பின்பற்றுபவர்கள்

19 டிசம்பர், 2008

திருமணம் ஆன ஆண்களுக்கு ... !

புதுசா நிறைய பேர் திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திருமணம் ஆன பிறகு மனைவிக்கு என்று பிறந்த நாள் வருகிறது என்பதைக் கூட மறந்துவிடுவார்கள். 'என்னைய டென்சன் படுத்ததே...' என்ற வசனம் கூட அடிக்கடி வரும்.

திருமணம் ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந்தாலும்...ஒரு வித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்சலும் வரும். எது எது பிடிக்கும் என்பது தெரியாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத் தொல்லை மிகுதியாக கொடுக்கும் மனைவியரும் உண்டு.

பெண்களைப் பொருத்த அளவில் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தையையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ...இதெல்லாம் ஒன்னும் பெரியதல்ல என்று தேற்றிக் கொள்வார்கள். பெண்கள் எல்லாவற்றிலும் குறை வரக் கூடாது என்று நினைப்பவர்களாகவே இருப்பார்கள். திருமணம் ஆன பிறகு தன்னோட குடும்பம் தனி என்கிற நினைப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிகுதி. உண்மையில் ஆண்கள் தன்னுடைய குடும்பம், தனக்க்கான குடும்பம் என்றுகூட நினைக்கவே மாட்டார்கள். தன்னுடைய குடும்பம் என்கிற நினைப்பில் தான், கணவன் தன்மீது மட்டுமே மிகுதியாக அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையும் வைத்துக் கொள்வார்கள். நெருங்கிய நண்பர்களோ, கணவனின் உறவினர்களோ கணவன் மீது தன்னைவிட மிகுதியாக அன்புகாட்டுவதை விரும்புவது இல்லை.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும் போது...பிணக்குகளாக வளரும். திருமணம் ஆன உடனேயே கணவன் - மனைவி இருவரும் உறவினர்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனமாகச் சென்றால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்யலாம். நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதியாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனைவியா எது பெரியது என்கிற சீர்தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒதுக்கி விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள...குறிப்பாக மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள கணவன் முயற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு கணவனை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.

கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்கதாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்கு தான் கேட்காமலேயே கணவன் பரிசுகளை வாங்கித்தரவேண்டும் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித்தந்தால் அன்றே அம்மாவீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகிழ்வார்கள். பெண்கள் தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் விருப்பம் மிக்கவர்கள். தனக்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி மகிழ்வதில் அவர்களுக்கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்றா அல்லது பொறாமை படவேண்டும் என்று சொல்கிறார்களா ? என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தின் தன்மையைப் பொருத்தது. சிலரிடம் பெருமையாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமை படுவார்கள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.

எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா ? Exception எங்கும் உண்டு. எல்லா ஆண்களில் மன நிலையும் ஒன்று போல் இருப்பதில்லை...அது போல் தான் பெண்களும் எல்லா பெண்களுமே ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால் பெண்களின் பொதுவான மனநிலை...பிறரைவிட கணவன் தன்னிடம் மட்டுமே மிகுதியாக அன்பு செலுத்த வேண்டும், தனது செயல்களை பாரட்டவேண்டும் அது சமையலாக இருந்தாலும் கூட என்றே நினைப்பார்கள்.

எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள், நினைவிருந்தால் பரிசு கொடுக்க மறந்துவிடாதீர்கள். ஆரம்பத்தில் மனைவியின் கவனிப்பு அன்புத் தொல்லையாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்.

19 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத் தொல்லை மிகுதியாக கொடுக்கும் மனைவியரும் உண்டு.//


ஆராய்ச்சி மணி கட்டி ஆண்ட பரம்பரையில் வந்தவங்க நாம............

Vinitha சொன்னது…

நீஙகள் பேசுவது எல்லாம் காசு இருந்தால் தான் நடக்கும் அல்லவா? மூடிந்தவரை விட்டு கொடுத்து போவது முக்கியமாக ஆண்களுக்கு நல்லது...
வீட்டில் நிம்மதி, வேலையில் நிம்மதி!

கோவி.கண்ணன் சொன்னது…

//Vinitha said...
நீஙகள் பேசுவது எல்லாம் காசு இருந்தால் தான் நடக்கும் அல்லவா? மூடிந்தவரை விட்டு கொடுத்து போவது முக்கியமாக ஆண்களுக்கு நல்லது...
வீட்டில் நிம்மதி, வேலையில் நிம்மதி!
//

இருப்புக்கு ஏற்றார் போல என்றே புரிந்து கொள்ளுங்கள், நான் பெண்களை பேராசைக்காரர்கள் என்று சொல்லவில்லை, தான் கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் அதைச் சரியாக வெளிப்படுத்த மாட்டார்கள்.

