பின்பற்றுபவர்கள்

5 டிசம்பர், 2007

தேங்காவுல BOMB ? தீவிர'வாதம்' சில எண்ணங்கள்

தேங்காயில் பாம் இருப்பதாக இருப்பதாக உதயகீதம் படத்தில் கவுண்டமணி ஒரு கதையை கட்ட, அது பரபரப்பாகி தேங்காய் உடைக்க வருபவர் ஓங்கி உடைக்க போகும் போது ஒரு போலிஸ்காரர் அப்படியே கைகளில் வேகமாக ஏந்திக் கொள்வார், அந்த படத்தில் கவுண்டமணி - செந்தில் அண்ட் கோ வின் காமடி எடுபடவே தொடர்ந்து இருவரும் கலக்கி வந்தனர். எனக்கு தெரிந்து பட்டானியிலும், உருளை கிழங்கிலும் கூடதான் பாம் இருக்கிறது, அது டைம் பாம் உடனே வெடிக்காது :)

புரிந்து கொள்பவர்களுக்கு புரியும் :))

அது போன்று 'தேங்காய் பாம்' பற்றிய அச்சம் சபரிமலையில் உண்மையிலேயே நடக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் தேங்காய் உடைக்க தடைதிங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007

கொல்லம்: பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதாலும், தீவிரவாத தாக்குதல் பீதி நிலவுவதாலும், சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய்களை வீசி எறிந்து உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கே சொடுக்கி படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த செய்தி சிரிப்பை வரவலைத்தாலும், அதன் பின்னனிக்கான காரணங்கள் பாபர் மசூதி இடித்த டிச. 6 ன் நினைவு(?) நாளாக இருப்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் என்பதை கேள்விப்படும் போது எரிச்சலே மிஞ்சுகிறது.

தீவிரவாதத்தை கையில் எடுத்து ஒன்றை அழித்துவிட்டால், அதன் பின் விளைவுகளை அப்பாவிகள் தான் சந்திக்கின்றனர். என்பதை மதத்தின் பெயரால் அதைச் செய்யும் மடையர்கள் உணருவதே இல்லை. செப் 11 நிகழ்வாகட்டும், டிச 6 நிகழ்வாகட்டும் செய்தவர்கள் சுகமாக, மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அதில் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.

இப்போதெல்லாம் விமானநிலையத்திற்கு பயணியாக வரும், குறுந்தாடி வைத்த, இஸ்லாம் மார்க்க கொள்கை படி இருக்கும் ஒரு நல்ல மனிதரைக் கூட பல்வேறு நாடுகளும் தீவிரவாதியோ என்ற சந்தேக கண்ணில் தான் முதலில் பார்க்கிறார்கள், கமலஹாசன் என்ற பெயர் இஸ்லாமிய பெயர் போல இருக்கிறது என்று கன்னடா நாட்டில் சிக்கி தவித்த கமலஹாசன் பற்றி முன்பு படித்திருப்பீர்கள். இதே போன்று தாடிவைத்தவர்கள், குறுகுறு பார்வை உடையவர்கள், என பலரது ஆடைகளை களைந்து பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்துவதும், தனிமனித மானமிழப்பும் நடக்கிறது. இஸ்லாம் கொள்கை படி இஸ்லாமிய பெண்கள் உடைகளால் முழுக்க மறைத்திருந்தாலும் இப்பொழுது விமான நிலையங்களில் உள்ள எக்ஸ்ரே மெசினின் கண்களுக்கும், அதில் சோதனை செய்யும் மூன்றாம் நபருக்கு அங்கு பயணியாக செல்லும் அப்பெண்ணின் அங்க அவயங்கள், அந்தரங்க உறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகமும் தப்ப முடியாது. உலகில் பலநாடுகளில் பெண்கள் உட்பட அனைவரையும் உடல்முழுக்க சோதனை செய்வது நடைமுறை படுத்தப்பட்டுவிட்டது. இதுதான் இஸ்லாம் மார்க்கத்தை பின் பற்றும் மக்களுக்கு இஸ்லாம் பெயரால் இயங்கும் தீவிரவாதிகள் பெற்று தந்த நன்மை(?) :(

அதைப்போலத்தான் டிச 6 ன் நிகழ்வும் எந்த கோவிலுக்கு யார் சென்றாலும், இவன் பக்தர்கள் போல் வேசமிட்டு வந்த தீவிரவாதியா ? டிச 6 க்கு பழிவாங்க வந்திருக்கானா ? என்றெல்லாம் பக்தர்களின் ஆடையை அவிழ்த்துப் பார்த்து, அவர்களின் பக்தியை கொச்சைப்படுத்தும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது, இதுதான் இந்து பக்தர்களுக்கு பாபர் மசூதி இடிப்பின் மூலம் இந்துமத வெறியர்கள் வாங்கிக் கொடுத்த பரிசு(?). ஆண்டுக்கு ஆண்டு ஒரு இடிப்பை முன்னிட்டு எழும் என்று அரசாங்கத்தால் நம்பப்படும் எதிர்வினை தீவிரவாதத்துக்கு மக்களின் வரிப்பணம் பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிக்கப்படுவதுதான், இந்துத்துவ வியாதிகளின் கரசேவையால் பாபர் மசூதி இடிப்பால் கைகண்ட பலன்(?)

