பின்பற்றுபவர்கள்

6 ஜூலை, 2006

பாண்டிபஜார் கடை(சிறுகதை)

பொம்பளைங்க சமாச்சார மெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று நன்கு தெரிந்தும் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. பொறந்தாலும் ஆம்பளையாக பொறக்க கூடாது ... அப்படி பொறந்து விட்டால் கல்யாணம் கட்டிக்க கூடாது ... என்று இந்த மாதிரி சந்தர்பங்களில் நினைப்பேன் ... இந்த பொருளை யெல்லாம் ஒரு மனைவி கனவனிடம் கேட்டு வாங்கி வரச் சொல்வது சரியா ?

காப்பியை நீட்டிக் கொண்டே ...

"என்னங்க ... போனதடவை வாங்கிட்டு வந்திங்களே ... இங்க பாருங்க ... ஒரு அதுக்குள்ள தையல் விட்டு போச்சி"

கையில் எடுத்துக் கொண்டு வந்து காட்டினாள்

"ஏன்டி ... காப்பி குடிக்கும் போது .... காலையில் ... இது முகத்தில் தான் நான் விழிச்சிட்டு போகனுமா ?"

"காலையில் தானே வெளியில் செல்கிறீர்கள்... இப்ப காட்டாமல் வேற எப்ப காட்டுவது"

"உனக்கு நான் ... என்ன தான் பாத்து பாத்து வாங்கிட்டு வந்தாலும் ... சரியா இருக்காது"

"இவ்வளவு நாளா நீங்களும் பாத்துகிட்டு தானே இருக்கிங்க ... சைஸ் கரக்டா பாத்து வாங்கி வரக்கூடாதா ?"

"இதெல்லாம் ... பாத்துதான் வாங்கி வர முடியும் ... போட்டுப் பாத்து வாங்கிட்டு வர்ர சமாச்சாரமா ? ... கடைக்காரன் சிரிக்க மாட்டானா ?"

"நீங்கள் சொவதும் சரிதான்"

"தெரியுதுல்ல ... நான் என்ன செய்யமுடியும் ?"

"இது தான் எடுப்பா இருக்கு... அழுத்தி பார்த்து இது தான் மென்மையா இருக்குன்னு ... போடுகிறபோது பக்கத்தில் நின்னுகிட்டு சொல்றிங்க ..."

"போடுகிற போது தானே சொல்ல முடியும்... அதுக்குன்னு டைம் ஒதுக்கி தொட்டுப் பார்த்தா சொல்ல முடியும் ?"

"நீங்க சொல்றதும் சரிதான் ... நானே போய் வாங்கிட்டு வருவது தான் எனக்கு எப்பவும் சரியாக இருக்கு ..."

"ஆமாம் நீ ... பாத்து வாங்கிட்டு வருவதெல்லாம் சரியாதான் இருக்கு, அதுனால இந்த விசயத்துல ... "

"கண்ணாலேயே அளவெடுக்க தெரியும்னு மட்டும் பீற்றிக் கொள்வீர்கள்.. போன தடவை வாங்கி வந்து ரொம்ப லூசாக ... போங்க ... அத போட்டுக்கிட்டு ... எல்லோரும் திரும்பி பார்த்து அசிங்கமாக ஆகிவிட்டது ... அதுக்கு முன்னால வாங்கிட்டு வந்தது ... ரொம்ப இறுக்கம் ... புண்ணாக்கிடுச்சி ... நான் காமிச்சேன் ... நீங்க பார்த்திங்கல்ல ..."

"அதுக்கு தான் மருந்து போட்டு நல்லா தடவி விட்டேனே ... இன்னுமா ... சரியாகலே கொஞ்சம் காட்டு பாப்போம்"

"ஒரு ஆம்பளைக்கிட்ட ... எப்பப்ப பாத்தாலும் ... காட்ரதுன்னா ... போங்க எனக்கு கூச்சமாக இருக்கு"

"என்கிட்ட என்ன கூச்சம் வேண்டி கிடக்கு ... புண்ணு இன்னும் இருக்க இல்லையான்னு பாத்தா தானே தெரியும் ... நான் பார்க்காததா ... இல்லை நீ காட்டாததா ? "

"நான் சீரியசா சொல்றேன் ....நாளைக்கு ஒரு பங்சனுக்கு போகவேண்டி இருக்கு ... இருக்கிறது எல்லாமே ... சரியில்லைங்க ... வேற வழியில்லாமல் தான் உங்ககிட்ட சொல்கிறேன் ... புரிஞ்சிக்குங்க"

"இப்ப என்ன தான் நான் செய்யனும் ... ?"

