பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2007

இருத்தலை தக்கவைத்துக் கொள்ளும் நவின சித்தாந்தம் !

ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொல் 'சர்வைவல் ஆப் பிட்டெஸ்ட்'. அதாவது 'எது போராடுகிறதே அதுவே வாழ்கிறது' என்பது எளிமையான தமிழ் பொருள் விளக்கம். ஒருவனுக்கு தனிமனிதன் என்பது ஒரு அடையாளம் என்றால் அதன் இருப்பை நிறுத்திக் கொள்ள குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படுகிறது. அதன் பிறகு அந்த குடும்பங்களின் இருப்பை தக்கவைக்க, அது ஒரு சமூகத்தின் அங்கம் என்ற அமைப்பின் பின்னால் அது இருக்கிறது, சமூகம் இனக்குழுக்களுக்கு பின்னால், இனக்குழுக்கள் மதம் என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் நிற்கிறது.

இதில் சமூகம் மற்றும் இன என்ற அடிப்படையில் திரளுபவர்களே இருத்தலை தக்க வைத்துக் கொள்ளு வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக நினைத்து எப்போதும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு கருவியாக மதம், அதில் ஈடுபாடுள்ள உள்ள பிற இனத்து மக்கள் உணர்வுகளைக் கூட உரமாக்குகிறார்கள். தம் இனம் செழித்தால் மட்டுமே தம்மால் வாழ முடியும் என்ற நம்பிக்கையின் பின்னால் தான் அனைத்துவகையான சமூக அரசியலும் பின்னப்படுகின்றன. இந்த அரசியலில் புகுத்தப்படும் கடவுள் நம்பிக்கைகள் என்பது வெறும் ஆத்திகம் அல்லது பக்தி சார்ந்தவையே அல்ல. அதற்கும் மேல் குறிப்பிட்ட இன அமைப்பைக் கட்டிக் காக்கும் கேடயங்களாகத்தான் அவை பயன்படுகின்றன. அநதந்த மதங்களை உயர்வு என்று தாங்கிப் பிடிக்கும் இனக்குழுக்களை ஆராய்ந்தால் இது வெட்ட வெளிச்சமாக தெரியும். இந்த அரசியல் தெரியாது கடவுள் நம்பிக்கை தவிர்த்து அதன் பெயரில் மதநம்பிக்கைக் கொண்டவர்கள் பரிதாபத்துக்கு குறியவர்கள் தாம்.

புரட்சி, மறுமலர்ச்சி என்ற நிகழ்வுக்குப் பின்னால் உண்மையில் புரட்சி நடந்து பொதுமக்களுக்கு நன்மை நடந்திருக்கிறதா ? என்று அவை நடந்து 50 ஆண்டுகளுக்கு பின் பார்த்தால் 90 விழுக்காடு புரட்சிகளின் மூலம் அதிகாரவர்கத்தின் கைமட்டுமே மாறி இருக்கிறது என்பது தெளிவாக தெரியும்.

எல்லாவகையான சமூக அரசியலுமே, இனக்குழுக்கள் தமக்குச் சாதகமான வாழ்வாதரங்களைக் கட்டமைப்பதும், அவற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அதை சீர்குலைத்தலும் மட்டுமே நடக்கிறது. அதாவது பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்த அவர்களுக்கான மறுகட்டமைப்பு என்றும் அதைச் சொல்லாம்.

குறிப்பிட்ட இனக்குழுக்களின் முழுச் சமூக கட்டமைப்பு என்பது மின்சாரம் இல்லாத, அல்லது தகவல் தொடர்பற்ற காலங்களில் மிக மெதுவாக பின்னப்பட்டு இருந்தாலும் அவை முழுதாக கட்டி முடிக்கப்பட்ட காலங்களை கணக்கிட்டால் அவற்றைச் சீர்குலைக்க அதே தகவல் தொடர்பு அற்ற காலமாக தற்போதும் இருந்தால் நீண்ட நெடிய காலம் ஆகும். ஆனால் அதற்குள் அநத குறிப்பிட்ட இனக்குழுக்கள் புதிய கருத்தாக்கத்தில் தங்கள் பழைய கட்டமைப்பை பழுதுபார்த்துவிடும். பல்வேறு காலகட்டங்களில் புதிய சிந்தனைகளை உள்வாங்கிய பல்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த உயர்சாதியினராக தங்களை அறிவித்துக் கொண்டவர்களிடையே வந்த மாற்றங்களைப் பார்த்தால் இந்த சமூக அரசியல் நன்கு புரியும்.

