பின்பற்றுபவர்கள்

3 டிசம்பர், 2007

கருணாநிதி உலக தமிழர்களின் தலைவரா ?

கருணாநிதி மலேசிய தமிழர்கள் குறித்துவிட்ட வேண்டுகோள், அறிக்கையை வைத்து மலேசிய அமைச்சர் 'உன்வேலையைப் பார்த்துப் போ' என்றாராம். இதை கேள்விப்படும் தமிழர்கள் சினந்தால், சொல்லிவிட்டு போகட்டுமே தமிழர்களுக்கு கருணாநிதி என்ன தலைவரா ? என்றெல்லாம் கேட்கிறார்கள். கருணாநிதி ஒரு கட்சித்தலைவராக இந்த வேண்டுகோளை வைக்கவில்லை. தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராக இருந்து கொண்டு தான் இந்த வேண்டுகோளை வைத்தார்.

நன்கு அறியப்பட்ட ஒரு தமிழர் வேண்டுகோள், கோரிக்கை வைப்பதற்கு அவர்களால் முன்மொழியப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அப்படிப்பார்த்தால் உலகில் எந்த இடத்தில் தமிழன் அடிப்பட்டாலும் அவன் இந்தியன் என்பதால் இந்திய அரசாங்கம் தான் தலையிட வேண்டும் என்று வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அந்தவகையில் கருணாநிதி தாமே முன்வந்து செய்தது மிகச் சரியே.

அதைவிட கருணாநிதி உலக தமிழர்களின் தலைவர் என்று சொல்வதில் என்ன குறை கண்டார்கள் என்று தெரியவில்லை ? உலக தமிழர்களின் தலைவர் என்று எவரையாவது கைக்காட்டும் அளவு அனைத்து தமிழர்களையும் அரவணைத்துச் செல்ல எந்த ஒரு தலைவரும் இல்லை. ஆனால் பெரும்பாலான தமிழ்மக்கள் கருணாநிதியை தலைவராகத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள், கருணாநிதியின் அரசியல் விளையாட்டுக்கள் பிடிக்காமல் இருந்தாலும் தமிழுக்கு தொண்டாற்றியவர், வள்ளுவர் கோட்டம் அமைத்தவர், பல தமிழ் அறிஞர்களின் பெயரில் பல்கலை கழகங்களை நிறுவியவர், திருவள்ளுவருக்கு வான் அளவு சிலை அமைத்து பெருமைபடுத்தியவர் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். தமிழரின் தலையில் ஏறி அமர்ந்து ஆட்சி நடத்திய ஜெ-வை தமிழர் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா ? அல்லது கூடா கொள்கை அரசியல் நடத்தும் வைகோவை தமிழர் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியுமா ? ஒருவேளை தமிழிழம் மலர்ந்தால் தமிழன தலைவர் யார் என்பதற்கு மேலும் சிலர் கிடைக்கலாம்.

தமிழர்கள் அடிபட்டால் குரல் கொடுக்க எல்லாவிதத்திலும் தகுதியானவர் தான் கருணாநிதி, அவர் மீது எப்போதும் காழ்ப்பு உணர்வு கொண்டே, தானும் தமிழர் என்று கூறிக் கொள்பவர்கள் முன்பும் அண்ணா, பெரியார் மீது காழ்ப்பு உணர்வு கொண்டவர்கள் தான். ஏனென்றால் அவர்கள் யாருக்குமே, தமிழர்களுக்கு தமிழ்பற்றுள்ள ஒரு தமிழன் தலைவனாக இருப்பது பிடிக்காது. அத்தகையோரின் கருத்துக்களை புறக்கணிப்போம்.

34 கருத்துகள்:

கருப்பு சொன்னது…

கலைஞர் மு.கருணாநிதியை தமிழின தலைவராக ஏற்றுக் கொள்ளாத ஒரே உயிரினம்(?) பார்ப்புதான் கண்ணன் அவர்களே!

ஜெகதீசன் சொன்னது…

பினாத்துபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என்ன??

