பின்பற்றுபவர்கள்

22 செப்டம்பர், 2007

டாவின்சி கோட், முகமது நபி படம், இராமர் பாலம் !

இந்தியாவில் எந்த மதவியாதியாக இருந்தாலும் சரி, சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுமதத்தினரை புண்படுத்தி, அதில் வடியும் சீழை முகர்ந்து பார்த்து பரவசப்படுதே 100 ஆண்டுகால வழக்கம். தம்மதத்தை உயர்வாகவும் மாற்றுமதத்தை இழித்துக் கூறவும் இவர்களாகவே கையில் எடுத்துக் கொள்ளுவது மததுவேசம் என்னும் கேவல உத்தி. இந்த கேவலமான உத்தியை கையாளுபவர்கள் பெரும்பாண்மை என்ற போர்வையில் இருந்து கொண்டு வெற்றிகரமாக நடத்திமுடிப்பவர்கள் இந்துமத வெறியர்களே. அத்துவானியை வாஜ்பாயையும் அர்ஜுனன் கிருஷ்ணனான உருவகப் படுத்தியபோது புண்படாத இந்து மனது, பிறப்பின் அடிப்படையில் கிறித்துவ மதம் சேர்ந்தவர் என்பதால் சோனியா காந்தியை அம்பிகையாக காட்டி தேர்த்தல் நேரத்தில் படம் வெளி இட்டிருந்தாலும் அது இந்துக்களின் மனதை புண்படுத்திவிடுமாம். சகல லோகத்திற்குமான மதம் என்றும் எல்லா மதத்திற்கும் இந்து மதமே மூலம் ( அது இல்லை) என்றும் உலகலாவிய வேதாந்தாம் பேசும் வேதவாந்திகள் இந்துமதத்தை புன்படுத்தும் உரிமை மட்டும் (மேற்படி அத்வானி போட்ட கிருஷ்ணன் வேடம்) உரியது என்பது போல் பேசுவது குள்ளநரித்தனமே.

இராமரைக் குறித்து கேள்வி எழுப்பியதாலேயே இந்துக்கள் ( இதில் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் அவர்களிடம் கேட்காமலேயே வலிய இந்துவாக சேர்த்துக் கொண்டது, அவர்களை தவிர்த்து பார்த்தால் இந்துக்கள் இந்திய மக்கள் தொகையில் 30 விழுக்காட்டிற்கும் குறைவே) மனம் புன்பட்டுவிட்டதாகவும், கருணாநிதியின் நாக்கையும், தலையையும் வெட்ட வேண்டுமாம். அடேங்கப்ப்பா, சிறிது காலத்திற்கும் முன்பு எதோ ஒரு ஐரோப்பிய நாடு (டென்மார்க் ?) முகமது நபி பற்றிய வெளியிட்ட கேலி படத்தை இந்தியாவிலும், இணைய தளங்களிலும் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொண்டவை இதே இந்துமத வெறி கும்பல்கள்தான். அதுமட்டுமா ? டாவின்சி கோட் என்று ஏசு கிறித்து திருமணமானவர் என்று சர்சையை கிளப்பிய படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி சொறிந்து கொண்டவையும் இந்த மதவெறியர்களே. புன்படுத்துதல், குஜராத் போன்ற கலவரங்களால் கூறுபோடுதல் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்திவிட்டு கொக்கறிக்கும் இக்கும்பல்களினாலேயே இந்திய மண்ணில் இஸ்லாமின் பெயராலும் தீவிரவாதம் நுழைந்துவிட்டது.

