பின்பற்றுபவர்கள்

4 நவம்பர், 2008

ஆளும் வர்க்கம் என்றுமே வடிப்பது முதலைக் கண்ணீர்தான் !

இதோ அமெரிக்க தேர்தல் முடியப் போகிறது. முதன் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபராகப் போகிறார் என்ற சங்கு பலமாக ஊதப்படுகிறது. வெள்ளை இன அமெரிக்கர்கள் நிற பேதத்தை மறந்துவிட்டார்கள், ஒபாமாவை அதிபாராக்கப் போகிறார்கள் என்றெல்லாம் பலமாக பரப்பிவிடப் பட்டு இருக்கிறது. ஆனால் சென்ற முறை ஒரு கருப்பினத்தை சேர்ந்த மேயருக்கு கருத்துக் கணிப்பின் போது தங்கள் பெருந்தன்மையை வாய்ச் சொல்லாகக் காட்டி கருப்பினத்தவரை ஆதரிப்பவராகச் சொன்னவர்களெல்லாம் ஓட்டுப் பெட்டிக்கு முன்பு மனதை மாற்றிக் கொண்டு வழக்கம் போல் வெள்ளையருக்கே எதிர்பாரா வண்ணம் மாபெரும் வாகையே சூட்டினார்களாம். ஒபாமாவிற்கும் இது நடக்காது... முன்பு நடந்ததற்கும் தற்பொழுது அமெரிக்க வெள்ளையர்களின் நிலைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது... வெள்ளையர்களெல்லாம் மெய் ஞானி ஆகிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள், ஆனால் முடிவில் வெள்ளையருக்கே வாய்ப்பளிப்பார்கள் என்றே நினைக்க வைக்கிறது.

ஆண்டைகள் எப்பொழுது அடிமைகளை உயர்த்திப் பார்த்தது இல்லை என்பதுதான் வரலாறு, இன விடுதலைகள் ஓர் இரவில், ஒரே நாள் மனமாற்றத்தால் எங்கும் நிகழ்ந்தது இல்லை என்பதும் வரலாறு. ஒபோமா வீட்டுக்கு அனுப்பபட்டால் கருப்பினத்தவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது. ஒபாமா அதிபராக ஆகவில்லை என்றால் அமெரிக்காவில் இனப் பூசல்கள் சிறு அளவில் தோன்றி பெரிதாகவே வளர வாய்ப்புள்ளது. பெருங்குழப்பங்களும் ஏற்படலாம்.

ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவில் குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஒபாமா தேர்ந்தெடுக்கப் படவேண்டும். நாடா ? இனமா ? எதன் மீது பற்று இருக்க்க வேண்டும் என்று வெள்ளையர் முடிவெடுக்க... பெரும் அறைகூவல் காத்திருக்கிறது. தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வருவது பெருமை என்று நினைக்கும் கருப்பினத்தவர்கள், இவை நடக்காமல் போகும் போது பொறுமை காப்பார்களா ? ஆசைக்காட்டி மோசம் செய்தால் அதன் பலன்களை அறுவடை செய்தாகவேண்டும் என்ற பாடம் மீண்டும் போதிக்கப்படுமா ? பொறுத்து இருந்து பார்ப்போம், பொறுமையுடன் பார்ப்போம்.

வாழ்க ஜனநாயகம் !

13 கருத்துகள்:

RAHAWAJ சொன்னது…

யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழி

சி தயாளன் சொன்னது…

பார்க்கலாம்..Wilder effect என்ற பாதிப்பு ஒபாமாவை தாக்குமா தெரியவில்லை

மேலதிக விபரங்களுக்கு..
http://en.wikipedia.org/wiki/L._Douglas_Wilder

Bharath சொன்னது…

காமாலை கண்ணுக்கு பார்பதெல்லாம் மஞ்சள்..

ஹில்லாரியை விட ஜனநாயகரீதியாக நிறய வோட்டுக்கள் பெற்றே இந்த இடத்திற்கு வந்தார் என்பதை மனதில் கொள்ளவும்..

