பின்பற்றுபவர்கள்

7 நவம்பர், 2008

யாதவர்களும் ரஜினிகாந்தும் !

பைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத்தனைக்கும் வேறு வேறு சாதிக்கார, இனத்துக்கார ஆண் பெண் கூடினால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்பது தெரிந்தே (விந்தணுவுக்கும் அது சேரும் கருமுட்டைக்கும் ஏது சாதி ?) அனைவருமே மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சாதிப்பேயின் சதிக்கைகளின் கைபொம்மையாகி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் தலைவர்களின் சாதியைப் பார்த்து அவர்களின் படங்களை சாதி சங்கத்தில் அலங்கார புகைப்படம் ஆக்கி வைத்திருந்தார்கள். சாதிகள் சாமிகளைக் தங்களுக்கே உரித்ததாகக் கொண்டாடுவது கேலிக் கூத்திலும் பெரிய கேலிக் கூத்து. சைவ வெள்ளாளர்கள் சிவனை சொந்தம் கொண்டாடுவார்கள், வன்னியர்கள் திரவுபதி அம்மனை சொந்தம் கொண்டாடுவார்கள், செட்டியார்கள் முருகனை சொந்தம் கொண்டாடுவார்கள், வைணவர்களாக அறிவித்துக் கொள்ளும் பல்வேறு சாதிகள் கோனார், நாயுடு முதல் தென்கலை ஐய்யங்கார் வரை கிருஷ்ணனை சொந்தம் கொண்டாடுவார்கள். பெருமாளின் முகத்தை வைத்து யாருக்கு சொந்தம் என்பதில் சிக்கல் வரும் என்பதாலேயே பெருமாளுக்கு வடகலை நாமமும், தென்கலை நாமும் போடப்பட்டு யாருடைய பெருமாளை வணங்காமல் இருக்கவேண்டும் என்ற அடையாளமெல்லாம் வைத்திருப்பது ஆன்மிக அபத்தங்களின் உச்சத்தில் ஒரு முனை. தேவர்களும் முருகனை சொந்தம் கொண்டாடுவார்கள், ஏனென்றால் வீரபாகுத் தேவர் என்னும் கந்தபுராண பாத்திரம் முருகனுக்கு பக்க பலமாக இருக்கும், அந்த பெயரில் தேவர் இருப்பதால் தேவர்களுக்கு முருகன் சொந்தக்காரனாக ஆகிவிட்டான். அய்யர்களுக்கு ? மதுரை வீரன் உட்பட சாமிகளுக்கு பூனூல் அணிவித்த பிறகு அனைத்துமே அவர்களுடைய வேத வழியில் வந்ததாக ஆக்கிக் கொண்டார்கள். இவை தெரிந்ததாலோ என்னவோ மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் (வருத்தப்பட்டு) ஆரியக் கடவுள் என்றால் 'ஆரியன்'காவில் தோன்றிய ஐயன் + அப்பன் ஐய்யப்பன் மட்டும்தான், மற்றதெல்லாம் திராவிட தெய்வங்கள் என்றார். இவைதான் ஆதிக்க சாதிகள், இவர்கள் தவிர்த்து நாடார்கள், தலித் பெருமக்கள் அனைவருக்கும் மதபேதமின்றி அனைத்தையும் வழிபடுவார்கள்.

தலைப்புக்கு வருவோம் ?