இறை என்றால் அனைத்தும் இறைதான், மதமென்றால் அனைத்தும் இறைவன் ஆக்கியது என்று வேதாந்தம் பேசும் வெறியர்கள், அவற்றை தூற்றம் போது மாற்று மதத்தினர் புன்படுவார்கள், அந்த இரத்தத்தை உறிஞ்சலாம் என்று ஓநாய் போல் செயல்பட்டுவிட்டு, தற்பொழுது இந்துமதத்தை புன்படுத்துவதாக நீலிகண்ணீர் வட்டிப்பதும், மதவெறியை தூண்டி ரவுடி இசத்தை வளர்பதையும் பார்த்து இந்தியர்கள் என்ன உலக நாடுகளே இந்துமதம் ஒரு காட்டுமிராண்டி மதம் என்று நினைப்பதற்கான வேள்விகளை வளர்த்து இருக்கின்றன. மதத்தை புண்படுத்தினால் நாக்கையும் தலையையும் வெட்ட வேண்டுமென்றால் இந்தியாவில் மதவெறியன் எவனுக்குமே தலையோ நாக்கோ இல்லாமல் என்றோ 'முண்டம்' ஆகி இருப்பார்கள் ஏனென்றால் இவர்கள் மாற்று மததினர் மீது செய்வதும் அதே ஈனத் தனத்தைத்தான்.


நானும் இந்துதான் இந்துமதம் இந்துவெறி காட்டுமிராண்டிகளால் கேவலப்படுவதையும், சீரழிக்கப்படுவதையும் வன்மையாகவே கண்டிக்கிறேன். இராமயணம் மூலம் தமிழர்களை குரங்குகளாக சித்தரித்து காட்டியதையும் பொருத்துக் கொண்டு வாளாதிருக்கும் தமிழர்கள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் குறித்து பலவிமர்சனங்கள் இருந்தாலும் தமிழுக்கு அரும்பணியாற்றியவர் என்பதாலும், தமிழர்களின் மற்றொரு மாபெரும் தலைவர் என்பதாலும் ஒவ்வொரு தமிழனும் அவரை நேசிக்கின்றான் என்பதால் அவரின் இராமயணம் குறித்த கருத்துக்களாக தலையையும், நாக்கையும் தூண்டிப்பேன் என்று சொல்லும் இந்து வெறியர்களுக்கு எதிராக தமிழர்களை வாளாக மாற்றிவிடும் நிலைக்கு கொண்டு விட்டுவிடாதீர்கள்

23 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

கலைஞர் இது குறித்த விவாதத்திற்குத் தயார் என்று தெரிவித்துள்ள போது, இவர்கள் பக்கம் உண்மை இருந்தால் விவாதத்திற்கு வரவேண்டியது தானே? அதை விடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்திற்குறியது.

சதுக்க பூதம் சொன்னது…

Core argument is whether sethu palam was created by man/squirls/monkey.But karunanidhi unnecessarily distracted this issue to whether ram lived/God. This reduces the prospect of the project .

சிவபாலன் சொன்னது…

எப்படியோ, திட்டம் நிறைவேற வேண்டும். தமிழ் நாட்டிற்கு பயனளிக் கூடிய திட்டம்.

வேற்றுமைகளை மறந்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு திட்டம் நிறைவேற பாடுபடவேண்டும்.

சிவபாலன் சொன்னது…

ஜீகே,

உங்கள் கருத்து ஏற்புடையதே!

Unknown சொன்னது…

Mr. Kannan,

Did you read the following:

1. Maninthar Pita, a sikh challanges karunanithi for stage debate

2. Biggest people movement BJP (which is less corrupted and patriotic compared to any other) strongly condemned karunanithi

3. Several secular leaders like deva gowda, kapil sibal, vijaikanth, rajinikaanth, jeyalalitha, sarath kumar also strongly condemned karunanithi

when entire nation has been hurt and is opposing this DMK guy, why do try to misfeed the issue?
Stupidity has a limit

Params

SP.VR. SUBBIAH சொன்னது…

///இந்து வெறியர்களுக்கு எதிராக தமிழர்களை வாளாக மாற்றிவிடும் நிலைக்கு கொண்டு விட்டுவிடாதீர்கள்///

இந்து வெறியர்கள் எங்கிருந்து தமிழகத்திற்குள் வருவார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே கண்ணன்.

குஜராத் அல்லது உத்திரப் பிரதேசத்தில் இருந்து வருவார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்.

அதெல்லாம் வர முடியாது. அப்படியே வந்தாலும் நமது காவல்துறை என்ன கைகட்டிக்கொண்டா நிற்கும்.

