பின்பற்றுபவர்கள்

31 ஜூலை, 2006

உங்கள் வீட்டு புதையல்

உங்கள் வீட்டு புதையல்

புத்தகங்களை புதையல் என்று சொல்லலாம்... நிறைய பேருக்கு பக்கத்தில் புதையல் இருந்தாலும் கண்டுகொண்டு பயனடைவர் சிலரே. எல்லாருடைய வீட்டிலும் புத்தகப் புதையல் இருக்கும். அதை ஏதோ ஒரு பூதம் காப்பது போல் எல்லோரும் காத்து வருவதும் உண்மைதான்.

ஒரு மனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் அவருடைய நண்பர்கள் பற்றி தெரிந்தால் தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். அதில் 100 % உடன்பாடு இல்லை. மாறுபட்ட கருத்துள்ளவர்களும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். அது போல் ஒருவரைப் பற்றி தெரிய வேண்டுமானால் அவர் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுவும் 100% சரியில்லை. ஓரளவுக்குத்தான் மாறுபட்ட கருத்துக்களை தர்கம் செய்வதற்காக விரும்பி படிப்பவர்களும் இருக்கிறார்கள் (என்னிய மாதிரி கோஷ்டிகள்).

எப்படியோ புத்தங்கள் தான் நமக்கு முதன்மையான நண்பன் அதன் பிறகு தான் மத்தவர்கள் எல்லோரும். விசய ஞானமோ, விச ஞானமோ புத்தகங்களே போதித்து நமக்கு ஆசானாகவும் இருக்கிறது. புத்தகங்கள் நம் சுய சிந்தனைகளை, நம் சொந்தக் கருத்துக்களையும் மாற்றி நல்வழிப்படுத்துகிறது.

உங்கள் வீட்டு புத்தங்கள், புத்தகப் புழுக்கள் போல் அதன் பெருமையை அதுவும் அறியாமலே இருந்து இருக்கும். எனவே அன்பு வலை நண்பர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளில் இருக்கும் புத்தகங்களை தூசி தட்டி எடுத்து அதன் பட்டியலை தனிப்பதிவாக வெளியிட்டு, சிபா என்கிற 'அருமை' நண்பர் திரு சிவபாலன் வேண்டுகோளின் படி சுட்டியை அவர்பதிவிலோ, அல்லது என்பதிவிலோ இட்டீர்கள் என்றால் அவர் தொகுப்பதற்கு வசதியாக இருக்கும்.

போங்கப்பா போரடிக்காதீர்கள் இதனால் என்ன நன்மை ஆகி விடப்போகிறது ? சரஸ்வதி பூஜைக்குத் தான் நாள் இருக்கிறதே என்று கேட்டால்.

1. உடனடி நன்மை ஒரு புதிய பதிவு
2. உங்கள் புத்தகங்களை நீங்கள் படித்திருக்காவிட்டால் அதைப் படித்தவர்கள் அதன் சிறப்புகளை சுட்டிக்காட்டி உங்கள் புத்தகத்திற்கு ஒரு நல்ல விமோசனம் கிடைக்கும்
3. நீங்கள் விரும்பும் புத்தகங்கள் ஒரு வேளை மற்றவர்களிடம் இருந்தால் அவரிடம் பதிப்பகம் மற்ற இதர விபரங்களை கேட்டு அறியலாம்.
4. நமக்குத் தெரியாத புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கும்
5. புத்தகங்களை எழுதி வெளியிட பலருக்கும் விருப்பம் இருக்கும், குறைந்த பட்சம் புத்தக பட்டியலையாவது வெளியிட்டு முதல் முயற்ச்சி எடுக்கலாம்.

சரி எந்த மாதிரி புத்தகங்களின் பட்டியலை வெளியிடுவது ?
'அந்த' மாதிரி புத்தகங்களின் பட்டியல், டிக்ஸ்னரி, எல்கேஜ் மற்றும் கல்வி சம்பந்த பட்ட புத்தகங்களின் பட்டியல் வெளியிடத் தேவையில்லை. நல்ல கருத்துச் செரிவுள்ள புத்தகங்கள், கதையோ, கவிதையோ, கட்டுரைகளோ, வரலாறோ இன்னும் பிறவோ பற்றிய புத்தகங்களின் பட்டியலை தனிப்பதிவாக வெளியிடவும்.

