பின்பற்றுபவர்கள்

26 டிசம்பர், 2008

"பிரபல" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :)

மூத்த பதிவர்கள் என்றால் என்ன அருத்தம் ? பதிவர்களில் சிலருக்கு தலைமுடி நரைத்திருக்கும், வழுக்கைக் கூட விழுந்திருக்கும் அவர்கள் எல்லோரும் மூத்த பதிவர்கள் தான். :) மூத்தப் பதிவர்கள் பற்றிய சரியான விளக்கம் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

பிரபல பதிவர்கள் யார் யார் ? பலருக்கு இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறதாம், யார் பட்டம் கொடுத்தாகன்னு கேட்குறாவ.

மிக்கவையாக வாசகர்களால் வாசிக்கப்படும் எழுத்துக்களுக்கு உடமைக் காரர்களே "பிரபல" பதிவர்கள், இதில் அண்மையில் எழுதவந்தவர்களும் உண்டு, நீண்ட நாளாக எழுதுபவர்களும் உண்டு. அதை எப்படிக் கண்டுபிடிக்கிறதாம் ? ப்ளாக்கர் பாலோயர் பட்டியலை வைத்திருப்பவர்களில் யாருடைய பதிவு பல பதிவர்களால் பாலோ செய்யப் படுகிறதோ அவர்களே "பிரபல" பதிவர்கள்.

இதோ சில பிர"பலங்கள்",



தம்பிக்கு பாசக்கார பயபுள்ளைங்க மிகுதி மிகுதி...இவரு எதையும் சுடுவார் (கேமராவால் தான்) இவரு பதிவுல இவர 117 பேர் பின் தொடருடாங்க...

பேரக் கேட்டாலே அதுருதுல்ல...அதனால் "பய"புள்ளைய "கார்டூன் கேரக்டர்" என்றும் சொல்லமாக கூப்பிடுறாவ
இவரு பதிவுல 107 பேரு பின் தொடருறாவ


இவரு வம்பிலுக்காத ஆளுகளே இல்லைன்னு சொல்றாவ...கல்யாணத்துக்கப்பறம் ரகசியமாக தொப்பைக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாகளாம்... எம்புட்டு பாசக்கார பய தெரியுமா ?
இவரு பதிவுல 97 பேர் சுத்திவராக

இவரு ஜூனியர் கலக(கழக - இல்லை)காரன்...சைலண்டாக ஆப்பு சொருகுவாக...அடிக்கடி உணர்ச்சிவசப்படுவாக...நல்லா எழுதுவாக...மேசமான பயப்புள்ளய எத்தனை பேரு பார்க்கிறாக தெரியுமா ? 68

*******

அம்புட்டுதான் வந்த வேலை முடிந்தது.

மேலே பதிவர்களுக்கு பாலோயராக சேர்ந்தவக எல்லாம் "அன்பினாலா சேர்ந்த கூட்டம்" அப்படி அன்புக் கூட்டம் கிடைக்காதவக...பாலோயர் பட்டியலை பெருசாக்கனும் என்றால் ஒரே ஒரு யோசனை தான் இருக்கு.

நிறைய (டம்மி...வெறும் புரொபைல் கூட இல்லாதா)பளாக்கர் புரொபைல் ஆயத்தம் செய்து கொண்டு அப்படியே அதை மெயின் ப்ளாக்கில் பாலோயராக சேர்த்துவிடுங்கள்.

பிகு : இட்லிகாரரை ஏன் பட்டியலில் சேர்க்கல ? அவுகாதான் தமிழ்மணத்தில இணைக்கிறது இல்லையே

23 கருத்துகள்:

அத்திரி சொன்னது…

suuuuuuuuuuppeeeeeeeeerrrrrrrrr

நட்புடன் ஜமால் சொன்னது…

அண்ணே நிஜமா இப்படித்தான் என்னுடைய அடுத்த பதிவ தயார் செய்து கிட்டு இருந்தேன் ...

www.narsim.in சொன்னது…

//அத்திரி said...
suuuuuuuuuuppeeeeeeeeerrrrrrrrr
//

repteeaaeeaa

நையாண்டி நைனா சொன்னது…

ஹா.... ஹா.... ஹா.......
இவர்களுக்காவது... இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது...