அதெல்லாம் கவலைப்படாதீர்கள் - சூப்பர் சுப்பராயன், ஜாகுவார் தங்கம் போன்ற
நமது அதிரடி மாஸ்டர்களைக் கொண்டுபோய் நிறுத்தினாலே பொதும் வருபவர்கள் கதிகலங்கி ஒடிவிடுவார்கள்!

TBR. JOSPEH சொன்னது…

நியாயமான ஆதங்கம் கண்ணன்.

ஆனால் சுப்பையா சார் இத ஒரு தமாஷா எடுத்துக்கிட்டது கொஞ்சம் லேசா வருத்தமாருக்கு.

ஆனா ஒன்னு கண்ணன். மு.கவும் அப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம்.

அவருடைய இத்தகைய பேச்சு பிரச்சினையை தீர்க்க உதவாது என்பதே என்னுடைய கருத்து.

nagoreismail சொன்னது…

மிகச் சரியாக சொன்னீர்கள் - நாகூர் இஸ்மாயில்

SP.VR. SUBBIAH சொன்னது…

///tbr Joseph அவர்கள் சொல்லியது:ஆனால் சுப்பையா சார் இத ஒரு தமாஷா எடுத்துக்கிட்டது கொஞ்சம் லேசா வருத்தமாருக்கு.///

அடடே ஜோசஃப் சார். என்ன தப்பாக நினைத்துவிட்டீர்கள்?
கோவிக் கண்ணன் பதிவுகளிலும், சிபி பதிவுகளிலும் (இரண்டு பேர்கள் பதிவுகள் மட்டுமே) சற்று நகைச் சுவையாக பின்னூட்டம் இடுவதுண்டு!
சீரியஸாக அவர்களும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் - நீங்களும் எடுத்துக் கொளாதீர்கள்
நட்புடன்,
SP.VR.சுப்பையா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கலைஞர் இது குறித்த விவாதத்திற்குத் தயார் என்று தெரிவித்துள்ள போது, இவர்கள் பக்கம் உண்மை இருந்தால் விவாதத்திற்கு வரவேண்டியது தானே? அதை விடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்திற்குறியது.

11:47 AM, September 22, 2007
//

ஜெகதீசன்,
இஸ்லாமியர்கள் எப்படியும் பாஜகவுக்கு ஓட்டு விழாது என்று தெரியும். இந்துக்கள் ஓட்டை பெற வேண்டுமானால் இராமரை வைத்து அரசியல் செய்ததால் பலன் அளிக்கு என்று அத்வானி குருப் நம்புகிறது. அதற்காக இந்து உணர்வை தூண்டி கலவரங்களில் ஈடுபடுகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
Core argument is whether sethu palam was created by man/squirls/monkey.But karunanidhi unnecessarily distracted this issue to whether ram lived/God. This reduces the prospect of the project .
//

சதுக்க பூதம் அவர்களே,
கருணாநிதி இதுபோன்று இன்றைக்குத்தான் பேசியவர் அல்ல. பெரியார் பாசறையை சேர்ந்த அவர் எப்போதும் இதுபோன்று மூடநம்பிக்கையை சாடிவருவதுதான். பொது தேர்த்தல் நெருங்குவதால் கருணாநிதி சொன்னதை வைத்து அரசியலாக்கி பார்கிறது பாஜாக.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
எப்படியோ, திட்டம் நிறைவேற வேண்டும். தமிழ் நாட்டிற்கு பயனளிக் கூடிய திட்டம்.

வேற்றுமைகளை மறந்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு திட்டம் நிறைவேற பாடுபடவேண்டும்.

