பின்பற்றுபவர்கள்

1 செப்டம்பர், 2007

நண்பர்களின் முயற்சி வெற்றி அடையட்டும் !

போலி விவகாரம் - இந்த விவகாரத்தை எட்டி நின்று பார்த்துவருகிறேன். நேற்று நான் இதில் எதையும் தொடர்பு படுத்தாமல் எழுதிய புத்தர் அறிவுரைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அது நண்பர்கள் பாதிப்புக்குள்ளான தன்மை என்று புரியவைத்து. எனவே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் எனது அனைத்து நண்பர்களுக்கு எனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பதால் எழுதுகிறேன்.

பொதுத்தளத்தில் எழுத வந்த போது எவரும் அறிமுகமாகி இருக்கவில்லை. பொதுத் தளத்தில் தமிழில் எழுதுகிறோம் தமிழர்களிடம் பழகுகிறோம் என்று தான் வருகிறோம். இதில் அவரவருக்கு தெரிந்த சமூகம் மற்றும் அரசயலைத்தான் பேசுகிறோம். எதிர்கருத்து தெரிவிக்கவோ அதை மறுப்பதற்கோ உரிமை உண்டு. இதில் தனிப்பட்ட காழ்ப்பு என்பது முன்பின் தெரியாதவர்கள் என்பதால் எள்ளளவும் இருக்க முடியாது, இருக்கக் கூடாது. ஆனால் உள்ளே வந்த போது வலையுலக அரசியலும் அதற்கான எதிர்வினைகளும் அதிர்ச்சி அளித்தன.

போலி பதிவுகள், ஆபாச அர்ச்சனை என்பவை அனைத்தும் பலரைப் போல என்னையும் அதிர்ச்சியடைய வைத்தது. நாம் பாதிக்கப்படுவரை இதில் தலையிடுவது முறையற்றது மட்டுமின்றி பிரச்சனையின் ஆழம் தெரியாது என்பதால் என்னைப் போன்று பலரும் மெளனமாகத்தான் பார்த்து வந்தார்கள். இப்பொழுது பிரச்சனை உச்சம் ஆகி இருப்பது கடந்த மூன்று நாட்களாக நண்பர்கள் பலரும் எழுதுவதை வைத்து நினைக்க முடிகிறது.

போலி என்பவனது பின்னூட்டங்களும் அதில் வெளியாகி உள்ள படங்களும் நண்பர்களின் புகைப்படமாக இருக்கின்றன. பதிவர்களின் புகைப்படம் மட்டுமின்றி, எதிலும் தொடர்பில்லாத அவர்கள் குடும்பத்து உறுப்பினர்களின் படங்களையும் காட்டி வைத்திருக்கிறான். மின் அஞ்சல் முகவரி, வேலை செய்யும் கம்பெணி, தொலை பேசி எண் என அனைத்தையும் வெளியிட்டு, பெண்களை கூட விட்டுவைக்காமல் மிரட்டி அவர்களை உளவியல் ரீதியாக டார்சர் கொடுக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. கிரிடிட் கார்டு மோசடி போன்று பெரிய குற்றங்களைத் தவிர்த்து சைபர் கிரைம் இதையெல்லாம் கண்டு கொள்ளாது என்கிறார்கள் என்ற துணிச்சலில் செய்கிறான் அல்லது குழுவாக செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த போலி குழுமத்திற்கு ஆதரவளிப்பவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன். திருத்திக் கொண்டு தமிழன் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு இந்த ஆபாச முகமூடியை புதைத்துவிட்டு வெளியே வரவேண்டும் என்று பலரைப் போல நானும் விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் போலி அண்ட் குழு மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை வரவேற்கிறேன்.

நண்பர்களின் அம்மாவை நானும் அம்மா என்றே அழைக்கிறேன். நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைப்பதை சிலர் அருவெருப்பாக நினைத்தாலும் நான் தயங்காமல் நண்பர்களின் அப்பாவை அப்பா என்றே அழைத்திருக்கிறேன். நண்பர்களின் தாயைப் பற்றி கேவலமாக எழுதுவது என்பது எனது தாயைச் சொல்வது போன்றதுதான் இவை வன்மையாக கண்டிக்கப் படவேண்டியவை. கண்டிக்கிறேன்.

போலியுடன் தொடர்பு கொண்டு அவனை திருத்த முயற்சிக்கலாம் கை கொடுக்க வருகிறீர்களா ? என்று சில நண்பர்கள் என்னைக் கேட்ட போது. இது கத்தியின் மேல் நடப்பது போன்றது, முகம் தெரியாத ஒருவருடன் தொடர்பு கொள்வது என்பது எதாவது பெரிய விவகாரமாகும் போது உங்களைக் கைக்காட்டி அவன் தப்பித்துக் கொள்வான், எனவே இது பற்றி எல்லாம் சிந்திக்காதீர்கள். முடிந்தால் போலி குருப்புடன் ஆன தொடர்புகளை அறுத்துக் கொள்ளுங்கள் என்று எனது கருத்தைச் சொன்னேன். நாம் ஒருவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்தால் அவரைப் பற்றி நீண்டகாலமாக நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும், அவர்களுடன் அதன் பிறகு மின் அஞ்சலோ, தொலைபேசி தொடர்போ கொண்டிருக்க வேண்டும். அவர்களுடன் பழகினால் நம்மீது குற்றம் சொல்லும் போது நம்மால் அந்த விவாகரத்தை பேசியாவது தீர்த்துக் கொள்ள முடியும். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொண்டால் பாதிக்கப்படுவது அறிமுகம் இல்லாதவன் அல்ல.

