பின்பற்றுபவர்கள்

28 ஜூலை, 2006

கஜினி .... :)

மரணத்தை வென்றவர்கள் சகோதரிகள் நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, மற்றும் பொன்ஸ் ஆகிய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். 50% இடஒதுக்கீடு கேட்பவர்கள் 100% சதவிகிதம் பறித்துக் கொண்டதை போட்டி என்பதால் பொறுத்துக் கொள்ளலாம் :)

மரணத்துடன் நேருக்கு நேர் - எனது பதிவுக்கு வாக்கு அளித்த அனைத்து நல்ல உள்ள அன்பர்களுக்கு நன்றிகள். போட்டிகளில் கலந்துகொள்வது மகிழ்சியை தருவதால் கஜினியை தாண்டி படையெடுப்புகள் தொடரும்.


32 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

இனி வரும் காலம் வெற்றி பெறும் காலமாக இருக்க வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

//50% இடஒதுக்கீடு கேட்பவர்கள் 100% சதவிகிதம் பறித்துக் கொண்டதை போட்டி என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்//
கோவி, உங்க "பரந்த" மனசை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி, உங்க "பரந்த" மனசை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை :) //

சந்திரா அத்தை இன்னும் எனக்குள்ளே வாழ்ந்துகிட்டே இருக்காங்க :))

பொன்ஸ், போட்டி மூலமாக சந்திரா அத்தைக்கு உயிர் கொடுத்திட்டிங்க ! போட்டியில் வென்றதற்கு வாழ்த்துக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
கோவி.கண்ணன் சார்,

இனி வரும் காலம் வெற்றி பெறும் காலமாக இருக்க வாழ்த்துக்கள்...
//

சிபா, பூனைக்கு ஒரு காலம் வராமாலா போய்டும் :))

பெயரில்லா சொன்னது…

// சிபா, பூனைக்கு ஒரு காலம் வராமாலா போய்டும் :)) //

முதல்ல சிபி தானே இருக்காரு, யாரு சிபான்னு யோசிச்சேன்..
அப்புறம் பார்த்தா கோவி.. டைமிங்கா வேற அடிக்கிறீரா!! :)))))

பெயரில்லா சொன்னது…

அட! ஆமாம். மொதல் மூணு இடமும்
மகளிர் அணி கொத்திக்கிட்டுப் போயிருக்கு!

இதை நான் கவனிக்கத் தவறிட்டேன். நீங்க சொன்னபிறகுதான் தோணுது.

வென்றது மகளிர்ன்னு இன்னும் கொஞ்சம் இறுமாப்போட இருக்கட்டுமா? :-))))

இது எங்கள் காலம்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்புறம் பார்த்தா கோவி.. டைமிங்கா வேற அடிக்கிறீரா!! :))))) //
பொன்ஸ் ! புரியாதவற்களுக்கு sk பதிவில் விபரமாக அடித்திருக்கிறேன் :))

பெயரில்லா சொன்னது…

//படையெடுப்புகள் தொடரும்//

அந்த 'யெடு' வை அடைப்பானுக்குள் () போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!
என்னை முந்தியதற்கு வாழ்த்துகள், கோவியாரே!!

கோவி.கண்ணன் சொன்னது…

// பொன்ஸ் said...
// சிபா, பூனைக்கு ஒரு காலம் வராமாலா போய்டும் :)) //

முதல்ல சிபி தானே இருக்காரு, யாரு சிபான்னு யோசிச்சேன்..
//

சிபா - என்றால் சிவபாலன் பிரியமாக வைத்தது :))

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த 'யெடு' வை அடைப்பானுக்குள் () போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!
என்னை முந்தியதற்கு வாழ்த்துகள், கோவியாரே!! //

நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் நாம எழுதறதெல்லாம் படைப்புன்னு எப்படி நம்ம வாயாலேயே சொல்வது ... கூச்ச சுபாவம், தன் அடக்கம் தான் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
வென்றது மகளிர்ன்னு இன்னும் கொஞ்சம் இறுமாப்போட இருக்கட்டுமா? :-))))

