பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2006

கேள்வி ஞானம் !

அறிவு என்ற சொல்லை ஆழப்படுத்துவது பின்னால் நிற்கும் கேள்வி. கேள்விகள் இல்லையென்றால் இன்றைய உலகம் அறிவியலில் முன்னேறியிருக்குமா என்பது சந்தேகம். நாம் பேசத்தொடங்கும் முன் முதலில் நம் கண்கள் கேள்வியை எழுப்பி விடை தெரியாவிட்டால் மருண்டு அழத்தொடங்கியது. ஆக முதல் கேள்வி என்பது நம் முதல் அழுகையிலிருந்து தொடங்கியதுதான்.

மூன்றுவயதில் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆறுவயது வரை கேள்வி கேட்பதை நிறுத்துவது இல்லை. ஒரு நாளைக்கு 4 வயது குழந்தை 400 கேள்விகள் கேட்டு பெற்றவர்களை திணற அடிப்பதாக தெரிகிறது. கேள்வி கேட்கும் மாணாக்கர்களையே பதில் தெரிந்த ஆசிரியர்கள் விரும்புவார்கள். பதிலுக்கு பாடத்திலிருந்து கேள்வி கேட்டு தேர்வு நேரத்தில் திணற அடிப்பார்கள். பதில் தெரியாத கேள்விகள் பல உண்டு. ஆனால் பதிலுக்கான கேள்விகள் சில மட்டுமே என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.


அண்மையில் 'உலக ரெட்சகர் யார் ?'என்ற கேள்வியை மாணக்கர்களுக்கு வைத்துவிட்டு, அதைத் தொடர்ந்த பல கேள்விக்கனைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழக அரசின் கல்வித்துறை திணறியதை பலரும் அறிந்தது.

கேள்விகள் தான் ஒரு நாட்டை வழி நடத்துகிறது. சட்டசபை கூச்சல், பாராளுமன்ற பாய்ச்சல் எதுவாக இருந்தாலும் அவை எல்லாம் கேள்வி என்ற ஒரு சொல் மூலம் தான் இயங்குகின்றன. கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படும் போது அங்கு ஜனநாயகம் செத்துவிட்டதாக சொல்கிறார்கள். கேள்வி கேட்க எப்பொழுது ஒரு சமூகம் துணிகிறதோ அப்போது அந்த சமூகம் நிமிர ஆரம்பிப்பதாக சொல்கிறார்கள். கேள்வி கேட்பதை தடை செய்யும் அரசுகள் விழுந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஆகவே, ஒரு சமுகத்தின் வீழ்ச்சியே எழுச்சியோ அவை கிடைக்கப்படும் பதிலைக்காட்டிலும் கேட்கப்படும் கேள்விகள் மூலமே தீர்மானிக்கின்றன.


மிக மிக எளிமையான விசயமும், மிகமிக கடுமையானதும் கேள்வி கேட்கப்படுவது என்பதுதான். பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது என்பதும் நாம் உணர்ந்ததுதான்.

சிந்தனைகள் என்பது மனதில் எழும் கேள்விகளின் தொகுப்பு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். அத்தகைய தொடர் கேள்விகள் பல்வேறு தேடலாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையை வளர்க்கும் கேள்விகளே, விஞ்ஞானமாகவும், ஆன்மிகமாகவும், பகுத்தறிவாகவும் வெளிப்படுகிறது.

முழு பிரபஞ்சமும் எண்ணிலடங்கா கேள்விகளை வைத்துக் கொண்டுதான் இயங்குகிறது. முதலில் அந்த கேள்விகளை ஒவ்வொன்றாக கண்டுகொண்ட நாம், அதற்கான பதிலில் அடுத்த கேள்வியை கண்டுபிடிக்கிறோம். இப்படியாக அறிவு நிலையின் வளர்ச்சி என்பது கேள்விஎன்னும் ஊட்டச்சத்தாலேயே வளர்கிறது.

இன்று எதைப்பற்றி நினைக்கலாம் என்ற கேள்வியை நமக்குள் நாம் கேட்கும் பொழுது, அதைத் தொடர்ந்து ஒரு தேடல் வெளிப்பட்டு ஆக்கங்களாக சிறகடிக்கிறது. தொடர்ந்த கேள்விகளின் தாக்குதல் உங்களுக்குள் இருந்தால் உங்கள் ஆற்றலும், அறிவும் வளர்சியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் . இந்திய சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும் தருக்க சாஸ்திரம் என்ற கேள்விகளின் அடிப்படையில் தோன்றியதுதான்.

ஞானமோ, மெய்ஞானமோ, விஞ்ஞானமோ அவைகள் யாவும் கேள்விகள் தேடித்தந்த விடைகளே!

29 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் யாரும் இல்லை

நான் என்ற எண்னம் - கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

முன்னேற்றம் என்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதினாலே!

உரிமைகளைப் பெறுவதெல்லாம்
புரட்சிகள் எழுவதினாலே!

கவிஞர் வாலியின் பாட்டுக்கு MGR பாடியது நினைவுக்கு வந்தது!

ஆமா, இப்ப ஏன் இந்தப் பதிவு?