"எங்கிட்ட கல்யாணம் ஆன புதுசில் வாங்கினதுல ஒன்னு பத்திரமா இருக்கு ... பழசாக இருந்தாலும் அது ஒன்னு தான் எனக்கு சரியான அளவா இருக்கு ... அதை எடுத்துட்டு போங்க"
"கர்மம் கர்மம் ... பழசை தூக்கிட்டுப் போய் ... எப்படி கடைக்காரனிடம் கேட்பது... ?"

"எத்தனையோ பேர் வாங்குறத நான் பாத்திருக்கேன் ... இரண்டும் அளவு சரியாக இருக்கனும் ... சரியா பாத்து வாங்குங்க ...பாக்குறப்ப ஒரே மாதிரி தான் இருக்கும் ... போடுகிற போதுதான் சரியா இருக்கா இல்லையான்னு தெரியும் ... கோட்டை விட்டுடாதிங்க "

"அவசியமா... நானே தான் வாங்கிட்டு வரனுமா ?"

"என்னங்க பண்ணுறது ... எனக்கு அவசியம் நாளைக்கு வேண்டும்"

"சரி அதை எடுத்து பையில போட்டுக் கொடு ... எப்போதும் வாங்குற கடையிலேயே வாங்கிட்டு வந்துடவா?"

"வேண்டாங்க ... அது சரியில்லை ... பாண்டி பஜாரில் ... பக்கத்தில் நாயுடுகால்"

"போதும் இதுக்கு மேல சொல்லாதே ... இடம் நல்லா தெரியும் ... நிறைய தடவை பாத்திருக்கேன் ..."


என்று மனைவியின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டு ... அலுவலகம் சென்ற நான் ... அலுவலகம் முடிந்ததும் கிளம்பி பாண்டிபஜாருக்கு சென்று நாயுடுகால் பக்கத்தில் உள்ள பாட்டா கடைக்குள் நுழைந்தேன்.

38 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவியாரே,

ஹி..ஹி..பாட்டா செருப்புக்கடைக்கு சரியான பில்ட் அப்பு. கொஞ்சம் பயம் கலந்த டென்ஷனோடதான் படிச்சேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Hariharan said...
கொஞ்சம் பயம் கலந்த டென்ஷனோடதான் படிச்சேன்.

5:23 PM //

வாங்க வாங்க நீங்க தான் மொத ஆளு. எழுதறப்ப சொதப்பிடக் கூடாதுன்னு எனக்கும் ஒரே டென்சன்

பெயரில்லா சொன்னது…

பாக்யராஜ்னு பட்டம் கொடுத்தாலும் கொடுத்தாங்க அதுக்குன்னு இப்படியா??????

(ஆம இன்னும் எத்ன கதை ஸ்டாக்ல இருக்கு!!)

வலைப்பதிவுக்கும் சென்சார் கொண்டுவரனும்ப்பா, போர்டு தலைவர் பொன்ஸ் எங்கே?

கோவி.கண்ணன் சொன்னது…

//
manasu said...
பாக்யராஜ்னு பட்டம் கொடுத்தாலும் கொடுத்தாங்க அதுக்குன்னு இப்படியா??????

(ஆம இன்னும் எத்ன கதை ஸ்டாக்ல இருக்கு!!)
//
ஆசைக்கு ஒன்னு ... படிப்பவர்களின் ஆர்வத்துக்கு ஒன்னு எழுதியாச்சு ... இது தான் கடைசி ... எத்தனை தடவை வேண்டுமானாலும் படிச்சுகிங்க ... நான் இந்த வெளயாட்டுக்கு வரலை

பெயரில்லா சொன்னது…

இன்னும் யாரும் கிளம்பலியே!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
இன்னும் யாரும் கிளம்பலியே!
//
சிபி,
யாரும் விசயம் கேள்விப் படலைன்னு தோனுது ...சைலன்டா இருங்க !

பெயரில்லா சொன்னது…

கெளம்பிட்டாங்கையா! கெளம்பிடாங்கையா!!

