பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2006

மாறாத இயல்புகள் ...


இன்றும்,
இலக்கு நோக்கி சரியான
இடத்திற்கு செல்கிறது
மேகப் பஞ்சினுள் தண்ணீர் !

அச்சு பிசகாமல்
அதன் சுற்றுப்பாதையில்
உருண்டு செல்கிறது பூமி !

ஒப்பற்ற ஒளிக் கதிர்களை தந்து
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
கதிரவன் !

மூலை முடுக்கு எங்கும்
மூச்சின் சுவாசத்தை
சீர் செய்கிறது காற்று !

ஓசோன் படலத்தை தாண்டி
ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
இருக்கிறது வானம் !

இயன்றவரை நானும் என்
இயல்பு மகிழ்ச்சியில்
திளைத்து மலர்வேன்
இன்றும் !

படம் உதவி : நன்றி திரு சிறில் அலெக்ஸ்

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆம்! இப்போழுதே சிரிக்கத் தொடங்குவீர்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
ஆம்! இப்போழுதே சிரிக்கத் தொடங்குவீர்! //
கூடவே வாங்க .....:-)

பெயரில்லா சொன்னது…

///
ஓசோன் படலத்தை தாண்டி
ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
இருக்கிறது வானம் !
///

இது நல்லயிருக்குங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
ஓசோன் படலத்தை தாண்டி
ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
இருக்கிறது வானம் !

இது நல்லயிருக்குங்க...
//
நன்றி குமரன், நன்றி !!
திடிரென்று பஞ்ச பூதங்களும் அவற்றின் தன்மைகளும் ஞாபகம் வந்தது ... கூடவே என்னையும் அதில் இணைத்துக் கொண்டேன்

பெயரில்லா சொன்னது…

ம்ம் நல்லா தான் இருக்கு ஒவ்வொன்னும்.....

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளது..

நன்றி

பெயரில்லா சொன்னது…

கவிதை கலக்கல். எல்லா வரிகளும் கவர்கின்றது.

பெயரில்லா சொன்னது…

நல்லா இருங்க...

பெயரில்லா சொன்னது…

அட நம்ம படத்த வச்சு ஒரு கவிதை...

அதுவும் நல்ல கவிதை..

வாழ்த்துக்கள்.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்