சும்மா,... நானும் ஒரு கேள்வி கேட்கலாமேன்னுதான்.....!
:) :) :)

பெயரில்லா சொன்னது…

அழைகையிலிருந்து : அழுகையிலிருந்து
ஜனஞாயகம் : ஜனநாயகம்
கேள்விகளே மூலமே : கேள்விகள் மூலமே
தீர்மாணிக்கின்றன : தீர்மானிக்கின்றன

கோவி.கண்ணன் சொன்னது…

//எழுத்துப் பிழை said... //
எழுத்துப் பிழை அவர்களே நன்றி !

பெயரில்லா சொன்னது…

எ.பி. திணறிவிட்டாரே!
திணரிய= திணறிய

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

ஏன்? எப்படி? எதற்கு? எங்கே? யார்? என்ன? ...

மீன்டும் வருவேன்..

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
ஆமா, இப்ப ஏன் இந்தப் பதிவு?//
'யெச்' கய் ஆமாம் சாமியா நீங்கள் !

நல்ல பாடலை நினைவு படுத்தியிருக்கிறீகள். பதிவு எழுதும் போது இந்த பாடல் நினைவுக்கு வரவில்லை.

//ஆமா, இப்ப ஏன் இந்தப் பதிவு?//

'சிந்தனை' என்ற ஒரு சொல்லை நினைத்து சிந்தித்தேன் ... அதனைத் தொடர்ந்து சிந்தனை எழுப்பிய கேள்விகளின் தொகுப்பு தான் அது.

நின் தன் சிந்தனையில் எழுந்த கேள்விக்கு நிந்தனை (உகு) இல்லா எந்தன் பதில் இதுவோ :)))

கந்தனை நினைபவரின்
சிந்தனைக் கேள்வியில்
நிந்தனை இல்லை !
எந்தனை ஆக்கும்
வந்தனைச் செய்தமிழ்
மைந்தனின் சிறிய
சிந்தனை பதிவிது

ஏன்... ?

நிதமும் எதாவது எழுதவேண்டாமா ? என்னத்த எழுதி அழிச்சோம் என்று எனக்கு நானே கேள்வி எழுப்பக் கூடாதல்லவா :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
எ.பி. திணறிவிட்டாரே!
திணரிய= திணறிய
//
எழுத்துப் பிழைக்கும் 'அடி' சறுக்கும் போல் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
கோவி.கண்ணன் அய்யா,

ஏன்? எப்படி? எதற்கு? எங்கே? யார்? என்ன? ...

மீன்டும் வருவேன்..

நன்றி.
//
சிவபாலன் வாருங்கள், வாருங்கள்...

சின்ன சின்ன பாலன் சிவபாலன் வண்ண மயில் ஏறும் வடிவேலன் ...

பெயரில்லா சொன்னது…

மிக மிக எளிமையான விசயமும், மிகமிக கடுமையானதும் கேள்வி கேட்கப்படுவது என்பதுதான். பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது என்பதும் நாம் உணர்ந்ததுதான்.//

சிறந்த வரிகள் கண்ணன்.

இந்த பதிவு ரொம்ப நல்லா வந்துருக்கு.

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

தமிழ்ல இந்த ரகர, றகரம்; லகர, ளகரம், னகர ணகரம் எப்பவுமே பிரச்சினைதாங்க..

எழுத்துப்பிழையே திணரி, சாரி திணறிப்போய்ட்டார்னா பாருங்களேன்:(

கோவி.கண்ணன் சொன்னது…

//tbr.joseph said...
சிறந்த வரிகள் கண்ணன்.//

ஐயா... உங்கள் பாராட்டுக்கள் கேள்விகளுக்கு சன்மானம் கொடுத்திருக்கிறது ...நன்றி :))

// பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது //

அந்த வரிகள் சூடு போடும் வரிகள் போல் உள்ளது ... நானும் 'தடித்த' எழுத்துகளாக மாற்றுகிறேன் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//tbr.joseph said...
தமிழ்ல இந்த ரகர, றகரம்; லகர, ளகரம், னகர ணகரம் எப்பவுமே பிரச்சினைதாங்க..

எழுத்துப்பிழையே திணரி, சாரி திணறிப்போய்ட்டார்னா பாருங்களேன்:(
//

ஆமாம் ஐயா,
சிறிய 'ர' பெரிய 'ற' குழப்பம் எப்பொழுதும் வரும்.. சிறியதுக்கு பெரிய 'ற', பெரியதுக்கு சிறிய 'ர' என்பது இன்னமும் தெரியவில்லை :))

பெயரில்லா சொன்னது…

ஏன் இந்த பதிவு?
என்ற மறுமொழிக்காய் இந்த பதிவா?

(அப்பா...நானும் ரெண்டு கேள்வி கேட்டுட்டேன், அப்ப இன்னும் சின்ன பிள்ளை தான் நான்)

பெயரில்லா சொன்னது…

இன்னும் சில பாடல்கள்!

