவில்லை, தொடரட்டும் உங்கள் அரும்பணி! :-))

குமரன் (Kumaran) சொன்னது…

வவ்வால். இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டாக இருக்கிறது? அந்தப் பெண் சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றே நான் இன்னும் நினைக்கிறேன். அவர் 'திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில்' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். நீங்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவரே வந்து விளக்கிய பின்பும் ஏற்றுக் கொள்ளாமல் விவாதம் செய்து கொண்டிருந்தீர்கள். அதே போல் கோவி.கண்ணனும் புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்று இங்கு வந்து முரண்டு பிடிக்கிறீர்கள். ஏன் அப்படி?

அவர் இந்து என்பதை மறுக்க வில்லை. இந்துக்கள் என்று சொல்வதை விட திராவிடக் கலாசாரம் அதாவது தெற்கில் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார். அவர் பிராமணர்களைப் பற்றியும் பேசவில்லை. நீங்களே அது இந்துகள் இல்லை என்று மறுப்பதாகவும் தெற்கில் இருப்பவர்கள் திராவிடர்கள்; அவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்வதாகவும் பொருள் எடுத்துக் கொண்டீர்கள். இந்துக்களில் திராவிடர்களும் (அதாவது தெற்கில் வாழ்பவர்களும்) அடக்கம்; ஆனால் இந்த திருமண முறை இந்துகளில் திராவிடர் அல்லாதவர்களிடையே இல்லை என்று அவர் சொன்னதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? அது தான் என் கண்களில் தெரிகிறது. உங்கள் பார்வையில் வேறுபட்டு தெரிகிறது. அதே போல் கோவி.கண்ணனுக்கும் தெரியலாம்; தெரியாமல் இருக்கலாம். ஆனால் அப்படித் தான் அவர் பார்க்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறீர்களே ஏன்?

இதில் நண்பர்கள் குழு, பெண்கள் என்று வேறு சேர்த்துக் கொள்கிறீர்கள். நட்பு என்று பார்க்காமல் தன் கருத்தை வெளிப்படையாக கோவி.கண்ணன் எப்படி சொல்வார் என்பதை என் தனிப்பட்ட அனுபவத்தில் அறிந்தவன் நான். கருத்து வேற்றுமைகளால் நட்பு-வெறுப்பு உணர்வுகள் எனக்கு அவரிடம் உண்டு என்பதை அவர் அறிவார். என் நட்பிற்காகவோ வேறெவர் நட்பிற்காகவோ தன் கருத்தை அவர் சொல்லாமல் மறைத்தது இல்லை. அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

நண்பர் வவ்வால்,

அனானிகள் தவிர்த்து ஒருவர் ஒருகருத்து கூறுகிறார், நாம் வேறுவிதமாக புரிந்து கொண்டு எதிர்கருத்து சொல்கிறோம், பின்பு அவரே வந்த தாம் அந்த பொருளில் சொல்லவில்லை என்று சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்வதுதானே முறை. இல்லை இல்லை நீர் உள்நோக்கத்துடன் தான் சொன்னீர் என்று சொல்வதற்கு நாம் அவர்களின் மனதை அறிந்து இருக்கிறோமா ?

நீங்களும் இங்கே குற்றச்சாற்றாகத்தான் சொல்வதாகக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியும். இதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் ? யாரும் படிக்கவே வரமாட்டாங்க... மாற்றுக் கருத்து என்ன வென்றே தெரியாமல் போய்விடும்.

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள். எதிர்கருத்தாக நாம் சொல்ல வருவது காட்டமாக இருக்கவேண்டும். அல்லது உன்முகமூடியை கிழிக்கிறேன் என்று சவால் விடனுமா ?

நான் வரலைசாமி ஆட்டத்துக்கு... :)

முடிந்த அளவுக்கு கண்ணியமாக மறுமொழி எழுதுவதை பண்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று என்னளவில் முயல்கிறேன். அதற்காக மற்றவர்கள் கண்ணியமற்றவர்கள் என்று சொல்வதாக பொருள் கொண்டால் அது என்குறையும் அல்ல. நான் என்னைப்பற்றித்தானே கூற முடியும்.

