பின்பற்றுபவர்கள்

13 நவம்பர், 2008

இப்படி யாராவது குப்பைக் கொட்டி இருக்கிறார்களா ?

ரத்னேஷ் பாணிப் பதிவுகளில் இப்படியான தலைப்புகளைப் பார்த்திருப்பீர்கள், டாக்டர் ராஜசேகர் போல் பேச்சு வழக்கை தலைப்பாக வைப்பவர் அவர். பதிவின் தலைப்புகள் தான் வாசிப்பவரை முதலில் தூண்டுகிறது.

ரத்னேஷ் பாணி தலைப்பில் இங்கே ரத்னேஷ் பற்றித்தான் எழுதி இருக்கிறேன். வடநாட்டில் டெல்லி, மும்பை மற்றும் கல்கத்தாவைத் தவிர அனைத்து தலை நகரங்களும் பெயரளவுக்கு நகரங்கள் தான். நம் ஊர் கொட்டாம்பட்டியில் கிடைக்கும் வசதிகள் கூட அங்கே கிடைக்காது. நம் தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பாக இரவுப் பயணமாக எந்த ஊரில் இருந்தும் எந்த ஊருக்கும் செல்லலாம், கடைசி பேருந்தை விட்டுவிட்டு விடியற்காலை முதல் பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை நம்ம ஊர் நகரங்களில் கண்டிப்பாக இல்லை. தமிழ்நாட்டை தாண்டிவிட்டாலே பொதுப் பேருந்துகளை நம்பி எந்த பயணமும் திட்டமிடாமல் செல்லவே முடியாது.

பதிவர் நண்பர் ரத்னேஷ் வேலைபார்க்கும் அஸ்ஸாம் கூட அப்படித்தானாம், பொதுவசதிகளான மின்சாரம், தொலைபேசி இணைய இணைப்பு அனைத்தையும் மாபெரும் மூன்று - நான்கு மாத தவத்திற்கு பிறகே பெறமுடியுமாம். அப்படி கிடைக்கும் இணைப்பும் மூடு இருந்தால் தான் வேலை செய்யுமாம், அஸ்ஸாம் குண்டுவெடிப்பிற்கு பிறகு தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லையாம். GPRS வழியான இணையத் தொடர்பும் கிடைக்கவில்லையாம். நாளைக்கு ஒரு பதிவாவது எழுதும் ரத்னேஷ் தற்போது எதுவும் எழுதினாலும் வெளி இடமுடியாமல் இருக்கிறார். எனக்கு ஒரு மெயில் அனுப்ப நீண்ட நாளாக முயற்சித்து ... இன்று தான் இணைப்பே கிடைத்ததாக மின் அஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் எழுதிய மின் அஞ்சலில்

"சொந்த உபயோகங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களிலோ கூட அலுவலகக் கணினி மூலம் தொடர்பு சாத்தியமில்லை. வீட்டில் இருந்து மட்டுமே இணைப்பு சாத்தியமாகி இருந்தது. கடந்த சில நாட்களாக என்னுடைய அலைபேசியில் அதுவும் பிரச்னையாகி விட்டது. ஏதோ கோளாறு. இங்கே சரிசெய்ய முடியாது என்று சொல்லி
விட்டார்கள். (ஏற்கெனவே, தொலைக்காட்சியின் பிரச்னைக்கு நான்குமாதங்களும், ரிமோட் பிரச்னைக்கு மூன்று மாதங்களும், வாஷிங் மெஷின் மோட்டார் பிரச்னைக்கு 19 மாதங்களும் எடுத்துக் கொண்டு அரைகுறையாக சரி செய்து தந்த ஊர் இது). ஒன்றரை வருடங்களுக்கு முன், கணினியில் ஏற்பட்டிருந்த பிரச்னையைச் சரிசெய்யக் கொடுக்க, 'சரி செய்து கொண்டிருக்கையில் அதன் HARD DISC புகைந்து விட்டது' என்று
கூசாமல் சொல்லி விட்டார்கள். அதில் நான் எழுதி வைத்திருந்த ஆறுவருட கால தமிழ்ப் படைப்புகள் அனைத்தும் காற்றாய் மறைந்து போனதை ஜீரணிக்க வேண்டி இருந்தது. 'இங்கே கோளாறாகி விடும் எதையும் சரிசெய்ய முயற்சிக்காதீர்கள்' என்பது புழங்கி வரும் அனுபவ அறிவுரை. 'இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பிராந்தியத்தில் பணிக்காலத்தை ஏன் இரண்டு அல்லது மூன்று வருடங்களாக மட்டுமே
வைத்திருக்கிறார்கள்?'; 'அதனையும் கட்டாய தண்டனைக் காலமாக எல்லோரும் கருதுவது ஏன்?' என்கிற கேள்விகளுக்கு அனுபவபூர்வமாக நான் கண்ட விடைகளில் சில மேலே சொல்லி இருப்பவை.