ஒரு மனிதனுக்கு அசையா சொத்து என்றால் அது அவரவர்வீட்டு புத்தகங்கள் தான். யாரும் கடனும் கேட்க மாட்டார்கள், நாமும் விற்க மாட்டோம். உங்கள் வீட்டு அசையா சொத்துக்கள் எவை எவை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள ஆவல். இதை சங்கிலிப் பதிவு போல் வேண்டுகோளாக, நீங்கள் வெளியிட்டு உங்கள் பதிவில் நீங்கள் விரும்பும் வலைப்பதிவாளர்களை ஒன்றோ, சிலரோ அழைத்து வெளியிடச் சொல்லலாம்.

நான் ஏற்கனவே புத்தக பட்டியலை வெளியிட்டு விட்டேன். எனவே நான் தங்கள் புத்தகங்களை வெளியிட அழைக்கும் நண்பர் மற்றும் நண்பிகள்

1. திரு எஸ்கே
2. திருமதி துளசிகோபால்
3. திருசெந்தழல் ரவி
4. திரு குமரன் (எண்ணம்)

பி.கு: தமிழ்மண முகப்பில் பதிவர் வட்டம் மற்றும் 'புத்தகம்' என்ற பிரிவில் வகைப்படுத்துதல் நலம் !

34 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவியாரே,

//யாரும் கடனும் கேட்க மாட்டார்கள், நாமும் விற்க மாட்டோம். உங்கள் வீட்டு அசையா சொத்துக்கள் எவை எவை...//

அது யாருங்க உங்களுக்கு தவறாக செய்தி கொடுத்தது, யாரும் கடனும் கேட்க மாட்டார்களென்று. சில பேருக்கு அடுத்தவங்க வச்சுருக்கிற புத்தகத்த பார்த்தவுடன் தான் படிக்கணுமின்னே தோணும். அப்புறமென்ன நம்மூட்டு புத்தகம் அவங்கூட்டு ஆகிடும்.

சில பேருகிட்ட நீங்க படிச்சுப்புட்டு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு அதனை பர்த்தி நீங்க பேசப்போக அந்த புத்தகத்துக்கு தலைவலின்னு பொருள், அடுத்த நிமிஷம் உங்க புத்தகத்தை பறிமுதல் பண்ணாத குறையா, உங்ககிட்ட இருந்து பறிச்சு அது எங்க போனிச்சுன்னே தெரியாத அளவுக்கு காணம போயிடும்... இப்படி பல கதை இருக்கு...

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said... அது யாருங்க உங்களுக்கு தவறாக செய்தி கொடுத்தது, யாரும் கடனும் கேட்க மாட்டார்களென்று. சில பேருக்கு அடுத்தவங்க வச்சுருக்கிற புத்தகத்த பார்த்தவுடன் தான் படிக்கணுமின்னே தோணும். அப்புறமென்ன நம்மூட்டு புத்தகம் அவங்கூட்டு ஆகிடும்.
//
தெகா,
நீங்கள் 'அந்த' மாதிரி புத்தகங்களை சொல்கிறீர்களா என்று தெரியவில்லை :)
அட அந்த புத்தகங்கள் கொடுக்கல் கொடுக்கல் தான் திரும்ப வாங்கல் இல்லை :)

//சில பேருகிட்ட நீங்க படிச்சுப்புட்டு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு அதனை பர்த்தி நீங்க பேசப்போக அந்த புத்தகத்துக்கு தலைவலின்னு பொருள், அடுத்த நிமிஷம் உங்க புத்தகத்தை பறிமுதல் பண்ணாத குறையா, உங்ககிட்ட இருந்து பறிச்சு அது எங்க போனிச்சுன்னே தெரியாத அளவுக்கு காணம போயிடும்... இப்படி பல கதை இருக்கு... //
சுவையான கதைகளை எடுத்துவிடுங்கள். படித்து மகிழ்கிறோம் :)

பெயரில்லா சொன்னது…

GK,

மிக்க நன்றி. புத்தகம் எனபது ஒவ்வொரு சமுதாயத்தின் புதயலும் கூட...அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..

என்னுடைய பெயரைப் பயன் படுத்தி பதிவிட்டால், ஏதொ ஒரு தனி மனிதனுக்காக இச் சேவையை செய்வது போல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிடும். அதனால் தயவு செய்து என் பேரை முடிந்தவரை தவிர்க்கவும்.

மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// Siba said... தயவு செய்து என் பேரை முடிந்தவரை தவிர்க்கவும்//

கவலைப் படாதீர்கள் ... எல்லோரும் வெளியிட்டு முடிந்தபின் தவிர்த்துவிடுவார்கள். :)

பெயரில்லா சொன்னது…

// யாரும் கடனும் கேட்க மாட்டார்கள், நாமும் விற்க மாட்டோம்.//

அனுபவ உணமை போலும்..