ஆனா எனக்கு எத்தனை பேரு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....

Athisha சொன்னது…

அடப்பாவிங்களா... நிம்மதியா தூங்க உடமாட்டீங்க போலருக்கே..

கோவி ஐயங்கார் வால்

என்ன கொடுமை இது

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஆழமான ஆராய்ச்சி... சூப்பர்.. அருமையான பதிவு...

Poornima Saravana kumar சொன்னது…

:))

வால்பையன் சொன்னது…

நல்லா இருக்கு ஆராய்ச்சி,

எல்லோரும்
எல்லாருக்கும்
பாலோயராய்
போனால்
எல்லோரும்
பிரபலமே!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆதாரத்துடன் அட்சார் பாருங்க!

தன்னடக்கத்துடன் தனது பதிவை சேர்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

இவரும் ஒரு மூத்தப் பதிவர்தான் அல்லது பிரபல பதிவர்தான்.

இவருக்கு அறுபத்தெட்டு, வயது அல்ல.
பகிரும் அல்லது படிக்கும் பண்பாளர்கள்!

நையாண்டி நைனா சொன்னது…

/*வால்பையன் said...
நல்லா இருக்கு ஆராய்ச்சி,

எல்லோரும்
எல்லாருக்கும்
பாலோயராய்
போனால்
எல்லோரும்
பிரபலமே!
*/

ஐயா...
வாலு...
ராசா.....
கவிதை படிச்சி
கவிதை படிச்சி
கவிதை படிச்சி
இப்படி
ஆயிட்டியா...???
ராசா...

Tech Shankar சொன்னது…

உங்கள் ஆராய்ச்சி அருமை.
படங்கள் கருத்தைக் கவர்கின்றன.

பிரபல பதிவர் என்றால் எத்தனை பாலோயர் இருக்க வேணும்.

50 முதல் 100.
டூப்ளிகேட் புரொஃபைல் போடச் சொல்லி ஐடியாவேற.

அதுக்கும் ஐடியா கொடுத்துட்டீங்க
இன்னைக்கு ராத்திரிக்குள்ளே எத்தனை பேரு டூப்ளிகேட் புரொஃபைல் கொடுத்துத் தூக்கம் கெடுக்கப் போறாங்களோ?

அக்னி பார்வை சொன்னது…

ஆழகானா ஆராய்ச்சி,
ஆழமான கருத்துக்கள்,
தெளிந்தது என் மானம்,
தீர்ந்தது என் சந்தேகம்..

யாரங்கே அந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்து வாருங்கள்.

Sanjai Gandhi சொன்னது…

//பிகு : இட்லிகாரரை ஏன் பட்டியலில் சேர்க்கல ? அவுகாதான் தமிழ்மணத்தில இணைக்கிறது இல்லையே
//

எச்சுச் மீ.. நான் இவாள சமீபத்துல தமிழ்மணத்துல பார்த்தாப்ல நெனவு.. நல்லா விசாரிச்சி பாரும் ஓய்.. 36+15(தமிழ்மணத்தில் இணைக்காத கிராமத்து பதிவுக்கு 15 பேர்) பேர் பாலோ பண்ணா பெரும் பதிவர் இல்லையா? :(

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி 6:16 PM, December 26, 2008
suuuuuuuuuuppeeeeeeeeerrrrrrrrr//

நன்றி !

//அதிரை ஜமால் 6:17 PM, December 26, 2008
அண்ணே நிஜமா இப்படித்தான் என்னுடைய அடுத்த பதிவ தயார் செய்து கிட்டு இருந்தேன் ...//

ஜமால், இது சிந்தனைத் திருட்டு என்கிறீர்களா ? நான் இல்லை ! :)

//narsim 6:29 PM, December 26, 2008
//அத்திரி said...
suuuuuuuuuuppeeeeeeeeerrrrrrrrr
//

repteeaaeeaa//

நன்றியோ நன்றி !

//நையாண்டி நைனா 6:40 PM, December 26, 2008
ஹா.... ஹா.... ஹா.......
இவர்களுக்காவது... இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது...