நவம்பர் 4 க்கு பிறகு இணைய இணைப்புகள் முற்றிலுமாக கிடைக்கவில்லை, தேவைப்படுபவர்களுக்கு எனது மின் அஞ்சல் முகவரியைக் கொடுங்கள்

என் மீது அன்பு காட்டிய எனக்கு ஊக்கம் ஊட்டிய அனைவரிடமிருந்தும் தற்காலிகமாக விடைபெற்றுக் கொள்கிறேன்"

*****

பொதுவான அடிப்படை வசதிகளுக்குக் கூட நாள் பட காத்திருந்து.....அதையெல்லாம் பார்க்கும் போது ஊரா அது ? ன்னு கேட்கத் தோன்றுகிறது. இன்னும் ஓராண்டுக்கு குறைவாகத்தான் ரத்னேஷ் அங்கு இருப்பார் என்றே நினைக்கிறேன். இடம் மாற்றம் பெற்றுக் கொண்டு வேறு மாநிலத்திற்குச் சென்றுவிடுவார். "ரத்னேஷ் அஸ்ஸாமில் இருந்து விரைவில் விடுபட வேண்டும்" என்று வாழ்த்துவோம். !

18 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

அஸ்ஸாம் மக்கள் நிலை கஷ்டம் தான்

வெண்தாடிதாசன் சொன்னது…

அஸ்ஸாம் சீரழிவுக்கு காரணம் இட ஒதுக்கீடு மற்றும் திராவி...

ஹி ஹி ஹி அஸ்ஸாம்மா ok ok.

நையாண்டி நைனா சொன்னது…

நானும் அண்ணனின் வரவை எதிர் பார்த்து இருக்கிறேன். ........

மேலும் ஒரு சிறு விஷயம், நம் அஸ்ஸாம் மக்களையும் சிறிது நினைத்து பார்க்கவேண்டும்
அரசு இயந்திரம், சில அத்தியாவசிய வசதிகளையாவது அந்த மக்களுக்கு வழங்க வேண்டும்
நான் இணையமும், கணிப்பொறியும் அவசியம் என்று சொல்லவில்லை.
தகவல் தொடர்பும் மற்றும் இன்ன பிற வசதிகளையும் சொல்கிறேன்.

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணன் இங்கே மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வர வேண்டுகிறேன்.
( ஆனா... நான் இப்ப சென்னை செல்ல வேண்டும் என்று அல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன்)
சரி... அண்ணன் சென்னை வர வேண்டுகிறேன்.....

துளசி கோபால் சொன்னது…

அடக் கடவுளே........


எனக்குத் தனிமடலில் ரத்னேஷ் விலாசம் அனுப்புங்க ப்ளீஸ்.

நவநீதன் சொன்னது…

ரத்னேஷ் அந்த ஊருக்கு புச்சா....?
கொஞ்ச நாள் ஆகட்டும்....
பழகிடும்....
ஹி..ஹி..
(யோவ்.... யாருய்யா இந்த மாதிரி சீரியஸ் பதிவுல வந்து காமெடி கமென்ட் போடுறது???)
பி.கு.:
யாராவது வந்து என்ன திட்டுறதுக்கு முன்னால, நாமலே நம்மள திட்டிக்கறது கொஞ்சம் பெட்டர் இல்லையா?

பெயரில்லா சொன்னது…

சில இடங்களில் இன்னும் மோசம். ஆனா அவரு என்ன பதவியில இருக்காரு, தகவல் தொடர்பு அவருக்கு எவ்வளவு முக்கியம்கிறதப் பொருத்துதான் இதன் தீவிரம் உணரப் படும்.

குடுகுடுப்பை சொன்னது…

பாவங்க அவரு, சீக்கிரமா தமிழ்நாட்டுக்கு வர சொல்லுங்க.அஸ்ஸாம் மாநில கட்சிகள் ஏதாவது நல்லது செய்யவேண்டும்

பெயரில்லா சொன்னது…

பாவம் திரு ரத்னேஷ், என் தோழிக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது அஸ்ஸாமா அல்லது பிகாரா என்று ஞாபகமில்லை. வேலைக்குப்போனால் கூட இருக்கும் பெண்கள் சரியாகப்பேசவே இல்லையாம். அப்பறம் கண்டுபிடித்தாள். அங்கெல்லாம் லிப்ஸ்டிக் போடாவிட்டால் மற்ற பெண்கள் சரி சமமாக மதிக்க மாட்டார்களாம். அங்கே என்ன வசதி இருக்கோ இல்லியோ அங்கே இருந்த 6 மாசம் லிப்ஸ்டிக் போடாமல் போனதில்லையாம்.