கோவி.கண்ணன் சொன்னது…

***Sivabalan said...
அனுபவ உணமை போலும்.. ***

சிபா,
என் மூஞ்சிய பார்த்த புத்தகம் படிக்கும் ஆள் போல் தெரிவதில்லை போலும், அதனால் யாரும் இதுவரை இரவல் கேட்பதில்லை.ஆனால் விடியோ டிஸ்குகள் போனால் திரும்பாது :)

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நாளைக்கு முன்னாலேயே இதுமாதிரி ஒண்ணு போட்டுருந்தேன். தேடி எடுத்துச்
சுட்டி கொடுக்கட்டுமா?
இப்ப இன்னும் சில புத்தகங்கள் சேர்ந்திருக்கு:

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ரொம்ப நாளைக்கு முன்னாலேயே இதுமாதிரி ஒண்ணு போட்டுருந்தேன். தேடி எடுத்துச்
சுட்டி கொடுக்கட்டுமா?
இப்ப இன்னும் சில புத்தகங்கள் சேர்ந்திருக்கு: //

துளசி அக்கா,
நேரம் இருந்தால் தனிப் பதிவாக போடுங்கள் .. ஒன்றும் அவசரமில்லை. இல்லையென்றால் சுட்டிக் கொடுத்துவிடுங்கள். நன்றி

பெயரில்லா சொன்னது…

என்னோடது முக்காவாசி காமிக்ஸ் புத்தகமா இருக்குமே பரவாயில்லையா...

:))

பெயரில்லா சொன்னது…

//ஓரளவுக்குத்தான் மாறுபட்ட கருத்துக்களை தர்கம் செய்வதற்காக விரும்பி படிப்பவர்களும் இருக்கிறார்கள் (என்னிய மாதிரி கோஷ்டிகள்).
//

கோவி-யிடம் பிடித்ததே இந்த உண்மை சொல்லும்(???)பாங்குதான்,

//நம் சுய சிந்தனைகளை, நம் சொந்தக் கருத்துக்களையும் மாற்றி நல்வழிப்படுத்துகிறது.//

ஓ... பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களுக்கெல்லாம் உம்முமைடைய "புய்த்தகம்" தான் காரணமோ...

//'அந்த' மாதிரி புத்தகங்களின் பட்டியல்,//

சரோஜாதேவி ரசிக மன்றத்தினறே நமக்கு(???)இட ஒதுக்கீடு கிடையாதாம்,வாருங்கள் போராட கிளம்புவோம்,

//யாரும் கடனும் கேட்க மாட்டார்கள், நாமும் விற்க மாட்டோம். //

கடன் என்று யாரும் கேட்க மாட்டார்கள் தான், ஆனால் "ஓசி"(இதோ தருகிறோம் என்று)வாங்கி விட்டு திரும்ப கொடுப்பதற்க்குத் தான் பாவம் மறந்துவிடுவார்கள்(??!)அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

பாத்தீங்களா கே..கே என்னைய விட்டுபுட்டீங்களே நான் நூலகம் வந்த கதையத்தான சொல்லிருக்கேன் இன்னும் பட்டியல் போடலியே பரவால்லை யாரும் கேக்கலைன்னாலும் பட்டியல் போட்டுடுவோம்
(இன்னைக்கு பதிவெழுத ஒரு விஷயம் கிடச்சாச்சுப்பா)

கோவி.கண்ணன் சொன்னது…

// செந்தழல் ரவி said...
என்னோடது முக்காவாசி காமிக்ஸ் புத்தகமா இருக்குமே பரவாயில்லையா...

:)) //
காமிக்கிற மாதிரி காமிக்ஸ் பராவாயில்லை :) போடுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
பாத்தீங்களா கே..கே என்னைய விட்டுபுட்டீங்களே நான் நூலகம் வந்த கதையத்தான சொல்லிருக்கேன் இன்னும் பட்டியல் போடலியே பரவால்லை யாரும் கேக்கலைன்னாலும் பட்டியல் போட்டுடுவோம்
(இன்னைக்கு பதிவெழுத ஒரு விஷயம் கிடச்சாச்சுப்பா)
மகேந்திரன்.பெ said...
பாத்தீங்களா கே..கே என்னைய விட்டுபுட்டீங்களே நான் நூலகம் வந்த கதையத்தான சொல்லிருக்கேன் இன்னும் பட்டியல் போடலியே பரவால்லை யாரும் கேக்கலைன்னாலும் பட்டியல் போட்டுடுவோம்
****(இன்னைக்கு பதிவெழுத ஒரு விஷயம் கிடச்சாச்சுப்பா) ****
//

