பின்பற்றுபவர்கள்

5 செப்டம்பர், 2007

பரஸ்பரம் சொறிந்து கொள்ளுதல் !

பதிவை போட்டோமா, பின்னூட்டத்தை வெளியிட்டோமோ முடிந்தால் மறுமொழி இட்டோமோன்னு இருந்தால் பிரச்சனைகளே இல்லை. தோழரே, நண்பரே, தல போன் நம்பர் கொடுங்களே, இமெயில் கொடுங்களேன்னு என்று பரஸ்பரம் முதுகு சொறியப் போய்விட்டால் அப்பறம் கோஷ்டி கானம் ஆகிடும் பொழப்பு. நமது தனித் தன்மையை இழந்துவிடுவோம். இவர் நம்ப நண்பராக இருக்காரே, இந்த கருத்தை பதிவில் போட்டால் தப்பாக நினைத்துவிடுவோரோ, என்றெல்லாம் நினைக்க ஆரம்ம்பித்து சொந்தக் கருத்துக்கு சுயவேலி அமைத்துவிடுவோம்.

அதற்காக நட்பு, சந்திப்பு எல்லாம் தவறு என்று சொல்ல முடியாது, நம் எண்ண ஓட்டத்துடன் ஒத்து இருக்கிறார்கள் என்று ரொம்பவும் நெருங்கக் கூடாது என்றே நினைக்கிறேன். அப்படியும் தன்னையறியாமலேயே நெருங்கிவிட்டதாக நண்பர்களோ, நாமோ நினைத்துவிட்டால் நம்ம சின்டு அல்லது அவர்களது சின்டு யாரோ ஒருவரது கைக்குப் போய்விடும். அப்பறம் அவன் தான் மனிதன் படத்தில் வரும் 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாட்டு தமக்குத்தாமே பாடிக் கொள்ளக் வேண்டியதுதான் :)

வலைப்பதிவர்கள் என்று ஒரு ஒற்றைச் சொல்லில் எல்லோரையும் அடக்கினாலும் அதில் ஒற்றுமை என்பது கருத்தளவில் எந்த இருவருக்கும் வேறுபடவே செய்யும். கருத்துப் பரிமாற்றங்கள் சரிதான். முட்டுக் கொடுத்தல் ? அங்கு தான் நம் கருத்துக்களை புதைக்க தயாராகிவிடுகிறோம். யாருக்காக எழுதுகிறோம் ? என் எழுத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் எவரும் நினைக்கக் கூடாதென்றே நினைக்கிறேன். இருந்தாலும் நெருங்கிவிட்டோம் என்ற நினைப்பில் இதையெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்போ அல்லது ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கேள்விகளோ பொருளற்றது. ஏனென்றால் கால ஓட்டத்தில் நமது கருத்தையே நாம் மறுக்கும் அல்லது
முட்டாள் தனமாக நினைக்கும் சூழல்கள் கூட வளர்ந்திருக்கும்.

கொள்கை என்ற அளவில் குழுக்களாக வளர்ந்தாலும் நாளடைவில் எந்த கொள்கையுமே எதாவது சில பல காரணங்க்களுக்காக தளர்ந்து, கட்டுப்பாடுள்ள அரசியல் கொள்கைக் கூட்டணி கட்சிகள் கூட தத்தம் கொள்கைகளைத் தளர்த்தி தேர்தல் காலத்தில் சமரசம் செய்து கொண்டு சேர்வதோ, அல்லது சமரசம் இன்றி பிரிவதையோ பார்த்துதான் வருகிறோம். நம்மோடு இருப்பவர்கள் என்றுமே நமக்காக நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் என்று நான் நினைத்தால் அது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு, ஒருகாலமும் அவ்வாறு நடக்கவே நடக்காது எல்லாமே அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு அமைவதுதான். இதையெல்லாம் மனதில் கொள்ளாது விருப்பு வெறுப்பு என்று பார்க்கப் போனால் எதிரிக்கு எதிரி நண்பராகவும், நமக்கும் எதிரிக்கும் நண்பராக இருப்பவர் எதிரியாகவும் நினைத்துக் கொள்வோம். இவை குழப்பத்தில் தான் கொண்டு செல்லும் என்றாலும். அதே நிலைகள் நீடிக்கும் என்றெல்லாம் எவருமே அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் சண்டையை விலக்கப் போகிறவனுக்குத்தான் கத்திக் குத்து முதலில் விழுமாம், பிறகு எதிரிகள் ராசியாகி போய்விடுவார்கள்.

