பின்பற்றுபவர்கள்

4 நவம்பர், 2008

விக்னேஷ்வரன் சில உண்மைகள் !

விக்கி என்கிற் விக்னேஷ்வரனை எனக்கு சுமார் மூன்று மாத காலமாகத்தான் தெரியும், மலேசியாவில் இருந்து எழுதும் மலேசிய தமிழர்கள் என்ன எழுதிவிடப் போகிறார்கள் என்றே ஆரம்பத்தில் நினைத்தேன் (பிறரை எடைபோட முயன்று தோற்றுப் போகும் மன வியாதி எல்லோருக்கும் இருப்பது போல் எனக்கும் உண்டு)

பிறகு அவருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது அவரது எழுத்துக்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் இருந்தது தெரிந்தது. குறிப்பாக மாயன் வரலாற்றுத் தகவல்களை சிறப்பாக தொகுத்திருந்தார், 'மற்றொரு கட்டுரை ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்' அவரது எழுத்துத் திறமையை வெகுவாகவே வெளிச்சமிட்டது. இத்தனைக்கும் தமிழில் எழுதுவதை அண்மையில் தான் கற்றுக் கொண்டாராம், பேச்சுவழக்கில் இருந்து எழுத்தைக் கற்றுக் கொண்டு எழுதுவது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் நாட்டுக்குள் இருக்கும் தமிழர்கள் தமிழைப் புறக்கணித்து இந்தியிலோ, ஆங்கிலத்திலோ எழுதுவதே சிறப்பு என்று நினைக்கும் போது, மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த விக்கி தமிழின் மீது கொண்ட பற்றுதல், அதுவும் இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்து வருவது உண்மையிலேயே வியக்க வைத்தது.

இருமாதங்களுக்கு முன்புதான் என்னுடன் கூகுள் அரட்டைக்கு வந்தார். அதற்கு முன்புவரை தனிப்பட்ட பழக்கம் எதுவும் கிடையாது. வேறு சில பதிவர்களைப் போலவே மிகவும் உரிமையுடன் அண்ணன் என்றே அழைக்க ஆரம்பித்தார். பதிலுக்கு நான் ஒருமையில் அழைப்பதையும் மகிழ்வேடு ஏற்றுக் கொண்டான். அவரது புரொபைல் புகைப்படத்தைப் பார்த்து எனக்கு ஐயம் ஏற்படவே, உனது புகைப்படம் அனுப்பு என்றேன். படம் வந்தது. ப்ரொபைல் படத்துக்கும் புதிய புகைப்படத்திற்கும் 100 வேறுபாடுகள். எப்பிடி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று அவனே பயப்படும்படி, தம்பி டிபிசிடிக்கு போட்டியாக 100ஐ (எடைதான்) தொடும் முயற்சியில் இருப்பது தெரிந்தது.