12:46 PM, September 22, 2007
//

அட நீங்க வேற, ஆளும் காங்கிரசில் இருக்கும் அமைச்சரே இதற்கு முட்டுக்கட்டை போடும் போது, இராமர் பாலம் இடிபடுவது போல் தெரியவில்லை. எதாவது நில அதிர்வு வந்து அழிந்தால் தான் உண்டு.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//params said...
Mr. Kannan,

Did you read the following:

1. Maninthar Pita, a sikh challanges karunanithi for stage debate//
சமணர்கள் சைவரகள் ஆனது போல் மணிந்தர் பி(த்)தா நாத்திகஎர் ஆவதற்கு தயாராக இருக்கிறாரா ?
:)

//
2. Biggest people movement BJP (which is less corrupted and patriotic compared to any other) strongly condemned karunanithi//
பாஜக ஊழல் பெருச்சாளிகள் இல்லை, ஆனால் மூஞ்சூறுகள், மதவெறியர்கள் என்று மட்டுமே என்று சொல்ல வருகிறீர்களா ? :))

//3. Several secular leaders like deva gowda, kapil sibal, vijaikanth, rajinikaanth, jeyalalitha, sarath kumar also strongly condemned karunanithi//
திட்டம் செயல்பட ஆதரவு கொடுப்பவர்களும் பெரிய தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாஜக, மதவெறி கும்பலுக்கு இவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

//
when entire nation has been hurt and is opposing this DMK guy, why do try to misfeed the issue?
Stupidity has a limit

Params
//

15000 ஆண்டுக்கும் முந்தயது என்று பொய்யைவிட இது அறிவினமாக தெரியவில்லை. நூற்றாண்டுகளா இந்தியர்கள் வைதீக மதத்தினரின் அடக்கு முறையில் தான் இருந்தார்கள். விழித்துக் கொண்டார்களே என்று பலரும் மகிழவே செய்கிறார்கள். அதையே நானும் சொல்கிறேன். பிற்போக்கு தனங்களுக்கும், பழமை வாதத்திற்கும் எல்லை இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR.சுப்பையா said...
இந்து வெறியர்கள் எங்கிருந்து தமிழகத்திற்குள் வருவார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே கண்ணன்.

குஜராத் அல்லது உத்திரப் பிரதேசத்தில் இருந்து வருவார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்.//

ஐயா,
அங்கெல்லாம் வெறியர்கள் இருக்கிறார்களா ? எனக்கு தெரியாதே.
:))

//அதெல்லாம் வர முடியாது. அப்படியே வந்தாலும் நமது காவல்துறை என்ன கைகட்டிக்கொண்டா நிற்கும்.

அதெல்லாம் கவலைப்படாதீர்கள் - சூப்பர் சுப்பராயன், ஜாகுவார் தங்கம் போன்ற
நமது அதிரடி மாஸ்டர்களைக் கொண்டுபோய் நிறுத்தினாலே பொதும் வருபவர்கள் கதிகலங்கி ஒடிவிடுவார்கள்!
//

நம்ம தமிழ்நாட்டு போலிசும் எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாச்சே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//tbr.joseph said...
நியாயமான ஆதங்கம் கண்ணன்.

ஆனால் சுப்பையா சார் இத ஒரு தமாஷா எடுத்துக்கிட்டது கொஞ்சம் லேசா வருத்தமாருக்கு.

ஆனா ஒன்னு கண்ணன். மு.கவும் அப்படி சொல்லாமல் இருந்திருக்கலாம்.

அவருடைய இத்தகைய பேச்சு பிரச்சினையை தீர்க்க உதவாது என்பதே என்னுடைய கருத்து.
//

நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

/nagoreismail said...
மிகச் சரியாக சொன்னீர்கள் - நாகூர் இஸ்மாயில்
//

நன்றி திரு இஸ்மாயில் அவர்களே.

எற்கனவே இது போல் எழுதியதற்கு என்னை ஒருவர் இஸ்லாமியர்களிடம் பிரியாணி வாங்கி திண்பதாக சொன்னார்.

:)

M Poovannan சொன்னது…

இன்னும் இசுலாமியர்கள் ராமர் பால சங்கதியில் களமிறங்கவில்லை, ராமர் பாலம் ஆதம் பாலம் என அழைக்கப் படுவதாகவும், 'சேது' என்பது ஆதம் நபியின் மூன்றாவது மகன் 'ஷீத்' என்பதை குறிக்கும் 'ஷீத்' பாலமே காலப்போக்கில் சேது பாலமாக மாறியதாக கவிக்கோ ஒரு கட்டுரையில் குறீப்பிட்டுள்ளார். இராமேஸ்வரத்தில் ஆதத்தின் இரு புதல்வர்களின் (ஆபில் காபில்) சமாதி இன்றும் அங்கு காணப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