எனது அனுபவ முழுமையாக சொல்கிறேன். யாரிடம் வேண்டுமானாலும் நட்பு கொள்ளலாம், கூட்டு பதிவராக கூட இருக்கலாம். ஆனால் இவர்தான் நமக்கு நெருக்கமானவர் என்று நினைத்து முதுகு சொறிய ஆரம்பித்தால் அதன் பிறகு ? என்றாவது ஒரு நாள் எதிரிகளைவிட பரம எதிரியாக பார்க்க ஆரம்பித்தால் ஜீரணிப்பது மிக கடினம். குறிப்பாக எவரும் கேட்டால் இன்றி அறிவுரைகளை சொல்வது சமரசங்களை செய்வது எரிச்சலை தந்திருக்கிறது என்பது பின்புதான் தெரியவரும்.

அளவோடு சொறிந்து தோழமையோடு வாழ்வோம் !

பின்குறிப்பு : டிஸ்கி போடாமல் எழுதிவிட்டுவிட்டால் எதை எதையோ தொடர்பு படுத்தி சொல்லாத கருத்துக்கு அரும் சொற்பொருளெல்லாம் கூட வரும். இது எவரையும் குறி(வை)த்ததல்ல.

அன்புடன்,

கோவி.கண்ணன்


இதே தொடர்பில் முன்பு எழுதியது... சார்பு நிலை - வலை அரசியல் !

20 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

//என்றாவது ஒரு நாள் எதிரிகளைவிட பரம எதிரியாக பார்க்க ஆரம்பித்தால் ஜீரணிப்பது மிக கடினம்.//

நூறு சதவிகிதம் இக்கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

விஜயன் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க கோவி.

எல்லோருக்கும் புரிந்தால் நலம்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

\\சண்டையை விலக்கப் போகிறவனுக்குத்தான் கத்திக் குத்து முதலில் விழுமாம், பிறகு எதிரிகள் ராசியாகி போய்விடுவார்கள்//

:)
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க கோவி. கண்ணன்...

பொதுவா சொல்ற ஜோசியம் மாதிரி இது ஒவ்வொருத்தருக்கும் எதையாவது உணர்த்தும் ...

ஜெகதீசன் சொன்னது…

"நட்பு தப்பு இல்லை. ஆனால் நாம் சொல்வதை/எழுதுவதை எல்லாம் நண்பர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது."
- நான் புரிஞ்சிக்கிட்டது ரைட்டா GK?

SP.VR. SUBBIAH சொன்னது…

///குறிப்பாக எவரும் கேட்டால் இன்றி அறிவுரைகளை சொல்வது சமரசங்களை செய்வது எரிச்சலை தந்திருக்கிறது என்பது பின்புதான் தெரியவரும்.

அளவோடு சொறிந்து தோழமையோடு வாழ்வோம் !////

வழிமொழிகிறேன்
SP.VR.சுப்பையா

கோவி.கண்ணன் சொன்னது…

//நூறு சதவிகிதம் இக்கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

1:56 PM, September 05, 2007
//

லக்கி இதில் எதும் வெளி குத்து இருக்கா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜயன் said...
நல்லா சொல்லியிருக்கீங்க கோவி.

எல்லோருக்கும் புரிந்தால் நலம்.
//

விஜயன்,

நாம ஊதுற சங்கை ஊதிவைப்போம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துலெட்சுமி said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க கோவி. கண்ணன்...

பொதுவா சொல்ற ஜோசியம் மாதிரி இது ஒவ்வொருத்தருக்கும் எதையாவது உணர்த்தும் .//

முத்துலெட்சுமி,
:))
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
"நட்பு தப்பு இல்லை. ஆனால் நாம் சொல்வதை/எழுதுவதை எல்லாம் நண்பர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது."
- நான் புரிஞ்சிக்கிட்டது ரைட்டா GK?