"24 வயதுதான் ஆகுது....தம்பி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, பாக்கிற பொண்ணுங்களெல்லாம் ரிஜெக்டட் சொல்லிடும்" என்று சிறிய அறிவுரையை சொல்ல வேண்டியதாகிவிட்டது
விக்கி சந்திப்பில் பேசும் போது மலேசிய தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்களிடம் நெருக்கமாக இருந்ததையெல்லாம் பகிர்ந்து கொண்டான். மலேசியாவில் இருந்து கிளம்பும் முன்பே "அண்ணா எனக்கு முதல் வெளி நாட்டுப் பயணம்" என்று ஒரு நான்கு முறை சொல்லி இருப்பான். என்னிடம் பழகுவதற்கும் மேலாக ஜோசப் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோரிடமும் நெருக்கமாக இருந்தான். விக்கியின் சிங்கைப் பயணத்தை இனிமையாக்கியது ஜோசப் பால்ராஜ் மற்றும் விஜய் ஆனந்த் இருவரும் தான். தண்ணீ(ர்) தாகம் கூட எடுக்காமல் பார்த்துக் கொண்டார்கள். ஊட்டிவிட்டு உணவு ஊட்டும் அளவுக்கு ஜோசப் பால்ராஜ் அன்பைப் பொழிந்ததைப் பார்பவர்களுக்கு பால்ராஜுக்கு தம்பியாகவோ / அண்ணனாகவோ பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் முட்டும் அளவுக்கு கவனிப்பு. (பால்ராஜிடம் யாரும் சிக்கிடாதிங்க அன்பை பிழிந்து எடுப்பார் / கொடுப்பார்.)தம்பி விக்கி இலக்கியம் தவிர்த்து மலேசியாவில் வள்ளலார் சேவை அமைப்பிலும் இணைந்து உதவிகளைச் செய்து வருகிறான். தமிழ் இலக்கியங்களை மிகவும் ஆர்வமுடன் படித்துவருகிறான். வரலாற்று புதினங்களான சாண்டில்யன் மற்றும் கல்கி எல்லாம் கரைத்துக் குடித்து வைத்திருக்கிறான். வருங்கால மலேசிய எழுத்தர்களில் சிறப்பான இடத்தை தம்பி விக்கி பிடிப்பான் என்ற நம்பிக்கை அவனது பேச்சில் இருந்தே தெரிந்தது. தற்பொழுதும் அவனது எழுத்துக்கள் மலேசிய இந்திய ஊடக இதழ்களில் வரத் துவங்கி இருக்கிறது. வருங்காலத்தில் 'மலேசியா விக்னேஷ்வரன் / ஈப்போ விக்னேஷ்வரன்' என்ற எழுத்தாளரை தமிழ் உலகம் அறிந்து இருக்கும்.தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழர்கள் தான், ஒரே இரத்தம் என்ற பாச உணர்வு விக்கியுடன் இருந்த இருநாளும் நாங்கள் உணர்ந்தோம். எனக்கு ஒரு அருமையான தத்துவ நூல் (மிர்தாதின் புத்தகம்) ஒன்றை வழங்கி அதுபற்றிய புத்தக விமர்சனம் எழுதச் சொல்லி பணித்தான். விக்கியை சந்தித்த எவருக்குமே ஒரு மலேசிய தமிழர் என்ற உணர்வே இருந்திருக்காது. அவனைவிட வயதில் மூத்தவர்கள் ஒரு தம்பியாகத்தான் நினைத்தார்கள். குறிப்பாக நானும் ஜோசப் பால்ராஜும் விக்கியை உடன் பிறந்தவனாகவே உணர்ந்தோம்

28 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

Me the first
Since no tamil typing in office, will post my comment from home.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அவ்வ்வ்வ்

முடியல...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அண்ணே! அடுத்த சந்திப்புக்கு பரமசிவன் படத்தில் வரும் அஜித்து மாதிரி உடம்ப குறைச்சிட்டுதான் வருவேன் சொல்லிட்டேன்! தற்சமயம் சில பல அனுகுமுறைகள் கையாளப்படுகிறது.

வால்பையன் சொன்னது…

//.தம்பி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, //

கல்யானமும் ஆகிவிட்டது
அதில்லாமல் ஒரு காதலியும் உண்டு

(பாரிக்கு)

வால்பையன் சொன்னது…

நானில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

அடுத்த சந்திப்பிற்க்கு எனக்கு டிக்கெட் வந்துவிட வேண்டும்

வால்பையன் சொன்னது…

//அடுத்த சந்திப்புக்கு பரமசிவன் படத்தில் வரும் அஜித்து மாதிரி உடம்ப குறைச்சிட்டுதான் வருவேன்//

எனக்கு பில்லா அஜித்து தான் வேண்டும்

Sathis Kumar சொன்னது…

வாழ்த்துகள் விக்கி..

Mahesh சொன்னது…

விக்கிக்கு நல்ல அறிமுகம்....

நான் கூட மிர்தாதின் புத்தகம் பத்தி ஒரு பதிவு (ரொம்ப சுமாரா...) போட்டிருக்கேன்... ஹி ஹி ஹி

http://thuklak.blogspot.com/2008/08/blog-post_29.html

வெண்பூ சொன்னது…

//
VIKNESHWARAN said...
அவ்வ்வ்வ்

முடியல...
//

யோவ்.. நாங்க சொல்லணும்யா அத.. ப்ரொஃபைல்ல சின்ன வயசு போட்டோவை போட்டு ஊரை ஏமாத்திட்டு இப்ப வந்து முடியலன்னா என்னா அர்த்தம்... :))))

வெண்பூ சொன்னது…

பதிவர் சந்திப்பு என்பதையும் தாண்டி நல்ல நட்பையும், பாசத்தையும் வளர்த்துள்ளது இந்த சந்திப்பு என்பதில் மகிழ்ச்சி & கொஞ்சம் பொறாமையும் கூட..