ஒருவேளை இலைக்காரனிடம் கேட்டால், சோ.ராமசாமி தான் தமிழர் தலைவர் என்று சொன்னாலும் சொல்வார்...
:P

லக்கிலுக் சொன்னது…

//அவர்கள் யாருக்குமே, தமிழர்களுக்கு தமிழ்பற்றுள்ள ஒரு தமிழன் தலைவனாக இருப்பது பிடிக்காது.//

இதுதான் ஹைலைட்!

தெளிவான ஒரு பதிவுக்கு நன்றி!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பினாத்துபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என்ன??

ஒருவேளை இலைக்காரனிடம் கேட்டால், சோ.ராமசாமி தான் தமிழர் தலைவர் என்று சொன்னாலும் சொல்வார்...
:P
//

ஜெகதீசன்,

சு.சாமியை புறக்கணித்தற்கு கண்டனம். துணைத்தலைவா என்றாவது சொல்லி இருக்க வேண்டாமா ? அருமையாக தமிழ் பேசும் ஒரு தலைவரை அவமதித்த குற்றத்திற்கு என்ன தண்டனை தரலாம் ? யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

////லக்கிலுக் said...
//அவர்கள் யாருக்குமே, தமிழர்களுக்கு தமிழ்பற்றுள்ள ஒரு தமிழன் தலைவனாக இருப்பது பிடிக்காது.//

இதுதான் ஹைலைட்!

தெளிவான ஒரு பதிவுக்கு நன்றி!!!
////

லக்கி ஐயா,

ஏன் சொல்ல மாட்டீர், ஞாயப்படி நீங்கள் எழுதி இருக்க வேண்டிய பதிவு, ஒண்ணும் ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால் நான் எழுதினேன்.

தமிழக அரசிடம் எதாவது கோரிக்கை வைத்தால் சிபாரிசு கடிதம் கொடுப்பீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
கலைஞர் மு.கருணாநிதியை தமிழின தலைவராக ஏற்றுக் கொள்ளாத ஒரே உயிரினம்(?) பார்ப்புதான் கண்ணன் அவர்களே!
//

கருத்துக்கு நன்றி வி.க அவர்களே !

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

இந்த பதிவினை வழிமொழிகிறேன்...

ஜெகதீசன் சொன்னது…

//
லக்கி ஐயா,

ஏன் சொல்ல மாட்டீர், ஞாயப்படி நீங்கள் எழுதி இருக்க வேண்டிய பதிவு, ஒண்ணும் ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால் நான் எழுதினேன்.

//
ஒருவேளை அவர் "அந்த"ப் பதிவைப் பார்க்கவில்லையோ என்னவோ...
அவருக்கு லின்க் அனுப்புங்க....

வெ. ஜெயகணபதி சொன்னது…

/*
உலக தமிழர்களின் தலைவர் என்று எவரையாவது கைக்காட்டும் அளவு அனைத்து தமிழர்களையும் அரவணைத்துச் செல்ல எந்த ஒரு தலைவரும் இல்லை.
*/

உண்மைகள்மிக்க நல்ல பதிவு. நன்றிகளும் வாழ்த்துக்களும்...!

TBCD சொன்னது…

பினாத்துவது இலவசம என்பதலே யார் வேண்டுமானாலும் பினாத்தலாமாம்..

RATHNESH சொன்னது…

கருணாநிதியின் தலைமை குறித்து பதிவு போட வேண்டிய அளவுக்கா அவர் நிலைமை மோசமாகி விட்டது?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
பினாத்துவது இலவசம என்பதலே யார் வேண்டுமானாலும் பினாத்தலாமாம்..
//

TBCD ஐயா,

முகமூடிய பதில் போல் இருக்கு,
என்ன சொல்றேள், நேக்கு ஒண்ணும் விளங்கல்ல.