கோனார்கள் என்றால் கால்நடை வளர்த்தவர்கள், அதன் பாலைக் கரந்து விற்றவர்கள், தொழில் அடிப்படையில் சாதிகள் அறியப்பட்டதால் கால்நடையுடன் தொடர்புடையவர்கள் கோனார் அல்லது இடையர் என்று சொல்லிவருவது வழக்கம். கிருஷ்ணனும் ஆடுமேய்க்கும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன் என்ப்பதால் கோனார்களுக்கும் கிருஷ்ணன் சொந்தமாகிவிட்டான். வடநாட்டில் யாதவர் என்றாலும் ஆயர்கள் என்றாலும் ஒரே குலமான யாதவர்கள் தான். லல்லு யாதவ் மற்றும் ஏனைய யாதவ்கள் அனைவருமே யாதாவர்கள். இங்கே தமிழகத்தில் கோனார்களை பழிப்பதற்கென்றே ஏகப்பட்ட பழமொழிகள் உருவானது. அவர்களுக்கும் கணக்குக்கும் வெகுதூரம் என்றே ஒவ்வொரு பழமொழியிலும் அவர்களை மடையர்கள் என்றே தூற்றி பலசாதியினரும் பழித்தனர். அதனாலேயே இடையர் சாதி என்றும் கோனார் என்றும் அறியப்பட்டவர்கள் தங்களின் சாதிப்பெயர்களை இடையன் என்று குறிப்பிட்டு இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு ஆளாகிவிடுவோம் என்பதால், தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் 'யாதவர்கள்' என்று ஆக்கிக் கொண்டனர். வட இந்திய யாதவர்களுக்கும் தென்னிந்திய யாதவர்களுக்கும் வேறெந்த தொடர்பும் கிடையாது. அடைப்படையில் ஒரே தொழில், கண்ணன் பிறந்த குலம் இவைதான் இடையர்கள் யாதவரானதற்குக் காரணம். அது அவர்களின் விருப்பம். தமிழகத்தில் யாதவர்கள் எப்படி ஆனார்கள் என்பதற்காக குறிப்பிட்டேன். அதுதவறு சரி என்றெல்லாம் குறிப்பிட வில்லை.

****

இப்போது தலைப்புக்கு வருவோம் ?

ரஜினி காந்த் : "கடமையைச் செய் பலனை எதிர்பார்"

கிருஷ்ணன் : "கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே"

கீதையை கிருஷ்ணன் சொன்னதாக எழுதப்பட்ட நூல்தானேயன்றி, கிருஷ்ணனே அதை எழுதிவிடவில்லை. அதில் கீதாச்சாரியனின் கற்பனையும் உண்டு. ரஜினி சொன்னது கண்ணனை அவமதிக்குதாம் ?

ரஜினி எங்காவது நான் கீதைக்கு மாற்றாகச் சொல்கிறேன் என்று சொன்னது கிடையாது. 'தலைவா எப்போ வருவிங்க' என்று கேட்பதற்கு, 'ரசிகர் மன்ற கடமையை சரியாக ஆற்றுங்கள், நிச்சயம் வருவேன்' என்ற பொருளில் அதைச் சொல்லி இருப்பார் என்றே யூகிக்கிறேன். என்ன பொருளில் சொன்னாலும் ரஜினி சொன்னதற்கென்றே பொருள் உண்டு. சொற்கள் எல்லாமே வெவ்வேறு இணைப்பில் ஒரு பொருளைக் குறிக்கும் அல்லவா ? "மிகுதியாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது" என்று ஒருவர் சொல்கிறார், இன்னொருவர் "சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு கேடு" என்கிறார். முதல் வரி இரண்டாவது வரியைப் பழிக்கிறது என்று சொல்ல முடியுமே ? இவற்றின் பொருள்கள் வேறு வேறு தொடர்பற்றது. படத்துக்கு தலைப்பு வைப்பது போல் புகழ்பெற்ற வாக்கியத்தின் அமைப்பில் ரஜினி ஒன்றைச் சொல்லி இருக்கிறார் அவ்வளவுதானே. இதற்கு ஏன் யாதவ மாகாசங்கம் இந்த குதி குதிக்கவேண்டும். இவர்கள் கண்ணனை வழிபடுபவர்கள் என்பதாலேயே யாரும் அதுபற்றிக் கூறிவிடக் கூடாதா ? எங்க சாமியை யாரும் கும்பிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என்று சொல்வது தானே.

கிருஷ்ணனையோ, சிவனையோ பக்தர்களிடம் இருந்து பிரித்துப் பார்ப்பவர்கள் இந்த சாதி வெறிபிடித்தவர்கள் தான்.

