பின்பற்றுபவர்கள்

20 நவம்பர், 2008

தேசிய வியாதிகளும் சட்டங்களும் !

மக்கள் ஆட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியைவிடக் கேவலமாகவே சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசியல் கட்சிகளின் ஆட்சி. பிடிக்காதவர்களை 'பிடிப்பதற்கே' இவர்கள் 'புலி வருது' என்று சொல்லி இயற்றும் சட்டங்களெல்லாம் பயன்பட்டது தான் வரலாறாக நிற்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்கப் போகிறோம், பிரிவினை வாதிகளை முடக்கப் போகிறோம் என்று அரைகூவல் விடுத்து பாஜகவின் பொடோ சட்டம், கோபால்களை (வை.கோபால் சாமி, நக்கீரன் கோபால்) பழிவாங்கவே பயன்படுத்தப்பட்டது வரலாறு. இதுமட்டுமா ? வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகாதவனாக மாறிய போது ' மதுரையில் கஞ்சா விற்றான்' என்று கைதுசெய்யப்பட்டு பல்லைப் பிடிங்கியதும், நடராஜனின் நெருக்கமானப் பெண் என்பதால் ஜரீனா என்கிற பெண்ணை கஞ்சா பொட்டலம் விற்றப் போது கைது செய்ததாகவும், அவரிடம் ஒரு கோடி ரூபாய் வரை கைப்பெற்றப் பட்டதாகவும் ஜெ ஆட்சி முடியும் வரையிலும் அலைக்கழிக்கப்பட்டார் என்பதெல்லாம் செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சுதந்திரமாக ஆதரவு அளிப்பவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமைச் செய்யும் என்கிறார் தங்கபாலு. தமிழர்கள் 80 விழுக்காட்டினருக்கும் மேல் ஈழவிடுதலை என்பது விடுதலை புலிகளினால் போராட்டத்தினால் தான் அமையும் என்று நம்புகிறார்கள், இவர்கள் அனைவர் மீதும் சட்டம் ஏன் பாயவில்லை ? திருமாவளவன் வெளிப்படையாகவே பேசிவிட்டார் கைது செய்ய வேண்டியதுதானே, மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கானோர் அனைவருமே ஈழ விடுதலைக்கு ஆதரவானாவர்கள் தான். போர் நிறுத்த வேண்டும் என்ற அனைத்து வகைப் போராட்டங்களும் ஈழ மக்கள் நலனை முன்னிறித்தியது, ஈழவிடுதலை ஆதரிப்பதுதான், போராட்டத் தலைவர்களையெல்லாம் (வைகோ, சீமான், அமீர்) ஆகியவர்களை மட்டும் கைது செய்தால் போதுமா ? அவர்கள் பேச்சைக் கேட்டு கை தட்டியவர்களும் ஈழவிடுத்தலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவானவர்கள் தானே, அவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும் என்று அம்மையாரோ, காங்கிரசாரோ ஏன் சொல்வது இல்லை ?

அரசியல் கட்சிகள் தங்கள் கொள்ளைக்கு பங்கம் விளையாமல் இருக்க, அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இந்திய அரசியல் சட்டம் என்று இயற்றும் அனைத்தும் சட்டமாகிவிடுமா ? பிஜேபிக்கு இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் என்றால் அதற்காக பிஜேபி அரசு போடும் சட்டம் எப்படி இந்திய பொதுச் சட்டமாகிவிடும் ? இது முரணானது என்பதால் தானே அடுத்து வந்த காங்கிரஸ் அரசு அதனை நீக்கியது.

இதுபோல் நூற்றுக்கணக்கான சட்டங்கள் காலத்தால் காலவதியாகி தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டு நீக்கப்பட்டு இருக்கின்றன. ஆடுகோழி பலி இட தடை என்று சட்டம் இயற்றப்பட்டு நாட்டார் தெய்வ வணக்கத்தையே பலிகொடுத்தவை தான் சட்டங்கள், அந்த தெய்வங்களை வணங்குபவர்கள் கோழியை அறுத்தால் அவர்களை துறத்திச் சென்று சுடுகாடுவரையில் விட்டு அங்கேயே அவர்களை சமைத்து உண்ணும் படி கேவலப்படுத்தியவைதான் இந்த சட்டங்கள்.