ஆனால் நவினகாலமான தகவல் தொழில் நுட்பங்கள் மிக்க இந்தகாலத்தில் ஒருபக்கம் அனைவரும் சமம் என்ற சித்தாந்ததிற்கு வந்ததாலும். இன அடையாளம் என்பதை உயர்பிரிவினர் விட்டுவிடத் தயாராக இல்லை, இருத்தலை தக்கவைத்துக் கொள்ளும் பழைய பயத்தின் காரணமாகவே, இனம் என்ற அடையாளத்தை தற்காலிகமாக மறைத்துக் கொண்டு மதத்தை பயன்படுத்துகிறார்கள். தனிமனித வாழ்கைக்கு மதம் எந்த வகையிலும் பயன் தராது. மதம் என்பது இனக்குழு என்ற அமைப்பிற்கு மட்டுமே பயன் தரும். இந்த நூண்ணியல் அரசயலோ அல்லது இறைவன் வேறு மதம் வேறு என்று புரியாத இறை நம்பிக்கையாளர்களே தான் மதகலவரங்களுக்கு பலிகடாக்கள் ஆக்கப்படுகின்றனர்.

மதங்களை இறைவன் படைத்தான் என்றால் பல்வேறு மதத் தோற்றங்களும், ஒவ்வொன்றின் தோற்றத்திற்கான காரணமாக எது இருந்திருக்கும் ? மத அரசியல்கள், சமூக போராட்ட அரசியல்கள், அதன் கட்டமைப்புகள் என எதுவுமே புனிதத் தன்மை வாய்ந்ததோ, ஒட்டுமொத்த உலக அமைப்புகளுக்கு சுதந்திரம் தருவது என்பதல்ல.இவை மற்றவர்களை ஒடுக்குதல் அல்லது தமது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ளுதல் என்பவை தாம். அதில் பாதிப்பு அடைந்து தங்கள் கட்டமைபுகள் சிதைக்கப்பட்டதாக பின்பு அதைப் புரிந்து கொண்ட மற்ற இனக்குழுக்கள் அதிலிருந்து மீளுவதற்கு நடத்தும் மற்றொரு சமூக அரசியல்கள் மற்றொரு கட்டமைப்பு. உதாரணம் ஆதிதிராவிடர்கள் என்னும் தென்னிந்திய பழங்குடி மக்கள் ஆரியர் வருகைக்கு முன் பெளத்தத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவும் கல்விக் கேள்விகளில் பிராமனர்களை ஒத்தவர்களாகவும் இருந்தனர் என்கிறது வரலாற்று குறிப்புகள். பின்பு பிராமணர்களின் ஆளுமை, அதன் பிறகு சென்ற நூற்றாண்டிலிருந்தே பிராமணர்களின் வீழ்ச்சி. வெள்ளையருக்கு எதிரான தென் ஆப்ப்ரிக்க கருப்பின மக்களின் போராட்டங்கள் என பலப்பல வரலாறுகள் இவைதான் உலகம் தோன்றி மனித குழுக்கள் முதன் முதலில் பிரிந்ததிலிருந்து நடந்துவருகின்றன. தற்பொழுது இந்த சமூக இன அரசியல்கள் வெட்டவெளிச்சமாகி வருவதைத் தொடர்ந்து,

எதிர்காலத்தில் மதங்களையும், இனக்குழு அடையாளங்களையும் அனைவருமே புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவர். இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்கனவே நடந்துவருபவைதான். இது உலகம் தழுவி நடந்தேறும் போது இவற்றினால் பயன் இல்லை என்ற சூழல் வரும் போது, மத, இன அடையாளங்களை ஆசையாக அணிந்தவர்களும் தூக்கி போட்டுவிடுவார்கள்.

நடக்கும் அல்லது நடந்த இனம் சார்ந்த சமூக அரசியல்கள், மத அரசியல்கள், அதற்கான போராட்டங்கள் எதுவுமே புனிதத்தன்மை வாய்ந்தது அல்ல. சரி தவறு என்றெல்லாம் சொல்லி விட முடியாது. இவைகள் யாவும் அவரவரின் (இனக்குழுக்கள்) இருத்தலை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதற்காக அவ்வப்போது தம்குழுக்களை புதுப்பித்துக் கொள்ள நடக்கும் போராட்டமே.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

11 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

"மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ஸ்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் சேர்ந்நு
மனசு பங்கு வச்சு"

இது ஒரு பழைய மலையாளப் பாடல்.