புரியல்ல...தயவு செய்து விளக்கவும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கருணாநிதியின் தலைமை குறித்து பதிவு போட வேண்டிய அளவுக்கா அவர் நிலைமை மோசமாகி விட்டது?
//

இரத்னேஷ்,
மேட்டர் இருக்கு இருக்கு, அதனால் தான் போட்டதே !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ. ஜெயகணபதி said...
/*
உலக தமிழர்களின் தலைவர் என்று எவரையாவது கைக்காட்டும் அளவு அனைத்து தமிழர்களையும் அரவணைத்துச் செல்ல எந்த ஒரு தலைவரும் இல்லை.
*/

உண்மைகள்மிக்க நல்ல பதிவு. நன்றிகளும் வாழ்த்துக்களும்...!
//

ஜெயகணபதி ஐயா,

கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//இரண்டாம் சொக்கன்...! said...
இந்த பதிவினை வழிமொழிகிறேன்...
//

மிக்க நன்றி !

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

நல்ல தகவல் ஒன்றைப் பரிமாறியிருக்கிறீர்கள். உண்மையில் இதுபற்றி நிறைய பேச வேண்டும். மலேசியத் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டபோது யாராவது குரல்கொடுக்க மாட்டார்களா என இலங்கை நண்பர்கள் நாங்கள் ஏங்கித்தவித்தோம். கருணாநிதியின் தலையீடு பாராட்டத்தக்கது.
ஆனாலும் மற்றொரு விடயத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
இலங்கையில் தமிழர்கள் இனத்துவேச வெறிப்பிடித்தவர்களுக்கு மத்தியில் சிறைப்பட்டு எத்தனை சிரமங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்? நேற்றும் கூட ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பலவந்தமாக கைது செய்யப்பட்டு காரணமின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் இந்திய வமிசாவளி அப்பாவி தமிழர்கள். கூலித்தொழிலுக்காக இலங்கை வந்து துன்பங்களை அனுபவித்து அரசாங்கத்தின் அடாவடித்தனத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட இந்தியத்தமிழர்கள் எத்தனை பேர் தெரியுமா? இன்னும் கூட 'நீங்கள் இந்திய பிச்சைக்காரர்கள் தானே?' என பேரினவாத விஷமிகள் தூற்றுவதையும் தாங்கி வாழும் இவர்களுக்கு கருணாநிதி கரம் கொடுத்தாரா? வெறுமனே தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியமையை உலகம் பாராட்டலாம். ஆனால் பெருங்கடலலையில் பாதாளத்துக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதசமுதாயத்தினரை காப்பாற்ற முயற்சிக்காமல் பால்பாயசம் கொடுக்கும் பயனற்ற செயல் என்றே நான் கருதுகிறேன்.. இந்தளவும் தொடருமானால் மலேசியாவில் மட்டுமல்ல முழு உலகத்திலுமேயுள்ள இந்தியத்தமிழர்கள் பிசசைப் பாத்திரத்தை தலையில் வைத்துக்கொண்டு மழைத்துளிக்காக நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டிருப்பதைத்தவிர வேறு வழியில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...
நல்ல தகவல் ஒன்றைப் பரிமாறியிருக்கிறீர்கள். உண்மையில்
//

நீங்கள் சொல்வது புரிகிறது, கருணாநிதி அதுபற்றி சிந்திக்கிறார், ஆனால் முன்பு நடந்த நிகழ்வுகளால் எதையும் வெளிப்படையாக பேசமுடியாத நிலமை. அதையும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். கருணாநிதியாவது இரங்கல் கவிதை வாசித்தார். ஜெ அந்த இடத்தில் இருந்திருந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடியும், கூட்டம் போடுபவர்களை கொத்தாக சிறையில் அடைத்து பொடா கைதியாக்கி இருப்பாரே.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சாதாரண குப்பனோ, சுப்பனோ தாய் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த வேலையை செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால் இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அந்த கடிதத்தையும் படித்துவிட்டேன். அதில் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை. மத்திய அரசாங்கம், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சம்மந்தப்பட்ட மலேசிய அரசுடன் பேச வேண்டும். மலேசிய பிரதமரை போராட்ட குழுவிடம் பேசச்சொல்ல வேண்டும். தவறான முடிவை எடுத்து விடக்கூடாது. Sensitive Issue. ரொம்ப கவனமாக கையாள வேண்டும். முதல்வர் கடிதம் எழுதும்வரை, தமிழக எம்பிக்கள் கூச்சல் போடும் வரை மத்திய அரசு எதுவும் தெரியாதது மாதிரி இருந்தது கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Unknown சொன்னது…