M Poovannan சொன்னது…

முந்தைய பதிவில் எழுத மறந்து விட்டேன் The Davinci Code புத்தகத்தை மறுத்து The Davinci Code - Decoded என்ற புத்தகம் வந்திருக்கிறதாமே எங்கே கிடைக்கும்

அருண்மொழி சொன்னது…

சதுக்க பூதம் மற்றும் params

From advani to cho everyone openly accepted that they cannot provide any proof to Rama or Ram Sethu. They kept on saying it is their belief & no one should question their beliefs.

You guys say that ramayana happend before 17,50,000 years. Guys wake up - are you really insane to believe that humans lived so many years ago & built a bridge???

you spineless creatures cannot argue anything. thats why you are turning this into communal stuff by pulling in allah, jesus and even kannagi.

come on guys. dont go & hide under the burka :-)

வித்யா கலைவாணி சொன்னது…

params said
//3. Several secular leaders like deva gowda, kapil sibal, vijaikanth, rajinikaanth, jeyalalitha, sarath kumar also strongly condemned karunanithi//
மேற்கண்டவர்கள் அரசியல் ஆதாயத்திற்க்காக எது வேண்டுமானாலும்
சொல்வார்கள்.
நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்.

RATHNESH சொன்னது…

//இந்துமதத்தை புன்படுத்துவதாக நீலிகண்ணீர் வடிப்பதும், மதவெறியை தூண்டி ரவுடி இசத்தை வளர்பதையும் பார்த்து இந்தியர்கள் என்ன உலக நாடுகளே இந்துமதம் ஒரு காட்டுமிராண்டி மதம் என்று நினைப்பதற்கான வேள்விகளை வளர்த்து இருக்கின்றன//

சத்தியமான வார்த்தைகள்.ஆனால் அவர்கள் எந்த அராஜகத்துக்கும் துணிந்தவர்கள் என்பதையும் எச்சரிக்கையாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுப்பையா சார் சொன்னதில் நகைச்சுவையைப் பார்த்தவர்களுக்கு, //Several secular leaders like deva gowda, kapil sibal, vijaikanth, rajinikaanth, jeyalalitha, sarath kumar// என்கிற வார்த்தைகள் நகைப்பைத் தரவில்லையா?

RATHNESH

nagoreismail சொன்னது…

"..இஸ்லாமியர்களிடம் பிரியாணி வாங்கி திண்பதாக சொன்னார்"

எங்களது ஊரில் ஒரு பணக்காரர் ஒரு பாடகரிடம் காசு கொடுத்து அல்லாஹ்வை பத்தி பாடு என்று கேட்டிருக்கிறார், அதற்கு அந்த பாடகர், 'இருக்கிறான்னு பாடவா, இல்லைன்னு பாடவா' என்று கேட்டாராம். 'என்ன இப்படி கேட்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'உங்க காசுக்கு நீங்க சொல்ற படி தானே பாட முடியும்' என்று திரும்ப கேட்டாராம். இந்த சம்பவம் தான் நினைவிற்கு வருகிறது.
பிரியாணிக்கு எழுதிய எழுத்துக்கள் அல்ல இவை, ஆனால் இந்த எழுத்திற்கு பிரியாணி ஒரு மாசத்துக்கு வாங்கி கொடுத்தாலும் தகும்,
தவிர சிங்கையில் பிரியாணி சாப்பிட நல்ல இடம்,
பஃபலோ ரோடு - புளு டைமண்ட் ரெஸ்டாரண்ட்,
பீச் ரோடு - கூத்தூர் கடை(இப்படி சொன்னால் தெரியும்),
தேகா மார்க்கெட் - அலாவுதீன் கடை..
டிரை பண்ணுங்க - நாகூர் இஸ்மாயில்

K.R.அதியமான் சொன்னது…

150-year dream for 150-year old ships
By Swaminathan S. Anklesaria Aiyar

Religion and history do not mix well. I shrug my shoulders at those opposing the Sethusamunda-ram canal because it will damage the remains of the bridge that Ram’s army used in the Ramayana.