வவ்வால் சொன்னது…

குமரன்,

பதட்டம் வேண்டாம் , நீங்கள் முழுதாகப்படித்தீர்க்ளா எனத்தெரியவில்லை,பிராமணர்கள் பற்றி எதுவும் கூறவில்லை என்ரு எப்படி சொல்கிறீர்கள்,
அவர்கள் விளக்கிய பிறகும் நான் வாதம் செய்கிறேன் என்கிறீர்கள் , நான் எதற்கு சரியாக சொல்லி இருந்தால் வீண் வாதம் செய்யப்போகிறேன், அவர்கள் சொன்னதை மீண்டும் ஒரு முறைப்பாருங்கள்...

//வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் "பிராமணர்கள்," கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன். மற்றப்படி நீங்கள் இப்பொழுது அனுப்பிய பின்னுட்டம் பார்த்தேன். உங்கள் கருத்து உங்களுக்கு!//

நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ... இந்துக்கள் என்று சொல்ல வேண்டாம் ,திராவிடர்கள் என்று சொல்லுங்கள் என்றவர் பிராமணர்களும் உறவில் திருமணம் செய்கிறார்கள் என்கிறார், இது தான் உங்கள் பார்வையில் சரியான விளக்கம் அதை நான் புரிந்துகொள்ளாமல் வாதம் செய்கிறேன்.

ஒருவர் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்ற முன் தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை!

குமரன் , நான் கோவி மீது அபாண்டம் சொல்வதாக சொல்கிறீர்கள் அப்படி அல்ல அவரைப்பற்றி அறிந்ததால் தான் ஏன் அவரால் கூட எதுவும் சொல்லவியலவில்லை என்ற ஆதங்கத்தில் அதனைக்கேட்டேன்.

சரி நான் பேசுவது மட்டும் இப்போதும் அபாண்டமாகத்தான் தெரிகிறதா? அப்படி எனில் அது என் தவறு அல்ல!

வவ்வால் சொன்னது…

கோவி,
இது பற்றி குமரன் அவர்களுக்கு சொன்னதில் உங்களுக்கு தேவையான விளக்கமும் இருக்கிறது.

திராவிடர்களின் தலைவராக கருதப்படும் ஒருவர் குறித்து ஒரு கருத்திற்கு மாற்றுக்கருத்தாகப்பதிவிடும் போது , உங்கள் பதிவில் வரும் ஒரு கருத்துப்பிழைக்கு கூட மறுப்பு சொல்லவில்லையே என்று சுட்டிக்காட்டினேன். அவ்வளவு தான்!

இதில் இன்னும் ஒரு காமெடி , அரைப்பிளேடு என்பவரே அது பெரியாருக்கு எதிரானது அல்ல, திருக்குறளை மலம் என்று ஒருவர் பெரியார் சொன்னதாக பதிவு போட்டார், அதனால் தான் அப்படி பதிவிட்டேன் என விளக்க்ம் கூட அளித்துள்ளார், இப்பொழுது உங்களுக்கு அவ்விளக்கம் போதுமானதாக இல்லை போலும்!

நான் யார் சொன்னார்கள் என்று கணக்கில் கொள்ளாமல் , சொன்னது என்ன என மட்டும் பார்ப்பவன் அதனால் , தவறெனில் சுட்டிக்காட்ட தயங்கமாட்டேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால் அவர்களே,

புனைப்பெயருக்கு ஏற்றார் போல் அதையே ஏன் பிடித்து தொங்குகிறீர்கள்.
:)))

நீங்கள் சொல்வதை மட்டும் தவறாக புரிந்துக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறீர்களா என்ன ? என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு என்னை கடிந்து கொண்டீர்கள் என நண்பர் குமரன், எனது கருத்துக்களை அறிந்தவர் என்பதால் இங்கு குறிப்பிட்டார்.