நையாண்டி நைனா சொன்னது…

/*
வருங்கால முதல்வர் said...
அஸ்ஸாம் மாநில கட்சிகள் ஏதாவது நல்லது செய்யவேண்டும்*/

பேசாம.. நீங்க அஸ்ஸாம் முதல்வரா ஆக முயற்சி செயுங்களேன்....

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
அஸ்ஸாம் மக்கள் நிலை கஷ்டம் தான்
//

அவர்களுக்கு கஷ்டம் பழகி இருக்கும், வேறு மானிலத்தில் இருந்து அங்கு செல்பவர்களுக்குத்தான் கஷ்டம்

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்தாடிதாசன் said...
அஸ்ஸாம் சீரழிவுக்கு காரணம் இட ஒதுக்கீடு மற்றும் திராவி...

ஹி ஹி ஹி அஸ்ஸாம்மா ok ok.
//

துக்ளக்கில் சோ ராமசாமி எழுதினாலும் எழுதுவார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
நானும் அண்ணனின் வரவை எதிர் பார்த்து இருக்கிறேன். ........

மேலும் ஒரு சிறு விஷயம், நம் அஸ்ஸாம் மக்களையும் சிறிது நினைத்து பார்க்கவேண்டும்
அரசு இயந்திரம், சில அத்தியாவசிய வசதிகளையாவது அந்த மக்களுக்கு வழங்க வேண்டும்
நான் இணையமும், கணிப்பொறியும் அவசியம் என்று சொல்லவில்லை.
தகவல் தொடர்பும் மற்றும் இன்ன பிற வசதிகளையும் சொல்கிறேன்.//

ம்... சரிதான்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அடக் கடவுளே........//

மனித பிழைகளுக்கும் தவறுகளுக்கும் கடவுள் என்ன செய்வார், அவரே 'சிவனேன்னு' இருக்கார்


//எனக்குத் தனிமடலில் ரத்னேஷ் விலாசம் அனுப்புங்க ப்ளீஸ்.
//

உங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு நானும் அவருக்கு மெயில் போட்டேன், இது வரை இணைப்புக் கிடைக்கவில்லை போலும், பதில் எதும் வரவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அண்ணன் இங்கே மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வர வேண்டுகிறேன்.
( ஆனா... நான் இப்ப சென்னை செல்ல வேண்டும் என்று அல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன்)
சரி... அண்ணன் சென்னை வர வேண்டுகிறேன்.....
//

ஹலோ இதெல்லாம் நெம்ப ஓவரு, அவரோட அலுவலகம் ஓவர் சீஸ் ப்ராஜகட் கூட செய்கிறார்கள், அதற்காக சிங்கைக்கு மாற்றலாகி வந்துடுங்கன்னு நான் சொல்ல முடியுமா ? எங்கு மாற்றுகிறார்களோ அங்குதான் செல்வாரோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் said...
ரத்னேஷ் அந்த ஊருக்கு புச்சா....?
கொஞ்ச நாள் ஆகட்டும்....
பழகிடும்....
ஹி..ஹி..
(யோவ்.... யாருய்யா இந்த மாதிரி சீரியஸ் பதிவுல வந்து காமெடி கமென்ட் போடுறது???)
பி.கு.:
யாராவது வந்து என்ன திட்டுறதுக்கு முன்னால, நாமலே நம்மள திட்டிக்கறது கொஞ்சம் பெட்டர் இல்லையா?
//

அவரு அந்த ஊரில் 2 1/2 ஆண்டாக வண்டி ஓட்டுறார் (பைக்கும்) புதுசெல்லாம் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
சில இடங்களில் இன்னும் மோசம். ஆனா அவரு என்ன பதவியில இருக்காரு, தகவல் தொடர்பு அவருக்கு எவ்வளவு முக்கியம்கிறதப் பொருத்துதான் இதன் தீவிரம் உணரப் படும்.
//

வேலன் அண்ணா,

அவருக்கு அலுவலக தொடர்புகளுக்காக இணைய வசதிகள் இருக்கும், ஆனாலும் தனிப்பட்ட பயனுக்கு அதன் வழியெல்லாம் அடைத்து வைத்திருப்பார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//வருங்கால முதல்வர் said...
பாவங்க அவரு, சீக்கிரமா தமிழ்நாட்டுக்கு வர சொல்லுங்க.அஸ்ஸாம் மாநில கட்சிகள் ஏதாவது நல்லது செய்யவேண்டும்
//

மின்சாரம் இல்லா காட்டுக்கு வரச் சொல்றிங்களே இது ஞாயமா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்