37 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

//வேறு சாதிக்கார, இனத்துக்கார ஆண் பெண் கூடினால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்பது தெரிந்தே (விந்தணுவுக்கும் அது சேரும் கருமுட்டைக்கும் ஏது சாதி ?) அனைவருமே மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சாதிப்பேயின் சதிக்கைகளின் கைபொம்மையாகி விடுகிறார்கள்.

எங்க சாமியை யாரும் கும்பிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என்று சொல்வது தானே//

அருமை. நல்ல பதிவு..

பூச்சாண்டியார் சொன்னது…

நாட்டுல ஒரு கருத்த சொல்ல விட மாட்டங்க போல.. :(

நல்ல பதிவு.

நையாண்டி நைனா சொன்னது…

ஆகா... முதல் போனியே கிருஷ்ணரா.... என்ன ஒரு ஒற்றுமை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
ஆகா... முதல் போனியே கிருஷ்ணரா.... என்ன ஒரு ஒற்றுமை.
//

நான் நினைச்சதை சொல்லிட்டேள் !

கோவி.கண்ணன் சொன்னது…

// கிருஷ்ணா said...


அருமை. நல்ல பதிவு..//

பதிவுக்கு பொருத்தமான கிருஷ்ணரின் முதல் பின்னூட்டம் !

மிக்க நன்றி !

dondu(#11168674346665545885) சொன்னது…

//கோனார்களை பழிப்பதற்கென்றே ஏகப்பட்ட பழமொழிகள் உருவானது. அவர்களுக்கும் கணக்குக்கும் வெகுதூரம் என்றே ஒவ்வொரு பழமொழியிலும் அவர்களை மடையர்கள் என்றே தூற்றி பலசாதியினரும் பழித்தனர்.//
ஆனால் அவ்வாறு பழித்தவர்களில் பலரும் பள்ளியில் தமிழ்தேர்வில் பாசானது கோனார் நோட்ஸை வைத்துத்தான்! :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
ஆனால் அவ்வாறு பழித்தவர்களில் பலரும் பள்ளியில் தமிழ்தேர்வில் பாசானது கோனார் நோட்ஸை வைத்துத்தான்! :)

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு நன்றி !
கோனார் தமிழ் உரை நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள், கோனார் கணக்கு பற்றி யாரும் பெரிதாக குறிப்பிடவில்லை :) கணக்குக்கு வெற்றி உரைதான் வாங்குவார்கள்.

இன்னிக்கே 2 பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள் நன்றி !

tamilraja சொன்னது…

எங்க சாமியை யாரும் கும்பிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என்று சொல்வது தானே//
/
/
/நல்லாத்தான் இருக்கு இந்த யோசனை!

முரளிகண்ணன் சொன்னது…

நம்ம மக்கள் இருக்காங்களே?

முரளிகண்ணன் சொன்னது…

நம்ம மக்கள் இருக்காங்களே?

தமிழ் அமுதன் சொன்னது…

நல்ல பதிவு!

பாசகி சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சொல் ஒன்று! அர்த்தங்கள் ஆயிரம். அதை நாம் எடுத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க ஆரம்பித்தால் உலகத்தில் யாரும் பேச முடியாது, எழுத முடியாது.
சமீபத்தில் போப் ஆண்டவர் ஒரு நகரத்துக்குப் போய் இரவு விடுதி இங்கு இருக்கிறதா? என்று கேட்டதாக ஊடகங்களில் வந்த செய்தியை நினைவு கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் கேட்ட நோக்கம் வேறு, அது மற்றவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட அல்லது புனையப் பட்ட விதம் வேறு. இதையெல்லாம் கண்டுகொள்ளத் தேவையில்லை.

ers சொன்னது…

குஜராத் வன்முறையில் காயமடைந்த சிறுவன் படம் டாப். இதை பார்த்ததும் பரம திருப்தி.

CA Venkatesh Krishnan சொன்னது…

இவர்களையும், வியாபாரத்திற்காக இவர்கள் சொல்வதைப் பெரிது படுத்தும் ஊடகங்களையும் பார்க்கும் போது..

எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்...

என்ன சொல்றீங்க ?

யாழ் Yazh சொன்னது…

இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு ஆளாகிவிடுவோம் என்பதால், தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் 'யாதவர்கள்' என்று ஆக்கிக் கொண்டனர்.

அது முத்தி போய் 15வயது பையனுக்கூட‌ யாதவ் என்ற டிகிரியை போட தவறுவது இல்லை. எங்கே போய் முடியுமோ?
நல்ல அலசல்

Sanjai Gandhi சொன்னது…

//கோனார்கள் என்றால் கால்நடை வளர்த்தவர்கள், அதன் பாலைக் கரந்து விற்றவர்கள், தொழில் அடிப்படையில் சாதிகள் அறியப்பட்டதால் கால்நடையுடன் தொடர்புடையவர்கள் கோனார் அல்லது இடையர் என்று சொல்லிவருவது வழக்கம். கிருஷ்ணனும் ஆடுமேய்க்கும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன் என்ப்பதால் கோனார்களுக்கும் கிருஷ்ணன் சொந்தமாகிவிட்டான்.//

அட.. நான் கோனாரா? :))
ஆனால் எங்க வீட்ல கிருஷ்ணனை வழிபடுவதில்லையே.. :(

என் பெற்றோர் மற்றும் என் தம்பிக்கு கன்னாபின்னவென்று கடவுள் பக்தி இருந்தாலும் எங்கள் வீட்டில் எந்த கடவுள் படமும் இல்லை.. வீட்டில் எந்த பூஜையும் செய்வதும் இல்லை. விஷேஷ நாட்களில் கோவிலுக்கு செல்வதோடு சரி..எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கு..ஏன் எங்க வீட்டில் சாமி படங்கள் வைக்கவில்லை.. பள்ளிபடிப்பு வரை நான் கூட படு பயங்கர பக்தனாயிற்றே.. எங்கள் வீட்டைத் தவிர மற்ற எலலார் வீட்டிலும் சாமி படங்கள் நிறைந்திருக்கும்...:)

Sanjai Gandhi சொன்னது…

//இப்போது தலைப்புக்கு வருவோம் ?
//

நல்ல வேளை.. ஒருவழியா வந்திங்களே :))

Sanjai Gandhi சொன்னது…

//ரஜினி எங்காவது நான் கீதைக்கு மாற்றாகச் சொல்கிறேன் என்று சொன்னது கிடையாது. 'தலைவா எப்போ வருவிங்க' என்று கேட்பதற்கு, 'ரசிகர் மன்ற கடமையை சரியாக ஆற்றுங்கள், நிச்சயம் வருவேன்' என்ற பொருளில் அதைச் சொல்லி இருப்பார் என்றே யூகிக்கிறேன்.//

இந்த யூகமான பதில் கூட தேவையற்றதென்றே கருதுகிறேன்.

கடமை = உதவி என்று எந்த அகராதியிலும் சொல்லவில்லை.

கடமை என்பது நாம் செய்யும் பணியன்று வேறொன்ரும் இல்லை. பணிக்கு எந்த பலனும் எதிர்பார்க்காமல் எல்லாம் இருக்க முடியாது. நிச்சயம் கடமையை செய்தால் பலனை எதிர் பார்க்க வேண்டும். தானாகவாவது பலன் கிடைக்கும். எந்த பலனுமே எதிர்பார்க்காமல் அல்லது பலனே கிடைக்காத ஒரு கருமாந்திரகம் புடிச்சக் கடமையை என்ன எழவுக்குதான் செய்ய வெண்டும்? :(

ஒருவேளை.. கடமையை செய்தால் தானே பலன் கிடைக்கும் என்ற ரீதியில் சொல்லி இருந்தால் அதுவும் விமர்சனத்துள்ளாகும். அதான் தானே பலன் கிடைக்குமே.. பிறகு எதற்கு எதிர்பார்க்காதே என்று ஒரு விளம்பரம்? :(