இந்த பதிவு அரைபிளேடு அவர்களுக்கும், அது போன்றே பெரியார் பற்றி கருதியவர்களுக்கும் மறுமொழியாக எழுதியது. அரைபிளேடு 'தமிழர் தம் இன உணர்வும் மொழியுணர்வும் கொள்ளுதல் அவசியமாகும்' என்று கருத்துச் சொல்லி சென்றிருக்கார்.

சரி இந்த விவகாரத்தை இத்தோடு விடுவோம். :))

நண்பர் குமரன் எழுதிய 'திராவிட நாடும் தமிழ் நாடும்' http://koodal1.blogspot.com/2007/09/blog-post_10.html பதிவுக்கு வாங்க.

:)))))

வவ்வால் சொன்னது…

கோவி...

தலைக்கீழாகவே தொங்கிவிட்டுப்போகிறேன். சும்மா கைல ஒரு வலைப்பதிவு என்ற கருவி இருக்குனு எதாவது எழுதும் மக்கள் தான் அதிகம் என்பதை புரிந்துக்கொண்டேன், இனிமே அங்க வேற வந்து நான் என்ன செய்யப்போகிறேன்.

சரியாக எழுதினாலே இங்கே பெரும் மாற்றம் நிகழாது என்னும் போது தப்பா எழுதி இருந்தா மட்டும் மாறிடுமா? நான் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. தொடருங்கள். எனக்கும் தலைகீழாக தொங்கும் வேலை இருக்கிறது.அவை அறிந்து பேச வேண்டும் என்று ஒரு திருக்குறள் உண்டு அதன் பொருள் எனக்கு இப்போது தெரிந்து விட்டது! :-))

நன்றி! வணக்கம்!

கோவி.கண்ணன் சொன்னது…

நண்பர் வவ்வால,

ஒருவர் ஒரு கட்டுரை எழுதும் போது அதற்கு வரும் எதிர்மறை விமர்சனங்களுக்கு முறையாக பதில் சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் எழுதுவது வீன் என்பதை நானும் அறிவேன்.

ஆனால் இதில் உணர்ச்சிவசப்படவேண்டும், ஒரே மறுமொழியில் எதிர்த்து மறுமொழி எழுதியவர் அதன் பிறகு இங்கு எட்டியே பார்க்கக் கூடாது என்றோ, தாம் சொல்லுவது சரி என்றோ எவரும் சொல்லவில்லை. தவறான புரிந்துணர்வு என்று மறுபடியும் வந்துவிளக்கச் சென்றார்கள்.

//சும்மா கைல ஒரு வலைப்பதிவு என்ற கருவி இருக்குனு எதாவது எழுதும் மக்கள் தான் அதிகம் என்பதை புரிந்துக்கொண்டேன்//

மாற்றம் நிகழுமா ? நிகழாதா ? என்ற எதிர்ப்பார்த்து எவருமே கருத்துக்களைச் சொல்ல முடியாது. நமது கருத்துக்களை பதிய வைக்கிறோம் என்ற அளவில் தான் நான் எழுதுகிறேன். அவை சரியென்று நினைத்து மாற்றம் நடந்தால் நல்லதுதான். ஆனால் விதையை போடாமல் பலன் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்று எதிர்ப்பார்க்க முடியாதே.

நான் பதிவோ, மறுமொழியோ, பின்னூட்டமோ எழுதினால் அதில் அறிவுரை சொல்லவில்லை தானே என்று நன்கு சோதித்திவிட்டே எழுதுகிறேன். ஏனென்றால் எவரும் ஒருவருடைய கருத்தை அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டால் அன்றி திணிக்க முடியாது. முடிவுகள் எடுப்பது எப்போதுமே அவரவர் கைகளில் தான்.

விவாதம் வேறு...உணர்ச்சி வசப்படுதல் அல்லது உணர்ச்சி அரசியல் வேறு புரிந்துவைத்துள்ளேன்.

நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்