ஆனா எனக்கு எத்தனை பேரு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....//

நையாண்டி நைனா, உங்களை கன்னியர்களும், கல்யாண தரகர்களும் பாலோ செய்வதாக அல்லவா கேள்வி பட்டேன் ! :)

//அதிஷா 6:41 PM, December 26, 2008
அடப்பாவிங்களா... நிம்மதியா தூங்க உடமாட்டீங்க போலருக்கே..

கோவி ஐயங்கார் வால்

என்ன கொடுமை இது//

அதிஷா, நீ நிம்மதியாக தூங்கப் போறியா.....ஹஹ்ஹா ஹா ! நமக்குள்ள என்ன பேசி தீர்த்துக்குவோம் :)

//VIKNESHWARAN 6:48 PM, December 26, 2008
ஆழமான ஆராய்ச்சி... சூப்பர்.. அருமையான பதிவு...//

விக்கி, நன்றி !

//PoornimaSaran 7:14 PM, December 26, 2008
:))//

:))) உங்களுக்கும் இவங்க 4 பேரைப் பார்த்தால் சிரிப்பாப் போச்சா ? :)

//வால்பையன் 7:18 PM, December 26, 2008
நல்லா இருக்கு ஆராய்ச்சி,

எல்லோரும்
எல்லாருக்கும்
பாலோயராய்
போனால்
எல்லோரும்
பிரபலமே!//

அப்படியே பாலோ பண்ணாவிட்டாலும் நமக்கு நாமே பாலோ பண்ணிக்கனும் :) உங்களுக்குத்தான் பதிவர் வட்டம் "பெருசு !"

//ஜோதிபாரதி 7:21 PM, December 26, 2008
ஆதாரத்துடன் அட்சார் பாருங்க!

தன்னடக்கத்துடன் தனது பதிவை சேர்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

இவரும் ஒரு மூத்தப் பதிவர்தான் அல்லது பிரபல பதிவர்தான்.

இவருக்கு அறுபத்தெட்டு, வயது அல்ல.
பகிரும் அல்லது படிக்கும் பண்பாளர்கள்!//

:) இப்படியெல்லாம் உண்மையைப் போட்டு உடைக்கப்படாது :) பாரதி உங்க பேச்சு "க்கா"


//நையாண்டி நைனா 7:26 PM, December 26, 2008
/*வால்பையன் said...
நல்லா இருக்கு ஆராய்ச்சி,

எல்லோரும்
எல்லாருக்கும்
பாலோயராய்
போனால்
எல்லோரும்
பிரபலமே!
*/

ஐயா...
வாலு...
ராசா.....
கவிதை படிச்சி
கவிதை படிச்சி
கவிதை படிச்சி
இப்படி
ஆயிட்டியா...???
ராசா...
//

நைனா, வாலை ஓட்டுவோர் சங்கத்தில் நீங்களும் இணைஞ்சிட்டிங்களா ! வாலு பாவம் !

//தமிழ்நெஞ்சம் 7:35 PM, December 26, 2008
உங்கள் ஆராய்ச்சி அருமை.
படங்கள் கருத்தைக் கவர்கின்றன.

பிரபல பதிவர் என்றால் எத்தனை பாலோயர் இருக்க வேணும்.

50 முதல் 100.
டூப்ளிகேட் புரொஃபைல் போடச் சொல்லி ஐடியாவேற.

அதுக்கும் ஐடியா கொடுத்துட்டீங்க
இன்னைக்கு ராத்திரிக்குள்ளே எத்தனை பேரு டூப்ளிகேட் புரொஃபைல் கொடுத்துத் தூக்கம் கெடுக்கப் போறாங்களோ?
//

தமிழ்நெஞ்சம் நன்றி ! :))))))))

//அக்னி பார்வை 7:42 PM, December 26, 2008
ஆழகானா ஆராய்ச்சி,
ஆழமான கருத்துக்கள்,
தெளிந்தது என் மானம்,
தீர்ந்தது என் சந்தேகம்..