கோவி.கண்ணன் சொன்னது…

//அட.. நான் கோனாரா? :))
ஆனால் எங்க வீட்ல கிருஷ்ணனை வழிபடுவதில்லையே.. :(
//

இப்படி சிரிப்பான் போட்டுச் சொன்னாலும் சில பைத்தியங்கள் நீங்கள் சொல்வது உண்மையே என்று நினைத்து, 'டேய் கோனான் நிறுத்துடா' ன்னு பின்னூட்டுவானுங்க. ஏனென்றால் அவனுங்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சாதியை ஒட்டவைக்கனும் அவ்வளவுதான். என்னை ஒரு கூட்டம் நாயுடு என்றே பரப்பிவிடப்பட்டது, இன்னொருவர் வன்னியர் என்று சொன்னார். நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ஒரு சாதியைக் கற்பனைப் பண்ணி வச்சிடுவானுங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க.

சாதிகள் பெருமைக்குரிய ஒன்றே அல்ல. அதை வெளியே சொல்லி பெருமைத் தேடும் அளவுக்கு எந்த சாதிக்காரனும் வான் அளவுக்கு உயரவெல்லாம் இல்லை.

//என் பெற்றோர் மற்றும் என் தம்பிக்கு கன்னாபின்னவென்று கடவுள் பக்தி இருந்தாலும் எங்கள் வீட்டில் எந்த கடவுள் படமும் இல்லை.. வீட்டில் எந்த பூஜையும் செய்வதும் இல்லை. விஷேஷ நாட்களில் கோவிலுக்கு செல்வதோடு சரி..எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கு..ஏன் எங்க வீட்டில் சாமி படங்கள் வைக்கவில்லை.. பள்ளிபடிப்பு வரை நான் கூட படு பயங்கர பக்தனாயிற்றே.. எங்கள் வீட்டைத் தவிர மற்ற எலலார் வீட்டிலும் சாமி படங்கள் நிறைந்திருக்கும்...:)//

உங்கள் வீட்டில் அன்னைகள் படம் இருக்கும், அன்னை இந்திரா, அன்னை சோனியா ?

"சோனியா சோனியா சொக்கவைக்கும் சோனியா" பாட்டை எடுக்கச் சொல்லி தமிழக காங்கிரசும் ரகளை செய்து இருக்கிறது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//tamil cinema said...
குஜராத் வன்முறையில் காயமடைந்த சிறுவன் படம் டாப். இதை பார்த்ததும் பரம திருப்தி.
//

வெர்ரி சாரி, படத்தை மாற்றும் போது முன்பு எழுதியவற்றை அழிக்க மறந்துவிட்டேன். :)

துவாரகை குஜராத் பக்கதில் தானே இருந்தது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...
இவர்களையும், வியாபாரத்திற்காக இவர்கள் சொல்வதைப் பெரிது படுத்தும் ஊடகங்களையும் பார்க்கும் போது..

எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்...

என்ன சொல்றீங்க ?
//

சரிதான். நாங்க ஒரு சாதி சங்கம் பலமாக இருக்கிறோம் என்று சொல்வதற்கான விளம்பரம்

கோவி.கண்ணன் சொன்னது…

//யாழ்/Yazh said...
இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு ஆளாகிவிடுவோம் என்பதால், தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் 'யாதவர்கள்' என்று ஆக்கிக் கொண்டனர்.

அது முத்தி போய் 15வயது பையனுக்கூட‌ யாதவ் என்ற டிகிரியை போட தவறுவது இல்லை. எங்கே போய்
//

பெயர் வைக்கும் போதே சாதிப் பெயரையும் சேர்த்து வைப்பவர்கள் உண்டு.