மோடி அண்ட் இந்துத்துவ வியாதிகளின் குஜராத் படுகொலைக்கு பழிக்குபழி வாங்க ... இன்னொரு காஷ்மீர் தீவிரவாதம் போல் குஜராத்திலும் நடப்பதற்கு வாய்ப்புண்டு.

எத்தகைய தீவிரவாத, மதவாத படுகொலைகள் நடந்தாலும், பின்னாளில் தீவிர'வாதத்தால்' பாதிக்கப்பட்டு முடங்கிப் போவது பொதுமக்கள் தான்.

9 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

ஒருத்தரும் பின்னூட்டம் போடலை.

டெஸ்ட் மெசேஜ் !

ஜெகதீசன் சொன்னது…

//
கோவி.கண்ணன் said...

ஒருத்தரும் பின்னூட்டம் போடலை.

டெஸ்ட் மெசேஜ் !

//
:))
என் சார்பிலும் ஒரி டெஸ்ட் மெஸேஜ்....

TBCD சொன்னது…

போடலையின்னா என்னா சார்..வருத்தமா....?

சம்பளம் வராதா...
படுத்தா தூக்கம் வராதா...
மெஆர்டி டிரெயின் நேரத்துக்கு வராதா..
பசிக்காதா...
சாப்பாடு உள்ளே இறங்காதா...

வாழ்க்கையிலே எதுவுமே பாதிக்காத ஒன்னுக்கு ஏன் இம்புட்டு வருத்தம்...

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன் said...
//
//கோவி.கண்ணன் said...

ஒருத்தரும் பின்னூட்டம் போடலை.

டெஸ்ட் மெசேஜ் !

//
:))
என் சார்பிலும் ஒரி டெஸ்ட் மெஸேஜ்....
//

அது என்ன 'ஒரி' பின்னூட்டம் ? மலையாளம் அறியுமோ ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
போடலையின்னா என்னா சார்..வருத்தமா....?

சம்பளம் வராதா...
படுத்தா தூக்கம் வராதா...
மெஆர்டி டிரெயின் நேரத்துக்கு வராதா..
பசிக்காதா...
சாப்பாடு உள்ளே இறங்காதா...

வாழ்க்கையிலே எதுவுமே பாதிக்காத ஒன்னுக்கு ஏன் இம்புட்டு வருத்தம்...
//

TBCD ஐயா,

எதுக்கு கண்ணாபின்னான்னு டென்சன் ஆகுறிங்க ?

இதுக்கு பேருதான் பின்னூட்ட கயமைத்தனம், தனக்குதானே வேறு பெயர்களில் போடவில்லை ஐயா. என்பெயரில் தானே போட்டுக் கொண்டேன். தமிழ்மணத்திடம் போட்டுக் கொடுத்திடாங்க ஐயா.

TBCD சொன்னது…

அநியாயத்தைக் கானும் போது எல்லாம்..பொங்கலாமின்னு ஒரு தீர்மானம்...

கயமைத்தனம் பண்ணிட்டு..ஒன்னும் தெரியாத மாதிரி பேச்சு வேற...

மூத்த பதிவர்களே இப்படி இருந்தா...இளைய தலைமுறையினர் என்ன பண்ணுவாங்க,, ஒரு சமூகப் பொறுப்பு வேண்டாமா...

koothanalluran சொன்னது…

very good post

பிறைநதிபுரத்தான் சொன்னது…

இதுதான் இஸ்லாம் மார்க்கத்தை பின் பற்றும் மக்களுக்கு இஸ்லாம் பெயரால் இயங்கும் தீவிரவாதிகள் பெற்று தந்த நன்மை(?) :( கோவி

நச்சென்று சொல்லியிருக்கிறிர்கள் கோவி.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 ஐ முன்னிட்டு - பரவும் வதந்திகள் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் காவல் துறை செய்யும் கெடுபிடிகளுக்கு எப்பொழுதுதான் முடிவுகாலம் வருமோ?

RATHNESH சொன்னது…

ஒருத்தரும் பின்னூட்டம் போடலையா?

காமெடி - பக்தி - தீவிரவாதம் - அரசியல்ன்னு அவியல் பதிவு போட்டா படிக்கிறவனுக்குச் செமிக்க வேண்டாமா எந்தச் சுவை தூக்கலா இருந்ததுன்னு பார்த்து பின்னூட்டம் போட? ஆளாளுக்கு நச் கதை எழுதறதுல வேற பிஸியா இருப்பாங்க. எல்லோரும் கோவி.கண்ணனா, டைப் அடிச்சுக்கிட்டே யோசிக்கறதுக்கு?

உங்க பதிவு மேட்டரே ஒரு டெஸ்ட் மெஸேஜ் தானே? (அதாவது தன் மனசாட்சியை ஒவ்வொருவரும் டெஸ்ட் பண்ணிக்க வேண்டிய மெஸேஜ்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்