எனக்கும் ஜிமெயில் சாட் ரெகொஸ்ட் கேட்டு சில மின் அஞ்சல் வந்த போது அவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொல்லி மின் அஞ்சல் அனுப்பி அவர்கள் விபரம் சொன்னால் தான் அனுமதித்திருக்கிறேன். இருவாரங்களுக்கு முன்பு ஒரு பதிவர் கூட எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பதாக சொல்லி சாட் பண்ண அழைத்தார். சரி என்று சாட்டில் எந்த ஊர் என்ற விபரமெல்லாம் கேட்டேன். அதன் பிறகு மற்ற நண்பர்களைக் கேட்ட போது அவர் தனது பெயரைச் சொல்ல மறுக்கிறார் என்று சொன்னவுடன் போது அந்த நபரை நான் ப்ளாக் செய்தேன். அவர் போலிப் பதிவர் அல்ல, இருந்தாலும் புனைப்பெயரை வைத்து கொண்டிருப்பவர் என்பதைத் தவிர எந்த விபரமும் தெரியவில்லை. இது போல் புனைப்பெயரை வைத்துக் கொண்டு பதிவு எழுதிக் கொண்டிருப்பவர் பலர் இருக்கின்றனர். அவர்களெல்லாம் தாம் நன்கு அறிமுகமான யாரையாவது சந்தித்ததற்கான குறிப்புகளையோ, பதிவர் பட்டரை போன்ற நிகழ்வுகளுக்கு சென்று வந்ததையாவது குறிப்பிட்டு தாம் வெறும் புனைப்பெயரை வைத்துக் கொண்டிருப்பவர் அல்லர் என்று சொன்னால் மட்டுமே மற்ற பதிவர்கள் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதையோ, விபரங்களைப் பகிர்ந்து கொள்வதையோ செய்யலாம். இல்லை என்றால் என்றோ ஒரு நாள் உங்கள் விபரங்கள் வெளியிடப் படும் போது உங்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சம்.

முன்பின் எவருடனும் அறிமுகம் இல்லாமல் வெறும் புனைப்பெயரை வைத்துக் கொண்டு சில பதிவர்கள் பலரையும் தொடர்பு படுத்தி இந்த விவகாரத்தில் குளிர்காய்கிறார்கள் என்ற அளவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், பதிவர்கள் அவற்றை புறம்தள்ளிவிட்டு செல்லலாம். இவை பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே என்பதை பலரும் உணரவேண்டும்.

தம்மை குற்றம் சொல்பவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவை இல்லை என்று கோபப்பட்டு வார்த்தைகளை மட்டும் வீசுவது என்பது மேலும் குழப்பத்தை விளைவித்து, விவாகாரம் முற்றிக் கொண்டே செல்லும். பாதிக்கப்படுபவர்கள் எதோ ஒரு அடிப்படையில் ஒருவரையோ / பலரையோ குற்றம் சொல்ல உரிமை இருக்கிறது. வெளிப்படையாக சொல்கிறேன், பாதிக்கப்பட்ட நண்பர்கள் சிலர், முத்தமிழ்மன்ற மூர்த்தி தான் போலி என்று சொல்கிறார்கள். தம்மீது குற்றம் இல்லையென்று மூர்த்தியோ, அவரை குற்றம் சொல்லும் எனது நண்பர்களோ ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காவல் துறை உதவியை நாடி இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றே விரும்புகிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் திருந்தவேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரத்தில் நுழைந்து பிரசனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து களமிறங்கியிருக்கும் அனைத்து நண்பர்களின் முயற்சி வெற்றி அடைய வேண்டும்.

இந்த பிரச்சனைகள் அடங்கும் போது வழக்கம் போல் பதிவிடுவேன். முடியும் என்ற நம்பிக்கையில்.

போலி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !

அன்புடன்,

கோவி.கண்ணன்

3 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

இந்த விவகாரத்தில் உங்களை சம்பந்தப்படுத்தி வந்த செய்திகள் என்னை வருத்தப் பட வைத்தது (சில பதிவுகளில் அனானிகளின் பின்னூட்டங்கள்).
உங்களை மெயில்/தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என நினைத்தேன். தவறாக நினைத்துக் கொள்வீர்களோ என்பதால் செய்ய வில்லை. இந்த விவகாரங்கள் முடிந்தத்தும் தொலைபேசுகிறேன்.

//
இந்த பிரச்சனைகள் அடங்கும் போது வழக்கம் போல் பதிவிடுவேன்.
//
விரைவில் இந்தப் பிரச்சனை அடங்கும், உங்கள் இடுகைகள் விரைவில் வரும் என நம்புகிறேன்.

தலைப்பில் ஒரு பிழை:
//அடையட்டம்//-- அடையட்டும்

நன்றி

அன்புடன்
ஜெகதீசன்

Unknown சொன்னது…

விடாது கருப்பு நீங்கள் இருக்கும் நாட்டில் இருப்பதாலோ அல்லது அவரைப் பற்றி நீங்கள் முதலில் எழுதியிருந்ததாலோ என்னவோ, உங்களையும் போலிக்கு ஆதரவாளன் போல் எழுதப்பட்டிருந்த ஒரு பதிவை சமீபத்தில் பார்த்தேனே! ஜிகே.

ILA (a) இளா சொன்னது…

நமக்குள் விளையாடும்விளையாட்டே சில நாட்களில் உண்மையாக வரும் எனத் தெரியவில்லை கண்ணா. எல்லாம் நல்லதுக்கே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்