யாரங்கே அந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்து வாருங்கள்.//

அக்னி பார்வை,

ஐயோ அத்தனையும் எனக்கா ? எல்லாமும் எனக்கு வேண்டாம், தம்பி ஜெகதீசனையோ அல்லது விஜய் ஆனந்தையோ அனுப்பி வைக்கிறேன். அவர்களிடம் கொடுங்கள் !


//SanJaiGan:-Dhi 7:47 PM, December 26, 2008
//பிகு : இட்லிகாரரை ஏன் பட்டியலில் சேர்க்கல ? அவுகாதான் தமிழ்மணத்தில இணைக்கிறது இல்லையே
//

எச்சுச் மீ.. நான் இவாள சமீபத்துல தமிழ்மணத்துல பார்த்தாப்ல நெனவு.. நல்லா விசாரிச்சி பாரும் ஓய்.. 36+15(தமிழ்மணத்தில் இணைக்காத கிராமத்து பதிவுக்கு 15 பேர்) பேர் பாலோ பண்ணா பெரும் பதிவர் இல்லையா? :(//

:) தமிழ்மணத்தில் அவர் விலகல, ஆனால் இணைக்க மாட்டார்... 36+16 ஆ அப்ப பெரும் பதிவர் தான்.

நசரேயன் சொன்னது…

நீங்களும் ஒரு பிரபலம் தான்

இராம்/Raam சொன்னது…

முன்னாடி'ல்லாம் தமிழ்மண பட்டையிலே "நகைச்சுவை/நையாண்டி"ன்னு தலைப்பு இருக்கும்... இப்போ அதெல்லாம் இல்லை.. :(

ஹிம், நீங்க சொன்ன லாஜிக் அவ்வளவா சகிக்கல...

Follower's வைச்சிதான் பிரபலமாக முடியுமா? அது Blogger கொண்டுவந்தது.. (many futures are there in these option, yet to come)

அப்போ பிளாக்கர் அக்கவுண்ட் இல்லாமே தனி தளம், வேர்ட்பிரஸ் வைச்சி எழுதுதுறவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் இல்லையா??

மறுபடியும் கொம்பு சீவி விடுறமாதிரி இருக்கு... என்னோம்மோ காலமும் பொழுதும் போனா சரிதான்... :)

பெயரில்லா சொன்னது…

ஹா.... ஹா.... ஹா.......

பெயரில்லா சொன்னது…

புதிய பதிவர்களுக்கு நீங்கள் முன்னோடி தல.

பரிசல்காரன் சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...


அப்போ பிளாக்கர் அக்கவுண்ட் இல்லாமே தனி தளம், வேர்ட்பிரஸ் வைச்சி எழுதுதுறவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் இல்லையா??//

யோவ்...தெரிஞ்சதை எழுதினால் தெரியாததையும் எழுது என்றால் எப்படிடிடி ?


//மறுபடியும் கொம்பு சீவி விடுறமாதிரி இருக்கு... என்னோம்மோ காலமும் பொழுதும் போனா சரிதான்... :)
//

யாருக்கு கொம்பு சீவுறாங்க, நான் (எங்கூரில்) காயடித்த காளைகளைத் தான் பார்த்திருக்கிறேன். அதுக்கு கொம்பு சீவினாலும் ஒண்ணுதான், அப்படியே விட்டாலும் ஒண்ணுதான் அடப் போய்யா :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

4:16 PM, December 27, 2008
//

நீங்க தான் பாஸ் முன்னனி.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கடையம் ஆனந்த் said...
புதிய பதிவர்களுக்கு நீங்கள் முன்னோடி தல.
//

நன்றி. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு எழுதவில்லை. தெரிஞ்சதைத் தான் சொல்கிறேன். இப்படியாராவது பாராட்டினால் அதைத் தூற்றும் 'கும்பல்கள்' இங்குண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
நீங்களும் ஒரு பிரபலம் தான்

1:16 AM, December 27, 2008
//

நசரேயன் நன்றி !
நான்கு ஆண்டுகளாக நீங்கள் (தொடர்ந்து) எழுதி வரும் காலம் இருக்கும் போது உங்களையும் பலர் அறிந்திருப்பார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்