அதைத் தான் உடனடி நன்மையாக பட்டியல் போட்டிருக்கோம்மில்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//சரோஜாதேவி ரசிக மன்றத்தினறே நமக்கு(???)இட ஒதுக்கீடு கிடையாதாம்,வாருங்கள் போராட கிளம்புவோம்,//
சரோஜா தேவி புக்கெல்லாம் எழுதியிருக்காங்களா ? அவுங்க நான் மாந்தோப்பு சென்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான் என்று பாட்டுபாடி பறக்கும் பாவையாகத் தான் எம்ஜிஆர் சிவாஜி கூட நடிச்சாங்க ந்னு கேள்விப் பட்டு இருக்கேன். நீங்கள் சொல்வது நல்ல தகவலாக இருக்கே. அம்பிகா, ராதா, ராதிகா தான் கதை எளுதுவாங்கன்னு தெரியும், சரோஜ தேவியும் எளுதியிருக்காங்களா, அதுக்குத்தால் 'உங்கள் நண்பன்' மாதிரி ஆளுங்க வேணுங்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓ... பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களுக்கெல்லாம் உம்முமைடைய "புய்த்தகம்" தான் காரணமோ...//
புய்தகங்களும் காரணம் பொய்தகங்களும் காரணம்... ஹி ..ஹி அன்னம் மாதிரி தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
பாத்தீங்களா கே..கே என்னைய விட்டுபுட்டீங்களே நான் நூலகம் வந்த கதையத்தான சொல்லிருக்கேன் இன்னும் பட்டியல் போடலியே பரவால்லை யாரும் கேக்கலைன்னாலும் பட்டியல் போட்டுடுவோம்
(இன்னைக்கு பதிவெழுத ஒரு விஷயம் கிடச்சாச்சுப்பா)
//
மகி,
நான் ஒரு உதாரணத்திற்குத் தான் நாளு பேரை அழைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் பட்டியலை வெளியிட்டு 4 பேர இழுத்து விடுங்க :)
இப்பத்தான் ஒரு ஆளூ சரோஜா தேவி புத்தகம் வெச்சிருக்கேன்னு வாயை தொறந்து சொல்லியிருக்கார். :)

பெயரில்லா சொன்னது…

//சரோஜா தேவி புக்கெல்லாம் எழுதியிருக்காங்களா ? //

ஹலோ... கோவி , இதெல்லாம் ரெம்ப ஓவரு ஆமா,

உமக்கு உண்மையாகவே சரோஜா தேவி"டைப்" புத்தகம் என்றால் என்னவேன்றே தெரியாதா..?

தொடர்ந்து படிக்க ஆண்டு சந்தாவெல்லாம் கட்டியது மறந்து போய்டுச்சோ..?


அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

//இப்பத்தான் ஒரு ஆளூ சரோஜா தேவி புத்தகம் வெச்சிருக்கேன்னு வாயை தொறந்து சொல்லியிருக்கார். :) //

எங்கே எங்கே:)
இல்ல எனக்கு நம்ம சாருநிவேதிதா சார் ஞாபகம் வந்திடுச்சு
http://kilumathur.blogspot.com/2006/05/blog-post_114857011995728095.html

கோவி.கண்ணன் சொன்னது…

// உங்கள் நண்பன் said...
சரோஜா தேவி புக்கெல்லாம் எழுதியிருக்காங்களா ? //

ஹலோ... கோவி , இதெல்லாம் ரெம்ப ஓவரு ஆமா,

உமக்கு உண்மையாகவே சரோஜா தேவி"டைப்" புத்தகம் என்றால் என்னவேன்றே தெரியாதா..?

தொடர்ந்து படிக்க ஆண்டு சந்தாவெல்லாம் கட்டியது மறந்து போய்டுச்சோ..?
//

'டைப்' புத்தகம் என்றால் தட்டச்சு செஞ்சதா ? சந்தா யாரு கலெக்ட் பண்ணியது நீங்களா ?
ஐ திங்க் நீங்க தப்பா ஏதோ சொல்றீங்கன்னு நெனக்கிறேன். தம்பிக்கு எந்த ஊரு .. படத்தில் ரஜினிகாந்த் படிப்பார் 'சாமியார்' புக்கா ? ஓ புரியுது புரியுது

