பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2007

பதிவர்கள் இருவருடன் ஒரு மினி சந்திப்பு.

அண்மையில் நான் வலைப்பதிவில் கண்டுகொண்ட சிங்கைப்பதிவர்கள் இருவரை இன்று சந்தித்தேன். ஒருவர் பாரி. அரசு என்கிற அரசு. மற்றவர் ஜெகதீசன். அரசு பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர், ஜெகதீசன் விருதுநகர் மாவட்டத்துக்காரர். இருவருமே இளைஞர்கள். அரசு முப்பதைத் தாண்டாத இளைஞர், ஜெகதீசன் 27 வயது இளைஞர்.

இந்தவாரம் ஏற்கனவே தொலைபேசியில் பேசி வைத்துக் கொண்டபடி நேரடியாக சந்திப்பதற்கு முடிவு செய்து ஜெகதீசனுக்கு தொலை பேசிவிட்டு அரசு அவர்களை நூலகத்தில் காத்திருக்கச் சொன்னேன். எனது நிழல்படத்தை அவர் பார்த்திருந்ததால் உடனடியாக கண்டுகொண்டார். அதன் பிறகு வந்து இணைந்து கொண்ட ஜெகதீசனுக்கும் எங்களை அடையாளம் கண்டுகொண்டதில் சிரமம் இல்லை. பின்பு மூவரும் அரசுவின் இல்லத்திற்கு சென்றோம். ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டதைத் தொடர்ந்து பேச்சு வலைப்பக்கம் பற்றி சென்றது.

அரசு நீண்டகாலமாக பல்வேறு இணைய தமிழ் குழுமங்களில் செயலாற்றியதையும், பல்வேறு சமூகம் அமைப்புகளில் தம் +2 கால வயதுகளில் செயல்பட்டதையும், சில கட்சிகளில் வெளியில் இருந்து களப்பணி ஆற்றியதையும் தெரிவித்தார். சிங்கை வந்த பிறகும் தமிழ் 99 என்ற பட்டறை நடத்துவதற்கு தன்னார்வர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிங்கையில் பழுதில்லாத பழைய கணனிகளை வாங்கி தமிழகத்தில் உள்ள ஏழைப் பிள்ளைக்கள் படிக்கும் கிராம பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கும் சேவையை பகிர்ந்து கொண்டார். பல்வேறு சமூக அரசியல்களையும், கட்சி அரசியலின் வரலாறுகளை நன்கு அறிந்திருக்கிறார் என்பது அவருடன் உரையாடியதில் இருந்து தெரிந்து கொண்டேன். மேலும் சென்ற வருடத்திற்கு முன்பு சொந்தமாக கணனி நிறுவனம் அமைத்து பல கல்லூரிகளுக்கு கணனி மையங்களை அமைத்து கொடுத்ததாகவும். பின்பு ஒரு அரசியல் வாதியால் தமக்கு நட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கைக்கு விமானம் ஏறிவிட்டதாகவும் சொன்னார் :( சொந்த நாட்டையும், பிறந்த மண்ணையும் நேசிப்பதை அவரது பல்வேறு தகவல்களின் ஊடாக கண்டேன். அரசியல் கட்சிகளில் தொண்டர்களால் வெளிப்படையாக நடக்கும் கொள்கை முரண்பாடுகளையும், கட்சிகளுக்குள் நடக்கும் சிலரின் சாதி அரசியலையும் நேரில் பார்த்து அதிர்ந்த விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்பு நேரம் கிடைக்கும் போது அதுபற்றி எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அடுத்து நம் ஜெகதீசன், அதிகம் பேசவில்லை. ஆனால் முகத்தைப் பார்க்கும் போது மாறாப் புன்னகைப் பூக்கும் முகம். துடிப்பான இளைஞர், நாங்கள் இருவர் பேசுவதையும் ஆர்வமாக கேட்டுக் கொண்டு அவ்வப்போது தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இவரும் மக்களை அடிமை படுத்தி வைத்திருக்கும் இறைதத்துவங்களின் மறுப்பாளர் என்று சொன்னார். பல்வேறு வலை அரசியல்கள் பற்றி வியப்பாக கேட்டுக் கொண்டார். என் பங்குக்கு நானும் வலைப்பதிவு எழுதும் போது தனிமனித தாக்குதல் குறித்து எவரும் பின்னூட்டினால் அனுமதிக்காதீர்கள். தனிமனிதரை தாக்கும் வண்ணம் உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்வது போன்று எதையும் எழுதிவிடாதீர்கள் என்று எனது வேண்டுகோளை வைத்தேன். அதைவிட முக்கியம் இளைஞரான உங்களுக்கு தற்பொழுது வேலைப்பார்க்கும் தொழிலில் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்ள இதுவே சரியான வயது எனவே அதற்குத்தான் அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் எனது கருத்தைச் சொன்னேன்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த எங்கள் சந்திப்பில் இருமுறை காஃபி, ஒருமுறை குளிர்பானம், அதனுடன் மிக்சர் என நேரம் கடந்ததே தெரியவில்லை. இரு தம்பிகளை சந்தித்து வந்தது போன்ற உணர்வுடன் வீடுவந்து சேர்ந்தேன்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

14 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
திரு அரசு அவர்கள் தமிழக மாணவர்கள் கணிப்பொறி அறிவுபெற
காட்டும் ஆர்வம் பாராட்டிற்கு உரியது.
தங்களைப்போல் அயல்நாடுகளில்
இருப்பவர்கள் மண்ணையும்
மக்களையும் மறக்காமல் இருங்கள்.
வாழ்த்துகளுடன்,
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

cheena (சீனா) சொன்னது…

நன்று நண்பரே !! இது மாதிரி பதிவர்கள் சந்திப்பு நட்பு முறையில் நடப்பது வலை உலகுக்கு நல்லது. ‍‍ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு பெருக நண்பர் வட்டம் பெருக நல்லதோர் வாய்ப்பு. மற்றவருடனும் தொடர வாழ்த்துகள் ‍

ரவி சொன்னது…

போலிடோண்டு மூர்த்தியை சந்தித்து பதிவு போட்டிருக்கீங்களோன்னு வேகமா வந்தா, இப்படி ஏமாத்திட்டீங்களே...