கேள்வி பிறந்தது அன்று -- நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஞானம் பிறந்தது அன்று -- யாவும்
நடந்தது இன்று. [பச்சைவிளக்கு]


கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
[பார்த்தால் பசி தீரும்]

என் கேள்விக்கென்ன பதில்?
உன் பார்வைக்கென்ன பொருள்?
மணமாலைக்கென்ன வழி?
உன் மௌனம் என்ன மொழி?
[உயர்ந்த மனிதன்]


நடிகர் திலகத்துக்கும், கவியரசுக்கும் சமர்ப்பணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
இன்னும் சில பாடல்கள்!
நடிகர் திலகத்துக்கும், கவியரசுக்கும் சமர்ப்பணம். //
நல்ல கருத்தாக்கம் உள்ளபாடல்களை தெரிவு செய்திருக்கிறீர்கள் sk ஐயா ...

எனக்கு மிகவும் பிடித்த கேள்விப் பாடல்
'கேள்வியின் நாயகனே, எந்தன் கேள்விக்கு பதிலேதய்யா, இல்லாத நாடகத்தில் எழுதாத பாத்திரத்தில் எல்லோரும் நடிக்கின்றோம்'
வாணிஜெயராம் பாடிய பாடல்

பெயரில்லா சொன்னது…

சார்,

நேற்று இரவு இந்த பதிவைப் படித்துவிட்டு படுக்கைக்கு சென்றேன்.

அப்பொழுது என் மகள்(4 வயது) என்னிடம் கேட்ட கேள்வி,

"Why are we sleeping everyday"

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
"Why are we sleeping everyday"
//
ஆமாம் சிவபாலன் என் மகளுக்கு 6 வயது ஆகப்போகிறது... இப்பொழுதுதான் கேள்வி கேட்பதை நிறுத்தியிருக்கிறாள். :))))

பெயரில்லா சொன்னது…

நினைவிற்கு வந்த 'பாட்டொன்று கேட்டேன்... பரவசமானேன்'

* நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?
* ஐயா: ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
* கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
* சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// Boston Bala said...
நினைவிற்கு வந்த 'பாட்டொன்று கேட்டேன்... பரவசமானேன்'

* நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?
* ஐயா: ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
* கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
* சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
//

பாபா உந்தன் வருகைக்காக பலபேறு காத்திருக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? :)))

ஒரு கிக் கேள்வி ...கீழே
ஏன் ஏன் ஏன்
ஒரு கின்னத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன் ?:))

பெயரில்லா சொன்னது…

போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கொரு இடம் வேண்டும்


யாருக்காக? இது யாருக்காக?
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியாம் கலைந்த மாளிகை

இன்னும் வரும்...!!

பெயரில்லா சொன்னது…

எ.பி.

ஓவியாம்==ஓவியம்
:)(

கோவி.கண்ணன் சொன்னது…

// SK said...
இன்னும் வரும்...!! //
ஐயா இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கிங்க போல இருக்கு :))

கோவி.கண்ணன் சொன்னது…

// SK said...
இன்னும் வரும்...!! //
ஐயா இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கிங்க போல இருக்கு :))

பெயரில்லா சொன்னது…

ஏன் என்ற கேள்வி போயிட்டு, பாட்டுக்கு பாட்டு ஆரம்பமாகி விட்டது போல. ஹ்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

பெயரில்லா சொன்னது…

கோவி அய்யா,

அருமையான கட்டுரை. ஒரு கேள்வியின் புறப்பாடுதான், ஒரு விடையின் விடியல் என்பதை விளக்கியதற்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

மனிதன் யோசிக்க தொடங்கியதும் கேள்வி பிறக்கலாயிற்று.. கேள்வி பிறந்ததினால், ஞானம் உண்டாயிற்று.. இது நான் சொல்லலிங்க.. கவியரசர் சொன்னதாக ஞாபகம். நல்ல பதிவு..

-- ச்ரிதர்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
ஏன் என்ற கேள்வி போயிட்டு, பாட்டுக்கு பாட்டு ஆரம்பமாகி விட்டது போல. ஹ்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

//

சிவா,

அதை 'ஏன் ?' என்று கேட்காமல் விட்டுவிட்டீர்கள் என்று எனக்கு வருத்தம் தான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
Thekkikattan said...
கோவி அய்யா,

அருமையான கட்டுரை. ஒரு கேள்வியின் புறப்பாடுதான், ஒரு விடையின் விடியல் என்பதை விளக்கியதற்கு நன்றி!//

தெகா, நான் அய்யா வா ?

பாஸ்டன் பாலா சொல்வது போல் 'எனக்கு டெண்டுல்கர் வயசைவிட 2 - 3 கூட அம்புட்டுத்தான்'

கட்டுரை குறித்த பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்ரீதர் said...
மனிதன் யோசிக்க தொடங்கியதும் கேள்வி பிறக்கலாயிற்று.. கேள்வி பிறந்ததினால், ஞானம் உண்டாயிற்று.. இது நான் சொல்லலிங்க.. கவியரசர் சொன்னதாக ஞாபகம். நல்ல பதிவு..
//

ஸ்ரீதர்,
இதுவும் முழுக்க சொந்த சரக்கு இல்லை, அங்கங்கே 'கேள்வி'ப்பட்டதுதான். கருத்துக்கு மிக்க நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்