பழக்க தோஷத்தில் மெக்கெய்ன் சட்டைக்குள் கயிரு இருக்குதான்னு தேட வேண்டாம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...
காமாலை கண்ணுக்கு பார்பதெல்லாம் மஞ்சள்..

ஹில்லாரியை விட ஜனநாயகரீதியாக நிறய வோட்டுக்கள் பெற்றே இந்த இடத்திற்கு வந்தார் என்பதை மனதில் கொள்ளவும்..

பழக்க தோஷத்தில் மெக்கெய்ன் சட்டைக்குள் கயிரு இருக்குதான்னு தேட வேண்டாம்..
//

பரத்,

யாரு கண்ணில் மஞ்சள், நான் ஆளும் வர்க்கம் என்று தானே குறிப்பிட்டேன். ஆளும் வர்க்கம் என்றால் உங்கள் அகராதியில் பூணூல் அணிந்தவர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//RAHAWAJ said...
யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழி
//

அடி சறுக்கிவிட்டது :) சருக்கும் இல்லை சறுக்கும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
பார்க்கலாம்..Wilder effect என்ற பாதிப்பு ஒபாமாவை தாக்குமா தெரியவில்லை

மேலதிக விபரங்களுக்கு..
http://en.wikipedia.org/wiki/L._Douglas_Wilder
//

சுட்டிக்கு நன்றி !

Robin சொன்னது…

//ஆளும் வர்க்கம் என்றால் உங்கள் அகராதியில் பூணூல் அணிந்தவர்களா ?// அந்த நினைப்பு என்னும் போகலை போல இருக்கு :)

Robin சொன்னது…

நமக்கு கிடைக்கும் தகவல்களை பார்க்கும்போது ஒபாமாதான் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்.

மணிகண்டன் சொன்னது…

*****************அந்த நினைப்பு என்னும் போகலை போல இருக்கு :) ************
யாருக்கு ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிமூன்று ஓட்டு உள்ள ஒரு அமெரிக்க கிராமத்தில் ஒபாமா தான் ஜெயித்திருக்கிறார். அவர்தான் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்.
யார் வெற்றி பெற்றாலும், நம்ம இந்திய அரசு தான் அவர்களிடம் போய் நிற்கும். அவர்கள் எப்போதும் அவர்களாகவே இருப்பார்கள். பாகிஸ்தான், அவர்கள் சொல்வதைக் கேட்டால், பாகிஸ்தானுக்கு நிறைய ஆயுதம் கொடுப்பார்கள்.

Matra சொன்னது…

It is a mistaken notion that the Black people will vote for Obama en masse.

I personally see many Blacks supporting McCain and many Whites supporting Obama.

Compared to India, here in the US, people vote more based on issues than just the skin color or religious affiliation of the candidate.

It is generally the 'backward' and more hardcore Christian White populace which will not vote much for Obama.

The more hardcore Christians here are also the more racist. Truly liberals (non-communist) people tend to be less hardcore religionists of the Abrahamic hue.

All this is my personal observation and experience after coming here many years back and having lived in 7 different States.

My observation is that people vote for Obama more for his views than just his skin color. Including me.

Just like JyothiBharathi says, for people here, their Country matters the most.

பெயரில்லா சொன்னது…

ஒபாமா வெற்றியடைந்து விட்டாரே!!

கோவி.கண்ணன் சொன்னது…

//இனியவள் புனிதா said...
ஒபாமா வெற்றியடைந்து விட்டாரே!!
//
நான் ஜோசியம் சொல்லவில்லை, சமூகம் சார்ந்த அரசியல் தான் எழுதினேன்.

"ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவில் குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஒபாமா தேர்ந்தெடுக்கப் படவேண்டும். நாடா ? இனமா ? எதன் மீது பற்று இருக்க்க வேண்டும் என்று வெள்ளையர் முடிவெடுக்க... பெரும் அறைகூவல் காத்திருக்கிறது" - என்றும் எழுதி இருந்தேன்.

அமெரிக்க மக்கள் இந்த நேரத்தில் இனவெறி எந்தவிததிலும் கைகொடுக்காது என்று தெளிவாக முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்