அண்ணன் குப்ஸ் சும்மாக் கெடந்த அத்தன பேரையும் கெளப்பி விட்டுட்டாறய்யா!!!

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//இளவஞ்சி said...
கெளம்பிட்டாங்கையா! கெளம்பிடாங்கையா!!

அண்ணன் குப்ஸ் சும்மாக் கெடந்த அத்தன பேரையும் கெளப்பி விட்டுட்டாறய்யா!!!

:)))
//
இளவஞ்சி ...
குப்ஸ், நானு எல்லாம் பொறுப்பானவங்க அந்த மாதிரி கதையெல்லாம் எழுதமாட்டோம் !
:)

பெயரில்லா சொன்னது…

முக்காவாசி படிக்கறதுக்குள்ள வேர்த்திருச்சி...

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
முக்காவாசி படிக்கறதுக்குள்ள வேர்த்திருச்சி...
//
ரவி
ஜொரம் வராம இருக்கனும் என்றால் வேர்த்து போவது நல்லது தான்

பெயரில்லா சொன்னது…

செருப்புக் கடை ஓரத்திலே..
செருப்பு ஒண்ணாங்க செருப்பு ரெண்டாங்க செருப்பு மூணாங்க வாங்கச் சொன்னேன்...

சிங் சா..சிங் சா..சிங் சா..

அதை வாரி விட்டாக்க வரவே லட்டாக்கா.. மடிச்சே ரெண்டாக்க வாரேன் போங்க!
சிங் சா..சிங் சா..சிங் சா..

பெயரில்லா சொன்னது…

//ரவி
ஜொரம் வராம இருக்கனும் என்றால் வேர்த்து போவது நல்லது தான் //

ம்ம். உமக்கு மந்திரிச்சு விட வேண்டிய நேரம் வந்துடுச்சிடியப்போவ்....

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
//ரவி
ஜொரம் வராம இருக்கனும் என்றால் வேர்த்து போவது நல்லது தான் //

ம்ம். உமக்கு மந்திரிச்சு விட வேண்டிய நேரம் வந்துடுச்சிடியப்போவ்....
//
சிபி
ரவி நாலு நாளா ஏற்கனவே மந்திரிச்சி விட்ட சேவல் மாதிரி இருக்கார் ... மறுபடியும் மந்திரிக்கனுமா ... தாங்க மாட்டாருங்க

பெயரில்லா சொன்னது…

//ரவி நாலு நாளா ஏற்கனவே மந்திரிச்சி விட்ட சேவல் மாதிரி இருக்கார் ... மறுபடியும் மந்திரிக்கனுமா ... தாங்க மாட்டாருங்க
//

மந்திரிக்கணும்னு சொன்னது தங்களுக்குத்தான் கோவியாரே!

மந்திரிக்க ஆள் வந்தாச்சுன்னு நினைக்கறேன். இதோ இப்ப வந்துடுவாங்க பாருங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//மந்திரிக்க ஆள் வந்தாச்சுன்னு நினைக்கறேன். இதோ இப்ப வந்துடுவாங்க பாருங்க! //
இப்ப நான் எந்திரிக்கிறேன் ... ஆபிசிலிருந்து வீட்டுக்கு போகனும் ... மறுபடியும் 45 நிமிடதில் பார்க்கலாம்

பெயரில்லா சொன்னது…

கோவியாரே

படிக்க ஆரம்பிக்கும்போதே தெரியும்யா இது ஏதாவது வேற மாதிரியான மேட்டர்தான்னு. அதே மாதிரி செருப்புதான்னு சரியா யூகிச்சிட்டேன். இருந்தாலும் படிக்காமலே பத்து வரி கீழ போய் பாத்தா அதேதான். கொஞ்சம் பில்டப்பு ஜாஸ்த்தியப்பா.

அன்புடன்
தம்பி

கோவி.கண்ணன் சொன்னது…

//தம்பி said...
கோவியாரே
இருந்தாலும் படிக்காமலே பத்து வரி கீழ போய் பாத்தா அதேதான். கொஞ்சம் பில்டப்பு ஜாஸ்த்தியப்பா.