Now, i too oppose the canal, but on economic and environmental grounds. Its rationale is more political than economic. It will become one more public sector white elephant.

The Palk Straits, between Tamil Nadu and Sri Lanka, are so shallow that only small boats can pass through. So, east-west coastal ships have to go around Sri Lanka. So do ships from Europe and Africa to the east coast.

Sethusamundaram will be a furrow dredged in the sea-bed of the Straits, deep enough to accommodate ships of 20,000 DWT. The canal will save ships both distance (saving fuel) and time (saving daily charges for chartering ships). So, it should be able to charge ships for passage, like the Suez and Panama Canals. This revenue is supposed to make the project economic.

The project is a political gift for Tamil Nadu. It will hugely help Tuticorin port, which today can receive ships only from the west, and not the east. It will improve the viability of existing and planned minor ports in the state. Hence, Tamils call the canal a 150-year dream about to come true (it was first proposed around 1850).

Dreams are costless, but canals are not. Project documents claim that the canal will save ships 36 hours of time and 570 nautical miles of distance. But a recent study by Jacob John in Economic and Political Weekly exposes these claims as highly exaggerated. Up to 70% of the traffic through the canal is projected to come from Europe and Africa. And John estimates that the time saving from Europe to Kolkata will be only eight hours, and the distance saving 215 nautical miles. From Africa to Kolkata, the time taken will actually increase by 3.5 hours (being piloted through the canal is a slow process), and distance reduced will be only 70 nautical miles.

John calculates that ships could lose up to $4,992 per passage if they are charged the tariff laid down in project documents. In which case ships will find it cheaper to go round Sri Lanka. If the government cuts the proposed tariff to attract traffic, John estimates that the project’s rate of return could fall to an uneconomic 2.5%. I expect that the project will also suffer cost overruns in capital and maintenance dredging, and hence be in the red.

The canal is supposed to be ready by November 2008, not far off. So why has the project not been able to sign up potential users? The finance minister has appealed to private shipping companies to participate in a project that will benefit them, yet no shipping company has come forward. The economics of the canal look much too dicey.

The Suez and Panama Canals save ships thousands of miles, and that makes them profitable. Sethusamundaram is not remotely comparable. It is designed for small ships (the project documents talk of 20,000 DWT), whereas the Panama Canal takes ships of up to 65,000 DWT and Suez takes ships up to 150,000 DWT.

The Suez and Panama canals were dug through land corridors, and once dug stayed dug - they did not face sand inundation from the sea. However, Sethusamundaram will be a furrow in the sea-bed, at the constant mercy of currents bearing sand.

The government’s environmental assessment has cleared the project on ecological grounds. Yet, much of that assessment was not about sand incursion, but about fears of possible damage to coral reefs, coastal erosion, oil spills, and changes in ocean salinity and temperature. Besides, the ecological studies were done from the Indian side of the Palk Straits, and not the Sri Lankan side, and so are technically incomplete.

My own major fear is not so much that the project will ruin the environment, but that the environment will ruin the project. I fear that ocean currents will keep dumping fresh sand in the furrow of the canal. The Palk Straits are shallow not by accident but because sand-bearing currents have made them so. Combating the full force of nature is perilous, expensive and sometimes impossible.

The project envisages maintenance dredging of two million cubic metres per year, infinitely more than required by the Suez and Panama canals. Jacob suspects (and so do i) that actual maintenance dredging will far exceed project projections, rendering the canal uneconomic. An extreme event (like the 2005 tsunami) could dump enough sand to close down the canal.

Finally, global shipping is shifting to ever-larger vessels. Bulk carriers and tankers often exceed 200,000 DWT, and those under 60,000 DWT are being phased out as uneconomic. Old general cargo vessels have been replaced by container ships, which started small but now exceed 35,000 DWT, and may soon touch 75,000 DWT. Such vessels cannot use the canal.

So, Sethusamundaram will be unsuitable for the large vessels of the 21st century. It is a 150-year old idea for 150-year old ships. That may be its epitaph.

http://www.swaminomics.org/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்