ஜெ'வை வைத்து கலைஞரை நாம் மதிப்பீடு செய்யத்தேவையில்லை என நினைக்கிறேன். முன்னவர் குப்பை, பின்னவர் முத்தமிழ் வளமண். கலைஞரின் அனைத்து தமிழிய வெளிப்பாடுகளும், உணர்வுகளும் உள்ளங்கை நெல்லிக்கனி என்றாலும், வரலாறு அவரை வாட்டும் வகையில் பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது. பார்ப்பன, வடக்கத்தி நீதிபதிகளின் கூடாரமாகிவிட்ட நீதி யந்திரம் எப்போதும் நம்மினத்திற்கு எதிராகவே செயல்படுகிறது என்பதையும், தேவைக்கேற்ப அதற்கு தண்டிக்கும் பற்கள் முளைக்கிறதென்பதையும் இந்தியத் துணைக்கண்டத்தை கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

இனமான உணர்வுகளை வெளிப்படையாக, தேவைப்படும்பொழுதெல்லம் முன்வைக்கும் கடைசி தலைவர் இவராகவே இருக்கக்கூடும். தமிழின, தமிழிய பெருமையின் பொற்காலம் எனவும் இத்தலைவனின் காலத்தை வரையறுக்கலாம். தமிழாய் வாழ்ந்து மறையப்போகும் ஒரு பெரும்பாண்மைத்தலைவரை அவனின் இழப்பிலிருந்தே நாம் அறிய இயலும். அதுவரை அவனை விமரிசித்து, வேதனைப்படுத்தி, அவமானப்படவைத்து மகிழ்வதே நம் போன்ற அடிமைத்தமிழர்களின் பரம்பரைகுணம்.

கலைஞரையும், நடிகர்திலகத்தையும் எளிதில் மறக்கக்கூடிய உணர்வற்ற தமிழர்கள் நாம். குழிபறிப்பதும், பகட்டிற்க்கு பாய் விரிப்பதும் நம் வரலாற்று குணாதிசயங்கள். தமிழை ஒழுங்காக பேசுபவனை கண்டாலே எமக்கு பிடிக்காது. அதனாலேயே ஈழவர்களை மலையாளிகள் என கேவலப்படுத்துவது எமது இயல்பு.

இதையெல்லாம் அறிந்தும் ஒரு வேலையற்ற, தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த, யாரும் படிக்காத(நான்கு வேதங்களில் சொல்லப்படாத) திருக்குறளுக்கு கோட்டமும், வள்ளுவனுக்கு சிலையும் எடுத்துக்கொண்டிருக்கும் உருப்பட்டத மனிதரை நாங்கள் எப்படி தமிழின தலைவரென்று ஏற்றுக்கொள்வது??

ஜோ/Joe சொன்னது…

//இனமான உணர்வுகளை வெளிப்படையாக, தேவைப்படும்பொழுதெல்லம் முன்வைக்கும் கடைசி தலைவர் இவராகவே இருக்கக்கூடும். தமிழின, தமிழிய பெருமையின் பொற்காலம் எனவும் இத்தலைவனின் காலத்தை வரையறுக்கலாம். தமிழாய் வாழ்ந்து மறையப்போகும் ஒரு பெரும்பாண்மைத்தலைவரை அவனின் இழப்பிலிருந்தே நாம் அறிய இயலும். அதுவரை அவனை விமரிசித்து, வேதனைப்படுத்தி, அவமானப்படவைத்து மகிழ்வதே நம் போன்ற அடிமைத்தமிழர்களின் பரம்பரைகுணம்.

கலைஞரையும், நடிகர்திலகத்தையும் எளிதில் மறக்கக்கூடிய உணர்வற்ற தமிழர்கள் நாம். குழிபறிப்பதும், பகட்டிற்க்கு பாய் விரிப்பதும் நம் வரலாற்று குணாதிசயங்கள்.//

100 முறை வழிமொழிகிறேன். என் உள்ளத்து உணர்வுகளை அப்படியே சொல்லி வீட்டீர்கள் இசை! :)

வெத்து வேட்டு சொன்னது…

Raguvani Niksan "clarified" who is REAL TAMIL LEADER...