கோவி.கண்ணன் சொன்னது…

// மகேந்திரன்.பெ said... எங்கே எங்கே:)
இல்ல எனக்கு நம்ம சாருநிவேதிதா சார் ஞாபகம் வந்திடுச்சு//

மகி, சாரு பேர மோரு ஆக்கிடாதிங்க... பாவம் அவர் நல்ல இலக்கிய படைப்பாளர் :))

பெயரில்லா சொன்னது…

அழைத்தற்கு மிகவும் நன்றி. யோசிக்க வேண்டும் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று யோசித்துப் பார்த்து போட்டு விடுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

//தமிழ்மண முகப்பில் பதிவர் வட்டம் மற்றும் 'புத்தகம்' என்ற பிரிவில் வகைப்படுத்துதல் நலம் !//

நிச்சயம் நல்ல யோசனை...

அனைவரும் கடைபிடித்தால் மிக நன்று..

பெயரில்லா சொன்னது…

கோவியாரே
நானும் ஒரு சிறு பட்டியல் போட்டிருக்கேன்..

http://kappiguys.blogspot.com/2006/07/blog-post_31.html

// தம்பிக்கு எந்த ஊரு .. படத்தில் ரஜினிகாந்த் படிப்பார் 'சாமியார்' புக்கா ? //
தலீவர் படிக்கற அதே புக் தான் :D

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
கோவியாரே
நானும் ஒரு சிறு பட்டியல் போட்டிருக்கேன்..
//
கப்பி உடனே படிச்சிடுறேன் :)

பெயரில்லா சொன்னது…

http://kathalregai.blogspot.com/2006/07/blog-post_31.html

இட்டு விட்டேன் ஐயா.

பெயரில்லா சொன்னது…

ஆகா, கோவியாரே என்னோட சுட்டியை வழங்க மறந்துட்டேன், இந்தாங்க உங்க பதிவு பின்னூட்டத்தில இருக்கட்டும்... யாரவது தட்டி முட்டி அந்த பக்கமும் வருவதற்கு வாய்ப்பா இருக்கும்...

அது போல நீங்களும் வந்து உங்க சுட்டியை (ஒழுங்க ;-)) என் பதிவில இட்டு ஒரு # கூட்டி வைங்க ;-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said... அது போல நீங்களும் வந்து உங்க சுட்டியை (ஒழுங்க ;-)) என் பதிவில இட்டு ஒரு # கூட்டி வைங்க ;-))) //
உங்களைதையும் கூட்டியாச்சி என்னோடதையும் கூட்டியாச்சி :))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
http://kathalregai.blogspot.com/2006/07/blog-post_31.html

இட்டு விட்டேன் ஐயா.

August 01, 2006 12:32 PM
//
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... சிஷ்ய கோடிகள் நன்றாகவே நற்பணி செய்கிறீர்கள் :))

பெயரில்லா சொன்னது…

அடெடா, உண்மையிலேயே மற்ந்துட்டேங்க... அசடு வழிந்து கொண்டே, தெகாவின் சுட்டி வழங்கப்படுகிறது...

http://thekkikattan.blogspot.com/2006/07/blog-post_30.html

பெயரில்லா சொன்னது…

ஆஜர்...

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said...
அடெடா, உண்மையிலேயே மற்ந்துட்டேங்க... அசடு வழிந்து கொண்டே, தெகாவின் சுட்டி வழங்கப்படுகிறது...

//
தெகா ... பரவாயில்ல ... ஒன்னுக்கு ரெண்டா சேர்ந்து கூட ரெண்டு சேர்ந்து நாலு பின்னூட்டம் சேர்ந்துடுச்சி... இதுக்கு நானும் ஒரு கைமாறு செஞ்சாகனுமே .. செய்கிறேன் ... பதிவு கீழே இறங்கும் போது :))

கோவி.கண்ணன் சொன்னது…

// செந்தழல் ரவி said...
ஆஜர்...
//
உள்ளேன் ஐயா :))

பெயரில்லா சொன்னது…

//10 நாளைக்கு விளையாட வருகிறேன் ... அப்பறம் வீட்டுக்கார மேடம் வந்துடுவாங்க //

ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :)

//என்னோட பதிவில் பின்னூட்டம் கொட்டே கொட்டுன்னு கொட்டுது//

ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :(

பெயரில்லா சொன்னது…

//10 நாளைக்கு விளையாட வருகிறேன் ... அப்பறம் வீட்டுக்கார மேடம் வந்துடுவாங்க //

ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :)

//என்னோட பதிவில் பின்னூட்டம் கொட்டே கொட்டுன்னு கொட்டுது//

ஹிம் எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்ல :(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்