ஒருவேளை பிரபாகரன் இந்துத்துவ ஆதரவாளராகி பிஜேபி வாழ்க என்ற கோசமிட்டால், சாயிபாபா சத்தியசீலர் என்று சொல்லிவிட்டால் அடுத்து ஒருவேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல என்று அறிவித்துவிட்டு தடையை நீக்குவார்கள். ஒரு இயக்கத்தை தடைசெய்வதும், நீக்குவதும் வெறும் அரசியல் நிலைப்பாடு மட்டுமே, அரசியல் கட்சிகளின் இத்தகைய சட்ட உரிமை மீறல், திணித்தல் இவை எதையுமே அறியாது உணர்ச்சிவசப்பட்டு 'இந்திய இறையாண்மை' என்ற பெயரை சட்டங்களுக்கு கொடுப்பது முட்டாள்தனமானது என்றே நினைக்கத் தோன்றுகிறது

இந்திய இறையாண்மை, பாவக்காய் வெங்காயம் என்று பேசுபவர்களெல்லாம் உல்பா, நக்சல் தீவிரவாதிகளுக்கு பொது மன்னிப்புக் கொடுக்கிறோம் என்று அரசியல் கட்சிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது என்ன செய்து கொண்டிருந்தார்கள், குண்டுவைத்து பொதுமக்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளை ஒருபக்கம் வேட்டையாடிக் கொண்டே மறுபக்கம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடந்தது, அப்போதெல்லாம் இந்திய இறையாண்மையும், சட்டமும் எங்கே சென்றது.

சட்டம் எப்போது கடமையை செய்தது ? மாமுல்களுக்காக பிடிக்கப்படும் போது மட்டுமே கள்ளச் சாராய சில்லரை விற்பனையாளர்கள், பிட்பாக்கெட் திருடன் இவர்களிடம் தான் கடமையைச் செய்தது, அதே சட்டம் பாராளுமன்றத்தில் மன்மோகன் அரசின் பெரும்பான்மை நிருபிக்கும் வேளையில் 3 கோடி ரூபாய் கட்டுகளை கொண்டு வந்து கொட்டிய பிறகு, அதை தொலைக்காட்சியில் பார்த்து இந்திய மக்களே வாயடைத்தும் தொடர்புடையவர்களிடம் அதன் கடமையை செய்ததா ?

சட்டமே இந்திய இறையாண்மை என்பதெல்லாம் வெறும் வெற்று கோஷம் தான். ஏனெனில் தடை செய்யும் சட்டங்கள் அனைத்துமே அப்போதைய அரசியல் கட்சிகளின் சொந்த நலன் கருதியே இயற்றப்படுபவை, இவற்றிற்கும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய பெருங்கடல் ஆமைகளுக்கும் கூட தொடர்ப்பு இல்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா, சுட்டுக் கொல்லப்பட்ட பின், சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவையே. அவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட நபர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - ராகுல் காந்தி

வன்முறையில் ஈடுபட்டவர்களை யார் கொண்டு வந்து நிறுத்துவது ?

இதே இராகுல் காந்தியோ, அவரது வாரிசுகளோ நாளைக்கு இராஜிவ் படுகொலையைக் காரணமாக வைத்து ஈழ விடுதலையை நீர்த்துப் போக செய்த முயற்சிக்கு வருத்தம் தெரிவிக்கும் காலம் கூட வரலாம்.

