பின்பற்றுபவர்கள்

12 செப்டம்பர், 2007

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் குறித்து...

எனது பெயரில் சில இடங்களில் வெளியான பின்னூட்டங்களை சுட்டிக்காட்டிய பதிவு நண்பர்கள், அவை என்னுடைய பின்னூட்டமா ? என்று கேட்டார்கள். குறிப்பாக தோழியர் தமிழச்சியின் பதிவில்

//
Anonymous said...
தாங்கள் கராத்து வகுப்புக்கு செல்ல ஆரம்பித்து இருப்பதாக கெள்விபட்டேனே ! :-). உண்மையா ?. உங்களை மிரட்டுபர்கள் உங்கள் தோழர்களாகத்தான் இருப்பார்கள். உங்கள் மன திடத்தை சோதிப்பதர்காவோ ? அஞ்சாதீர்கள்.
ஒர் கடி ஜோக் சொல்லிவிடுங்கள்.

கோவி.

9:48:00 PM
//

மற்றும் அனானி / அதர் ஆப்சன் புகழ், திருவாளர் டோண்டு ராகவன் பதிவில் மற்றொன்று

//Anonymous said...
என்னுடய தனிப்பட்ட கருத்தில் தில்லியில் இந்த கை ரிக்ஷாவை ஒழித்தால் நன்றாக இருக்கும். இந்த கை ரிக்ஷா இந்தியா இன்னும் மிகவும் ஏழை தேசம் என்று பறைசாற்றும்.

கோவி

September 11, 2007 11:12 PM //

என்றும் இருந்தது.

நான் அனானியாக எவருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை. நான் ப்ளாக்கர் கையப்பத்துடன் மட்டுமே பின்னூட்டம் போடுகிறேன். எனது பின்னூட்டங்களில் புரொபைல் புகைப்படம் இருக்கும். எனவே என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அவை என்னுடைய கருத்து அல்ல. கோவி என்று வேறொருவர் இருக்கிறாரா என்று தெரியாது. எனவே மறுமொழி இடுபவர்கள் அதற்கு மறுமொழி இட்டால் அவை எனது கருத்தாக எடுத்துக் கொண்டு எனக்கு சொல்வது போல் மறுமொழி இடவேண்டாம்.

நான் பார்த்த என் பெயரில் வெளியான அந்த பின்னுட்டங்களில் ஆபாசம் இல்லை. எனவே அதுபோன்ற பின்னூட்டங்களை வெளியிடுவதும், வெளியிடாததும் பதிவர்களின் முடிவே.

எனது கருத்து...ஆபசமில்லை என்றால் எனது பெயரில் வெளியாகும் அனானி பின்னூட்டங்களை விருப்பப்பட்டால் வெளி இடுங்கள்.


எனது பெயரில் பின்னூட்டம் போட ஆசைப்பட்டால் மேற்கண்ட பின்னூட்டங்களைப் போல் ஆபாசம் இல்லாது நகைச்சுவையுடன் கூடிய பின்னூட்டங்களை போடவேண்டும் என்று அந்த அனானி தம்பிக்கு வேண்டுகோள் வைத்து நன்றி கூறிக் கொள்கிறேன்.

15 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

:-)

அதென்ன கோவி என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். உங்கள் பெயரில் இட விரும்புபவர் என்றால் முழுமையாக கோவி.கண்ணன் என்றே இடலாமே. :-)

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே..
நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதை தான் காட்டுகிறது. :-))

TBCD சொன்னது…

இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரே

நாமக்கல் சிபி சொன்னது…

//இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரே//

ஆமா! அண்ணன் வளர்ந்துட்டாருல்ல இப்ப!

லக்கிலுக் சொன்னது…

வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
:-)

அதென்ன கோவி என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். உங்கள் பெயரில் இட விரும்புபவர் என்றால் முழுமையாக கோவி.கண்ணன் என்றே இடலாமே. :-) //

குமரன்,
நண்பர்கள் யாரோ கலாய்கிறார்கள் போல் தெரிகிறது.
:))
நல்லா இருக்கட்டும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கோவியாரே..
நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதை தான் காட்டுகிறது. :-))
//

குமார்,
நான் காம்ப்ளானோ, ஆர்லிக்ஸோ குடிக்கலையே... அப்பறம் எப்படி ?
ஆராய்ச்சிக்குறியது. :))))

கோவி.கண்ணன் சொன்னது…

// TBCD said...
இப்ப என்ன ஒரு ஏழு அடி இருப்பீங்களா..கோவியாரே
//

யப்பா TBCD,

எந்த அடியும் வேணாம். உடம்பு தாங்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...