Sanjai Gandhi சொன்னது…

//நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ஒரு சாதியைக் கற்பனைப் பண்ணி வச்சிடுவானுங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க.
//

அட போங்க சார்.. நாம் என்னதான் கவனமா பேசினாலும் நமக்குன்னு எதாவது ஒரு சாக்கடை அடையாளத்தை வச்சி பேசறவன் பேசிட்டுத் தான் இருப்பான். இந்த ங்கொங்காங்கோ பயலுகளுகெல்லாம் பயந்தா வேலை ஆகுமா? :)

நான் ரொம்ப ரசித்த ஒரு கவிதை
“ நான் கவிதை எழுதுகிறேன்..
என் மகன்
தீப்பெட்டிப் படங்களை சேகரிக்கிறான்”
இதான் சமுதாயம்... நம்ம வேலையை நாம செய்வோம்.. அவங்க வேலையை அவங்க செய்வாங்க.. :)

Sanjai Gandhi சொன்னது…

//உங்கள் வீட்டில் அன்னைகள் படம் இருக்கும், அன்னை இந்திரா, அன்னை சோனியா ?//

ஹிஹி.. அதான் இல்லை.. நான் கல்லூரியில் படிக்கும் போது வாங்கி மாட்டின காந்தி மற்றும் நேதாஜி படங்கள் மட்டுமே உண்டு... :)

எங்கள் குடும்பத்தில் எங்க பெரியப்பா கட்சியின் சுமாரான பதவியில் இருப்பதால் பல பெரிசுகளை நேரில் பார்த்து எனக்கும் அதிக ஆர்வம் வந்துவிட்டது. மற்றபடி எங்க குடும்பத்தில் வேறு யாருக்கும் அவ்வ்ளவாய் ஆர்வம் இல்லாததால் அரசியல் தலைவர்கள் போட்டோ எதுவும் இல்லை.. :)

என் பார்வையில்......... சொன்னது…

தமிழனே சமூகம் மீது இருக்கும் உன் பார்வைக்கு தலை வணங்குகிறேன்............உன் பார்வை தொடரட்டும்.....................

நல்லதந்தி சொன்னது…

//மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் //

அதென்னங்க! மகா பெரியவா! “ர்”எழுத்தை டைப் பண்ணாம விட்டுட்டீங்களா?.:)

நல்லதந்தி சொன்னது…

நான் இந்தப் பதிவைப் இன்னும் படிக்கலை, இருந்தாலும் ரஜினியைப் பற்றி எழுதியிருப்பதால்,வழக்கமான வழுமிய , இயற்பியல் கோட்பாட்டின் படி, சத்தியமாக அவரைப் பற்றி திட்டிதான் எழுதி இருப்பீர்கள் என்று நினைத்து, இதனை எதிர்த்து என்னுடைய மாபெரும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!.

இப்படிக்கு ரஜினியின் ரசிகன்!

balachandar muruganantham சொன்னது…

இது எப்படித் தெரியுமா இருக்கு... பெரிய ஆளுங்கள பார்த்து திட்டினா ஒரே நாளில் பேமஸ் ஆகி விடலாம் என்ற எண்ணம் உடையவர்கள் இவர்கள். இது மாதிரி ரஜினியை திட்டுரது, ஸ்ரேயாவ திட்டுரது என்று இது மாதிரி நிறைய பிரச்சனைகள் நாட்டில் உள்ளனர்.

இவங்களான் என்றைக்கும் திருந்த மாட்டானுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி 11:54 PM, November 07, 2008
//மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் //

அதென்னங்க! மகா பெரியவா! “ர்”எழுத்தை டைப் பண்ணாம விட்டுட்டீங்களா?.:)
//
ர் போட்டால் பெரியவார் ஆகிடும், அவர் பெல்ட் போடுவதில்லை, பிறகு எப்படி வார் என்று போடுவது ?
:)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தலைப்புக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு, சண்டியர் படத்துக்கு ஒரு சாதியினர் எதிர்ப்பு, சோனியா சோனியா பாட்டுக்கு காங்கிரஸ்காரங்க எதிர்ப்பு, காதலன் படத்துல கவர்னர வில்லனா வைச்சதுக்கு, அப்ப இருந்த சென்னா ரெட்டியத்தான் அது குறிக்குதுன்னு சொல்லி அப்பயும் காங்கிரஸ் எதிர்ப்பு இப்படி காரணமேயில்லாத பல எதிர்ப்புகள பார்த்தாச்சு. இப்ப கோனார்கள் முறை. விடுங்கண்ணே.
இவிங்க இப்டித்தான் எதையாச்சும் எதிர்த்துக்கிட்டே இருக்கனும். என்னானே தெரியாம கூட்டமா ஓடுறவய்ங்க நம்ம ஆளுங்க.