2:55 PM, September 05, 2007
//

சரிதான் ஜெகா,

புதிதாக பதியவருபவர்களுக்கு வலையரசியல் தெரியாமல் சிக்கிக் கொள்வார்கள், எதோ எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன். நீங்க சரியாக புரிந்து கொண்டீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// SP.VR.சுப்பையா said...


வழிமொழிகிறேன்
SP.VR.சுப்பையா //

ஐயா,

எனது நட்சத்திர பதிவுக்கு வந்து ஒரு பின்னூட்டமாவது போடுவிங்க என்று எதிர்பார்த்தேன் :(

இப்பொழுதாவது வந்து இருப்பை உறுதி செய்ததற்கு நன்றி !
:)))

துளசி கோபால் சொன்னது…

அளவோடு சொறிந்து தோழமையோடு வாழ்வோம் !


இது.............

100% சரி.

TBCD சொன்னது…

//*தோழரே, நண்பரே, தல போன் நம்பர் கொடுங்களே, இமெயில் கொடுங்களேன்னு என்று பரஸ்பரம் முதுகு சொறியப் போய்விட்டால் அப்பறம் கோஷ்டி கானம் ஆகிடும் பொழப்பு. நமது தனித் தன்மையை இழந்துவிடுவோம். இவர் நம்ப நண்பராக இருக்காரே, இந்த கருத்தை பதிவில் போட்டால் தப்பாக நினைத்துவிடுவோரோ, என்றெல்லாம் நினைக்க ஆரம்ம்பித்து சொந்தக் கருத்துக்கு சுயவேலி அமைத்துவிடுவோம்.*//

ஒரு முதிர்ந்த நட்பிலே இது இருக்காது...சுயம் என்ற ஒன்று இருந்தால்..நான் நாமகவே இருப்போம்..
இன்புளுயன்ஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது அது மிகச் சிறந்த ஆளுமை என்றால்...

கூட்டமாக இருப்பதில் ஒரு வசதி இருக்கிறது...முதுகு சொறிதல்...அதை தான் நீங்கள் குறிக்கின்றீர்கள்..

சொறிந்து சொறிந்து புண்னான பின்னும்..சொறியும் கூட்டமும் உண்டு...
நட்பு என்பது வேறு...கருத்து என்பது தனிப்பட்டது என்று முதிர்ச்சியுடைய கூட்டமும் உண்டு..

இதில்..நீங்கள்..கூறும்..தனித்து இருக்க வேண்டும் என்றால்..பதிவு மட்டும் போதுமே உங்கள் எண்ணத்தை பதிவு செய்ய...ஏதற்கு ஒரு திரட்டி..அதில் ஒரு பின்னுட்டம்.., அதற்கு ஒரு நன்றி..

தனியாக இருப்பதை விட கூட்டத்திலும் தனித்து இருங்கள்..என்றால்..பொருத்தமாக இருக்கும்...

லக்கிலுக் சொன்னது…

//லக்கி இதில் எதும் வெளி குத்து இருக்கா ?//

எனக்கு கும்மாங்குத்து வாங்கி தரமால் ஓயமாட்டீர்கள் போலிருக்குதே? :-))))

Unknown சொன்னது…

நம் எண்ணத்தை கருத்துகளை துணிவாக எடுத்துச் செ/சொல்லத்தான் தமிழ் வலைத்தளம். நம்மை தமிழ் இணைக்கிறது என்ற காரணத்தினால் நண்பர்களாவோம். என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ அல்லது உங்களுக்கு வலிக்குமென்று என் கருத்தை சொல்லாமல் இருப்பதிலோ அடிப்படையே ஆட்டம் காணுகிறதே. அதனால் எதிர்பார்ப்புகளின்றி நண்பர்களாவோம் - பின்னால் வலிக்கும் என்ற பயமிருக்காது. - நல்ல கருத்துக்கள் ஜிகே.

பிறைநதிபுரத்தான் சொன்னது…

நன்றி கோவி அவர்களே!
வலைப்பதிவாளர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து
நாற்றப்பதிவுகளும்-நச்சுப்பதிவுகளும் குறைந்து தமிழ் மணம் வீச- தங்களின் கருத்துக்கள் நிச்சயம் உதவும்.