Neither Karunanithi..nor Praba

I think Jeyalalitha has guts and heart to solve any tamil issues more than Karuna"NITHI"...he loves Nithi more than Tamil

வசந்தன்(Vasanthan) சொன்னது…

கண்ணன்,
இறக்குவானை நிர்ஷனுக்கு நீங்களளித்த பதில் பொருத்தமற்றது.

முன்பு நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் என நீங்கள் சொல்வது எவற்றை?
மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து எப்போது கலைஞர் பிரச்சினைக்குள்ளானார்? எப்போதாவது அப்படியொன்று நடந்திருக்கிறதா? இப்போது ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தாற்கூட சிங்களப் பேரினவாதிகளை விடுத்து வேறு எந்தத் தரப்பிடமிருந்து கலைஞர் பிரச்சினையை எதிர்கொள்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கலைஞரைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனுக்குக் கவிதையெழுதுவதைவிட ஆயிரம் மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது மலையகத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது. ஏனென்றால் அவர்கள் தமிழக வம்சாவழியினர்.

கடந்த ஒருவாரத்துள் பெண்களுட்பட நூற்றுக்கணக்கான மலையகத் தமிழர்கள் பிடிக்கப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பதைப் போல கூட்டம் கூட்டமாகக் கூட்டிச்செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வளவற்றுக்கும் இலங்கைப் போரில் நேரடிப்பங்கற்ற இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

தமிழ்ச்செல்வனுக்குக் கவிதையெழுவதும் செஞ்சோலைப் படுகொலைக்கு சட்டமன்றத்திலே கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதும் கலைஞரின் கடமையில்லை. இனவுணர்வால் செய்யப்பட்டவை எனக் கொள்ளலாம். ஆனால் மலையகத் தமிழர்களுக்குக் கடந்த வாரத்தில் நடந்தவற்றையெதிர்த்துக் குரலெழுப்ப வேண்டியது கலைஞரின் கடமையென நினைக்கிறேன்.
செஞ்சோலைப் படுகொலைக்குக் கண்டனத் தீர்மானம் போட்டதுபோல் இதற்கும் மிகக்காட்டமான தீர்மானமொன்றை சட்டமன்றத்தில் முன்மொழிவாரா கலைஞர்?

ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞரின் பணிதொடர்பாகக் கதைக்கும்போது "கடந்தகால விரும்பத்தகாக நிகழ்வுகள்" எனக்கூறிக்கொள்வது பரவாயில்லை. அதில் நியாயமிருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மலையகத்தமிழர் விடயத்திலும் அதையே சொல்லிக்கொள்வது ஏமாற்றுவேலை. கலைஞரின் சொற்களிலேயே சொன்னால் சுத்த 'சால்ஜாப்பு'.

~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜோ,
நீங்கள் எங்குப் போனாலும் நடிகர் திலகத்தையும் காவிவந்து விடுகிறீர்களே, ஏன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//வெத்து வேட்டு said...
Raguvani Niksan "clarified" who is REAL TAMIL LEADER...

Neither Karunanithi..nor Praba

I think Jeyalalitha has guts and heart to solve any tamil issues more than Karuna"NITHI"...he loves Nithi more than Tamil
//

வெத்து வேட்டு ஐயா,

அந்த அம்மா அமெரிக்காவுக்கே தலைவர் ஆகவேண்டியவர், அவரை தமிழருக்கு தலைவர் எண்டு சுருக்காதியல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இசை said...
ஜெ'வை வைத்து கலைஞரை நாம் மதிப்பீடு செய்யத்தேவையில்லை என நினைக்கிறேன்.
//