6 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

mee the firstuuuuuu

வால்பையன் சொன்னது…

வரும், வரணும்

நாகை சிவா சொன்னது…

//தமிழர்கள் 80 விழுக்காட்டினருக்கும் மேல் ஈழவிடுதலை என்பது விடுதலை புலிகளினால் போராட்டத்தினால் தான் அமையும் என்று நம்புகிறார்கள்,//

அப்படியாஆஆஆஆ

RAHAWAJ சொன்னது…

நல்ல பதிவு கோவி, என்ன செய்வது கலி காலம் அது வேளையை செய்கிறது நாம் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான்,நாம் எதும் கமெண்ட் கொடுத்தால் நம் மீதும் புது சட்டம் பாய்யும்- ஜவகர்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சுதந்திரமாக ஆதரவு அளிப்பவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமைச் செய்யும் என்கிறார் தங்கபாலு.//

தங்கபாலு முன்பு வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட்.
அப்புறம் தமிழக இ.காங்கிரஸ் தலைவர்.
அப்புறம் தமிழக காங்கிரஸ் தலைவர்.
அப்புறம் மத்திய அமைச்சர்.
அப்புறம் கல்வி நிலையங்களின் சீமான்.
திரும்பவும் ஏஜென்ட் தொழிலுக்குப் போவது வருத்தமளிக்கிறது.

//திருமாவளவன் வெளிப்படையாகவே பேசிவிட்டார் கைது செய்ய வேண்டியதுதானே, மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கானோர் அனைவருமே ஈழ விடுதலைக்கு ஆதரவானாவர்கள் தான். போர் நிறுத்த வேண்டும் என்ற அனைத்து வகைப் போராட்டங்களும் ஈழ மக்கள் நலனை முன்னிறித்தியது, ஈழவிடுதலை ஆதரிப்பதுதான், போராட்டத் தலைவர்களையெல்லாம் (வைகோ, சீமான், அமீர்) ஆகியவர்களை மட்டும் கைது செய்தால் போதுமா ? அவர்கள் பேச்சைக் கேட்டு கை தட்டியவர்களும் ஈழவிடுத்தலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவானவர்கள் தானே, அவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும் என்று அம்மையாரோ, காங்கிரசாரோ ஏன் சொல்வது இல்லை ?//

நூத்துல ஒரு பத்தி!
வன்மையாக வழி மொழிகிறேன்!!

//ஒருவேளை பிரபாகரன் இந்துத்துவ ஆதரவாளராகி பிஜேபி வாழ்க என்ற கோசமிட்டால், சாயிபாபா சத்தியசீலர் என்று சொல்லிவிட்டால் அடுத்து ஒருவேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல என்று அறிவித்துவிட்டு தடையை நீக்குவார்கள். ஒரு இயக்கத்தை தடைசெய்வதும், நீக்குவதும் வெறும் அரசியல் நிலைப்பாடு மட்டுமே, அரசியல் கட்சிகளின் இத்தகைய சட்ட உரிமை மீறல், திணித்தல் இவை எதையுமே அறியாது உணர்ச்சிவசப்பட்டு 'இந்திய இறையாண்மை' என்ற பெயரை சட்டங்களுக்கு கொடுப்பது முட்டாள்தனமானது என்றே நினைக்கத் தோன்றுகிறது//

சாய்பாபா என்பவர்(மனிதன் என்று நம்புங்கள்), சிங்கள இனவாத அரசுக்கு தனது தார்மீக ஆதரவைத் தந்து கொண்டிருக்கிறார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் இவர், தன்னை சந்திக்க வரும் சிங்கள இனவாத அரசின் தலைவர்களை, ஏன் அங்குள்ள தமிழர்களை இரண்டாந்தரமாக நடத்துகிறீர்கள்? ஏன் தமிழர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்துகிறீர்கள் என்று கேட்டால் ஒன்றும் குறைந்துவிடாது. உண்மையான சாமியாராக இருந்தால் கண்டிப்பாகக் கேட்டிருப்பார்.
இவரெல்லாம் சென்னைக்கு தண்ணீர் தருகிறேன் என்று தனது மனித நேயத்தை வளர்ப்பதாகக் கூறுவது, வேடிக்கையாகத் தான் இருக்கிறது.