ஆமா! அண்ணன் வளர்ந்துட்டாருல்ல இப்ப!
//

நான் தான் கோவி.கண்ணன் என்று சென்னை பதிவர் சந்திப்பில் கூட யாரோ இமிடேட் பண்ணி இருக்காங்க சிபியாரே :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
வாழ்த்துக்கள்!

1:01 PM, September 12, 2007
//

என்ன ஒரு மகிழ்ச்சி. அதுக்குத்தான் இந்த பாராட்டா லக்கி சார் ?
:)

dondu(#11168674346665545885) சொன்னது…

என் பதிவில் கோவி என்றவர் பெயரில் வந்த பின்னூட்டம் உங்களுடையது அல்ல என்பது தெரியும். அதே நேரத்தில் அது அனானியாக வந்தது. எந்த முறையிலும் கோவி கண்ணன் என்ற பெயரை சஜஸ்ட் செய்யவில்லை. கோவி என்ற பெயர் உங்களுக்கு மட்டுமே சொந்தம் அல்ல என்ற அடிப்படையிலேயே அதை அனுமதித்தேன்.

அதுவே அதர் ஆப்ஷனில் உங்கள் பிளாக்கர் எண்ணிலோ அல்லது உங்கள் நண்பர் விடாது கருப்பு மூர்த்தி போலி டோண்டுவாக வந்து என் விஷயத்தில் செய்தது போல உங்களுக்கும் எனது பதிவில் வேறு யாராலோ செய்யப்பட்டிருந்தால் நானே அதை அனுமதித்திருக்க மாட்டேன், அது ஆபாசம் இல்லாமல் இருந்தாலும் சரி.

ஆக எனது பதிவில் கோவி என்ற பெயரில் வந்தது நீங்கள் இல்லை. ஏன் அது கோவி மணிசேகரனாகக் கூட இருக்கலாம், for all I care.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

நான் போலி என்ற சொல்லை இந்த இடுகையில் பயன்படுத்தவில்லை. நான் எவரையும் சந்தேகப்படவில்லை என்பது பதிவில் தெளிவாக இருக்கிறது, வேண்டுமென்றே

போலித்தன்மையான போலி பாலிடிக்ஸ் தாங்கி வந்த பின்னூட்டம் ஒன்று நிராகரிக்கப்பட்டது. அது மிஸ்டர் டோண்டு ராகவனின் பின்னூட்டம் அல்ல.

Unknown சொன்னது…

அவரவர்கள் சொந்தப் பெயரில் பதிலிட என்ன தயக்கமோ?
கராத்து, ரிக்ஷா போன்ற வார்த்தைகளை/எழுத்துகளை தாங்கள் உபயோகிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

Floraipuyal சொன்னது…

நீங்க கோவிக்கண்ணன்னா கோவி உங்க தம்பி தானே?

Unknown சொன்னது…

கோவி என்கிற பெயரில் கோவி. கண்ணன் பெயரைக் கெடுக்க வந்த போலியா ???

இதுதான் இப்பொழுது கேள்வி. கோவி. கண்ணன் பயப்பட வேண்டாம். என் பின்னுட்டங்கள் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. வேறு எந்த வலையுலக நண்பர்களையும் தனிப்பட்ட முறையில் பாதிக்காது. பலரும் இது குறித்து பின்னுட்டமிட்டிருக்கிறார்கள். இதை பார்க்கும்போது ஒன்று மனதிற்கு வருகிறது. கிராம்த்தில் யாராவது புதியவர் தெருவில் நடந்துச் சென்றால் எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அது போல இருக்கிறது.
இப்பொழுது நான் "கோவி என்ற பெயறை அப்ப்டியே வைத்துக் கொள்வதா அல்லது "கோவி எனும் கோவிந்து" என்று மாற்றிக்கொள்வதா ? ஓட்டெடுப்புக்கு விடுகிறேன். உங்கள் பின்னூட்ட்ங்கள் மூலம் கருத்துக்களையிட்டு உதவவும். என் அப்பா அன்புடன் இட்ட பெயரை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. (என் அப்பா ஆவி வருத்தப்படுமோ...அதில் எல்லாம் நம்பிக்கையில்லை).
இப்போதைக்கு..
கோவி
(அண்ணன் கோவி. கண்ணன் மன்னிப்பாராக)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்