ஜோ உங்களுக்கு பாராட்டு தெரிவித்துவிட்டார். நானும் அதை வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
சாதாரண குப்பனோ, சுப்பனோ தாய் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த வேலையை செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால் இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அந்த கடிதத்தையும் படித்துவிட்டேன். அதில் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை. மத்திய அரசாங்கம், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சம்மந்தப்பட்ட மலேசிய அரசுடன் பேச வேண்டும். மலேசிய பிரதமரை போராட்ட குழுவிடம் பேசச்சொல்ல வேண்டும். தவறான முடிவை எடுத்து விடக்கூடாது. Sensitive Issue. ரொம்ப கவனமாக கையாள வேண்டும். முதல்வர் கடிதம் எழுதும்வரை, தமிழக எம்பிக்கள் கூச்சல் போடும் வரை மத்திய அரசு எதுவும் தெரியாதது மாதிரி இருந்தது கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

எழுதவில்லை என்றால் தமிழக முதல்வராக இருந்து கொண்டு எதுவும் செய்யலை என்பார்கள், எழுதினால் எல்லோரும் செய்வது தானே என்பார்கள் உங்கள் கருத்தும் அப்படித்தான் ஒலிக்கிறது

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

//மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து எப்போது கலைஞர் பிரச்சினைக்குள்ளானார்? எப்போதாவது அப்படியொன்று நடந்திருக்கிறதா?//
வசந்தனின் கேள்வி வரவேற்கத்தக்கது.நானே பின்னூட்டம் தரலாம் என நினைத்தேன். வசந்தன் அந்த வேலையை இலகுவாக்கிவிட்டார்.
இலங்கை விடயம் தொடர்பான தமது நிலைப்பாடுகளை தமிழக முதலமைச்சர்கள் எவரும் தெளிவாக கூறவில்லை என்பதே உண்மை. என்ன கண்ணன்?

உடன்பிறப்பு சொன்னது…

மலேசிய அமைச்சர்கள் எல்லோரும் சரியான ஜோக்கர்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் சீர்யஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

ஜோ/Joe சொன்னது…

//ஜோ,
நீங்கள் எங்குப் போனாலும் நடிகர் திலகத்தையும் காவிவந்து விடுகிறீர்களே, ஏன்?//
இங்கு நான் காவி வரவில்லை . இசை என்பவர் சொன்னதை வழிமொழிந்தேன் .தகுதியில்லாத குப்பை சினிமாக்களுக்கே 100 பதிவுகள் வரும் போது ,நடிகர் திலகத்தை காவி வருவதில் உங்களுக்கு ஏன் இந்த எரிச்சல் என தெரியவில்லை :(

ILA (a) இளா சொன்னது…

முதல் பத்தியில் உள்ளது அனைத்துமே நிஜம். :). ஒரு முதல்வராக அவர் கடமைய செவ்வனே செய்துள்ளார்.

oru Eelaththamilan சொன்னது…

கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தமிழர் தலைவர் என அழைப்பதில் தவறில்லை. ஒரு மூத்த தமிழ் அறிஞன். தமிழருக்காக குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு உண்டு. இந்தத் தகுதியை அவருடைய ஆற்றலும் உழைப்பும் அவருக்கு வழங்கியிருக்கின்றது.

ஒரு ஈழத்தமிழன்

அபி அப்பா சொன்னது…

காமடி கமெண்ட்ஸ்க்கு பதிலாக பதிவு போடும் கோவியாரின் பதிவு பஞ்சத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்:-(( ஏன் சாரே ! என்ன ஆச்சு உமக்கும் பதிவு மேட்டர் பஞ்சமா???