இது எங்கள் காலம் //
துளசியக்கா,
பெண்களிடம் சோகம் பிளிய பிளிய இருக்கும் என்பது போட்டியின் முடிவைப் பார்க்கும் போது தெரியவருகிறது :) எல்லாத்தையும் இந்த பொண்ணுங்க இம்புட்டு நாளா உள்ளுக்குள்ளேயே போட்டு பூட்டி வெச்சி இருந்திருக்குங்க :(

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள் கோக. :-)))

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் சார்

//பூனைக்கு ஒரு காலம் வராமாலா போய்டும் //

நல்ல டைமிங்.. இரசித்தேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
கோவி.கண்ணன் சார்

//பூனைக்கு ஒரு காலம் வராமாலா போய்டும் //

நல்ல டைமிங்.. இரசித்தேன்...
//

சிபா,
அதுவா யானையின் மணி திடீரென்று மண்டைக்குள் அடித்தது :))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் கோக. :-)))
//

அட நீங்களும் என்பெயரை சுருக்கிட்டிங்க... தெரிந்த சிலர் 'ஜிகே' என்றும் சொல்வார்கள் :))

பெயரில்லா சொன்னது…

கோவியாரே,

உங்களின் படை(யெடு)ப்புகள் தொடரட்டும்!

பூனை பதுங்குவது பாயத்தான். யானைகள் பதுங்க முடியாது :-0

ஆம, ஒரு ஆளு ஓட்டு போடும் பொழுது ஒரு தபா தான் போட முடியுமா இல்லை திரும்பத் திரும்ப போட முடியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said...
ஒரு ஆளு ஓட்டு போடும் பொழுது ஒரு தபா தான் போட முடியுமா இல்லை திரும்பத் திரும்ப போட முடியுமா?
//
தெகா, ஒரு ஆளு 'ஒரு யூசர் ஐடிக்கு' ஒரு முறைதான் வாக்களிக்க முடியும் :))
வாழ்த்துக்களுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

//தெகா, ஒரு ஆளு 'ஒரு யூசர் ஐடிக்கு' ஒரு முறைதான் வாக்களிக்க முடியும் :))//

ஆனால் பிடித்த அனைத்துப் படைப்புகளுக்கும் அளிக்க முடியும், அந்த ஒருமுறையில்!

இந்தத்தடவை நிறையப் பேருக்கு தெரியாமல் போய்விட்டது இது என நினைக்கிறேன்.

முதல் பரிசுக்கே 38 தான்!

மாற்றத்தைச் சொலியிருக்க வேண்டும் அவர்கள்!
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் அவர்கள்!
அதைத்தான் இந்த தேன்கூடு செய்திருக்க வேண்டும்!
செய்தார்களா?

ஒண்ணுமில்லை!
சும்மா அந்த பரசக்தி சிவாஜி/கலைஞர் வசனம் நினைவுக்கு வந்தது!
எடுத்து விட்டேன்!
தப்பா நினக்காதீங்க!

பெயரில்லா சொன்னது…

ஏங்க கோவி.க,

பிளியபிளிய = பிழியப் பிழிய

டிஸ்கி: நான் எ.பி அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஏங்க கோவி.க,

பிளியபிளிய = பிழியப் பிழிய

டிஸ்கி: நான் எ.பி அல்ல
//

துளசியக்கா,
ஓவராக ரெண்டு தடவை பிழிந்ததால் வார்த்தை வழுக்கிவிட்டது, எழுத்துப் பிழையார் வேலையை பகுதி நேரமாக எடுத்துக்கொண்டதற்கு பாராட்டுக்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மாற்றத்தைச் சொலியிருக்க வேண்டும் அவர்கள்!
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் அவர்கள்!
அதைத்தான் இந்த தேன்கூடு செய்திருக்க வேண்டும்!
செய்தார்களா?//

யார் செய்த குற்றம், தேன் கூடு செய்த குற்றமா ? அல்லது தேன் கூடு அனுமதித்தும் அனைத்துப் பதிவாளர்களுக்கும் வாகளிக்காதவர்கள் செய்த குற்றமா ?
:)

பெயரில்லா சொன்னது…

///
கஜினியை தாண்டி படையெடுப்புகள் தொடரும்.
///
நீங்க எத்தனையாவது முறை வெற்றி பெறலாம் என்று நினைத்திருக்கிறீர்கள்?

:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...

நீங்க எத்தனையாவது முறை வெற்றி பெறலாம் என்று நினைத்திருக்கிறீர்கள்?

:-))))
//

17 முறை என்பது கஜினி வெற்றி பெற்ற கணக்கு ... அதற்குள்ளும் கிடைக்கவில்லை யென்றால் தொடரும் என்பதற்குத்தான் சொன்னேன். சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று நினைக்கக் கூடாது என்பதற்காக எனக்கு நானே சொல்லிக்கொண்ட உற்சாக வார்த்தை :))

பெயரில்லா சொன்னது…

இன்று முதல் கோவி.கண்ணன் பதிவுலக்ப் பெருமக்களால் பேரன்போடு கஜினி கண்ணன் என்று அழைக்கப்படுவராக... அடுத்தப் போட்டியில் தாங்கள் அமர்க்களப் படுத்த என்னுடைய வாழ்த்துக்கள்

அன்புடன்,
தேவ்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dev said...
இன்று முதல் கோவி.கண்ணன் பதிவுலக்ப் பெருமக்களால் பேரன்போடு கஜினி கண்ணன் என்று அழைக்கப்படுவராக... அடுத்தப் போட்டியில் தாங்கள் அமர்க்களப் படுத்த என்னுடைய வாழ்த்துக்கள்

அன்புடன்,
தேவ்.
//

தேவ் ... நீங்கள் கஜினி கண்ணன் என்று சொல்ல, யாராவது கக என்று சுருக்கி... பின் கா(க்)கா என்று சொல்லிவிடப் போகிறார்கள். பட்டப் பெயர் கெட்டப் பெயரா பூடும் :)

பெயரில்லா சொன்னது…

//பட்டப் பெயர் கெட்டப் பெயரா பூடும் :)//


:))))))))))) lol !!

பெயரில்லா சொன்னது…

வித்தகப் பதிவர் கஜினி கண்ணன் அவர்கள் வாழ்க! வாழ்க!

(வித்ததைப் பதிவர் அல்ல)

கோவி.கண்ணன் சொன்னது…

SK said...
//பட்டப் பெயர் கெட்டப் பெயரா பூடும் :)//


எதுகை மோனை இல்லையென்றால்
எதுவும் ஓடாது எனக்கு :))

எப்பவம் வருகிற எங்க ஊர் சிவா
எங்கைய்யா போனீர் ? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//இரா.ஜெகன் மோகன் said...
வித்தகப் பதிவர் கஜினி கண்ணன் அவர்கள் வாழ்க! வாழ்க!

(வித்ததைப் பதிவர் அல்ல)
//
இது என்ன புதுப் பெயர். நீங்கள் என் பதிவுகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு படிப்பவர் என்று நினைக்கிறேன்.

என்னைப் பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டுமென்றால்
'பைத்தியக் காரன் கிழித்த துணியும் கோமணம் ஆகும்' என்பது தான்.

வித்தக பதிவர் - நல்லா இருக்கு

இதுவரை யாரும் மற்றவர்களுக்கு 'குத்தும்' முத்திரை எனக்கு குத்தவில்லை.

என்னை வாழ்த்தும் உங்களுக்கு நன்றிகள்

பெயரில்லா சொன்னது…

//நீங்கள் என் பதிவுகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு படிப்பவர் என்று நினைக்கிறேன்//

ஆமாம்! உங்கள் பதிவுகள் பலவற்றையும் படித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் பின்னூட்டமிடுகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//இரா.ஜெகன் மோகன் said...
ஆமாம்! உங்கள் பதிவுகள் பலவற்றையும் படித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் பின்னூட்டமிடுகிறேன்! //
திரு ஜெகன் மிகவும் நெகிழ்சியாக இருக்கிறது. கோடி கோடி நன்றிகள்
:))

பெயரில்லா சொன்னது…

//
எப்பவம் வருகிற எங்க ஊர் சிவா
எங்கைய்யா போனீர் ? :))
//

புலி கொஞ்சம் வேலையா இருக்காரு வந்துடுவாரு இப்ப !!!!!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்