அது சரி, உங்க ஊர்ல அக்கரைபேட்டையில சுனாமி அன்னைக்கு என்னா நடந்துச்சுன்னு தெரியுமா? கடல் பொங்கி தண்ணி வருதுன்னு கூட்டமா ஓடுனவங்கள பார்த்த ஒரு குப்பத்துக்காரங்க, ஏதோ பிரச்சனைக்குத்தான் அப்டி வர்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு அவங்கள தாக்க அருவாளத்தூக்கிக்கிட்டு துரத்திக்கிட்டு போயிருக்காங்க.
அதான் நம்ம தமிழ் இனம். என்னத்த சொல்ல?

கல்வெட்டு சொன்னது…

//என்னை ஒரு கூட்டம் நாயுடு என்றே பரப்பிவிடப்பட்டது, இன்னொருவர் வன்னியர் என்று சொன்னார். நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ஒரு சாதியைக் கற்பனைப் பண்ணி வச்சிடுவானுங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க.
//


:-)))

*****
கொஸ்டின்: கண்ணக் கோனார் கீதையை எந்த லாங்குவேஜில் சொன்னார்?

'கோவி.கண்ணக் கோனார்' இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தால நல்லது.

**

கடமை:
எக்ஃசாம்பிள்--குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இதுக்கெல்லாம் என்ன பலனை பெற்றோர்கள் எதிர்பார்க்க முடியும்?

வேலை(job):
எக்ஃசாம்பிள்--வாட் யு டூ ஃபார் லிவிங்? தட்ஃச் கால்டு வேலை. இதுக்கு சம்பளம் முக்கியம்.
(பகவான் ரசினி யந்திரனில் பார்ப்பது 'வேலை' நாட் 'கடமை'.

**
பகவான் கண்ணக் கோனார் என்ன தமிழ் பாஃசையிலயா அருள்வாக்கு கொடுத்தார்? நிச்சயமாக இருக்காது என்றே நம்புகிறேன். அவர் ஃசோ கால்டு தேவ பாஃசையில் வாக்கு கொடுத்து இருந்தால் அந்த பாஃசையிலேயே அர்த்தம் பார்க்க வேண்டும். தமிழ் அர்த்தம் குத்துமதிப்பாத்தான் சொல்லலாம்.


**

இந்தக் கருமத்துக்குதான்(கர்மாவும் கருமமும் ஒண்ணா கோவி.கண்ணக் கோனார்?) சாமிகளை லோக்கல் பாஃசையில வாக்கு கொடுக்கச் சொல்லணுங்குறது.

**
நம்மாளுக‌ ஏன் யாதவாக மாறப்பாக்குறானுக? வடக்கத்தியான் கோனாரா மாறுவானுகளா? என்ன கொடுமை இது சரவணக் கோனார்?

Bharath சொன்னது…

சாதி இல்லைன்னு சொல்றவங்கதான் அதில் மூழ்கி முத்தெடுக்க‌ராங்க...

இப்பக்கூட பாப்பாத்தி புராணம் படிச்சோமே..

Unknown சொன்னது…

நன்றாக தெரிகிறது உங்களுக்கு அவர்கள் மீது எதோ வன்மம் அதற்காக தானே இப்பதிவை இட்டிர்கள். கணக்கு பற்றி எதோ சொன்னிர்கள் ஆனால் இவ்வுலகையே முதலில் அளந்து பார்த்தவன் முல்லை நிலத்தவன் தான்.அந்நிலத்தில் தானே கணியர் தோன்றினான்.

SANKAR சொன்னது…

அருமை

SANKAR சொன்னது…

அருமை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்