நசரேயன் சொன்னது…

/*
திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள்
*/
முயற்சி பண்ணினேன் முடியலை, அடி தான் கெடைச்சது

வால்பையன் சொன்னது…

மனைவியை தோழியாக பார்த்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்பது என் கருத்து!

தராசு சொன்னது…

மன்னிக்கவும் கோவியாரே!!வன்மையான மறுப்புகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

//திருமணம் ஆன பிறகு மனைவிக்கு என்று பிறந்த நாள் வருகிறது என்பதைக் கூட மறந்துவிடுவார்கள். 'என்னைய டென்சன் படுத்ததே...' என்ற வசனம் கூட அடிக்கடி வரும்.//

மனைவியின் பிறந்த நாளுக்கு கணவர்கள் வாழ்த்து சொல்வதில்லையா?? அல்ல, அல்ல. மகிழ்ச்சியாகட்டும், அதிர்ச்சியாகட்டும், வருத்தமாகட்டும், எந்த உணர்வையும் அதிரடியாகவும் அளவுக்கு மீறியும் வெளிப்படுத்தினால் தான் அது உண்மையான வெளிப்படுத்தலா, மனது நிறைந்த ஒரு பார்வை கூட சமயங்களில் அன்பை வெளிப்படுத்துவதுதான்.

//பெண்களைப் பொருத்த அளவில் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தையையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ...இதெல்லாம் ஒன்னும் பெரியதல்ல என்று தேற்றிக் கொள்வார்கள்//

எது பெரியது, எது சிறியது என்பது தனிப்பட்ட நபரின் அளவு கோலைப் பொருத்தது. எனக்கு எனது சட்டையின் பொத்தான்கள் தைக்கப்பட்டிருக்கும் நூல் சிறிது நீட்டிக்கொண்டிருந்தாலும் அந்த பொத்தானை க்ழற்றி மறுபடி தைத்தி விடுவேன், ஆனால் என் தங்கமணி எத்தனையோ முறை சுருக்கம் உள்ள ரவிக்கையை கோட சர்வ சாதாரணமாக அணிந்து அலுவலகம் செல்லுவாள்.

மணிகண்டன் சொன்னது…

காக்கா பிடிக்கும் பதிவு

மணிகண்டன் சொன்னது…

யோவ் வால்பையா, கல்யாணாம் ஆயிடுச்சா ?

ஜெகதீசன் சொன்னது…

நீங்க சொன்னா சரிதான் கருத்து கந்தசாமி அவர்களே!

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

are u pshycologist?

all ur posts are like this. Really good.

மணிகண்டன் சொன்னது…

கோவி, நீங்க தான் கருத்து கந்தசாமி என்னும் புனைப்பெயருடன் அழைக்க படுபவரா ?

மங்களூர் சிவா சொன்னது…

/
ஆரம்பத்தில் மனைவியின் கவனிப்பு அன்புத் தொல்லையாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்.
/

அல்லது பழகிவிடும்!

மங்களூர் சிவா சொன்னது…

/
ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு கணவனை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:((

மங்களூர் சிவா சொன்னது…

/

எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள்,
/

மறந்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவரவர்களே பொறுப்பு!!
:))))))))))))

சந்தர் சொன்னது…

//எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள், நினைவிருந்தால் பரிசு கொடுக்க மறந்துவிடாதீர்கள் //

அது என்ன ஐந்தாண்டு கணக்கு? மனைவியின் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொள்வதைவிட வேறு என்ன முக்கிய வேலை?

சந்தர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நட்புடன் ஜமால் சொன்னது…

\\இருப்புக்கு ஏற்றார் போல என்றே புரிந்து கொள்ளுங்கள், நான் பெண்களை பேராசைக்காரர்கள் என்று சொல்லவில்லை, தான் கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் அதைச் சரியாக வெளிப்படுத்த மாட்டார்கள்.\\

சுப்பர்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//வால்பையன் said...
மனைவியை தோழியாக பார்த்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்பது என் கருத்து!//

repeateyyyy

பாலு மணிமாறன் சொன்னது…

திருமணமாகி மூன்றாம் ஆண்டு - பிறந்த நாளை மறந்து விட்டேன் - அன்று கிடைத்த ரியாக்ஷன், மறுவருடம் ஞாபகமாக முஸ்தபா ஷாப்பிங் சென்டரை நோக்கி ஓட வைத்தது.

எல்லாப் பதிவுகளும் அனுபவத்தில் இருந்துதானே வருகின்றன :))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்