பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2006

நட்சத்திரம் ஆகும் ஆசை இருக்கிறதா ?

விவாத களங்கள் சூடாகும் போது என்ன நடக்கிறது, ஆதாயம் பெற்றவர்கள் யார் ? பாதிக்கப்பட்டவர்கள் யார் ? என்று பார்த்தோமேயானால். ஆதாயம் பெற்றவர்கள் ? பெருசா ஒன்றும்மில்லை 100களை தாண்டிய பின்னூட்டங்கள் மட்டுமே. இதில் பாதிக்கப்படுவது தமிழ்மணத்தால் தேர்ந்தெடுக்கப் பட்ட *நட்சத்திரம்*.
ஆம் நட்சத்திர வாய்ப்பென்பது பதிவர்களின் கனவு. எத்தனையோ பதிவர்களின் எழுத்துத் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் ஒரு பொன்னான வாய்ப்புத்தான் தமிழ்மண நட்சத்திரம் என்ற ஒரு வார அங்கீகாரம். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி, தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தி 'நல்ல பதிவாளர்கள், சிந்தனையாளர்கள் ' என்று தம்மை அடையாளம் காட்டியுள்ளனர் பலர். ஒரு வாரத்தில் எழுதப்படும் நட்சத்திரப் பதிவுகள் எல்லாமும் சுவையாக இல்லாவிட்டாலும் சில பதிவுகள் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்துவிடும், அதைப்பற்றிய விவாதங்கள் பின்னூட்டங்கள் வழியாக தெரியவருவதும் நடைமுறை.

ஆனால் கடந்த இருவாரங்கள் ஏற்பட்ட திடீர் சர்சைகளால் நட்சத்திரங்கள் என்ன எழுதினார்கள் என்பதே தெரியவில்லை. நட்சதிர எழுத்துக்கள் புறக்கணிக்கப்பட்டது போன்ற தோற்றம் உருவாகி, நான் சொன்னது சரி, நீ சொல்வது தவறு, புரிந்துணர்வு இல்லை, அதற்கு இது பொருளல்ல, போன்ற பதிவுகள் மாறி மாறி எழுதப்பட்டு விவாதக்களங்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு சூடாகவே காணப்பட்டது. நீண்ட விவாதங்களை மட்டும் படித்துவிட்டு, நட்சத்திரங்களின் பதிவுகளை மறந்து போனதில் நானும் ஒருவன்.

ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம், ஆனால் நடந்த விவாதங்கள் மூலம் ஆதங்கங்களை மட்டுமே சம்பந்தப்பட்டவர் விளக்கினர், ஆனால் பின்னூட்டமிட்ட சக பதிவாளர்களில் எவ்வளவு பேர் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்பது தனித்தனியே அதுபற்றிய பதிவுகள் போட்டதன் மூலம் தெரியவருகிறது. எது எப்படியோ, சக பதிவாளர் ஒருவர் நட்சத்திரமாக வலம் வரும் போது அவர்களுடைய எழுத்துக்களை சர்சைகள் மூலம் தெரியாமலோ, உணராமலோ புறக்கணிக்கப்பட்டதாக நினைக்க முடிகிறது. நட்சத்திரம் ஆகும் ஆசை உள்ளவர்கள் யாரும் இருந்தால் இது போன்ற நிகழ்வுகளை கவனத்தில் கொண்டால், ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுகள் எழுதும் போது பின்னூட்டம் வரவில்லையென்றால் ஆறுதல் தேடிக்கொள்ளலாம். நட்சத்திர பதிவுகளை படிக்காமல் போனதற்கு நான் வெட்கப்படுகிறேன்.
14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி. கண்ணன் ஐயா. நீங்கள் நினைத்த அளவுக்கு நிலைமை மோசம் இல்லை. நான் இந்த வார விண்மீனின் கட்டுரைகளில் இன்னும் இரண்டினைத் தான் படிக்க வேண்டும். மற்றவற்றை எல்லாம் படித்தாயிற்று. அந்தக் கட்டுரைகளின் கனம் மிக அதிகமாக இருப்பதால் எதனைப் பின்னூட்டமாகச் சொல்ல நினைத்தாலும் அது செயற்கையாகத் தோன்றியதால் பதிவுகளை மட்டும் படித்துவிட்டு வந்துவிட்டேன். அப்படி நிறைய பேர் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எந்தக் காலத்தில் தான் தமிழ்மணத்தில் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தன. புதிது புதிதாக வலைப்பதிவர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஏற்கனவே பேசப்பட்ட விதயங்களே மீண்டும் மீண்டும் புதுப்புது வாதங்களுடன் பேசப்படுகின்றன. ஆனால் இந்தச் சர்ச்சைகள் இருக்கும் போதே நல்ல பதிவுகளைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் படித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்று தான் எண்ணுகிறேன்.