//இந்திய இறையாண்மை, பாவக்காய் வெங்காயம் என்று பேசுபவர்களெல்லாம் உல்பா, நக்சல் தீவிரவாதிகளுக்கு பொது மன்னிப்புக் கொடுக்கிறோம் என்று அரசியல் கட்சிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது என்ன செய்து கொண்டிருந்தார்கள், குண்டுவைத்து பொதுமக்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளை ஒருபக்கம் வேட்டையாடிக் கொண்டே மறுபக்கம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடந்தது, அப்போதெல்லாம் இந்திய இறையாண்மையும், சட்டமும் எங்கே சென்றது.//

எனக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இந்தியாவில் எத்தனை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன? அவர்களோடு இந்திய அரசாங்கம் பேசவில்லையா?
கூறியத் அமைப்பினருடன், துப்பாக்கிக் கொண்டு வருவேன் என்றாலும் பேச அழைக்கிறீர்கள். அகாலிதளம்(மான் பிரிவு) சிம்ரஞ்சன் சிங் மான் துப்பாக்கி கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்கிறீர்கள். அவர்களோடு பேச்சு நடத்துகிறீர்கள்.(இவர் துப்பாக்கியுடன் நாடாளுமன்றம் வருவேன் என்று ஒருமுறை சொன்னது குறிப்பிடத்தக்கது) தமிழன் தமிழனுக்காக அழுதால் தார்மீகக் குரல் கொடுத்தால் அவனைப் பிடித்து உள்ளே போடுவீகளா? இது என்னப்பா நியாயம்? இறையாண்மை???

//சட்டம் எப்போது கடமையை செய்தது ? மாமுல்களுக்காக பிடிக்கப்படும் போது மட்டுமே கள்ளச் சாராய சில்லரை விற்பனையாளர்கள், பிட்பாக்கெட் திருடன் இவர்களிடம் தான் கடமையைச் செய்தது, அதே சட்டம் பாராளுமன்றத்தில் மன்மோகன் அரசின் பெரும்பான்மை நிருபிக்கும் வேளையில் 3 கோடி ரூபாய் கட்டுகளை கொண்டு வந்து கொட்டிய பிறகு, அதை தொலைக்காட்சியில் பார்த்து இந்திய மக்களே வாயடைத்தும் தொடர்புடையவர்களிடம் அதன் கடமையை செய்ததா ?

சட்டமே இந்திய இறையாண்மை என்பதெல்லாம் வெறும் வெற்று கோஷம் தான். ஏனெனில் தடை செய்யும் சட்டங்கள் அனைத்துமே அப்போதைய அரசியல் கட்சிகளின் சொந்த நலன் கருதியே இயற்றப்படுபவை, இவற்றிற்கும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய பெருங்கடல் ஆமைகளுக்கும் கூட தொடர்ப்பு இல்லை.//

சட்டம் தன் கடமையை செய்யுமா? கொஞ்சம் கூட மனச்சாட்சி இருந்தால் இப்படி பேசமாட்டார்கள்?(மனச்சாட்சியாவது மண்ணாங்கட்டியாவது) எத்தனை ஊழல் செய்த அரசியல் வாதிகள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை குற்றவாளிகள், ரவுடிகள், கொலையாளிகள் அரசியல் வாதிகள் என்கிற பெயரில் வெளியில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை என்ன்ன செய்திருக்கிறது இவர்களது சட்டம்?
பாராமன்றத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டவர்களை, தண்டனை கொடுக்கப் பட்டும் தண்டிக்காமல் வைத்திருப்பது யாருடைய சட்டம்? அப்பா இறையாண்மை எங்க போயிற்று?


//முன்னாள் பிரதமர் இந்திரா, சுட்டுக் கொல்லப்பட்ட பின், சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவையே. அவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட நபர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - ராகுல் காந்தி

வன்முறையில் ஈடுபட்டவர்களை யார் கொண்டு வந்து நிறுத்துவது ?