நான் சொல்ல நினைக்கறதை இது சொல்லுது.

சிவபாலன் சொன்னது…

GK,

I agree with you!

Good Post!

ஜெகதீசன் சொன்னது…

GK,
நல்ல அலசல். பதிவுக்கு நன்றி.

Thamizhan சொன்னது…

Judaism,
Hinduism,
Buddhism,
Christianity,
Islam,
Capitalism.
Communism,
Socialism,
Globalism and Finally

HUMANISM! SECULAR HUMANISM WILL

BE THE ONLY ISM!

ஜமாலன் சொன்னது…

//ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொல் 'சர்வைவல் ஆப் பிட் நெஸ்'. அதாவது 'எது போராடுகிறதே அதுவே வாழ்கிறது' என்பது எளிமையான தமிழ் பொருள் விளக்கம். //

'சர்வவைவல் ஆப் பிட்டஸ்ட்' என்பது டார்வின் இயற்கை தேர்வுக் கொள்கையின் அடிப்படை. அதைதான் சொல்கிறீர்களா? இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது என்றாலும் தொடரும் உங்கள் விவாதம் டார்வின் கொள்கையின் பண்பாட்டு பரிணாமம் பற்றிய விளக்கமாக இருக்கிறது. நல்ல பதிவு. வலைத்தளத்தில் உங்கள் பதிவு வித்தியாசமன கனமான பதிவுகளாக உள்ளது. எத்தனை கிலோ என்று யாரேனும் கும்மிகள் கேட்காமல் இருந்தால் சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//
துளசி கோபால் said...
"மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ஸ்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் சேர்ந்நு
மனசு பங்கு வச்சு"

இது ஒரு பழைய மலையாளப் பாடல்.

நான் சொல்ல நினைக்கறதை இது சொல்லுது. //

துளசியம்மா,

இனிமையாக கருத்துடன் கூடிய பாடலாக இருக்கீறது.
நன்றி/

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,

I agree with you!

Good Post!
//

வாங்க சிபா,

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
GK,
நல்ல அலசல். பதிவுக்கு நன்றி.
//

ஜெகதீசன்,
பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
Judaism,
Hinduism,
Buddhism,
Christianity,
Islam,
Capitalism.
Communism,
Socialism,
Globalism and Finally

HUMANISM! SECULAR HUMANISM WILL

BE THE ONLY ISM!
//
தமிழன்,
இசம் இசம்.....கசம் கசம் ...!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...

'சர்வவைவல் ஆப் பிட்டஸ்ட்' என்பது டார்வின் இயற்கை தேர்வுக் கொள்கையின் அடிப்படை. அதைதான் சொல்கிறீர்களா? இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது என்றாலும் தொடரும் உங்கள் விவாதம் டார்வின் கொள்கையின் பண்பாட்டு பரிணாமம் பற்றிய விளக்கமாக இருக்கிறது. நல்ல பதிவு. வலைத்தளத்தில் உங்கள் பதிவு வித்தியாசமன கனமான பதிவுகளாக உள்ளது. எத்தனை கிலோ என்று யாரேனும் கும்மிகள் கேட்காமல் இருந்தால் சரி.
//

கனம் தலைக் கனமாக நினைக்காதவரை மகிழ்ச்சியே. மற்றபதிவுகளையும் குறித்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜெமீலன்

அரை பிளேடு சொன்னது…

சித்தாத்தங்கள் தங்கள் இருத்தலுக்காக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.

வேதகால மதம் உயிர்ப்பலி கொடுத்தது.

புத்தமதத்தை எதிர்க்கொள்ள அது உயிர்பலியை துறக்கவேண்டிவந்ததை இத்தகு தகவமைவாக கொள்ளலாம்.


தகவமைத்துக்கொள்ளாததால் பெளத்தத்தால் இந்தியாவி்ல் சர்வைவ் ஆக முடியவில்லை.

சித்தாந்தங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியவாறேதான் இருக்கின்றன.

சர்வைவலுக்கான போராட்டம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்