இந்த வார விண்மீன் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாததால் அவருடைய பதிவுகள் தமிழ்மணத்தில் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளி'ல் வரவில்லை. அவர் பதிவுகளைப் படிக்க விண்மீன் பக்கத்திற்கே சென்றுப் பார்த்தால் தான் உண்டு. பதிவுகள் இடும்போது படிக்காமல் விட்டாலும் மறுமொழியப்பட்டப் பட்டியலில் வரும்போது படித்துவிடுவோம். இந்த முறை அது இல்லாததால் நீங்கள் அவரின் பதிவுகளைக் கவனிக்காமல் விட்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நானும் முதல் இரண்டு நாட்கள் விண்மீன் பதிவுகளைப் படிக்கவில்லை. பின்னர் தான் நினைவிற்கு வந்து விண்மீன் பக்கத்திற்குச் சென்று படிக்கத் தொடங்கினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த வார விண்மீன் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாததால் அவருடைய பதிவுகள் தமிழ்மணத்தில் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளி'ல் வரவில்லை.//
திரு குமரன்,
நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவருடைய பதிவிற்கு சென்று குறைவான பின்னூட்ட எண்ணிக்கையை பார்த்துவிட்டு வந்துதான் பதிவை தமிழ்மணத்தில் சேர்த்தேன். உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

ஆதயம் : ஆதாயம்
வாய்பென்பது : வாய்ப்பென்பது
வாய்பை : வாய்ப்பை
கண்டிப்பாகா : கண்டிப்பாக
விவதாங்களை : விவாதங்களை

கோவி.கண்ணன் சொன்னது…

'எழுத்துப் பிழை' அவர்களே நன்றி !

பெயரில்லா சொன்னது…

நீங்க சொல்வது உண்மை தான் கண்ணன், போன வாரம் wings of voice என்பவரின் ஒரு பதிவை தான் படித்தேன். இந்த வாரம் விக்னேஷ் அவர்கள் பதிவையாவது தொடர்ந்து படிக்க வேண்டும்.
நீங்க எப்ப நட்சித்திரம் ஆக போகின்றீர்கள்.
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

/*
நாகை சிவா said...
நீங்க எப்ப நட்சித்திரம் ஆக போகின்றீர்கள்.
*/
எனக்கு அந்த மாதிரி தப்பான ஆசையெல்லாம் இல்லை ): :(

பெயரில்லா சொன்னது…

///
அந்தக் கட்டுரைகளின் கனம் மிக அதிகமாக இருப்பதால் எதனைப் பின்னூட்டமாகச் சொல்ல நினைத்தாலும் அது செயற்கையாகத் தோன்றியதால் பதிவுகளை மட்டும் படித்துவிட்டு வந்துவிட்டேன். அப்படி நிறைய பேர் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
///
நான் ஞாயிறு அன்று சென்று அனைத்து பதிவுகளையுமே படித்த பொழுது இதையேதான் உணர்ந்தேன். இருந்தாலும் தோன்றியதை சொல்லி வந்தேன்.
///
இந்த வார விண்மீன் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாததால் அவருடைய பதிவுகள் தமிழ்மணத்தில் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளி'ல் வரவில்லை. அவர் பதிவுகளைப் படிக்க விண்மீன் பக்கத்திற்கே சென்றுப் பார்த்தால் தான் உண்டு.
///
இதனால் தான் ஞாயிறு அன்று சென்று படித்தேன்.

அவர் சொன்ன வந்த தகவல்கள் மிக நன்றாகவும் உபயோகமாகவும் இருந்தது மேலும் பலரை சென்றடைந்திருக்க வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் எண்ணம் said...
அவர் சொன்ன வந்த தகவல்கள் மிக நன்றாகவும் உபயோகமாகவும் இருந்தது மேலும் பலரை சென்றடைந்திருக்க வேண்டும் //
திரு குமரன் (எண்ணம்) , நானும் பார்த்தேன் அவருடைய (சென்ற வார நட்சத்திரம்) பதிவுகளில் நீங்கள் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள். ஆனால் மற்றவர்களின் பின்னூட்டம் மிக மிக குறைவு :((

பெயரில்லா சொன்னது…

//எனக்கு அந்த மாதிரி தப்பான ஆசையெல்லாம் இல்லை ): :( //
அப்ப நட்சித்திரம் ஆக ஆசைப்படுகின்றவர்கள், நட்சித்திரமாக இருந்தவர்கள் எல்லாம் தப்பானவங்களா...

பெயரில்லா சொன்னது…

//எனக்கு அந்த மாதிரி தப்பான ஆசையெல்லாம் இல்லை ): :( //
அப்ப நட்சித்திரம் ஆக ஆசைப்படுகின்றவர்கள், நட்சித்திரமாக இருந்தவர்கள் எல்லாம் தப்பானவங்களா...

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said... அப்ப நட்சித்திரம் ஆக ஆசைப்படுகின்றவர்கள், நட்சித்திரமாக இருந்தவர்கள் எல்லாம் தப்பானவங்களா... //
என்னோட ஆசை தப்பானது என்று சொல்லவந்தேன். ஹலோ இந்த பதிவே நட்சத்திரங்களின் மீதான நல்லெண்ணத்தில் போடப்பட்டுள்ளது. :((

பெயரில்லா சொன்னது…

நீங்க நட்சத்திரமா செலக்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள்...ஹி ஹி

கோவி.கண்ணன் சொன்னது…

// செந்தழல் ரவி said...
நீங்க நட்சத்திரமா செலக்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள்...ஹி ஹி
//
ரவி, அப்படியே ஒரு ஊதுபத்திய கொளுத்தி வச்சு கும்பிட்டுட்டு போங்கள் :((

பெயரில்லா சொன்னது…

கண்ணன் நட்சத்திரங்களின் பதிவுகளை படிப்பவர்கள் படிச்சிட்டு தான் இருக்காங்க, அதுக்காக விவாதங்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும். அப்படி பார்த்தால் எப்பவுமே விவாதம் செய்ய முடியாது. விவாதம் அப்படின்னு வந்துட்டா எல்லோரும் தான் அவர்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் சும்மா ரெண்டு பேர் விவாதம் செய்ய வலைபதிவு எதுக்கு தனியா மெயில் போட்டு விவாதிச்சிட்டு இருக்கலாம் இல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்