இதே இராகுல் காந்தியோ, அவரது வாரிசுகளோ நாளைக்கு இராஜிவ் படுகொலையைக் காரணமாக வைத்து ஈழ விடுதலையை நீர்த்துப் போக செய்த முயற்சிக்கு வருத்தம் தெரிவிக்கும் காலம் கூட வரலாம்.//

எனக்கு இந்த வடநாட்டு வல்லூறுகளிடம் நம்பிக்கையே இல்லை. என்றோ அற்று போய்விட்டது. அவர் செய்ய நினைத்தாலும் விட மாட்டார்கள். தலைமைத்துவ பதவிக்கு வருகிறவர்கள் சில நேரங்களில் ஒரு டிக்டேட்டராக நடந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆலோசனை கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி கேட்டாலும் முடிவு, தலைவருடையதாக இருக்க வேண்டும்.
என்ன நடக்கிறது என்று பார்போம்?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//எனக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இந்தியாவில் எத்தனை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன? அவர்களோடு இந்திய அரசாங்கம் பேசவில்லையா?
கூறியத் அமைப்பினருடன், துப்பாக்கிக் கொண்டு வருவேன் என்றாலும் பேச அழைக்கிறீர்கள். அகாலிதளம்(மான் பிரிவு) சிம்ரஞ்சன் சிங் மான் துப்பாக்கி கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்கிறீர்கள். அவர்களோடு பேச்சு நடத்துகிறீர்கள்.(இவர் துப்பாக்கியுடன் நாடாளுமன்றம் வருவேன் என்று ஒருமுறை சொன்னது குறிப்பிடத்தக்கது) தமிழன் தமிழனுக்காக அழுதால் தார்மீகக் குரல் கொடுத்தால் அவனைப் பிடித்து உள்ளே போடுவீகளா? இது என்னப்பா நியாயம்? இறையாண்மை???//

கூரியத் தலைவர் துப்பாக்கியுடன் தான் வருவேன் என்று சொன்னால் அதை அவரது இனத்தவர்கள் அனைவரும் ஆதரித்திருப்பார்கள், சிம்ரஞ்சன்சிங் துப்பாக்கியோடு தான் வருவேன் என்று சொன்னால் அதை அத்தனை சீக்கியர்களும் ஆதரித்திருப்பார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு இனமே குரல் கொடுத்தால் அப்றம் பாருங்க இறையாண்மைய, அந்த வெங்காயத்தையே அப்டியே தக்காளியாக்கி அதுதான் இறையாண்மையின்னு சொல்லிருவானுங்க. ஆனா தமிழன் குரல் கொடுத்தா ஏன் அந்த வெங்காயத்த நம்ம கண்ணுல பிழிஞ்சு விடுறாங்க? இங்க எப்ப ஒட்டுமொத்த தமிழினமும் சேர்ந்து குரல் கொடுத்துச்சு? இங்கதான் நாம திசைக்கு இரண்டு பிரிவா நிக்கிறோமே? அப்றம் என்ன செய்யிறது?

இப்பகூட இலங்கையில போர்நிறுத்தம் செய்யணும், இந்தியா தலையிட்டு போன முறை செஞ்சதுமாதிரி இல்லாம தமிழகத்தலைவர்களின் முன்னிலையில் ஒரு சமரசத் தீர்வை ஈழத்தமிழர்களுக்கு பெற்றுத்தரணும்னு ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்து சொன்னா கட்டாயம் மத்திய அரசு கேட்டுத்தான் ஆகணும். ஆனா எதிர்கட்சி இங்க எதிரிக்கட்சியாத்தானே நடந்துக்குது? ஒரே ஒரு தடவ கலைஞர் கூட்டுகின்ற கூட்டத்துல ஜெயலலிதா, வைகோ, காங்கிரஸ் தலைவர்கள், ராமதாஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் விசய்காந்த் எல்லாரும் ஒன்னா கலந்துகிட்டு ஒரு தீர்மானம் போடட்டும், அப்றம் பாருங்க என்னா நடக்குதுனு. ஆனா இது தமிழகத்துல நடக்குமா? அப்படியான நாகரீக அரசியலா இங்க நடக்குது? இவரு கூட்டுகின்ற கூட்டத்துக்கு அந்த அம்மா வராது, அந்த அம்மா முதல்வரா இருந்தா இவரு போக மாட்டாரு. அப்றம் எங்க இருந்து தமிழனுக்கு விடிவுகாலம் வரும்?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்