வெண்பூ சொன்னது…

//
பிறகு அவருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது அவரது எழுத்துக்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் இருந்தது தெரிந்தது.
//

சரியாக சொன்னீர்கள் கோவி.. சில மாதங்களாக அவரது பதிவுகள் மூலம் எனக்கும் இதேதான் தோன்றியது. சமயத்துல அவரேதான் எழுதுனாரா இல்ல மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து, அப்படின்னு கூட சந்தேகம் வருது.. கலக்குங்க விக்கி (அப்படியே உடம்பையும் குறைங்க, ஒருவேளை ஈப்போ காபி குடிச்சா குண்டாவாங்களோ என்னவோ)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

@வெண்பூ

அது ஒரு வருஷத்துக்கு முன் உள்ள படம் தான் சாமி. கடந்த வருடம் நவம்பர் எடுத்தது தான். வேலையில் அமர்ந்தவுடன் உடற்பயிற்சி இல்லாமல் போனது தான் காரணம்.

//மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து, அப்படின்னு கூட சந்தேகம் வருது..//

நான் பிழைபட எழுதியே இப்படி கருதினால் பிழை இல்லாமல் எழுதினால் உண்மையாவே நம்ப மாட்டிங்க இல்லையா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அருமைத் தம்பி விக்கியைக் கௌரவித்த கோவியாருக்கு நன்றி!
கோவியாரே, சில விடயங்களை வெளிப்படையாக எழுதி....!
வேறொன்றும் சொல்வதற்கில்லை.
தம்பியுடையான் படைக்கஞ்சான்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//குறிப்பாக நானும் ஜோசப் பால்ராஜும் விக்கியை உடன் பிறந்தவனாகவே உணர்ந்தோம் //

என் மனசில் உள்ளதையும் சேர்த்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//ஊட்டிவிட்டு உணவு ஊட்டும் அளவுக்கு ஜோசப் பால்ராஜ் அன்பைப் பொழிந்ததைப் பார்பவர்களுக்கு பால்ராஜுக்கு தம்பியாகவோ / அண்ணனாகவோ பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் முட்டும் அளவுக்கு கவனிப்பு. (பால்ராஜிடம் யாரும் சிக்கிடாதிங்க அன்பை பிழிந்து எடுப்பார் / கொடுப்பார்.) //

ஏன் இந்த கொலைவெறி? இப்படி சொல்லி என்னைய திட்றீங்களா இல்ல புகழுறீங்களான்னு கூடத் தெரியாத ஒரு சின்னப்பையன்ணே நானு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பால் ராசின் பால் மனம் பரப்பிய கோவியாரே, பால காச்சுனா ஆவி வருமான்னு (ஆவியைப் பற்றி எழுத உங்களை விட பொருத்தமானவர் யார் உளர்?) ஓர் அறிவியல் தொழில் நுட்பப் பதிவு போடலாமே!
விக்கியை சொக்க வைத்த பால் ராசுக்கும், நமது பின்னூட்டப் புயல் விசய் ஆனந்துக்கும் நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
பால் ராசின் பால் மனம் பரப்பிய கோவியாரே, பால காச்சுனா ஆவி வருமான்னு (ஆவியைப் பற்றி எழுத உங்களை விட பொருத்தமானவர் யார் உளர்?) ஓர் அறிவியல் தொழில் நுட்பப் பதிவு போடலாமே!
விக்கியை சொக்க வைத்த பால் ராசுக்கும், நமது பின்னூட்டப் புயல் விசய் ஆனந்துக்கும் நன்றி!

11:16 PM, November 04, 2008
//

பாரதி,

விஜய் ஆனந்த் புலி என்றால் பால்ராஜ் பால், இருவரும் புலியாக காத்து பாலாக ஊட்டினார்கள். நீங்கள் புலிப்பால் என்று தப்பாக நினைக்கப்படாது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் இந்த கொலைவெறி? இப்படி சொல்லி என்னைய திட்றீங்களா இல்ல புகழுறீங்களான்னு கூடத் தெரியாத ஒரு சின்னப்பையன்ணே நானு.