தங்களின் இந்தப்பதிவு - இன்னொரு நட்சத்திரப்பதிவு!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அளவோடு சொறிந்து தோழமையோடு வாழ்வோம் !


இது.............

100% சரி.
//

டீச்சர் வழிமொழிந்தால் டபுள் ரைட் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு முதிர்ந்த நட்பிலே இது இருக்காது...சுயம் என்ற ஒன்று இருந்தால்..நான் நாமகவே இருப்போம்..
இன்புளுயன்ஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது அது மிகச் சிறந்த ஆளுமை என்றால்...

கூட்டமாக இருப்பதில் ஒரு வசதி இருக்கிறது...முதுகு சொறிதல்...அதை தான் நீங்கள் குறிக்கின்றீர்கள்..

சொறிந்து சொறிந்து புண்னான பின்னும்..சொறியும் கூட்டமும் உண்டு...
நட்பு என்பது வேறு...கருத்து என்பது தனிப்பட்டது என்று முதிர்ச்சியுடைய கூட்டமும் உண்டு..

இதில்..நீங்கள்..கூறும்..தனித்து இருக்க வேண்டும் என்றால்..பதிவு மட்டும் போதுமே உங்கள் எண்ணத்தை பதிவு செய்ய...ஏதற்கு ஒரு திரட்டி..அதில் ஒரு பின்னுட்டம்.., அதற்கு ஒரு நன்றி..

தனியாக இருப்பதை விட கூட்டத்திலும் தனித்து இருங்கள்..என்றால்..பொருத்தமாக இருக்கும்...//

அரவிந்த் நீங்கள் சொல்வது சரிதான், தனித்தன்மை கூட்டத்துடன் சேர்வதால் தொலைந்துவிடக் கூடாது என்ற கருத்தாக சொல்ல முயன்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

எனக்கு கும்மாங்குத்து வாங்கி தரமால் ஓயமாட்டீர்கள் போலிருக்குதே? :-))))
//

உங்களுக்கா ? பின்னால் ஒரு 'தொண்டர்' படையே வச்சிருக்கிகளே, உங்களுக்கு ஒன்னு என்றால் இலைக்காரன் கூட அம்மாவை தூக்கிப் போட்டுவிட்டு உங்களுக்காக தீ குளிப்பான்.

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
நம் எண்ணத்தை கருத்துகளை துணிவாக எடுத்துச் செ/சொல்லத்தான் தமிழ் வலைத்தளம். நம்மை தமிழ் இணைக்கிறது என்ற காரணத்தினால் நண்பர்களாவோம். என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ அல்லது உங்களுக்கு வலிக்குமென்று என் கருத்தை சொல்லாமல் இருப்பதிலோ அடிப்படையே ஆட்டம் காணுகிறதே. அதனால் எதிர்பார்ப்புகளின்றி நண்பர்களாவோம் - பின்னால் வலிக்கும் என்ற பயமிருக்காது. - நல்ல கருத்துக்கள் ஜிகே.
//

சரிதான் ஐயா,

சில நற்கருத்துகளும், தமிழன் என்ற பொதுச் சொல் ஒன்றிணைக்கிறது, அந்த அளவில் சென்றால் எப்போதும் யாருக்கும் பிணக்குகளே இல்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறைநதிபுரத்தான் said...
நன்றி கோவி அவர்களே!
வலைப்பதிவாளர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து
நாற்றப்பதிவுகளும்-நச்சுப்பதிவுகளும் குறைந்து தமிழ் மணம் வீச- தங்களின் கருத்துக்கள் நிச்சயம் உதவும்.

தங்களின் இந்தப்பதிவு - இன்னொரு நட்சத்திரப்பதிவு!
//

பிறைநதிபுரத்தான் அவர்களே, மிக்க நன்றி !

'பிறைநதிபுரத்தான்' - பெயருக்கான பொருள் விளக்கம் கொடுத்தால்ல் மகிழ்வேன், தெரிந்து கொள்ள ஆவல்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்