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
காமடி கமெண்ட்ஸ்க்கு பதிலாக பதிவு போடும் கோவியாரின் பதிவு பஞ்சத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்:-(( ஏன் சாரே ! என்ன ஆச்சு உமக்கும் பதிவு மேட்டர் பஞ்சமா???
//

மன்னிக்கனும் அபிஅப்பா,

பொய் புருடாக்களை உலவ விடுபவர்கள் அளவு குறைவாக இருந்தாலும் அது மூடநம்பிக்கைகளாக பரிணமித்து பெரிய அளவுமக்கள் முட்டாள்களாக்கப்பட்டுவருவது ஆன்மிக வரலாறு, இங்கு குறிப்பிட்டு இருப்பது அரசியல். அதே பார்வையில்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜோதிபாரதி said...
சாதாரண குப்பனோ, சுப்பனோ தாய் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த வேலையை செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதனால் இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அந்த கடிதத்தையும் படித்துவிட்டேன். அதில் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை. மத்திய அரசாங்கம், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சம்மந்தப்பட்ட மலேசிய அரசுடன் பேச வேண்டும். மலேசிய பிரதமரை போராட்ட குழுவிடம் பேசச்சொல்ல வேண்டும். தவறான முடிவை எடுத்து விடக்கூடாது. Sensitive Issue. ரொம்ப கவனமாக கையாள வேண்டும். முதல்வர் கடிதம் எழுதும்வரை, தமிழக எம்பிக்கள் கூச்சல் போடும் வரை மத்திய அரசு எதுவும் தெரியாதது மாதிரி இருந்தது கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

//எழுதவில்லை என்றால் தமிழக முதல்வராக இருந்து கொண்டு எதுவும் செய்யலை என்பார்கள், எழுதினால் எல்லோரும் செய்வது தானே என்பார்கள் உங்கள் கருத்தும் அப்படித்தான் ஒலிக்கிறது//


நான், எல்லாரும் எழுதுவது தானே என்று குறையாக சொல்லவில்லை. அது ஒரு முதலமைச்சரின் கடமை என்று சொல்லவந்தேன். (அவரே கடமையை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்) He will not do more than that for Malaysian Ethinic Indians and Ezhathamilargal, eventhough he has got deciding power in the Center. For Eg: Central government selling arms, radars to srilanka to kill Tamils and also Train singala police in tamil nadu itself. Is he asked central government to stop it? Is he the Tamil Leader supporting these kind of activities of the Center?

அன்புடன் ஜோதிபாரதி.

oru Eelath thamilan சொன்னது…

இறக்குவானை நிர்ஷன் அவர்களின் கோபத்தில் நியாயம் உண்டு. குறிப்பாக மலையகத் தமிழர்கள் 100 வீதம் பிரித்தானியரால் கொத்தடிமையாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். 150 ஆண்டுக்கு முன் பிரித்தானியரால் கட்டப்பட்ட ஒற்றை அறை வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றார்கள். இவர்களில் கணிசமான தொகையினர் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.
சிங்களவர்கள் ஒருவர்கூட மனிதக் கழிவுகள் அள்ளும் தொழிலில் இதுவரை ஈடுபட்டதில்லை. இவர்களில் பலருக்கு இலங்கை பிராசாவுரிமை கூட இலங்கை அரசு வழங்கவில்லை. நேரு, இந்திரா, சாஸ்திரி என பல இந்திய பிரதமர்கள் இலங்கையுடன் செய்த ஒப்பந்ததை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு டில்லித் தலைவர்களுடன் இலங்கை அரசு கொஞ்சிக் குலவுவதுதான் வேதனை.

டில்லியில் தமிழர் ஆட்சியில் இல்லை. கலைஞராவது இதை ஒரு கொள்கைத்திட்டமாக கருதி டில்லியை வற்புறுத்தி மலையகத் தமிழருக்கு உதவவேண்டும்.

தமிழ்னாட்டு காங்கிரஸ்காரர்கள் தங்கள் கோஷ்டி மோதலில் காலம் கழிப்பதோடு, டில்லிக்கு கூஜா தூக்குவதில் காலம் கழிக்கின்றார்கள்.

ராஜிவ் மரணத்தை தினமும் பேசுவதால் பாதிக்கப்படுவது இந்திய வம்சாவளித் தமிழர்களும்தான்.

கலைஞர்தான் குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவுக்கு வெளியே தமிழ்னைத் தவிர்ந்த வேறு இந்திய இனம் வாழ்ந்தால் இந்தப் பாராமுகம் தொடருமா?.
டில்லியில் இருப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் நாரயணனும் மேனனும் தான்.

ஒரு ஈழத்தமிழன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்