11:07 PM, November 04, 2008
//

பால்ராஜ் தென்கலை ஐயங்கார், உள்ளதைச் சொன்னேன் உள்ளத்தைச் சொன்னேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
பதிவர் சந்திப்பு என்பதையும் தாண்டி நல்ல நட்பையும், பாசத்தையும் வளர்த்துள்ளது இந்த சந்திப்பு என்பதில் மகிழ்ச்சி & கொஞ்சம் பொறாமையும் கூட..

9:48 PM, November 04, 2008
//

வெண்பூ,

அனைவர் குறித்த பாராட்டுக்கு மிக்க நெகிழ்ச்சி !

வெண்பூ சொன்னது…

//
கோவி.கண்ணன் said...

பால்ராஜ் தென்கலை ஐயங்கார்,
//
என்னாது ஜோசப்பு தென்கலை ஐயங்காரா? என்னங்க நடக்குது இங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
//
கோவி.கண்ணன் said...

பால்ராஜ் தென்கலை ஐயங்கார்,
//
என்னாது ஜோசப்பு தென்கலை ஐயங்காரா? என்னங்க நடக்குது இங்க...
//

அவ்வை சண்முகி நீங்கள் பார்கலையா ? அதுல அந்த ஜோசப் எப்படி ஐய்யராக மாறினார் ? :)

ஜோசப் பால்ராஜ் கிறித்துவராக இருந்து தென்கலை ஐயங்காராக மாறி இருக்கிறாராம், என்னிடம் மட்டும் தெரிவித்தார்

:)

வெண்பூ சொன்னது…

//
பாரதி,

விஜய் ஆனந்த் புலி என்றால் பால்ராஜ் பால், இருவரும் புலியாக காத்து பாலாக ஊட்டினார்கள். நீங்கள் புலிப்பால் என்று தப்பாக நினைக்கப்படாது
//

வந்தவர் விக்ன ஈஸ்வரன்.. அவரது மகன் ஐயப்பன் அல்ல என்பதால் புலிப்பால் தேவைப்படவில்லை என்பது கோவி.கண்ணன் அவர்களின் கணிப்பு...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

கோவி.கண்ணண் வடைகலை அய்யங்கார், நன்னா சொன்னேள் போங்க.

வெண்பூ சொன்னது…

//
ஜோசப் பால்ராஜ் said...
கோவி.கண்ணண் வடைகலை
//

இளங்கலை, முதுகலை, சிற்பக்கலை, ஓவியக்கலை தெரியும்.. இது என்னா "வடை"கலை? ஓ.. போன சந்திப்புக்கு வடை சுட்டு எடுத்துட்டு வந்ததாலயா?

சின்னப் பையன் சொன்னது…

விக்கிக்கு நல்ல அறிமுகம். சூப்பர் சந்திப்பு நடத்தியதற்கு வாழ்த்துக்கள்.

நானும் சரி, விக்கி படத்தை போடுவீங்கன்னு பாத்துக்கிட்டே வந்தேன். கடைசியா 'அவரை'த்தான் விக்கின்னுட்டீங்க....

(வெண்பூ போல்) ப்ரொஃபைல் படத்தை பாத்து ஏமாந்த ஒருவன்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//வெண்பூ said...
//
ஜோசப் பால்ராஜ் said...
கோவி.கண்ணண் வடைகலை
//

இளங்கலை, முதுகலை, சிற்பக்கலை, ஓவியக்கலை தெரியும்.. இது என்னா "வடை"கலை? ஓ.. போன சந்திப்புக்கு வடை சுட்டு எடுத்துட்டு வந்ததாலயா? //

சுட சுட என்னா அருமையா வடை சுட்டு கொடுத்தாரு, சாப்பிட்டுட்டு அப்டியே போயிரமுடியுமா? அதான் ஒரு பட்டம் கொடுத்து பாராட்டுறோம்.

Dr.Sintok சொன்னது…

// மலேசியாவில் இருந்து எழுதும் மலேசிய தமிழர்கள் என்ன எழுதிவிடப் போகிறார்கள் என்றே ஆரம்பத்தில் நினைத்தேன் //

all indian's think like that....
vairamuthu also.......

பெயரில்லா சொன்னது…

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்