ஜெகதீசன் சொன்னது…

GK அவர்களே,
நேற்றய சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

மு. இளங்கோவன் ஐயா,
உங்களது பாராட்டையும், வாழ்த்துக்களையும் அரசு ஏற்றுக் கொள்வார். அவர் சார்பில் உங்களுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena said...
நன்று நண்பரே !! இது மாதிரி பதிவர்கள் சந்திப்பு நட்பு முறையில் நடப்பது வலை உலகுக்கு நல்லது. ‍‍ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு பெருக நண்பர் வட்டம் பெருக நல்லதோர் வாய்ப்பு. மற்றவருடனும் தொடர வாழ்த்துகள் ‍
//

சீனா அவர்களே, பதிவர்களை நேரில் சந்திப்பது மகிழ்வானதாகவே இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
போலிடோண்டு மூர்த்தியை சந்தித்து பதிவு போட்டிருக்கீங்களோன்னு வேகமா வந்தா, இப்படி ஏமாத்திட்டீங்களே...
//

நண்பர் செந்தழலாரே,
போலி டோண்டுவை நீங்கள் சந்தித்தால் பதிவு போடுங்கள். மூர்த்தியை நான் சந்தித்தால் பதிவு போடுகிறேன்.

போலி அரசியலுக்கு நான் வரலை
ஆளை விடுங்க சாமி.
:))

லக்கிலுக் சொன்னது…

உருப்படியான சந்திப்பு நடத்தியதற்கு உங்களுக்கும், தோழர் பாரி அரசுக்கும், உடன்பிறப்பு ஜெகதீசனுக்கும் வாழ்த்துக்கள் அண்ணாத்தே!

ஜெகதீசன் சொன்னது…

//லக்கிலுக் said...
உருப்படியான சந்திப்பு நடத்தியதற்கு உங்களுக்கும், தோழர் பாரி அரசுக்கும், உடன்பிறப்பு ஜெகதீசனுக்கும் வாழ்த்துக்கள் அண்ணாத்தே! //

லக்கி,
"உடன்பிறப்பு"- இது என்ன புதுக்கதை? நண்பா, நான் தி.மு.க இல்லை(எந்தக் கட்சியும் இல்லை).

Gurusamy Thangavel சொன்னது…

//இருவருமே இளைஞர்கள். அரசு முப்பதைத் தாண்டாத இளைஞர், ஜெகதீசன் 27 வயது இளைஞர்.//

அப்ப, 29.9 ஆக இருக்குமா? :-))

ரொம்ப நாளாச்சு. எப்படியிருக்கீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//தங்கவேல் said...
அப்ப, 29.9 ஆக இருக்குமா? :-))

ரொம்ப நாளாச்சு. எப்படியிருக்கீங்க?
//

வாங்க புளியமரத்தாரே,

29.9 :))) அவரிடம் தான் கேட்கனும். இன்னும் திருமணம் ஆகலையாம். அதுக்குள்ள வயசை சொல்லப்படாதில்லே...... :)

நல்லா இருக்கேன் ஐயா. உங்கள் இடுகைகளைப் பார்க்க முடியவில்லை. உள்வாங்கிக் கொண்டிருக்கீறீர்களா ? குழந்தைக்கு தமிழ் பெயர் வைத்ததைப் பற்றி எழுத இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

கோவி! நல்லா இருக்கீயளா! ரெம்ப நாளாச்சு ஓய்!
உங்களின் மினி சந்திப்பு அருமை!
பாரி.அரசு அவர்களின் சேவை பாரட்டத்தக்கது!
புதிய பதிவராக விரும்பும் ஜெகதீசனுக்கு வலைப்பதிவின் தற்பொழுதைய நிலவரம் குறித்த தங்களின் எச்சரிக்கை அவருக்கு உதவியாக இருக்கு!

//அதைவிட முக்கியம் இளைஞரான உங்களுக்கு தற்பொழுது வேலைப்பார்க்கும் தொழிலில் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்ள இதுவே சரியான வயது எனவே அதற்குத்தான் அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் எனது கருத்தைச் சொன்னேன்//

உங்களின் கருத்து மிகவும் சிறந்த ஒன்றே!

//போலி அரசியலுக்கு நான் வரலை
ஆளை விடுங்க சாமி.
//

அப்போ,உண்மையான அரசியலுக்கு வரப்போறீங்களா?:)


அன்புடன்...
சரவணன்.

லக்கிலுக் சொன்னது…

//லக்கி,
"உடன்பிறப்பு"- இது என்ன புதுக்கதை? நண்பா, நான் தி.மு.க இல்லை(எந்தக் கட்சியும் இல்லை).//

உடன்பிறப்பு என்றால் சகோதரன் என்று பொருள். "உடன்பிறப்பு" என்ற வார்த்தைக்கான Patent rights அறிவாலயத்திடம் இல்லை.

ஜெகதீசன் சொன்னது…

//
உடன்பிறப்பு என்றால் சகோதரன் என்று பொருள். "உடன்பிறப்பு" என்ற வார்த்தைக்கான Patent rights அறிவாலயத்திடம் இல்லை.
//
அந்த "உடன்பிறப்பு" இல்லைன்னா ok தான் சகோதரா...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்