அன்புடன்
தம்பி //
ஆர்வக்கோளாரா நடத்துங்க :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//நன்மனம் said...
:-)
//
நன்றிகள் :-)

பெயரில்லா சொன்னது…

பார்த்தேன்....படித்தேன்....ரசித்தேன்...சிரித்தேன்....ஹி...ஹி...ஹி...

கோவி.கண்ணன் சொன்னது…

//சதயம் said...
பார்த்தேன்....படித்தேன்....ரசித்தேன்...சிரித்தேன்
//
சதயம் அவர்களே... வருக வருக !

கோவி.கண்ணன் சொன்னது…

//சதயம் said...
பார்த்தேன்....படித்தேன்....ரசித்தேன்...சிரித்தேன்
//
சதயம் அவர்களே... வருக வருக !

பெயரில்லா சொன்னது…

நல்லாத் தான் இருக்கு ...

//பி.கு : 'குப்ஸ்' உங்கள் பாதையில் ஒரு அடியை வேகமாக வைத்துவிட்டேன் ... இப்போது பந்து உங்கள் பக்கம் இருக்கிறது// ஐயோ..கொஞ்ச நாளைக்கு நான் டென்னிஸ் ஆடறது இல்லைன்னு முடிவு பண்ணிருக்கேன். :-(

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

கதை நல்லாயிருக்கு..

ஆனால் சஸ்பென்ஸ் பாதியிலேயே உடைந்துவிட்டது போல் ஒரு உணர்வு.

நன்றி!

பெயரில்லா சொன்னது…

//ஐயோ..கொஞ்ச நாளைக்கு நான் டென்னிஸ் ஆடறது இல்லைன்னு முடிவு பண்ணிருக்கேன்//

அடப்பாவமே!
கோவியார் பாருங்க! நாளையில இருந்து பெர்மணண்டா விளையாடப் போறதில்லைன்னு முடிவு பண்ணுவார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
கோவி.கண்ணன் அய்யா,

கதை நல்லாயிருக்கு..

ஆனால் சஸ்பென்ஸ் பாதியிலேயே உடைந்துவிட்டது போல் ஒரு உணர்வு.

நன்றி! //

நன்றி திரு சிவபாலன் ... கொஞ்சம் தொய்வாகதான் எழுதினேன் ... அதனால் தான் கடைசி வரிக்கு முன் 'நாயுடுகால்' வைத்து சாக் கொடுத்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
//ஐயோ..கொஞ்ச நாளைக்கு நான் டென்னிஸ் ஆடறது இல்லைன்னு முடிவு பண்ணிருக்கேன்//

அடப்பாவமே!
கோவியார் பாருங்க! நாளையில இருந்து பெர்மணண்டா விளையாடப் போறதில்லைன்னு முடிவு பண்ணுவார்.
//

நானும் இதுபோல் எழுதுவதில் இதே கடைசி - எழுத முடியுமா என்று சுய சோதனைப் பண்ணிய விளைவு. போதும் !

பெயரில்லா சொன்னது…

//நானும் இதுபோல் எழுதுவதில் இதே கடைசி - எழுத முடியுமா என்று சுய சோதனைப் பண்ணிய விளைவு. போதும் !
//

ஆமாம்! குமுதம் யாவாரம் கூட ரெண்டு வாரமா படுத்துடுச்சாம்! நஷ்ட ஈடு கேட்டு கோவியார் மேல் வழக்கு தொடரப் போகிறார்களாம்.

(ஆமா! அது ஏன் வழக்கு என்பதை தொடர்வதாகச் சொல்கிறார்கள். விரைவில் முடிக்க கூடாது என்பதாலா?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாம்! குமுதம் யாவாரம் கூட ரெண்டு வாரமா படுத்துடுச்சாம்! நஷ்ட ஈடு கேட்டு கோவியார் மேல் வழக்கு தொடரப் போகிறார்களாம்.//

குமுதத்தை நம்பி பெரிய குடும்பம் இருக்கு ... அவுங்க பொழப்பை ஏன் கெடுக்கனும் ? அதான் நல்ல ஆழமா யோசிச்சி தான் இந்த முடிவ எடுக்க வேண்டியதாகிவிட்டது :))))

பெயரில்லா சொன்னது…

ஹம், இது மாதிரி, இன்னும் எத்தனை கதை ஸ்டாக் வச்சு இருக்கீங்க.....

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
ஹம், இது மாதிரி, இன்னும் எத்தனை கதை ஸ்டாக் வச்சு இருக்கீங்க.....
//
முதல் கதையை படித்து... உதட்டைப் பிதுக்கி ... பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று ... உசுப்பேத்திவிட்டு விட்டு ... இது மாதிரி கேள்வி வேறயா ? ம் ...தம்பி சிவா பிரியலை :)))

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,

என்னோட ஆன்மீக பதிவில பின்னூட்டம் போட்டாரே நாமளும் பதிலுக்கு ஒன்னு போடணுமேன்னு ஒங்க பதிவ தேடிப்பிடிச்சி வந்தா... என்னங்க இது..

வயசான காலத்துல என்னத்தையெல்லாமோ ஞாபகப்படுத்திட்டீங்க..

சரி கடைசியில பாட்டா சமாச்சாரம்னதும் சப்புன்னு ஆயிருச்சி..

இருந்தாலும் வந்ததுக்கு எதையாச்சும் எழுதணுமேன்னு இத எழுதிட்டேன்..

நல்லா கிக் வரா மாதிரிதான் எழுதறீங்க.. வளர்க ஒங்க எழுத்துப்பணி..

இந்த மாதிரி juicy யா ஒங்கள மாதிரி ஆளுங்க எழுதறப்போ எங்க பதிவுகள யார் படிக்கப் போறாங்க.. ஹூம்:(

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லா கிக் வரா மாதிரிதான் எழுதறீங்க.. வளர்க ஒங்க எழுத்துப்பணி..//
ஜோசப் ஐயா,
இந்த கதையை எழுதும் போது கத்தியில் நடப்பது போன்று உணர்வு, நானே நிறைய சென்சார் செய்தே போட்டேன். ஒரு மாறுதலுக்காக சுய சோதனையின் விளைவில் எழுதி கிறுக்கியது இது. இது போல் இனி எழுதுவது இல்லை என்றும் உறுதி கொண்டுள்ளேன்.

உங்கள் கருத்துக்கள் எனக்கு நெகிழ்சியாக இருக்கிறது

பெயரில்லா சொன்னது…

குப்ஸ் கதையெல்லாம் படிச்சதுனால ஈஸியா கண்டுபிடிச்சுட்டேன். நல்லாத்தான் எழுதறீரு கோவியாரே,

கோவி.கண்ணன் சொன்னது…

//இலவசக்கொத்தனார் said...
குப்ஸ் கதையெல்லாம் படிச்சதுனால ஈஸியா கண்டுபிடிச்சுட்டேன்.
//
கொத்ஸ் - நீங்க பாஸ்(pass):))

பெயரில்லா சொன்னது…

சந்துல சிந்து பாடுர எல்லாம் கண்டுக் கூடாது. தொடரவும்.

பெயரில்லா சொன்னது…

பலான, பலான டைப் கதைன்னு முதல் இரண்டு வரியிலேயே தெரிந்து விட்டதால், அநாவசியக் கற்பனைக்கெல்லாம் இடம் கொடுக்காமல் முழுதும் படித்தேன்!

நல்லா எழுதியிருக்கீங்க!
இது மதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் சைஸுன்னு ஒண்ணு இருக்கே, தெரியுமில்ல!

நடத்துங்க!

இது கோவியார் சீஸன்!

:))

priyamudanprabu சொன்னது…

கண்ணாலேயே அளவெடுக்க தெரியும்னு மட்டும் பீற்றிக் கொள்வீர்கள்.. போன தடவை வாங்கி வந்து ரொம்ப லூசாக ... போங்க ... அத போட்டுக்கிட்டு ... எல்லோரும் திரும்பி பார்த்து அசிங்கமாக ஆகிவிட்டது ... அதுக்கு முன்னால வாங்கிட்டு வந்தது ... ரொம்ப இறுக்கம் ... புண்ணாக்கிடுச்சி ... நான் காமிச்சேன் ... நீங்க பார்த்திங்கல்ல ..."
/////

அங்கேய கண்டுபிடித்துவிட்டேன்

priyamudanprabu சொன்னது…

வேறு யாராவது எழுதியிருந்தால் கண்டுபிடித்திருக்க மாட்டேன்
நீங்க பல்லான கதை எழுத மாட்டீங்க
அதுதா
சந்தேக பார்வையோடு படித்தேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்